“டிசம்பர் 22– 28: ‘தேவனின் தெய்வீக குமாரனாகிய இணையற்ற பரிசு,’: கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக : கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 2025
“கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
டிசம்பர் 22–28: தேவனின் தெய்வீக குமாரனாகிய இணையற்ற பரிசு
கிறிஸ்துமஸ்
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார், “நமது மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார் என்பதற்கான அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியமே; நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் அதனுடன் இணைப்புகள் மட்டுமே”(Teachings of Presidents of the Church: Joseph Smith, [2011],49). “ஜீவிக்கும் கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சி” 160 ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்சகர் பிறந்த 2,000 வது ஆண்டு நினைவாக இந்த அறிக்கை பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தை வெளியிட தூண்டியது (see Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 40).
பிற்காலப் பரிசுத்தவான்களாகிய நாம் தற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் தொடர்ந்து வெளிப்பாட்டின் ஆசீர்வாதத்தில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடைய உணர்த்துகிற ஆலோசனை, எச்சரிக்கை மற்றும் ஊக்கம் ஆகியவற்றிற்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துமஸ் காலத்திலும் ஆண்டு முழுவதும் இயேசு கிறிஸ்துபற்றிய வல்லமை வாய்ந்த சாட்சியங்களால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இவை திறமையான எழுத்தாளர்கள் அல்லது செய்தியாளர்கள் அல்லது வேத நிபுணர்களின் உள்ளுணர்வைக் காட்டிலும் அதிகம். அவை தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட, அழைக்கப்பட்ட மற்றும் “உலகெங்கிலும் கிறிஸ்துவின் நாமத்தின் விசேஷமாக” அங்கீகரிக்கப்பட்ட சாட்சிகளின் வார்த்தைகள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:23).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
“வேறு யாருக்கும் இவ்வளவு ஆழமான செல்வாக்கு இருந்ததில்லை.”
“பூமியில் வாழ்ந்த மற்றும் இன்னும் வாழும் அனைவர் மீதும் [இயேசு கிறிஸ்துவைப் போல] வேறு யாரும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தவில்லை” என்ற கூற்றுக்கு ஆதரவாக நீங்கள் என்ன கூறுவீர்கள்? இரட்சகரின் ஆழ்ந்த செல்வாக்கை விவரிக்கும் “ ஜீவிக்கும் கிறிஸ்துவில்” உள்ள சத்தியங்களைத் தேடுங்கள். அவர் உங்களில் எப்படி செல்வாக்கை ஏற்படுத்தினார்?
கிறிஸ்துவத்தைப் பற்றி அறிமுகமில்லாத ஒருவர் உங்களிடம் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இந்தக் கேள்வியை கருத்தில்கொண்டு “ஜீவிக்கும் கிறிஸ்து” மதிப்பாய்வு செய்து, உங்களுக்கு வரும் எண்ணங்கள் அல்லது பதிவுகளை எழுதவும்.
See also “Why We Need a Savior” (video), Gospel Library.
“அவர் கல்லறையிலிருந்து எழுந்தார்.”
“ ஜீவிக்கும் கிறிஸ்துவில் ”, அப்போஸ்தலர்கள் இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியமளிக்கிறார்கள், உயிர்த்தெழுந்த கர்த்தரின் மூன்று தரிசனங்களைக் குறிப்பிடுகிறார்கள் (பத்தி 5 பார்க்கவும்). யோவான் 20; 3 நேபி 11; மற்றும் ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:14–20ல் இந்த சந்திப்புகளைப்பற்றி வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த தரிசனங்களின் போது இரட்சகரின் வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
“அவருடைய ஆசாரியத்துவமும் அவருடைய சபையும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.”
இந்த ஆண்டு கோட்பாடும் உடன்படிக்கைகளும்பற்றிய உங்கள் படிப்பின் போது, இரட்சகரின் “ஆசாரியத்துவமும் அவருடைய சபையும் எவ்வாறு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன” என்பதுபற்றி மேலும் அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட எந்த சத்தியங்கள் அல்லது கொள்கைகள் உங்களுக்கு குறிப்பாக அர்த்தமுள்ளவை? மறுஸ்தாபிதம்பற்றி கற்பிக்கும் பின்வரும் சில வசனங்களை கருத்தில் கொள்ளுங்கள்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17–23; 13; 20:1–12; 65; 110; 112:30–32; 124:39–42; 128:19–21. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷ சத்தியங்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து நேசிப்பதற்கு உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
“அவர் ஒருநாள் பூமிக்குத் திரும்புவார்.”
கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறந்த நாளையே திரும்பிப் பார்க்கவும், அவர் மீண்டும் வரும் நாளை எதிர்நோக்கவும் ஒரு நேரம். “ ஜீவிக்கும் கிறிஸ்து ” கடைசிக்கு முந்தய பத்தியிலிருந்து அவர் திரும்ப வருவதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இரண்டாவது வருகையைப்பற்றி கற்பிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்களைப் படிப்பது, பாடுவது அல்லது கேட்பது சுவாரஸ்யமாக இருக்கலாம்“Joy to the World” அல்லது “It Came upon the Midnight Clear” (Hymns, nos. 201, 207).
“அவரே ஒளி, ஜீவன், உலகத்தின் நம்பிக்கை.”
“ ஜீவிக்கும் கிறிஸ்து ” இறுதி பத்தியில், இரடசகருக்கு கொடுக்கப்பட்ட பண்புகளையும் தலைப்புகளையும் கவனியுங்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக:
ஒளி இயேசு கிறிஸ்து உங்களுக்கு எப்படி ஒளியாக இருக்கிறார்? அவர் உங்களுக்குக் கொடுக்கும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு படத்தை வரைவதையோ அல்லது புகைப்படம் எடுப்பதையோ நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அவருடைய ஒளியை பகிர்ந்துகொள்வதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டுமென உணர்த்தப்படுகிறீர்கள்? யோவான் 8:12; 3 நேபி 18:24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:24 ஐயும் பார்க்கவும்.
ஜீவன்இயேசு கிறிஸ்துவை விவரிக்க ஜீவன் ஒரு நல்ல வார்த்தை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? எந்த அர்த்தத்தில் அவர் உங்களுக்கு ஜீவன் கொடுக்கிறார்? அவரும் அவருடைய சுவிசேஷமும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்கும்? யோவான் 10:10; 1 கொரிந்தியர் 15:19–23; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66:2 ஐயும் பார்க்கவும்.
நம்பிக்கை: இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தின் காரணமாக நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்றவராக உணரும் ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்துவில் நீங்கள் உணரும் நம்பிக்கையை எப்படி அந்த நபருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று சிந்தியுங்கள். ரோமர் 8:24–25; ஏத்தேர் 12:4; மரோனி 7:41ஐயும் பார்க்கவும்.
See also Topics and Questions, “Jesus Christ,” Gospel Library.
“தேவன் தனது தெய்வீக குமாரனின் இணையற்ற பரிசுக்கு நன்றி செலுத்தப்படுவாராக.”
“ஜீவிக்கும் கிறிஸ்து” இல், அப்போஸ்தலர்கள் இரட்சகரை நமது பரலோக பிதாவிடமிருந்து ஒரு “பரிசு” என்று குறிப்பிடுகிறார்கள். “வாழும் கிறிஸ்து” வில் நீங்கள் கண்டறிவதன் அடிப்படையில், இந்த வாக்கியத்தை எப்படி முடிப்பீர்கள்: “இயேசு கிறிஸ்து மூலம், தேவன் எனக்கு பரிசுகளைத் தருகிறார்…” இந்த பரிசுகளை இன்னும் முழுமையாகப் பெற நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
“ ஜீவிக்கும் கிறிஸ்து ” படிப்பது உங்கள் விசுவாசத்தையும் இரட்சகர் மீதான அன்பையும் எவ்வாறு பாதித்தது?
See also Russell M. Nelson, “Four Gifts That Jesus Christ Offers to You” (First Presidency Christmas devotional, Dec. 2, 2018), Gospel Library; “Excerpts from ‘The Living Christ: The Testimony of the Apostles’” (video), ChurchofJesusChrist.org.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
நான் இயேசுவின் பிறப்பைக் கொண்டாட என் “[என்] சாட்சியைப் பகிர” முடியும்.
-
“ஜீவிக்கும் கிறிஸ்துவுக்கு” உங்கள் பிள்ளைகளை எப்படி அறிமுகப்படுத்தலாம் என்பதைக் கவனியுங்கள். தலைப்பில் கிறிஸ்துவின் பெயரையும் பிரதான தலைமை மற்றும் பன்னிருவரின் கையொப்பங்களையும் சுட்டிக்காட்ட நீங்கள் அவர்களுக்கு உதவலாம். அவர்கள் உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய இயேசு கிறிஸ்துவின் சாட்சி இது என்று நீங்கள் விளக்கலாம்.
-
நீங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் “ஜீவிக்கும் கிறிஸ்து” என்ற சொற்றொடரைக் கொடுத்து, அந்த சொற்றொடரைக் கண்டுபிடிக்க அல்லது வரையச் சொல்லுங்கள். பின்னர், “ஜீவிக்கும் கிறிஸ்து”வில் என்ற சொற்றொடரைக் கண்டுபிடிக்க நீங்கள் அவர்களுக்கு உதவலாம். நீங்கள் அந்த படங்களையும் சொற்றொடர்களையும் ஒரு புத்தகமாக தொகுக்கலாம்.
-
இயேசு கிறிஸ்துகுறித்த சாட்சியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் இரட்சகரின் படத்தை சுற்றிலும் காட்டி, அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஒன்றை மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளலாம் (“ஜீவிக்கும் கிறிஸ்துவில்” கற்பிக்கப்படும் சத்தியங்கள் உட்பட).
“அவர் நன்மை செய்பவராக சுற்றித் திரிந்தார்.”
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் “ஜீவிக்கும் கிறிஸ்து” இரண்டாவது பத்தியைப் படிக்கும்போது, இயேசு செய்த சில விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அவருடைய வாழ்க்கையின் படங்களையும் பார்க்கலாம் (இந்த வார நிகழ்ச்சி பக்கம் மற்றும் Gospel Art Book பார்க்கவும்). படங்களில் இரட்சகர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி பேச உங்கள் குழந்தைகளை அழைக்கவும். அவர் செய்தது போல் நாம் எப்படி மற்றவர்களுக்கு சேவை செய்யலாம்? சுவிசேஷ நூலகத்தில் உள்ள “உலகுக்கு ஒளியேற்றுங்கள்” காணொலிகள் உங்களுக்கு யோசனைகளைத் தரக்கூடும்.
“அவரே ஒளி, ஜீவன், உலகத்தின் நம்பிக்கை.”
-
“O Little Town of Bethlehem” (Hymns, no. 208) போன்ற இரட்சகரின் பிறப்பு உலகிற்குக் கொண்டு வந்த ஒளி, வாழ்வு மற்றும் நம்பிக்கையைக் கூறும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஒன்றாகப் பாடல்களைப் பாடுங்கள், இயேசு எவ்வாறு ஒளியையும், வாழ்வையும், நம்பிக்கையையும் தங்கள் வாழ்வில் கொண்டுவந்தார் என்பதை உங்கள் பிள்ளைகள் பகிர்ந்துகொள்ளட்டும்.
“தேவன் தனது தெய்வீக குமாரனின் ஒப்பற்ற பரிசுக்கு நன்றி செலுத்தப்படுவாராக.”
-
இயேசு கிறிஸ்துவின் காரணமாக நமக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன? “ஜீவிக்கும் கிறிஸ்து” or in a song like “He Sent His Son” (Children’s Songbook, 34–35)இல் ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் இந்த பரிசுகளை தேடலாம். பின்னர் அவர்கள் அந்த பரிசுகளை பிரதிநிதித்துவப்படுத்த எதையாவதுவது பரிசுப் பொருளாக மடிக்கலாம். உங்கள் பிள்ளைகள் கிறிஸ்மஸ் தினத்தன்று பரிசுகளைத் திறக்குமாறு நீங்கள் பரிந்துரைக்கலாம், அவர்களுக்கு இரட்சகரையும் நமக்கு அவருடைய பரிசுகளையும் நினைவில் வைக்க அவர்களுக்கு உதவலாம்.