என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
டிசம்பர் 1–7: “மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138


“டிசம்பர் 1–7: ‘மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும், 137–138” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

ஆவி உலகத்தில் இயேசு கிறிஸ்து பிரசங்கித்தல்

ஆவி உலகத்தில் கிறிஸ்து போதித்தல்விளக்கம்–ராபர்ட் டி. பாரெட்

டிசம்பர் 1–7: “மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137 மற்றும் 138 ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட வெளிப்பாடுகள் 80 வருடத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் மற்றும் 1,500 (2,400 கிமீ) மைல்களால் பிரிக்கப்பட்டுள்ளன. பாகம் 137 ஐ தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் 1836 இல் கர்த்லாந்து ஆலயத்தில் பெற்றார், மேலும் பாகம் 138ஐ சபையின் ஆறாவது தலைவரான ஜோசப் எப். ஸ்மித் 1918 இல் சால்ட் லேக் சிட்டியில் பெற்றார். ஆனால் கோட்பாட்டு ரீதியாக, இந்த இரண்டு தரிசனங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. தேவனின் தீர்க்கதரிசிகள் உட்பட பலருக்கு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளுக்கு அவைகள் இரண்டும் பதிலளிக்கின்றன. ஜோசப் ஸ்மித் ஞானஸ்நானம் பெறாமலேயே இறந்துபோன தனது சகோதரர் ஆல்வின் கதியைப் பற்றி ஆச்சரியப்பட்டார். ஜோசப் எப். ஸ்மித், தனது பெற்றோர் மற்றும் 13 குழந்தைகளை அகால மரணத்தால் இழந்தவர், ஆவி உலகத்தைப் பற்றி அடிக்கடி சிந்தித்து, அங்குள்ள சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதை பற்றி வியந்தார்.

பாகம் 137 , தேவனுடைய பிள்ளைகளின் அடுத்த பிறவியின் நிலையின்மீது சில ஆரம்ப வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது, மேலும் பாகம் 138 திரைச்சீலைகளை இன்னும் அகலமாகத் திறக்கிறது. ஒன்றாக, அவை “பிதாவும் குமாரனும் வெளிப்படுத்திய பெரிய மற்றும் அற்புதமான அன்பைக்” குறித்து சாட்சியமளிக்கின்றன. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:3)

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137; 138:30–37, 57–60

வேத பாட வகுப்பு சின்னம்
பரலோக பிதாவின் பிள்ளைகள் அனைவருக்கும் நித்திய ஜீவனைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்.

தீர்க்கதரிசி ஜோசப்பின் அன்புச் சகோதரரான ஆல்வின் ஸ்மித், ஞானஸ்நானம் கொடுப்பதற்கான அதிகாரத்தை தேவன் மறுஸ்தாபிதம் செய்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 1836 ம் ஆண்டில் கிறிஸ்தவர்களிடையே இருந்த பொதுவான புரிதல் என்னவென்றால், ஒரு நபர் ஞானஸ்நானம் பெறாமல் மரித்துவிட்டால், அந்த நபர் பரலோகத்திற்கு செல்ல முடியாது. ஜோசப் பல ஆண்டுகளாக ஆல்வினின் நித்திய இரட்சிப்பைப் பற்றி ஆச்சரியப்பட்டார்—அவர் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137 இல் வெளிப்பாட்டை பெறும் வரை.

இன்று பலருக்கு இதே போன்ற கேள்விகள் உள்ளன. பல மக்கள் அவற்றைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாதபோது, தேவன் ஏன் கட்டளைகளையும் உடன்படிக்கைகளையும் கோருகிறார்? இதைப்பற்றி வியப்பவருக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? தேவன் மீதும் அவருடைய இரட்சிப்புக்கான தேவைகள் மீதும் அவர்களின் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவீர்கள்? பாகம் 137 மற்றும் பாகம் 138:30–37, 57–60 ஆகியவற்றில் நீங்கள் பகிரக்கூடிய சத்தியங்களைத் தேடுங்கள். “The Glorious Gospel Light Has Shone” (Hymns, no. 283) பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த சத்தியங்களையும் மற்றும் தலைவர் ஹென்றி பி. ஐரிங்கின் செய்தியில் “Gathering the Family of God” (Liahona, May 2017, 19–22) நீங்கள் தேடலாம்.

நீங்கள் படிக்கும் மற்றும் சிந்திக்கும் போது, இது போன்ற வாக்கியங்களை முடிப்பதன் மூலம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யலாம்:

  • இந்த வெளிப்பாடுகளின் காரணமாக, பரலோக பிதாவை நான் அறிவேன்

  • இந்த வெளிப்பாடுகளின் காரணமாக, பிதாவின் இரட்சிப்பின் திட்டம் என்பதை நான் அறிவேன்

  • இந்த வெளிப்பாடுகள் காரணமாக, நான் விரும்புகிறேன்

Saints, 1:232–35 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:1–11, 25–30

வேதங்களைப் படிப்பதும், சிந்திப்பதும் வெளிப்பாட்டைப் பெற என்னைத் தயார்படுத்துகிறது.

சில சமயங்களில் நாம் அதை நாடாவிட்டாலும் வெளிப்படுத்தல் வரும். ஆனால் பெரும்பாலும், நாம் கருத்தாய் தேடி, அதற்காக ஆயத்தமாகும்போது அது வருகிறது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138: 1–11, 25–30 ஐ நீங்கள் படிக்கும்போது, தலைவர் ஜோசப் எப். ஸ்மித் “[அவருடைய] புரிதலின் கண்கள் திறக்கப்பட்டபோது” என்ன யோசித்துக் கொண்டிருந்தார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் அவருடைய அனுபவத்தையும் ஒப்பிடலாம் 1 நேபி 11:1–6; ஜோசப் வ்மித்—வரலாறு 1:12–19. தலைவர் ஸ்மித்தின் உதாரணத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, அதிக தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெற உங்கள் வேதப் படிப்பில் என்ன மாற்றங்களைச் செய்ய நீங்கள் உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்?

The Vision of the Redemption of the Dead” (Liahona, Nov. 2018, 71–74), பற்றி அவரது செய்தியில், தலைவர் எம். ரசல் பல்லார்ட் இந்த வெளிப்பாட்டைப் பெற தலைவர் ஸ்மித் ஆயத்தப்படுத்தப்பட்ட பிற வழிகளை சொன்னார். அவரது அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்களுக்காக கர்த்தர் உங்களை எவ்வாறு தயார்படுத்தியிருக்கிறார்—மேலும் உங்கள் எதிர்கால அனுபவங்களுக்கு அவர் உங்களை எவ்வாறு தயார்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள்.

See also Saints, 3:202–5; “Ministry of Joseph F. Smith: A Vision of the Redemption of the Dead” (video), Gospel Library.

2:3

Ministry of Joseph F. Smith: A Vision of the Redemption of the Dead

தலைவர் ஜோசப் எப். ஸ்மித்

ஜோசப் எப். ஸ்மித் -ஆல்பர்ட் சால்ப்ரன்னர்

ஆவியை அழையுங்கள். “சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கான ஆவிக்குரியச் சூழலுக்கு என்ன பங்களிப்பை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்? அதிலிருந்து எது விலகச் செய்கிறது? (இரட்சகரின் வழியில் போதித்தல்18 பார்க்கவும்.) கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:1–11 இல் தலைவர் ஜோசப் எப். ஸ்மித்தின் அனுபவத்தை நீங்கள் படிக்கும்போது, உங்களுக்காகவும், நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால், நீங்கள் கற்பிக்கும் நபர்களுக்காகவும் எப்படி சிந்தித்து ஆவிக்குரிய பதிவுகளை ஊக்குவிக்கலாம் என்று சிந்தியுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:25–60

திரையின் மறுபுறத்தில் இரட்சகரின் பணிதொடர்கிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “உலகத்திற்கான நமது செய்தி எளிமையானது மற்றும் நேர்மையானது: திரையின் இருபுறமும் உள்ள தேவனின் பிள்ளைகள் அனைவரையும் தங்கள் இரட்சகரிடம் வரும்படி அழைக்கிறோம், பரிசுத்த ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், நீடித்த மகிழ்ச்சியைப் பெறுங்கள், நித்திய ஜீவனுக்கு தகுதி பெறுங்கள்” (“Let Us All Press On,” Ensign or Liahona, May 2018, 118–19). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:25–60 வாசிக்கும்போது இந்த வாசகத்தை சிந்தித்துப் பாருங்கள். இந்த கேள்விகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

  • ஆவி உலகில் இரட்சிப்பின் பணி எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த பணி நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வது ஏன் முக்கியம்?

  • ஆவி உலகில் கர்த்தரின் தூதர்களைப் பற்றி உங்களைக் கவர்ந்தது எது?

  • இந்த வெளிப்பாடு எவ்வாறு தேவனின் மீட்பின் திட்டத்தில் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துகிறது?

Trust in the Lord” (Liahona, Nov. 2019, 26–29) ஆவி உலகத்தைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், அதிபர் டாலின் எச். ஓக்ஸின் செய்தியைப் படிக்கலாம்.

See also “Susa Young Gates and the Vision of the Redemption of the Dead,” in Revelations in Context, 315–22; “A Visit from Father” (video), Gospel Library.

3:20

A Visit from Father

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 03

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:5–10; 138:18–35

பரலோக பிதாவின் பிள்ளைகள் அனைவருக்கும் சுவிசேஷத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  • ஜோசப் ஸ்மித் தனது குடும்ப உறுப்பினர்கள் பலரை பரலோக ராஜ்ஜியத்தில் பார்ப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி அறிய, the video “Ministry of Joseph Smith: Temples” (Gospel Library), அல்லது நீங்கள் பகிரலாம் Doctrine and Covenants Stories, 152–53 (or the corresponding video in Gospel Library) உங்கள் குழந்தைகள் பார்க்கலாம். ஞானஸ்நானம் பெற வாய்ப்பில்லாமல் மரித்த உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப்பற்றியும் நீங்கள் பேசலாம். அந்த நபரைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:5–10 நமக்கு என்ன போதிக்கிறது?

    2:3

    Ministry of Joseph Smith: Temples

    2:17

    Chapter 39: The Kirtland Temple Is Dedicated: January–March 1836

  • இரட்சகரின் கல்லறையின் படத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள் (see Gospel Art Book, no. 58, or Bible Photographs, no. 14) இயேசுவின் உடல் கல்லறையில் இருந்தபோது அவருடைய ஆவி எங்கு சென்றது என்பதை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்காக இந்த குறிப்பின் முடிவில் உள்ள படம். இயேசு அங்கே இருந்தபோது என்ன செய்தார் என்பதை அறிய நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138: 18–19, 23–24, 27–30 ஒன்றாக வாசிக்கவும். அவர் யாரை சந்தித்தார்? அவர்களை என்ன செய்யச் சொன்னார்? அவர் ஏன் இதைச் செய்தார்?

    The body of the crucified Christ being wrapped in white burial cloth (presumably by Joseph of Arimathaea and Nicodemus) in preparation for entombment. Several men and women are gathered around the crucified body. They are mourning the crucifixion.
  • திறையின் இந்தப் பக்கத்தில் ஊழியக்காரர்கள் என்ன கற்பிக்கிறார்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு ஒப்பிட்டுப் பார்க்க உதவ, இந்த வார நிகழ்ச்சி பக்கத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். (உதாரணமாக, விசுவாசப் பிரமாணங்கள் 1:4) ஆவிக்குரிய உலகில் ஊழியக்காரர்கள் என்ன கற்பிக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:33 பார்க்கவும்). இந்த வசனங்களில் என்ன ஒத்திருக்கிறது, வேறு என்ன வித்தியாசமாக இருக்கிறது? பரலோக பிதா, மற்றும் அவருடைய திட்டம் பற்றியும் இது உங்களுக்கு என்ன போதிக்கிறது?

குழந்தை வேதம் வாசித்தல்

வேதங்களைச் சிந்தித்துப் பார்ப்பது பரிசுத்த ஆவியை அழைக்கிறது.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:1–11

நான் வேதங்களைச் சிந்திக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவற்றைப் புரிந்துகொள்ள எனக்கு உதவுவார்.

  • நீங்களும் உங்கள் குழந்தைகளும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:1–11ஐ ஒன்றாகப் படிக்கும்போது, அவர்கள் தலைவர் ஜோசப் எப். ஸ்மித் என்று பாசாங்கு செய்ய அவர்களை அழைக்கலாம் மற்றும் வசனங்கள் 6 மற்றும் 11 இல் உள்ள வார்த்தைகளுக்கு ஏற்ப பாவனைகளைச் செய்யலாம். நீங்கள் அவர்களுக்கு தலைவர் ஸ்மித்தின் படத்தைக் காட்டலாம் (இந்த குறிப்பில் ஒன்று உள்ளது) மேலும் அவர் சபையின் ஆறாவது தலைவர் என்று விளக்கலாம். வேதங்களில் நீங்கள் எதையாவது யோசித்து, அதைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவிய காலத்தைப் பற்றியும் நீங்கள் பேசலாம்.

  • Search, Ponder, and Pray” (பிள்ளைகளின் பாடல் புத்தகம், 109) போன்ற வேதப்படிப்பைப்பற்றி ஒரு பாடலை ஒன்று சேர்ந்து பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். வேதத்தைப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பாடல் கூறுகிறது?

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

ஆவி உலகில் இயேசு கிறிஸ்து

ஆணையிடப்பட்டோர்–ஹரோல்ட் ஐ. ஹாப்கின்சன்

பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி பக்கம்