2010–2019
கர்த்தரை நம்புங்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


கர்த்தரை நம்புங்கள்

நம்முடைய ஒரே நிச்சயமான நம்பகத்தன்மை கர்த்தரிடத்தில் நம்பிக்கையும் அவருடைய பிள்ளைகளிடத்தில் அவருடைய அன்புமே.

என் அன்பு சகோதர சகோதரிகளே, சிலகாலத்திற்கு முன்பு எனக்கு வந்த கடிதம் எனது உரைக்கான பொருளை அறிமுகப்படுத்தியது. ஒரு நித்திய துணைவர் மரித்துப்போன ஒரு மனிதனுக்கான ஆலய திருமணத்தைப்பற்றி ஆசிரியர் சிந்தித்தார். அவள் இரண்டாவது மனைவியாயிருப்பாள். அவள் இந்தக் கேள்வியைக் கேட்டாள்: அடுத்த வாழ்க்கையில் அவளுக்கு அவளுடைய சொந்த வீட்டைப் பெற முடியுமா அல்லது அவளுடைய கணவரோடும் அவனுடைய முதல் மனைவியோடும் அவள் சேர்ந்து வாழவேண்டியதிருக்குமா? கர்த்தரை நம்பும்படியாக அவளிடம் நான் கூறினேன்.

ஒரு நம்பகமான தோழரிடமிருந்து நான் கேட்ட, பகிர்ந்துகொள்ள அவருடைய அனுமதியுடன் ஒரு அனுபவத்திலிருந்து நான் தொடருகிறேன். அவருடைய பிள்ளைகளின் தாயாயிருந்த அன்பான மனைவியின் மரணத்திற்குப் பின்பு தகப்பன் மறுமணம் செய்துகொண்டார். நன்கு வளர்ந்த பிள்ளைகள் மறுமணத்தை பலமாக ஆட்சேபித்து மரியாதைக்குரிய சபைத் தலைவராயிருந்த ஒரு நெருங்திய உறவினரின் ஆலோசனையை நாடினார்கள். ஆவி உலகத்தில் அல்லது கடைசி நியாயத்தீர்ப்பை பின்தொடருகிற மகிமையின் ராஜ்யங்களில், நிபந்தனைகள் மற்றும் உறவுகளில் கவனம் செலுத்துகிற அவர்களுடைய ஆட்சேபத்திற்கான காரணங்களைக் கேட்ட பின்னர் இந்த தலைவர் சொன்னார், “தவறான காரியங்களைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள்அந்த இடங்களுக்குப் போவீர்களா என்பதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டும். அதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அங்கே போனால், நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதைவிட அவை அனைத்தும் மிக அற்புதமாயிருக்கும்”.

என்ன ஒரு ஆறுதலான போதனை! கர்த்தரை நம்புங்கள்!

நாம் மரித்த பின்பும், நாம் உயிர்த்தெழுவதற்கு முன்பும் நாம் சுதந்தரிக்கிற ஆவி உலகத்தைப்பற்றிய கேள்விகளால் மற்றவர்கள் பதற்றமடைகிறார்கள் என்பதை எனக்கு வந்த கடிதங்களிலிருந்து நான் அறிந்தேன். இந்த அநித்திய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற அநேக உலகப்பிரகார சூழ்நிலைகளும் சிக்கல்களும் ஆவிஉலகத்தில் தொடரும் என சிலர் கருதுகிறார்கள். ஆவி உலகத்திலுள்ள நிலைமைகளைப்பற்றி உண்மையில் நமக்கு என்ன தெரியும்? இந்த பொருளைப்பற்றி பி.ஒய்.யு மத பேராசிரியரின் கட்டுரையில் இது சரியாக சொல்லப்பட்டிருக்கிறதென நான் நம்புகிறேன். “தரமான புத்தகங்களிலிருந்து ஆவி உலகத்தைப்பற்றி நாம் என்ன அறிகிறோம் என நாம் நம்மையே கேட்டுக்கொள்ளும்போது, ‘நாம் வழக்கமாக நினைப்பது போலில்லை’ என்பது பதிலாயிருக்கிறது.”1

நமது சரீரம் மரித்த பின்பு ஆவிகளாக ஆவி உலகத்தில் தொடர்ந்து வாழுவோம் என வேதங்களிலிருந்து நிச்சயமாக நாம் அறிகிறோம். வாழ்க்கையின்போது நீதியான அல்லது நியாயவான்களாய் இருந்தவர்களுக்கும், துன்மார்க்கர்களாய் இருந்தவர்களுக்கும் இடையில் இந்த ஆவிஉலகம் பிரிக்கப்பட்டிருக்கிறது எனவும் வேதம் போதிக்கிறது. துன்மாக்கராகவும் அல்லது கலகக்காரராவும் இருந்தவர்களுக்கு எவ்வாறு சில விசுவாசமிக்க ஆவிகள் சுவிசேஷத்தைப் போதித்தன என்பதையும் அவை விவரிக்கின்றன(1 பேதுரு 3:19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:19–20, 29, 32, 37 பார்க்கவும்). அநித்தியத்தில் நமது மனந்திரும்புதலை தள்ளிப்போடாதிருக்க நாம் வலியுறுத்தப்பட்டாலும் (ஆல்மா 13:27பார்க்கவும்), அங்கே ஆவி உலகத்தில் இரட்சிப்பின் பணி முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:30–34, 58பார்க்கவும்) என மிக முக்கியமான தற்கால வெளிப்படுத்தல் வெளிப்படுத்துகிறது, அங்கே கொஞ்சம் மனந்திரும்புதல் சாத்தியமாயிருக்கிறது என நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:58பார்க்கவும்).

“அடிமைத்தனம்” என வேதம் அடிக்கடி விவரிக்கிற ஆவிகளை விடுவித்தல் ஆவி உலகத்தின் இரட்சிப்பின் பணியில் அடங்கியிருக்கிறது. ஆவி உலகத்திலுள்ள அனைவரும் ஏதோ ஒரு அடிமைத்தன வடிவத்திலிருக்கிறார்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138வது பாகத்தில் விதியாக்கப்பட்டுள்ள தலைவர் ஜோசப் எப். ஸ்மித்தின் மகத்தான வெளிப்படுத்தல் உரைக்கிறது, “சமாதான” நிலையிலிருந்த நீதிமான்களாய் மரித்தவர்கள்,(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:22) உயிர்த்தெழுதலை எதிர்பார்த்திருந்தபோது, (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:16, பார்க்கவும்) “மரித்தவர்கள் தங்களுடைய சரீரங்களில் நீண்ட நாட்களாக தங்களுடைய ஆவிகளில்லாததை ஒரு அடிமைத்தனமாக நினைத்தார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:50).

துன்மார்க்கர் கூடுதல் அடிமைத்தனத்தில் துன்பப்படுகிறார்கள். மனந்திரும்பாத பாவங்களினிமித்தம், அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட ஆவி “சிறைச்சாலையில்” (1 பேதுரு3:19; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:42ஐயும் பார்க்கவும்) அவர்களிருக்கிறார்கள். இந்த ஆவிகள் “கட்டப்பட்டவர்கள் அல்லது “சிறைப்பிடிக்கப்பட்டவர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:31, 42) என அல்லது, உயிர்த்தெழுதலுக்காகவும் நியாயத்தீர்ப்புக்காகவும் அவர்கள் காத்திருக்கும்போது “அழுகையும், புலம்பலும், பற்கடிப்புமுள்ள புறம்பான இருளிலே தள்ளப்பட்டவர்களாக” (ஆல்மா 40:13–14).

வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு பிரிவுகளுக்கு இது நடைபெற்றாலும் கூட, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் ஆவி உலகத்திலுள்ள அனைவருக்கும் உயிர்த்தெழுதல் உறுதியளிக்கப்படுகிறது(1 கொரிந்தியர் 15:22 பார்க்கவும்). அந்த குறிக்கப்பட்ட நேரம்வரைக்கும் ஆவி உலகத்தின் நடவடிக்கையைப்பற்றி வேதம் நமக்குக் கூறுவது முக்கியமாக இரட்சிப்பின் பணியைப் பற்றியது. இன்னும் கொஞ்சமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறியாதவர்களுக்கும், மனந்திரும்பாதவர்களுக்கும், கலகக்காரர்களுக்கும், தங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுதலையடைந்து, ஒரு நேசமுள்ள பரலோக பிதா அவர்களுக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக முன்னேறிச் செல்லும்படிக்கு சுவிசேஷம் அவர்களுக்கு பிரசிங்கிக்கப்படுகிறது.

நீதியுள்ள மனமாறிய ஆத்துமாக்களுக்கு பொருந்துகிற ஆவி உலகத்தின் அடிமைத்தனம் அவர்கள் காத்திருக்க வேண்டிய தேவையாயிருக்கிறது, மேலும் அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படியாகவும் பூமியில் தங்களுடைய பதிலி நியமங்களுக்கான நிகழ்வை ஒருவேளை தூண்ட அனுமதிக்கப்படலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:30–37, 57–58பார்க்கவும்).2 சிறையிலிருக்கும் ஆவிகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்க முடிகிற நீதிமான்களின் சேனையை விஸ்தரிக்க ஆசாரியத்துவ அதிகாரத்தின் கீழ் முன்னேறிச் செல்ல இந்த அநித்திய பதிலி நியமங்களுக்கும் வல்லமையளிக்கிறது.

இந்த அடிப்படைகளுக்கும் அப்பால், அது மரணம் மற்றும், இறுதி நியாயத்தீர்ப்புக்கு முந்தய ஆவிஉலகத்தைப்பற்றி நமது வேத விதி சிறிதே அடக்கியுள்ளது.3 ஆகவே ஆவி உலகத்தைப்பற்றி வேறென்ன நமக்குத் தெரியும்? ஆவி உலகத்தில் காரியங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன அல்லது நிர்வகிக்கப்படுகிறதென்பதைப்பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கிற தரிசனங்களை அல்லது உணர்த்துதல்களை சபையின் பிற அநேக அங்கத்தினர்கள் பெற்றிருந்தனர், ஆனால், சபையின் அதிகாரப்பூர்வ கோட்பாடாக இந்த தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்கள் புரிந்துகொள்ளப்படவோ அல்லது போதிக்கப்படவோ கூடாது. உண்மையாகவே, மரணத்திற்கருகிலுள்ள அனுபவங்களைப்பற்றிய புத்தகங்கள் போன்ற வெளியிடப்பட்ட ஆதாரங்களில் அங்கத்தினர்களாலும் மற்றவர்களாலும் ஏராளமான ஊகமிருக்கிறது.4

இவை அனைத்தையும்போல, மூப்பர்கள் டி. டாட் கிறிஸ்டாபர்சன், நீல். எல். ஆன்டர்சன்னின் முந்தய பொது மாநாட்டு செய்திகளின் ஞானமிக்க எச்சரிக்கைகள் நினைவுகூர முக்கியமானவை. மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதித்தார், “கடந்த அல்லது தற்போதுள்ள தலைவர்களால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அறிக்கையும் கோட்பாட்டை உள்ளடக்கியிருக்கத் தேவையில்லை என்பது நினைவில் வைக்கப்படவேண்டும். ஒரு தனி சந்தர்ப்பத்தில் ஒரு தலைவரால் கொடுக்கப்பட்ட அறிக்கை, நன்றாக கருதப்பட்ட கருத்தாயிருந்தாலும் முழு சபைக்கும் அதிகாரப்பூர்வமாயிருக்க அல்லது கட்டுப்பாடாயிருக்க வேண்டியதில்லை என பொதுவாக சபையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.”5

பின்வந்த மாநாட்டில் இந்த கொள்கையை மூப்பர் ஆன்டர்சன் போதித்தார்: “பிரதான தலைமையிலும் பன்னிருவர் குழுமத்திலுமுள்ள அனைத்து 15 அங்கத்தினர்களால் கோட்பாடு போதிக்கப்படுகிறது. ஒரு உரையின் தெளிவற்ற பத்தியில் அது மறைக்கப்படவில்லை.”6 அனைத்து 15 தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற் வெளிப்படுத்துபவர்களால் கையொப்பமிடப்பட்ட குடும்ப பிரகடனம் அந்த கொள்கைக்கு ஒரு அற்புதமான விளக்கம்.

குடும்ப பிரகடனம் போன்ற முறையான ஒன்றுக்கு அப்பால், சபைத் தலைவர்களின் தீர்க்கதரிசன போதனைகள் மற்ற தீர்க்கதரிசிகளாலும் அப்போஸ்தலர்களாலும் உறுதியாக்கப்பட்டு இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவுமிருக்கிறது. ஆவி உலகத்தின் சூழ்நிலைகளைப் பொருத்தவரை, அவருடைய ஊழியத்தின் நிறைவுக்கு அருகில், அவரைத் தொடர்ந்தவர்களால் அடிக்கடி போதிக்கப்பட்ட இரண்டு போதனைகளை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கொடுத்தார். நீதிமான்களாயிருந்த குடும்ப அங்கத்தினர்கள் ஆவிகளின் உலகத்தில் ஒன்று சேர்ந்திருப்பார்கள் என்பது போலெட் இராஜா பிரசங்கத்தில் இவைகளில் ஒன்று அவருடைய போதனை.7 மற்றொன்று அவருடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டில் ஒரு அடக்க ஆராதனையில் இந்த வாசகம்: “நீதிமான்களின் ஆவிகள் மிகப்பெரிய அதிக மகிமையான பணிக்கு உயர்த்தப்படுகின்றன. … அவர்கள் நம்மைவிட்டு தூரத்திலில்லை, நமது சிந்தனைகளை, உணர்வுகளை, இயக்கங்களை அறிவார்கள், புரிந்துகொள்வார்கள் மற்றும் பெரும்பாலும் அதனால் வேதனையடைவார்கள்.”8

ஆகவே, ஆவிகள் எங்கே வாழுகிறதென்பதைப்பற்றி ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப்போல ஒரு கேள்வியின் நிலை என்ன? அந்தக் கேள்வி உங்களுக்கு விசித்திரமாக அல்லது அற்பமாகத் தோன்றினால், உங்களுடைய அநேக கேள்விகளை அல்லது, கடந்த காலத்தில் ஒரு நேரத்தில் மற்றொரு நபரிடமிருந்து நீங்கள் கேட்ட ஒன்றின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளிக்க நீங்கள் சோதிக்கப்படுகிறதை கருத்தில் கொள்ளுங்கள். ஆவி உலகத்தைப்பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் நான் இரண்டு பதில்களை ஆலோசனையளிக்கிறேன்.. Fமுதலாவதாக கர்த்தர் அவருடைய பிள்ளைகளை நேசிக்கிறார், நம் ஒவ்வொருவருக்கும் சிறந்ததை நிச்சயமாக செய்வார் என நினைவுகூருங்கள். இரண்டாவதாக பல பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு எனக்கு மிக உதவியாயிருந்த இந்த பிரசித்தமான வேதாகம போதனையை நினைவுகூருங்கள்.

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

“உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள் 3:5–6).

அதைப்போன்று, இந்த வார்த்தைகளுடன் நேபி அவனுடைய மகா சங்கீதத்தை நிறைவுசெய்தான். “கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன், நான் உம்மில் என்றென்றைக்கும் நம்பிக்கையாயிருப்பேன். நான் மாம்ச புயத்தில் என் நம்பிக்கையை வைக்கமாட்டேன்” (2 நேபி 4:34).

ஆவி உலகத்திலுள்ள சூழ்நிலைகளைப்பற்றி தனியாக நாம் அனைவரும் ஆச்சரியப்படலாம் அல்லது இவைகளைப்பற்றி அல்லது குடும்பத்தில் பிற பதிலளிக்கப்படாத கேள்விகளைப்பற்றி அல்லது பிற நெருக்கமான சூழ்நிலைகளைப்பற்றி விவாதிக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோட்பாட்டின் தரங்களை பூர்த்திசெய்யாதவற்றை அதிகாரப்பூர்வ கோட்பாடாக நாம் போதிக்காமல் அல்லது பயன்படுத்தாமலிருப்போமாக. அப்படிச்செய்ய கர்த்தருடைய வேலையை முன்னேற்றாமல், தங்களுடைய சொந்த வசதியை அல்லது தெளிவுபடுத்துவதிலிருந்து தனிப்பட்டவர்களை அல்லது நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தருடைய திட்டம் வழங்கியிருக்கிற தனிப்பட்ட வெளிப்படுத்தலின் மூலமாக ஊக்கமிழக்கச் செய்யலாம். தனிப்பட்ட போதனைகளை அல்லது ஊகங்களை, அதிகமாக சார்ந்திருப்பது கற்றுக்கொள்ளுவதில் கவனம் செலுத்துவதிலிருந்து மற்றும் நமது புரிந்துகொள்ளுதலை அதிகமாக்கி உடன்படிக்கைப் பாதையில் முன்னேறிச்செல்ல நமக்குதவுகிற முயற்சிகளிலிருந்து நம்மை புறம்பே இழுக்கலாம்.

கர்த்தரில் நம்பிக்கை, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரசித்தமான உண்மையான போதனையாயிருக்கிறது. ஆரம்பகால பரிசுத்தவான்கள் மோசமான துன்புறுத்தலை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, தாங்கமுடியாத தடைகளாகத் தோன்றியபோது அது ஜோசப் ஸ்மித்தின் போதனையாயிருந்தது.9 கற்றுக்கொள்ள நமது முயற்சிகளிருக்கும்போது, அல்லது இன்னமும் வெளிப்படுத்தப்படாத காரியங்களில் தடைகளை எதிர்கொள்ள வசதியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, அல்லது சபையின் அதிகாரப்பூர்வ கோட்பாடாக சேர்க்கப்படாமலிருக்கும்போது நாம் பயன்படுத்தக்கூடிய இது இன்னமும் சிறந்த கொள்கையாயிருக்கிறது.

அடுத்த வாழ்க்கையில் முத்திரிப்பதைப்பற்றி பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு அல்லது அநித்தியத்தில் நிகழ்ச்சிகளால் அல்லது மீறுதலினால் விரும்பிய சரிசெய்தலுக்கு அந்த அதே கொள்கை பொருந்துகிறது. கர்த்தரிலும் அவருடைய பிள்ளைகளுக்கான அவருடைய அன்பிலும் நம்பிக்கை வைப்பது நமது ஒரே நிச்சயமான நம்பகத்தன்மை என்ற நமக்குத் தெரியாத அநேகமுண்டு.

முடிவில், அங்கே பிதா மற்றும் குமாரனின் இரட்சிப்பின் பணி தொடருகிறது என்பதுதான் ஆவி உலகத்தைப்பற்றி நாம் அறிவதாகும். காவலிலுள்ளவர்களுக்கு விடுதலையளிக்கும் பணியை நமது இரட்சகர் ஆரம்பித்து வைத்தார்,(1 பேதுரு 3:18–19; 4:6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:6–11, 18–21, 28–37பார்க்கவும்). அதன் சுத்திகரிப்பின் பலன் இன்னமும் தேவையாயிருக்கிறவர்களுக்கு மனந்திரும்புதலையும் சேர்த்து, தகுதியுள்ள தூதர்கள் சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசிங்குக்கும் பணி தொடருகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:57பார்க்கவும்). சபையின் அதிகாரப்பூர்வமான கோட்பாட்டில் விவரிக்கப்பட்டிருக்கிற, அவையனைத்தின் நோக்கம் தற்கால வெளிப்படுத்தலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

“தேவனின் வீட்டின் நியமங்களுக்குக் கீழ்ப்படிதலின் மூலமாக, மனந்திரும்பிய மரித்தவர்கள் மீட்கப்படுவார்கள்,

தங்களுடைய மீறுதல்களுக்காக அவர்கள் கிரயம் செலுத்திய பின், சுத்தமாகக் கழுவப்பட்ட பின்பு, அவர்கள் இரட்சிப்பின் சந்ததிகளாயிருப்பதால் அவர்களின் கிரியைகளுக்குத் தக்கதாய் ஒரு பலனைப் பெறுவார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:58–59).

மறுஸ்தாபித சுவிசேஷத்தின் கோட்பாட்டை போதிப்பது, கற்பனைகளைக் கைக்கொள்ளுவது, ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி, உதவுதல், பரிசுத்த ஆலயங்களில் இரட்சிப்பின் பணியை செய்தல் நம் ஒவ்வொருவரின் கடமை.

இங்கே நான் சொன்னவற்றின் சத்தியத்தையும், இந்த மாநாட்டில் போதிக்கப்பட்ட போதிக்கப்பட இருக்கிற சத்தியத்தையும் குறித்து நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம் இவை அனைத்தும் சாத்தியமாக்கப்பட்டது. தற்கால வெளிப்படுத்தலிலிருந்து நாம் அறிந்ததைப்போல அவர் பிதாவை மகிமைப்படுத்தி, அவருடைய கரங்களின் கிரியைகள் எல்லாவற்றையும் இரட்சிக்கிறார்”( கோட்பாடும் உடன்படிக்கைகளும்76:43; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது). இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “What’s on the Other Side? A Conversation with Brent L. Top on the Spirit World,” Religious Educator, vol. 14, no. 2 (2013), 48.

  2. See Teachings of the Prophet Joseph Smith, sel. Joseph Fielding Smith (1976), 309–10; Joseph Smith, “Journal, December 1842–June 1844; Book 2,” p. 246, The Joseph Smith Papers, josephsmithpapers.org பார்க்கவும்.

  3. ஆவி உலகத்தைப்பற்றி பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிற ஜோசப் ஸ்மித்தின் வெளிப்படுத்தல் உரைக்கிறது, “இங்கே நம்மிடையே இருக்கிற அதே பழகும் தன்மையே அங்கேயும் நம்மிடையே இருக்கும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும்130:2). இது இப்படியாக தொடருவதால் ஆவி உலகத்தைவிட இது மகிமையின் இராஜ்ஜியத்தை இது விவரிக்கிறது. “அது இப்போது நாம் அனுபவிக்காத மகிமையான நித்திய மகிமையுடன் இணைக்கப்பட்டிருக்கும்”(வசனம். 2).

  4. உதாரணமாக, George G. Ritchie, Return from Tomorrow (1978) and Raymond Moody, Life after Life (1975).

  5. D. Todd Christofferson, “The Doctrine of Christ,” Liahona, May 2012, 88; see also Joseph F. Smith, Gospel Doctrine, 5th ed. (1939), 42. ஐயும் பார்க்கவும். உதாரணமாக,கோட்பாடும் உடன்படிக்கைகளும் 74:5 லிலுள்ள விளக்கம், அப்போஸ்தலனாகிய பவுலின் ஒரு தனிப்பட்ட போதனை.

  6. Neil L. Andersen, “Trial of Your Faith,” Liahona, Nov. 2012, 41.

  7. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 175–98 பார்க்கவும்.

  8. History of the Church, 6:52; included in Teachings of the Prophet Joseph Smith, 326; often quoted, as in Henry B. Eyring, To Draw Closer to God (1997), 122; see also Teachings of Presidents of the Church: Brigham Young (1997), ch. 38, “The Spirit World.”

  9. Teachings: Joseph Smith, 231–33 பார்க்கவும்.

அச்சிடவும்