2010–2019
நிலையான மற்றும் மீளும் நம்பிக்கை
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

நிலையான மற்றும் மீளும் நம்பிக்கை

கர்த்தரை நம்புவதில் அவரது நேரத்தை நம்புவதும் இருக்கிறது, வாழ்க்கைப் புயல்களை தாங்குகிற பொறுமையும் நிலைத்தலும் அதற்குத் தேவைப்படுகிறது.

எங்கள் மகன் டான், ஆப்பிரிக்காவில் அவனது ஊழியத்தின்போது மிகவும் சுகவீனமாகி அளவான வசதிகளுள்ள ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனது சுகவீனத்துக்கு பிறகு, எங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தை நாங்கள் வாசித்தபோது, அவன் அதைரியமடைவான் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் மாறாக அவன் எழுதினான், “நான் அவசர சிகிச்சை அறையிலிருந்த போதும் கூட சமாதானமாக இருந்தேன். நான் வாழ்க்கையில் ஒருபோதும் இவ்வளவு நிலையாகவும், மீண்டும் மகிழ்ச்சியடைந்ததில்லை.”

என் மனைவியும் நானும் இந்த வார்த்தைகளை வாசித்தபோது, நாங்கள் உணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்டோம். நிலையாகவும் மற்றும் மீளுகிற மகிழ்ச்சியடைந்தோம். மகிழ்ச்சி அவ்விதமாக விவரிக்கப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அவனது வார்த்தைகள் உண்மையாகத் தெரிந்தது. அவன் விவரித்த மகிழ்ச்சி இன்பமானதோ அல்லது உயர்த்தப்பட்ட நிலையோ அல்ல என எங்களுக்குத் தெரியும், ஆனால் எல்லாவற்றிலும் நாம் சரணடைந்து, அவர் மீது நமது நம்பிக்கையை வைக்கும்போது ஒரு சமாதானமும் மகிழ்ச்சியும் வருகிறது.1 வாழ்க்கை கடினமானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தபோதும், தேவன் எங்கள் ஆத்துமாக்களில் சமாதானம் பேசி, கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளச் செய்தபோது, நாங்களும் அவ்வித நேரங்களை எங்கள் வாழ்க்கையில் பெற்றோம்.2

லேகி போதிக்கிறான், ஆதாமும் ஏவாளும் வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால், அவர்கள் துர்பாக்கியத்தை அறியாததனிமித்தம், சந்தோஷத்தை அறியாமல் அறியாமையின் நிலையிலேயே இருந்திருப்பர்; …

இதோ சர்வத்தையும் அறிந்திருக்கிறவரின் ஞானத்தின்படியேசர்வமும் நடப்பிக்கப்பட்டது.

“மனுஷன் பிழைத்திருக்கவே ஆதாம் வீழ்ந்து போனான், சந்தோஷமாக இருக்கவே மனுஷன் பிழைத்திருக்கிறான்.”3

ஒரு மாறுபாடான விதத்தில் நாம் கர்த்தரையும், நமக்காக அவரது திட்டத்தையும் நம்பினால், உபத்திரவங்களும் துயரங்களும் மகிழ்ச்சியை அனுபவிக்க நம்மை ஆயத்தப்படுத்தும். இந்த உண்மை 13ம் நூற்றாண்டு கவிஞரால் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது: “துன்பம் உங்களை மகிழ்ச்சிக்கு ஆயத்தப்படுத்துகிறது. மகிழ்ச்சி உங்கள் வீட்டுக்குள் நுழைய இடம் இருக்கும்படியாக அது வன்முறையால் உங்கள் வீட்டிலிருந்து அனைத்தையும் துடைத்தெறிகிறது, புதிய பச்சை இலைகள் அதனிடத்தில் , வளரும்படியாக உங்கள் இருதயத்தின் கிளையிலிருந்து, மஞ்சள் இலைகளை உதிர்க்கிறது. கீழே புதைந்துள்ள புதிய வேர்கள் வளர இடம் இருக்கும்படியாக, அது அழுகிய வேர்களை மேலே இழுக்கிறது. உங்கள் இருதயங்களை எந்த துக்கம் அசைத்தாலும், அவற்றின் இடத்தை மிகச்சிறந்தவை எடுத்துக் கொள்ளும்.” 4

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “இரட்சகர் நமக்குக் கொடுக்கிற மகிழ்ச்சி, … நிலையானது, ‘நமது உபத்திரவங்கள் சிறிது காலத்துக்கே’ என உறுதியளிக்கிறது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1217 நமது ஆதாயத்துக்காகவே அர்ப்பணிக்கபபட்டது.’5 நமது பாடுகளும் உபத்திரவங்களும் அதிகமான மகிழ்ச்சிக்கு இடத்தை உருவாக்க முடியும்.6

சுவிசேஷத்தின் நற்செய்தியாவது, துயரமும் பாடுகளும் இல்லாத வாழ்க்கை என்ற வாக்குத்தத்தம் இல்லை, ஆனால் இலக்கும் அர்த்தமும் நிறைந்த வாழ்க்கை—நமது துயரங்களும் வியாகுலங்களும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் விழுங்கப்பட முடியும்.7 இரட்சகர் சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”8 அவரது சுவிசேஷம் ஒரு நம்பிக்கையின் செய்தி. துயரம் இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கையோடு இணைந்து, நீடித்த மகிழ்ச்சியின் வாக்குத்தத்தத்தை கொண்டிருக்கிறது.

யாரேதியர்களின் வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு பயண விவரம் நமது பூலோக பயணத்துக்கு உவமையாக பயன்படுத்தப்படலாம். “பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் தெரிந்து கொள்ளத்தக்க தேசத்தினுள் அவர்களுக்கு முன்னாக போக,” வேண்டும் என யாரேதின் சகோதரனுக்கும் அவனது ஜனத்துக்கும் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணினார்.9 கலங்களைக் கட்ட அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார், கர்த்தரின் அறிவுரைகளின்படி அவற்றைக் கட்ட வேலை செய்ய அவர்கள் கீழ்ப்படிதலுடன் போனார்கள். எனினும் வேலை நடந்தபோது, கலங்களுக்கு கர்த்தரின் வடிவமைப்பு போதாது என யாரேதின் சகோதரன் அக்கறையடைந்தான். அவன் கதறினான்,

“கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்ட வேலையை நான் செய்தேன், மேலும் நீர் எனக்கு ஏவினபடியே தோணிகளைச் செய்தேன்.

கர்த்தாவே இதோ, அவைகளில் வெளிச்சமில்லை.”10

“கர்த்தாவே நாங்கள் இந்த பெரிய தண்ணீரைக் காரிருளிலே கடக்க நீர் அனுமதிப்பீரோ?”11

நீங்கள் எப்போதாவது அவ்விதமாக உங்கள் ஆத்துமாவை தேவனிடம் ஊற்றியிருக்கிறீர்களா? கர்த்தர் கட்டளையிடுகிறபடி விழ முயலும்போது, நீதியான எதிர்பார்ப்புகள் நடக்காவிட்டால், இந்த வாழ்க்கையில் இருளின் ஊடாக கடந்து போக வேண்டுமா என ஆச்சரியப்பட்டதுண்டா?12

தோணிகளில் பிழைத்திருக்க அவர்களது திறமை பற்றி பெரும் அக்கறை கூட யாரேதின் சகோதரன் தெரிவித்தான். அவன் “மேலும் நாங்கள் அழிந்து போவோம், ஏனெனில் அவைகளில் இருக்கிற காற்றேயல்லாமல், வேறு காற்று இல்லாததினால் நாங்கள் மூச்சு விட முடியாமல் அழிந்து போவோம், என கதறினான்.” 13 உங்கள் பரலோக வீட்டுக்கு செல்வதில்லாவிட்டாலும், இந்த நாளை எப்படி கழிப்பது என வாழ்க்கையின் கஷ்டங்கள் எப்போதாவது மூச்சுவிட கடினமானதாக்கி, உங்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறதா?

அவனது அக்கறைகள் ஒவ்வொன்றையும் யாரேதின் சகோதரன் தீர்க்க கர்த்தர் அவனுடன் கிரியை செய்தார், ஆனால் பின்னர் விளக்கினார், சமுத்திரத்தின் அலைகளுக்கும், புறப்பட்டுப்போன காற்றுக்களுக்கும், வரவிருக்கிற பிரளயத்துக்கும், எதிராக நான் உங்களை ஆயத்தப்படுத்தினாலொழிய நீங்கள் இந்தப் பெரும் ஆழங்களைக் கடக்க முடியாது.14

முடிவாக அவராலேயல்லாமல், வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு யாரேதினர் செல்ல முடியாது என கர்த்தர் தெளிவுபடுத்தினார். அவை கட்டுப்பாட்டிலிலில்லை, அவர்கள் பெரிய ஆழங்களைக் கடக்கும் ஒரேவழி, அவரில் அவரது நம்பிக்கையை வைப்பதே. இந்த அனுபவங்களும் கர்த்தரின் படிப்பினைகளும், யாரேதின் சகோதரனின் விசுவாசத்தை ஆழமாக்கி, கர்த்தரில் அவனது நம்பிக்கையை பெலப்படுத்தியது போல தோன்றுகிறது.

அவனது ஜெபங்கள், கேள்விகள் மற்றும் அக்கறைகளிலிருந்து, விசுவாசம் மற்றும் நம்பிக்கையாக எப்படி மாற்றியது என்பதைக் கவனியுங்கள்.

“கர்த்தாவே நீர் சர்வ வல்லமையுடையவரென்றும், மனுஷனுடைய நன்மைக்காக எதையும் செய்யக்கூடுமென்றும்; …

“இதோ, உம்மாலே இதைச் செய்யக்கூடும். மனுஷனுடைய அறிவுக்கு சிறியதாய்த் தெரிகிற பெரும் வல்லமையை உம்மாலே காண்பிக்கக் கூடும்.”15

யாரேதியர், பின்னர் தங்கள் தோணிகளில் ஏறி, தங்களையே கர்த்தராகிய தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, சமுத்திரத்தில் பிரயாணம் பண்ணலானார்கள்.16 ஒப்புக்கொடுத்தல் என்பது, ஒப்படைத்தல் அல்லது சரணடைவதாகும். அவர்கள் தங்கள் பயணத்தில் காரியங்கள் எப்படி நடக்கும் என அறிந்ததால் யாரேதியர் தோணிகளில் ஏறவில்லை. அவர்கள் கர்த்தரின் வல்லமையையும், நன்மையையும், இரக்கத்தையும், அவர்கள் நம்ப கற்றதாலும்,அவர்கள் தங்களையும் கர்த்தர் மேல் அவர்கள் கொண்ட சந்தேகங்களையும் பயங்களையும் அர்ப்பணிக்க தயாராயிருந்ததாலும், அவர்கள் ஏறினார்கள்

அண்மையில் எங்கள் பேரன் அபி மேலும் கீழும் அசைகிற ஒரு பொம்மை மிருகத்தில் சவாரி செய்ய பயப்பட்டான். அசையாத ஒன்றை அவன் தேர்வு செய்தான். கடைசியாக அவனது பாட்டி அது பாதுகாப்பானது என வற்புறுத்தினாள், அவளை நம்பி அவன் ஏறினான். பின் சிரித்துக்கொண்டே அவன் சொன்னான், “நான் பாதுகாப்பாக உணரவில்லை, ஆனால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.” ஒருவேளை யாரேதியரும் அப்படி உணர்ந்திருக்கலாம். தேவனை நம்புவது எப்போதுமே முதலில் பாதுகாப்பானதாக உணரப்படாது, ஆனால் மகிழ்ச்சி தொடருகிறது.

அபி பொம்மை மிருகத்தின் மீது

யாரேதியர்களுக்கு பயணம் எளிதாயிருக்கவில்லை. அவர்கள் மேல் விழுந்த மலைபோன்ற அலைகளினிமித்தம், பல நேரங்களில் அவர்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் புதைக்கப்பட்டனர்.17 ஆயினும் காற்று, வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு நேராய் வீசுவதிலிருந்து ஒயவில்லை.18 விசேஷமாக நமது வாழ்க்கையில் இது புரிந்துகொள்ள கஷ்டமாயிருப்பதுபோல, எதிர் காற்று பலமாகவும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்போது, தேவன் தமது அளவற்ற நன்மையினால் எப்போதும் நம்மை வீட்டை நோக்கி தள்ளுகிறார் என அறிவதில் நாம் ஆறுதல் அடையலாம்.

பதிவு தொடர்கிறது, “அவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள், சமுத்திரத்தின் எந்த பயங்கர மிருகத்தினாலும் அவைகளை உடைக்க முடியவில்லை. திமிங்கலத்தினாலும் அவைகளுக்கு கேடு உண்டாக்க முடியவில்லை, தண்ணீருக்கு மேலோ அல்லது தண்ணீருக்கு கீழோ அவர்கள் தொடர்ந்து வெளிச்சம் பெற்றிருந்தார்கள்.”19 சாவின் பயங்கர அலைகளும், சரீர, மன சுகவீனங்களும், மற்றும் எல்லாவிதமான பாடுகளும் உபத்திரவங்களும் நம்மை நொறுக்குகிற உலகில் நாம் வாழ்கிறோம். எனினும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மற்றும் அவரில் நம்பிக்கையை தெரிந்தெடுத்து, நாம் தண்ணீரின் மேலிருந்தாலும் கீழிருந்தாலும் தொடர்ந்து ஒளி பெறலாம். தேவன் நம் பரலோக வீட்டுக்கு நேராக தள்ளுவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்ற உறுதியை நாம் பெறலாம்.

“தோணிகளில் தூக்கி வீசப்பட்டபோதும் யாரேதியர், கர்த்தருக்குத் துதிகளைப் பாடினார்கள், … அவன் கர்த்தருக்கு நன்றி செலுத்தி நாள் முழுவதும் துதித்தான். இரவு வந்தபோதும் அவர்கள் கர்த்தரைத் துதிப்பதிலிருந்து ஓயவில்லை.”20 தங்கள் உபத்திரவங்கள் மத்தியிலும், மகிழ்ச்சியும் நன்றியறிதலும் உணர்ந்தார்கள். அவர்கள் இன்னும் வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு வந்து சேரவில்லை, ஆயினும் அவர்மீது தங்கள் நிலையான,மீளும், நம்பிக்கையினால் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தினிமித்தம் அவர்கள் களிகூர்ந்தார்கள்.21

யாரேதியர் தண்ணீர் மேல் 344 நாட்கள் தள்ளப்பட்டார்கள்.22 உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிகிறதா? கர்த்தரை நம்புவதில் அவரது நேரத்தை நம்புவதும் இருக்கிறது, வாழ்க்கைப் புயல்களை தாங்குகிற பொறுமையும் நிலைத்தலும் அதற்குத் தேவைப்படுகிறது.23

முடிவாக, யாரேதியர், வாக்குத்தத்தத்தின் தேசத்தில் கரையேறினார்கள். அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தின் கரையிலே தங்கள் கால்களை வைத்த உடனே, தேசத்தின்மேல் தங்களையே பணிந்து, கர்த்தருக்கு முன்பாக தங்களையே தாழ்த்தி, அவர்கள் மேலிருந்த அவரது திரளான இரக்கத்தினிமித்தம், கர்த்தரின் சமூகத்தில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.24

நாமும் நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்வதில் விசுவாசமாக இருந்தால், நாமும் ஒரு நாள் பத்திரமாக வீடு செல்வோம், கர்த்தருக்கு முன்பாக பணிந்து, அதிக மகிழ்ச்சிக்கு இடமளித்த துயரங்கள் உள்ளிட்ட நமது வாழ்க்கையில் அவரது மென்மையான திரளான இரக்கங்களுக்காக ஆனந்தக் கண்ணீர் வடிப்போம்.25

நமது வாழ்க்கையில், இயேசு கிறிஸ்துவில் நிலையாகவும் மீண்டும் அவரது தெய்வீக நோக்கங்களையும் நம்பவும் நாம் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, வாக்குறுதிகளோடு அவர் நம்மை சந்திப்பார், நமது ஆத்துமாக்களுக்கு சமாதானம் கூறுவார், “நம்மை விடுவிப்பார் என்பதான நம்பிக்கையுடன்” நம்மை நடத்துவார் என நான் சாட்சியளிக்கிறேன்..26

இயேசுவே கிறிஸ்து என நான் சாட்சியளிக்கிறேன். அவரே அனைத்து சந்தோஷத்தின் ஆதாரம்.27 அவரது கிருபை போதும். அவர் நம்மை இரட்சிக்கும் பெலனுள்ளவர்.28 அவரே ஒளி, ஜீவன், உலகத்தின் நம்பிக்கை.29 அவர் நம்மை அழியவிடமாட்டார்.30 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஆல்மா 36:3, 57:27 பார்க்கவும்.

  2. ஆல்மா 58:11 பார்க்கவும்.

  3. 2 நேபி 2:23-25; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  4. The Mathnawi of Jalalu’ddin Rumi (1925–40), trans. Reynold A. Nicholson, vol. 5, 132 பார்க்கவும்.

  5. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82.

  6. See Neal A. Maxwell, “Plow in Hope,” Liahona, July 2001, 73: “Redeeming Jesus also ‘poured out his soul unto death.’ … பார்க்கவும். தனிப்பட்ட வேண்டுதல்களில் நமது ஆத்துமாக்களை ‘ஊற்றும்போது,’ நாம் அவ்விதம் களையப்பட்டு, அதிக மகிழ்ச்சிக்கு இடமளிக்கிறோம்!”

  7. ஆல்மா 31:38; see also Neal A. Maxwell, “Brim with Joy” (Brigham Young University devotional address, Jan. 23, 1996), speeches.byu.edu: “நாம் அர்ப்பணிப்பின் புள்ளியை அடையும்போது, நமது உபத்திரவங்கள் கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் விழுங்கப்படும். இது நாம் உபத்திரவங்கள் அடையமாட்டோம் என்பதல்ல, ஆனால் நாம் அவற்றைக் கையாளுகிற விதமாக செய்யப்படும். நமது நிதானமான மகிழ்ச்சியின் தேடுதலில், நீதியின் அளவு அதிகரிக்கும்போது, நாம் இன்னொரு துளி ஆனந்தம் அடைந்து, ஒவ்வொரு துளியாக தீர்க்கதரிசியின் வார்த்தை போல நமது இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பும்.( ஆல்மா 26:11). கடைசியாக ஆத்துமாவின் பாத்திரம் நிரம்பி வழியும்!”

  8. யோவான் 16:33.

  9. ஏத்தேர் 01:42

  10. ஏத்தேர் 2:18-19

  11. ஏத்தேர் 2:22.

  12. யோவான் 08:12 பார்க்கவும்.

  13. ஏத்தேர் 2:19; Mark 4:38 ஒப்பிடவும்; மேலும் Mark 4:35–41 பார்க்கவும்.

  14. ஏத்தேர் 02:25; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  15. ஏத்தேர் 3:4-5

  16. ஏத்தேர் 6:4; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  17. ஏத்தேர் 6:6.

  18. ஏத்தேர் 6:8; முக்கியத்தவம் சேர்க்கப்பட்டுள்ளது; மற்றும் 1 நேபி 18:8பார்க்கவும்.

  19. ஏத்தேர் 06:10.

  20. ஏத்தேர் 6:9; மற்றும் 1 நேபி 18:16 பார்க்கவும்.

  21. 1 நேபி 5:5 பார்க்கவும். இன்னும் வனாந்தரத்திலிருந்தாலும், லேகி வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதத்துக்காக களிகூர்ந்தான்.

  22. ஏத்தேர் 06:11 பார்க்கவும்.

  23. எபிரேயர் 10:36; ஆல்மா 34:41; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8; 64:32 பார்க்கவும்.

  24. ஏத்தேர் 06:12.

  25. 1 நேபி 01:20; ஆல்மா 33:16; ஆல்மா 33:16 பார்க்கவும்.

  26. ஆல்மா 58:11.

  27. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” 82.

  28. 2 நேபி 31:19; ஆல்மா 34:18; மரோனி 10:32பார்க்கவும்.

  29. The Living Christ: The Testimony of the Apostles,” Liahona, May 2017, உள்பக்க முன் அட்டை பார்க்கவும்.

  30. 1 நேபி 01:14 பார்க்கவும்.