2010–2019
இரட்சகரின் உண்மையான சீஷர்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


இரட்சகரின் உண்மையான சீஷர்கள்

நமது வாழ்க்கையைச்சுற்றி கட்டும் வடிவமாக இரட்சகரும் அவரது சுவிசேஷமும் ஆகும்போது நாம் நீடித்த சந்தோஷத்தை உணரலாம்.

பழைய ஏற்பாட்டு புஸ்தகமான ஆகாய்-ல், மூப்பர் ஹாலண்டின் ஆலோசனையை பயன்படுத்தியிருக்கக்கூடிய ஒரு ஜனம் பற்றிய விவரம் ஒருவாறு மறைக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்க்கை மற்றும் சேவையின் மையமாக கிறிஸ்துவை வைக்காமல் அவர்கள் தவறு செய்தனர். கர்த்தரின் ஆலயத்தைக் கட்டுவதற்குப் பதிலாக தங்கள் சௌகர்யமான வீடுகளுக்குள் இருந்த ஜனங்களை கண்டிக்கும்போது, ஆகாய் சில சிந்திக்கத்தூண்டும் வார்த்தை சித்திரங்களை வரைகிறான்.

“இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

“இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

“நீங்கள் திரளாய் விதைத்தும், கொஞ்சமாய் அறுத்துக்கொண்டும் வருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை. நீங்கள் வஸ்திரம் தரித்தும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை, கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

“உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”1

நித்திய ஆதாயம் இல்லாதவற்றுக்கு, தேவ காரியங்களுக்கு மேலாக முன்னுரிமை வீணாக கொடுப்பது பற்றிய விவரிப்பை நீங்கள் விரும்பவில்லையா?

நான் பங்கேற்ற ஒரு அண்மை திருவிருந்து கூட்டத்தில், ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு, “இங்கு நமக்கு தேவை- குறைவான வைபை, அதிகமான நேபி!” என சுருக்கமாக சொன்னதை ஒரு திரும்பிவந்த ஊழியக்காரன் மேற்கோள் காட்டினான்.

ஐந்து ஆண்டுகள் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததால், இயற்கையாகவும் வெட்கப்படாமலும், சுவிசேஷத்துக்கே முன்னுரிமை கொடுக்கிற ஜனங்களின் ஏராளமான உதாரணங்களைப் பார்த்தேன். அப்படிப்பட்ட ஒரு உதாரணம், ஒரு டயர் பழுதுபார்க்கும் மற்றும் சக்கரம் சரிசெய்யும் தொழிலகத்தின் பெயர். உரிமையாளர் அதற்கு “உமது சித்த சமனாக்கம்” எனப் பெயரிட்டிருந்தார்.

நமது வாழ்க்கையை நாம் அதைச்சுற்றி கட்டும் வடிவமாக இரட்சகரும் அவரது சுவிசேஷமும் ஆகும்போது நாம் நீடித்த சந்தோஷத்தை உணரலாம்.2 மாறாக, எனினும் சுவிசேஷம் ஒரு விருப்ப சேர்க்கையாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் சபைக்கு செல்வதாகும்போது, அந்த வடிவம் உலகப்பிரகாரமான காரியங்களாக மாறுவது மிக எளிதாகிறது. இப்படியிருக்கும்போது, நமது கூலியை “பொத்தலான பையில்” போடுவதற்கு ஒப்பாக இருக்கிறது.

ஒப்புக்கொடுத்தலுடன் இருக்கவும், நம்மால் முடிந்த சிறப்பானதைச் செய்யவும், “பேர் டிங்கம்” என ஆஸ்திரேல்யாவில் நாங்கள் சொல்வது போல சுவிசேஷத்தின்படி வாழ்தல் பற்றி, ஆகாய் நமக்கு சொல்கிறான். தாங்கள் சொல்கிற விதமாக அவர்கள் இருக்கும்போது ஜனங்கள் பேர் டிங்கமாக இருக்கிறார்கள்.

ரக்பி விளையாடி பேர் டிங்கமாக இருப்பது மற்றும் என்னால் இயன்ற சிறந்ததை செய்வது பற்றி நான் சிறிது கற்றேன். நான் கடினமாக விளையாடும்போதும், என் திறமை அனைத்தையும் காட்டியபோதும், விளையாட்டை நான் அனுபவித்தது மகத்தானதாக இருந்தது என நான் கற்றேன்.

படம்
மூப்பர் வின்சன் தன் ரக்பி குழுவுடன்

ரக்பியில் என் சிறப்பான வருடம், உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த வருடம். நான் பங்கேற்றிருந்த அணி திறமையும் ஒப்புக்கொடுத்தலும் உடையது. அந்த ஆண்டு நாங்கள்தான் சாம்பின்கள். எனினும் ஒருநாள் நாங்கள் ஒரு தரத்தில் குறைந்த அணியுடன் ஆட வேண்டியிருந்தது. ஆட்டத்துக்குப் பிறகு பெரும் கல்லூரி ஆண்டு விழாவுக்கு அழைத்துப்போக எங்கள் அனைவருக்கும் காதலிகள் இருந்தனர். இது ஒரு எளிதான ஆட்டமாக இருக்கவிருப்பதால், நான் முழுநேரமும் நடனமாடும்படிக்கு, நான் காயம்படாமல் இருக்க என்னை பாதுகாக்க வேண்டும், என நினைத்தேன். கடினமான சமயங்களில் நாங்கள் ஆடவேண்டிய விதமாக ஆட ஒப்புக்கொடுத்தலில் இல்லாததால், நாங்கள் தோற்றோம். காரியங்களை மோசமாக்க, என் முக்கிய காதல் நாளில் என் தோற்றத்தை சிறப்பாக்காத மிகவும் வீங்கிய, தடித்த உதட்டுடன் நான் ஆட்டத்தை முடித்தேன். ஒருவேளை நான் ஏதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு பிந்தய ஆட்டத்தில் நான் முற்றிலும் ஒப்புக்கொடுத்தலுடன் ஆடிய மிக வித்தியாசமான அனுபவம் நிகழ்ந்தது. ஒரு சமயம் பந்தை எடுக்க உண்மையான நோக்கத்தோடு ஓடினேன், உடனே என் முகத்தில் சிறிது வேதனையை உணர்ந்தேன். நான் காயமடைந்திருக்கிறேன் என எதிரி அறிய விடக்கூடாது என என் அப்பா கற்பித்திருந்ததால், நான் தொடர்ந்து ஆட்டத்தை ஆடினேன். அன்றிரவு நான் சாப்பிட முயன்றபோது, என்னால் கடிக்க முடியாததை அறிந்தேன். அடுத்த நாள் காலையில் நான் மருத்துவமனை சென்றேன், அங்கு என் தாடை உடைந்திருப்பதை ஒரு எக்ஸ்ரே உறுதி செய்தது. என் வாய் கம்பியால் கட்டப்பட்டு, அடுத்த ஆறு வாரங்களுக்கு மூடப்பட்டது.

தடித்த உதடும் உடைந்த தாடையும் பற்றிய இந்த உவமையிலிருந்து, பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டன. நான் ஊசியால் மட்டுமே திரவங்களை செலுத்தி உண்ட ஆறு வாரங்களின்போது, திட உணவுக்காக ஏங்கிய திருப்தியடையாத ஏக்கங்களின் நினைவுகள் இருந்தாலும், நான் முழு முயற்சி செய்ததால் ஏற்பட்ட, என் உடைந்த தாடைக்காக நான் வருத்தப்படவில்லை. தடித்த உதடு எனது முயற்சியின்மையை அடையாளப்படுத்தியதால், எனக்கு வருத்தம் இருக்கிறது.

நமது முழு முயற்சியையும் செய்யும்போது தொடர்ந்து ஆசீ்ர்வாதங்களால் சூழப்பட்டிருப்போம் அல்லது எப்போதும் வெற்றி பெறுவோம் என்பதாகாது. ஆனால் நாம் நிச்சயமாக மகிழ்ச்சி பெறுவோம் என்பதாகும். மகிழ்ச்சி, நிலையற்ற இன்பம் அல்ல, அல்லது தற்காலிக மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சி நீடித்தது, கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது முயற்சிகளின் அடிப்படையிலானது.3

அப்படிப்பட்ட ஏற்பின் உதாரணம், ஆலிவர் க்ராஞ்சரின் கதை. தலைவர் பாய்ட் கே. பாக்கர் சொன்னது போல, “கர்த்லாந்திலிருந்து பரிசுத்தவான்கள் துரத்தப்பட்டபோது, … அவரால் முடிந்த சிறிது தொகைக்காவது சொத்துக்களை விற்க ஆலிவர் தங்க வைக்கப்பட்டார். அவர் வெற்றி பெற அதிக சந்தர்ப்பம் இல்லை. உண்மையாகவே அவர் வெற்றியடையவில்லை!”4 முடியாததாக இல்லாவிட்டாலும், கடினமான வேலையைச் செய்ய அவர் பிரதான தலைமையால் அதிகாரமளிக்கப்பட்டார். ஆனால் கர்த்தர் அவரது வெற்றிபெறாத முயற்சிகள் பற்றி இந்த வார்த்தைகளில் பாராட்டினார்:

“நான் என் ஊழிக்காரனான ஆலிவர் க்ராஞ்சரை நினைக்கிறேன், தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக அவனது பெயர் பரிசுத்தமாக நினைவில் வைக்கப்படும் என மெய்யாகவே அவனுக்குச் சொல்லுகிறேன்.

“ஆகவே என் சபையின் பிரதான தலைமையை மீட்க அவன் நேர்மையாக போராடுவானாக, … அவன் விழும்போது எழுவான், ஏனெனில் அவனது ஆதாயத்தை விட அவனது தியாகம் அதிக பரிசுத்தமானதாக இருக்கும்.”5

நம் அனைவருக்கும் அது உண்மையாக இருக்கும்--வெற்றிக்காக அல்ல, ஆனால் மாறாக கர்த்தருக்கு விருப்பமான நமது தியாகமும், முயற்சிகளுமே.

இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷரின் மற்றொரு உதாரணம், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள எங்கள் அருமை நண்பர் கோட் டிவாய்ரே. இந்த அற்புதமான விசுவாசமிக்க சகோதரி, தன் கணவரால் நீண்ட காலமாக கடுமையாக, உணர்வுபூர்வமாகவும் சரீர பிரகாரமாகவும் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டார், முடிவாக அவர்கள் விவாகரத்து பெற்றனர். அவர் விசுவாசத்திலும் நற்குணத்திலும், குறையவில்லை, ஆனால் அவனது கொடுமையினிமித்தம் நீண்ட நாட்களுக்கு ஆழமாக வேதனைப்படுத்தப்பட்டார். என்ன நடந்ததென்பதை அவரது சொந்த வார்த்தைகளில் விவரிக்கிறார்.

“நான் அவரை மன்னித்தேன் என நான் சொன்னாலும், நான் எப்போதும் ஒரு காயத்தோடே தூங்கினேன், அக்காயத்தோடேயே என் நாட்களைக் கழித்தேன். அது என் இருதயத்தில் நெருப்பு போல இருந்தது. அநேக நேரங்களில் அதை என்னுள்ளிருந்து எடுத்துப்போடுமாறு நான் கர்த்தரிடம் ஜெபித்தேன். ஆனால் என் மீதி வாழ்நாளையும் அதனுடன்தான் நான் செலவிடப் போகிறேன் என நான் பலமாக எண்ணுமளவுக்கு என்னை மோசமாக காயப்படுத்தியது. என் சிறு வயதில் என் தாயை இழந்ததைவிட இது என்னைக் காயப்படுத்தியது. என் அப்பாவையும் என் மகனையும் இழந்ததை விட இது என்னைக் காயப்படுத்தியது. நான் எந்த நேரத்திலும் மரிக்கப் போகிறேன் என்ற உணர்வைக் கொடுத்து அது விரிந்து என் இருதயத்தை மூடியதாகத் தோன்றியது.

“சில பிற சமயங்களில் என் சூழ்நிலையில் இரட்சகர் என்ன செய்திருப்பார் என என்னையே கேட்டேன், மாறாக நான் சொல்வேன், ‘கர்த்தாவே இது மிக அதிகம்.’

ஒரு நாள் இவையனைத்திலுமிருந்து வரக்கூடிய வேதனையை என் இருதயத்தில் தேடி, இன்னும் ஆழமாக என் ஆத்துமாவுக்குள் தேடினேன். அது எங்குமே காணப்படவில்லை. நான் காயப்படுவதாக உணர்ந்த எல்லா காரணங்களையும் என் மனதில் யோசித்தேன், ஆனால் வேதனையை நான் உணரவில்லை. என் இருதயத்தில் வேதனையை உணர்வேனா என பார்க்க நான் நாள் முழுவதும் காத்திருந்தேன், நான் உணரவில்லை. பின்பு நான் முழங்காலில் நின்று கர்த்தரின் பாவநிவாரண பலி எனக்குள்ளும் கிரியை செய்யச் செய்ததற்காக நன்றி சொன்னேன்.”6

இந்த சகோதரி இப்போது அவரை ஆழமாக நேசிக்கிற அற்புதமான விசுவாசமிக்க மனுஷனோடு மகிழ்ச்சியாக முத்திரிக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே நாம் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக இருந்தால், நமது மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்? ஆகாய் ஆலோசனையளித்தபடி, “[நமது] வழிகளை நாம் சிந்திக்கிறபோது,” நமக்கு சுவிசேஷம் எவ்வளவு மதிப்பானதாயிருக்கிறது?

லாமோனி இராஜாவின் தகப்பன் காட்டிய சரியான மனோபாவம் பற்றிய உதாரணத்தை நான் விரும்புகிறேன். லாமானியர்கள் வெறுத்த ஜனமாகிய, நேபிய அம்மோன் தன் மகனுடன் வருவதைக் கண்டபோது முதலில் அவனது கோபத்தை நினைவில் வைத்திருப்பீர்கள். அவன் அம்மோனுடன் சண்டையிட தன் பட்டயத்தை உருவினான், உடனே தன் தொண்டையில் அம்மோனின் பட்டயம் இருப்பதைக் கண்டான். “இராஜா தன் ஜீவனை இழக்க நேரிடும் என பயந்து நீ என்னை தப்பவிட்டால், அது நீ கேட்கிற எதுவாயினும், என் இராஜ்யத்தில் பாதியையும் கூட கொடுப்பேன்” என்றான்.7

அவனது சலுகையை கவனியுங்கள்--தன் ஜீவனுக்காக தன் இராஜ்யத்தில் பாதி.

பின்னர், சுவிசேஷத்தைப் புரிந்துகொண்டபோது, அவன் மற்றொரு சலுகை கொடுத்தான். “இராஜா சொன்னதாவது, நீர் பேசின இந்த நித்திய ஜீவனை நான் பெறும்படிக்கு நான் செய்ய வேண்டியதென்ன? ஆம், நான் கடைசி நாளின்போது, புறம்பே தள்ளப்பட்டு போகாதபடிக்கும், சந்தோஷத்தால் நிறைக்கப்படும்படிக்கும், நான் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, இந்த பொல்லாத ஆவி என் மார்பிலிருந்து வேரோடே பிடுங்கப்பட்டு, அவருடைய ஆவியைப் பெற நான் செய்யவேண்டியதென்ன? அவன் இதோ இந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள, யாவையும் விட்டுக்கொடுப்பேன். என் இராஜ்யத்தையும் விட்டுவிடுவேன் என்றான்.”8

இம்முறை தன் முழு இராஜ்யத்தையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தான், ஏனெனில் சுவிசேஷம் அவனுக்கிருந்த எல்லாவற்றையும் விட அதிக மதிப்புள்ளதாக இருந்தது. சுவிசேஷத்தில் அவன் பேர் டிங்கம் ஆக இருந்தான்.

ஆகவே நம் ஒவ்வொருவருக்குமான கேள்வி, நாம் சுவிசேஷம் குறித்து பேர் டிங்கமாக இருக்கிறோமா? ஏனெனில் பேர் டிங்கமாக இருப்பது, அரை இருதயத்தோடு இருப்பது அல்ல. மந்தபுத்தியுடையவர்களை தேவன் புகழ மாட்டார்.9

நித்திய ஜீவனை விட அருமையான எந்த பொக்கிஷமும், அந்தஸ்தும், சமூக ஊடகமும், வீடியோ விளையாட்டோ, விளையாட்டோ, புகழ் பெற்றவர்களுடன் தொடர்போ, பூமியில் எதுவுமே கிடையாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் கர்த்தரின் ஆலோசனை, “உங்கள் வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.”

நேபியின் வார்த்தைகளில் என் உணர்வுகள் மிகவும் சிறப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, “நான் தெளிவானவைகளில் மகிமை பாராட்டுகிறேன், நான் சத்தியத்தில் மகிமை பாராட்டுகிறேன், என் இயேசு பாதாளத்திலிருந்து என்னை மீட்டுக்கொண்டபடியால், அவரில் மகிமை பாராட்டுகிறேன்.”10

நமக்காக தமது அனைத்தையும் கொடுத்தவரை நாம் உண்மையாக பின்பற்றுகிறோமா? நமது மீட்பரும் பிதாவிடம் நமக்காக பரிந்து பேசுபவருமான அவரை பின்பற்றுகிறோமா? தன் பாவநிவாரண பலியில் தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தவரை, இப்போது நாம் நித்திய மகிழ்ச்சி பெற தன் அன்பையும், தன் இரக்கத்தையும் நமக்காக தன் வாஞ்சையையும் ஒப்புக்கொடுத்தவரை பின்பற்றுகிறோமா? இந்த வார்த்தைகளைக் கேட்கிற யாவரிடமும் நான் கெஞ்சுகிறேன். தயவுசெய்து, தயவுசெய்து, அதை அடைகிற இல்லாத, வருங்காலத்தில் அதை அடையும்வரை உங்கள் முழு ஒப்புக்கொடுத்தலையும் கைவிடாதீர்கள். இப்போது பேர் டிங்கம் பெற்று, மகிழ்ச்சியை உணருங்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்