2010–2019
என்னைப் பின்பற்றி வாருங்கள்—கர்த்தருடைய எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமும்
அக்டோபர் 2019 பொது மாநாடு


என்னைப் பின்பற்றி வாருங்கள்—கர்த்தருடைய எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமும்

சத்துருவின் தாக்குதல்களுக்கு எதிராக அவருடைய ஜனங்களை கர்த்தர் ஆயத்தப்படுத்துகிறார். என்னைப் பின்பற்றி வாருங்கள் கர்த்தருடைய எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமுமாயிருக்கிறது.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இந்த மகத்தான பொது மாநாட்டில் நாம் ஒன்றுகூடி சந்திப்பதில் நாம் களிகூருகிறோம், அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைகள் மூலமாக கர்த்தருடைய மனதையும் சித்தத்தையும் பெற இது ஒரு ஆசீர்வாதமாகும். தலைவர் ரசல் எம். நெல்சன் கர்த்தருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி. அவருடைய உணர்த்தப்பட்ட ஆலோசனைக்காகவும் இன்று பெறப்பட்ட வழிகாட்டுதலுக்காகவும நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

இதற்கு முன்பு பகிர்ந்தவர்களுடன் என் சாட்சியையும் சேர்த்துக்கொள்கிறேன். நமது நித்திய பிதாவாகிய தேவனைக் குறித்து நான் சாட்சி பகருகிறேன். அவர் ஜீவிக்கிறார், நம்மை நேசிக்கிறார் மற்றும் நம்மை கண்காணிக்கிறார். இந்த அநித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தையும் மற்றும் இறுதியாக அவருடைய பிரசன்னத்திற்கு திரும்புவதையும் அவருடைய சந்தோஷத்தின் திட்டம் வழங்குகிறது.

இயேசு கிறிஸ்துவையும் பற்றி நான் சாட்சியளிக்கிறேன். அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன். மரணத்திலிருந்து அவர்நம்மை பாதுகாத்தார் நாம் அவரிடத்தில் விசுவாசம் வைத்து மனந்திரும்பும்போது பாவத்திலிருந்து அவர் நம்மை மீட்கிறார். நம் சார்பாக அவருடைய முடிவற்ற பாவநிவர்த்தியின் பலி, நித்தியத்திற்கான, நித்திய ஜீவனுக்கான ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறது. உண்மையாகவே “அவருடைய தெய்வீகக் குமாரனின் இணையற்ற வரத்திற்காக தேவன் நன்றி செலுத்தப்படுவாராக”(“The Living Christ: The Testimony of the Apostles,” Liahona, May 2017, inside front cover).

உலகமுழுவதிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள், அவருடைய ஆலயங்களில் இயேசு கிறிஸ்துவை தொழுதுகொள்வதில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஆலயங்களில் ஒன்று வின்னிபெக், கனடாவில் தற்சமயம் கட்டுமானத்திலுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கட்டுமான தளத்தைப் பார்க்க என்னுடைய மனைவி ஆன் மேரிக்கும், எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆலயம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, நிறைவடையும்போது நிச்சயமாக அது மகத்துவமாக இருக்கும். எப்படியாயினும், ஒரு திடமான உறுதியான அஸ்திபாரமில்லாமல் வின்னிபெக் அல்லது வேறெங்கும் ஒரு மகத்துவமான ஆலயம் உங்களுக்கிருக்க முடியாது.

வின்னிபெக்கின் பனி-உருகுதல் சுழற்சி மற்றும் விரிவாகும் மண் நிலைமைகள், ஆலய அஸ்திபாரத்தை ஆயத்தப்படுத்த சவாலாயிருந்தது. ஆகவே, கான்கிரீட்டால் உறையிடப்பட்ட 70 எஃகு தூண்கள் இந்த ஆலயத்திற்கான அஸ்திபாரத்திலிருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த தூண்கள் 60 அடி(18மீ) நீளத்திலும் 12-20 இஞ்சுகள்(30முதல் 50 செ.மீ.) விட்டத்திலுமிருந்தன. ஏறக்குறைய 50 அடி(15மீ.) மேல்மட்டத்திற்கு கீழே, அவைகள் பாறையை முட்டுமளவுக்கு தரைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த வழியில், அழகான வின்னிபெக் ஆலயத்திற்கு 70 தூண்கள் திடமான உறுதியான அஸ்திபாரமாக இருக்கும்.

பிற்காலப் பரிசுத்தவான்களாக நம் வாழ்க்கையில், இதைப்போன்ற திடமான உறுதியான அஸ்திபாரத்தை நாம் நாடுகிறோம். அநித்தியத்தின் வழியே நமது பயணத்திற்காகவும், நமது பரலோக வீட்டிற்குத் திரும்பவும் ஒரு ஆவிக்குரிய அஸ்திபாரம் நமக்குத் தேவையாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றமான பாறையின்மேல் அந்த அஸ்திபாரம் அமைக்கப்படுகிறது.

மார்மன் புஸ்தகத்திலிருந்து ஏலமனின் போதனைகளை நாம் நினைவுகூர்கிறோம், “மேலும் இப்பொழுதும் என் குமாரரே நினைவுகூருங்கள், தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின்மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தை கட்டவேண்டுமென்று நினைவில்கொள்ளுங்கள், பிசாசு தன் பலத்த காற்றுக்களையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும், அனுப்பி ஆம், அவன் சகல கன்மழையாலும், அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷன் கட்டினால் அவர்கள் விழுந்துபோவதில்லை” (ஏலமன் 5:12).

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி, தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் நமக்குப் போதிக்கிற ஒரு காலத்தில் நாம் வாழுவதற்காக நன்றி. அவர்களுடைய ஆலோசனையைப் பின்பற்றுதல் கிறிஸ்துவில் ஒரு திடமான அஸ்திபாரத்தை அமைக்க நமக்குதவுகிறது.

கடந்த அக்டோபரில் பொது மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கியது போல, “சபையின் நீண்ட கால நோக்கம், அங்கத்தினர் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவ நிவர்த்தியிலும் விசுவாசத்தில் வளர உதவியும், தேவனோடு தங்கள் உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ளவும், அவர்களது குடும்பங்களை பெலப்படுத்தி முத்திரிக்கவும் உதவி செய்வதே. இன்றைய இந்த சிக்கலான உலகத்தில் இது எளிதல்ல. விசுவாசத்தின்மீதும், நம்மீதும், நமது குடும்பங்கள்மீதும் சத்துரு அதிவேக அளவில் அவனது தாக்குதல்களை அதிகரித்துக்கொண்டிருக்கிறான். அதைத் தாங்க நமக்குத் தேவை எதிர் உபாயங்களும் செயல்திறன் திட்டங்களுமே”(“Opening Remarks,” Liahona, Nov. 2018, 7; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

தலைவர் நெல்சனின் செய்தியைத் தொடர்ந்து, என்னைப் பின்பற்றி வாருங்கள் தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதாரத்தை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் க்வெண்டின் எல். குக் அறிமுகப்படுத்தினார். அவருடைய குறிப்புகள் பின்வரும் அறிக்கைகளை உள்ளடிக்கியிருந்தது.

  • “புதிய வீட்டுப் படிப்பான என்னைப் பின்பற்றி வாருங்கள் ஆதாரம், வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள அங்கத்தினர்களுக்குதவ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

  • “இந்த ஆதாரம் சபையிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்குமானது” [என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும்(2019), vi].

  • நமது நோக்கம் பரலோக பிதாவிடத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசத்தையும், ஆவிக்குரிய தன்மையையும் வெகுவாக அதிகரித்து, மனமாற்றத்தை ஆழப்படுத்துகிற விதமாக சபையையும் வீட்டு அனுபவங்களையும் சமன்படுத்துவதுதான். (“Deep and Lasting Conversion to Heavenly Father and the Lord Jesus Christ,” Liahona, Nov. 2018, 9–10.)

இந்த ஆண்டு ஜனுவரியில் ஆரம்பித்து உலகமுழுவதிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள் என்னைப் பின்பற்றி வாருங்கள்ஆதாரத்தை வழிகாட்டியாக வைத்து புதிய ஏற்பாட்டை படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாராந்தர அட்டவணையுடன் வேதத்தை, சுவிசேஷத்தின் கோட்பாட்டை, தீர்க்கதரிசிகளின், அப்போஸ்தலர்களின் போதனைகளைப் படிக்க என்னைப் பின்பற்றி வாருங்கள் நமக்குதவுகிறது. நம் அனைவருக்கும் இது ஒரு அற்புதமான ஆதாரம்.

உலகமுழுவதிலும் இந்த வேத படிப்பின் முயற்சியில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் நாம் எதைப் பார்க்கிறோம்? எல்லா இடங்களிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசத்திலும் அர்ப்பணிப்பிலும் வளர்வதை நாம் பார்க்கிறோம். நமது இரட்சகரின் வார்த்தைகளை படிக்க, தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் வாரம் முழுவதிலும் நேரத்தை ஒதுக்குவதை நாம் பார்க்கிறோம். நாம் வேதத்தை வீட்டில் படித்து, சபையில் நமது உள்ளுணர்வுகளை பகிர்ந்து கொள்ளும்போது நமது ஞாயிறு வகுப்புகளில் மேம்படுகிற சுவிசேஷ அறிவுரைகளை நாம் பார்க்கிறோம். வேதத்தை சாதாரணமாக நாம் படிப்பதிலிருந்து ஒரு மகத்துவமான வழியில் வேதத்தை தியானிப்பதற்கு நாம் நகரும்போது அதிக குடும்ப சந்தோஷத்தையும் ஒற்றுமையையும் நாம் பார்க்கிறோம்.

அநேக பிற்காலப் பரிசுத்தவான்களை சந்திப்பதும் என்னைப் பின்பற்றி வாருங்களைப் பற்றிய} அவர்களுடைய நேரடி அனுபவங்களைக் கேட்பதும் என்னுடயை சிலாக்கியமாக இருந்தது. அவர்களுடைய விசுவாச தெரிவிப்புகள் என் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்பியது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள சபையின் பல்வேறு அங்கத்தினர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு சில கருத்துக்கள் இங்கே:

  • ஒரு தகப்பன் பகிர்ந்துகொண்டார்: “என்னைப் பின்பற்றி வாருங்கள் என்னுடைய பிள்ளைகளுக்கு இரட்சகரைப்பற்றி சாட்சியளிக்க ஒரு வாய்ப்பை வழங்குவதால் அதை நான் ரசிக்கிறேன்.”

  • மற்றொரு வீட்டில் ஒரு பிள்ளை சொன்னது, “என்னுடைய பெற்றோர் அவர்களுடைய சாட்சிகளை பகருவதைக் கேட்க இது ஒரு வாய்ப்பு”.

  • ஒரு தாய் பகிர்ந்தார், “எவ்வாறு தேவனை முதன்மையாக வைப்பதென்பதைக் குறித்து நாங்கள் உணர்த்தப்பட்டுள்ளோம். எங்களிடம் ‘இல்லை’ எனும் நேரம், நம்பிக்கையுடனும், சந்தோஷத்துடனும், சமாதானத்துடனும், வெற்றியுடனும் சாத்தியமென எங்களுக்குத் தெரியாத வழிகளில் நிறைக்கப்பட்டது.”

  • ஒரு தம்பதியர் சொன்னார்கள், “முன்பு எப்போதும் வேதத்தைப் படிப்பதைவிட முற்றிலும் வித்தியாசமாக நாங்கள் வேதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இதற்கு முன்பு கற்றுக்கொண்டதைவிட மிக அதிகமாக நாங்கள் கற்றுக்கொண்டு வருகிறோம். நாம் காரியங்களை வித்தியாசமாகப் பார்க்க கர்த்தர் விரும்புகிறார் கர்த்தர் நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்.”

  • ஒரு தாய் குறிப்பிட்டார், “அதே காரியங்களை நாங்கள் ஒன்றுகூடி கற்றுக்கொள்கிறோம் என்பதை நான் விரும்புகிறேன். முன்பு நாம் அதை வாசித்துக்கொண்டிருந்தோம். இன்று நாம் அதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.”

  • ஒரு சகோதரி இந்த உள்ளுணர்வுப் பார்வையை பகிர்ந்துகொண்டார், முன்பு, உங்களிடம் பாடமிருந்தது, வேதம் அதற்கு துணைபுரிந்தது. இப்போது, உங்களிடம் வேதமிருக்கிறது, பாடம் அதற்கு துணைபுரிகிறது.”

  • மற்றொரு சகோதரி கருத்து தெரிவித்தார், “நான் அதை செய்தபோதுக்கும்,[ஒப்பிடுதல்] அதைச் செய்யாதபோதுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் உணருகிறேன். இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் நமது நம்பிக்கைகளைப்பற்றியும் மற்றவர்களிடம் பேச எளிதாயிருக்கிறது.”

  • ஒரு பாட்டி குறிப்பிட்டார், “ஞாயிற்றுக்கிழமைகளில் நான் என்னுடைய பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து என்னைப் பின்பற்றி வாருங்களிலிருந்துஉள்ளுணர்வுகளை ஒன்றுசேர்ந்து பகிர்ந்துகொள்கிறோம்”.

  • ஒரு சகோதரி சொன்னார் “என்னைப் பின்பற்றி வாருங்கள் இரட்சகரே எனக்கு ஊழியம் செய்கிறதைப் போல நான் உணருகிறேன். இது பரலோக உணர்த்துதல்.”

  • ஒரு தகப்பன் கருத்துத் தெரிவித்தார் “என்னைப் பின்பற்றி வாருங்களை நாங்கள் பயன்படுத்தும்போது சங்காரனின் செல்வாக்கிலிருந்து எங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க எங்கள் கதவுகளில் பக்க சட்டங்களில் குறியிட்ட இஸ்ரவேலின் பிள்ளைகளைப் போல நாங்கள் இருக்கிறோம்.”

சகோதர சகோதரிகளே, உங்களை சந்திப்பதும் என்னைப் பின்பற்றி வாருங்களுடன்உங்கள் முயற்சிகள் எப்படி உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறது என கேட்பதுவும் ஒரு சந்தோஷம். உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு நன்றி.

என்னைப் பின்பற்றி வாருங்களுடன் ஒரு வழிகாட்டியாக வேதத்தை தியானித்தல், இயேசு கிறிஸ்துவிடமும் அவருடைய சுவிசேஷத்திலும் நமது மனமாற்றத்தை பெலப்படுத்துகிறது. ஒரு மணிநேரம் கூடுதலாக வீட்டில் வேதத்தை தியானிப்பதற்காக, சபையில் நாம் ஒரு மணி நேரத்தைக் குறைக்கிற வர்த்தகத்தை செய்யவில்லை. சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் வாரம் முழுவதுக்கும் ஒரு சீரான முயற்சி. ஒரு சகோதரி உள்ளுணர்வோடு என்னுடன் பகிர்ந்துகொண்டபடி, “சபையை ஒரு மணிநேரம் குறைப்பது இலக்கு அல்ல, சபையை ஆறு நாட்கள் நீண்டதாக்குவதே!”

இப்போது, அக்டோபர் 2018 பொது மாநாட்டில் நமது தீர்க்கதரிசி தலைவர் நெல்சன் அவரது தொடக்க உரையைக் கொடுத்தபோது, கொடுத்த எச்சரிக்கையை மீண்டும் கருத்தில்கொள்ளுங்கள்.

“விசுவாசத்தின்மீதும், நம்மீதும், நமது குடும்பங்கள்மீதும் சத்துரு அதிவேக அளவில் அவனது தாக்குதல்களை அதிகரித்துக்கொண்டிருக்கிறான். ஆவிக்குரியவிதமாக பிழைக்க நமக்கு எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமும் தேவையாயிருக்கிறது.”(Opening Remarks,” 7).

பின்னர்,( ஏறக்குறைய 29 மணிநேரங்களுக்குப் பின்னர்) ஞாயிறு மாலையில் இந்த வாக்குறுதியுடன் அவர் மாநாட்டை நிறைவுசெய்தார்: “சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலின் மையமாக உங்கள் வீட்டை மறுசீரமைக்க நீங்கள் சிரத்தையுடன் வேலை செய்யும்போது, உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறைந்துபோகும்” (“Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 113).

சத்துருவின் செல்வாக்கு உண்மையில் குறைந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சத்துருவின் தாக்குதல்கள் அதிவேக அளவில் எவ்வாறு அதிகரித்துக்கொண்டிருக்க முடியும்? சபை முழுவதிலும் இது நடக்கலாம், இது நடந்துகொண்டிருக்கிறது, ஏனெனில் சத்துருவின் தாக்குதல்களுக்கு எதிராக அவருடைய ஜனங்களை கர்த்தர் ஆயத்தப்படுத்துகிறார்.. என்னைப் பின்பற்றி வாருங்கள்கர்த்தருடைய எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமுமாயிருக்கிறது. தலைவர் நெல்சன் போதித்ததைப் போல, புதிய, வீட்டை மையப்படுத்துகிற, சபை ஆதரிக்கிற ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டம் குடும்பங்களின் ஆற்றலை கட்டவிழ்த்துவிடும் திறனுள்ளது. எப்படியாயினும், அதற்கு நமது சிறந்த முயற்சிகள் தேவயாயிருக்கிறது, தேவையாயிருக்கும், வீட்டை விசுவாசத்தின் சரணாலயமாக மாற்ற விழிப்புடனும் கவனத்துடனும் நாம் பின்பற்றவேண்டும்” (“Becoming Exemplary Latter-day Saints,” 113).

எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் நெல்சன் சொன்னார், “நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாக இருக்கிறோம்” (“Opening Remarks,” 8).

என்னைப் பின்பற்றி வாருங்கள் ஆதாரத்துடன் “நாம் இப்போது எதிர்கொள்கிற அழிவின் காலங்களுக்காக கர்த்தர் நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்” (Quentin L. Cook, “Deep and Lasting Conversion,” 10). “உறுதியான அஸ்திபாரமான, அஸ்திபாரத்தின்மேல் மனுஷர் கட்டினால் அவர்கள் விழுந்துபோவதில்லை” என்பதை நிறுவ அவர் நமக்கு உதவிக்கொண்டிருக்கிறார் (ஏலமன் 5:12)—கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நமது மனமாற்றம், பாறையில் உறுதியாக நங்கூரமிட்ட சாட்சியின் அஸ்திவாரம்.

வேதத்தை தியானிப்பதன் நமது அன்றாட முயற்சிகள் நம்மை பெலப்படுத்தி, இந்த வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு தகுதியுள்ளவர்களென பெலப்படுத்தி நிரூபிப்பதாக. அப்படியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்