2010–2019
பரிசுத்தமும் சந்தோஷத்தின் திட்டமும்
அக்டோபர் 2019 பொது மாநாடு


பரிசுத்தமும் சந்தோஷத்தின் திட்டமும்

அதிக சந்தோஷம் அதிக தனிப்பட்ட பரிசுத்தத்திலிருந்து வருகிறது.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, சந்தோஷத்திற்காக உங்களுடைய தனிப்பட்ட தேடுதலில் உங்களுக்குதவ ஆற்றலுக்காக நான் ஜெபித்தேன். சிலர் ஏற்கனவே போதுமான அளவுக்கு சந்தோஷமாயிருப்பதாக உணரலாம், இருந்தும் அதிக சந்தோஷத்திற்கான சலுகையை யாரும் நிராகரிக்கமாட்டார்கள். நீடிக்கிற சந்தோஷத்திற்கான ஒரு உத்தரவாதமுள்ள சலுகையை ஏற்றுக்கொள்ள யாவரும் ஆர்வத்துடனிருப்பார்கள்.

இதைத்தான் பரலோக பிதாவும், அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் இப்போது ஜீவிக்கிற, ஜீவிக்கப்போகிற, இந்த உலகத்தில் எப்போதும் ஜீவித்த பரலோக பிதாவின் ஒவ்வொரு ஆவிக்குழந்தைக்கும் வழங்கியிருக்கிறார்கள். அந்த சலுகை சிலநேரங்களில் சந்தோஷத்தின் திட்டமென அழைக்கப்படுகிறது. பாவ துயரத்தில் மூழ்கிய ஆல்மாவின் மகனுக்கு அவன் போதித்தபோது இது தீர்க்கதரிசி ஆல்மாவால் அவ்வாறு அழைக்கப்பட்டது. அவனுடைய மகனுக்கு, அல்லது பரலோக பிதாவின் எந்த மகனுக்கும், துன்மார்க்கமானது எப்போதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை என ஆல்மா அறிவான்.1

பரிசுத்தத்தில் அதிகரித்தல் ஒன்றே சந்தோஷத்தின் பாதை என தன்னுடைய மகனுக்கு அவன் போதித்தான். நம்மை சுத்திகரித்து பரிபூரணராக்க இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாகவே அதிக பரிசுத்தம் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது என அவன் அதைத் தெளிவாக்கினான்.2 இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதலை தொடர்தல், உடன்படிக்கைகளை கைக்கொள்ளுதலால் மட்டுமே அனுபவிக்கவும், தக்கவைக்கவும் நாம் ஏங்குகிறதை கேட்க நம்மால் முடியும்.

அந்த நம்பிக்கையில் நீங்கள் செயல்படும்படியாக தனிப்பட்ட அதிக பரிசுத்தத்திலிருந்து அந்த மகா சந்தோஷம் வருகிறதென நீங்கள் புரிந்துகொள்ள நான் உங்களுக்குதவுவதே இன்று என்னுடைய ஜெபம். மிகப் பரிசுத்தமாக மாறுவதின் வரத்திற்கு தகுதியுள்ளவராக நாம் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி எனக்கு என்ன தெரியுமென்பதை பின்னர் நான் பகிர்ந்துகொள்வேன்.

பிற காரியங்களுக்கு மத்தியில், கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்கும்போது நமது கீழ்ப்படிதலைக் காட்டுவதால்4மனந்திரும்புவதால்5அவருக்காக தியாகம் செய்வதால்6பரிசுத்த நியமங்களைப் பெறுதல் மற்றும் அவரோடு நாம் செய்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுதால்7நாம் சுத்திகரிக்கப்படுவோம் அல்லது அதிக பரிசுத்தமாகுவோம்.3 பரிசுத்த வரத்திற்கு தகுதியாயிருத்தலுக்கு தாழ்மையும்8சாந்தமும்9பொறுமையும் தேவையாயிருக்கிறது.10

அதிக பரிசுத்தம் தேவையாயிருத்தலின் ஒரு அனுபவம் சால்ட் லேக் சிட்டி ஆலயத்தில் எனக்கு வந்தது. எதை எதிர்பார்க்க வேண்டுமென்பதைப்பற்றி சிறிதே கூறப்பட்டு முதல் முறையாக ஆலயத்திற்குள் நான் பிரவேசித்தேன். கட்டிடத்திலுள்ள வார்த்தைகளை நான் பார்த்தேன், “கர்த்தருக்கு பரிசுத்தம்” மற்றும் “கர்த்தரின் ஆலயம்”. ஒரு பெரிய எதிர்பார்ப்பின் உணர்வை நான் உணர்ந்தேன். இருந்தும் பிரவேசிக்க நான் ஆயத்தப்படிருந்தேனா என நான் வியப்புற்றேன்.

ஆலயத்திற்குள் நாங்கள் பிரவேசித்தபோது, என்னுடைய தாயும் தகப்பனும் எனக்கு முன்பாக நடந்துசென்றார்கள். எங்களுடைய தகுதியை சான்றளிக்கிற சிபாரிசுகளைக் காட்டும்படி நாங்கள் கேட்கப்பட்டோம்.

சிபாரிசு இருக்கையிலிருந்த மனிதரை எங்கள் பெற்றோர் அறிவார்கள். ஆகவே அவருடன் பேச அவர்கள் ஒருகணம் தாமதித்தார்கள். ஒரு விசாலமான இடத்திற்கு நான் தனியாக முன்னாக சென்றேன், அங்கே எல்லாமுமே வெள்ளை நிறத்தில் மின்னியது. எனக்கு மேலே மிகஉயரமாயிருந்த மேற்கூரையை நான் பார்த்தேன்,அது ஒரு திறந்த வெளி வானமாகத் தோன்றியது. அந்தக் கணநேரத்தில், நான் இதற்குமுன் இங்கிருந்ததாக ஒரு தெளிவான உணர்வு எனக்குள் வந்தது.

ஆனால் அப்போது நான் ஒரு மென்மையான குரலைக் கேட்டேன்—அது என்னுடையதல்ல. அந்த மென்மையாகப் பேசப்பட்ட வார்த்தைகள் இவைகளே, “நீ இதற்கு முன் ஒருபோதும் இங்கிருந்ததில்லை. நீ பிறப்பதற்கு முன்னுள்ள ஒரு கணநேரத்தை நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். இந்த மாதிரியான ஒரு பரிசுத்த இடத்தில் நீ இருந்தாய். நீ நின்றுகொண்டிருந்த இடத்திற்கு இரட்சகர் வரப்போகிறாரென நீ உணர்ந்தாய். அவரைப் பார்க்க நீ ஆவலாயிருந்ததினால் நீ சந்தோஷப்பட்டாய்.”

சால்ட் லேக் சிட்டியில் அந்த அனுபவம் ஒரு கணநேரம் மட்டுமே நீடித்தது. இருந்தும் அதன் நினைவு இன்னமும் சமாதானத்தை, மகிழ்ச்சியை, அதிக சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.

அந்த நாளில் நான் அனேக பாடங்களைக் கற்றேன். பரிசுத்த ஆவியானவர் அமர்ந்த மெல்லிய குரலில் பேசுகிறார். என்னுடைய இருதயத்தில் ஆவிக்குரிய சமாதானமிருக்கும்போது அவர் பேசுவதை என்னால் கேட்கமுடியும். நான் அதிக பரிசுத்தமாகிறேன் என்ற ஒரு சந்தோஷ உணர்வையும் உறுதியையும் அவர் கொண்டுவருகிறார். தேவனின் ஆலயத்தில் அந்த முதல் கணநேரங்களில் நான் உணர்ந்த சந்தோஷத்தை அது எப்போதுமே கொண்டுவருகிறது.

அதிகமாக இரட்சகரைப்போலாக, வளர்ந்துவரும் பரிசுத்தத்திலிருந்து வருகிற சந்தோஷத்தின் அற்புதத்தை உங்கள் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இரட்சகரிடத்தில் முழுவிசுவாசத்துடனும் சந்தோஷ முகரூபங்களுடனும் மரணத்தை எதிர்பார்த்திருக்கிற மக்களின் படுக்கையருகில் சமீப வாரங்களில், நான் நின்றிருக்கிறேன்.

ஒரு மனிதர் அவருடைய குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தார். நானும் என் மகனும் நுழைந்தபோது அவரும் அவருடைய மனைவியும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தனர். அநேக ஆண்டுகளாக அவர்களை எனக்குத் தெரியும். அவர்களுடைய வாழ்க்கையிலும் அவருடைய குடும்பத்தினர் வாழ்க்கையிலும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் கிரியையை நான் பார்த்திருக்கிறேன்.

அவருடைய ஜீவனை நீடிக்கும் மருத்துவ முயற்சிகளை முடித்துக்கொள்ள அவர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தனர். அவர் எங்களுடன் பேசியபோது ஒரு அமைதியான உணர்வு அங்கிருந்தது. சுவிசேஷத்திற்காகவும், அவர்மீதும், அவர் நேசிக்கிற குடும்பத்தின்மீதும், அதன் சுத்திகரிக்கும் பயனுக்காகவும் நன்றியுணர்வை வெளிப்படுத்தியபோது அவர் புன்னகைத்தார். ஆலய சேவையில் அவருடைய சந்தோஷமான ஆண்டுகளைப்பற்றி அவர் பேசினார். இந்த மனிதனின் வேண்டுகோளின்படி என் மகன் பரிசுத்தமாக்கப்பட்ட எண்ணையால் அவர் தலையை அபிஷேகம் பண்ணினான். அபிஷேகத்தை நான் முத்திரித்தேன். நான் அப்படிச் செய்தபோது, சீக்கிரமே அவர் தனது இரட்சகரை முகமுகமாய்ப் பார்ப்பார் என்று அவரிடம் சொல்ல ஒரு தெளிவான எண்ணம் எனக்கிருந்தது.

அவர் சந்தோஷத்தையும், அன்பையும் இரட்சகரின் அங்கீகாரத்தையும் உணருவாரென நான் அவருக்கு வாக்களித்தேன். நாங்கள் பிரிந்துபோனபோது அவர் அன்புடன் புன்னகைத்தார். காத்தியிடம் சொல்லுங்கள் “நான் அவளை நேசிக்கிறேன்” என்பது அவர் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள். அந்த மகத்தான பரிசுத்தத்தின் விளைவாக வருகிற சந்தோஷத்திற்கு மிகத் தகுதியுள்ளவர்களாகுவதற்கு, இரட்சகரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவும், அவரிடத்தில் வரவும், பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்யவும் கைக்கொள்ளவும் அவருடைய குடும்பத்தின் தலைமுறைகளை என்னுடைய மனைவி காத்லீன் அநேக ஆண்டுகளாக ஊக்குவித்திருக்கிறாள்.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு அவர் மரித்தார். அவர் மரித்து சிலவாரங்களுக்குள் அவருடைய விதவையான மனைவி என் மனைவிக்கும் எனக்கும் ஒரு வெகுமதியைக் கொண்டுவந்தாள். நாங்கள் பேசியபோது அவள் புன்னகைத்தாள். அவள் இனிமையாகச் சொன்னாள், “நான் துக்கமாகவும் தனிமையிலுமிருப்பேன் என நான் எதிர்பார்த்தேன். நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

அவள் தனது கணவனை எவ்வளவு நேசித்தாள், அன்பையும் கர்த்தருக்கு சேவை செய்வதையும் எவ்வளவு அவர்கள் இருவரும் அறிந்தார்களென்பதை அறிந்தவனாக, அவளுடைய உண்மையான சேவையால் அவளை அதிக பரிசுத்தமாக்கியதால் சந்தோஷத்தின் உணர்வு ஒரு வாக்களிக்கப்பட்ட வரமானது என அவளிடம் நான் சொன்னேன். அவளுடைய பரிசுத்தம் அந்த சந்தோஷத்திற்காக அவளைத் தகுதிப்படுத்தியது.

இன்று கேட்டுக்கொண்டிருக்கிற சிலர் ஆச்சரியப்படலாம். “விசுவாசமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நான் ஏன் உணரவில்லை? பயங்கர உபத்திரவத்தின் வழியே நான் விசுவாசமாயிருந்திருக்கிறேன் ஆனால் நான் சந்தோஷத்தை உணரவில்லை.”

இந்த சோதனையை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் எதிர்கொண்டார். லிபர்டி, மிசௌரி சிறையில் அவர் அடைக்கப்பட்டபோது நிவாரணத்திற்காக அவர் ஜெபித்தார். கர்த்தருக்கு அவர் விசுவாசமாயிருந்திருக்கிறார். அவர் பரிசுத்தத்தில் வளர்ந்திருக்கிறார். இருந்தும் சந்தோஷம் மறுக்கப்பட்டதென அவர் உணர்ந்தார்.

சிலநேரங்களில் நம் அனைவருக்கும் தேவையாயிருக்கிற ஒருவேளை நமது அநித்திய பரிட்சையில் நீண்ட காலமாக இருக்கிற பொறுமையின் பாடத்தை, அவருக்கு கர்த்தர் போதித்தார். அவருடைய விசுவாசமுள்ள, துன்பப்பட்டுக்கொண்டிருந்த தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய செய்தி இதோ:

“நீ குழிக்குள் அல்லது கொலைகாரர்களின் கைகளில் தள்ளப்பட்டு மரணதண்டனை உனக்குக் கொடுக்கப்பட்டால்; நீ ஆழத்தில் தள்ளப்பட்டால்; பொங்கிவரும் பெரும்அலை உனக்கு விரோதமாக சதிசெய்தால்; கொடும் புயல்கள் உன்னுடைய சத்துருக்களானால்; வானங்கள் இருளை கூட்டிச்சேர்த்து, வழியைத்தடுக்க எல்லா கூறுகளும் ஒன்றுசேர்ந்தால்; எல்லாவற்றிற்கும் மேலாக பாதாளத்தின் கதவுகள் உனக்காக வாயை அகலத்திறந்தால் இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும் என்பதை என் மகனே, நீ அறிந்துகொள்.

“மனுஷ குமாரன் சகலவற்றிற்கும் கீழே இறங்கினார். அவரைவிட நீ பெரியவனோ?

“ஆகவே, உன் வழியைப் பற்றிக்கொள், ஆசாரியத்துவம் உன்னோடிருக்கும், ஏனெனில் அவைகளின் எல்லைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவைகள் கடந்துபோக முடியாது. உன்னுடைய நாட்கள் அறியப்பட்டிருக்கிறது, உன்னுடைய வருஷங்கள் குறைவாக எண்ணப்படாது; ஆகவே மனுஷன் செய்யமுடிகிறவற்றுக்காக பயப்படாதே, ஏனெனில் என்றென்றைக்கும் தேவன் உன்னோடிருக்கிறார்.”11

பாவநிவர்த்தி அவனை அதிக பரிசுத்தமாக்க அனுமதிக்க பெரிய விலை கொடுத்த யோபுவுக்கு இதே அறிவுரை பாடத்தையே கர்த்தர் கொடுத்தார், அவனைக்குறித்து நம்மிடமிருக்கிற அறிமுகத்திலிருந்து யோபு பரிசுத்தமாயிருந்தான் என நாம் அறிவோம். “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.”12

பின்னர் யோபு அவனுடைய செல்வத்தை, அவனுடைய குடும்பத்தை, அவனுடைய ஆரோக்கியத்தையும் இழந்தான். அவனுடைய அதிக பரிசுத்தம், அதிக உபத்திரவத்தினால் பெறப்பட்டு அதிக சந்தோஷத்திற்கு அவனை தகுதிப்படுத்தியது என யோபு சந்தேகப்பட்டான் என நீங்கள் நினைக்கலாம். பரிசுத்தம் துன்பத்தைக் கொண்டுவருமென யோபுவுக்கு தோன்றியது.

இருந்தும், அவர் ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுத்த அதே சரிசெய்யும் பாடத்தை யோபுவுக்குக் கர்த்தர் கொடுத்தார். அவனுடைய ஆவிக்குரிய கண்களால் அவனுடைய இருதயம் நொறுங்குகிற சூழ்நிலையை பார்க்க யோபுவை அவர் அனுமதித்தார். அவர் சொன்னார்,

“இப்போதும் புருஷனைப்போல் இடைக்கட்டிக்கொள், நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு.

“நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

“அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

“அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?

“அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே?”13

பின்னர், தேவனை நியாயமற்றவரென அழைத்ததற்கு மனந்திரும்பியதற்கு பின்னர் ஒரு உயர்ந்த, பரிசுத்த வழியில் அவனுடைய சோதனைகளைப் பார்க்க யோபு அனுமதிக்கப்பட்டான். அவன் மனந்திரும்பியிருக்கிறான்.

“பின்னர் யோபு கர்த்தருக்கு பதிலளித்துச் சொன்னான்,

“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

“அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும். நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

“நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன், நான் உம்மைக் கேள்வி கேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

“என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

“ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.”14

யோபு மனந்திரும்பிய பின்னர், அதனால் அவன் அதிக பரிசுத்தமாகி, அவன் இழந்ததற்கு மேலாக கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். ஆனால் ஒருவேளை, உபத்திரவம் மற்றும் மனந்திரும்புதலின் வழியாக அதிக பரிசுத்தத்தைக் கொண்டிருப்பது யோபுவுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாயிருக்கலாம். இன்னும் அவன் வாழப்போகிற நாட்களில் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க அவன் தகுதியுள்ளவனானான்.

வெறுமனே அதைக் கேட்பதால் அதிக சந்தோஷம் வருவதில்லை. தேவன் நம்மை மாற்ற தேவையாயிருப்பதைச் செய்வதால் அது வரும்.

உடன்படிக்கை பாதையினூடே அதிக பரிசுத்தத்திற்கு எவ்வாறு முன்னேறிச் செல்வதென்பதற்கு எனக்குத்தோன்றுகிற சிறந்த ஆலோசனையை தலைவர் ரசல் எம். நெல்சன் கொடுத்திருக்கிறார். அவர் வலியுறுத்தும்போது பாதையை அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒவ்வொரு நாளும் சிறிது சிறப்பாக இருத்தலை, செய்தலை—அன்றாட மனந்திரும்புதலின் வல்லமையை பெலப்படுத்துதலை, அனுபவியுங்கள்.

“மனந்திரும்ப நாம் தேர்ந்தெடுக்கும்போது மாறுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கிறோம்! நமக்குள்ள சிறந்த மாதிரிக்குள் நம்மை மாற்ற, இரட்சகரை நாம் அனுமதிக்கிறோம். ஆவிக்குரிய விதமாக வளரவும், அவரில் மீட்பின் சந்தோஷமான சந்தோஷத்தைப் பெறவும் நாம் தேர்ந்தெடுத்தோம். நாம் மனந்திரும்ப தெரிந்தெடுக்கும்போது, அநேகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற நாம் தெரிந்தெடுக்கிறோம்!”

பரிசுத்தமாக மாற நமது முயற்சிகளில் தலைவர் நெல்சன் இந்த ஊக்குவித்தலைக் கொடுத்துக்கொண்டே போனார்: “இந்த நேரத்தில் நம்மிடமிருந்து கர்த்தர் பரிபூரணத்தை எதிர்பார்க்கவில்லை. … ஆனால், அதிகமாக தூய்மையாக மாற அவர் நம்மை எதிர்பார்க்கிறார். அன்றாட மனந்திரும்புதல் தூய்மைக்கு பாதையாயிருக்கிறது”.15

பரிசுத்தத்தில் நாம் எவ்வாறு முன்னேறுகிறோம், அதை நோக்கி நாம் முன்னேறுகிறோம் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்ளமுடியும் என மிகத் தெளிவாகப் பார்க்கவும் தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸின் ஒரு முந்தைய மாநாட்டு உரை எனக்குதவியது. அவர் சொன்னார், “ஆவிக்குரிய தன்மையை நாம் எவ்வாறு அடைகிறோம்? பரிசுத்த ஆவியானவரின் நிரந்தர தோழமையை நாம் கொண்டிருக்கிற அந்த பரிசுத்தத்தின் அளவை நாம் எவ்வாறு அடையலாம்? நித்தியத்தின் முன்னோக்குடன் இந்த உலகத்துக்குரிய காரியங்களை நாம் எப்படி பார்த்து, மதிப்பிடுகிறோம்?”16

நமது அன்பான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் அதிக விசுவாசத்துடன் தலைவர் ஓக்ஸின் பதில் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு நாளும் மன்னிப்பை நாடவும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதில் அவரை நினைவுகூரவும் அது நம்மை நடத்துகிறது. அவருடைய வார்த்தையை நாம் ருசிக்கும்போது இயேசு கிறிஸ்துவில் அந்த அதிக விசுவாசம் வருகிறது.

மிகவும் பரிசுத்தமாக மாற உதவ, ஜெபிக்க ஒரு வழியை “More Holiness Give Me” என்ற பாடல் ஆலோசனையளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, காலப்போக்கில் வழங்கப்படுகிற நாம் நாடுகிற பரிசுத்தம் ஒரு அன்பான தேவனிடமிருந்து வருகிற வரம் என ஆசிரியர் புத்திசாலித்தனமாக ஆலோசிக்கிறார். கடைசி வசனத்தை நினைவுகூருங்கள்.

எனக்கு அதிக தூய்மையைத் தாரும்.

மேற்கொள்ள அதிக பெலனை,

பூமியின் கறைகளிலிருந்து அதிக விடுதலையை,

வீட்டிற்காக அதிக ஏக்கத்தை,

இராஜ்ஜியத்திற்கு அதிக தகுதியை,

நான் அதிகமாய் பயன்படுத்தப்பட,

அதிகமாக ஆசீர்வதிக்கப்படவும், பரிசுத்தமாக்கப்படவும்—

இரட்சகரே உம்மைப்போல அதிகமாக.”17

நமது தனிப்பட்ட சூழ்நிலை எதுவாயிருந்தாலும், வீட்டிற்கு செல்லும் நமது உடன்படிக்கை பாதையில் நாம் எங்கிருந்தாலும், அதிக பரிசுத்தத்திற்காக நமது ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதாக. நமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்போது நமது சந்தோஷம் அதிகரிக்கிறது என நான் அறிவேன். அது மெதுவாக வரலாம், ஆனால் அது வரும். ஒரு அன்பான பரலோக பிதா மற்றும் அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து அந்த உத்தரவாதம் எனக்கிருக்கிறது.

ஜோசப் ஸ்மித் தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாயிருந்தாரென்றும், இன்று, தலைவர் ரசல் எம். நெல்சன் நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியாக இருக்கிறாரென்றும் நான் சாட்சியளிக்கிறேன். பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார், நம்மை நேசிக்கிறார். குடும்பங்களாக வீட்டிற்கு, அவரிடத்தில் வர அவர் விரும்புகிறார். அங்கே போகும் நமது பயணத்தில் அவரைப் பின்பற்ற நமது அன்பான இரட்சகர் நம்மை வரவேற்கிறார். அவர்கள் வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்