2010–2019
சத்துருவை மேற்கொள்ள வல்லமை
அக்டோபர் 2019 பொது மாநாடு


சத்துருவை மேற்கொள்ள வல்லமை

நாம் யாரென்று நினைவில் வைத்து, சத்துருவின் மூன்று D-களையும் மேற்கொண்டு சமாதானத்தை, நாம் எப்படி கண்டுபிடிப்போம்?

சகோதர, சகோதரிகளே, நீங்கள் மாறவும், இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களான மற்றவர்கள் மாற உதவவும், பரிசுத்த ஆலயத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்காவும் உங்களுக்கு நன்றி. உங்கள் நன்மைக்கு நன்றி. நீங்கள் அற்புதமானவர்கள், அழகானவர்கள்.

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது பரிசுத்த ஆவியின் உறுதிப்பாட்டின் செல்வாக்கை நாம் அடையாளம் காண்போம் என்பது என்னுடைய ஜெபம். ஆண்களும் பெண்களுமான எல்லா மனிதர்களும் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என “குடும்பம் உலகத்திற்கு ஒரு பிரகடனம்” உரைக்கிறது ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரன் அல்லது குமாரத்தி, அப்படியானால் ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு.”1 “பெரிய பிற்காலப் பணிக்கு அஸ்திபாரம் போடுவதில் பங்கேற்க, காலங்களின் நிறைவேறுதலில் வர ஒதுக்கப்பட்டுள்ள நாம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆவிகள்.”2 “இந்த பிற்காலத்தின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்கொள்கிற எதற்கும் எல்லாவற்றிற்கும் ஆயத்தப்பட நீங்கள் ஆவி உலகத்தில் போதிக்கப்பட்டீர்கள்.(கோ.&உ 138:56 பார்க்கவும்) அந்த போதனை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது.”3 என தலைவர் ரசல் எம்.நெல்சன் அறிவித்தார்.

நீங்கள் தேவனின் தெரிந்தெடுக்கப்பட்ட குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். சத்துருவை மேற்கொள்ள உங்களிடம் வல்லமையிருக்கிறது. ஆயினும் நீங்கள் யாரென்று சத்துரு அறிந்திருக்கிறான். நீங்கள் தெய்வீக பாரம்பரியத்தையும் அவனுக்குத் தெரியும், மூன்று D-க்களைப் பயன்படுத்தி உங்களுடைய பூலோக, பரலோகத் திறனைக் கட்டுப்படுத்த நாடுகிறான்.

  • வஞ்சனை

  • திசை திருப்புதல்

  • அதைரியப்படுத்தல்

வஞ்சனை

மோசேயின் நாட்களில் வஞ்சனையின் கருவியை சத்துரு பயன்படுத்தினான். மோசேக்கு கர்த்தர் அறிவித்தார்.

“இதோ, நீ என்னுடைய குமாரன். …

“நான் உனக்கு ஒரு வேலையை வைத்திருக்கிறேன்; நீ என்னுடைய ஒரேபேறானவரின் சாயலிலிருக்கிறாய்.”4

இந்த மகிமையான தரிசனத்திற்குப் பின்னர் மோசேயை சாத்தான் ஏமாற்ற முயற்சித்தான். “மோசே, மனுஷகுமாரனே, என்னைத் தொழுதுகொள்”5 என்ற அவன் பயன்படுத்தின வார்த்தைகள் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. சாத்தானை தொழுதுகொள்ள அழைத்ததில் மட்டுமே வஞ்சனையில்லை, ஆனால், மனுஷகுமாரனாக மோசேயை அவன் விவரித்தான். ஒரேபேறானவரின் சாயலிலில் சிருஷ்டிக்கப்பட்டதில் அவன் தேவகுமாரன் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

மோசேயை ஏமாற்ற அவனுடைய விடாமுயற்சியில் சத்துரு தீவிரமாயிருந்தான் ஆனால், “என்னிடமிருந்து அப்பாலே போ சாத்தானே, ஏனெனில் மகிமையின் தேவனாகிய இந்த தேவன் ஒருவரைமட்டுமே நான் தொழுதுகொள்ளுவேன்” 6என்று சொல்லி மோசே தடுத்தான். தேவகுமாரனாக அவன் யாரென்று மோசே நினைவுகூர்ந்தான்.

மோசேக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை உங்களுக்கும் எனக்கும் பொருந்தும். தேவனுடைய சொந்த சாயலில் நாம் சிருஷ்டிக்கப்பட்டோம், செய்வதற்கு நமக்கு ஒரு வேலையை வைத்திருக்கிறார். உண்மையில் நாம் யாரென்பதை மறந்ததால் சத்துரு நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறான். நாம் யாரென்று புரிந்துகொள்ளவில்லை என்றால், பின்னர் நாம் யாராக மாறமுடியுமென்பதை அடையாளம் காண கடினமாயிருக்கும்.

திசை திருப்புதல்

கிறிஸ்துவிலிருந்தும் அவருடைய உடன்படிக்கை பாதையிலிருந்தும் நம்மை திசைதிருப்பவும் சத்துரு முயற்சிப்பான். மூப்பர் ரொனால்ட் எ. ராஸ்பான்ட் பின்வருபவற்றை பகிர்ந்தார். “அவருடைய பணியில் விழிப்பூட்டவும் ஈடுபடுத்தவும் கர்த்தருடைய விருப்பமிருக்கும்போது ஆவிக்குரிய சாட்சிகளிலிருந்து நம்மை திசைதிருப்புவது சத்துருவின் திட்டம்.”7

நமது நாளில், டிவிட்டர், முகநூல், மெய்நிகர் உண்மை விளையாட்டுகள், இன்னும் அதிகமானவைகளையும் சேர்த்து அநேக திசைதிருப்புதல்களிருக்கின்றன. இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வியப்பாயிருக்கிறது, ஆனால், நாம் கவனமாயிருக்கவில்லையென்றால் நமது தெய்வீகத்திறனை நிறைவேற்றுவதிலிருந்து அவைகள் நம்மை திசைதிருப்பலாம். சரியான முறையில் அவைகளை பயன்படுத்துதல் பரலோக வல்லமையைக் கொண்டுவந்து, திரையின் இரண்டு பக்கங்களிலும் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலை கூட்டிச்சேர்க்க நாம் நாடும்போது அற்புதங்களைக் காண நம்மை அனுமதிக்கிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நாம் நிதானத்துடன் கவனமாக இருப்போமாக.8 தொழில்நுட்பம் இரட்சகரிடத்தில் நம்மை நெருக்கமாகக் கொண்டுபோகும், அவருடைய இரண்டாம் வருகைக்காக நாம் ஆயத்தப்படும்போது அவரது பணியை நிறைவேற்ற நம்மை அனுமதிக்க வழிகளுக்காக தொடர்ந்து நாடுகிறோம்.

அதைரியப்படுத்தல்

கடைசியாக, நாம் அதைரியப்பட்டு மாற சத்துரு விரும்புகிறான். நம்மை மற்றவர்களோடு ஒப்பிடும்போது அல்லது நம்மையும் சேர்த்து எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என உணரும்போது நாம் அதைரியப்படலாம்.

என்னுடைய முனைவர் திட்டத்தை நான் ஆரம்பித்தபோது அதைரிமடைந்தவனாக நான் உணர்ந்தேன். அந்த ஆண்டில் அந்த திட்டம் நான்கு மாணவர்களை மட்டுமே ஏற்றுக்கொண்டது, மற்ற மாணவர்கள் புத்திசாலிகளாயிருந்தனர். அவர்கள் அதிக பரிட்சை மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர், மூத்த நிர்வாக பதவிகளில் அதிக பணி அனுபவங்களைப் பெற்றிருந்தனர், அவர்கள் தங்களுடைய திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். திட்டத்தில் என்னுடைய முதல் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், கிட்டத்தட்ட என்னை மூழ்கடிக்கும் அதைரியத்தின் உணர்வுகளும் சந்தேகங்களும் என்னைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

இந்த நான்கு ஆண்டு திட்டத்தை நான் முடிக்கப்போகிறேன் என்றால் ஒவ்வொரு செமஸ்டரிலும் மார்மன் புஸ்தகத்தை படித்து முடிக்க நான் தீர்மானித்தேன். ஒவ்வொரு நாளும் நான் படிக்கும்போதும், சகல காரியங்களையும் பரிசுத்த ஆவி எனக்குப் போதிப்பார் என்றும், எல்லா காரியங்களையும் என் நினைவுக்கு கொண்டுவருவாரென்றும் இரட்சகரின் அறிக்கையை நான் அடையாளம் கண்டேன்.9 தேவனின் ஒரு குமாரனாக அது மறுஉறுதி செய்து, மற்றவர்களுடன் என்னை ஒப்பிடக்கூடாதென எனக்கு நினைவுபடுத்தி வெற்றிபெற என்னுடைய தெய்வீக பாத்திரத்தில் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது.10

எனக்கன்பான நண்பர்களே, தயவுசெய்து உங்கள் சந்தோஷத்தை யாரும் திருட விட்டுவிடாதிருங்கள். மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதிருங்கள். தயவுசெய்து இரட்சகரின் அன்பான வார்த்தைகளை நினைவுகூருங்கள்“சமாதானத்தைஉங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடையசமாதானத்தையேநான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை உங்கள் இருதயம் கலங்காமலும்பயப்படாமலுமிருப்பதாக.”11

ஆகவே நாம் இதை எப்படி செய்கிறோம்? இந்த சமாதானத்தையும், நாம் யாரென்று நினைவுகூரவும், சத்துருவின் மூன்று காரியங்களையும் மேற்கொள்ள நாம் எப்படி கண்டுபிடிப்போம்?

முதலாவதாக, தேவனிடத்தில் நமது முழுஇருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பெலத்தோடும் அன்புகூருவது முதலும் மிகப்பெரிய கற்பனையுமாயிருக்கிறதென்பதை நினைவுகூருங்கள்.12 அவரிடத்திலும் அவருடைய குமாரனிடத்திலும் நமது அன்பால் நாம் செய்யவேண்டிய அனைத்தும், ஊக்கப்படுத்தலாயிருக்கவேண்டும். அவர்கள்மீதுள்ள நமது அன்பை நாம் மேம்படுத்தும்போது நம்மையும் மற்றவர்களையும் நேசிக்க நமது திறன் அதிகரிக்கும். தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, அண்டைவீட்டாருக்கு சேவைசெய்ய நாம் ஆரம்பிப்போம், ஏனெனில் அவர்களை இரட்சகர் பார்ப்பதைப்போல அவர்களை நாம் பார்ப்போம்.13

இரண்டாவதாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவினடத்தில் ஜெபியுங்கள்.14 ஜெபத்தின் மூலமாகவே, தேவனின் அன்பை நாம் உணர்ந்து அவரிடத்தில் நம் அன்பைக் காட்டுகிறேம். ஜெபத்தின் மூலமாக நன்றியுணர்வை நாம் வெளிப்படுத்தி,தேவனுடைய சித்தத்துடன் நமது விருப்பத்தை சமர்ப்பிக்க, பெலத்தையும் தைரியத்தையும், எல்லா காரியங்களிலும் வழிநடத்தப்படவும் வழிகாட்டப்படவும் நாம் கேட்கிறோம்.

“இந்த அன்பினால் நீங்கள் நிரப்பப்படவும், தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும்,அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாமிருக்க பிதாவினடத்தில் ஜெபிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.”15

மூன்றாவதாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் மார்மன் புஸ்தகத்தைப் படியுங்கள்.16 ஒரு கேள்வியுடன் நான் படிக்கும்போது எனது மார்மன் புஸ்தகப் படிப்புகள் சிறப்பாகப் போக முனைகின்றன. ஒரு கேள்வியுடன் நாம் படிக்கும்போது, நாம் வெளிப்படுத்தலைப் பெறமுடியும்,மேலும் “மார்மன் புஸ்தகம் பூமியின் மீதிருக்கும் எந்த ஒரு புஸ்தகத்தைவிடவும் மிகவும் சரியானது என்றும், ஒரு மனிதன் [அல்லது ஒரு மனுஷி] மற்ற எந்த புஸ்தகத்தைக் காட்டிலும் இதனுடைய போதனைகளைக் கடைபடித்தால் தேவனின் அருகாமைக்குச் செல்லுதல் முடியும்.”17 என அறிவித்ததைப்போல அவர் உண்மையைப் பேசினார் என அடையாளம்காணவும் முடியும். மார்மன் புஸ்தகத்தில் கிறிஸ்துவின் வார்த்தைகள் அடங்கியிருக்கின்றன, மற்றும் நாம் யாரென்று நினைவுகூர நமக்குதவுகிறது.

இறுதியாக, ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வாரமும் திருவிருந்தில் ஜெபத்துடன் பங்கெடுங்கள். திருவிருந்தையும் சேர்த்து, நமது வாழ்க்கையில் தேவபக்திக்குரிய வல்லமை ஆசாரியத்துவத்தின் வல்லமையின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது.18 “திருவிருந்தின் நியமம் என்பது, பரிசுத்தமாகவும், உண்மையாக மனந்திரும்ப, திரும்பத் திரும்ப அழைப்பதாகவும், ஆவிக்குரியதில் புதுப்பிக்கப்பட்டதாயுமிருக்கிறதென மூப்பர் டேவிட் எ. பெட்னார் போதித்தார், திருவிருந்தில் பங்கேற்கும் செயல், அதிலும் தானாகவும் பாவங்களைக் விட்டுவிடுவதில்லை. ஆனால், நாம் மனசாட்சியுடன் ஆயத்தப்பட்டு, நொறுங்குண்ட இருதயத்துடனும், நருங்குண்ட ஆவியுடனும் இந்த பரிசுத்த நியமத்தில் பங்கேற்கும்போது கர்த்தருடைய ஆவி எப்போதும் நம்மோடிருக்க நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்”.19

தாழ்மையுடன் நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது கெத்சமனே என்ற அழைக்கப்பட்ட அந்த பரிசுத்த தோப்பில் இயேசுவின் பாடுகளையும், சிலுவையில் அவருடைய தியாகபலியையும் நாம் நினைவுகூருகிறோம். நமது மீட்பரான அவருடைய ஒரேபேரான குமாரனை அனுப்பியதற்காக நாம் நன்றியை தெரிவிக்கிறோம், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் எப்போதும் அவரை நினைவுகூரவும் நமது வாஞ்சையைக் காட்டுகிறோம்.20 திருவிருந்தோடு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு அங்கேயிருக்கிறது, அது தனிப்பட்டதாகவும், அது ஆற்றலுள்ளதாகவும், அது தேவையுள்ளதாகவுமிருக்கிறது.

எனது நண்பர்களே, நமது முழுஇருதயத்தோடும் தேவனை நேசிக்க நாம் முயற்சிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபித்து, மார்மன் புஸ்தகத்தை தியானித்து, ஜெபத்துடன் திருவிருந்தில் பங்கேற்கும்போது, சத்துருவின் வஞ்சனைகளின்பழக்கங்களை மேற்கொள்ள, நமது தெய்வீகத்திறனை கட்டுப்படுத்துகிற திசைதிருப்புதலைக் குறைக்க, நமது பரலோக பிதா மற்றும் அவருடைய குமாரனிடத்திலுள்ள அன்பை உணரும் நமது திறனை மங்கச்செய்ய அதைரியப்படுத்தலை தடுக்க கர்த்தருடைய பெலத்துடன் நமக்கு திறனிருக்கும், என நான் வாக்களிக்கிறேன். தேவனின் குமாரர்களும், குமாரத்திகளுமாக நாம் யாரென்று நாம் முழுமையாகப்புரிந்துகொள்வோம்.

சகோதர சகோதரிகளே, என்னுடைய அன்பை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், பரலோக பிதா ஜீவிக்கிறாரென்றும் இயேசுவே கிறிஸ்துவென்றும் என்னுடைய சாட்சியை நான் அறிவிக்கிறேன். நான் அவர்களை நேசிக்கிறேன். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய இராஜ்ஜியம். மேசியாவின் இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த நமக்கு ஒரு தெய்வீக நியமிப்பிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்