2010–2019
கவனமாக இருப்பதற்கு எதிரானது இயல்பாக இருத்தல்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


கவனமாக இருப்பதற்கு எதிரானது இயல்பாக இருத்தல்

உலக செல்வாக்குகள் தீமையை அதிகமாக தழுவும்போது பாதுகாப்பாக இரட்சகரிடத்திற்கு வழிநடத்துகிற பாதையில் உறுதியுடன், அக்கறையுடன் இருப்பதற்கு நாம் முயல வேண்டும்

“மகிழ்ச்சி,$15.00.“ என்று குறிப்பிட்ட, ஒரு கடையின் ஜன்னலில் ஒரு விளம்பரத்தை நான் பார்த்தேன். $15-க்கு எவ்வளவு மகிழ்ச்சி நான் வாங்க முடியும் என்று மிகவும் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்து பார்த்தேன். மலிவான நிறைய அணிகலன்களையும், நினைவு பொருட்களையும் நான் அங்கு பார்த்தேன்- அனால் கண்டிப்பாக அங்கு இருந்த ஒரு பொருள் கூட அந்த விளம்பரம் குறிப்பிட்ட மகிழ்ச்சியை எனக்கு தர முடியாது. பல வருடங்களுக்கு மேலாக, நான் அந்த பலகையில் இருந்த விளம்பரத்தைப்பற்றியும் மகிழ்ச்சியை இந்த மலிவான அல்லது தற்காலிக பொருட்களில் எவ்வாறு எளிதாக பெற முடியும் எனவும் நான் சிந்தித்திருக்கிறேன். பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக இருக்கும் நமக்கு, எப்படி மற்றும் எங்கே உண்மையான மகிழ்ச்சி காணப்படுகிறது என அறிய ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அது நம் கர்த்தரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய சுவிசேஷத்தின்படி கவனமாக வாழ்வதிலும், மேலும் அவரைப் போலவே ஆக முயற்சிப்பதிலும் இருக்கிறது.

ஒரு ரயில்வே பொறியாளராக இருந்த ஒரு அன்புமிக்க நண்பர் எங்களுக்கு இருக்கிறார். ஒரு நாள் அவர் தனது பாதையில் ஒரு ரயிலை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரு கார் முன்னே அவரது தடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தார். அந்த கார் ரயில் தடத்தை கடக்க முடியாமல் மாட்டிக்கொண்டிருப்பதை அவர் உடனே உணர்ந்தார். அது என்ஜினுக்கு பின்னால் முக்கால் மைல் நீளமுள்ள 6,500 டன்களை சுமந்து சென்ற ஒவ்வொரு ரயில் பெட்டியின் வேக கருவியை கட்டுப்படுத்துகிற, ரயிலை உடனடியாக அவசர முறையில் ரயிலை இயக்கினார். காரை இடிக்கும் முன்பு ரயில் நிறுத்தப்படக்கூடிய எந்தவொரு வாய்ப்பும் இல்லை, அது நடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்தவர்கள், ரயில் எச்சரிக்கையையும் விஸில் சத்தத்தையும் கேட்டவுடன் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிலிருந்து வெளியேறினார். விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி நம் பொறியாளர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் கோபத்துடன் அவர்களை அணுகினார். அவள் அந்த முழு சம்பவத்தையும் பார்த்ததாக கூச்சலிட்டார், மேலும் அந்த பொறியாளர் காரைத் தவிர்ப்பதற்கு எந்த ஒரு முயற்சியும்எடுக்கவில்லை என்று சாட்சியம் கூறினாள்!

கண்டிப்பாக, எங்கள் பொறியாளர் நண்பர் ஒரு விபத்தைத் தவிர்ப்பதற்காக ரயில் தண்டவாளத்தை விட்டு விலகிச் செல்ல முயன்றிருந்தால்,, அவரும் அவரது முழு இரயிலுமே தடம்புரண்டிருக்கும், மேலும் இரயிலின் பயணம் திடீரென நிறுத்தப்பட்டிருக்கும். அவரால் அதிர்ஷ்டவசமாக, அந்த ரயில் ஓடிய பாதைகளின் தண்டவாளங்களில் ரயில் பாதையின் சக்கரங்கள் அவரது வழியில் தடையை பொருட்படுத்தாமல் அதன் இலக்கை நோக்கி பத்திரமாக நகர்ந்தன. நாமனைவரும் அதிர்ஷ்டவசமாக, பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக ஞானஸ்நானம் பெற்றபோது ஒப்புக்கொடுத்தபடி உடன்படிக்கையின் பாதை என்னும் தடத்தில் இருக்கின்றோம். இருப்பினும் நாம் வழியிலேயே அவ்வப்போது தடைகளை எதிர்கொண்டாலும். நாம் உறுதியாக இருந்தோம் என்றால், இந்த பாதை நம்மை விலைமதிப்புள்ள நித்திய இலக்கை நோக்கி நகர வைக்கும்.

படம்
ஜீவ விருட்சம் பற்றிய லேகியின் தரிசனம்

ஜீவவிருட்சத்தின் தரிசனம் இயல்பான விளைவுகள் எவ்வாறு உடன்படிக்கை பாதையில் இருந்து நம்மை வழிவிலக செய்கிறது என்று நமக்கு காட்டுகின்றது. அந்த இருப்புக்கோலும், இடுக்கமும் நெருக்கமுமான பாதையும், அல்லது உடன்படிக்கையின் , பாதைக்கு நேராக ஜீவவிருச்சத்திற்கு அழைத்து செல்லும், நம்முடைய இரட்சகர் மற்றும் அவருடைய பாவநிவர்த்தியால் கிடைக்ககூடிய எல்லா ஆசீர்வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் உலகின் அசுத்தத்தைக் குறிக்கும் ஒரு தண்ணீருள்ள நதியும் அவரது தரிசனத்தில் காணப்பட்டது. அந்த நதியானது ஜீவ விருட்சத்தின் “பக்கத்திலே“ “நெடுக ஓடிற்று“ ஆனால் அதன் அருகில்தான், “அதற்கு அல்ல“ என வேதம் விவரிக்கிறது இந்த உலகம் கவன சிதறல்கள் நிறைந்தவை, அவை தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் கூட வஞ்சிக்க கூடியது- அவை தங்கள் உடன்படிக்கையின்படி வாழ்வதில் இயல்பாக அவர்களை இருக்கச்செய்து, ஜீவவிருட்சத்திற்கு அருகில் மட்டுமே அழைத்துச் செல்லும், ஆனால் அதற்கு அல்ல. நாம் நம் உடன்படிக்கையின்படி வாழ்வதில் கவனமாகவும், துல்லியமாகவும் இல்லாவிட்டால், நம் சாதாரண முயற்சிகள் அந்த பெரிய விசாலமான கட்டிடத்தில் உள்ளவர்களிடம் நாம் இணைந்து விட. தடைசெய்யப்பட்ட பாதைகளில் அதன் விளைவாக நம்மை வழிநடத்தும். கவனமாக இல்லாவிட்டால், நாம் அந்த அசுசி நதியின் ஆழத்தில் கூட மூழ்கிவிடுவோம்.1

சுவிசேஷத்தின் படி வாழ்வது உட்பட அனைத்தையும் செய்ய ஒரு சாதாரண வழியும் மற்றும் ஒரு இயல்பான வழியும் உண்டு. இரட்சகருடன் நமக்கிருக்கும் ஒப்புக் கொடுத்தலை கருத்தில்கொள்ளும்போது, நாம் கவனமாக இருக்கிறோமா அல்லது இயல்பாக இருக்கிறோமா? அநித்திய இயல்பின் காரணமாக, சில நேரங்களில் குறிப்பாக நம் நடவடிக்கைகள் மந்தமாக இருக்கும் நேரங்களில், நன்மை அல்லாத விஷயங்களை நன்மையுடன் கலந்து நியாயப்படுத்துவதில்லையா? கவனமாக சுவிசேஷத்தின்படி வாழ்வதிலும் அல்லது நம் தீர்க்கதரிசி தலைவர்கள் ஆலோசனையைப் பின்பற்றும்போதும் அது பயன்படும்போது, “எப்படியோ,“ “இதை தவிர,“ “அல்லது“ என்று எப்பொழுதுமே நாம் சொல்லுகிறோம். உண்மையாக “அந்த ஆலோசனை என்னக்கானது அல்ல“ என்று எப்போதும் சொல்கிறோம். நாம் விரும்பும் அனைத்தையும் நம்மால் நியாயப்படுத்த முடியும், அனால் உண்மை என்னவென்றால், தவறான விஷயத்தை சரியான வழியில் செய்யமுடியாது!

யோவான் 14:15ல் 2019-திற்கான இளைஞர் தலைப்பு கர்த்தர் அறிவுறித்தியபடி எடுக்கப்பட்டது: “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.“ நாம் கூறுவதுபோல நாம் அவரை நேசித்தால்,அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்து நாம் அவரை நேசிக்கின்றோம் என்ற அந்த அன்பை காட்ட முடியாதா?

சுவிசேஷத்தின்படி கவனமாக வாழ்வதற்கு, முறையானதாகவோ அல்லது கண்டிப்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நம் நடத்தைகளிலும், எண்ணத்திலும் பொருத்தமாக இருப்பது என்பது அதன் அர்த்தமாகும். நாம் சுவிசேஷத்தின்படி வாழ்வதில் கவனமாகவும், இயல்பாகவும் வாழ்வதற்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று சிந்திக்கும்போது, இங்கே சில விஷயங்கள் உள்ளன:

ஒவ்வொரு வாரமும் நமது ஓய்வுநாள் ஆராதனையிலும் மற்றும் திருவிருந்தில் பங்கேற்கவும் ஆயத்தப்பட கவனமாய் இருக்கின்றோமா?

நம் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் அல்லது என்னை பின்பற்றிவா-- தனிநபருக்கும் மற்றும் குடும்பத்திற்கும்-ல் உற்சாகமாகவும் ஈடுபாட்டுடனும் கவனத்தோடும் இருக்கின்றோமா?

நாம் ஆலய ஆராதனையில் கவனத்துடனும், நாம் ஆலயத்திலும் மற்றும் ஞானஸ்நானத்தின் போதும் செய்த உடன்படிக்கையின் படி வாழ வேண்டுமென்று கவனமாகவும் வெளியரங்கமாகவும் இருக்கிறோமா? நமது தோற்றம் மற்றும் அடக்கமான உடை அணிவதில், குறிப்பாக பரிசுத்த இடங்களிலும், சூழ்நிலைகளிலும் கவனமாக இருக்கின்றோமா? பரிசுத்த ஆலய வஸ்திரங்களை எப்படி அணிய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றோமா? அல்லது இந்த நாகரீக வாழ்க்கை அதிக இயல்பான மனநிலையை தூண்டுகிறதா?

நாம் எப்படி மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறோம், ஊழியத்திலும், சபையிலும் அழைப்பை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதிலும் கவனமாய் இருக்கின்றோமா, அல்லது ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறோமா அல்லது மோசமாக அல்லது இயல்பாக நமது அழைப்பில் கவனமாய் இருக்கின்றோமா?

நாம் வாசிக்கின்றவற்றிலும், மேலும் தொலைக்காட்சியிலும், அலைபேசியிலும் பார்க்கின்றவற்றிலும் கவனமாக இருக்கின்றோமா அல்லது இயல்பாக இருக்கின்றோமா? நமது பேச்சில் நாம் கவனமாக இருக்கின்றோமா? அல்லது தடித்த மற்றும் ஆபாசமானதை இயல்பாக பின்பற்றுகிறோமா?

இளைஞர்களின் பெலனுக்காக என்ற சிற்றேட்டில் ஒழுக்க மதிப்பீடு உள்ளது, அவை கவனமாக பின்பற்றப்படும்போது நிறைவான ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்து, நாம் உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க உதவும். இளைஞரின் நலனுக்காக அவை எழுதப்பட்டிருப்பினும், வாலிபர் மற்றும் இளம் பெண்கள் அவர்கள் திட்டத்தை முடித்தாலும், கற்றுக்கொண்ட தரங்கள் காலாவதியாகாது. அனைத்து நேரங்களிலும், அவை நம்மனைவருக்கும் பொருந்தும். இந்த தரங்களின் பரிசீலனை நாம் சுவிசேஷ வாழ்வில் மிகவும் கவனமாக இருக்க பிற வழிகளில் நம்மை தூண்டலாம்.

மற்றவருக்கு பொருத்தமாகவும், மற்றொருவரை சௌகர்யப்படுத்தவும் நம் தரத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ள கூடாது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், அவ்விதத்தில் நாம் மற்றவர்களையும் அவர்கள் உயர்ந்த ஆசீர்வாதங்களை அறுவடை செய்யமுடியும்படிக்கு, மென்மேலும் பரிசுத்த ஸ்தலங்களுக்கு உயர்த்த வேண்டியவர்கள்.

நமது உடன்படிக்கையில் நம் வாழ்வை அதிக கவனமாக இணைக்கும்போது, நமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய அனுசரிப்புகளை அறிய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை நாட உங்கள் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன்.. இந்த பயணத்தை மேற்கொள்ளும் மற்றவர்களையும் விமர்சிக்கக் கூடாது என்று நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். “தீர்ப்பு என்னுடையது, என்கிறார் ஆண்டவர்.“2 மாற்றம் மற்றும் வளர்ச்சியின் நடைமுறையில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்.

எனக்கு மார்மன் புத்தகத்தில் சொல்லப்பட்ட மத மாறுபாடுள்ள அமலீசியர்கள் கதை சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவிலும், அவர் சபையிலும் தொடர்பில்லாமல் அப்போது இருப்பதைக் குறிக்கும் விதமாக, அவர்கள் தங்கள் நெற்றிகளில் வித்தியாசமான சிகப்பு குறியை அனைவரும் பார்க்கும்படியாக இட்டுக்கொண்டார்கள்.3 மாறாக, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் எவ்வாறு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்? அவரது சாயலை மற்றவர்கள் நமது ரூபத்திலே எளிதாக பார்க்கமுடிகின்றதா மற்றும் கவனமாக வாழும் நமது வாழ்வில் நாம் யாருடைய பிரதிநிதிகளாக இருக்கிறோம்?

உடன்படிக்கையின் மக்களாக நாம், உலகத்தின் பிறருடன் கலந்துவிட வேண்டியவர்களல்ல. “அசாதாரண மக்கள்“ என நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்4-என்ன ஒரு பாராட்டு! இந்த உலகு செல்வாக்குகள் கேடான விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்போது, நமது உடன்படிக்கை வாழ்விற்கும் உலக செல்வாக்குக்கும் உள்ள இடைவெளியை விரிவாக்கி, நம் மீட்பரிடம் நம்மை அழைத்துச் செல்லும் வழியில் கருத்தாயும் உறுதியாயும் நிலைத்திருக்க நாம் முயல வேண்டும்.

நீடித்த மகிழ்ச்சியைப் பெறுதல் பற்றி நான் சிந்திக்கும்போது, சில நேரங்களில் நான் மந்தமான இருட்டிலிருப்பதை உணருகிறேன். உடன்படிக்கையின் பாதையில் செல்லும்போது, அந்தகாரமான இருள் மூடியிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. சோதனையும் இயல்பாக இருப்பதுமே உலகின் இருளில் நம் வழியைத் திசை திருப்புவதற்கும் மேலும் அவை நம்மை உடன்படிக்கையின் பாதையில் இருந்து விலகியிருக்கவும் நம்மைத் தூண்டுகிறது. இது நடக்கும் நேரங்களுக்காக, நாம் உடன்படிக்கை பாதையில் திரும்ப சீக்கிரமாக செல்லவேண்டும் என்றும் அதை விரைவாக செய்யவும் நம் அன்புக்குரிய தீர்க்கதரிசி, தலைவர் ரஸல் எம்.நெல்சன் நமக்கு வலியுறுத்தியிருக்கிறார். மனந்திரும்புதலுதலின் வரத்துக்காகவும், நமது இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமைக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

ஒரு பூரணமான வாழ்க்கை வாழ்வது சாத்திமல்ல. ஒரே ஒரு மனிதரால் மட்டுமே இந்த டிலஸ்டியல் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது பரிபூரணமாக வாழ முடிந்தது. அது இயேசு கிறிஸ்து. சகோதர சகோதரிகளே, நாம் பூரணராய் இருக்க முடியாது, ஆனாலும் திருவிருந்தில் பங்கேற்கவும், ஆலய ஆசீர்வாதங்களை பெறவும், மற்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெற தகுதியுள்ளவர்களாகயும் இருக்க முடியும்

இரட்சகரை கவனமாய் பின்பற்றுகிறவர்களுக்கு ஆசிர்வாதமும் மகிழ்ச்சியும் வருமென்று பென்யமின் ராஜா சாட்சியளித்திருக்கின்றார்: “இப்படிருக்க, தன் தேவனுடைய கற்பனைகளைக் கைகொள்ளுபவர்களின் ஆசிர்வாதமானதும் மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில், இதோ ஆவிக்குரியதும் லெளகீகமானதுமான சகல காரியங்களில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் இறுதிபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சி உள்ள நிலையிலே தேவனோடு வாசம்செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.“5

$15-க்கு மகிழ்ச்சியை வாங்க முடியுமா? இல்லை, அது முடியாது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் விருப்பத்துடனும் கவனத்துடனும் வாழும் போது மட்டுமே ஆழமான மற்றும் நீடித்த மகிழ்ச்சி கிடைக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்