குழுமம்: ஒரு சொந்தமான இடம்
ஒரு பலமான குழுமத்தை ஸ்தாபிக்க கர்த்தர் உங்களை வைத்திருக்கலாம். அவருடைய பிள்ளைகளை அவர் கூட்டிச் சேர்க்கும்போது சொந்தமாயிருக்கவும் வளரவும் அவர்களுக்கு ஒரு இடம் வேண்டும்.
2010ல் ஆன்ட்ரெ செபாகோ, சத்தியத்தை தேடிக்கொண்டிருந்த இளம் வாலிபன். இதற்கு முன்பு அவன் ஒருபோதும் இதயப் பூர்வமான ஜெபத்தை ஏறெடுக்காதிருந்தும் முயற்சிக்க அவன் தீர்மானித்தான். அதன் பின் விரைவிலேயே ஊழியக்காரர்களை அவன் சந்தித்தான். மார்மன் புஸ்தகத்தின் படத்துடன் ஒரு கடந்து செல்லும் அட்டை ஒன்றை அவர்கள் அவனுக்குக் கொடுத்தார்கள். ஆன்ட்ரே ஏதோ ஒன்றை உணர்ந்து அந்த புஸ்தகத்தை ஊழியக்காரர்கள் விற்பார்களா என்று கேட்டான். அவன் சபைக்கு வருவதாயிருந்தால் இலவசமாக புஸ்தகத்தை அவன் பெற்றுக்கொள்ளலாமென அவர்கள் சொன்னார்கள்.1
அப்போது சமீபத்தில் உருவாக்கப்பட்ட போட்ஸ்வானா, ஆப்ரிக்காவின் மோசுடி கிளைக்கு ஆன்ட்ரே தனியாக சென்று கலந்துகொண்டான். 40 அங்கத்தினர்கள் அடங்கிய அந்தக் கிளை ஒரு அன்பான, இறுக்கமாக பிணைந்த குழுவாயிருந்தது.2 திறந்த கரங்களுடன் அவர்கள் ஆன்ட்ரேயை வரவேற்றனர். ஊழியக்காரரின் பாடங்களை அவன் பெற்று ஞானஸ்நானம் அடைந்தான். அது அற்புதமாயிருந்தது!
ஆனால் பின்னர் என்ன? ஆன்ட்ரே எவ்வாறு ஈடுபாட்டுடன் இருக்கமுடியும்? உடன்படிக்கை பாதையினூடே முன்னேற யார் அவனுக்கு உதவக்கூடும்? அவனுடைய ஆசாரியத்துவ குழுமம் என்பதே அந்தக் கேள்விக்கு ஒரு பதில்!3
அவரது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஒவ்வொருவரும் ஒரு பெலமான குழுமத்திலிருந்து பயன் பெறுகிறார்கள். ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற என்னுடைய இளம் சகோதரர்களே, ஒவ்வொரு இளம் வாலிபனுக்கும் ஒரு சொந்த இடமான, கர்த்தரின் ஆவி இருக்கிற ஒரு இடமான, அனைத்து குழும அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு மதிக்கப்படுகிற ஒரு இடமான ஒரு வலுவான குழுமத்தை நீங்கள் அமைக்க கர்த்தர் வைத்திருக்கிறார். அவருடைய பிள்ளைகளை கர்த்தர் கூட்டிச் சேர்க்கும்போது சொந்தமாயிருக்கவும் வளரவும் அவர்களுக்கு ஒரு இடம் வேண்டும்.
குழுமத் தலைமை அங்கத்தினர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்த்துதலை நாடும்போது,4 அனைத்து குழும அங்கத்தினர்களுக்கு மத்தியில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும்போது நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள். புதிய அங்கத்தினர்களுக்கு, ஈடுபாடு குறைந்தவர்களுக்கு அல்லது விசேஷித்த தேவையுள்ளவர்களுக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறீர்கள்.5 ஆசாரியத்துவ வல்லமையுடன் நீங்கள் ஒரு வலுவான குழுமத்தைக் கட்டுகிறீர்கள்.6 ஒரு வலுவான ஐக்கியமான குழுமம் ஒரு இளம் மனிதனின் வாழ்க்கையில் அனைத்து வேறுபாட்டையும் உண்டாக்குகிறது.
சுவிசேஷக் கற்றுக்கொள்ளுதலில் புதிதாக, வீட்டை மையப்படுத்திய கவனத்தை சபை அறிவித்தபோது சிலர், ஆன்ட்ரேயைப்போன்ற அங்கத்தினர்களை நினைத்து ,கேட்டார்கள், “சுவிசேஷம் படிக்கப்படாத, சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவோ அதன்படி வாழவோ சூழ்நிலையில்லாத ஒரு குடும்ப சூழ்நிலையிலிருந்து வருகிற வாலிபர்கள் என்ன செய்வார்கள்?7 அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்களா?”
இல்லை! யாரும் பின்னுக்குத் தள்ளப்படுவதில்லை! ஒவ்வொரு வாலிபனையும் ஒவ்வொரு இளம் பெண்ணையும் கர்த்தர் நேசிக்கிறார். ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற நாம் கர்த்தரின் கைகளிலிருக்கிறோம். வீட்டை மையப்படுத்துகிற முயற்சிகளில் நாம் சபைக்கு ஆதரவாயிருக்கிறோம். வீட்டில் குறைவான ஆதரவு இருக்கும்போது ஆசாரியத்துவக் குழுமங்களும் பிற தலைவர்களும் நண்பர்களும் கண்காணித்து தேவைக்கேற்றார்போல ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் குடும்பத்தையும் ஆதரிப்பார்கள்.
அது வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அதை நான் அனுபவித்திருக்கிறேன். எனக்கு ஆறு வயதாயிருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்து என்னுடைய தகப்பன் ஐந்து இளம் பெண்களுடன் என் தாயை விட்டுச் சென்றார். எங்களைக் கவனித்துக்கொள்ள என்னுடைய தாய் வேலை செய்ய ஆரம்பித்தார். ஒரு காலகட்டத்தில் அவர் இரண்டாவது வேலை செய்யவும் கூடுதலான கல்வி கற்கவும் வேண்டியதிருந்தது. வளர்ப்பதற்கு அவருக்கு குறைவான நேரமே இருந்தது. ஆனால் தாத்தா பாட்டிகளும், மாமாமார்களும், அத்தைமார்களும், ஆயர்களும் வீட்டுப்போதகர்களும் என்னுடைய தேவதை தாய்க்கு உதவ முன்வந்தார்கள்.
எனக்கு ஒரு குழுமம் இருந்தது. என்னை நேசித்து ஆதரவளித்த என்னுடைய சகோதரர்களான என்னுடைய நண்பர்களுக்காக நான் மிக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்னுடைய குழுமம் சொந்த இடமாயிருந்தது. என்னுடைய குடும்ப சூழ்நிலையால் சிலர் என்னை தாழ்வாகவும் பின்தங்கியவனாகவும் கருதினார்கள். ஒருவேளை நான் அப்படியிருந்திருக்கலாம். ஆனால் ஆசாரியத்துவக் குழுமங்கள் அந்த முரண்பாடுகளை மாற்றியது. என்னுடைய குழுமம் என்னைச் சுற்றி திரண்டு அளவிடமுடியாத அளவுக்கு என்னுடைய வாழ்க்கையை ஆசீர்வதித்தனர்.
நம் எல்லோரையும் சுற்றி தாழ்வுகளும் பின்தங்குதல்களுமிருக்கின்றன. ஒருவேளை நாம் அனைவரும் ஒன்று அல்லது வேறு வழியிலிருக்கிறோம். ஆனால் இங்கே வலிமை பெறவும் வலிமை அளிக்கவும் ஒரு இடமான, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குழுமம் இருக்கிறது. குழுமம் என்பது அனைவருக்கும் ஒன்று, ஒன்று அனைவருக்கும்8 ஒருவருக்கொருவர் அறிவுறுத்தவும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும், தேவனுக்கு நாம் சேவை செய்வதில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தைக் கட்டவும் இது ஒரு இடமாயிருக்கிறது.9 அற்புதங்கள் நடக்கிற ஒரு இடமாக இது இருக்கிறது.
மோச்சுடியில் ஆன்ட்ரேயின் குழுமத்தில் நடந்த சில அற்புதங்களைப்பற்றி உங்களுக்குச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். இந்த எடுத்துக்காட்டை நான் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுக்கு பொருந்துகிற ஒவ்வொரு ஆசாரியத்துவக் குழுமத்தையும் பெலப்படுத்துகிற கொள்கைகளைக் கவனியுங்கள்.
ஆன்ட்ரே ஞானஸ்நானம் பெற்ற பின்பு பிற நான்கு வாலிபர்களுக்கு ஊழியக்காரர்கள் போதித்தபோது அவர்களுடன் இவனும் கூடச்சென்று அவர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். இப்போது அங்கே ஐந்து வாலிபர்களிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவரும் கிளையையும் பெலப்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஆறாவது வாலிபனான தூஸோவும் ஞானஸ்நானம் பெற்றான். அவனுடைய மூன்று நண்பர்களுக்கு தூஸோ சுவிசேஷத்தைப் பகிர்ந்து விரைவிலேயே அங்கே ஒன்பது பேர் இருந்தனர்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அவர்களுடைய நண்பர்களால் அழைக்கப்பட்டபோது ஒரு நேரத்தில் ஒருவராக, இந்த வழியிலேயே அடிக்கடி கூடிச் சேர்ந்தனர். பண்டைக்காலத்தில் அந்திரேயா இரட்சகரைக் கண்டபோது அவன் விரைவாக அவனுடைய சகோதரனான சீமோனிடத்தில் சென்று அவனை இயேசுவினடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான்.10 அதைப் போன்றே, பிலிப்பு கிறிஸ்துவைப் பின்பற்றுபவனாக மாறிய பின்பு விரைவிலேயே அவனுடைய நண்பனான நாத்தான்வேலை அழைத்து, “வந்து பார் என்றான்”11
மோசுடியில் 10வது வாலிபன் சீக்கிரமே சபையில் சேர்ந்தான். 11வது நபரை ஊழியக்காரர்கள் கண்டுபிடித்தனர். அவனுடைய நண்பர்களிடத்தில் சுவிசேஷத்தின் பாதிப்பை கண்டபின்பு 12வது வாலிபன் ஞானஸ்நானம் பெற்றான்.
மோசுடியின் கிளை அங்கத்தினர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த வாலிபர்கள் கர்த்தரிடத்தில் மனமாறி, சபைக்குள் இணைந்தார்கள்.12
அவர்களுடைய மனமாறுதலில் மார்மன் புஸ்தகம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியது.13 “வீட்டில், பள்ளிக்கூடத்தில், எல்லா இடங்களிலும் நான் சுதந்தரமாக இருந்த ஒவ்வொரு முறையும் மார்மன் புஸ்தகத்தை நான் படிக்க ஆரம்பித்தேன்” என தூஸோ நினைவுகூருகிறான்.14
அவனுடைய நண்பர்களின் எடுத்துக்காட்டால், ஓரடைல் சுவிசேஷத்திற்கு இழுக்கப்பட்டான். “ஒரு விரல் சொடுக்கில் [அவர்கள்] மாறியதாகத் தோன்றுகிறது என அவன் விவரிக்கிறான். பள்ளியைச் சுற்றி அவர்கள் எடுத்துச் சென்ற சிறிய புஸ்தகம் அதைச் செய்தது என நான் நினைத்தேன் அவர்கள் என்ன ஒரு நல்ல மனிதர்களானார்கள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. . . நானும்கூட மாறவேண்டும்”.15
அனைத்து 12 வாலிபர்களும் கூடிச்சேர்ந்து, ஒருவருக்கொருவர் இரண்டு ஆண்டுகளுக்குள் ஞானஸ்நானம் பெற்றார்கள் அவனுடைய குடும்பத்தில் ஒவ்வொருவரிலும் அவன் ஒருவன் மட்டுமே சபை அங்கத்தினர். ஆனால் அவர்களுடைய கிளைத் தலைவர், தலைவர் ராக்வெல்லாவையும்,16 மூத்த ஊழிய தம்பதியான மூப்பரையும் சகோதரி டெய்லரையும்,17 கிளையின் பிற அங்கத்தினர்களையும் சேர்த்து அவர்களின் சபை குடும்பத்தால் அவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள்.
ஒரு குழும தலைவரான சகோதரர் இளையவர்18 ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் வாலிபர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை அறிவுறுத்தினார். வாலிபர்கள் வேதங்களை ஒன்றுகூடி படித்து வழக்கமாக குடும்ப இல்ல மாலைகளை நடத்தினார்கள்.
அங்கத்தினர்களை, ஊழியக்காரர்களால் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை, ஒரு சந்திப்பு தேவையாயிருக்கிறவர்களை சந்திக்க, சகோதரர் இளையவர் அவர்களை அழைத்துச் சென்றார். 12 வாலிபர்கள் அனைவரும் சகோதரர் இளையவரின் வாகனத்தின் பின்னால் குவிந்தனர். இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டாளிகளாக வீடுகளில் அவர்களை இறக்கிவிட்டு பின்னர் அவர்களை அழைத்துச் சென்றார்.
சுவிசேஷத்தைப்பற்றி வாலிபர்கள் அப்போதுதான் கற்றுக்கொண்டிருந்தாலும், அவர்கள் மிகவும் அதிகமாக அறிந்ததாக உணராதிருந்தாலும், அவர்கள் சந்தித்த மக்களுக்கு அவர்களுக்குத் தெரிந்த ஒன்று அல்லது இரண்டு காரியங்களை பகிர்ந்துகொள்ள சகோதரர் இளையவர் அவர்களுக்கு கூறியிருந்தார். ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற இந்த வாலிபர்கள் போதித்தனர், ஜெபித்தனர், சபையைக் கண்காணிக்க உதவினார்கள்.19 தங்களுடைய ஆசாரியத்துவ பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றினார்கள், சேவையின் சந்தோஷத்தை அனுபவித்தனர்.
“நாங்கள் ஒன்றுகூடி விளையாடினோம், ஒன்றுகூடி சிரித்தோம், ஒன்றுகூடி அழுதோம், சகோதரத்துவமாக மாறினோம்” என ஆன்ட்ரே சொன்னான்.20 உண்மையில், அவர்கள் தங்களையே “சகோதரர்களின் குழு” என அழைக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் ஊழியம் செய்யும்படியாக ஒரு இலக்கை ஒன்றுகூடி எடுத்தார்கள். அவர்களுடைய குடும்பங்களில் அவர்கள் மட்டுமே அங்கத்தினர்களாயிருப்பதால் சமாளிக்க அவர்களுக்கு அநேக தடைகளிருந்தன ஆனால் அவர்கள் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவினர்.
ஒருவர் பின் ஒருவராக வாலிபர்கள் ஊழிய அழைப்பைப் பெற்றார்கள். முதலில் ஊழியத்திற்குச் சென்றவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, ஊழியம் செய்ய அவர்களை ஊக்குவித்து அவர்கள் வீட்டிற்கு கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தனர். வாலிபர்களில் பதினோரு பேர் ஊழியம் செய்தார்கள்.
இந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்தனர். தாய்மார்கள், சகோதரிகள், சகோதரர்கள், அப்படியே தங்களுடைய ஊழியங்களில் அவர்கள் போதித்த மக்கள் மனமாறி ஞானஸ்நானம் பெற்றார்கள். அற்புதங்கள் நடந்தன, எண்ணமுடியாதவர்களின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டன.
ஒருவேளை இஸ்ரவேலின் கூடிச்சேர்தல் துரிதமாயிருக்கிற வளமான களமான ஆப்ரிக்கா பேன்ற இடத்தில் மட்டுமே இத்தகைய அற்புதம் நடக்குமென உங்களில் சிலர் நினைப்பது எனக்குக் கேட்கிறது. எப்படியாயினும் மோசுடி கிளையில் பொருந்துகிற கொள்கைகள் எங்கும் உண்மையென நான் சாட்சியளிக்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், இயக்கம் மற்றும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் மூலமாக உங்கள் குழுமம் வளரமுடியும். ஒ்ரு சீஷன் ஒரு நண்பனை அணுகுதலில் ஒன்று இரண்டாகலாம். இருவர் நான்கு பேராகலாம். நான்கு பேர் எட்டாகலாம். எட்டு பேர் பன்னிரண்டாகலாம். கிளைகள் தொகுதிகளாக மாறலாம்.
எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது [அல்லது அதிகமானோர்]எனது நாமத்தினாலே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என இரட்சகர் போதித்தார்.21 நம்மைச் சுற்றியிருக்கிற அனைத்து மக்களின் மனங்களையும் இருதயங்களையும் பரலோக பிதா ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் உணர்த்துதலை நாம் பின்பற்றி, ஐக்கியத்தின் கரங்களை நீட்டி, மார்மன் புஸ்தகத்தை வாசிக்க மற்றவர்களை அழைத்து நமது இரட்சகரைப்பற்றி அவர்கள் அறிய வரும்போது அவர்களை நேசித்து ஆதரிக்கலாம்.
மோசுடியின் சகோதரர்களின் குழு ஒன்றுசேர்ந்து தங்கள் பயணத்தை ஆரம்பித்து, ஏறக்குறைய 10 ஆண்டுகளாகிவிட்டன.
“தூரத்தால் நாம் பிரிக்கப்படலாம் ஆனால் இன்னமும் நாம் ஒருவருக்கொருவராயிருக்கிறோம்” எனக் காட்லேகோ சொன்னார்.22
ஒவ்வொரு குழுமமும் ஒரு சொந்த இடமாக, கூடிச்சேர்தலின் இடமாக, வளருகிற இடமாக இருக்கும்படியாக நமது ஆசாரியத்துவ குழுமங்களில் அவரோடு ஐக்கியமாயிருக்க கர்த்தரின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது என்னுடைய ஜெபம்.
இயேசு கிறிஸ்து நமது இரட்சகர், இது அவருடைய பணி. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.