கர்த்தரின் திரும்ப வருதலுக்கு ஆயத்தம் செய்தல்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு தேவையான ஆயத்தங்களை செய்ய தனித்துவமாக வல்லமையளிக்கப்பட்ட ஆணையளிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களில் நாம் ஈஸ்டர் கொண்டாடுவோம். உயிர்த்தெழுதல் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம் பற்றியும், பிதாவாகிய தேவன் இருப்பது பற்றியும் உறுதி செய்கிறது. நமது எண்ணங்கள் இரட்சகரிடம் திரும்புகின்றன, மற்றும் நாம் “அவரது ஒப்பில்லா வாழ்க்கையையும், அவரது மாபெரும் பாவ நிவாரண பலியின் எல்லையற்ற நற்பண்புகளையும் பற்றி நாம் சிந்திக்கிறோம்.“1 “அவர் இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் ஆளுகை செய்யும்போது,“ அவரது திரும்ப வருதல் எஞ்சியிருப்பதையும் நாம் நினைக்கிறோம் என நான் நம்புகிறேன்.2
சிறிது காலத்துக்கு முன்பு, அர்ஜெண்டினாவின் போனஸ் அயர்ஸில் நான் பல்வேறு மத நம்பிக்கையுள்ள தலைவர்களுடன் ஒரு மாநாட்டில் பங்கேற்றேன். சக மனுஷரிடம் அவர்களது அன்பு தவறற்றது. கஷ்டங்களிலிருந்து விடுவிப்பதும், ஜனங்கள் ஒடுக்கப்படுவதிலிருந்தும், வறுமையிலிருந்தும் மீண்டு எழ உதவி செய்வதை அவர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு விசுவாச குழுக்களுடன் இணைந்த திட்டங்கள் உள்ளிட்ட, சபையின் பல்வேறு மனிதாபிமான செயல்பாடுகளை நான் நினைவுபடுத்தினேன். இப்படிப்பட்ட கிறிஸ்து போன்ற சேவையை சாத்தியமாக்குகிற, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களின் பெருந்தன்மைக்காக நான் நன்றியை உணர்ந்தேன்.
அந்த தருணத்தில் பரிசுத்த ஆவியானவர் எனக்கு இரண்டு காரியங்களை உறுதிப்படுத்தினார். முதலாவது, உலகப்பிரகார தேவைகளுக்கான ஊழியப்பணி முக்கியம் மற்றும் தொடர வேண்டும். இரண்டாவது எதிர்பாராதது, ஆயினும் வல்லமையானதும் தெளிவானதுமாகும். இந்த தன்னலமற்ற சேவைக்கு அப்பால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு உலகத்தை ஆயத்தப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
அவர் வரும்போது, எதிர்ப்பும் அநீதியும் குறைவது மட்டுமல்ல, அவை மறையும்.
ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், சிறுத்தைப் புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக் கொள்ளும். கன்றுக்குட்டியும் பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும், ஒரு சிறு பிள்ளை அவைகளை நடத்துவான்.
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடு செய்வாருமில்லை, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பதுபோல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.3
வறுமையும் கஷ்டமும் குறைவது மட்டுமல்ல, மறையும்.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது அவர்கள்மேல் படுவதுமில்லை.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றண்டைக்கு நடத்துவார். தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.4
மரணத்தின் வேதனையும் துக்கமும்கூட மாற்றப்படும்.
அந்த நாளில் மூப்படையும்வரை குழந்தை மரிப்பதில்லை, அவனது வயது மரத்துக்கு ஒப்பானதாக இருக்கும்.
அவன் மரிக்கும்போது, அவன் தூங்குவதில்லை, அதாவது பூமியில், ஆனால் கண் இமைப்பில் மாற்றப்படுவார்கள், எடுத்துக்கொள்ளப்படுவார்கள், அவனது இளைப்பாறுதல் மகிமையானதாக இருக்கும்.5
ஆகவே ஆம், பாடுகளையும் துக்கத்தையும் போக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோமாக,மற்றும் வேதனையும் தீமையும் மொத்தமாக முடியும் நாளுக்காக, “பூமி மீது கிறிஸ்து தாமே ஆளுகை செய்யும் நாளுக்காக, பூமி புதுப்பிக்கப்பட்டு தன் பரதீசின் மகிமையை பெறும் நாளின்“ ஆயத்தங்களுக்காக நம்மை முற்றிலும் கருத்தாய் அர்ப்பணிப்போமாக.6 அது மீட்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் நாளாக இருக்கும். அநீதியை ஜெயிக்கவும், எல்லாவற்றையும் சரிசெய்யவும், கிறிஸ்துவின் பாவநிவர்த்தியையும், உயிர்த்தெழுதலையும், நியாயத்தீர்ப்பையும் பற்றிய முக்கியத்துவத்தை, ஆங்க்லிகன் டுர்ஹாம் சபையின் பேராயர், டாக்டர் என். டி. ரைட் பொருத்தமாக விவரித்தார்.
அவர் நியமித்திருக்கிற ஒருவரால், உலகம் நியாயமாக தீர்க்கப்படும் நாளை அவர் தீர்மானித்திருக்கிறார்--அதுபற்றி மரித்தோரிலிருந்து இந்த மனுஷனை உயிரோடெழுப்பி, அவர் உறுதியளித்திருக்கிறார். நாசரேத்தின் இயேசு மற்றும் விசேஷமாக மரித்தோரிலிருந்து அவரது உயிர்த்தெழுதல் பற்றிய உண்மைகள், உலகம் எதார்த்தமானதல்ல எனும் உறுதியின் அஸ்திவாரம் ஆகும். முடிவாக அது குழப்பமல்ல, தற்போதைய சூழலில் நாம் நியாயம் செய்யும்போது, நாம் இருட்டில் விசில் அடிக்கவில்லை, முடிவாக இடியப்போகும் கட்டிடத்தை காப்பாற்ற முயலவில்லை, அல்லது உடைந்த பொருட்குவியலில் போடப்படவேண்டிய காரை சரிசெய்யவில்லை. மரித்தோரிலிருந்து இயேசுவை தேவன் எழுப்பியபோது, அது உலகத்தில் ஒரு மிகச்சிறிய நிகழ்வு, அது உலகின் பெரிய நிகழ்வான நியாயத்தீர்ப்பில், ஒரு விதையாக, முடிவான நம்பிக்கையான ஒரே விதையாக ஒரு கொட்டைக்குள் அடங்கியிருக்கிறது. தேவன் அறிவித்தார், கற்பனை செய்ய மிக வல்லமையான விதத்தில், நாசரேத்தின் இயேசு உண்மையான மேசியா. ... வரலாற்றின் மிகப்பெரிய நிகழ்வில், இயேசு தாமே கொடிய அநீதியான தீர்ப்பை பெற்று, வரலாற்றின் அதிகமான கொடுமைகளையும், அநியாயங்களையும் அடையாளமாகவும் ஒன்றாகவும் கூட்டிச் சேர்க்குமிடத்துக்கு வந்து, அந்த குழப்பத்தையும், இருளையும், கொடுமையையும், அநீதியையும் தம்மிலும் அதன் வல்லமையை வீணாக்கினார்.7
நான் முன்பு குறிப்பிட்ட போனஸ் அயர்ஸ் மாநாட்டிலிருக்கும்போது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு தேவையான ஆயத்தங்களை செய்ய பெலனளிக்கப்பட்டு, அணையளிக்கப்பட்டிருக்கிறது, என ஆவி எனக்குத் தெளிவுபடுத்தியது. உண்மையாக அந்த நோக்கத்துக்காகத்தான் இது மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட, காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலமான அதில் தேவனின் நோக்கமாயிருக்கிற கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டிச் சேர்க்கும்8 இந்த யுகத்தை சார்ந்துள்ள ஜனத்தை எங்காவது நீங்கள் காண முடியுமா. அந்த நாளுக்காக ஆயத்தம் செய்ய ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நிறைவேற்றப்பட தேவையானவற்றை நிறைவேற்றும் நோக்கமுடைய சமுதாயத்தைக் காணாவிட்டால், கர்த்தரை வரவேற்க தயாராக இருக்கிற, அதிக அளவில் பணத்தையும், நேரத்தையும் ஒரு உடன்படிக்கையின் ஜனத்தைக் கூட்டிச் சேர்க்க ஒப்புக்கொடுக்கிற அமைப்பை நீங்கள் இங்கே காணாவிட்டால் வேறு எங்கும காண மாட்டீர்கள்.
1831ல் சபையிடம் பேசும்போது கர்த்தர் அறிவித்தார்:
“தேவ இராஜ்யத்தின் திறவுகோல்கள் பூமியிலுள்ள மனுஷரிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து சுவிசேஷம் உலகத்தின் கடையாந்திரம் வரைக்கும் செல்லும். …
“பூமியின் மீது அவரது இராஜ்யம் போகும்படிக்கும், அதிலிருப்பவர்கள் அதைப் பெறும்படிக்கும், வரவிருக்கிற நாளுக்காக ஆயத்தப்பட்டிருக்கவும், அப்போது மனுஷ குமாரன் பரலோகத்திலிருந்து, அவரது மகிமையின் பிரகாசத்தில் வஸ்திரம் தரித்து, பூமியில் அமைக்கப்பட்ட தேவ இராஜ்யத்தை சந்திக்க வருவார் என கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்.“9
அந்த நாளுக்காக இப்போது ஆயத்தம் செய்ய நாம் என்ன செய்ய முடியும்? ஒரு ஜனமாக நாம் நம்மை ஆயத்தப்படுத்தலாம், நாம் கர்த்தரின் உடன்படிக்கையின ஜனத்தை கூட்டிச் சேர்க்கலாம், நமது முன்னோராகிய “பிதாக்களுக்கு செய்யப்பட்ட“ இரட்சிப்பின் வாக்குத்தத்தத்தை மீட்க உதவ நாம் உதவ முடியும்.10 கர்த்தர் மீண்டும் வருவதற்கு முன் அதிகமான அளவில் இது நடக்க வேண்டும்
கர்த்தரின் வருகைக்கு முக்கியம், அவரது வருகையின்போது அவரை வரவேற்க ஆயத்தமான ஜனம் பூமியில் இருப்பதாகும். அந்த நாளில் பூமியில் இருக்கக்கூடிய ஜனம், “சிறியவர் முதல் பெரியோர் வரை, கர்த்தரைப் பற்றிய அறிவினால் நிரப்பப்படுவார்கள், கண்ணுக்கு கண் பார்த்து, தங்கள் குரலை உயர்த்துவார்கள், அக்குரலோடு இப்புதிய பாடலைப் பாடுவார்கள், கர்த்தர் மீண்டும் சீயோனைக் கொண்டு வந்திருக்கிறார்,“ என சொல்லியிருக்கிறார். கர்த்தர் எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டியிருக்கிறார். கர்த்தர் சீயோனை உன்னதத்திலிருந்து கீழே கொண்டு வந்திருக்கிறார். கர்த்தர் கீழேயிருந்து சீயோனைக் கொண்டு வந்திருக்கிறார்.11
பூர்வ காலத்தில், கர்த்தர் தாமே நீதியான பட்டணமாகிய சீயோனை எடுத்துக் கொண்டார்.12 மாறாக, அவரது வருகையில் கர்த்தரை ஒரு புதிய சீயோன் கடைசி நாட்களில் வரவேற்கும்.13 சீயோன் இருதயத்தில் பரிசுத்தமானது. அவர்களுக்குள்ளே தரித்திரர் இல்லாமல், நீதியில் தரித்திருக்கிற ஒரே இருதயமும் ஒரே மனதும் உள்ள ஜனம்,14 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார், “நமது மாபெரும் நோக்கமாக சீயோனைக் கட்டுவதையே வைத்திருக்க வேண்டும்.“15 ஒற்றுமை, தெய்வ தன்மை, மற்றும் தயாளத்தின் மூலம் நாம் சீயோனை நமது வீடுதளிலும், தொகுதிகளிலும், கிளைகளிலும், பிணையங்களிலும் கட்டுகிறோம்.16
“கோபத்தின் நாளிலே, எரிகிற நாளிலே, பாழான நாளிலே, அழுகை மற்றும் துக்கம் மற்றும் புலம்பலின் நாளிலே --பூமியதிர்ச்சி சமயத்தில் சீயோனைக் கட்டுதல் நடக்கும் என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுழல் காற்று போல பூமியின் மீது இது வரும் என கர்த்தர் சொல்கிறார்.“17 அவ்வாறு பிணையங்களின் கூடுகை, “பூமி முழுவதும் கலப்பில்லாமல் கோபத்தில் அது பொழியப்படும்போது, பாதுகாப்புக்காகவும், புயலிலிருந்து அடைக்கலமாகவும் “ஆகிறது.18
முற்காலத்தைப் போலவே, “சபை உபவாசிக்கவும், ஜெபிக்கவும், நமது ஆத்தும நலனைக்குறித்து ஒருவருக்கொருவர் பேசவும் அடிக்கடி ஒன்றாய்க் கூடியது, கர்த்தராகிய இயேசுவை நினைவுகூரும்படியாக, அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் புசிக்க அடிக்கடி கூடினார்கள்.“19 கடந்த அக்டோபரில் பொது மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கியது போல, “சபையின் நீண்ட கால நோக்கம், அங்கத்தினர் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவ நிவர்த்தியிலும் விசுவாசத்தில் வளர உதவியும், தேவனோடு தங்கள் உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்ளவும், அவர்களது குடும்பங்களை பெலப்படுத்தி முத்திரிக்கவும் உதவி செய்வதே.“20 அதுபோல, ஆலய உடன்படிக்கைகள், ஓய்வுநாள், வீட்டில் சுவிசேஷத்தை தினமும் ருசித்தல், சபையில் ஒரு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தால் ஆதரிக்கப்படலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். நாம் கர்த்தரைப் பற்றி அறிய வேண்டும், கர்த்தரையும் அறிய வேண்டும்.21
சீயோனைக் கட்டுவதில் இழையோடும் முயற்சி, கர்த்தரின் உடன்படிக்கையின் ஜனத்தை கூட்டிச் சேர்ப்பதாகும்.22 நாம் இஸ்ரவேலின் மெய்யான ஒன்றுசேர்தலையும், கோத்திரங்களின் நிலைப்படுதலையும் விசுவாசிக்கிறோம்23 மனந்திரும்புகிற, கிறிஸ்துவை நம்புகிற, ஞானஸ்நானம் பெறுகிற யாவரும் அவரது உடன்படிக்கையின் ஜனம்.24 அவர் திரும்ப வருவதற்கு முன், உலகமெங்கிலும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும்,25 “இஸ்ரவேலின் வீட்டாராகிய தன் ஜனத்தை மீட்கவும்“26 “பின்னர் முடிவு வரும்,“27 என கர்த்தர் தாமே தீர்க்கதரிசனமுறைத்திருக்கிறார். எரேமியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்கிறது.
“ஆதலால் இதோ நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் பண்ணாமல்,
“இஸ்ரவேல் புத்திரரை வட தேசத்திலும், தாம் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின, கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியம் பண்ணுவார்கள். நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.“28
இன்று பூமியில் நடக்கிற மிக முக்கிய காரியம் இஸ்ரவேலின் கூடுகை என தலைவர் நெல்சன் திரும்ப திரும்ப வலியுறுத்தினார். அதன் வேகத்துக்கு எதுவும் ஒத்ததல்ல, அதன் முக்கியத்துவத்துக்கு எதுவும் இணையல்ல, அதன் மகத்துவத்துக்கு எதுவும் இணையல்ல. நீங்கள் தெரிந்து கொண்டால்,... நீங்கள் இதன் பங்காக இருக்கலாம்.29 பிற்காலப் பரிசுத்தவான்கள் எப்போதுமே ஊழியக்கார ஜனமாக இருந்திருக்கிறார்கள். மறுஸ்தாபிதத்தின் தொடக்கத்திலிருந்தே, ஆயிரக்கணக்கானோர் ஊழிய அழைப்புக்கு பதிலளித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் இப்போது சேவை செய்கின்றனர். மூப்பர் க்வெண்டின் எல். குக் இப்போது போதித்தபடி, நாம்அனைவரும் எளிய இயற்கையான வழிகளில், அன்போடும் சபையில் நம்மோடு சேர பிறரை வரவேற்று, நமது வீடுகளுக்கு வரவும், நமது சுற்றுக்குள் பாகமாகவும் பங்கேற்கலாம். மார்மன் புத்தகத்தின் பிரசுரம் கூடுகை தொடங்கிவிட்டது என்பதன் சமிக்ஞை.30 மார்மன் புத்தகமே கூடுகைக்கும், மனமாற்றத்துக்கும் கருவிதான்.
மேலும் இரண்டாம் வருகையின் ஆயத்தத்துக்கு முக்கியமானது, நமது முன்னோர்களுக்கான மாபெரும் மீட்கும் முயற்சி. “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமானதுமான நாளான,“ இரண்டாம் வருகைக்கு முன் 31“ஆசாரியத்துவத்தை வெளிப்படுத்தவும்“, “பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களிலே வைக்க“32 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எலியாவை அனுப்ப வாக்களித்தார். வாக்களிக்கப்பட்டபடி எலியா வந்தான். அந்த தேதி ஏப்ரல் 3, 1836. அந்த இடம் கர்த்லாந்து ஒஹையோ ஆலயம். அந்த இடத்தில் அந்த தருணத்தில், அவர் உண்மையாகவே மரித்தோரின் மீட்புக்கான திறவுகோல்களையும், இக்காலத்துக்கும் நித்தியம் முழுமைக்கும் தலைமுறைகள்தோரும் கணவர்களையும், மனைவிகளையும், குடும்பங்களையும் இணைக்க ஆசாரியத்துவத்தை அருளினார்.33 இது இல்லையானால், சிருஷ்டிப்பின் நோக்கம் தடைபட்டிருக்கும், அந்த வகையில் பூமி சபிக்கப்பட்டு, முற்றிலும் வீணாகியிருக்கும்.34
ரோம் இத்தாலி ஆலய அர்ப்பணிப்புக்கு முன், இளைஞர் ஆராதனையில், வந்திருந்த ஆயிரக்கணக்கான வாலிபர்களும் இளம்பெண்களும், தங்கள் முன்னோர்களின் பெயர்களுடன் தயாரிக்கப்பட்ட அட்டைகளை தலைவர் நெல்சனுக்கு காட்டினர். அது திறக்கப்பட்ட உடனே, அந்த முன்னோருக்கு, பதிலி ஞானஸ்நானம் நிறைவேற்ற ஆலயத்தினுள் நுழைய அவர்கள் தயாராக இருந்தார்கள். அது மிகவும் மனநிறைவு தருகிற தருணம். இருப்பினும் முன்னே சென்றுள்ள தலைமுறைகளுக்கு, சீயோனை ஸ்தாபிக்க விறைவான முயற்சியின் ஒரு உதாரணம்.
கர்த்தரின் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கூட்டிச்சேர்ப்பதிலும், மரித்தோரின் மீட்பிலும், நமது பங்கு உள்ளிட்ட சீயோனைக் கட்ட நாம் கருத்தாய் முயலும்போது, இது கர்த்தரின் பணி, அவர் இதைச் செய்கிறார் என நாம் நினைவுகொள்ள வேண்டும். அவர் திராட்சைத் தோட்டத்தின் எஜமான், நாம் அவரது கூலியாட்கள். இந்த கடைசி முறை நமது பெலத்துடன் திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்பட அவர் நம்மை ஏவுகிறார், அவரும் நம்மோடு பிரயாசப் படுகிறார்.35 அவருடன் பிரயாசப்பட நம்மை அனுமதிக்கிறார் என சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். பவுல் சொன்னதுபோல, “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், தேவனோ விளையச் செய்தார்.“36 அவரது பணியை அதன் வேளையில் விரைவுபடுத்துவது அவரே.37 நமது பரிபூரணமற்ற முயற்சிகளையும், எளிய வழிகளையும் உபயோகித்து, கர்த்தர் பெரிய காரியங்களை நடத்துகிறார்.38
இந்த பெரிதும் கடைசியுமான ஊழியக்காலம், உறுதியாக தன் இறுதிக்கட்டத்தை கட்டுகிறது-- பூமியின் மீது சீயோன், இரட்சகரின் மகிமையான வருகையில் உன்னதத்திலுள்ள சீயோனோடு இணையும். இயேசு கிறிஸ்துவின் சபை ஆயத்தம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது--அந்த நாளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், அது கொடுக்கிற அனைத்தையும் இந்த ஈஸ்டரில் நாம் கொண்டாடுவோமாக: சமாதானமிக்க ஆயிரம் ஆண்டு அரசாட்சிக்கு அவர் திரும்ப வருதல், ஒரு நீதியான தீர்ப்பு, அனைவருக்கும் பரிபூரண நீதி, இப்பூமியில் வாழ்ந்த அனைவருக்கும் அழியாமை, நித்திய ஜீவனின் வாக்குத்தத்தம். இது எல்லாம் சரிசெய்யப்படும் என்ற இறுதியான உறுதிமொழி. அந்த நாளை விரைவுபடுத்த நாம் சீயோனைக் கட்டுவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.