2010–2019
மனந்திரும்புதலால் கழுவப்பட்டு
ஏப்ரல் 2019 பொது மாநாடு


மனந்திரும்புதலால் கழுவப்பட்டு

தேவனின் திட்டம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம், மனந்திரும்புதலின் முறையால் நாம் கழுவப்படலாம்.

அநித்தியத்தில் நாம் மனிதனின் சட்டங்களுக்கும், தேனின் நியாயப்பிரமாணங்களுக்கும் கட்டுப்பட்டிருக்கிறோம். முன்பு யூட்டா உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாகவும், இப்போது பிரதான தலைமையின் அங்கத்தினராகவும் இந்த இரண்டு சட்டங்களின் கீழும் கடுமையான துர்நடத்தைகளை நியாயந்தீர்க்கும் வழக்கத்துக்கு மாறான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். மனிதனின் சட்டங்களுக்கும் தேவனின் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் உண்மை மற்றும் வல்லமை மீது எனது பாராட்டை விரிவாக்கியிருக்கிறது. மனிதனின் சட்டப்படி, மிக கடுமையான குற்றம் செய்தவன், பரோல் சாத்தியமில்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஆனால் அன்புமிக்க பரலோக பிதாவின் இரக்கமிக்க திட்டத்தின் கீழ், இது வித்தியாசமானது. “நொருங்குண்ட இருதயமும் நருங்குண்ட ஆவியும் உள்ள“ அனைவரின் பாவங்களுக்காக இரட்சகரின் பாவநிவாரண பலியினிமித்தம், அநித்தியத்தில் அதே கடுமையான பாவங்கள் மன்னிக்கப்படலாம் என நான் பார்த்திருக்கிறேன்.2 நேபி 2:7. கிறிஸ்து மீட்கிறார், அவரது பாவநிவர்த்தி உண்மையானது.

நமது இரட்சகரின் அன்பான மனதுருக்கம், இப்போது பாடப்பட்ட பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயேசுவிடம் வாருங்கள், அவர் எப்போதும் செவிகொடுப்பார்.

இருளில் நீங்கள் வழிதவறிப்போனாலும்,

அவரது அன்பு உங்களைக் கண்டுபிடித்து மென்மையாக நடத்தும்

இருண்ட இரவிலிருந்து பகலுக்கு.1

இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி, எல்லா மனுஷரும் மனந்திரும்பவும் அவரண்டை வரவும், வாசலைத் திறக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:11; மேலும் மாற்கு 3:28; 1 நேபி 10:18; ஆல்மா 34:8, 16) பார்க்கவும். துன்மார்க்க இரத்ததாகம் கொண்டவர்களுக்கு கூட மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஆல்மாவின் புத்தகம் அறிவிக்கிறது.(ஆல்மா 25:16; 27:27, 30) பார்க்கவும். சபை நீக்கத்தாலோ, பெயர் நீக்கம் செய்யப்பட்டதாலோ சபை அங்கத்தினரத்துவத்தை இழந்தவர்கள் உள்ளிட்ட நம் அனைவருக்கும் என் செய்தி நம்பிக்கை பற்றியது. நாம் அனைவரும் மனந்திரும்புதலால் கழுவப்படக்கூடிய பாவிகள். “மனந்திரும்புவது எளிதல்ல,“ என ஒரு முந்தய பொது மாநாட்டில் மூப்பர் ரசல் எம். நெல்சன் போதித்தார். “ஆனால் அப்பரிசு விலைக்குத் தகுதியானது.“2

I. மனந்திரும்புதல்

இரட்சகரிடமிருந்து மனந்திரும்புதல் தொடங்குகிறது, அது ஒரு சந்தோஷம், பாரமல்ல. கடந்த டிசம்பர் கிறிஸ்துமஸ் ஆராதனையில் தலைவர் நெல்சன் போதித்தார், “உண்மையான மனந்திரும்புதல் ஒரு நிகழ்ச்சி அல்ல. அது முடிவற்ற சிலாக்கியம். முன்னேற்றத்துக்கும், மன சமாதானத்துக்கும், ஆறுதலுக்கும், சந்தோஷத்துக்கும் அது அடிப்படை.“.3

மனந்திரும்புதல் பற்றிய மாபெரும் போதனைகளில் சில சபையாருக்கு, ஆல்மாவின் மார்மன்புத்தகத்தில் உள்ளன. அவர்கள் பின்னர், “அவநம்பிக்கையிலும்,“ “பெருமையால் உயர்த்தப்பட்டும்,“ அவர்களது இருதயங்கள் “உலகத்தின் ஐஸ்வர்யங்களிலும் வீணான நிலையிலும்“ இருந்ததாக விவரிக்கப்பட்டது.ஆல்மா 7:6. இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் ஆல்மாவின் உணர்த்தப்பட்ட போதனைகளிலிருந்து கற்க வேண்டும்.

நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தில் தொடங்குகிறோம், ஏனெனில் “உலகத்தினுடைய பாவங்களை எடுத்துப்போட வருகிறவர் அவரே.“ஆல்மா 5:48. நாம் மனந்திரும்ப வேண்டும், ஏனெனில் ஆல்மா போதித்ததுபோல, “நீங்கள் மனந்திரும்பாவிடில் பரலோக இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.“(ஆல்மா 5:51). மநந்திரும்புதல் தேவனின் திட்டத்தில் முக்கிய பாகமாகும். அநித்திய அனுபவத்தில் அனைவரும் பாவம் செய்யவிருப்பதாலும், தேவ பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போவதாலும், மனுஷன் மனந்திரும்புதல் இல்லாமல் “இரட்சிக்கப்படுவதில்லை“(ஆல்மா 5:31; மற்றும் ஏலமன் 12:22) பார்க்கவும்.

இது தொடக்கத்திலிருந்தே போதிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் ஆதாமுக்குக் கட்டளையிட்டார், எங்கெங்குமுள்ள எல்லா மனுஷரும் மனந்திரும்ப வேண்டும் என உன் பிள்ளைகளுக்குப் போதி, அல்லது அவர்கள் எந்த வகையிலும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது, ஏனெனில் அவரது பிரசன்னத்தில் எந்த அசுத்தமானதும் தரிததிருக்க முடியாது.மோசே 6:57 தேவ கட்டளைகளுக்கு விரோதமான நமது செயல்கள் அல்லது செயல்படாமையாகிய பாவங்களுக்காக நாம் அனைவரும் மனந்திரும்ப வேண்டும். எவரும் விதிவிலக்கல்ல. கடந்த மாலையில்தான் தலைவர் நெல்சன் நமக்கு சவால் விட்டிருக்கிறார், “சகோதரரே நாம் அனைவரும் மனந்திரும்ப வேண்டும்.“4

மனந்திரும்புதலால் கழுவப்பட நாம் பாவங்களை விட்டுவிட்டு, கர்த்தரிடமும், தேவைப்படும்போது அவருடைய அநித்திய நியாயாதிபதியிடமும் அறிக்கையிட வேண்டும். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:43) பார்க்கவும். நாம் நீதிக்கடுத்த கிரியைகளை நடப்பிக்க வேண்டுமென ஆல்மா போதித்தான்“ (ஆல்மா 5:35). இவை யாவும் கிறிஸ்துவண்டை வர அடிக்கடி வேத அழைப்பின் பாகமாகும்.

ஒவ்வொரு ஓய்வுநாளிலும் நாம் திருவிருந்தில் பங்கேற்க வேண்டும். அதில் நாம் உடன்படிக்கை செய்கிறோம், நாம் அடைய வேண்டுமென இரட்சகர் அழைக்கிற பரிபூரணத்திலிருந்து தடுக்கிற செயல்களையும் விருப்பங்களையும் மேற்கொள்ள உதவுகிற ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம்.(மத்தேயு 5:48; 3 நேபி 12:48) பார்க்கவும். “தெய்வ தன்மையற்ற அனைத்தையும் நாம் மறுத்து, நமது முழு ஊக்கத்தோடும் மனதோடும், பெலனோடும் தேவனை நேசித்து,“ கறைதிறையின்றி பரிசுத்தமாக, அவரது இரத்தம் சிந்துதலால் “பரிசுத்தப்படுத்தப்பட்டு,“ கிறிஸ்துவில் “பரிசுத்தராகலாம்.“ (மரோனி 10:32–33). என்ன ஒரு வாக்குத்தத்தம். என்ன ஒரு அற்புதம். என்ன ஒரு ஆசீர்வாதம்!

II.பொறுப்பேற்றலும் அநித்திய தீர்ப்புகளும்

இந்த அநித்திய அனுபவத்துக்கு தேவ திட்டத்தில் நமது நோக்கம், “கர்த்தராகிய நமது தேவன்[நமக்கு] கட்டளையிடும் எல்லாவற்றையும் [நாம்] செய்வோமா என நிரூபிக்கவே.“ (ஆபிரகாம் 3:25). இந்த திட்டத்தின் பகுதியாக, நாம் தேவனுக்கும் அவரது தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும், அந்த பொறுப்பு அநித்திய மற்றும் தெய்வீக தீர்ப்புகளை ஈடுபடுத்துகிறது.

கர்த்தரின் சபையில், அங்கத்தினர்களுக்கு அல்லது அங்கத்தினராகவிருப்பவர்களுக்கு, அநித்திய தீர்ப்புகள் தெய்வீக நடத்துதலை நாடும் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. நித்திய ஜீவனுக்கான உடன்படிக்கையின் பாதையில், அவரது பாவ நிவர்த்தியின் வல்லமையை பெற கிறிஸ்துவிடம் வர நாடுபவர்களை நியாயந்தீர்ப்பது அவர்களது பொறுப்பு. அநித்திய தீர்ப்புகள் ஒருவர் ஞானஸ்நானத்துக்கு தயாராக இருக்கிறாரா என தீர்மானிக்கின்றன. ஆலயம் செல்ல சிபாரிசுக்கு ஒருவர் தகுதியானவரா? சபையின் பதிவேடுகளிலிருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர், ஞானஸ்நானத்தால் திரும்பவும் அனுமதிக்கப்பட இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி முலம் போதுமானபடி மனந்திரும்பியிருக்கிறாரா?

மேலும் முன்னேற்றத்துக்காக தேவனால் அழைக்கப்பட்ட அநித்திய நீதிபதி ஒருவரை ஆலய சிலாாக்கியங்கள் போன்றவற்றுக்காக ஏற்றுக்கொண்டால், அந்த நபர் பரிபூரணமானவர் என குறிப்பிடவில்லை, மற்றும் அவர் எந்த பாவத்தையும் மன்னிக்கவில்லை. மூப்பர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் போதித்தார், அவர் “அநித்திய தண்டனைகள் தள்ளுபடி“ என்றழைத்ததில், ஒருவர் “இறுதி மனந்திரும்புதலை பரலோக தேவனிடமிருந்து பெற நாட வேண்டும், அவர் மட்டுமே நீக்க முடியும்.“5 இறுதி நியாயத்தீர்ப்புவரை பாவ காரியங்களுக்காகவும், விருப்பங்களுக்காகவும் மனந்திரும்பாமலிருந்தால், மனந்திரும்பாதவர் அசுத்தமாகவே இருப்பார். மனந்திரும்புதலின் விளைவான இறுதி சுத்திகரித்தல் உள்ளிட்ட முடிவான பொறுப்பேற்றல், நமக்கும் தேவனுக்கும் இடையேயானது.

III. உயிர்த்தெழுதலும் இறுதி நியாயத்தீர்ப்பும்

வேதங்களில் அதிக பொதுவாக விவரிக்கப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பு, உயிர்த்தெழுதலை பின்தொடர்கிற இறுதி நியாயத்தீர்ப்பு ஆகும்.(2 நேபி 9:15) பார்க்கவும். அநேக வசனங்கள் நாமனைவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பு நிற்போம் என சொல்கின்றன.(ரோமர் 14:10; மற்றும்2 நேபி 9:15பார்க்கவும்; மோசியா27:31) “அநித்திய சரீரத்தில் செய்யப்பட்ட செயல்களுக்குத் தகுந்தபடி, தீர்க்கப்பட” (ஆல்மா5:15; மற்றும் ஆல்மா 41:3பார்க்கவும்; 3 நேபி 26:4; வெளிப்படுத்தல் 20:12). அனைவரும் “அவர்களது கிரியைகளின்படி” நியாயந்தீர்க்கப்படுவார்கள்(3 நேபி 27:15) “அவர்களது இருதயங்களின் வாஞ்சைகளுக்கேற்ப” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:9; மற்றும் ஆல்மா 41:6) பார்க்கவும்.

இறுதி நியாயத்தீர்ப்பின் நோக்கம், “இருதயத்தின் பலத்த மாற்றம்“ என ஆல்மா விவரித்ததை அடைந்து விட்டோமா என தீர்மானிப்பதுதான் (ஆல்மா 5:14, 26பார்க்கவும்), “பொல்லாப்பை இனி செய்ய மனதில்லாதவர்களாய் நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு“ அப்போது புதிய சிருஷ்டிகளாகிறோம்.(மோசியா 5:2). இதன் நியாயாதிபதி நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, (யோவான் 5:22 பார்க்கவும்; 2 நேபி9:41). அவரது நியாயத்தீர்ப்புக்குப்பிறகு நாமெல்லாரும் அறிக்கையிடுவோம் “அவருடைய தீர்ப்பு நியாயமுள்ளது” (மோசியா16:1; மற்றும் 27:31 பார்க்கவும்; ஆல்மா 12:15), அவர் அனைத்தையும் அறிவதால் ( 2 நேபி 9:15, 20பார்க்கவும்) நீதியான அல்லது மனந்திரும்பிய மற்றும் மனந்திரும்பாத அல்லது மாறாத, நமது அனைத்து செயல்களும் விருப்பங்களும் பற்றிய பரிபூரண அறிவை அவருக்குக் கொடுத்தது.

இந்த இறுதி நியாயத்தீர்ப்பு முறையை வேதங்கள் விவரிக்கின்றன. உயிர்த்தெழுதலில் “அனைத்தும் தங்கள் முறையான ஒழுங்குக்கு திரும்ப சேர்க்கப்படும்“ என்பது தேவ நீதிக்கு தேவை என ஆல்மா போதிக்கிறான். (ஆல்மா 41:2). அதாவது, “அவர்களுடைய கிரியைகள் இவ்வாழ்க்கையில் நல்லதாயும், அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகள் நல்லதாயுமிருந்தால், அவர்களும் கடைசி நாளின்போது திரும்ப சேர்க்கப்பட வேண்டும்.“ (ஆல்மா 41:3). அதுபோல, அவர்களுடைய கிரியைகள் பொல்லாதவையாயிருக்குமானால், அவர்களும் பொல்லாதவர்களோடு திரும்ப சேர்க்கப்படுவார்கள்.(ஆல்மா 41:4–5; மற்றும் ஏலமன் 14:31 பார்க்கவும்). அதுபோலவே இறுதித்தீர்ப்பில் “நீதிமான்கள் இன்னும் நீதிமான்களாயும், அசுசியாய் உல்ளவர்கள் இன்னும் அசுசியாகவும் இருப்பார்கள்“ என தீர்க்கதரிசி யாக்கோபு போதித்தான்.(2 நேபி 9:16; மற்றும் மார்மன் 9:14பார்க்கவும்; 1 நேபி 15:33). இந்த முறைபற்றித்தான் மரோனி சொல்கிறான், ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும், நித்திய நியாயாதிபதியாகிய மகா யேகோவாவின் இன்ப விசாரணைக் கூண்டு. (மரோனி 10:34; மற்றும் 3 நேபி 27:16பார்க்கவும்).

நாம் சுத்தமாயிருப்போம் என உறுதி கூற, இருதி நியாயத் தீர்ப்புக்குமுன்பு நாம் மனந்திரும்ப வேண்டும் ( மார்மன் 3:22பார்க்கவும்). தேவனுக்கு முன்பாக நாம் நமது பாவங்களை மறைக்க முடியாது என ஆல்மா தன் பாவியான குமாரனுக்கு சொன்னான். நீ மனந்திரும்பாவிட்டால், அவை கடைசி நாளில் உனக்கு விரோதமாய் சாட்சியாய் நிற்கும். (ஆல்மா 39:8; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது). மனந்திரும்புதல் மூலம் தேவையான கழுவுதலைச் செய்ய, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திதான் ஒரே வழி. இந்த அநித்திய ஜீவியம் தான் அதைச் செய்வதற்கு நமது நேரம். ஆவி உலகத்தில் சில மனந்திரும்புதல் நடக்கலாம், என நாம் கற்பிக்கப்பட்டாலும், (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:31, 33, 58), அது நிச்சயமல்ல. மூப்பர் மெல்வின் போதித்தார், “மாம்சமும் ஆவியும் ஒன்றாக இணைந்திருக்கும்போது, ஜெயிப்பதும் கர்த்தருக்கு சேவை செய்வதும் மிக எளிது. மனுஷர் மிகவும் நெகிழ்ச்சியுடனும், தாக்குதலுக்குள்ளாவதுமான காலம் இது. இந்த வாழ்க்கையே மனந்திரும்ப ஏற்ற காலம்.“6

நாம் மனந்திரும்பும்போது, நமது செயல்கள் மற்றும் ஆசைகள் உள்ளிட்டநமது பாவங்கள் கழுவப்படும், நமது இரக்கமுள்ள இறுதி நீதிபதி “அவற்றை ஒருபோதும் நினைக்க மாட்டார்“ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42; மற்றும்ஏசாயா 1:18; எரேமியா 31:34; எபிரேயர் 8:12; ஆல்மா 41:6; ஏலமன் 14:18–19பார்க்கவும்.). மனந்திரும்புவதால் கழுவப்பட்டு, “முடிவற்ற மகிழ்ச்சியான நிலையிலே தேவனோடு வாசம் பண்ணும்படி,“ பென்யமின் இராஜா விவரித்தது போல, நாம் நித்திய ஜீவனுக்கு தகுதி பெறலாம்.மோசியா 2:41; மேலும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும்.).

தேவனின் “மறுஸ்தாபித திட்டத்தின்“ மற்றொரு பகுதி,(ஆல்மா 41:2), உயிர்த்தெழுதலில் சகலமும் “அவைகளுடைய ஒழுங்கான பரிபூரண அமைப்பிலே திரும்ப சேர்க்கப்படும்.“( ஆல்மா 40:23). நமது சரீர குறைபாடுகள், அநித்தியத்தில் பெறப்பட்ட, பிறப்பிலும் விபத்திலும் நோயாலும் ஏற்பட்ட குறைகளிலிருந்து பரிபூரணம் இதில் அடங்கும்.

இந்த மறுஸ்தாபிதம் நமது பரிசுத்தமற்ற அல்லது மேற்கொள்ளப்படாத ஆசைகளிலிருந்தும் அடிமைத்தனங்களிலிருந்தும் கழுவுகிறதா? அப்படியிருக்க முடியாது. நமது வாஞ்சைகளுக்காகவும் நமது கிரியைகளுக்காகவும் (ஆல்மா 41:5 பார்க்கவும்; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:9) நமது சிந்தனைகள்கூட நம்மைக் கடிந்து கொள்ளும் (Alma 12:14பார்க்கவும்). நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் என இக்கால வெளிப்படுத்தல்களிலிருந்து நாம் அறிகிறோம்.. மரணம் வரை “நாம் நமது மனந்திரும்புதலின் நாளை தள்ளிப்போடக் கூடாது,“ ஆல்மா போதித்தான்,ஆல்மா 34:33 இந்த ஜீவியத்தில் அதே ஆவி நமது சரீரத்தை ஆட்கொண்டதால்—கர்த்தருடையதானாலும், பிசாசுடையதானாலும்—“அந்த உலகத்தில் நமது சரீரத்தை ஆக்கிரமிக்க வல்லமை பெற்றிருக்கும்.“ஆல்மா 34:34. நமது இரட்சகருக்கு வல்லமை உண்டு, நம்மை தீமையிலிருந்து கழுவ அவர் தயாராக நிற்கிறார். இறுதி நியாயத் தீர்ப்பில் தேவனுக்கு முன்பாக சுத்தமாகவும் தயாராகவும் நிற்க நமது துன்மார்க்க அல்லது தேவையற்ற ஆசைகளிலும் சிந்தனைகளிலுமிருந்து மனந்திரும்ப அவரது உதவியை நாட இதுவே நேரம்.

இரக்கத்தின் கரங்கள்

தேவனின் திட்டத்தையும் அவரது அனைத்து கட்டளைகளையும் தாண்டி, நம் ஒவ்வொருவர் மீதும் அவரது அன்பு, “எல்லாக் காரியங்களுக்கும் மேலாக வாஞ்சிக்கக் கூடியது,... ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியது.” (1 நேபி 11:22–23). துன்மார்க்கரும்கூட, “கர்த்தரிடத்தில் திரும்புவர்,... அவர் மன்னிக்கிறதற்கு தயை பெற்றிருக்கிறார்” (ஏசாயா 55:7). ஆல்மா போதித்தான், “இதோ சகல மனுஷருக்கும் காருண்ய புயங்களை நீட்டி, அவர்களை அழைத்து... உங்களை நான் ஏற்றுக் கொள்வேன் என்கிறார்.”(ஆல்மா 5:33; மற்றும் 2 நேபி 26:25–33பார்க்கவும்). உயிர்த்தெழுந்த கர்த்தர் நேபியரிடம் சொன்னார், “இதோ என் கிருபையின் புயம் உங்களுக்கு நேராக நீண்டிருக்கிறது, யார் வந்தாலும் அவனை நான் ஏற்றுக் கொள்வேன்.”(3 நேபி 9:14). இவை மற்றும் அநேக பிற வேத போதனைகளிலிருந்து, தன் பிள்ளைகளுக்காக தேவன் வைத்திருக்கிற மாபெரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவர் வகுத்துள்ள அன்பு நிபந்தனைகளின்படி, ஆண்களையும் பெண்களையும் வரவேற்க நமது அன்பான இரட்சகர் தன் கரங்களை நீட்டுகிறார் என நாம் அறிகிறோம்.7

தேவனின் திட்டத்தாலும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாலும், தேவன் நம்மை நேசிக்கிறார், மனந்திரும்பும் முறையால் நாம் கழுவப்பட முடியும், என நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்துடன் நான் சாட்சியளிக்கிறேன். “அதனால் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டுகளித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வீர்களானால், இதோ, நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என பிதா உரைக்கிறார்” என நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம் . 2 நேபி 31:20 நாமனைவரும் அப்படிச் செய்வோமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் கெஞ்சி ஜெபிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. “Come unto Jesus,” Hymns, no. 117.

  2. Russell M. Nelson, “Repentance and Conversion,” Liahona, May 2007, 102.

  3. Russell M. Nelson, “Four Gifts That Jesus Christ Offers to You” (2018 First Presidency’s Christmas Devotional, Dec. 2, 2018), broadcasts.ChurchofJesusChrist.org.

  4. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 69.

  5. The Teachings of Spencer W. Kimball, ed. Edward L. Kimball (1982), 101.

  6. Melvin J. Ballard, in Melvin R. Ballard, Melvin J. Ballard: Crusader for Righteousness (1966), 212–13.

  7. Tad R. Callister, The Infinite Atonement (2000), 27–29 பார்க்கவும்.

அச்சிடவும்