2010–2019
கிறிஸ்து: இருளில் பிரகாசிக்கிற ஒளி
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

கிறிஸ்து: இருளில் பிரகாசிக்கிற ஒளி

உங்கள் சாட்சியின் கலங்கரைவிளக்கம் நொறுங்குவதாகவும், இருள் நெருங்குவதாகவும் நீங்கள் நினைத்தால், தைரியம் அடையுங்கள். தேவனுக்கு செய்த உங்கள் வாக்குத்தத்தங்களை காத்துக்கொள்ளுங்கள்.

ஒத்தாசைச் சங்க கட்டிடத்திலுள்ள என் அலுவலகம், சால்ட் லேக் ஆலயத்தின் பரிபூரண காட்சியை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இரவும் கடிகாாரம் ஒழுங்காக வேலைசெய்வதால், வெளிப்புற ஆலய விளக்குகள் அஸ்தமனத்தில் ஒளிர்கின்றன. என் ஜன்னலுக்கு வெளியே, ஆலயம் ஒரு நிலையான உறுதியான கலங்கரை விளக்கம்.

அந்தியில் சால்ட் லேக் ஆலயம்

கடந்த பிப்ருவரியில் ஒரு இரவில், சூரியன் மறையும்போது என் அலுவலகம் வித்தியாசமாக மந்தமாக இருந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஆலயம் இருட்டாக இருந்தது. விளக்குகள் ஏற்றப்படவில்லை. நான் உடனே சோர்வுற்றேன். பல ஆண்டுகளாக ஒவ்வொரு இரவிலும் நான் பார்த்த ஆலய கோபுரங்களை பார்க்க முடியவில்லை.

ஒளியேற்றப்படாத சால்ட் லேக் ஆலயத்தின் சுழற்படிகள்

நான் ஒளியை எதிர்பார்த்தபோது, இருளைப் பார்த்தது, நாம் வளர வேண்டுமானால், நமது ஒளியின் ஆதாரமாகிய, இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவைகளில் ஒன்றை எனக்கு நினைவூட்டியது. அவரே வல்லமை மற்றும் ஒளியின் ஆதாரம், உலகத்தின் ஒளி. அவரோடு பலமான தொடர்பு இல்லாமல், நாம் ஆவிக்குரிய பிரகாரமாக மரிக்க தொடங்குகிறோம். அதை அறிந்து, நாமனைவரும் எதிர்கொள்கிற உலகப்பிரகாரமான அழுத்தங்களால் சாத்தான் நம்மை ஏமாற்ற முயல்கிறான். அவன் நமது ஒளியை மந்தமாக்க தொடர்பை துண்டித்து, தண்ணீர் இணைப்பை துண்டித்து, நம்மை தனியாக இருளில் விட பிரயாசப்படுகிறான். அநித்தியத்தில் இந்த அழுத்தங்கள் சாதாரண நிலைமைகள், ஆனால் சாத்தான் நம்மை தனிமைப்படுத்தி, அவற்றை அனுபவிப்பது நாம் மட்டும்தான் என நம்மிடம் சொல்லுகிறான்.

நம்மில் சிலர் துக்கத்தால் முடங்கிப்போகிறோம்.

சோகங்கள் நம்மை முந்தும்போது, நாம் மூச்சு விடாதபடி வாழ்க்கை நம்மை காயப்படுத்தும்போது, எரிகோவுக்குச் செல்லும் சாலையில் சென்ற மனிதன் போல நாம் அடிக்கப்பட்டு, மரிக்க விடப்படும்போது, இயேசு வந்து எண்ணெய் ஊற்றுகிறார், சத்திரத்துக்கு நம்மைக் கொண்டு போகிறார், நம்மை பார்த்துக்கொள்ளுகிறார்.1 துக்கத்திலிருக்கும் நமக்கு அவர் சொல்கிறார், “உங்களின் தோள்களிலே சுமத்தப்படுகிற சுமைகளை நீங்கள் உணராமலிருக்குமளவுக்கு, அவைகளை இலகுவாக்குவேன். ... தன் ஜனத்தை அவர்களது உபத்திரவத்திலே சந்திக்கிற கர்த்தராகி தேவன் நானே என்று, அதனிமித்தம் நிச்சயமாய் அறிந்து கொள்வீர்கள்.“2 கிறிஸ்து காயங்களை குணமாக்குகிறார்.

நம்மில் சிலர் மிகவும் களைத்திருக்கிறோம்.

மூப்பர் ஹாலண்ட் சொன்னார், “நமக்குள்ள பலத்தை விட வேகமாக நாம் ஓடவேண்டுமென்பதல்ல. … ஆனாலும் நான் அறிகிறேன், … உங்களில் அநேகர் மிக மிக வேகமாக ஓடுகிறீர்கள், சில சமயங்களில் அந்த சக்தியும், உணர்வுபூர்வ சக்தியும் காலியாவதற்கு நெருக்கமாக பதிவாகிறது.“3 எதிர்பார்ப்புகள் நம்மை மிஞ்சும்போது, நாம் பின்னகர்ந்து, எதை விடுவது என பரலோக பிதாவிடம் கேட்க வேண்டும். நமது வாழ்க்கையின் அனுபவத்தின் பகுதி, எதைச் செய்யக்கூடாது என கற்பதுதான். அப்படியானாலும், சிலசமயங்களில் வாழ்க்கை சோர்வடையக்கூடியதாகலாம். இயேசு நமக்கு உறுதியளிக்கிறார், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”4

நுகத்தை இழுக்கவும் நமது பாரத்தை இலகுவாக்கவும் நம்முடன் சேர இயேசு சித்தமாயிருக்கிறார். கிறிஸ்துவே இளைப்பாறுதல்.

நாம் பாரம்பரிய அச்சில் பொருந்த மாட்டோம் என நம்மில் சிலர் உணர்கிறோம்.

பல்வேறு காரணங்களுக்காக நாம் ஏற்றுக்கொள்ளப்படாததாக, ஏற்றுக்கொள்ளப்பட இயலாதவர்களாக உணர்வதில்லை. எல்லா விதமான ஜனங்களிடமும் செல்ல இயேசு செய்த பெரும் முயற்சிகளை புதிய ஏற்பாடு காட்டுகிறது, குஷ்டரோகிகள், ஆயக்காரர்கள், பிள்ளைகள், கலிலேயர்கள், வேசிகள், பெண்கள், பரிசேயர்கள், பாவிகள், சமாரியர்கள், விதவைகள், ரோம போர் வீரர்கள், விபச்சாரிகள், சாங்கிய அசுத்தமானோர். கிட்டத்தட்ட ஒவ்வொரு கதையிலும், சமுகத்தில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒருவரிடம் அவர் செல்கிறார்.

சகேயு என்னும் எரிகோவின் தலைமை வரிவசூலிப்பவன் கதையை லூக்கா 19 சொல்கிறது. இயேசு நடந்து போகிறதை பார்க்கும்படியாக அவன் மரத்தின்மேல் ஏறினான். சகேயு ரோம அரசால் பணியமர்த்தப்பட்டு, ஊழல்வாதியாகவும், பாவியாகவும் பார்க்கப்பட்டான். இயேசு மரத்தின் மேல் அவனைப் பார்த்து, அழைத்து சொன்னார், “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார்.“5 சகேயுவின் இருதயத்தின் நன்மையையும், அவர் பிறருக்கு செய்தவற்றையும் இயேசு பார்த்தபோது, அவர் அவனது அழைப்பை ஏற்று சொன்னார், “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறான்.“6

கிறிஸ்து மென்மையாக நேபியர்களுக்கு சொன்னார், “உங்களில் ஒருவனும் போகக்கூடாது என்று நான் கட்டளையிட்டிருக்கிறேன்.”7 “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்”8 என அவர் அறிவித்தபோது, அப்போஸ்தலர் 10 பேதுரு ஒரு வல்லமையான தரிசனத்தை பெற்றான். ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக் காட்ட இது கிறிஸ்துவின் சீஷர்களுக்கும் பிற்காலப் பரிசுத்தவான்களுக்கும் இது ஒரு அசையாத தேவையாயிருக்கிறது.9 அவர் சகேயுவுக்கு கொடுத்ததுபோல அதே விதமான அழைப்பை இயேசு கொடுக்கிறார், “இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே கூட போஜனம் பண்ணுவான்.” 10, இயேசு நம்மை நமது மரத்தில் பார்க்கிறார்.

நம்மில் சிலர் கேள்விகளுடன் பிரிந்திருக்கிறோம்.

அநேக வருடங்களுக்கு முன்பு என்னால் பதில் காண முடியாத கேள்விகளால் சோர்வுற்று, எரிச்சலடைந்தேன். ஒரு சனிக்கிழமை அதிகாலையில், நான் ஒரு சிறிய கனவு கண்டேன். அந்தகனவில் நான் ஒரு கூடாரத்தைப் பார்த்தேன், நான் அதன் கீழ் சென்று நிற்க வேண்டுமென நினைத்தேன். அதை சுற்றி ஐந்து வளைவுகள் இருந்தன. ஆனால் ஜன்னல்கள் கல்லால் செய்யப்பட்டிருந்தன. அது காரணமற்றதாக இருந்ததால், அதன் உள்ளே போக விரும்பவில்லை என கனவில் நான் புகார் செய்தேன். பின்பு யாரேதின் சகோதரன் பொறுமையாக கற்களை கண்ணாடியாக உருக்கிய நினைவு என் மனதில் வந்தது. ஒரு நிலை மாறிய கல்தான் கண்ணாடி. யாரேதின் சகோதரனின் கற்களை கர்த்தர் தொட்டபோது, இருண்ட கப்பல்களில் அவை ஒளியுடன் மின்னின.11 உடனே நான் வேறு எந்த இடத்தையும் விட கூடாரத்துக்குள் இருக்கும் வாஞ்சையால் நிரப்பப்பட்டேன், . நான் உண்மையாகவே “பார்த்தது” அந்த இடம்தான், அந்த ஒரே இடம்தான். என்னைப் பாதித்த கேள்வி மறையவில்லை, நான் எழுந்த பிறகும் அக்கேள்வி என் மனதில் பிரகாசமாக இருந்தது. “உனது கற்கள் ஒளியாக மாறும்படி யாரேதின் சகோதரனைப்போல, நீ எப்படி விசுவாசத்தை அதிகரிக்கப் போகிறாய்.?”12

நமது அநித்திய மூளைகள் அழகிய கட்டுக்களில் புரிதலையும் அர்த்தமும் தேட உருவாக்கப்பட்டவை. அநித்தியத்தின் திரை ஏன் தடிமனாக இருக்கிறது என அனைத்து காரணங்களும் எனக்குத் தெரியாது. நமது நித்திய முன்னேற்றத்தில் நாம் எல்லா பதில்களையும் வைத்திருக்கும் நிலை இதுவல்ல. பார்க்காத காரியங்களின் ஆதாரமாக நமது உறுதியை (அல்லது சிலசமயங்களில் நம்பிக்கையை) நாம் விருத்தி செய்கிற நிலை இது. ஆராய உறுதிப்பாடு வருகிற வழிகள் எப்போதும் எளிதல்ல, ஆனால் நமது இருளில் ஒளி இருக்கிறது. இயேசு சொன்னார், “நானே உலகத்தின் ஒளியாகவும், ஜீவனாயும், சத்தியமாயும் இருக்கிறேன்.”13 சத்தியத்தைத் தேடுவோருக்கு, இது முதலில் கல்லால் செய்யப்பட்ட ஜன்னலைப்பற்றிய முட்டாள்தனமான உருவ பயம் போல தோன்றலாம். ஆனால் பொறுமை மற்றும் விசுவாசமிக்க கேள்விகளுடன், இயேசு நமது கல் ஜன்னல்களை கண்ணாடியாகவும் ஒளியாகவும் மாற்ற முடியும்.கிறிஸ்து பார்ப்பதற்கான ஒளி.

நாம் ஒருபோதும் நல்லவர்களாக இருக்க முடியாது என நம்மில் சிலர் உணர்கின்றனர்.

பழைய ஏற்பாட்டின் இரத்தாம்பர சாயம் நிறமிக்கது மட்டுமல்ல, நீடிக்கக்கூடியது, அதாவது கம்பளியில் பிடித்துள்ள ஆழ்ந்த நிறம் , அது எத்தனை முறை சலவை செய்யப்பட்டாலும் மங்காது.14 இந்த காரணத்தை சாத்தான் கர்லா போல சுற்றுகிறான். இரத்தாம்பர சிவப்பாக மாற்றப்பட்ட வெள்ளை கம்பளி திரும்பவும் வெள்ளையாக முடியாது. ஆனால் இயேசு கிறிஸ்து அறிவிக்கிறார், “உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகள் உயர்ந்திருக்கிறது,”15, மற்றும் அவரது கிருபையின் அற்புதம் நாம் நம் பாவங்களுக்காக மனந்திரும்பும்போது அவரது இரத்தாம்பர இரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகிறது. இது தர்க்கரீதியாக சரியல்ல, ஆயினும் இது உண்மை.

கம்பளி கறைபடிந்த கருஞ்சிகப்பு

iStock.com/iinwibisono லிருந்து புகைப்படம்

“உங்கள் பாவங்கள் சிவேறென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”16 கரத்தர் வலியுறுத்தி சொல்கிறார், அவன் அல்லது அவள், “பாவத்திலிருந்து மனந்திரும்பியவர் மன்னிக்கப்படுகிறார், கரத்தராகிய நான் அதை ஒருபோதும் நினைவில் வைப்பதில்லை.”17 சுருக்கமாக, வாருங்கள், நாம் ஒன்றாக காரணம் காண்போம்.18 நீங்கள் தப்பு செய்தீர்கள், குற்றவாளிகளானீர்கள்.19 என்னிடம் வந்து மனந்திரும்புங்கள்.20 நான் பாவத்தை மீண்டும் நினைப்பதில்லை.21 நீங்கள் மீண்டும் குணமாகலாம்.22 நீங்கள் செய்ய என்னிடத்தில் ஒரு வேலையுண்டு.23கிறிஸ்து கம்பளியை வெண்மையாக்குகிறார்.

ஆனால் செயல்முறை வழிகள் யாவை? நாம் நிதானமற்றிருக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் வல்லமையோடு திரும்ப இணைக்கும் திறவுகோல் எது? இதை மிக எளிதாக தலைவர் நெல்சன் சொன்னார், “திறவுகோலானது, உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்வது. ... இது குழப்பமான வழி அல்ல.”24 உங்கள் வாழ்க்கையின் மையமாக கிறிஸ்துவை ஆக்குங்கள்.25

உங்கள் சாட்சியின் கலங்கரை விளக்கம் நொறுங்குவதாக, இருள் நெருங்குவதாக நினைக்கிறீர்களா, தைரியப்படுங்கள். தேவனுக்கு உங்கள் வாக்குத்தத்தங்களை காத்துக் கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். பொறுமையாக கல்லை கண்ணாடியாக உருக்குங்கள். இன்னும் உங்களை நேசிக்கிற இயேசு கிறிஸ்துவிடம் திரும்புங்கள்.

இயேசு சொன்னார், “இருளில் பிரகாசிக்கிற ஒளி நானே, இருள் அதை அறிவதில்லை.”26 அது எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் இருள் ஒளியை அணைக்க முடியாது. ஒருபோதும். அவருடைய ஒளி உங்களுக்காக இருக்கிறது என நீங்கள் நம்பலாம்.

சால்ட் லேக் ஆலயம் ஒளியேற்றப்பட்டது

நாம் அல்லது நாம் நேசிக்கிற ஜனம், தற்காலிகமாக இருட்டாகலாம். சால்ட் லேக் ஆலய விஷயத்தில் அந்த மேலாளர், சகோதரர் வால் ஒய்ட், உடனே அழைக்கப்பட்டார். ஜனங்கள் கவனித்தனர். ஆலய விளக்குகளுக்கு ஏற்பட்ட தவறு என்ன? முதலில் பணியாளர்கள் ஆலயத்திலுள்ள ஒவ்வொரு மின் இணைப்புக்கும் நேராக சென்று, அவர்களே விளக்குகளை ஏற்றினர். பின்னர் தானியங்கி மின் வினியோகத்திலுள்ள மின்கலங்களை மாற்றி, எது தவறியது என கண்டு பிடிக்க சோதித்தனர்.

நீங்களே விளக்கை எரியச் செய்வது கடினம். நமக்கு நண்பர்கள் தேவை. நமக்கு ஒருவருக்கொருவர் தேவை. ஆலயப் பணியாளர்கள் போல, நாம் நேரடியாக சென்று, நமது ஆவிக்குரிய மின்கலங்களை புதுப்பித்து, தவறானதை சரிசெய்து, நாம் ஒருவருக்கொருவர் உதவலாம்.

கிறிஸ்துமஸ் காலத்தில் சால்ட் லேக் ஆலயம்

ஒரு மரத்தில் ஒரு விளக்கைப்போல நமது தனிப்பட்ட ஒளி இருக்கிறது ஆனாலும் நாம் நமது சிறு விளக்கை எரிய விடுகிறோம், எல்லாரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் காலத்தில் ஆலய சதுக்கத்தைப்போல, கர்த்தரின் வீட்டுக்கு மில்லியன் கணக்கானவர்களை ஈர்க்கிறோம். எல்லாவற்றுக்கும் சிறப்பாக தலைவர் நெல்சன் ஊக்குவித்தார், நமது உடன்படிக்கைகளை காத்துக்கொள்ளும் எளிய செயலால் நமக்கும் நமக்கு முக்கியமானவர்களுக்கும் இரட்சகரின் ஒளியைக் கொண்டு வரலாம். பலவித வழிகளில் வல்லமையோடும் சந்தோஷமாயும் அந்த விசுவாசமிக்க செயலுக்காக கர்த்தர் பிரதிபலன் அளிக்கிறார். 27

நீங்கள் நேசிக்கப்படுபவர்கள் என நான் சாட்சியளிக்கிறேன். நீங்கள் எவ்வளவு கடினமாக முயல்கிறீர்கள் என கர்த்தர் அறிகிறார். நீங்கள் முன்னேறுகிறீர்கள் சென்றுகொண்டே இருங்கள். உங்கள் மறைக்கப்பட்ட தியாகங்களை அவர் பார்க்கிறார், உங்கள் மற்றும் நீங்கள் நேசிப்பவர்களின் நன்மைக்காகவும் அவர் அதைக் கணக்கிடுகிறார். உங்கள் பணி வீணல்ல. நீங்கள் தனிமையிலில்லை. அவரது நாமமான இம்மானுவேலுக்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமாகிறது.28 அவர் கண்டிப்பாக உங்களோடு இருக்கிறார்.

உடன்படிக்கையின் பாதையில் இன்னும் சில அடிகள் வையுங்கள், அதிக தூரம் பார்க்க அதிக இருட்டாக இருந்தாலும் கூட. விளக்குகள் திரும்ப வரும். இயேசுவின் வார்த்தைகளின் சத்தியத்தைப்பற்றி நான் சாட்சியளிக்கிறேன்.“அவை ஒளியால் நிரப்பப்பட்டுள்ளன.என்னை நெருங்கி வாருங்கள், நான் உங்களை நெருங்கி வருவேன். கருத்தாய் என்னைத் தேடுங்கள், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், கேளுங்கள் நீங்கள் பெறுவீர்கள், தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்”. 29 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.