நமது பிதாவின் பிள்ளைகள் மீது அதிக அன்பு
நமது அன்பு தீர்க்கதரிசியால் நாம் மேற்கொள்ளுமாறு பொறுப்பளிக்கப்பட்ட ஆவிக்குரிய நோக்கங்களுக்கு, அன்புதான் பிரதான தன்மை மற்றும் நோக்கம்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, இது வரலாற்றில் தனித்துவமுள்ள, முக்கிய நேரம் ஆகும். இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முந்திய ஊழியக்காலத்தில் வாழ நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். 1829ல் இந்த ஊழியக்காலத்தின் தொடக்கத்துக்கு அருகில், சபை முறையாக அமைக்கப்பட்டதற்கு முந்தய ஆண்டு, அற்புதமான பணி வரவிருக்கிறது என பிரகடனம் செய்து ஒரு பிரியமான வெளிப்படுத்தல் பெறப்பட்டது. தேவனுக்கு சேவை செய்ய வாஞ்சையுள்ளவர்கள், “விசுவாசம், நம்பிக்கை, தயாளம், மற்றும் அன்புடன் தேவமகிமையை மட்டும் நோக்கமாகக் கொள்வதன்“ மூலம் அப்படிப்பட்ட சேவைக்கு தகுதி பெறுகிறார்கள் என இந்த வெளிப்படுத்தல் நிறுவியது.1 கிறிஸ்துவின் பரிசுத்த அன்பாகிய தயாளம்2 தன் பிள்ளைகள் அனைவர் மீதும் தேவனின் நித்திய அன்பை உள்ளடக்கியது.3
ஊழியப் பணியிலும், ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி, வீட்டை மையமாகக் கொண்டு, சபையால் ஆதரிக்கப்பட்ட குடும்ப மார்க்க ஆசரிப்பில் அவ்வகை அன்பின் முக்கிய பங்கை வலியுறுத்துவதுதான் இக்காலையில் எனது நோக்கம் ஆகும். 2018ல் அறிவிக்கப்பட்ட அனுசரிப்புகளில் நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனால் நமக்கு பொறுப்பளிக்கப்பட்ட, இரட்சகர் மீதும் மற்றும் நமது சக மனுஷர் மீதும்அன்பு4, ஊழியம் செய்வதற்கும், ஆவிக்குரிய நோக்கங்களுக்கும் பிரதான தன்மையும் நோக்கமும் ஆகும்5.
சிதறுண்ட இஸ்ரவேலை கூட்டிச் சேர்க்க ஊழிய முயற்சி
என் வாழ்க்கையில் முதலிலேயே ஊழியப்பணிக்கும் அன்புக்கும் இடையே உள்ள உறவுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். எனக்கு 11 வயதாயிருந்தபோது, என் தாத்தாவும் கோத்திரபிதாவுமானவரிடமிருந்து கோத்திர பிதா ஆசீர்வாதம் பெற்றேன்.6 அந்த ஆசீர்வாதத்தின் ஒரு பகுதி,கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண … உலகத்துக்கு சுவிசேஷத்தை நீ கொண்டு செல்ல அழைக்கப்படவிருப்பதால், உன் சக மனுஷர் மேல் அதிக அன்புடன் நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன.7
நமது அனைத்து பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கும், சுவிசேஷத்தைப் பகிர்வது அதிக அன்பின் அடிப்படையில் தான் என இளம் வயதிலேயே நான் புரிந்து கொண்டேன்.
என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் பணிக்காக நியமிக்கப்பட்ட பொது அதிகாரிகளாக 15 வருடங்களுக்கு முன்பு, அது இருந்தது போலவே, நமது நாளிலும் ஊழியப் பணிக்கு அன்பின் தன்மை முக்கியம் என நாங்கள் முடித்தோம். 6வது அத்தியாயத்திலுள்ள தயாளம் மற்றும் அன்பு ஆகிய கிறிஸ்து போன்ற தன்மைகள், ஊழியக்காரர்கள் மத்தியில் தொடர்ந்து மிக முக்கிய அத்தியாயமாக இருந்திருக்கிறது.
இரட்சகரின் தூதர்களாக அதிகமான ஊழியக்காரர்கள் இம்மாதிரியான அன்பை உணர்கிறார்கள், அவர்கள் அப்படிச் செய்யும்போது அவர்களுடைய முயற்சிகள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. அவரது நோக்கத்தில் கர்த்தருக்கு உதவ தேவையான இம்மாதிரியான அன்பின் பார்வையை அங்கத்தினர்கள் பெறும்போது, கர்த்தரின் பணி செய்யப்பட்டுவிடும்.
இம்மாதிரியான அன்பின் அற்புதமான உதாரணமாக ஒரு சிறு பங்காற்ற நான் சிலாக்கியம் பெற்றேன். பசிபிக் தீவுகள் பகுதியில் நான் தலைவராக சேவை செய்துகொண்டிருக்கும்போது, தலைவர் ஆர். வைன் ஷூட்டிடமிருந்து ஒரு அழைப்பு பெற்றேன். ஒரு இளைஞனாக அவர் சமோவாவில் ஊழியம் செய்தார். பின்னர் ஊழியத் தலைவராக அவர் சமோவா திரும்பினார்.8 அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அபியா சமோவா ஆலயத் தலைவர். அவர் ஊழியத் தலைவராக இருந்தபோது, அவரது இளம் ஊழியக்காரர்களில் ஒருவர், மூப்பர் வின்ஸ் ஹாலக், அவர் இப்போது பசிபிக் பகுதி தலைவர். வின்சிடமும், அவரது முழு குடும்பத்திடமும் அதிக அன்பும் மரியாதையும் தலைவர் ஷூட் வைத்திருந்தார். குடும்பத்தில் ஆதிகமானோர் சபை அங்கத்தினர்கள், ஆனால் குடும்பத் தலைவரான வின்ஸின் அப்பா ஒட்டோ ஹாலக் அங்கத்தினரல்ல. நான் அமெரிக்க சமோவாவில் பிணைய மாநாட்டிலும், பிற கூட்டங்களிலும் கலந்து கொள்ளவிருக்கிறேன் என அறிந்து, அவருடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வேன் என்ற நினைப்பில் நான் ஒட்டோ ஹாலக்கின் வீட்டில் தங்குவதைக் கருத்தில் கொள்வேனா என தலைவர் ஷூட் என்னிடம் கேட்டார்.
என் மனைவி மேரியும் நானும் ஒட்டோவும் அவரது மனைவி டாரதியுடன் அவர்களது அழகிய வீட்டில் தங்கினோம். காலை உணவின்போது நான் ஒரு சுவிசேஷ செய்தியை பகிர்ந்து, ஒட்டோ ஊழியக்காரர்களுடன் சந்திக்க வேண்டுமென அழைத்தேன். அவர் அன்பானவர், ஆனால் என் அழைப்பை மறுப்பதில் உறுதியாயிருந்தார். அவரது குடும்பத்தின் அநேகர் பிற்காலப் பரிசுத்தவான்களாக இருப்பதால் மகிழ்வதாக அவர் சொன்னார். அவரது தாயின் முன்னோர்கள் சமோவாவில் அக்கால கிறிஸ்தவ ஊழியக்காரர்கள். அவர்களது பாரம்பரிய கிறிஸ்தவ விசுவாசத்தில் ஒரு பெரிய பற்று கொண்டிருப்பதாக வலுக்கட்டாயமாக சொன்னார்.9 இருப்பினும் நாங்கள் நல்ல நண்பர்களாக பிரிந்தோம்.
பின்னர் சுவா பிஜி ஆலயத்தை தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி அர்ப்பணிக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய தனிச்செயளாளர் சகோதரர் டான் எச். ஸ்டஹேலி ஆயத்தங்கள் செய்ய என்னை நியூஸிலாந்திலிருந்து அழைக்கச் செய்தார். 10 தலைவர் ஹிங்க்லி பிஜியிலிருந்து அமெரிக்க சமோவாவுக்கு பரிசுத்தவான்களைச் சந்திக்க செல்ல விரும்பினார். ஒரு குறிப்பிட்ட விடுதி முந்தய வருகையின்போது பயன்படுத்தப்பட்டது பரிந்துரைக்கப்பட்டது. நான் வேறு ஏற்பாடு செய்ய வேண்டுமா என கேட்டேன். சகோதரர் ஸ்டஹேலி சொன்னார், நீங்கள்தான் பகுதி தலைவர், அது சரியாயிருக்கும்.
நான் உடனே சகோதரர் ஷூட்டை அழைத்து, ஒருவேளை நமக்கு நமது நண்பர் ஒட்டோ ஹாலக்குக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதம் கொடுக்க இரண்டாம் சந்தர்ப்பமாக இருக்கும் என சொன்னேன். இச்சமயம் ஊழியக்காரராக தலைவர் ஹிங்க்லி இருப்பார். தலைவரி ஹிங்க்லியின் பயண குழுவிலுள்ள எங்கள் அனைவருக்கும் ஹாலேக் குடும்பத்தினர் உபசாரம் செய்வது பொருத்தமாக இருக்குமா என நினைக்கிறாரா என கேட்டேன். 11 தலைவர் மற்றும் சகோதரி ஹிங்க்லி, அவர்களது மகள் ஜேன், மற்றும் மூப்பர் மற்றும் சகோதரி ஹாலண்ட் பயண குழுவில் இருந்தார்கள். தலைவர் ஷூட் குடும்பத்துடன் உழைத்து எல்லா ஏற்பாடுதளையும் செய்தார்.12
ஆலய அர்ப்பணிப்புக்குப் பின் பிஜியிலிருந்து நாங்கள் வந்தபோது நாங்கள் நன்கு வரவேற்கப்பட்டோம்.13 ஆயிரக்கணக்கான சமோவா அங்கத்தினர்களுடன் அன்று மாலை நாங்கள் பேசிவிட்டு, ஹாலேக் குடும்ப வளவுக்கு சென்றோம். அடுத்த நாள் காலை உணவுக்காக நாங்கள் கூடியபோது, தலைவர் ஹிங்க்லியும் ஒட்டோ ஹாலக்கும் நல்ல நண்பர்களாகியிருந்தனர். ஒரு வருடத்துக்கு முன் ஒட்டோவுடன் நான் செய்த அதே உரையாடலைத் தான் அவர்களும் செய்தனர் என்பது ரசிக்கத்தக்கது. நமது சபை மீது பாராட்டை ஒட்டோ தெரிவித்து, ஆனால் அவரது அன்றைய சபைக்கு மறுஉறுதியளித்தபோது, தலைவர் ஹிங்க்லி ஒட்டோவின் தோளில் கை போட்டு, சொன்னார்,“ஒட்டோ அது போதாது, நீங்கள் அங்கத்தினராக வேண்டும். இதுவே கர்த்தரின் சபை.“ தலைவர் ஹிங்க்லி வெளிப்படையாக சொன்ன பிறகு, ஒரு உவமானமாக சொன்னால் ஒட்டோவின் எதிர்க்கும் கவசம் விழுந்து விட்டதைப் பார்க்க முடிந்தது.
ஒரு கூடுதலான ஊழியக்காரர் போதிப்பதன் ஆரம்பம் இது, மற்றும் ஒரு வருடத்துக்குப் பிறகு ஆவிக்குரிய தாழ்மை ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட அனுமதித்தது. அதற்கு ஒரு வருடத்துக்குப் பின் ஹாலக் குடும்பத்தினர் ஆலயத்தில் நித்திய குடும்பமாக முத்திரிக்கப்பட்டனர்.14
இந்த மதிப்புமிக்க அனுபவம் முழுவதிலும் என் இருதயத்தைத் தொட்டது, தன் முன்னாள் ஊழியக்காரனான மூப்பர் வீன்ஸ் ஹாலக் மீது தலைவர் வைன் ஷூட் காட்டிய அதிக ஊழிய அன்பும், ஹாலக் குடும்பம் முழுவதும் நித்திய குடும்பமாக இணைந்திருக்க அவருடைய விருப்பம்தான்.15
இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பது என்றால் இவ்விதமான அன்பால் நமது இருதயங்களை இணைத்து, பொறுப்புணர்வு மட்டுமே என்றில்லாமல் அதிலருந்து நகர வேண்டும்,16 அல்லது உலகத்தோடு இரட்சகரின் செய்தி, ஊழியம் மற்றும் பணியைப் பகிர அன்புணர்வின் குற்றவுணர்வு மற்றும் தெய்வீக பங்கில் பங்கேற்க வேண்டும். 17
அங்கத்தினர்களாக நாம், எளிய அழைப்புக்கள் கொடுத்து, உலகெங்கிலுமுள்ள நமது சகோதர சகோதரிகளுக்கும், இரட்சகருக்கும் அன்பைக் காட்டலாம். புதிய ஞாயிற்றுக்கிழமை கூட்ட அட்டவணை நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் சபை அனுபவத்தை வந்து பார்த்து உணர வெற்றிகரமாகவும் அன்பாகவும் அழைக்க ஒரு விசேஷித்த சந்தர்ப்பமாக இருக்கிறது.18 மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் நேற்று விவரித்ததுபோல, ஒரு ஆவிக்குரிய திருவிருந்து கூட்டம், புதிய ஏற்பாடு மற்றும் இரட்சகர் பற்றி சிந்திக்கிற அல்லது இரட்சகர் மற்றும் அவரது கோட்பாட்டை மையப்படுத்திய பொருத்தமான மாநாட்டு உரைபற்றி போதிக்கிற 50 நிமிட கூட்டத்தால் தொடரப்படும்.
ஆசாரியத்துவ குழும அங்கத்தினர்களுடன் ஒரு கூட்டிச் சேர்த்தல் பணி ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என சில ஒத்தாசைச் சங்க சகோதரிகள் ஆச்சரியப்படுகிறார்கள். இதற்கு காரணங்கள் உண்டு, தலைவர் நெல்சன் அவற்றில் பலவற்றை கடந்த பொது மாநாட்டில் முன்வைத்தார். அவர் முடித்தார், “நீங்கள் இல்லாமல் நாங்கள் இஸ்ரவேலைக் கூட்டிச் சேரக்க முடியாது.“19 கூடுதலாக, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் முழுநேர ஊழியக்காரர்கள் சகோதரிகள் என்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இது ஒத்தாசைச் சங்க சகோதரிகளுக்கு அன்பாக சுவிசேஷத்தைப் பகிர கூடுதல் தேவையும் ஊக்கமும் கொடுக்கிறது. ஆண்கள், பெண்கள், இளைஞர், பிள்ளைகள் நம் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர அன்பான, மனதுருக்கமுடைய, ஆவிக்குரிய அர்ப்பணிப்பு தேவை. நாம் அன்பும், தயவும், தாழ்மையும் காட்டினால், நமது அழைப்பை அநேகர் ஏற்றுக் கொள்வர். நமது அழைப்பை ஏற்றுக்கொள்ள தெரிந்துகொள்ளாதவர்களும் நமது நண்பர்களே.
இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க ஆலய மற்றும் குடும்ப வரலாற்று முயற்சி
திரையின் அந்த பக்கத்தில் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க நமது ஆலய மற்றும் குடும்ப வரலாற்று முயற்சியில் அன்பு மையமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் சந்தித்த பாடுகள் மற்றும் கஷ்டங்கள் பற்றி நாம் கற்கும்போது, அவர்கள் மீது நமது அன்பும் பாராட்டுதலும் அதிகமாகிறது. ஞாயிற்றுகிழமை கூட்ட அட்டவணை மற்றும் வகுப்புகளிலும் குழுமங்களிலும் இளைஞர் முன்னேற்றத்தில் புதிய அனுசரிப்பினிமித்தம் நமது ஆலய மற்றும் குடும்ப வரலாற்று முயற்சிகள் பெலப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நமது முன்னோர் மற்றும் திரைக்கு மறுபக்கத்தில் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கும் கற்றல் பற்றி முன்கூட்டிய மற்றும் அதிக வல்லமையான கவனம் கொடுக்கிறது. ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பணி அதிகமாக அதிகரித்துள்ளது.
இணையதளம் ஒரு வல்லமையான கருவி. வீடு தற்போது நமது ஆரம்ப குடும்ப வரலாற்று மையமாக இருக்கிறது. நமது இளம் அங்கத்தினர்கள் குடும்ப வரலாற்று ஆய்வில் விசேஷ திறமை பெற்றுள்ளனர், தங்கள் முன்னோர் பற்றி கற்று, நேசிக்கவும் பாராட்டவும் ஆவிக்குரிய விதமாக தூண்டப்பட்டுள்ளனர். மரித்தோருக்கான ஞாநஸ்நானம் நிறைவேற்ற 11 வயதுடையோர் அனுமதிக்கப்படும் மாற்றம் வந்ததிலிருந்து, உலகம் முழுவதிலுமுள்ள ஆலய தலைவர்கள் அதிகமாக அதிகரித்துள்ள வருகை பற்றி அறிக்கையளிக்கின்றனர். ஞானஸ்நான புரவலர்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளனர், 11 வயதுடையோரை சேர்ததது அதிக குடும்பங்களைக் கொண்டு வந்திருக்கிறது என ஒரு ஆலயத்தலைவர் தெரிவிக்கிறார். அவர்களது {இளம்} வயதிலும்,அவர்கள் நிரைவேற்றுகிற நியமத்துக்கு பயபக்தியையும் நோக்கத்தையும் உணரத் தொடங்கியதாகத் தோன்றுகிறது. இது கவனிக்க அழகாக இருக்கிறது.20
நமது ஆரம்ப வகுப்பு மற்றும் இளைஞர் தலைவர்கள் குடும்ப வரலாற்றையும் ஆலயப்பணியையும் முக்கிய முயற்சியாக தொடருகிறார்கள், தொடருவார்கள் என நான் அறிவேன். ஒத்தாசைச் சங்க சகோதரிகளும், ஆசாரியத்துவ சகோதரர்களும் தங்கள் ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பொறுப்பை தனிப்பட்ட விதமாகவும், திரைக்கு அந்த பக்கத்திலுள்ள இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க பிள்ளைகளுக்கு உதவி செய்தும், தூண்டியும் அன்புடன் உதவ முடியும். இது குறிப்பாக வீட்டிலும் ஓய்வுநாளிலும் முக்கியமாகும். முன்னோர்களுக்கு நியமங்களை அன்போடு நிறைவேற்றுதல் அதிகமாக தீயதாக ஆகிக்கொண்டிருக்கிற உலகில் நமது இளைஞரையும் குடும்பங்களையும் பெலப்படுத்தி பாதுகாக்கும் என நான் வாக்களிக்கிறேன். ஆலயங்கள் மற்றும் ஆலய பணிகள் தொடர்புடைய மிக முக்கிய வெளிப்படுத்தல்களை தலைவர் ரசல் எம். நெல்சன் பெற்றிருக்கிறார் என தனிப்பட்ட விதமாக நான் சாட்சியளிக்கிறேன்.
தேவனுடன் வாழ நித்திய குடும்பங்களையும் தனிநபர்களையும் ஆயத்தம் செய்தல்
வீட்டை மையமாகக் கொண்ட சுவிசேஷ படிப்பும் வாழ்தலும், சபையால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களும் நித்திய குடும்பங்களையும் தனிநபர்களையும் அன்போடு ஆயத்தம் செய்யவும் தேவனுடன் வாழவும் புதிய வலியுறுத்தல் பெரும் சந்தர்ப்பங்கள்.21
ஒரு ஆணும் பெண்ணும் ஆலயத்தில் முத்திரிக்கப்படும்போது, ஆசாரியத்துவத்தின் முறைமையான புதிய நீடித்த திருமண பரிசுத்த முறைமையில் நுழைகிறார்கள். 22 அவர்கள் ஒன்றாக ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களையும் தங்கள் குடும்பங்களின் காரியங்களையும் வழிநடத்தும் வல்லமை பெறுகிறார்கள். குடும்பம் உலகத்துக்கு ஒரு பிரகடனத்தில்23 குறிப்பிடப்பட்டுள்ள தனித்துவமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கை பெறுகிறார்கள், ஆனால் அவர்களது உக்கிராணத்துவங்கள் மதிப்பிலும் முக்கியத்துவத்திலும் சமமானவை.24 தங்கள் குடும்பங்களுக்காக வெளிப்படுத்தல் பெற அவர்கள் சமமான வல்லமை பெறுகிறார்கள். அவர்கள் அன்பிலும் நீதியிலும் ஒன்றாக உழைக்கும்போது, அவர்களது தீர்மானங்கள் பரலோகத்திலிருந்து ஆசீர்வதிக்கப்படுகின்றன.
தனிநபர்களாகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் கர்த்தருடைய சித்தத்தை அறிய நாடுபவர்கள் மன்னிப்பு சாந்தம், தயவு மற்றும் அன்புக்காகவும் முயல வேண்டும். விசேஷமாக தங்கள் குடும்பங்களுக்காக கர்த்தரின் சித்தத்தை நாடுபவர்களின் அடையாளம் தாழ்மையும் அன்புமே.
உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கும், நம்மை பரிபூரணப்படுத்துவதும், நம்மைத் தகுதிப்படுத்துவதும், தேவனை சந்திக்க ஆயத்தப்படுவதும் தனிப்பட்ட பொறுப்புகள். நாம் சுயசார்புடையவர்களாகவும், நம்மைச் சுற்றியுள்ள புயல்களுக்கு அடைக்கலமாகவும்,25 விசுவாசத்தின் புகலிடமாகவும் ஆக ஆர்வமாக ஈடுபட வேண்டும்.26 தங்கள் பிள்ளைகளுக்கு அன்புடன் போதிக்க பெற்றோருக்கு பொறுப்பு உண்டு. அன்பால் நிரம்பிய வீடுகள் ஒரு மகிழ்ச்சி, ஒரு குதூகலம், பூமியில் ஒரு உண்மையான பரலோகம்.27
என் அம்மாவின் பிடித்த பாடல் “வீட்டில் அன்பு.“28 “வீட்டில் அன்பு இருக்கும்போது, நம்மைச் சுற்றிலும் அழகு இருக்கிறது,“ என்ற முதல் சொற்றொடரை கேட்கும்போதெல்லாம், அவர் தொடப்பட்டு, கண்ணீர் விடுவார். பிள்ளைகளாக நாம் அப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்ந்ததை அறிவோம். அது அவரது பிரதான முன்னுரிமைகளில் ஒன்று. 29
அன்பான சூழ்நிலையோடு, நமது முக்கிய நோக்கங்களை தடுக்கிற ஊடக உபயோகத்தை குறைப்பது பற்றி தலைவர் நெல்சன் கவனத்தில் கொள்கிறார். 30 எந்த குடும்பத்துக்கும் ஆதாயம் கொடுக்கிற ஒரு அனுசரிப்பு, இணைய தளத்தையும், சமூக ஊடகத்தையும், தொலைக்காட்சியையும் கவனச்சிதறலைவிடவும் மோசமான எஜமானாக ஆக்குவதை விட, வேலைக்காரனாக ஆக்க வேண்டும். அனைவரது குறிப்பாக பிள்ளைகளின் ஆத்துமாக்களுக்கான யுத்தம் அடிக்கடி வீட்டில் நடக்கிறது. பெற்றோராக ஊடக பாடம் ஆரோக்கிமானதாகவும், வயதுக்கு பொருத்தமானதாகவும், நாம் உருவாக்க முயலும் அன்பான சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நமது வீடுகளில் போதித்தல் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும், ஆனால் ஆவிக்குரியதாகவும், சந்தோஷமாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.31
இரட்சகர் மற்றும் அவரது பாவநிவர்த்தியில் நமது அன்பை கவனிக்கும்போது, திரையின் இருமருங்கிலும் இஸ்ரவேலை கூட்டிச் சேர்க்கும் முயற்சிகளிலும் அவரை மையமாக வைத்து, பிறருக்கு ஊழியம் செய்து, தனிப்பட்ட விதமாக தேவனை சந்திக்க ஆயத்தம் செய்யும்போதும், சத்துருவின் செல்வாக்கும் குறையும், கிறிஸ்து போன்ற அன்பால் நமது வீடுகளில் சுவிசேஷத்தின் சமாதானம் அதிகரிக்கும் என நான் வாக்குத்தத்தம் செய்கிறேன்.32 இந்த கோட்பாட்டு வாக்குத்தத்தங்கள் பற்றி சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நமக்காக இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரணபலி பற்றிய உறுதியான சாட்சியளிக்கிறேன், ஆமென்.