2010–2019
அவருக்காக
அக்டோபர் 2018


அவருக்காக

மற்றவர்களுக்கு சேவைசெய்யும்போது யாரென்றும் ஏனென்றும் அறிவது, தேவனிடத்தில் அர்ப்பணிப்பு மற்றும் அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள நமக்குதவுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரவில், என்னுடைய அன்பான சகோதரிகளே, உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன். உங்கள் வயது, இடம் அல்லது சூழ்நிலை எதுவாயிருந்தாலும், இன்றிரவு ஒற்றுமையிலும், பெலத்திலும், நோக்கத்திலும், நமது பரலோக பிதாவாலும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் மற்றும் நமது அன்பான தலைவர் ரசல் எம். நெல்சனாலும் நாம் நேசிக்கப்படுகிறோம், நடத்தப்படுகிறோம் என்ற சாட்சியிலும் நாம் கூடியிருக்கிறோம்.

அநேக ஆண்டுகளாக, சபைக்கு வராத ஒரு குடும்பத்தினரை சந்திக்கவும், ஊழியம் செய்யவும், ஒரு இளம் தம்பதியாக என்னுடைய கணவரும் நானும் எங்கள் ஆயரால் அழைக்கப்பட்டோம். பணியை நாங்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு, ஒரு சில நாட்களுக்குப் பின் அவர்களுடைய வீட்டிற்குப் போனோம். சபையிலிருந்து வருபவர்களை அவர்கள் விரும்பவில்லை என்பது உடனேயே எங்களுக்கு தெளிவானது.

ஆகவே எங்களுடைய அடுத்த சந்திப்பில், சாக்லேட் துண்டுகள் அவர்களுடைய இருதயங்களை இளக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு தட்டு பிஸ்கட்டுகளுடன் நாங்கள் அவர்களை அணுகினோம். ஆனால் அவைகள் இளக்கவில்லை. நாங்கள் வரவேற்கப்படவில்லை என்பதை தெளிவாகக் காட்டி வாயில்திரை வழியாக தம்பதியர் எங்களிடம் பேசினார்கள். ஆனால் நாங்கள் வீட்டிற்குப் போகும் வழியில், பிஸ்கட்டுகளுக்குப் பதிலாக அரிசி தின்பண்டங்களைக் கொண்டுபோயிருந்தால் வெற்றியடைந்திருப்போம் என்று நாங்கள் நிச்சயமாயிருந்தோம்.

எங்களுடைய ஆவிக்குரிய பார்வைக் குறைவால் கூடுதலான தோல்வியடைந்த முயற்சிகள் விரக்தியடையச் செய்தது. நிராகரிப்பு எப்போதுமே ஆறுதலாயிருப்பதில்லை. “இதை நாங்கள் ஏன் செய்துகொண்டிருக்கிறோம்? எங்களுடைய நோக்கம் என்னவென்று?” காலப்போக்கில் நாங்கள் எங்களையே கேட்டுக்கொண்டோம்.

மூப்பர் கார்ல் பி. குக் இப்படிச் சொன்னார், “நம்மைப் பயமுறுத்துகிற ஒன்றைச் செய்ய நாம் கேட்கப்பட்டால், அல்லது சேவை செய்வதில் நாம் சோர்ந்து போனால், அல்லது ஆரம்பத்தில் ஈர்க்கப்படாததாக நாம் காண்கிற ஒன்றைச் செய்ய நாம் அழைக்கப்பட்டால், சபையில் சேவை செய்வது சவாலாக இருக்கும்.” 1 எங்களைவிட மிக அதிக கண்ணோட்டமிக்க ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலை நாட நாங்கள் தீர்மானித்தபோது மூப்பர் குக்கின் வார்த்தைகளிலுள்ள சத்தியத்தை நாங்கள் அனுபவித்தோம்.

ஆகவே, அதிக சிரத்தையான ஜெபத்திற்கும் படிப்பிற்கும் பின்பு, ஏன் எங்களுடைய சேவை என்பதற்கான அர்த்தத்தைப் பெற்றோம். எங்களுடைய புரிந்துகொள்ளுதலில் ஒரு மாற்றமும், இருதயத்தில் ஒரு மாற்றமும், உண்மையாகவே ஒரு வெளிப்படுத்தலின் அனுபவமும் ஏற்பட்டது. 2 வேதங்களிலிருந்து வழிநடத்துதலை நாங்கள் நாடியபோது மற்றவர்களுக்கு சேவை செய்யும் முறையை எளிதாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் எவ்வாறு செய்வதென கர்த்தர் எங்களுக்குப் போதித்தார். எங்கள் இருதயங்களையும் எங்கள் அணுகுமுறையையும் மாற்றிய நாங்கள் படித்த வசனம் இங்கே இருக்கிறது. “உங்கள் முழுஇருதயத்தோடும் உங்கள் முழுஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் உங்கள் தேவனாகிய கர்த்தரில் நீங்கள் அன்புகூருவீர்களாக மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை சேவிப்பீர்களாக.3 இந்த வசனங்கள் மிக பிரசித்தமானதாயிருந்தாலும், ஒரு புதிய, முக்கியமான விதமாக எங்களிடம் பேசுவதாகத் தோன்றியது.

இந்த குடும்பத்திற்கு சேவை செய்யவும், ஆயருக்கு சேவை செய்யவும், நாங்கள் சிரத்தையோடு முயல்வதாக நாங்கள் உணர்ந்தோம், ஆனால், கர்த்தரிடத்தில் உண்மையான அன்பினால் உண்மையாக நாங்கள் சேவை செய்தோமா என நாங்கள் எங்களையே கேட்கவேண்டியதிருந்தது. “இதோ, உங்களுக்குச் சேவை செய்வதில் என் நாட்களைக் கழித்தேன் என்று உங்களுக்குச் சொன்னதினிமித்தம் நான் மேன்மை பாராட்ட விரும்பவில்லை, ஏனெனில் நான் தேவனுடைய சேவையில் மாத்திரமே இருந்திருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என பென்யமீன் இராஜா சொன்னபோது இந்த வேறுபாட்டை அவன் தெளிவுபடுத்தினான். 4

ஆகவே பென்யமீன் இராஜா உண்மையில் யாருக்கு சேவை செய்துகொண்டிருந்தான்? மற்றவர்களுக்கு சேவைசெய்யும்போது யாரென்றும்ஏனென்றும் அறிவது, தேவனிடத்தில் அர்ப்பணிப்பு, அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள நமக்குதவுகிறது.

எங்கள் கவனம் மெதுவாக மாறியதைப்போல, எங்கள் ஜெபங்களும் மாறின. கர்த்தரிடத்தில் எங்களுக்குள்ள அன்பினால் இந்த குடும்பத்துடனான எங்கள் சந்திப்பை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். 5 அவருக்காக நாங்கள் இதை செய்துகொண்டிருந்தோம். போராட்டத்தை இனியும் அவர் போராட்டமாக்கவில்லை. கதவுக்கருகில் நின்றுகொண்டிருந்த பல மாதங்களுக்குப் பின்னர், மெதுவாக அந்த குடும்பம் எங்களை உள்ளே அனுமதித்தார்கள். இறுதியாக, நாங்கள் ஒழுங்காக ஜெபித்தோம், மென்மையாக சுவிசேஷ கலந்துரையாடல் செய்தோம். ஒரு நீண்டகால நட்பு விருத்திசெய்யப்பட்டது. அவருடைய பிள்ளைகளை நேசிப்பதால் நாம் அவரை தொழுதுகொள்கிறோம், நேசிக்கிறோம்.

தேவையிலிருக்கிற ஒருவருக்கு உதவிசெய்ய சிரத்தையான முயற்சியுடன் அன்பாக நீங்கள் அணுகியபோது, உங்கள் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போனதாக, அல்லது ஒருவேளை பாராட்டப்படாததாக அல்லது தேவையற்றதாகக்கூட இருந்த ஒரு நேரத்தை நீங்கள் நினைத்துப்பார்க்க முடிகிறதா? அந்த நேரத்தில், உங்கள் சேவையின் மதிப்பைப்பற்றி கேள்வி கேட்டீர்களா? அப்படியானால், உங்கள் சந்தேகத்தையும் உங்கள் காயத்தையும்கூட “நீங்கள் தேவனுக்கே சேவை செய்கிறீர்கள்” 6 என்ற பென்யமீன் இராஜாவின் வார்த்தைகள் மாற்றுவதாக.

சீற்றத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, நமது பரலோக பிதாவுடன் ஒரு அதிக பரிபூரணமான உறவை சேவையின் மூலமாக நாம் வளர்க்கலாம். அவர் மீதுள்ள நமது அன்பும், அர்ப்பணிப்பும் அங்கீகாரத்திற்கான தேவையையும் அல்லது பாராட்டையும் முன்கூட்டியே தடுத்துநிறுத்தி நமக்கும் நம்மூலமும் அவர் அன்பு பொழிய அனுமதிக்கிறது.

ஒரு கடமையுணர்வில் அல்லது பொறுப்புணர்வில் சிலநேரங்களில் முதலில் நாம் சேவைசெய்வோம், ஆனால், “மற்றவர்களை கண்காணிக்கவும் ஊழியம் செய்யவும் ஒரு புதிய, பரிசுத்த அணுகுமுறைக்கு” தலைவர் நெல்சனின் அழைப்பைப்போல, அந்த சேவையும்கூட “ஒரு சிறந்த விதமாக சேவை” 7 செய்ய வழிநடத்தி, நம்மை நமக்குள்ளே ஒரு உயர்ந்ததை நெருங்க நம்மை நடத்தலாம். 8

தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நாம் கவனிக்கும்போது, நன்றியுணர்வின் இருதயத்திலிருந்து நமது சேவை வழிந்தோடுகிறது. நம்மை சிறப்பாக்குகிற நமது சேவையைப்பற்றி நாம் குறைவாக அக்கறைகாட்டும்போது, பதிலாக, நமது சேவையின் கவனம், தேவனை முதன்மையாக்குவதை நாம் உணர்வோம். 9

“நம் முழுஇருதயங்களோடும், ஆத்துமாக்களோடும், மனங்களோடும் தேவனையும் கிறிஸ்துவையும் நாம் நேசித்தால் மட்டுமே தயவு மற்றும் சேவையின் மூலமாக நமது அயலாருடன் இந்த அன்பை நம்மால் பகிர்ந்துகொள்ளமுடியும்” என தலைவர் எம். ரசல் பலார்ட் போதித்தார். 10

இந்த தெய்வீக ஞானத்தை பத்து கற்பனைகளின் முதலாம் கற்பனை, “உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” 11 என வலியுறுத்துகிறது. இந்த கற்பனை கொடுக்கப்பட்டுள்ள இடம், நமது முதல் முன்னுரிமையாக நாம் அவரை வைத்தால் மற்றவை அனைத்தும், மற்றவர்களுக்கான நமது சேவையும்கூட முடிவாக அதனதன் இடத்திலிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நமது தெளிவான தேர்ந்தெடுப்பால் நமது வாழ்க்கையில் முக்கிய ஸ்தானத்தை அவர் எடுக்கிறபோது, பின்னர், நமது நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் நமது செயல்களை ஆசீர்வதிக்க அவரால் முடிகிறது.

“ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப் பார்” 12 என கர்த்தர் ஆலோசனையளித்தார். “எப்பொழுதும் அவரை நினைவுகூருதலான” 13 அதைச் செய்ய ஒவ்வொரு வாரமும் நாம் உடன்படிக்கை செய்கிறோம். நாம் செய்கிற ஒவ்வொன்றிலும் அத்தகைய தெய்வீக கவனம் பொருந்துமா? ஒரு தாழ்மையான வேலையை செய்வதில்கூட அவரிடத்தில் நமக்குள்ள அன்பையும் பக்தியையும் காட்ட ஒரு சந்தர்ப்பமாக மாறுமா? அது முடியக்கூடியதாகுமென்றும் முடியுமென்றும் நான் நம்புகிறேன்.

செய்யவேண்டியவை பட்டியலில் ஒவ்வொரு விவரத்தையும் சேர்ப்பது அவரை மகிமைப்படுத்தும் ஒரு வழியாகிறது. காலக்கெடுக்களின், கடமைகளின், வீட்டுவேலைகளின் நடுவில் நாமிருக்கும்போதும் ஒவ்வொரு பணியையும் ஒரு சிலாக்கியமாகவும், சந்தர்ப்பமாகவும் நாம் பார்க்கலாம்?

அம்மோன் சொன்னதைப்போல, “ஆம், நான் ஒன்றுமில்லை, என் பெலத்தை பொருத்தமட்டில் நான் பெலவீனன் என்று அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் என்னைக்குறித்து மேன்மை பாராட்டாமல் தேவனைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன். ஏனெனில், அவருடைய பெலத்தினால் நான் சகலத்தையும் செய்யக்கூடும்.” 14

வாழ்க்கையில், நமது தேவனுக்கு சேவை செய்வது நமது பிரதானமான முன்னுரிமையாகும்போது, நம்மையே நாம் தொலைக்கிறோம், காலப்போக்கில் நம்மையே நாம் காண்கிறோம். 15

இந்தக் கொள்கையை மிக எளிமையாகவும் நேரடியாகவும் இரட்சகர் போதித்தார் “ஆதலால் இவ்விதமாய், ஜனங்கள் உங்களுடைய நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலுள்ள உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி அவர்களுக்கு முன்பாக உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது.” 16

இந்தியாவின் கல்கத்தாவிலுள்ள, ஒரு அனாதை ஆசிரமத்தின் சுவற்றில் காணப்பட்ட சில ஞானவார்த்தைகளை நான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். “நீங்கள் தயவுள்ளவராயிருந்தால், சுயநலவாதி என்றும் மறைவான உள்நோக்கமுடையவரென்றும் மக்கள் உங்களை குற்றம் சாட்டுவார்கள். எப்படியாயினும் தயவுள்ளவராயிருங்கள். கட்டுவதற்கு பல ஆண்டுகள் நீங்கள் செலவழித்து, ஒரே இரவில் யாரோ ஒருவரால் அதை அழிக்கமுடியும். எப்படியாயினும் கட்டுங்கள். இன்று நீங்கள் செய்கிற நன்மையை, எப்போதுமே மக்கள் நாளையே மறந்துவிடுவார்கள். எப்படியாயினும் நன்மை செய்யுங்கள். உங்களிடமுள்ள மிகச்சிறந்தவற்றை உலகத்திற்கு கொடுங்கள், இது எப்போதுமே போதுமாயிருக்காது. எப்படியாயினும் உங்களிடமுள்ள சிறந்தவற்றை உலகத்திற்குக் கொடுங்கள். இறுதியான ஆய்வில், எப்படியாயினும் இது உங்களுக்கும் தேவனுக்குமிடையிலுள்ளதென நீங்கள் காண்பீர்கள்.” 17

சகோதரிகளே, இது எப்போதும் நமக்கும் கர்த்தருக்குமிடையிலானது. தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்ட் சொன்னதுபோல, “உலகத்தின் மிகப்பெரிய தேவை என்ன? . . . உலகமுழுவதிலும் ஒவ்வொருவருக்கும் இரட்சகரிடத்தில் ஒரு தனிப்பட்ட, நடந்துகொண்டிருக்கிற, அன்றாட, தொடர்ந்த உறவுகொண்டிருப்பது பெரிய தேவையாயில்லையா? இத்தகைய ஒரு உறவைக்கொண்டிருப்பது நமக்குள்ளிருக்கிற தெய்வீகத்தை அவிழ்க்க முடியும், தேவனுடன் நமது தெய்வீக உறவை அறிந்து, புரிந்துகொள்ளும்போது, நம் வாழ்க்கையில் எதுவுமே ஒரு பெரிய வேறுபாட்டை உண்டாக்கமுடியாது.” 18

அதுபோலவே, ஆல்மா தன்னுடைய மகனுக்கு விவரித்தான், “ஆம், உன் எல்லா ஆதரவிற்காகவும் தேவனிடத்தில் கூக்குரலிடு, ஆம், உன் எல்லா செயல்களும் கர்த்தருக்கு உகந்ததாக இருக்கட்டும், நீ எங்கு போனாலும் அது கர்த்தருடைய சித்தமாகவே இருக்கட்டும். ஆம் உன் சகல சிந்தனைகளும் கர்த்தருக்கு நேராய் இருக்கட்டும், ஆம் உன் இருதயத்தின் பற்றுதல் என்றென்றைக்கும் கர்த்தர் மீதே இருக்கட்டும்.” 19

அதைப்போன்று, “அவருடைய தானே முன்வந்து செய்த பாவநிவர்த்தியை நாம் புரிந்துகொள்ளும்போது, நம்முடைய பங்காக தியாகத்தின் எந்த உணர்வும், அவருக்கு சேவை செய்வதின் சிலாக்கியத்திற்காக ஆழ்ந்த நன்றியுணர்வால் முற்றிலுமாக மேலோங்கும்” என தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்குப் போதித்தார். 20

சகோதரிகளே, அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையின் மூலமாக இயேசு கிறிஸ்து நம்மீதும்நமக்குள்ளும் கிரியை செய்யும்போது, மற்றவர்களை ஆசீர்வதிக்க நம் மூலமாக அவர் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். ஆனால், அவரில் அன்புகூருவதாலும் சேவை செய்வதாலும் நாம் அவர்களுக்கு சேவை செய்கிறோம். வேதங்கள் விவரிப்பதைப்போல, நாம் மாறுகிறோம். “ஒவ்வொரு மனுஷனும் [மனுஷியும்] அவனுடைய [அல்லது அவளுடைய] அயலானுடைய விருத்தியை நாடி தேவனின் மகிமைக்கென்ற ஒத்த நோக்கத்திற்காக சகல காரியங்களையும் செய்யவேண்டும்.” 21

அவருடைய அன்பான குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் ஊழியம் செய்ய அந்த ஆரம்ப, நல்லெண்ணத்தின் காலத்தில் இன்னமும் சரியாகாத முயற்சிகளிலிருந்து என்னுடைய கணவரும் நானும் அந்த பாடத்தைக் கற்றுக்கொள்வோம் என்பதை எங்களுடைய ஆயர் அறிந்திருக்கலாம். அவருக்காக நாங்கள் சேவை செய்ய முயற்சிக்கும்போது எங்களோடு அவர் பகிர்ந்துகொண்ட நன்மையையும் அன்பையும் என்னுடைய தனிப்பட்ட நிச்சயமான சாட்சியாக நான் பகருகிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்