பிதாவால் கொடுக்கப்பட்ட நாமத்தை எல்லாரும் தங்கள் மீது தரித்துக்கொள்ள வேண்டும்.
இரட்சகரின் நாமம் மட்டுமே தேவையான வல்லமை பெற்றுள்ளது. அதனால் இரட்சிப்பு சாத்தியமாகும் ஒரே நாமம் அதுவே.
சில வாரங்களுக்கு முன், பல எட்டு வயது பிள்ளைகளின் ஞானஸ்நானத்தில் நான் பங்கேற்றேன். அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து சுவிசேஷத்தைக் கற்கத் தொடங்கியிருந்தனர். அவரில் அவர்களது விசுவாச விதை வளரத் தொடங்கியிருந்தது. இப்போது அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் அங்கத்தினர்களாக ஞானஸ்நானத் தண்ணீரில் அவரைப் பின்பற்ற விரும்பினர். அவர்களது எதிர்பார்ப்பை நான் கவனித்தபோது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ள அவர்களது ஒப்புக்கொடுத்தல், தங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையின் ஒரு முக்கிய அம்சத்தைப்பற்றி அவர்கள் எவ்வளவு அதிசயப்பட்டார்கள் என நான் ஆச்சரியப்பட்டேன்.
தொடக்கத்திலிருந்தே, நமக்காக அவரது திட்டத்தில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் முக்கியத்துவத்தை தேவன் அறிவித்தார். ஒரு தூதன் நமது முதல் பிதாவுக்கு போதித்தான், ஆதாமே: “நீ செய்யும் சகலத்தையும் குமாரனின் நாமத்தில் செய்வாயாக, நீ என்றென்றைக்கும் குமாரனின் நாமத்தில் தேவனை அழைப்பாயாக.” 1
மார்மன் புஸ்தக தீர்க்கதரிசியான பென்யமீன் இராஜா தன் ஜனத்துக்கு போதித்தான், “மனுபுத்திரருள் இரட்சிப்பு வர மற்ற எந்த நாமமோ, வழியோ, மார்க்கமோ கொடுக்கப்படவில்லை.” 2
தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித் மூலம் இச்சத்தியத்தை வலியுறுத்தினார்: “இதோ பிதாவால் கொடுக்கப்பட்ட நாமம் இயேசு கிறிஸ்துவே, மனுஷன் இரட்சிக்கப்படக்கூடிய வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.” 3
நமது நாளில் தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்ததாவது “இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் விசுவாசத்தைப் பிரயோகிப்போர், அவரது உடன்படிக்கையில் பிரவேசிப்பார்கள் ... அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் உரிமை கோர முடியும்.” 4
தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் அநேக நாமங்களுக்குள் ஒன்று இல்லை என நமது பரலோக பிதா முற்றிலுமாக தெளிவுபடுத்த விரும்புகிறார். இரட்சகரின் நாமம் தனித்துவமான மற்றும் முக்கியமான வல்லமை ஆகும். அதன் மூலம் இரட்சிப்பு சாத்தியமாகிற ஒரே நாமம். ஒவ்வொரு ஊழியக்காலத்திலும் இச்சத்தியத்தை வலியுறுத்தி, நமது அன்புமிக்க பரலோக பிதா தன் அனைத்து பிள்ளைகளுக்கும், அவரிடம் திரும்பி வர ஒரு வழி இருக்கிறது என வலியுறுத்தினார். ஆனால் கிடைக்கிற உறுதியான வழியைப் பெறுவதென்பது நாம் திரும்ப செல்வது தாமாகவே உறுதிசெய்யப்பட்டுவிட்டது என்பதாகாது. நமது செயல் தேவை என தேவன் சொல்லுகிறார்: “ஆகவே எல்லா ஆண்களும் [பெண்களும்] பிதாவால் கொடுக்கப்பட்ட நாமத்தை தங்கள்மீது தரித்துக்கொள்ள வேண்டும்.” 5
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் மட்டுமே வருகிற இரட்சிக்கும் வல்லமையை பெற “தேவனுக்கு முன்பாக [நம்மைத்] தாழ்த்துகிற யாவரும் ... நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் வருகிறவர்களும் ... [தங்கள்] மீது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொள்பவர்கள் ... அதனிமித்தம் என் எட்டு வயது நண்பர்கள் போல தகுதி பெறுகிறார்கள். அவரது சபைக்குள் ஞானஸ்நானத்தால் வரவேற்கப்படுவார்கள்.” 6
உண்மையாகவே தங்கள் மீது இரட்சகரின் நாமத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளோர், தகுதி பெற்று தங்கள் தீர்மானத்தில், தேவனின் வெளியரங்கமான சாட்சியாக ஞானஸ்நான நியமத்தைப் பெற வேண்டும். 7 ஆனால் ஞானஸ்நானம் ஆரம்பம்தான்.
தரித்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை மந்தமானது அல்ல. பல்வேறு விளக்கங்களுடன் அது ஒரு செயல் வார்த்தை. 8 அதுபோல இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நமது ஒப்புக்கொடுத்தல் பல பரிமாணங்களையுடையது.
உதாரணமாக, தரிப்பது என்ற வார்த்தையின் அர்த்தம் எடுப்பதற்கு சமமானது அல்லது ஒரு பானத்தை குடிப்பது போன்ற ஒருவரின் சரீரத்துக்குள்ளே பெற்றுக்கொள்வது ஆகும். கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொண்டு, அவரது போதனைகளையும், அவரது குணாதிசயங்களையும், நமது ஒரு பாகமாக அவை ஆகும்படிக்கு நம்முள் ஆழமாக, முடிவாக அவரது அன்பையும் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொடுக்கிறோம். அவ்வாறே இளைஞர்களுக்கு வேதங்களில் குறிப்பாக மார்மன் புஸ்தகத்தில் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிப்பதுபற்றிய “[அவர்களுக்கு] தனிப்பட்ட விதமாக [இரட்சகரின்] பல்வேறு பட்டங்களில் ஒவ்வொன்றும் என்ன என ஜெபத்துடனும் உருக்கமாகவும் அறிய” 9 தலைவர் ரசல் எம். நெல்சனின் அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 10
தரித்தல் என்ற வார்த்தையின் மற்றொரு அர்த்தம், ஒரு குறிப்பிட்ட வேஷத்தில் ஒருவரை ஏற்றுக்கொள்வது அல்லது ஒரு கருத்து அல்லது கொள்கையின் சத்தியத்தை தழுவிக்கொள்வதாகும். நாம் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொள்ளும்போது, அவரை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்வதும், நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அவரது போதனைகளைத் தொடர்ந்து தழுவிக்கொள்வதும் ஆகும். நாம் செய்கிற ஒவ்வொரு அர்த்தமிக்க தீர்மானங்களிலும் அவரது சுவிசேஷத்தை உண்மையானது என எடுத்துக்கொள்ளவும், நமது முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும் பெலத்தோடும் கீழ்ப்படிதலுடன் வாழ முடியும்.
தரித்தல் என்ற வார்த்தை, ஒரு பெயருடன் அல்லது ஒரு நோக்கத்துடன் ஒருவரை இணைத்துக்கொள்வதாகும். நம்மில் அதிகமானோர் பணியிடத்தில் ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ளுதல் அல்லது ஒரு நோக்கத்தின் அல்லது இயக்கத்தின் எடுத்துகொள்ளும் அனுபவம் பெற்றுள்ளோம். கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளும்போது, நாம் ஒரு உண்மையான சீஷனின் பொறுப்புக்களை நம்மீது எடுத்துக் கொள்கிறோம், அவரது நோக்கத்தை ஆதரிக்கிறோம், “நாம் இருக்கும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிலும் அவருடைய சாட்சிகளாக இருக்கிறோம்.” 11 பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 12 முதல் 18 வயதுடைய ஒவ்வொரு இளம்பெண்ணையும் ஒவ்வொரு வாலிபனையும், இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதில் உதவ கர்த்தரின் சேனையில் சேர தலைவர் நெல்சன் அழைத்திருக்கிறார். 12 இரட்சகர் தம்மாலேயே வெளிப்படுத்தப்பட்ட அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் பெயரை அறிவிக்கும் தீர்க்கதரிசன அழைப்பை எடுத்துக் கொள்ள நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்: பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை. 13
நம்மீது இரட்சகரின் நாமத்தைத் தரித்துக்கொள்ளும் முறையில் கிறிஸ்துவின் நோக்கமும் அவரது சபையின் நோக்கமும் ஒன்றே என நாம் புரிந்து கொள்கிறோம். அவை பிரிக்கப்பட முடியாது. அதுபோலவே இரட்சகருக்கு நமது தனிப்பட்ட சீஷத்துவமும், அவரது சபையில் ஆர்வமிக்க அங்கத்தினரத்துவமும் பிரிக்க முடியாதவை. ஒன்றில் நமது ஒப்புக்கொடுத்தல் வலுவிழந்தால் பகலைத் தொடர்ந்து இரவு வருவது போல அடுத்தவருக்கு நமது ஒப்புக்கொடுத்தல் மங்கி விடும்.
சிலர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தையும் அவரது நோக்கத்தையும் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். ஏனெனில் அவர்கள் அதை தேவையற்ற குறுகிய, கட்டுப்படுத்துகிற, அடைத்துவைக்கிறதாகக் கருதுகிறார்கள். உண்மையில் கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்தல், விடுதலையாக்குவதும் விரிவாக்குவதும் ஆகும். இரட்சகரில் விசுவாசத்தின் மூலம் நாம் தேவனின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது, நாம் உணர்ந்த வாஞ்சையை அது எழுப்புகிறது. நமது இருதயங்களில் இந்த வாஞ்சை உயிரோடிருக்கும்போது, தெய்வீகத்தால் நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்கள், தாலந்துகளின் உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடித்து, அவரது வல்லமையளிக்கும் அன்பை அனுபவித்து பிறரின் நன்மைபற்றிய நமது அக்கறையில் வளர்வோம். இரட்சகரின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளும்போது, எல்லா நன்மையானவற்றையும் பற்றிக்கொண்டு, அவரைப் போலாவோம். 14
ஞானஸ்நானத்தில் நாம் செய்கிற உடன்படிக்கையில் தொடங்கி, இரட்சகரின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வது ஒரு ஒப்புக்கொடுத்தல். உடன்படிக்கையை நாம் நினைவுகொள்வது முக்கியமாகும். தலைவர் நெல்சன் போதித்திருக்கிறார், “அவருடன் உடன்படிக்கை செய்து இரட்சகரைப் பின்பற்றும் [நமது] ஒப்புக்கொடுத்தலும் பின்னர் அந்த உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளுதலும் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்கும் கிடைக்கக்கூடிய சிலாக்கியத்துக்கும் கதவைத் திறக்கும்.” 15 ஞானஸ்நானம் மூலம் இரட்சகரின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ளுதலின் உயர்ந்த ஆசீர்வாதங்களில் ஒன்று, நமது திடப்படுத்தலாகிய உடன்படிக்கையின் பாதையில் அடுத்த நியமத்துக்கு நமது வழியாகும். கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொள்ளுதல் என்றால் என்ன என நினைக்கிறாய் என எனது எட்டு வயது நண்பர்களில் ஒருத்தியிடம் நான் கேட்டபோது அவள் எளிதாக பதிலளித்தாள், “அதாவது நான் பரிசுத்த ஆவியைப் பெற முடியும்.” அவள் சொன்னது சரி.
நாம் ஞானஸ்நான நியமத்தால் சுத்திகரிக்கப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியின் வரம் திடப்படுத்தலால் பெறப்படுகிறது. இடைவிடாத தோழனாக பரிசுத்த ஆவியைப் பெற இந்த வரம் உரிமையும் சந்தர்ப்பமும் ஆகும். நாம் செவிகொடுத்து அவரது அமர்ந்த மெல்லிய சத்தத்துக்கு கீழ்ப்படிந்தால், ஞானஸ்நானம் மூலமாக நாம் பிரவேசித்த உடன்படிக்கையின் பாதையில் அவர் நம்மை வைத்து, நாம் அதிலிருந்து விலகத் தூண்டப்படும்போது நம்மை எச்சரித்து, தேவைப்படுகிறபடி மனந்திரும்பவும் அனுசரிக்கவும் நம்மை ஊக்குவிப்பார். உடன்படிக்கையின் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறும்படிக்கு, ஞானஸ்நானத்துக்குப் பிறகு நமது கவனம் பரிசுத்த ஆவியை எப்போதும் நம்முடன் வைத்திருப்பதாகும். நமது வாழ்க்கையை சுத்தமாகவும் பாவமில்லாமலும் வைக்கிற அளவில் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருக்க முடியும்.
இக்காரணத்துக்காகவே, மற்றொரு நியமமாகிய திருவிருந்தின் மூலம், நமது ஞானஸ்நானத்தின் சுத்திகரிக்கும் தாக்கத்தை தொடர்ந்து புத்துணர்வுபெறச் செய்ய கர்த்தர் நமக்கு ஒரு வழியைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு வாரமும் “உமது குமாரனின் நாமத்தை எங்கள் மீது தரித்துக்கொள்ள நாங்கள் சித்தமாயிருக்கிறோம் என சாட்சியளிக்கிறோம்.” 16 பின்பு கையை நீட்டி நமது கரத்தில் கர்த்தரின் மாம்சமும் இரத்தமும் ஆன அடையாளங்களான அப்பத்தையும் தண்ணீரையும் எடுத்து, நமது ஆத்துமாக்களுக்குள் அவற்றை பங்கேற்கச் செய்து, மாற்றாக நம்மை மீண்டும் சுத்திகரிக்கும் அற்புதத்தால், அவ்வாறு பரிசுத்த ஆவியின் தொடர்ந்த செல்வாக்கு பெற நம்மைத் தகுதியாக்கி இரட்சகர் நிறைவேற்றுகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே மட்டுமே காணப்படுகிற முடிவற்ற இரக்கத்துக்கு இது சான்றில்லையா? நாம் அவரது நாமத்தை நம் மீது தரித்துக்கொள்வது போல அவர் நமது பாவங்களையும் துயரங்களையும் தம்மீது எடுத்துக் கொள்ளுகிறார். இருப்பினும் அவரது அன்பின் கரங்களால் நம்மைத் தழுவிக்கொள்ள, 18 அவரது இரக்கத்தின் கரம் “நீட்டப்பட்டிருக்கிறது.” 17
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளுதல் ஒரு உயிரோட்டமுள்ள இடைவிடாத ஒப்புக்கொடுத்தல், நமது ஞானஸ்நான நாளில் மட்டும் நிகழ்கிற ஒரு நிகழ்ச்சியல்ல என்பதன் வாராந்தர நினைவூட்டலே திருவிருந்தாகும். 19 நமது பாவங்கள் கிரயம் செலுத்தப்படவும் அவரது மாம்சத்தையும் இரத்தத்தையும் எடுக்கவும், குறைவாகவே அறியப்பட்ட மனுஷனால் கொடுக்கப்பட்ட பரிசுத்த காணிக்கையை நாம் தொடர்ந்தும் திரும்பத் திரும்பவும் அனுபவிக்கிறோம். 20 கிறிஸ்துவின் நாமத்தைத் தங்கள் மீது தரித்துக்கொள்வதிலிருந்து வருகிற வல்லமையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தேவனுடைய பிள்ளைகள் புரிந்து கொள்ளும்போதெல்லாம், அவர்களது உணர்வு எப்போதுமே மகிழ்ச்சி மற்றும் அவர்களது வாஞ்சை எப்போதும் தங்கள் தேவனுடன் ஒரு உடன்படிக்கையில் பிரவேசிப்பதுதான் என்பது சிறு ஆச்சரியமே. 21
இந்த தெய்வீகமாக வடிவமைக்கப்பட்ட உடன்படிக்கையின் பாதையை நாம் பின்பற்றும்போது, “[நமது] இருதயங்களில் [அவரது] நாமத்தை எப்போதும் எழுதப்பட்டு வைக்கப்பட” இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நமது ஒப்புக்கொடுத்தலும் முயற்சிகளும் நமக்கு பெலன் கொடுக்கும். 22 நாம் தேவனையும் நமது அயலாரையும் நேசிப்போம், அவர்களுக்கு ஊழியம் செய்ய ஒரு வாஞ்சையை உணர்வோம். நாம் அவரது கட்டளைகளைக் கைக்கொள்வோம். அவரோடு கூடுதல் உடன்படிக்கைகளில் பிரவேசித்து அவருக்கு நெருக்கமாக வர ஏங்குவோம். நடத்தையும் மெதுவாக மாறும், நாம் அவரைப்போல அதிகமாக ஆவோம். நமது நீதியான வாஞ்சையின்படி நடக்க நம்மை பலவீனமாகவும் திறமையற்றவர்களாகவும் காணும்போது, அவரது நாமத்தினாலே மட்டுமே வருகிற பெலனுக்காக நாம் கெஞ்சுவோம், நமக்கு உதவ அவர் வருவார். நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்போது நாம் அவரைப் பார்ப்போம், அவருடன் இருப்போம், பிதாவின் பிரசன்னத்துக்குத் திரும்ப தகுதிபெற்று, அவரைப்போலாகி இருக்கிறோம் என்னும் நாள் வரும்.
இரட்சகரின் வாக்குத்தத்தம் நிச்சயமானதென்பதால்: “இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்புவோரும், அவரது நாமத்தில் பிதாவை ஆராதிப்பவர்களும், கடைசிவரை அவரது நாமத்தில் விசுவாசமுடன் நிலைத்திருப்பவர்களும்” 23 தேவ இராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள். பிதாவால் கொடுக்கப்பட்ட ஒரே நாமத்தினால் இந்த ஒப்பில்லா ஆசீர்வாதங்கள் சாத்தியமாக்கப்பட்டுள்ளது என உங்களோடு நான் களிகூர்கிறேன். அவரைப்பற்றியும் அவரது நாமத்திலும் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.