2010–2019
கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருத்தல்
அக்டோபர் 2018


14:36

கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருத்தல்

கர்த்தருடைய பணியில் எனக்கன்பான தோழர்களே, சபைக்கு புதிய நண்பர்களை வரவேற்பதில் நம்மால் இன்னமும் சிறப்பாகச் செய்யமுடியும், சிறப்பாகச் செய்யவேண்டுமென நான் நம்புகிறேன்.

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, மாலை வணக்கம். எங்களுடைய சொந்த ஊரான பிரேசில் போர்ச்சுகீஸில் நாங்கள் சொல்வதைப்போல “போவா டார்டே!” (“Boa tarde!” ) நமக்கன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனின் வழிநடத்துதலின் கீழ் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இந்த அற்புதமான பொது மாநாட்டில் ஒன்றுசேர்ந்திருக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த பிற்காலங்களில் அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாக கர்த்தரின் குரலைக் கேட்க நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பத்துக்காக நான் வியப்புறுகிறேன்.

அமேசான் நதி
ஒன்றுகூடும் இரண்டு நதிகளால் அமேசான் நதி உருவாக்கப்படுகிறது

என்னுடைய சொந்த நாடான பிரேசில் மிகுந்த இயற்கை வளமுள்ளது. உலகத்திலேயே மிகப் பெரியதும் நீண்டதுமான நதிகளில் ஒன்றான பிரசித்திபெற்ற அமேசான் நதி அவைகளில் ஒன்று. சோலிமோயஸ் மற்றும் நெக்ரோ என்ற இரண்டு தனித்தனியான நதிகளால் அது உருவாகிற்று. மிக வெவ்வேறு உற்பத்தி இடங்களும், வேகங்களும், வெப்பநிலைகளும், இரசாயனங்களும் நதிகளுக்கிருப்பதால் தண்ணீர்கள் கலப்பதற்கு பல மைல்களுக்கு முன்பிருந்தே அவைகள் ஒன்றாக ஓடிவருவது சுவாரஸியமானது. ஏராளமான மைல்களுக்குப் பின்னர், இறுதியாக அதன் தனித்தனி பாகங்களைவிட தண்ணீர்கள் ஒன்றாகக் கலந்து ஒரே நதியாக மாறுகிறது. இந்த தன்மைகள் ஒன்றாகக் கலந்த பின்னரே, அது அட்லான்டிக் சமுத்திரத்தை அடையும்போது சமுத்திரத்திற்கு பல மைல்களுக்கு வெளியே இன்னமும் நல்ல தண்ணீர் கிடைக்கும்படியாக அது கடல் நீரை பின்னுக்குத்தள்ளி அமேசான் நதி மிக்க சக்தியுள்ளதாகிறது.

அமேசான் நதியின் தண்ணீர் சந்தித்தல்

அமேசான் நதியை பெரியதாக்க சோலிமோயாஸ் மற்றும் நெக்ரோ நதிகள் ஒன்றாக ஓடுகிற அதே வழியிலேயே, வெவ்வேறு சமுதாய பின்னணிகள், மரபுகள், கலாச்சாரங்களிலிருந்து கிறிஸ்துவில் பரிசுத்தவான்களின் இந்த அற்புதமான சமுதாயத்தை உருவாக்கி மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையில் தேவனின் பிள்ளைகள் ஒன்றுகூடி வருகிறார்கள். இறுதியாக, நாம் ஊக்குவித்து, ஆதரித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும்போது, உலகத்தில் நன்மை செய்வதற்காக ஒரு வலிமை மிக்க சக்தியை உருவாக்க நாம் ஒன்று கூடுகிறோம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, இந்த நன்மையின் நதியில் ஒன்றாக ஓடிவரும்போது தாகத்திலிருக்கும் உலகத்திற்கு நல்ல தண்ணீரை நம்மால் வழங்கமுடியும்.

புதிய அங்கத்தினர்கள் தேவனின் பிற பிள்ளைகளோடு ஒன்றாக வருகிறார்கள்
ஒரு பரிசுத்தவான்களின் சமூகம் உருவாக்கப்படுகிறது

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் விசுவாசத்திலும் நோக்கத்திலும் நாம் ஒற்றுமையுள்ளவர்களாக மாறும்படியாக ஒருவருக்கொருவர் நாம் எவ்வாறு ஆதரிக்கவும் அன்பு செலுத்தவும் முடியுமென்பதை நமக்குப் போதிக்க அவருடைய தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தர் உணர்த்தினார். புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் போதித்தான் , “கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே, ஏனெனில் நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.1

இரட்சகரைப் பின்பற்ற ஞானஸ்நானத்தில் நாம் வாக்களித்தபோது கிறிஸ்துவின் நாமத்தை நம்மேல் தரித்துக்கொள்ள சித்தமாயிருப்பதாக பிதாவுக்கு முன்பாக நாம் சாட்சியளித்தோம். 2நமது வாழ்வில் அவருடைய தெய்வீகப் பண்புகளைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக நாம் இருந்ததைவிட வித்தியாசமானவர்களாக மாறி, எல்லா ஜனங்களிடத்தின்மீதுள்ள நமது அன்பு இயற்கையாக அதிகரிக்கிறது.3 எல்லோருடைய நல்வாழ்வு மற்றும் சந்தோஷத்திற்கான நேர்மையான அக்கறையை நாம் உணருகிறோம். தெய்வீக தோற்றம், பண்புகள் மற்றும் சாத்தியத்துடன் தேவனின் பிள்ளைகளாக ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக நாம் பார்க்கிறோம். ஒருவருக்கொருவர் அக்கறையுள்ளவர்களாகவும் ஒருவருக்கொருவரின் பாரங்களைச் சுமக்கவும் நாம் விரும்புகிறோம். 4

இதைத்தான் பவுல், தயாளம்5 என விவரித்தான். மிக உயர்ந்த, உதாரகுணமுள்ள, அன்பின் சக்தியுள்ள வடிவமான இதை “கிறிஸ்துவின் தூய அன்பாக,” 6 மார்மன் புஸ்தகத்தின் தீர்க்கதரிசியான மார்மன் விவரித்தான். இரட்சகர் செய்ததைப்போல மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் அதிக கவனமும் பரிசுத்தமுமான அணுகுமுறையான, கிறிஸ்துவின் இந்த தூய அன்பின் ஒரு வெளிப்பாட்டை ஊழியமாக நமது தற்போதைய தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் விவரித்தார். 7

சமீபத்தில் மனமாறியவர்கள் மற்றும் நமது சபை சேவைகளில் பங்கெடுக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பவர்களை ஊக்குவித்தல், உதவுதல் மற்றும் ஆதரித்தலின் சூழலுக்குள் இரட்சகர் செய்ததைப்போல அன்பும் அக்கறையுமுள்ள இந்த கொள்கையை நாம் கருத்தில் கொள்வோமாக.

இந்த புதிய நண்பர்கள் உலகத்திற்கு வெளியே வந்து, அவருடைய சபையில் சேர்ந்து, அவர் மூலமாக மீண்டும் பிறந்தவர்களாகும்போது அவருடைய சீஷர்களாக அவர்கள் மாறுகிறார்கள். 8 அவர்கள் நன்கறிந்த ஒரு உலகத்தை விட்டு வெளியேறி, தேவனின் பிரசன்னத்திற்கு நேராக ஓடுகிற நன்மைக்கும் நீதிக்குமான ஒரு வல்லமையான படையின் ஒரு நதியான வலிமைமிக்க அமேசான் நதியைப்போல ஒரு புதிய “நதியில்” சேர்ந்து முழு இருதய நோக்கத்துடன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற தேர்ந்தெடுக்கிறார்கள். “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியென்றும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமென்றும், பரிசுத்த ஜாதியென்றும்” 9 இதை அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கிறான். இந்த புதிய அறிமுகமில்லாத நதிக்குள் இந்த புதிய நண்பர்கள் கலக்கும்போது, காணாமல் போனதாக முதலில் அவர்கள் சிறிது உணரலாம். தனித்துவமான தோற்றத்துடன், வெப்பநிலைகளுடன், இரசாயன கலவைகளுடன், தனது சொந்த மரபுகளையும், கலாச்சாரத்தையும், மொழிவழக்கு கொண்டிருக்கிற ஒரு நதியுடன் தாங்கள் கலப்பதை இந்த புதிய நண்பர்கள் காண்கிறார்கள். கிறிஸ்துவில் இந்த புதிய வாழ்க்கை அவர்களுக்கு தாங்கமுடியாதவையாகத் தோன்றலாம். “FHE,” “BYC”, “உபவாச ஞாயிறு,” “மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம்,” “முத்தொகுப்பு”, போன்ற வெளிப்பாடுகளை அவர்கள் முதன்முறையாக கேட்கும்போது அவர்கள் எப்படி உணருவார்களென ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

அவர்கள் சார்ந்தவர்களல்ல என ஏன் அவர்கள் உணருகிறார்களென பார்ப்பது எளிது. இத்தகைய சூழ்நிலைகளில், “இங்கே எனக்கு இடமிருக்கிறதா? பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு நான் பொருந்துவேனா? சபைக்கு நான் தேவையானவனா? எனக்கு உதவவும், ஆதரிக்கவும் விருப்பமுள்ள புதிய நண்பர்களை நான் கண்டுபிடிப்பேனா?” என அவர்கள் தங்களையே கேட்டுக்கொள்ளலாம்.

எனக்கன்பான நண்பர்களே, இத்தகைய தருணங்களில் சீஷத்துவத்தின் நீண்ட பயணத்தில் வெவ்வேறு இடங்களிலுள்ள நாம் அவர்கள் இருக்கிறவாறே அவர்களை ஏற்றுக்கொண்டு நமது புதிய நண்பர்களுக்கு ஐக்கியத்தின் அன்பான கரத்தை நாம் நீட்டி, உதவி, அன்பு செலுத்தி நமது வாழ்வில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த புதிய நண்பர்கள் அனைவரும் தேவனின் விலைமதிப்புள்ள குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறார்கள். 10 அதற்கு தண்ணீர் அளிக்கிற கிளை நதிகளைச் சார்ந்திருக்கிற அமேசான் நதியைப்போல அவர்களில் ஒருவரைக்கூட நம்மால் இழக்கமுடியாது, உலகத்தில் நன்மைக்கான ஒரு வல்லமையான படையாக நாம் மாறுவதற்காக அவர்களுக்கு நாம் தேவையாயிருப்பதைப்போல நமக்கு அவர்கள் தேவையாயிருக்கிறார்கள்.

தேவன் கொடுக்கிற திறமைகளையும், உற்சாகத்தையும், நன்மையையும் நமது புதிய நண்பர்கள் தங்களோடு சபைக்குக் கொண்டுவருகிறார்கள். சுவிசேஷத்திற்கான அவர்களுடைய ஆர்வம் தொற்றுகிறதாயிருந்து, நமது சொந்த சாட்சிகளுக்கு உயிரூட்ட நமக்கு உதவுகிறது. வாழ்க்கையில் சுவிசேஷத்தின் நமது புரிந்துகொள்ளுதலுக்கு புதிய கண்ணோட்டங்களையும் அவர்கள் கொண்டுவருகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில், வரவேற்கப்பட்டதாக, அன்பு காட்டப்பட்டவர்களாக உணர நமது புதிய நண்பர்களுக்கு எவ்வாறு நாம் உதவமுடியுமென நீண்ட காலமாக நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பெலமுள்ளவர்களாகவும் விசுவாசமுள்ளவர்களாகவுமிருக்கும்படியாக மூன்று காரியங்கள் அவர்களுக்கு தேவையாயிருக்கிறது.

முதலில், அவர்களிடத்தில் உள்ளார்ந்த ஆர்வமுள்ளவர்களான, தொடர்ந்து அவர்கள் திரும்பமுடிகிற, அவர்களோடு நடக்கிற, உண்மையுள்ள, விசுவாசமான, தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிற சகோதரர்களும் சகோதரிகளும், சபையில் அவர்களுக்கு தேவையாயிருக்கிறார்கள். நமக்கிருக்கிற பொறுப்புகளை, நியமனங்களை, அல்லது அக்கறைகள் பொருட்டின்றி அங்கத்தினர்களாக, சபை நிகழ்சிகளிலும் கூட்டங்களிலும் நாம் பங்கேற்கும்போது நாம் எப்போதும் கவனமாயிருந்து புதிய முகங்களைத் தேடவேண்டும். ஒரு அன்பான வரவேற்பளித்தல், அவர்களிடம் மனமார புன்னகைத்து, பாடவும் தொழவும் அவர்களோடு சேர்ந்து அமருதல், அவர்களை மற்ற அங்கத்தினர்களுக்கு அறிமுகம் செய்வது போன்ற, சபையில் அரவணைக்கப்பட்டவர்களாக, வரவேற்கப்பட்டவர்களாக நமது புதிய நண்பர்களுக்குதவ எளிய காரியங்களை நாம் செய்யலாம். இந்த சில வழிகளில், புதிய நண்பர்களுக்கு நமது உள்ளங்களைத் திறக்கும்போது ஊழியம் செய்யும் ஆவியுடன் நாம் செயல்படுகிறோம். இரட்சகர் செய்ததைப்போல நாம் அவர்களுக்கு ஊழியம் செய்யும்போது அவர்கள் “நமது வாயில்களுக்குள் அந்நியர்களாக உணராதிருப்பார்கள்,” அவர்கள் பொருந்துவார்களென்றும் புதிய நண்பர்களை அவர்களால் உண்டாக்கமுடியுமெனவும் உணருவார்கள், மிக முக்கியமாக, நம்முடைய உண்மையான அக்கறையின் மூலமாக இரட்சகரின் அன்பை அவர்கள் உணருவார்கள்.

இரண்டாவதாக, மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக புதிய நண்பர்களுக்கு ஒரு பணி தேவையாயிருக்கிறது. சேவை என்பது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் புத்திசாலித்தனங்களில் ஒன்று. நமது விசுவாசம் பலமாக வளருவதில் இது ஒரு நடைமுறை. அந்த சந்தர்ப்பத்திற்கு புதிய நண்பர்கள் ஒவ்வொருவரும் உரிமையுள்ளவர்கள். அவர்களுடைய ஞானஸ்நானத்திற்குப் பின்னர் உடனேயே அவர்களுக்கு பணிகளை வழங்க ஆயருக்கும் தொகுதி ஆலோசனைக்குழுவுக்கும் நேரடியான பொறுப்பிருக்கும்போது, சம்பிராதயமற்ற அல்லது சேவை திட்டங்கள் மூலமாக மற்றவர்களுக்கு சேவை செய்ய நமக்குதவ நமது புதிய நண்பர்களை அழைப்பதிலிருந்து நம்மை எதுவும் தடுக்காது.

மூன்றாவதாக, புதிய நண்பர்கள் “தேவனின் நல்வசனத்தால் போஷிக்கப்படவேண்டும்.”11 கதைகளுக்கு சூழ்நிலைகளை விளக்கி, கடினமான வார்த்தைகளுக்கு விளக்கமளித்து போதனைகளை அவர்களோடு நாம் படித்து கலந்துரையாடும்போது வேதங்களை நேசிக்கவும் பரிச்சயமாக்கவும் அவர்களுக்கு நாம் உதவலாம். வழக்கமான வேதப் படிப்பின் மூலமாக தனிப்பட்ட வழிகாட்டுதலை எப்படிப் பெறுவதென்பதையும் நாம் அவர்களுக்குப் போதிக்கலாம். கூடுதலாக, நமது வழக்கமான சபைக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் திட்டங்களுக்கு வெளியே சிலசமயங்களில் பரிசுத்தவான்களின் சமூகத்தின் வல்லமையான நதிக்குள் கலப்பதில் அவர்களுக்குதவும்போது, நமது புதிய நண்பர்களை அவர்களுடைய வீடுகளில் சந்திப்பது மற்றும் நமது வீடுகளுக்கு அவர்களை அழைத்து நாம் அணுகலாம்.

நமது சகோதரர்களாக, சகோதரிகளாக, தேவனின் குடும்பத்தில் அங்கத்தினர்களாவதில், அனுசரிப்புகள் மற்றும் சவால்களை அங்கீகரிப்பதில் நமது வாழ்க்கையில் இதேமாதிரியான சவால்களை எவ்வாறு நாம் மேற்கொண்டோமென்பதை நாம் பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் தனிமையில் இல்லை என்றும் அவருடைய வாக்குத்தத்தங்களில் அவர்கள் விசுவாசம் வைக்கும்போது தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்றறிய இது அவர்களுக்குதவும். 12

சோலிமோயஸ் மற்றும் நெக்ரோ நதிகள் ஒன்றாகக் கலக்கும்போது அமேசான் நதி வல்லமையுள்ளதாகவும் பலமுள்ளதாகவுமாகிறது. இதே பாணியில் நாமும் நமது புதிய நண்பர்களும் உண்மையாகக் கலக்கும்போது, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபை இன்னமும் பலமானதாகவும் நிலையானதாகவும் மாறுகிறது. எங்களுடைய சொந்த நாட்டில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நாங்கள் தழுவியபோது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய நதிக்குள் கலக்க எங்களுக்குதவிய அனைவருக்கும் என்னுடைய பிரியமான ரோசன்னாவும் நானும் மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த ஆண்டுகள் முழுவதிலும், இந்த அற்புதமான மனிதர்கள் உண்மையிலேயே எங்களுக்கு ஊழியம் செய்து நீதியில் தொடர்ந்து செல்வதற்கு எங்களுக்குதவினார்கள்.

நித்திய ஜீவனை நோக்கி இந்த புதிய நதிக்குள் உண்மையாக ஒன்றுகூடி ஓடுவதில் புதிய நண்பர்களை எவ்வாறு காத்துக்கொள்வதென்பதை மேற்கு கோளத்திலுள்ள தீர்க்கதரிசிகள் நன்கறிந்திருந்தனர். உதாரணமாக நமது நாட்களைப் பார்த்ததிலும், இதே மாதிரியான சவால்களை நாம் எதிர்கொள்வோமென்பதை அறிந்து13 மார்மன் புஸ்தகத்தில், மார்மன் அவனுடைய எழுத்துக்களில் அந்த முக்கிமான படிகள் சிலவற்றை சேர்த்தான்:

“அவர்கள் ஞானஸ்நானத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நடப்பிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்பு, அவர்கள் கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களுக்குள்ளே எண்ணப்பட்டார்கள். அவர்கள் நினைவுகூரப்பட்டு தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்படவும், அவர்களை நல்வழியில் வைத்திருக்கவும், தொடர்ந்து ஜெபத்திலே விழித்திருக்கச் செய்யவும், அவர்களுடைய விசுவாசத்தைத் தொடங்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற கிறிஸ்துவின் இரட்சிக்கிற வல்லமையில் மாத்திரம் சார்ந்திருக்கவும், அவர்களுடைய நாமங்கள் குறிக்கப்பட்டது.

“சபை உபவாசித்திருக்கவும், ஜெபிக்கவும், தங்களுடைய ஆத்தும நலனைக்குறித்து ஒருவரோடு ஒருவர் பேசவும் அடிக்கடி கூடியது.” 14

கர்த்தருடைய பணியில் எனக்கன்பான தோழர்களே, சபைக்குள் புதிய நண்பர்களை வரவேற்பதில் நம்மால் இன்னமும் சிறப்பாகச் செய்யமுடியும், சிறப்பாகச் செய்யவேண்டுமென நான் நம்புகிறேன். அடுத்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பித்து அதிகமாய் அரவணைத்து, ஏற்றுக்கொள்ளுபவர்களாயிருக்க, அவர்களுக்கு உதவியாயிருக்க நம்மால் என்ன செய்யமுடியுமென்பதை கருத்தில்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன். சபைக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் புதிய நண்பர்களை அழைக்கும் வழியில் உங்கள் சபை நியமனங்கள் குறுக்கே வராதிருக்க கவனமாயிருங்கள். ஆயினும், தேவனின் கண்களுக்கு முன்பாக இந்த ஆத்துமாக்கள் விலையேறப்பெற்றவையாயிருந்து, நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் விட மிகமுக்கியமானவை. இரட்சகர் செய்ததைப்போல நமது இருதயங்களில் தூய அன்பின் நிறைவுடன் நமது புதிய நண்பர்களுக்கு நாம் ஊழியம் செய்தால், நமது முயற்சிகளில் அவர் நமக்குதவுவார் என அவருடைய நாமத்தில் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். இரட்சகர் செய்ததைப்போல உண்மையுள்ள ஊழியக்காரர்களாக நாம் செயல்படும்போது, பலமுள்ளவர்களாக, அர்ப்பணிப்புள்ளவர்களாக, முடிவுபரியந்தம் விசுவாசமுள்ளவர்களாக நிலைத்திருக்க நமது புதிய நண்பர்களுக்கு உதவி கிடைக்கும். தேவனின் ஒரு வல்லமையுள்ள ஜனங்களாக நாம் மாறும்போது அவர்கள் நம்மோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களின் அவசரத் தேவையிலிருக்கும் ஒரு உலகத்திற்கு நல்ல தண்ணீரைக் கொண்டுவர நமக்குதவுவார்கள். அவர்கள் “அந்நியரும் பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாருமாயிருப்பதாக” 15 இந்த தேவனின் பிள்ளைகள் உணருவார்கள். அவருடைய சொந்த சபையில் இரட்சகரின் பிரசன்னத்தை அவர்கள் காண்பார்களென நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திறந்த கரங்களால் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்வரை, “நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்களென” பிதா உரைப்பதைக் கேட்கும்வரை அனைத்து நன்மையின் ஊற்றுக்குள் ஒரு நதியாக நம்மோடு தொடர்ந்து அவர்கள் ஓடுவார்கள். 16

அவர் உங்களை நேசிப்பதைப்போல மற்றவர்களை நேசிப்பதில் கர்த்தரின் உதவியை நாட நான் உங்களை அழைக்கிறேன். “ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, [சகோதரிகளே], பிதா தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாயிருக்கிற யாவர் மேலும் அவர் அருளின இந்த அன்பினால் நீங்களும் நிரப்பப்படுவீர்கள்” 17 என மார்மன் போதித்தான். இந்த சத்தியங்கள் பற்றி, நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இதைச் செய்கிறேன், ஆமென்.