2010–2019
தெய்வீக அதிருப்தி
அக்டோபர் 2018


11:58

தெய்வீக அதிருப்தி

விசுவாசத்தில் செயல்படவும், நன்மை செய்ய இரட்சகரின் அழைப்புகளை பின்பற்றவும், நமது வாழ்க்கையை தாழ்மையாக அவருக்கு கொடுக்கவும் தெய்வீக அதிருப்தி நம்மை நகர்த்தலாம்.

நான் ஆரம்ப பள்ளியிலிருந்தபோது, ஒரு குன்றின் அருகில் போடப்பட்டிருந்த, முன்னும் பின்னுமாக சுற்றிவந்த நடைபாதையில் நாங்கள் வீட்டிற்கு நடந்துபோனோம். அங்கு போடப்படாத பையன்கள் நடைபாதை என்றழைத்த, மற்றொரு நடைபாதையிருந்தது. பையன்கள் நடைபாதை ஒரு அழுக்கு படிந்த பாதையாயிருந்தது, அது நேராக குன்றின் உயரே சென்றது. அது குறுக்குப் பாதை, ஆனால் அதிக செங்குத்தாயிருந்தது. ஒரு இளம் பெண்ணாக, பையன்கள் செல்கிற எந்த பாதையிலும் நானும் செல்லமுடியுமென்று எனக்குத் தெரியும். மிகமுக்கியமாக, நான் பிற்காலங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் முன்னோடிகள் செய்ததைப்போல கடினமான காரியங்களை நான் செய்யவேண்டியதிருக்கும் என்றும் நான் அறிந்திருந்தேன், நான் ஆயத்தமாயிருக்க விரும்பினேன். ஆகவே, எப்போதாவது, என்னுடைய காலணிகளை கழற்றிவிட்டு பையன்கள் நடைபாதையில் வெறுங்காலோடு நடந்து என்னுடைய நண்பர்கள் குழுவில் நான் பின்தங்கியிருப்பேன். என்னுடைய கால்களை பெலமாக்க நான் முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு இளம் ஆரம்ப வகுப்பு சிறுமியாக ஆயத்தப்படுவதற்கு இதைத்தான் நான் செய்யமுடியுமென நான் நினைத்தேன். இப்போது நான் வித்தியாசமாக அறிகிறேன். மலைப் பாதைகளில் வெறுங்காலோடு நடப்பதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியின் அழைப்புக்கு பதிலளிப்பதால் உடன்படிக்கை பாதையில் நடக்க என் கால்களை ஆயத்தப்படுத்த முடியுமென நான் அறிந்தேன். ஏனெனில் கர்த்தர் அவருடைய தீர்க்கதரிசி மூலமாக “உயர்ந்ததும் பரிசுத்தமுமான ஒரு வழியில்” வாழவும் கவனிக்கவும் “உயரமாக ஒரு அடி வைக்கவும்” 1 நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.

நம்மால் செய்யமுடியும், அதிகமாக செய்யமுடியுமென்ற நமது உள்ளார்ந்த உணர்வோடு இணைக்கப்பட்டு, செயல்பட, சிலநேரங்களில் நமக்குள் உருவாகும் இந்த தீர்க்கதரிசன அழைப்புகளை “தெய்வீக அதிருப்தி” என மூப்பர் நீல் எ. மேக்ஸ்வெல் அழைத்தார். 2 “நாம் யாராக இருக்கிறோம் என்பதிலிருந்து மாறுவதற்கு நமக்கு என்ன வல்லமையிருக்கிறது என்பதை” 3 ஒப்பிடும்போது தெய்வீக அதிருப்தி வருகிறது. நாம் நேர்மையாயிருந்தால் நாம் ஒவ்வொருவரும் நாம் எங்கிருக்கிறோம், நாம் யாராயிருக்கிறோம் என்பதற்கும், எங்கே, யாராயிருக்கவேண்டுமென விரும்புகிறோம் என்பதற்குமிடையில் நாம் ஒரு இடைவெளியை உணர்கிறோம். தனிப்பட்ட அதிக திறனுக்கு நாம் ஏங்குகிறோம். இந்த உணர்வுகள் நமக்கிருக்கிறது, ஏனெனில், கிறிஸ்துவின் ஒளியுடன் பிறந்தும் ஒரு வீழ்ந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் தேவனுடைய குமாரத்திகளாகவும் குமாரர்களாகவும் இருக்கிறோம். தேவன் கொடுத்த இந்த உணர்வுகள், செயல்பட ஒரு அவசரத்தை உருவாக்குகிறது.

தெய்வீக அதிருப்தியின் உணர்வுகளை நாம் வரவேற்கவேண்டும், சாத்தானின் போலியானவற்றை அடையாளம்கண்டு தவிர்த்துக்கொண்டிருக்கும்போது அதைரியத்தை முடக்கிக்கொண்டிருக்கும்போது, அது ஒரு உயர்ந்த வழிக்கு நம்மை அழைக்கிறது. இது ஒரு விலையேறப்பெற்ற இடம், அதில் குதிக்க சாத்தான் மிகுந்த ஆர்வமுடனிருந்தான். தேவனையும் அவருடைய சமாதானத்தையும், கிருபையையும் நாட நம்மை நடத்துகிற உயர்ந்த பாதையில் நடக்க நாம் தேர்ந்தெடுக்கலாம், அல்லது போதுமான ஆஸ்தி, போதுமான புத்திசாலித்தனம், போதுமான அழகு, எதுவும் போதுமானது என நாம் ஒருபோதும் போதுமானவர்களாயிருக்கமாட்டோம் என நம்மை தாக்குகிற சாத்தானுக்கு நாம் செவிகொடுக்கலாம். நமது அதிருப்தி, தெய்வீகமாக மாறலாம் அல்லது அழிவாக மாறலாம்.

விசுவாசத்தில் செயல்

சாத்தானின் போலியானவைகளிடமிருந்து வருகிற தெய்வீக அதிருப்தி, அந்த தெய்வீக அதிருப்தி விசுவாச செயலுக்கு நம்மை நடத்தும் என்ற விதமாக சொல்லலாம். தெய்வீக அதிருப்தி நமது வசதியான பிரதேசத்தில் தங்க ஒரு அழைப்பு இல்லை, அல்லது அது நம்மை விரக்திக்கு நடத்துமா. நான் இல்லாத எல்லாவற்றின் சிந்தனையில் நான் புரண்டபோது, நான் முன்னேறவில்லை, ஆவியை உணரவும் பின்பற்றவும் மிக அதிக கடினத்தை நான் கண்டேன் என நான் அறிந்தேன். 4

ஒரு இளம் வாலிபனாக, ஜோசப் ஸ்மித் அவருடைய குறைபாடுகளை நன்கு அறிந்தவராக, “[அவருடைய] நித்திய ஆத்துமாவின் நலனைப்பற்றி” கவலைப்பட்டார். அவருடைய வார்த்தைகளில் “எனது பாவங்களுக்காக நான் குற்றவாளியானதற்காக எனது மனம் மிகவும் துயரப்பட்டு, என்னுடைய பாவக்களுக்காகவும் உலகத்தின் பாவங்களுக்காகவும் துக்கத்தை உணர்ந்தேன். 5 இது அவரை “மிகுந்த சிந்தனைக்கும் பெரும் அசௌகர்யத்துக்கும்” 6 நடத்தியது. இது பழக்கப்பட்டதாக தெரிகிறதா? உங்களுடைய குறைபாடுகளினால் நீங்கள் அசௌகர்யப்பட்டிருக்கிறீர்களா அல்லது துயரப்பட்டிருக்கிறீர்களா?

நல்லது, ஜோசப் ஏதோ ஒன்றைச் செய்தார். “நான் அடிக்கடி என்னையே கேட்டுக்கொண்டேன், என்ன செய்யப்பட வேண்டும்?” 7 என ஜோசப் பகிர்ந்துகொண்டார். ஜோசப் விசுவாசத்தில் செயல்பட்டார். அவர் வேதங்கள் பக்கம் திரும்பி, யாக்கோபு 1:5லுள்ள அழைப்பைப் படித்து உதவிக்காக கர்த்தரிடம் திரும்பினார். தரிசனத்தின் விளைவு மறுஸ்தாபிதத்தைக் கொண்டு வந்தது. ஜோசப்பின் தெய்வீக அதிருப்தி, அவருடைய அமைதியற்ற, குழப்பமான அவருடைய நேரம், விசுவாச செயலுக்கு அவரைத் தூண்டியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

நன்மை செய்ய தூண்டுதல்களைப் பின்பற்றவும்

சுயநலத்திற்காகவும், நமது சிந்தனைகளை உட்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் திருப்புவதற்காகவும், நான் யாரென்றும், நான் யாராக இருக்கவில்லை, எனக்கு எது வேண்டும் என்பதில் தனித்தனியாக வாழ்ந்து ஒரு மன்னிப்பாக அதிருப்தியின் உணர்வை உலகம் அடிக்கடி பயன்படுத்துகிறது. தெய்வீக அதிருப்தி, “நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்த” 8 இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற நம்மை ஊக்குவிக்கிறது. சீஷத்துவத்தின் பாதையில் நாம் நடக்கும்போது மற்றவர்களை அணுகுவதற்கு ஆவிக்குரிய உந்துதலை நாம் பெறுவோம்.

சில ஆண்டுகளுக்கு முன், நான் கேட்ட ஒரு கதை பரிசுத்த ஆவியை அடையாளம் காணவும் பின்னர் உணர்த்துதல்களின்படி செயல்படவும் எனக்குதவியது. ஒத்தாசைச் சங்க முன்னாள் பொதுத் தலைவர் சகோதரி போனி டி. பார்க்கின் பின்வருபவற்றை பகிர்ந்துகொண்டார்.

சூசன் ஒரு அற்புதமான தையற்காரி. அவளுடைய தொகுதியில் தலைவர் [ஸ்பென்சர் டபிள்யூ.] கிம்பல் வாழ்ந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் ஒரு புதிய சூட்டில் வந்ததை சூசன் கவனித்தார். அவளுடைய தகப்பன் சில அழகிய பட்டுத்துணிகளை சமீபத்தில் அவளுக்குக் கொண்டுவந்தார். தலைவர் கிம்பலின் புதிய சூட்டுக்கு பொருத்தமான ஒரு அழகான டையை அந்த துணியில் தைக்க சூசன் நினைத்தாள். ஆகவே திங்கட்கிழமை டையை அவள் தைத்தாள். அதை அவள் ஒரு காகிதத்தில் சுற்றிக்கொண்டு தலைவர் கிம்பலின் வீட்டிற்கு போனாள்.

“முன் பக்க கதவுக்கு போகிற வழியில் அவள் போனபோது திடீரென்று அவள் நின்று யோசித்தாள், தீர்க்கதரிசிக்கு டை தைக்க நான் யார்? ஒருவேளை அவரிடம் நிறைய டைகள் இருக்கலாம். தான் தவறு செய்ததாக தீர்மானித்து அங்கிருந்து போக திரும்பினாள்.

அப்போதுதான் சகோதரி கிம்பல் முன்பக்க கதவைத் திறந்து, ஓ, சூசன் என்றார்.

“மிக நடுக்கத்துடனும் சங்கடத்துடனும் சூசன் சொன்னாள், ஞாயிற்றுக்கிழமை தலைவர் கிம்பலை புதிய சூட்டில் நான் பார்த்தேன். நியுயார்க்கிலிருந்து அப்பா கொஞ்சம் பட்டுத்துணி கொண்டு வந்தார், ஆகவே நான் அவருக்கு ஒரு டையைத் தைத்தேன்.

“சூசன் தொடருவதற்கு முன் சகோதரி கிம்பல் அவளை நிறுத்தி, அவளுடைய தோள்களைப் பற்றிக்கொண்டு சொன்னார், ‘சூசன், ஒரு பெருந்தன்மையான நினைவை ஒருபோதும் அடக்காதே.’” 9

நான் அதை விரும்புகிறேன்! “ஒரு பெருந்தன்மையான நினைவை ஒருபோதும் அடக்காதே.” சிலநேரங்களில், யாருக்கோ எதையோ செய்ய எனக்கு ஒரு உணர்வு இருந்தபோது இது ஒரு தூண்டுதலா அல்லது என்னுடைய சொந்த சிந்தனைகளா என நான் வியப்புற்றேன். “தேவனாலானவைகள் நல்லதைத் தொடர்ந்து செய்யும்படி நயம் காட்டி அழைக்கிறது, ஆதலால் நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரை சேவிக்கவும் உணர்த்தி அழைக்கிற எல்லாம் தேவனால் ஏவப்பட்டவை” 10 என நான் நினைவுபடுத்தப்பட்டேன்

அவைகள் நேரடி உணர்த்துதல்களாகவோ அல்லது உதவுதற்கு உந்துவிசைகளாகவோ இருந்தாலும் அவை நல்ல செயல்கள். ஒருபோதும் வீணாகுவதில்லை, ஏனெனில் “அன்பு ஒருக்காலும் ஒழியாது,” 11 ஒருபோதும் தவறான மறுமொழியாயிருக்காது.

அடிக்கடி நேரம் வசதியில்லாதிருக்கிறது, நமது சிறிய செயல்களின் சேவையின் தாக்கத்தை நாம் எப்போதாவதுதான் அறிவோம். ஆனால், தேவனுடைய கரங்களில் நாம் ஒரு கருவி என்றும் பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக செயல்படுவது தேவனுடைய அங்கீகாரத்தின் ஒரு வெளிப்பாடு என இப்போதும் எப்போதும் நாம் அடையாளம் காண்போம்.

சகோதரிகளே, நமது செய்யவேண்டிய பட்டியல் ஏற்கனவே நிரம்பியிருப்பதாக காணப்பட்டாலும், “[நாம்] செய்யவேண்டிய சகல காரியங்களையும்” 12 நமக்குக் காட்ட நீங்களும் நானும் பரிசுத்த ஆவியிடம் வேண்டலாம். உணர்த்தப்படும்போது, பாத்திரங்களைத் தொட்டியில் விட்டுவிடலாம் அல்லது, ஒரு பிள்ளைக்கு படித்துக்காட்டுதல், ஒரு சிநேகிதியை சந்தித்தல், பக்கத்து வீட்டாரின் பிள்ளையைக் கவனித்துக்கொள்ளுதல், அல்லது ஆலயத்தில் சேவை செய்தல் போன்ற கவனம் தேவைப்படுகிற சவால்களை தவிர்க்கலாம். என்னைத் தவறாக புரிந்துகொள்ளாதிருங்கள். நான் பட்டியல் போடுகிறவள். காரியங்களைச் சரிபார்ப்பது எனக்குப் பிடிக்கும், ஆனால் அதிகமாய் இருத்தல் அதிகமாய் செய்வதற்கு சமமாக இருக்கத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுதலிலிருந்து சமாதானம் வருகிறது. உணர்த்துதல்களைப் பின்பற்ற தீர்மானிப்பதால் அதிருப்திக்கு பதிலளிப்பது என்னுடைய நேரத்தைப்பற்றி நான் நினைக்கிற, குறுக்கீடுகளாக இல்லாமல், ஆனால் என் வாழ்க்கையின் நோக்கங்களாக நான் மக்களைப் பார்க்கிற வழியை மாற்றுகிறது.

தெய்வீக அதிருப்தி நம்மை கிறிஸ்துவிடம் நடத்துகிறது

தெய்வீக அதிருப்தி நம்மை தாழ்மைக்குள் நடத்துகிறது, சுய பரிதாபம் அல்லது எப்போதுமே நம்மைக் குறைவுள்ளவர்களாக்குகிற ஒப்பிடுதலிலிருந்து வருகிற அதைரியப்படுத்துதல் அல்ல. உடன்படிக்கையைக் காத்துக் கொள்ளும் பெண்கள் எல்லா அளவுகளிலும் வடிவங்களிலும் வருகிறார்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது சூழ்நிலைகள் மாறுபடுகின்றன.

உண்மையில் நாம் அனைவருமே நமது தெய்வீகத் திறனில் குறைவுள்ளவர்களாயிருப்போம், நாம் போதுமானவர்களில்லை என்ற உணர்தலில் மட்டும் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் தேவனுடைய கிருபையுடன் நாம் போதுமானவர்கள் என்பது சுவிசேஷத்தின் நற்செய்தி. கிறிஸ்துவின் உதவியுடன் சகல காரியங்களையும் நம்மால் செய்யமுடியும்.13 “தேவையான நேரத்தில் உதவ கிருபையை நாம் காண்போம்”14 என வேதங்கள் வாக்களிக்கிறது.

ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அவைகள் நம்மை தாழ்மைப்படுத்தி கிறிஸ்துவினிடத்தில் நம்மைத் திரும்பும்போது நமது பெலவீனங்கள் ஒரு ஆசீர்வாதமாக முடியும்.15 சுய பரிதாபத்தில் பின்தங்குவததைவிட, நமது தேவைகளுடன் இயேசு கிறிஸ்துவை நாம் தாழ்மையுடன் அணுகும்போது, அதிருப்தி தெய்வீகமாகிறது

உண்மையில், தேவை, அத்தியாவசியம், தோல்வி அல்லது போதாமையை அடையாளம் காண்பதுடன்தான் வழக்கமாக இயேசுவின் அற்புதங்கள் அடிக்கடி ஆரம்பிக்கிறது. அப்பங்களும் மீன்களும் நினைவிருக்கிறதா? அவரைப் பின்பற்றிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு எப்படி இயேசு அற்புதமாக போஷித்தாரென சுவிசேஷ ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். 16 ஆனால், அவர்களுடைய பற்றாக்குறையை சீஷர்கள் அடையாளம் கண்டதிலிருந்து கதை ஆரம்பமாகிறது, “ஐந்து அப்பங்களும் இரண்டு சிறிய மீன்கள் மட்டுமே அவர்களிடத்திலிருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள், ஆனால் அநேகரான அவர்களுக்கு மத்தியில் இவை எம்மாத்திரம்.” 17 சீஷர்கள் நினைத்தது சரி. அவர்களிடம் போதுமான உணவு இல்லை, ஆனால் அவர்களிடமிருந்ததை இயேசுவிடம் அவர்கள் கொடுத்தார்கள், அவர் அற்புதத்தைச் செய்தார்.

உங்களுக்கு முன்னாலுள்ள பணிக்காக உங்களிடமுள்ள திறமைகளும் வரங்களும் மிகச் சிறியவை என எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்களும் நானும் நம்மிடம் இருப்பவற்றைக் கிறிஸ்துவுக்குக் கொடுக்கலாம், நமது முயற்சிகளை அவர் பெருக்குவார். உங்களுக்கு மனித குறைபாடுகள், பெலவீனங்களிருந்தாலும், தேவனுடைய கிருபையை நீங்கள் சார்ந்து இருந்தால், கொடுப்பதற்கு உங்களிடம் இருப்பவை தேவைக்கு அதிகமானது.

தெய்வத்திடமிருந்து நாம் ஒவ்வொருவரும் ஒரு தலைமுறை தள்ளியிருக்கிறோம் என்பது உண்மை, ஒவ்வொருவரும் தேவனுடைய ஒரு பிள்ளை.18 காலங்கள் முழுவதிலும் தீர்க்கதரிசிகளுக்கும் சாதாரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர் செய்திருக்கிறார், ஆகவே பரலோக பிதா நம்மை மாற்ற எண்ணமுள்ளவராயிருக்கிறார்.

தேவனின் மாற்றும் வல்லமையை இந்த வழியில் சி. எஸ்.லூயிஸ் விவரித்தார். “வசிக்கிற ஒரு வீடாக உங்களை நீங்கள் கற்பனை செய்யுங்கள். அந்த வீட்டை மறுபடி கட்ட தேவன் வருகிறார். முதலில், ஒருவேளை அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவர் வடிகால்களை சரிசெய்து, கூரையிலுள்ள கசிவுகளை நிறுத்துதல் போன்றவற்றை செய்தார், அந்த வேலைகள் செய்யப்படவேண்டுமென நீங்கள் அறிந்திருப்பதால் நீங்கள் ஆச்சரியப்படவில்லை. ஆனால் தற்போது ஒரு வழியில் அவர் வீட்டை இடிக்க ஆரம்பித்து அது அருவருப்பாய் காயப்படுத்தியது. நீங்கள் நினைத்ததிலிருந்து மிகவும் வித்தியாசமான வீட்டை அவர் கட்டிக்கொண்டிருந்தார். ஒரு கண்ணியமான சிறிய குடிசைக்குள் நீங்கள் இருக்கப்போகிறீர்கள் என நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் அவர் ஒரு அரண்மனையைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரே அங்கு வந்து தங்க எண்ணினார்.” 19

நமது இரட்சகரின் பாவநிவர்த்தியின் பலியால், முன்னாலிருக்கிற பணிகளை நாம் சமமாக்கலாம். சீஷத்துவத்தின் பாதையில் நாம் ஏறும்போது கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக நாம் சுத்திகரிக்கப்படலாம் என தீர்க்கதரிசி போதித்தார். விசுவாசத்தில் செயல்பட, நன்மை செய்ய இரட்சகரின் அழைப்புகளை பின்பற்ற, நமது வாழ்க்கையை தாழ்மையாக அவருக்கு கொடுக்க தெய்வீக அதிருப்தி நம்மை நகர்த்தலாம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, in Tad Walch, “‘The Lord’s Message Is for Everyone’: President Nelson Talks about Global Tour,” Deseret News, Apr. 12, 2018, deseretnews.com.

  2. Neal A. Maxwell, “Becoming a Disciple,” Ensign, June 1996, 18.

  3. Neal A. Maxwell, “Becoming a Disciple,” 16; emphasis added.

  4. அதைரியம் உங்கள் விசுவாசத்தை பலவீனமாக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்களை நீங்கள் குறைத்தால், உங்கள் ஆற்றல் குறையும். உங்கள் வாஞ்சை பெலவீனமாகும், ஆவியைப் பின்பற்ற நீங்கள் அதிகம் கஷ்டப்படுவீர்கள். (“What Is My Purpose as a Missionary?Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. [2018], lds.org/manual/missionary).

  5. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 28.

  6. ஜோசப் ஸ்மித்-வரலாறு 1:8.

  7. ஜோசப் ஸ்மித்-வரலாறு 1:10; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  8. அப்போஸ்தலர் 10:38.

  9. Bonnie D. Parkin, “Personal Ministry: Sacred and Precious” (Brigham Young University devotional, Feb. 13, 2007), 1, speeches.byu.edu.

  10. மரோனி 7:13.

  11. 1 கொரிந்தியர் 13:8.

  12. 2 நேபி 32:5.

  13. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).

  14. எபிரெயர் 4:16.

  15. “மனுஷர் என்னிடத்தில் வந்தால் நான் அவர்களுக்கு அவர்களுடைய பலவீனங்களைக் காண்பிப்பேன். மனுஷர் தாழ்மையாயிருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு பெலவீனத்தைத் தருகிறேன். எனக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கிற அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது. அவர்கள் எனக்கு முன்பாக தாழ்மையாயிருந்து என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால், நான் அவர்களுக்கு பெலவீனமானவைகளைப் பெலமுள்ளவைகளாக்குவேன்.” (ஏத்தேர் 12:27; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)

  16. மத்தேயு 14:13–21; மாற்கு 6:31–44; லூக்கா 9:10–17; யோவான் 6:1–14 பார்க்கவும்.

  17. யோவான் 6:9.

  18. தலைவர் பாய்ட் கே. பாக்கர் போதித்தார்: “எனினும் உங்கள் அநித்திய முன்னோரில் அநேக தலைமுறைகள் இருந்து, நீங்கள் எந்த இனத்துக்கும், அல்லது ஜனத்துக்கும் நீங்கள் பிரதிநிதியாயிருந்தாலும், உங்கள் ஆவியின் வம்சாவழி ஒரு சிறய வரியில் எழுதப்பட முடியும். நீங்கள் தேவனின் பிள்ளை!” (“To Young Women and Men,” Ensign, May 1989, 54).

  19. C. S. Lewis, Mere Christianity (1960), 160.