ஒரு மேய்ப்பனாகுதல்
நீங்கள் ஊழியம் செய்பவர்கள் உங்களை நண்பராக பார்த்து, உங்களில் அவர்களுக்கு ஒரு வீரனும், நம்பிக்கைக்குரியவனும் இருப்பதை உணர்வார்கள் என நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சிலியில் நான் சந்தித்த ஒரு ஆரம்ப வகுப்பு குழந்தை என்னுடைய முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவந்தது. “ஹலோ நான் டேவிட். பொது மாநாட்டில் என்னைப்பற்றி நீங்கள் பேசுவீர்களா?” என்று அவன் கேட்டான்
அந்த அமைதியான தருணங்களில் டேவிட்டின் எதிர்பாராத வாழ்த்துதலை நான் தியானித்தேன். நாம் எல்லோருமே அங்கீகரிக்கப்பட விரும்புகிறோம். நாம் கவனிக்கப்பட, நினைக்கப்பட, அன்பு காட்டப்பட விரும்புகிறோம்.
சகோதரிகளே, சகோதரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். பொது மாநாட்டில் உங்களைப்பற்றி பேசப்படாவிட்டாலும்கூட இரட்சகர் உங்களை நினைவுகூருகிறார், உங்களை நேசிக்கிறார். அது உண்மையாயிருக்குமா என நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் “ [தன்னுடைய] உள்ளங்கையிலே [உன்னை] வரைந்திருக்கிறார்” 1 என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்.
இரட்சகர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிந்துகொள்வதால், அவர்மீதுள்ள நமது அன்பை எப்படி சிறப்பாக நாம் காட்டமுடியுமென பின்னர் நாம் வியப்புறலாம்.
இரட்சகர் பேதுருவைக் கேட்கிறார், “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா … ?”
பேதுரு பதிலளித்தான், “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார்.
“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? இந்தக் கேள்வி இரண்டாம் தரமும், மூன்றாம் தரமும் கேட்கப்பட்டபோது பேதுரு துக்கப்பட்டு, ஆயினும் தன் அன்பை உறுதி செய்து, “ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர். என்றான். இயேசு அவனை நோக்கி என் ஆடுகளை மேய்ப்பாயாக.”2 என்றார்.
அவன் கிறிஸ்துவை அன்பாகப் பின்பற்றுகிறவன் என்பதை பேதுரு ஏற்கனவே நிருபித்திருக்கவில்லையா? கடற்கரையில் அவர்களுடைய முதல் சந்திப்பிலிருந்தே, இரட்சகரைப் பின்பற்ற உடனேயே அவனுடைய மீன்பிடிக்கும் வலைகளை விட்டுவந்தான். 3 ஒரு உண்மையான, மனுஷர்களைப் பிடிக்கிறவனாக ஆனான். அவருடைய தனிப்பட்ட ஊழியத்தில் அவரோடிருந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒருவருக்கொருவர் போதிக்க அவருடன் இருந்தான்.
ஆனால் இப்போது இனியும் பேதுருவுக்குப் பக்கத்தில் அவரால் இருக்கமுடியாதென்பதை உயிர்த்தெழுந்த கர்த்தர் அறிந்திருந்து, எப்படி, எப்போது சேவை செய்யவேண்டுமென அவனுக்குக் காட்டினார். இரட்சகர் இல்லாதபோது, பரிசுத்த ஆவியிடமிருந்து பேதுரு வழிகாட்டுதலைப் பெறவேண்டும், அவனாக சொந்த வெளிப்படுத்தலைப் பெற வேண்டும், பின்னர் செயல்பட விசுவாசமும் தைரியமும் இருக்கவேண்டும். அவருடைய ஆடுகள்மீது கவனம் செலுத்தி, அவர் அங்கிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை பேதுரு செய்ய இரட்சகர் விரும்பினார். ஒரு மேய்ப்பனாகும்படி அவர் பேதுருவிடம் கேட்டார்.
ஒரு பரிசுத்த வழியில் நமது பிதாவின் ஆடுகளை மேய்க்கவும், ஊழியத்தின் மூலமாக அப்படிச்செய்யவும் இதைப்போன்ற ஒரு அழைப்பை கடந்த ஏப்ரலில், தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு விடுத்தார். 4
இந்த அழைப்பை திறம்பட ஏற்றுக்கொள்ள ஒரு மேய்ப்பனின் உள்ளத்தை நாம் உருவாக்கி கர்த்தருடைய ஆடுகளின் தேவைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கர்த்தரும் அவருடைய தீர்க்கதரிசியும் நாம் ஆகவேண்டுமென எதிர்பார்க்கிற மேய்ப்பர்களாக நாம் எப்படியாக முடியும்?
இந்த கேள்விகள் எல்லாவற்றுடனும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை, நல்ல மேய்ப்பனாகவும், நமது உதாரணமாகவும் நாம் நோக்கிப் பார்க்கமுடியும். இரட்சகரின் ஆடுகள் அறியப்பட்டு, எண்ணப்பட்டிருக்கின்றன. அவைகள் கண்காணிக்கப்படுகின்றன, அவைகள் தேவனின் மந்தைக்குள் கூட்டிச்சேர்க்கப்படுகின்றன.
அறியப்பட்டு எண்ணப்பட்டவை
இரட்சகரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்ற முயற்சிக்கும்போது, முதலில் அவருடைய ஆடுகளை அறிந்து அவைகளை எண்ணிக்கை இடவும். கர்த்தருடைய மந்தை கணக்கெடுக்கப்பட்டதாகவும், யாருமே மறக்கப்படவில்லை என்றும் நாம் நிச்சயமாயிருக்க, குறிப்பிட்ட தனிநபர்களையும் குடும்பங்களையும் கவனிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம். ஆயினும் எண்ணிக்கை என்பது உண்மையில் எண்ணிக்கையைப் பற்றியதல்ல. அவருக்காக சேவை செய்கிற ஒருவரின் மூலமாக இரடசகரின் அன்பை ஒவ்வொருவரும் உணர்கிறதை நிச்சயப்படுத்துவது. அந்த வழியில் பரலோகத்திலுள்ள ஒரு அன்பான பிதாவால் அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பதை யாவரும் அடையாளம் காண முடியும்.
அவளைவிட ஐந்து மடங்கு வயதான சகோதரிக்கு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணை சமீபத்தில் நான் சந்தித்தேன். அவர்கள் இருவருக்கும் பொதுவாக இசையில் நாட்டமிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த இளம் பெண் அவளை சந்திக்கும்போது, இருவரும் பாடல்களை ஒன்று சேர்ந்து பாடி, பிடித்த பாடல்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் ஆசீர்வதித்த நட்பை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஊழியம் செய்கிறவர்கள், உங்களை ஒரு நண்பராக பார்த்து, உங்களில் அவர்களுக்கு ஒரு வீரன், அவர்களுடைய சூழ்நிலைகளைத் தெரிந்து, அவர்களுடைய நம்பிக்கைகளிலும், ஆர்வங்களிலும் அவர்களை ஆதரிக்கிற ஒரு நம்பிக்கைக்குரியவன் இருப்பதாக அவர்கள் அங்கீகரிப்பார்கள்.
எனக்கு கூட்டாளியோ எனக்கு நன்றாக தெரிந்தவரோ அல்லாத ஒரு சகோதரிக்கு ஊழியம் செய்ய சமீபத்தில் ஒரு நியமிப்பை நான் பெற்றேன். எனது ஊழியக் கூட்டாளியான 16வயதான ஜெஸுடன் நான் ஆலோசித்தபோது, “நாம் அவளை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்” என புத்திசாலித்தனமாக அவள் பரிந்துரைத்தாள்.
நல்லது, ஒரு செல்பியும் ஒரு அறிமுக செய்தியும் கொடுக்க நாங்கள் உடனடியாக தீர்மானித்தோம். புகைப்படத்தை எடுக்க நான் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டேன் ஜெஸ் பொத்தானை அழுத்தினாள். ஒரு கூட்டு முயற்சி எங்களுடைய ஊழியத்தின் முதல் முயற்சி.
எங்களுடைய முதல் சந்திப்பில், எங்களுடைய ஜெங்களில் அவளுடைய சார்பில் நாங்கள் சேர்க்க வேண்டிய எதாவதிருக்கிறதா என நாங்கள் அவளிடம் கேட்டோம். ஒரு தனிப்பட்ட சவாலை அவள் எங்களோடு பகிர்ந்து எங்களுடைய ஜெபங்களை அவள் வரவேற்பதாக சொன்னாள். அவளுடைய நேர்மையும் தன்னம்பிக்கையும் உடனடி அன்பின் பந்தத்தைக் கொண்டுவந்தது.
எங்களுடைய அனுதின ஜெபங்களில் அவருடைய ஆடுகளை நினைவுகூருவது என்ன ஒரு சிலாக்கியம். நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் ஊழியம் செய்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை நீங்கள் உணருவீர்கள். அவர்களோடு அந்த அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மூலமாக அவருடைய அன்பை உணர அவர்களுக்கு உதவுவதைவிட அவருடைய ஆடுகளை போஷிக்க என்ன சிறந்த வழியிருக்கிறது?
கண்காணித்தல்
அவருடைய ஆடுகளைக் கண்காணிப்பது, மேய்ப்பனின் இருதயத்தை விருத்திசெய்வது இரண்டாவது வழி. பிற்காலப் பரிசுத்தவான்களாக நாம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறோம், எதையும் நம்மால் நகர்த்த, பொருத்த, சரிசெய்ய, திரும்பக்கட்ட முடியும். உதவிக்கரத்துடன் அல்லது ஒரு தட்டு பிஸ்கட்டுகளால் ஒரு தேவையை நம்மால் சீக்கிரத்தில் எதிர்கொள்ளமுடியும். ஆனால் அதிகமிருக்கிறதா?
அன்புடன் அவர்களை நாம் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம், உதவுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்பது நமது ஆடுகளுக்குத் தெரியுமா?
மத்தேயு 25ல் நாம் படிக்கிறோம்:
“வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் … :
“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்: …
“அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக, ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மை பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்கு போஜனம் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
“எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்?” 5
முக்கிய வார்த்தையாவது, கண்டோம். நீதிமான்கள் கண்காணித்து கவனித்துக்கொண்டிருந்ததால் தேவையிலிருந்தவர்களை அவர்கள் கண்டார்கள். உதவி செய்யவும் ஆறுதலளிக்கவும், கொண்டாடவும் கனவுகாணவும் நமக்கும்கூட ஒரு கண்காணிப்பின் கண்ணிருக்கலாம். நாம் செயல்படும்போது, மத்தேயுவிலுள்ள வாக்களிப்பு நமக்கும்கூட உறுதி செய்யப்படலாம். “இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ… அதை எனக்கே செய்தீர்கள்.” 6
சிறிதாகக் காணப்படுகிற மற்றவர்களின் தேவையை நாம் பார்க்கும்போது என்ன நடக்கும் என, ஜான் என நாங்கள் அழைக்கிற ஒரு நண்பன் பகிர்ந்துகொண்டான். “எங்கள் தொகுதியிலுள்ள ஒரு சகோதரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப்பற்றிப் பேச எங்கள் குழுமத்தில் யாருமே அவளுடைய கணவனை அணுகவில்லை என்பதை, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நான் கண்டுபிடித்தேன். நானும் கூட எதுவும் செய்யவில்லை என்பது துயரம். இறுதியாக, அந்தக் கணவனை நான் மதிய உணவுக்கு அழைத்தேன். அவர் சிறிது வெட்கப்படுகிறவர், எப்போதும் தனிமையிலிருப்பார். இருந்தும், உங்கள் மனைவி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார், அது உங்களை மிகக் கவலைக்குள்ளாயிருக்கும். அதைப்பற்றி நீங்கள் பேசவிரும்புகிறீர்களா என நான் சொன்னபோது, அவர் வெளிப்படையாக அழுதார். மென்மையாகவும், நெருக்கமாகவும் நாங்கள் உரையாடினோம், சில நிமிடங்களுக்குள் ஒரு விசேஷித்த நெருக்கமும், நம்பிக்கையும் உருவானது.
ஜான் சொன்னான், “நேர்மையுடனும் அன்புடனும் அந்த நேரத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என கண்டுபிடிப்பதைவிட கேக்குகளைக் கொண்டுபோவது நமது சுபாவம் என நான் நினைக்கிறேன்.” 7
நமது ஆடுகள் காயம்பட்டிருக்கலாம், காணாமற்போயிருக்கலாம் அல்லது வேண்டுமென்றே வழிதவறிப்போயிருக்கலாம், அவைகளின் தேவையைப் பார்க்க முதலிலுள்ளவர்களுக்கு மத்தியில் நாமுமிருக்கலாம். தீர்க்காமல், நாம் செவிகொடுத்து, அன்பு செலுத்தி, பரிசுத்த ஆவியின் பகுத்தறியும் வழிநடத்துதலால் நம்பிக்கையையும் உதவியையும் கொடுக்கலாம்.
சகோதரிகளே, சகோதரர்களே, நீங்கள் செய்கிற சிறிய உணர்த்தப்பட்ட இரக்கத்தின் செயல்களால் உலகம் அதிக நம்பிக்கை நிறைந்ததாயும் மகிழ்ச்சிகரமானதாயுமிருக்கிறது. அவருடைய அன்பை எவ்வாறு தெரிவிப்பதென்றும், நீங்கள் ஊழியம் செய்கிறவர்களின் தேவைகளைப் பார்க்கவும், கர்த்தரின் வழிநடத்தலை நீஙகள் நாடும்போது நமது கண்கள் திறக்கப்படும். உங்களுடைய பரிசுத்தமான ஊழிய நியமிப்பு, உணர்த்துதலுக்கான தெய்வீக உரிமையை உங்களுக்குக் கொடுக்கிறது. நம்பிக்கையோடு அந்த உணர்த்துதல்களை நீங்கள் நாடலாம்.
தேவனின் மந்தைக்குள் கூட்டிச்சேர்த்தல்
மூன்றாவதாக, நமது ஆடுகள் தேவனுடைய மந்தைக்குள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம். அப்படிச் செய்ய, உடன்படிக்கைப் பாதையில் எங்கே அவைகளிருக்கின்றன என நாம் பரிசீலனை செய்யவேண்டும் அவர்களுடைய விசுவாசத்தின் பாதையில் அவர்களுடன் நாம் விரும்பி நடக்க சித்தமாயிருக்க வேண்டும். அவர்கள் இருதயங்களை அறிந்துகொள்வதும், இரட்சகரை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் நம்முடையது ஒரு பரிசுத்த சிலாக்கியம்.
உண்மையில், பாதையில் முன்னேறிச்செல்ல அவளுடைய பாதையைப் பார்ப்பதில், பிஜியிலுள்ள சகோதரி ஜோஸிவினிக்கு கடினமாயிருந்தது. வேதங்களைப் படிப்பதற்கு, தெளிவாகப் பார்க்க ஜோஸிவினி போராடிக்கொண்டிருந்ததை அவளுடைய தோழி பார்த்தாள். ஜோஸிவினி, படிப்பதற்கு அவள் ஒரு புதிய கண்ணாடியையும், மார்மன் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிற ஒவ்வொரு இடத்தையும் சிறப்பாகக் குறிக்க ஒரு பிரகாசமான மஞ்சள் பென்சிலையும் வாங்கிக்கொடுத்தாள். ஊழியம் செய்ய ஒரு எளிய விருப்பத்திலும், வேதங்களைப் படிக்க உதவுவதிலும் ஆரம்பித்தது, அவள் ஞானஸ்நானம் பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் அவளுடைய 62வது வயதில் முதன்முறையாக ஜோஸிவினி ஆலயத்திற்கு போக முடிந்தது .
நமது ஆடுகள் வலுவானவைகளோ, பெலவீனமானவைகளோ, அல்லது சந்தோஷமாயிருக்கிறதோ, வேதனையிலிருக்கிறதோ, யாருமே தனியாக நடப்பதில்லை என்பதை நாம் உறுதி செய்யலாம். ஆவிக்குரியவைகளில் அவர்கள் எங்கிருந்தாலும் நாம் அவர்களை நேசித்து, முன்னேற்றத்தின் அடுத்த படிக்கு செல்ல ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுக்கலாம். நாம் ஜெபித்து, அவர்களுடைய இருதயங்களைப் புரிந்துகொள்ள நாடும்போது, பரலோக பிதா நம்மை வழிநடத்துவாரென்றும் அவருடைய ஆவி நம்முடன் வருமென்றும் நான் சாட்சியளிக்கிறேன். அவர்களுடைய முகங்களுக்கு முன் அவர் போகிறபோது அவர்களைச் சுற்றிலுமிருக்கிற தூதர்களாயிருக்க நமக்கு சந்தர்ப்பமிருக்கிறது. 8
அவருடைய ஆடுகளைப் போஷிக்க கர்த்தர் நம்மை அழைக்கிறார். அவர் கவனிக்கிறதைப்போல அவருடைய ஆடுகளைக் கவனிக்க அவர் நம்மைக் கேட்கிறார். இந்த நோக்கத்துக்காக அவருடைய இளைஞர்கள் சேர அவர் விரும்புகிறார்.
நம்முடைய வலிமையான மேய்ப்பர்களின் சிலராக நமது இளைஞர்கள் இருக்கலாம். தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னதைப்போல, “இந்த உலகத்திற்குள் கர்த்தர் எப்போதுமே அனுப்பப்பட்டவர்களுக்கு மத்தியில் சிறந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.” இரட்சகரைப் பின்பற்றுகிற “நமது சிறந்த வீரர்களான” அவர்கள் உத்தம ஆவிகள். 9 அவருடைய ஆடுகளை அவர்கள் கவனிக்கும்போது, அத்தகைய மேய்ப்பர்கள் கொண்டுவரும் வல்லமையை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா?
வாலிபர்களே, இளம் பெண்களே, நீங்கள் எங்களுக்கு வேண்டும். உங்களுக்கு ஒரு ஊழியம் செய்தலின் நியமிப்பு இல்லையென்றால், உங்கள் ஒத்தாசைச் சங்க அல்லது மூப்பர்கள் குழுமத் தலைவருடன் பேசுங்கள். அவருடைய குறிப்பிட்ட ஆடுகள் அறியப்பட்டு, எண்ணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, தேவனின் மந்தைக்குள் கூட்டிசேர்க்கப்படுவதில் உங்களுடைய விருப்பத்தில் அவர்கள் களிகூருவார்கள்.
அவருடைய மந்தையைப் போஷித்து, நமது நேச இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நாம் முழங்கால் படியிடுகிற நாள் வரும்போது, பேதுருவைப்போல நாம் பதிலளிக்க முடியும் என நான் ஜெபிக்கிறேன்: “ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்.” 10 உமது ஆடுகள் நேசிக்கப்படுகின்றன, அவை பாதுகாப்பாயிருக்கின்றன, அவை வீட்டிலிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.