ஒப்புரவாகுதலின் ஊழியம்
நாம் அதைத் அடைய சாந்தத்துடனும் தைரியத்துடனும் இருந்தால், தேவனுடனும் பிற ஒவ்வொருவருடனும் ஒப்புரவாகுதல் கொண்டு வருகிற அமைதி பற்றி நான் சாட்சியளிக்கிறேன்.
தேவனை நேசிக்கவும், ஒருவருக்கொருவரை நேசிக்கவும், மாபெரும் கட்டளைகளைக் கைக்கொள்ளும் ஒரு வழியாக ஊழியம் செய்வதன் கருத்தை கடந்த ஏப்ரலில் தலைவர் ரசல் எம். நெல்சன் அறிமுகம் செய்தார். 1 சபையின் அலுவலர்களாக நாங்கள் இக்காரியத்துக்காக பிரமாதமான பிரதிகிரியைக்காக நாங்கள் வெளிப்படையாக உங்களுக்கு கைதட்டி பாராட்டுகிறோம். இந்த அற்புதமான முயற்சியில் நமது அன்புக்குரிய தீர்க்கதரிசியைப் பின்பற்றியதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம், இன்னும் அதிகமான அறிவுறைகளுக்காக காத்திருக்காதீர்கள் என உங்களுக்கு ஆலோசனையளிக்கிறோம். குளத்தினுள் குதித்து நீந்துங்கள், தேவையிலிலிருப்போரை நோக்கி நீந்துங்கள். நீங்கள் பின்னீச்சல் போடவேண்டுமா, நாய்த் துடுப்பு போட வேண்டுமா என சந்தேகித்து அசையாமலிருந்து விடாதீர்கள். போதிக்கப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளை நாம் பின்பற்றினாலும், ஆசாரியத்துவத் திறவுகோல்களோடு இணைந்திருந்தாலும், நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியை நாடினாலும், நாம் தோற்க முடியாது.
இக்காலையில் ஊழியம் செய்ய இன்னும் அதிகமான தனிப்பட்ட விதத்தைப்பற்றி பேச விரும்புகிறேன், இது பணிக்கப்பட்டதால் அல்ல, இது ஒரு நாட்குறிக்கப்பட்ட பேட்டியைப்பற்றியதல்ல, பரலோகத்தை தவிர அறிக்கை தாக்கல் செய்ய யாருமில்லை. வீட்டில் உருவாக்கப்பட்ட அப்படிப்பட்ட ஊழியம் செய்யும் உதாரணத்தை சொல்கிறேன்.
க்ரான்ட் மோரல் போவன் கடின உழைப்பாளி, அர்ப்பணிப்புள்ள கணவன் மற்றும் தகப்பன், நிலத்தில் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதித்த அநேகர் போல உள்ளூரில் உருளைக்கிழங்கு பயிர் மோசமானபோது பொருளாதார சரிவை சந்தித்தார். அவரும் அவரது மனைவி நோர்மாவும், வேறு வேலை தேடி, அதனிமித்தம் வேறு பட்டணத்துக்குச் சென்று, பொருளாதார ஸ்திரத்தன்மையில் முன்னேறத் தொடங்கினர். எனினும் ஒரு பயங்கர துரதிர்ஷ்ட வசமான சந்தர்ப்பத்தில், ஒரு ஆலய சிபாரிசு பேட்டியில் சகோதரர் போவன் மிகவும் காயப்பட்டார், தாம் முழு தசமபாகம் செலுத்துபவர் என அறிவித்த மோரலின் அறிவிப்புபற்றி ஆயர் சிறிது சந்தேகம் கொண்டார்.
இந்த இரண்டு மனிதர்களில் அன்று யார் மிகச் சரியாக உண்மை சொன்னார்கள் என எனக்குத் தெரியாது, ஆனால் சகோதரி போவன் தன் ஆலய சிபாரிசு புதுப்பிக்கப்பட்டு நேர்காணலிலிருந்து வெளியேறினார், சகோதரர் போவன், அவர் 15 ஆண்டுகள் சபையை விட்டு விலகும் கோபத்துடன் வெளியேறினார்.
தசமபாகத்தைப் பொருத்தவரை யார் சொல்வது சரி என்பது பொருட்டின்றி, நமக்குத் தெரிகிறபடி மோரலும் ஆயரும் “எதிராளியோடு சீக்கிரமாய் நல்மனம் பொருந்து,” 2 என்ற இரட்சகரின் கட்டளை மற்றும் “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னால் உங்கள் எரிச்சல் தணியக் கடவது,” 3 என்ற பவுலின் புத்திமதியை மறந்தனர். உண்மை என்னவென்றால் அவர்கள் சம்மதிக்கவில்லை,; சூரியன் அஸ்தமித்தது, நாட்களாக, வாரங்களாக, வருடங்களாக, “கோபம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதைத் தூண்டியவர் ஏற்படுத்திய காயத்தை விட எப்போதும் மிக [அழிவுண்டாக்கக்கூடியது],” 4 என்று சொன்ன பூர்வகால ரோம ஞானிகளில் ஒருவரால் சொல்லப்பட்ட கருத்தை நிரூபித்து, சகோதரர் போவனின் எரிச்சலோடு சூரியன் அஸ்தமித்தது. ஆனால் ஒப்புரவாகுதலின் அற்புதம் நமக்கு எப்போதும் கிடைக்கிறது, அவரது குடும்பம் மற்றும் உண்மையானது என அவர் அறிந்த சபை, மீதுள்ள அன்பினாலும், சபை முழு நிகழ்வுகளுக்கும் சகோதரர் போவன் திரும்ப வந்தார். அது எப்படி நடந்தது என சுருக்கமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சகோதரர் போவனின் மகன் ப்ராட், எங்களது நல்ல நண்பர், தெற்கு ஐடஹோவில் சேவைசெய்கிற அர்பணிப்புள்ள பகுதி எழுபதின்மர். இச்சம்பவம் நடந்த சமயத்தில் ப்ராடுக்கு 11 வயது, 15 வருடங்களாக தன் தகப்பனின் மத அர்ப்பணிப்பு குறைந்து வந்ததை அவர் கண்டார், கோபமும் புரியாமையும் விதைக்கப்பட்டு, பயங்கரமான அறுவடை செய்யப்பட்டதற்கு சாட்சி. ஏதாவது செய்யப்பட வேண்டும். ஆகவே 1977ல் நன்றி தெரிவிக்கும் விடுப்பு நெருங்கியபோது, பிரிகாம் யங் பல்கலைக் கழகத்தில் 26 வயது மாணவராக இருந்த ப்ராட், தன் மனைவி வாலரி மற்றும் குழந்தை மைக், தங்கள் மாணவ வகை காரில் மோசமான சீதோஷ்ணத்தையும் பொருட்படுத்தாமல், மோன்டானாவின் பில்லிங்ஸுக்கு பயணமாயினர். வெஸ்ட் எல்லோஸ்டோன் அருகில் ஒரு பனிச்சுவரில் மோதியது கூட இந்த மூவர், சகோதரர் போவனுடன் ஊழியத்தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியவில்லை.
வந்த உடனே ப்ராடும் அவரது சகோதரி பாமும் தங்கள் தகப்பனுடன் ஒரு பிரத்தியேக நேரம் கேட்டனர். “நீங்கள் அற்புதமானவர் அப்பா,” ப்ராட் உணர்வு பொங்க தொடங்கி சொன்னார், “நீங்கள் எங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என எப்போதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது, அது அதிக நாட்களாக இருந்திருக்கிறது. நீங்கள் ஒருமுறை காயப்பட்டதால், பல ஆண்டுகளாக இக்குடும்பம் முழுவதும் காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நாங்கள் நொறுங்கியிருக்கிறோம், எங்களை சரிசெய்ய நீங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறீர்கள். தயவுசெய்து இவ்வளவு காலத்துக்கும் பிறகு, அந்த ஆயருடன் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை ஒதுக்கி வைப்பதை உங்கள் இருதயத்தில் எண்ண முடியுமா, அப்போது நீங்கள் செய்ததுபோல சுவிசேஷத்தில் இக்குடும்பத்தை மீண்டும் வழிநடத்த முடியுமா?”
அங்கு மயான அமைதி இருந்தது. அவரது மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமான இந்த தன் இரு பிள்ளைகளையும் நிமிர்ந்து பார்த்தார், 5 அமைதியாக சொன்னார், “ஆமாம், நான் செய்வேன்.”
எதிர்பாராத பதிலால் சிலிர்ப்படைந்து, ஆனால் திகைத்து, ப்ராட் போவனும் அவரது குடும்பமும் தங்கள் கணவனும் தகப்பனுமானவர் தன் வாழ்வில் காரியங்களை சரிசெய்ய ஒப்புரவாகுதலின் ஆவியோடு, தன் தற்போதைய ஆயரிடம் செல்வதைப் பார்த்தனர். இந்த தைரியமிக்க ஆனால் முற்றிலும் எதிர்பாராத சந்திப்பின் பரிபூரண பிரதியுத்தரமாக திரும்பி வர சகோதரர் போவனுக்கு திரும்ப திரும்ப அழைப்புக்கள் விடுத்த ஆயர், மோரலை கரங்களால் தழுவி, மிக அதிக நேரம் அரவணைத்து பிடித்து வைத்துக்கொண்டார்.
அதிக நாட்கள் எடுக்காமல் சில வாரங்களிலேயே சகோதரர் போவன் சபை நிகழ்ச்சிகளில் மீண்டும் முற்றிலுமாக ஈடுபட்டார், அது அவரை ஆலயத்துக்கு மீண்டும் வர தகுதியாக்கியது. விரைவில் 25 பேர் கொண்ட, போராடிக்கொண்டிருந்த சிறிய கிளைக்குத் தலைமைதாங்க ஒப்புக்கொண்டார், அதை 100 பேருக்கும் மேல் பரிணமிக்கும் சபையாக வளர்த்தார். இவை எல்லாம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் நடைபெற்றது. ஆனால் தங்கள் சொந்த தகப்பனுக்கு ஒரு மகன் மற்றும் மகளின் ஊழிய அழைப்பின் விளைவு அந்த தகப்பன் மன்னிக்கவும் பிறரின் பரிபூரணமின்மையிலும் முன்னேறிச் செல்ல சித்தமாயிருந்ததும், இன்னும் போவன் குடும்பத்துக்கு வந்து கொண்டிருக்கிற, என்றென்றும் வரவிருக்கிற ஆசீர்வாதங்களை கொடுத்தது.
சகோதர சகோதரிகளே, “உங்களுக்குள்ளே பிணக்கு இல்லாமல்”6 “அன்புடன் ஒன்றாய் வாழுங்கள்,” 7 என இயேசு சொன்னார். “பிணக்கின் ஆவியுடையவன் என்னுடையவனல்ல,” அவர் நேபியர்களை எச்சரித்தார். 8 ஒருவருக்கொருவர் நமது உறவின் மூலம் உண்மையாகவே பெருமளவில் கிறிஸ்துவோடு நமது உறவு தீர்மானிக்கப்படும்.
அவர் சொன்னார், “நீ … என்னிடத்தில் வர விரும்பினால், உன்னுடைய சகோதரன் உனக்கு குரோதம் செய்ததை நினைவுகூர்ந்தால்--
“நீ உன் சகோதரனிடத்தில் போய், முதலில் உன் சகோதரனிடத்தில் ஒப்புரவாகி, பிறகு என்னிடத்தில் முழு நோக்கத்தோடு வருவாயாக. நான் உன்னை ஏற்றுக் கொள்வேன்.” ”9
நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் ஒருவரது இருதயம் அல்லது குடும்பம் அல்லது அக்கம்பக்கத்தாரின் சமாதானத்தை இப்போதுவரை அரித்துக்கொண்டிருக்கிற, பழைய தழும்புகள், துயரங்கள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளின் முடிவற்ற வரிசையை காட்ட முடியும். நாம் அந்த வேதனையை ஏற்படுத்தி இருந்தாலும் அல்லது அதை அனுபவித்தவர்களானாலும் தேவன் நினைத்தபடி அது இருக்க, வாழ்க்கை பலனுடையதாக இருக்க, அந்த காயங்கள் குணப்படுத்தப்பட வேண்டும். உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களுக்காக கவனமாக உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவு போல, அந்தப் பழைய புகார்கள் அவற்றின் தங்களின் கடைசி தேதியை தாண்டிவிட்டன. தயவுசெய்து இன்னும் அவற்றுக்கு உங்கள் அருமையான ஆத்துமாவில் இடம் கொடுக்காதீர்கள். டெம்பெஸ்ட்டில் மனம் வருந்திய அலன்சோவிடம் ப்ராஸ்பரோ சொன்னது போல “கடந்து விட்ட பாரத்தை நமது நினைவில் சுமத்தாதிருப்போமாக.” 10
“மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்,” 11 கிறிஸ்து புதிய ஏற்பாட்டு காலத்திலே போதித்தார். நமது நாளிலும் “கர்த்தராகிய நான் மன்னிப்பவர்களை மன்னிப்பேன், ஆனால் நீங்கள் எல்லா மனுஷரையும் மன்னிக்க வேண்டும்’ என்றார். 12 எனினும் உண்மையான கோபத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களில் யாருக்கும் அவர் சொல்லாததைக் கவனிப்பது முக்கியமாகும், “பிறரால் நீங்கள் பெற்ற நொருக்குகிற அனுபவங்களின் உண்மையான வலி அல்லது உண்மையான துயரத்தை உணர நீங்கள் அனுமதிக்கப்படவில்லை,” என அவர் சொல்லவில்லை. “முற்றிலுமாக மன்னிக்க, ஒரு விஷமான உறவில் மீண்டும் நீங்கள் பிரவேசிக்கவோ அல்லது ஒரு துர்பிரயோகமான அழிவுக்கேதுவான உறவுக்குத் திரும்பிச் செல்லவோ வேண்டும்,” என அவர் சொல்லவில்லை. ஆனால் வரவிருக்கிற மிகக் கடுமையான குற்றங்களிலும் கூட உண்மையான குணமாக்குதலுக்கான பாதையில் நாம் கால்களை வைக்கும்போது மட்டுமே நாம் நமது வேதனைக்கு மேலெழும்ப முடியும். “என்னைப் பின் பற்றி வா,” என நம் ஒவ்வொருவரையும் அழைக்கிற நசரேயனாகிய இயேசு நடந்த பாதையே மன்னிப்பின் பாதை. 13
அவரது சீஷர்களாக இருக்க இப்படிப்பட்ட அழைப்பில் அவர் செய்தது போல செய்ய முயலும்போது, கொரிந்தியருக்கு பவுல் விவரித்ததுபோல, “ஒப்புரவாகுதலின் ஊழியத்தில்” “கிறிஸ்துவின் தூதுவர்களாக” இருக்க அவரது கிருபையின் கருவிகளாக இருக்குமாறு இயேசு நம்மிடம் கேட்கிறார். 14 எல்லா காயங்களையும் குணமாக்குபவர், எல்லா தவறுகளையும் சரி செய்பவர், பிற எந்த வழிகளிலும் காணப்படாத, உலகை சமாதானம் செய்கிற, பயமுறுத்துகிற பணியில் அவரோடு பிரயாசப்பட நம்மை அழைக்கிறார்.
ஆகவே பிலிப்ஸ் ப்ரூக்ஸ் எழுதியதுபோல, “ஏதாவது ஒரு நாள் சுத்தம் செய்ய வருடாவருடம் துரதிர்ஷ்டவசமான புரிதல்களை அனுமதிக்கிறீர்கள். உங்கள் பெருமையை ஒழிக்க இதுதான் நாள் என அவற்றை ஒழிக்காமல், உங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாததால் நீங்கள் தகாத சண்டைகளை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அற்பத்தனமாக அவர்களுடன் பேசாமல் தெருவில் கோபத்துடன் மனுஷரைக் கடந்து போகும் நீங்கள் … ஒருநாள் … நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரு பாராட்டு அல்லது இரக்கமான வார்த்தைக்காக … [ஒருவரின்] இருதயத்தை வலிக்க விடுகிற நீங்கள் அதைச் செய்ய ஒருபோதும் சந்தர்ப்பம் பெறமாட்டீர்கள் என்பதால் உடனே சென்று அதைச் செய்யுங்கள்.” 15
என் அன்பு சகோதர சகோதரிகளே, பழைய அல்லது புதிய குற்றங்களை மன்னித்து விட்டுவிடுதல் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மகத்துவத்துக்கு மையமானதாகும் என நான் சாட்சியளிக்கிறேன். “அவரது செட்டைகளில் குணமாக்குதலுடன்” நமக்கு உதவ விரைந்து வருகிற, நமது தெய்வீக மீட்பர் மூலமே அப்படிப்பட்ட ஆவிக்குரிய பழுது நீக்குதல் கடைசியாக வரும் என நான் சாட்சியளிக்கிறேன். 16 அந்த புதுப்பித்தலும் மறுபிறப்பும், பழைய துயரங்கள் மற்றும் தவறுகள் இல்லாத எதிர்காலம், சாத்தியமானது மட்டுமல்ல, ஆனால் அவர் சிந்திய ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் அடையாளத்தால் வலிமிக்க விலைக்கிரயம் செலுத்தி வாங்கப்பட்டு விட்டதால், நாம் அவருக்கும், அவரை அனுப்பிய பரலோக பிதாவுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
உலக இரட்சகரால் எனக்குக் கொடுக்கப்பட்ட அப்போஸ்தல அதிகாரத்தால், அதைத் தொடர நமக்குப் போதுமான சாந்த குணத்துடனும், தைரியத்துடனும் இருந்தால், தேவனுடனும் ஒருவருக்கொருவருடனும் ஒப்புரவாகுதல் கொண்டுவரக்கூடிய ஆத்தும அமைதிபற்றி நான் சாட்சியளிக்கிறேன். “ஒருவருக்கொருவருடன் பிணக்கு கொள்வதை நிறுத்துங்கள்,” என இரட்சகர் கெஞ்சினார். 17 ஒரு பழைய காயத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் அதை பழுது நீக்குங்கள். ஒருவருக்கொருவர் அன்புடன் அக்கறை காட்டுங்கள்.
என் அன்பு நண்பர்களே, நாம் பங்குபெறும் ஒப்புரவாகுதலின் ஊழியத்தில், சமாதானம் செய்பவராக—சமாதானத்தை நேசிக்கவும், சமாதானத்தை தேடவும், சமாதானத்தை உருவாக்கவும், சமாதானத்தை மதிக்கவும் நீங்கள் இருக்க நான் உங்களைக் கேட்கிறேன். தன் “சிநேகிதரின் வீட்டிலே காயம்பட்ட,” 18 அனைத்தையும் அறிந்திருக்கிற, ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் வலிமை பெற்றிருக்கிற—எப்போதும் மன்னிக்கிற மற்றும் குணமாக்கவும், மகிழச்சியாக இருக்கவும், சமாதானப் பிரபுவின் பெயரால் நான் விண்ணப்பம் செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.