பெற்றோரும் பிள்ளைகளும்
நீங்கள் யாரென்றும் உங்கள் வாழ்க்கையின் நோக்கமென்னவென்றும் நமது பரலோக பிதாவின் மகத்தான சந்தோஷத்தின் திட்டம் உங்களுக்குச் சொல்லுகிறது.
எனக்கன்பான சகோதரிகளே, 8 ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும், இந்த புதிய பெண்கள் பொது மாநாடு நடப்பது எவ்வளவு அற்புதம். தலைவர் ஹென்றி பி. ஐரிங்கிடமிருந்து ஒரு உணர்த்துதலான செய்தியை நாம் கேட்டோம். தலைவர் ரசல் எம்.நெல்சனின் வழிநடத்துதலின் கீழ் பணிசெய்ய நாங்கள் விரும்புகிறோம், அவருடைய தீர்க்கதரிசன உரைக்காக நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.
I.
நமது நித்திய வளர்ச்சியான, பிள்ளைகள் தேவனிடமிருந்து நமக்கு மிக விலையேறப்பெற்ற வரம். இருந்தும், பிள்ளைகளை சுமப்பதிலும் வளர்ப்பதிலும் எந்த பங்கையும் வகிக்க விரும்பாத அநேக பெண்களுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அநேக இளைஞர்கள் உலகப்பிரகாரமான தேவைகள் திருப்தியாகும்வரை திருமணத்தைத் தாமதப்படுத்துகிறார்கள். நமது சபை அங்கத்தினர்களின் சராசரி திருமண வயது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது, சபை அங்கத்தினர்களுக்கு குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை சரிந்திருக்கிறது. ஓய்வுபெற்ற முதியவர்களை ஆதரிக்க, மிகக்குறைந்த வயதுவந்தோர்களே முதிர்ச்சியடைகிற வருங்காலத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் பிற நாடுகளும் எதிர்கொள்கின்றன. 1 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 40 சதவீத பிறப்புகள் திருமணமாகாத தாய்மார்களுக்கு நடக்கின்றன. அந்த பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள். இந்த போக்குகள் ஒவ்வொன்றும் நமது பிதாவின் தெய்வீக இரட்சிப்பின் திட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றன.
II.
தாயாவது தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை என்றும், தங்களின் இறுதியான மகிழ்ச்சி என்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் பெண்கள் புரிந்திருக்கிறார்கள். தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி சொன்னார்.பெரும்பாலான பெண்கள் தங்களுடைய மிகப்பெரிய நிறைவையும், அவர்களுடைய மிகுந்த சந்தோஷத்தையும் வீட்டிலும் குடும்பத்திலும் காண்கிறார்கள். அமைதியான பெலம், மெருகேற்றல், சமாதானம், நன்மை, நற்குணம், சத்தியம் மற்றும் அன்பில் அதுவாக வெளிப்படுத்துகிற தெய்வீகமான ஒன்றில், தேவன் பெண்களுடன் வைத்திருக்கிறார். இந்த குறிப்பிடத்தக்க தன்மைகள் தாய்மையில் தங்களுடைய நம்பிக்கையையும், மிகத் திருப்தியான தெரிவிப்பையும் காண்கின்றன.
அவர் தொடருகிறார், “எந்த பெண்ணாலும் எப்போதுமே செய்யக்கூடிய மிகப்பெரிய வேலை, அவளுடைய பிள்ளைகளை நீதியிலும் சத்தியத்திலும் போஷிப்பதுவும், போதிப்பதுவும், வாழ்தலும், ஊக்குவித்தலும், வளர்த்தலுமே. அவள் என்ன செய்கிறாள் என்பதை பொருட்படுத்தாமல் அதை எந்த பிற காரியத்துடனும் ஒப்பிடமுடியாது.” 2
தாய்மார்களே, அன்பான சகோதரிகளே, நீங்கள் யாரென்பதற்காகவும், எங்கள் யாவருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்களென்பதற்காகவும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.
“என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில் 2015ல் அவருடைய முக்கியமான உரையில் தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்:
“பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து அவைகளைக் கைக்கொள்ளுகிற, தேவனுடைய வல்லமையுடனும் அதிகாரத்துடனும் பேசுகிற பெண்களில்லாமல் தேவனின் இராஜ்யம் முற்றுப்பெறாது, முற்றுப்பெற முடியாது!
“இன்று, . . .தங்களுடைய விசுவாசத்தால் முக்கியமான காரியங்களை எவ்வாறு செய்யவதென்று அறிந்திருக்கிற, ஒரு பாவ வியாதியிலிருக்கிற உலகத்தில் அநித்தியத்தையும் குடும்பங்களையும் தைரியமாகப் பாதுகாக்கிறவர்களான பெண்கள் நமக்குத் தேவை. மேன்மையடைதலுக்கு நேராக உடன்படிக்கைப் பாதையினூடே தேவனுடைய பிள்ளைகளை மேய்க்க அர்ப்பணித்த, தனிப்பட்ட வெளிப்படுத்தலை எவ்வாறு பெறுவதென்பதை அறிந்த பெண்கள், ஆலய தரிப்பித்தலின் வல்லமையையும் சமாதானத்தையும் புரிந்திருக்கிற, பிள்ளைகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் பரலோகத்தின் வல்லமைகளை எவ்வாறு அழைக்க வேண்டுமென தெரிந்த பெண்களும், பயமில்லாமல் போதிக்கிற பெண்களும் நமக்குத் தேவை.” 3
அவர் பூமியை சிருஷ்டிப்பதற்கு முன்பு சிருஷ்டிகரின் திட்டத்திற்கு மையமாயிருக்கிற கோட்பாடுகளையும் பழக்கங்களையும் இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை மறு உறுதிப்படுத்துகிறதால், இந்த உணர்த்தப்பட்ட போதனைகள் எல்லாம் “குடும்பம்: உலகத்திற்கு ஓர் பிரகடனத்தின்” அடிப்படையிலிருக்கிறது.
III.
இப்போது இந்த பார்வையாளர்களின் இளம் குழுவுக்கு நான் உரையாற்றுகிறேன். எனக்கன்பான இளம் சகோதரிகளே, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் உங்கள் அறிவால், நீங்கள் தனித்துவமானவர்கள். அதிகரித்துவரும் கஷ்டங்களைத் தாங்கவும் மேற்கொள்ளவும் உங்கள் அறிவு உங்களுக்குச் சாத்தியமாக்கும். இளம் வயதிலிருந்து, எழுதுதல், பேசுதல், திட்டமிடுதல் போன்ற உங்கள் திறமைகளை மேம்படுத்திய திட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்கள். பொறுப்பான நடத்தையையும், பொய் சொல்ல, ஏமாற்ற, களவாட அல்லது மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்த சோதனைகளை எவ்வாறு தடுக்க என்பதையும் நீங்கள் கற்றிருக்கிறீர்கள்.
அமெரிக்காவிலுள்ள குமரப்பருவத்தினர் மற்றும் மதத்தைப்பற்றி, வடக்கு கரோலினாவிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் உங்களின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட்டது. சார்லோட் அப்சர்வர் ஒன்றின் கட்டுரையில் “மார்மன் குமரப் பருவத்தினர் சிறப்பாக சமாளிக்கிறார்கள்: தலைப்பிருந்தது. வளரும் பிராயத்தினரை கையாளுவதில் அவர்களது நண்பர்களைவிட உயர்ந்தவர்கள் என ஆய்வு கண்டுபிடித்தது.” “ஆபத்தான நடத்தைகளைத் தவிர்ப்பது, பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்தல், வருங்காலத்தைப்பற்றி நேர்மறையான மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள்,” என கட்டுரை முடிக்கிறது. நம்முடைய இளைஞர்கள் அநேகரை நேர்காணல்கண்ட ஆய்வின் ஆராய்சியாளர்களில் ஒருவர் சொன்னார், “நாம் பார்த்த ஏறக்குறைய எல்லா வகையிலும் ஒரு தெளிவான மாதிரி இருந்தது. அது, மார்மன்கள் முதன்மையாயிருந்தார்கள்.” 4
வளரும்போது கஷ்டங்களுடன் நீங்கள் ஏன் சிறப்பாக சமாளிக்கிறீர்கள்? இளம் பெண்களே, நமது பரலோக பிதாவினுடைய மகத்தான சந்தோஷத்தின் திட்டத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதாலே. நீங்கள் யாரென்றும் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் இது உங்களுக்குக் கூருகிறது. அந்தப் புரிந்துகொள்ளுதலுடன் இளைஞர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சரியானதை தேர்ந்தெடுப்பதிலும் முதன்மையானவர்களாயிருக்கிறார்கள். வளர்ந்து வருவதிலுள்ள அனைத்துக் கஷ்டங்களிலிருந்தும் மீண்டுவருவதில் கர்த்தரின் உதவி உங்களுக்கிருக்கலாம் என உங்களுக்குத் தெரியும்.
நீங்கள், உங்களை நேசிக்கிற பரலோக பிதாவின் பிள்ளைகள் என்பதை நீங்கள் புரிந்திருப்பதே, நீங்கள் ஏன் மிக ஆற்றல் உள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதற்கு மற்றொரு காரணம். நமது சிறந்த பாடலான “அன்பான பிள்ளைகளே, தேவன் உங்களுக்கருகில் இருக்கிறார்” (“Dearest Children, God Is Near You.”) உங்களுக்கு பழக்கப்பட்டதென நான் நம்புகிறேன். நாம் அனைவரும் பாடி, நம்பிய முதல் வாக்கியம் இங்கே.
அன்பான பிள்ளைகளே, தேவன் உங்களுக்கருகில் இருக்கிறார்
இரவு பகலாக உங்களைக் கண்காணித்து வருகிறார்
உங்களைச் சொந்தமாக்கவும் ஆசீர்வதிக்கவும் மகிழ்ச்சியடைகிறார்
சரியானதைச் செய்ய நீங்கள் முயற்சித்தால். 5
அந்த வாக்கியத்தில் இரண்டு போதனைகளிருக்கின்றன. முதலாவதாக, நமது பரலோக பிதா நமக்கருலிருக்கிறார், இரவும் பகலும் நம்மைக் கண்காணித்து வருகிறார். இரண்டாவதாக, நாம் “சரியானவற்றைச் செய்ய முயற்சிக்கும்போது,” நம்மை ஆசீர்வதிப்பதில் அவர் சந்தோஷமாயிருக்கிறார். நமது பாடுகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் என்ன ஒரு ஆறுதல்!
ஆம், இளம் பெண்களே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் அற்புதமானவர்கள், ஆனால் “சரியானவற்றைச் செய்ய முயற்சிக்கும்” உங்கள் தேவையில் பரலோக பிதாவின் பிள்ளைகள் அனைவரையும் போலாகுவீர்கள்.
இங்கே, அநேக வெவ்வேறு காரியங்களைக் குறித்து உங்களுக்கு என்னால் ஆலோசனை கொடுக்கமுடியும் ஆனால், இரண்டை மட்டும் பேசுவதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
என்னுடைய முதல் ஆலோசனை கைப்பேசிகளைப்பற்றியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள பாதிப்பேர் தங்களுடைய கைப்பேசிகளில் அதிக நேரங்களைச் செலவழிப்பதாக சொன்னதாக, நாடுமுழுவதிலும் எடுக்கப்பட்ட ஒரு சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுடைய கைப்பேசிகளிலிருந்து அவர்கள் பிரிக்கப்படும்போது அவர்கள் ஏக்கமடைவதாக 40 சதவீதமானவர்கள் சொன்னார்கள். 6 இது சிறுவர்களைவிட சிறுமிகளிடம் மிகப்பொதுவானது. என்னுடைய இளம் சகோதரிகளே, வயதுவந்த பெண்களே, கைப்பேசிகளின் பயன்பாட்டையும், அவற்றைச் சார்ந்திருப்பதையும் குறைத்தால் அது உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும்.
என்னுடைய இரண்டாவது ஆலோசனை இன்னமும் அதிக முக்கியமானது. மற்றவர்களிடம் அன்பாயிருங்கள். ஏற்கனவே நம்முடைய அநேக இளைஞர்கள் செய்துகொண்டிருப்பதே அன்பு. சில சமுதாயங்களில் சில இளைஞர்கள் குழு நம் எல்லோருக்கும் வழியைக் காட்டியிருக்கிறார்கள். அன்பும் உதவியும் தேவைப்படுகிறவர்களுக்கு நமது இளைஞர்களின் அன்பின் செயல்களால் நாம் உணர்த்தப்பட்டோம். அநேக வழிகளில் ஒருவருக்கொருவர் நீங்கள் அந்த உதவியைக் கொடுத்து, அந்த அன்பைக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் யாவரும் உங்கள் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவீர்களென நாங்கள் விரும்புகிறோம்.
அதே நேரத்தில், அன்பில்லாதவர்களாயிருக்க சத்துருவானவன் நம் அனைவரையும் சோதிக்கிறான் என நாம் அறிவோம், பிள்ளைகள், இளைஞர்களுக்கு மத்தியில் இதைக்குறித்து அநேக எடுத்துக்காட்டுகளிருக்கின்றன. பிடிவாதமான அன்பில்லாமை, கொடுமைப்படுத்துதல், ஒருவருக்கு எதிராக கும்பல் சேர்ப்பது, மற்றவர்களை ஒதுக்க ஒன்றுசேருவது போன்ற அநேக பெயர்களில் இவை அறியப்பட்டிருக்கிறது. இந்த எடுத்துக்காட்டுகள், வகுப்புத் தோழர்கள் அல்லது நண்பர்கள்மேல் வேண்டுமென்றே வேதனையை ஏற்படுத்துகிறது. என்னுடைய இளம் சகோதரிகளே, மற்றவர்களிடம் நாம் கொடூரமாய் அல்லது இழிவாக இருந்தால் அது கர்த்தருக்கு மகிழ்சியளிப்பதில்லை.
இங்கே ஒரு உதாரணம். அவனுடைய தாய்மொழியில் பேசுவதையும் சேர்த்து வேறு மாதிரியாக இருந்ததற்காக கேலி செயப்பட்ட யூட்டாவில் ஒரு அகதியாயிருந்த ஒரு வாலிபனை எனக்குத் தெரியும். நாட்டைவிட்டு வெளியேற்றப்பட பரிசீலிக்கப்பட்டு 70நாட்களுக்கும் மேலாக சிறையிலடைக்கப்படுவதற்குக் காரணமான சிலாக்கியம் பெற்ற வாலிபர்களால் ஒரு வகையில் அவன் பதிலடி கொடுக்கும் வரை, அவன் துன்புறுத்தப்பட்டான். இந்த வாலிபர்கள் குழுவை எது தூண்டியதென எனக்குத் தெரியாது, அவர்களில் அநேகர் உங்களைப்போல பிற்காலப் பரிசுத்தவான்கள், ஆனால், அவர்களுடைய அற்பத்தானமானவற்றின் பாதிப்பையும், ஒரு பரிதாபமான அனுபவத்தையும், தேவனுடைய பிள்ளைகளில் ஒருவனின் இழப்பையும் என்னால் பார்க்கமுடிகிறது. அன்பில்லாமையின் சிறிய செயல்கள் பெரிய விளைவுகளை உண்டாக்கும்.
அந்தக் கதையை நான் கேட்டபோது, உலகமுழுவதிலுமுள்ள இளைஞர்களுக்கான பிரார்த்தனையில் நமது தீர்க்கதரிசியான தலைவர் நெல்சன் சொன்னவற்றோடு இதை நான் ஒப்பிட்டேன். இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க உதவ உங்களையும் மற்றவர்களையும் கேட்பதில் அவர் சொன்னார், “தனித்து நில்லுங்கள், உலகத்திலிருந்து வித்தியாசமானவர்களாயிருங்கள். உலகத்திற்கு நீங்கள் ஒளியாயிருக்கவேண்டுமென நீங்களும் நானும் அறிவோம். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையான சீஷனைப்போல நீங்கள் காணப்படவும், பேசவும், செயல்படவும், உடுத்தவும் கர்த்தர் விரும்புகிறார்.” 7
இளம் பட்டாளங்களே, ஒருவருக்கொருவர் அற்பமாயிருக்க சேருவதற்கு அல்ல தலைவர் நெல்சன் உங்களை அழைக்கிறார். அணுகவும், மற்றவர்களிடத்தில் அன்புள்ளவர்களாகவும் பரிவுள்ளவர்களாகவும் இருக்க, யாரோ ஒருவர் நமக்கு தீங்கு செய்ததாக நாம் உணரும்போது மறு கன்னத்தைக் காட்டவும் இரட்சகரின் போதனைகளை அவர்கள் பின்பற்றுவார்கள்.
உங்களில் அநேகர் பிறந்திருந்த காலத்தைப்பற்றி ஒரு பொது மாநாட்டின் உரையில் “சுவிசேஷத்தின்படி வாழ முயற்சிக்கிற அழகான இளம் பெண்கள்” என தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி புகழ்ந்தார். நான் உங்களை விவரிக்க உணருவதைப்போலவே அவர்களை அவர் விவரித்தார்.
அவர்கள் ஒருவருக்கொருவர் தாராளமானவர்கள். ஒருவருக்கொருவரை பெலப்படுத்த அவர்கள் நாடுகிறார்கள். அவர்களின் பெற்றோருக்கும் அவர்கள் வருகிற வீடுகளுக்கும் அவர்கள் ஒரு ஆதாயம். தாய்மையை அவர்கள் நெருங்குகிறார்கள், தற்போது அவர்களை ஊக்குவிக்கிற கொள்கைகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வார்கள். 8
கர்த்தருடைய ஒரு வேலைக்காரனாக, இளம் பெண்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன், உங்களுடைய நற்குணமும் அன்பும் நமது உலகத்திற்குத் தேவையாயிருக்கிறது. ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவும், நாம் நடத்தப்பட விரும்புகிறதைப்போல மற்றவர்களை நடத்தவும் இயேசு போதித்தார். நாம் அன்புடனிருக்க முயற்சி செய்யும்போது அவருக்கும் அவருடைய அன்பின் செல்வாக்குக்கும் நாம் நெருக்கமாவோம்.
எனக்கன்பான சகோதரிகளே, தனிப்பட்டவர்களாகவோ அல்லது ஒரு குழுவுடனோ நீங்கள் எதாவது அற்பமானவற்றிலோ, சிறுமையானவற்றிலோ பங்கேற்றிருந்தால் எவ்வாறு மாறவேண்டுமெனவும், மாறுவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கவும் இப்போது தீர்மானியுங்கள். அது என்னுடைய ஆலோசனை, இந்த முக்கியமான பொருளைப்பற்றி உங்களிடம் பேச அவருடைய ஆவி எனக்கு உணர்த்தியதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு வேலைக்காரனாக நான் இதை உங்களுக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்