2010–2019
தகப்பன்
அக்டோபர் 2018


பிதா

நம் ஒவ்வொருவருக்கும் பரலோக பிதாவைப் போலாகும் திறன் உண்டு. அப்படிச் செய்ய நாம் குமாரனின் பெயராலே பிதாவை ஆராதிக்க வேண்டும்.

என்னுடைய மனைவி மெலின்டா வாழ்க்கை முழுவதும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக இருப்பதற்கு தனது முழு இருதயத்துடனும் முயற்சித்தாள். இருந்தும் அவளுடைய இளமையின் ஆரம்பத்தில், பரலோக பிதாவின் தன்மையை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருந்ததால் அவருடைய அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் அவள் தகுதியில்லாதவளென நினைத்தாள். அதிர்ஷ்டவசமாக மெலின்டா, அவள் உணர்ந்த துக்கத்திலும் கற்பனைகளைத் தொடர்ந்து கைக்கொண்டு வந்தாள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய பிள்ளைகளிடத்தில் அவருக்குள்ள அன்பையும், அவரது பணியைச் செய்ய நம்மிடமுள்ள குறைபாடுள்ள முயற்சிகளுக்கு அவருடைய நன்றியுணர்வையும் சேர்த்து, தேவனின் தன்மையை நன்றாகப் புரிந்துகொள்ள அவளுக்குதவிய தொடர் அனுபவங்கள் பெற்றாள்.

இது எப்படி அவளில் தாக்கம் ஏற்படச் செய்தது என அவள் விவரிக்கிறாள். “நமது வெற்றிகளில் அவர் தனிப்பட்ட வகையில் முதலீடு செய்தார், அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்பத் தேவையான பாடங்களையும் அனுபவங்களையும் நமக்கு அவர் அளித்திருக்கிறார் என்பதால், பிதாவின் திட்டம் வேலை செய்கிறதென்பதை இப்போது நான் நிச்சயமாய் உணருகிறேன். தேவன் நம்மைப் பார்க்கிறதைவிட அதிகமாக நான் என்னையும் மற்றவர்களையும் பார்க்கிறேன். அதிக அன்புடனும் குறைந்த பயத்துடனும் பெற்றோராயிருக்க, போதிக்க, சேவைசெய்ய என்னால் முடியும். பதட்டத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் பதிலாக சமாதானத்தையும் தன்னம்பிக்கையையும நான் உணருகிறேன். நியாயம் தீர்க்கப்பட்டதாக உணருவதற்குப் பதிலாக ஆதரிக்கப்படுவதாக உணருகிறேன். என்னுடைய விசுவாசம் அதிக நிச்சயமானது. என்னுடைய பிதாவின் அன்பை நான் மிக அடிக்கடியும் மிக ஆழமாகவும் உணருகிறேன்.” 1

[பரலோக பிதாவின்] “தன்மை, பரிபூரணங்கள், பண்புகளின் ஒரு சரியான கருத்தைக் கொண்டிருப்பது” மேன்மையடைதலை அடைய போதுமான விசுவாசத்தை பிரயோகிப்பதற்கு அத்தியாவசியமானது. 2 பரலோக பிதாவின் குணத்தைச் சரியாக புரிந்துகொள்ளுதல், நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை மாற்றி, அவருடைய பிள்ளைகளின்மேல் தேவனுடைய அதிக அன்பையும், அவரைப்போலாக நமக்குதவ அவருடைய பெரும் விருப்பத்தையும் புரிந்துகொள்ள நமக்குதவுகிறது. அவருடைய தன்மையைப்பற்றிய ஒரு தவறான பார்வை, அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்ப வருவதற்கு நாம் எப்போதுமே இயலாதவர்கள் என உணருவதற்கு, நம்மை விட்டுவிடலாம்.

நம் ஒவ்வொருவரையும், ஆனால், குறிப்பாக தேவன் அவர்களை நேசிக்கிறாரா என வியப்புறுகிறவர்களை அனுமதிக்கிற, அவருடைய உண்மையான குணாதிசயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள, அவரில், அவருடைய குமாரனில், அவருடைய திட்டத்தில் அதிகமான விசுவாசத்தைக் கையாளக்கூடிய பிதாவைப் பற்றிய முக்கியமான கோட்பாட்டுக் குறிப்புகளைப் போதிப்பது இன்று என்னுடைய நோக்கம்.

அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கை

அநித்தியத்திற்கு முந்தைய உலகத்தில் பரலோக பெற்றோருக்கு நாம் ஆவிகளாகப் பிறந்து ஒரு குடும்பமாக அவர்களோடு வாழ்ந்தோம். 3 அவர்கள் நம்மை அறிவார்கள், நமக்குப் போதித்தார்கள், நம்மை நேசித்தார்கள். 4 நமது பரலோக பிதாவைப்போலாக நாம் மிக அதிகமாக விரும்பினோம், எப்படியாயினும், அப்படிச்செய்ய நாம் பின்வருபவை போலிருக்கவேண்டுமென நாம் கண்டுபிடித்தோம்.

  1. மகிமையான, அநித்தியமான, மாம்ச சரீரங்களைப் பெறுதல்; 5

  2. திருமணம் செய்து, ஆசாரியத்துவத்தின் முத்திரிக்கும் வல்லமையால் குடும்பங்களை அமைத்தல்; 6

  3. சகல ஞானத்தையும், வல்லமையையும், தெய்வீக பண்புகளையும் பெறுதல்; 7

இதன் விளைவாக, சாவாமையிலும் உயிர்த்தெழுதலில் மகிமையாகவும் மாறுகிற மாம்ச சரீரங்களைப் பெற்று, நித்தியத்தில் திருமணம் செய்து குடும்பங்களை அமைக்க அல்லது அந்த சந்தர்ப்பத்தைப் பெறாத,9 உண்மையானவர்களுக்கு அநித்தியத்திற்குப் பின்பு பரிபூரணத்தைநோக்கி முன்னேறவும் இறுதியாக நமது பரலோக பெற்றோர்களிடம் திரும்பி, மேன்மையான நித்திய சந்தோஷ நிலையில் அவர்களோடும் நமது குடும்பங்களுடனும் வாழ, சில நிபந்தனைகளின் அடிப்படையில், 8 பிதா ஒரு திட்டத்தை உருவாக்கினார். 10

இரட்சிப்பின் திட்டமென வேதங்கள் இதை அழைக்கிறது. 11 இது நமக்கு தெரிவிக்கப்பட்டபோது இந்த திட்டத்திற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருந்தோம், சந்தோஷத்தில் கூச்சலிட்டோம். 12 தெய்வீக பண்புகளை விருத்தி செய்ய நமக்குதவக்கூடிய அநித்தியத்தின் அனுபவங்களையும் சவால்களையும் சேர்த்து திட்டத்தின் நிபந்தனைகளை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டோம். 13

அநித்திய வாழ்க்கை

அவருடைய திட்டத்திற்குள் நாம் முன்னேறவேண்டுமென அநித்தியத்தில், பரலோக பிதா நமக்கு நிபந்தனைகள் கொடுக்கிறார். மாம்சத்தில் இயேசு கிறிஸ்துவை பிதா பெற்று14 அவருடைய அநித்திய ஊழியத்தை நிறைவேற்ற தெய்வீக உதவியுடன் அவருக்குக் கொடுத்தார். அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள நாம் முயற்சித்தால் அதைப்போன்று நம் ஒவ்வொருவருக்கும் உதவுவார். 15 சுயாதீனத்தை பிதா நமக்குக் கொடுக்கிறார். 16 நம்முடைய வாழ்க்கை அவர் கைகளிலுள்ளது, நமது ‘நாட்கள் அறியப்பட்டிருக்கின்றன,’ ‘குறைவாக எண்ணப்படாது.’ 17 இறுதியாக, அவரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும் என அவர் உறுதியளிக்கிறார். 18

அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள நாம் உண்ணுகிற உணவையும், 19 நமக்குத் தேவையான பெலனையும் சேர்த்து நமது அன்றாட அப்பத்தை பரலோக பிதா நமக்குக் கொடுக்கிறார். 20 பிதா நல்ல வரங்களைக் கொடுக்கிறார். 21 நமது ஜெபங்களை அவர் கேட்கிறார், பதிலளிக்கிறார். 22 பரலோக பிதாவை நாம் அனுமதிக்கும்போது தீமையினின்று அவர் நம்மை விடுவிக்கிறார். 23 நாம் துன்பப்படும்போது நமக்காக அவர் அழுகிறார். 24 இறுதியாக, நமது சகல ஆசீர்வாதங்களும் பிதாவிடமிருந்து வருகின்றன. 25

நாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்படிக்கு பரலோக பிதா நம்மை வழிநடத்தி, நமது பெலன்களின், பெலவீனங்களின், தேர்ந்தெடுப்புகளின் அடிப்படையில் நமக்குத் தேவையான அனுபவங்களைக் கொடுக்கிறார். 26 நம்மை அவர் நேசிப்பதால், அவசியப்படும்போது பிதா நம்மைத் தண்டிக்கிறார். 27 நாம் கேட்டால் நமக்கு ஆலோசனையளிக்கிற29 அவர் ஆலோசனையளிக்கும் மனுஷன். 28

நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் செல்வாக்கையும் வரத்தையும் அனுப்புகிறவர் பரலோக பிதாவே. 30 பரிசுத்த ஆவியின் வரத்தின் மூலமாக, பிதாவின் மகிமை அல்லது புத்திகூர்மை, ஒளி, வல்லமை நம்மில் வாசமாயிருக்க முடியும். 31 தேவனுடைய மகிமைக்கென்று நமது கண்கள் ஒரே நோக்கத்திலிருக்கும்வரை ஒளியிலும் சத்தியத்திலும் அதிகரிக்க நாம் முயற்சி செய்தால், நித்திய ஜீவனுக்குள் முத்திரிக்கப்பட பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தத்தை பரலோக பிதா அனுப்பி, இந்த வாழ்க்கையில் அல்லது வரப்போகிற வாழ்க்கையில் அவருடைய முகத்தை நமக்கு வெளிப்படுத்துவார். 32

அநித்தியத்திற்கு பிந்தய வாழ்க்கை

அநித்தியத்திற்கு பிந்தய ஆவி உலகத்தில், பரிசுத்த ஆவியை முன்னும் பின்னுமாக பரலோக பிதா ஊற்றி, சுவிசேஷம் தேவையானவர்களுக்கு ஊழியக்காரர்களை அனுப்புகிறார். அவர் ஜெபங்களுக்கு பதிலளித்து, அவைகளில் குறைவுள்ளவர்கள் பதிலி இரட்சிப்பின் நியமங்களைப் பெற உதவுகிறார். 33

இயேசு கிறிஸ்துவை பிதா வளர்த்து, அதனால் நாம் சாகாத சரீரங்களைப் பெறுவதற்கான உயிர்த்தெழுதலைக் கொண்டுவர அவருக்கு வல்லமையைக் கொடுத்தார். 34 இரட்சகரின் மீட்பும் உயிர்த்தெழுதலும் பிதாவின் பிரசன்னத்திற்குள் மீண்டும் நம்மைக்கொண்டு வருகிறது, அங்கே நாம் இயேசு கிறிஸ்துவால் நியாயம் தீர்க்கப்படுவோம். 35

“பரிசுத்த மேசியாவின் தகுதிகளிலும், இரக்கங்களிலும், கிருபையிலும்” சார்ந்திருக்கிறவர்கள்36 பிதாவைப்போல மகிமையான சரீரங்களைப் பெறுவார்கள்37 மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியின் நிலையில் வாழுவார்கள். 38 அங்கே, பிதா நமது கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார், 39 அவரைப் போலாகுவதற்கான நமது பயணத்தைத் தொடர நமக்குதவுவார்.

உங்களால் பார்க்கமுடிகிறதைப்போல பரலோக பிதா எப்போதும் நமக்காக இருப்பார். 40

பிதாவின் குணம்

பிதாவைப்போலாக, அவருடைய குணாதிசயங்களின் பண்புகளை நாம் வளர்க்கவேண்டும். பரலோக பிதாவின் பூரணத்துவங்களும் பண்புகளும் பின்வருவனவற்றில் அடங்கியிருக்கிறது.

  • பிதாவானவர் “முடிவற்றவர், நித்தியமானவர்.” 41

  • அவர் நீதியானவர், உருக்கமும் இரக்கமும், நீடிய சாந்தமுமுள்ளவர், நமக்கு சிறப்பானவைகளை மட்டும் கொடுக்க விரும்புகிறார். 42

  • பரலோக பிதா அன்பானவர். 43

  • அவர் அவருடைய உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளுகிறார். 44

  • அவர் மாறுவதில்லை. 45

  • அவர் பொய் கூறுவதில்லை. 46

  • பிதா பட்சபாதமுள்ளவரல்ல. 47

  • ஆதியிலிருந்து கடந்தகால, தற்கால, வருங்கால, சகல காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். 48

  • நம் அனைவரையும்விட50 பரலோக பிதா அதிக ஞானமுள்ளவர். 49

  • பிதா சர்வவல்லமையுள்ளவர், 51 அவர் செய்யப்போகிற எல்லாவற்றையும் அவருடைய இருதயத்திலே வைத்துக்கொள்கிறார். 52

சகோதர, சகோதரிகளே, பிதாவை நாம் நம்பலாம், சார்ந்திருக்கலாம். ஏனெனில் அவருக்கு ஒரு நித்திய பார்வை உண்டு. நம்மால் பார்க்கமுடியாத காரியங்களை அவரால் பார்க்கமுடியும். நமது அழியாமையையும், மேன்மையையும் கொண்டுவருவதே, அவருடைய மகிழ்ச்சி, பணி, மகிமை. அவர் செய்கிற ஒவ்வொன்றும் நமது பலனுக்காகவே. 53 “ [நமது] நித்திய சந்தோஷத்தை [நம்மைவிட] அவர் அதிகமாய் விரும்புகிறார்.” 54 “நம்முடைய ஆதாயத்துக்கு அல்லது நாம் நேசிக்கிறவர்களின் ஆதாயத்துக்கு முற்றிலுமாகத் தேவையாயிருக்கிறதைவிட அதிகக் கடினமான ஒரு நேரத்தை அனுபவிக்க அவர் விரும்புகிறதில்லை.” 55 விளைவாக, நம்மை நியாயம் தீர்க்காமலும், கண்டனம் செய்யாமலும் முன்னேற்றத்திற்காக நமக்குதவுவதில் அவர் கவனம் செலுத்துகிறார். 56

நமது பிதாவைப் போலாகுதல்

ஆவியின் குமாரர்களாக, குமாரத்திகளாக, பிதாவைப்போலாக நம் ஒவ்வொருவருக்கும் ஆற்றலிருக்கிறது. அப்படிச்செய்ய குமாரனின் நாமத்தில் நாம் பிதாவைத் தொழுதுகொள்ளவேண்டும். 57 இரட்சகர் இருந்ததைப்போல பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிதலாயிருக்க முயற்சிப்பதாலும், 58 தொடர்ந்து மனந்திரும்புவதாலும் நாம் இதைச் செய்கிறோம். 59 இந்தக் காரியங்களை நாம் செய்யும்போது நாம் பிதாவின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளும்வரை நாம் கிருபைக்கு கிருபையைப் பெறுவோம், 60 அவருடைய குணம், முழுநிறைவு, பண்புகளுடன் தரிப்பிக்கப்படுவோம். 61

அநித்தியமானவர்களாக நாம் எப்படியிருக்கிறோம் என்பதற்கும், பரலோக பிதா ஆகியிருக்கிறதற்குமுள்ள கொடுக்கப்பட்ட தூரம், பிதாவைப்போல மாறுவதென்பது அடையமுடியாத ஒன்று என சிலர் உணருவது ஆச்சரியமல்ல. கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருக்க முயற்சி செய்கிறவர்கள் “கிருபைக்கு கிருபையைப் பெறுவார்கள்,” இறுதியாக அவருடைய “பரிபூரணத்தைப் பெறுவார்கள்” என்ற உண்மை பற்றி நான் பெரிய ஆறுதலடைகிறேன். 62 வேறு வார்த்தைகளிலெனில் நாமாக பிதாவைப் போலாகமாட்டோம். 63 மாறாக, வரங்கள் மூலமாக அது வரும், சில பெரியவை, ஆனால் நமக்கு ஒரு பரிபூரணம் கிடைக்கும்வரை, ஒருவர் மீது ஒருவர் காட்டுகிற அநேகம் சிறியவையாக இருக்கும். ஆனால் அது வரும்.

உங்களை எப்படி மேன்மையடைய வைப்பது என பரலோக பிதா அறிகிறார் என நம்ப, அவருடைய அன்றாட ஆதரிக்கும் உதவியை நாட, உங்களால் தேவனுடைய அன்பை உணரமுடியாவிட்டாலும் கூட கிறிஸ்துவில் விசுவாசத்தோடு முன்னேறிச்செல்ல உங்களை நான் அழைக்கிறேன்.

பிதாவைப் போலாகுவதைப்பற்றி நாம் அதிகமாக புரிந்துகொள்ளவில்லை. 64 ஆனால் பிதாவைப் போலாக முயற்சித்தல் எல்லாத் தியாகங்களிலும் தகுதியானது என நான் நிச்சயத்துடன் சாட்சியளிக்க முடியும். 65 எவ்வளவு பெரிதென்று பொருட்படுத்தாமல் இங்கே அநித்தியத்தில் நாம் செய்கிற தியாகங்களை, அளவிடமுடியாத மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும், தேவனின் பிரசன்னத்தில் நாம் உணருகிற அன்பிற்கும் ஒப்பிடமுடியாது. 66 நீங்கள் செய்யவேண்டுமென கேட்கப்பட்ட தியாகங்கள் தகுதியானது என நம்ப நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் “எவ்வளவு ஆசீர்வாதங்களை உங்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிறேன் என்று நீங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை, இப்பொழுது உங்களால் சகல காரியங்களையும் தாங்கமுடியவில்லை, ஆயினும் திடன்கொள்ளுங்கள், ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன்” எனச் சொல்லி இரட்சகர் உங்களை அழைக்கிறார். 67

உங்கள் பரலோக பிதா உங்களை நேசிக்கிறார், நீங்கள் மீண்டும் அவரோடு வாழ அவர் விரும்புகிறாரென நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்