2010–2019
இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதில் சகோதரிகளின் பங்கு
அக்டோபர் 2018


16:19

இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதில் சகோதரிகளின் பங்கு

இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவிசெய்து வருங்காலத்தை வடிவமைக்க, சபையின் பெண்களுக்கு நான் ஒரு தீர்க்கதரிசியின் விண்ணப்பம் கொடுக்கிறேன்.

உங்களோடு இருப்பது அற்புதமாக இருக்கிறது, என் அன்பும் அருமையுமுள்ள சகோதரிகளே. உங்களைப்பற்றியும் நீங்கள் தரித்திருக்கிற மேன்மையான திறமைகளைப்பற்றியும் நான் எப்படி உணர்கிறேன் என்ற ஒரு அண்மை அனுபவம் ஒருவேளை உங்களுக்கு ஒரு பார்வை கொடுக்கும்.

ஒரு நாள் தென் அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, என் தலைப்பைப்பற்றி நான் அதிக ஆர்வம்கொண்டு, ஒரு முக்கிய தருணத்தில் நான் சொன்னேன், “10 பிள்ளைகளின் தாயாக நான் உங்களுக்குச் சொல்ல முடியும்...” பின்பு நான் என் செய்தியை முடித்தேன்.

நான் அம்மா என்ற வார்த்தையை சொன்னதை உணரவில்லை. எனது மொழிபெயர்ப்பாளர் நான் தவறாக சொல்லிவிட்டேன் என யூகித்து, அம்மா என்ற வார்த்தையை அப்பா என மாற்றினார், ஆகவே கூட்டத்திலிருந்தவர்களுக்கு நான் என்னை நானே அம்மாவாக குறிப்பிட்டது தெரியாது. ஆனால் என் மனைவி வெண்டி அதைக் கேட்டாள், என் ப்ராய்டிய தவற்றினால் அவள் களிகூர்ந்தாள்.

அந்த கணத்தில், உலகில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஏங்கும் என் இருதயம், ஒரு தாய் மட்டும் செய்வதுபோல, என் இருதயத்திலிருந்து குமிழிட்டது. சென்ற வருடங்களில், நான் ஏன் மருத்துவராக தெரிந்துகொண்டேன் என கேட்கப்பட்டபோதெல்லாம், என் பதில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது, “ஏனெனில் நான் ஒரு தாயாக தெரிந்துகொள்ள முடியாததால்.”

நான் எந்த நேரத்தில் அம்மா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், பிள்ளைகள் பெற்ற அல்லது தத்தெடுத்துக்கொண்ட பெண்களைப்பற்றி மட்டும் பேசவில்லை என்பதை தயவுசெய்து கவனிக்கவும். நான் நமது பரலோக பெற்றோரின் வயதுவந்த குமாரத்திகள் அனைவரையும் பற்றி பேசுகிறேன். அவளது நித்திய தெய்வீக இலக்கால் ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாய்தான்.

ஆகவே இன்றிரவில், 10 பிள்ளைகளின் அப்பாவாக,ஒன்பது மகள்கள், ஒரு மகன், சபைத்தலைவராக, உங்களைக்குறித்து எவ்வளவு ஆழமாக உணர்கிறேன் என்பதையும், நீங்கள் யார் என்பது பற்றியும் நீங்கள் செய்ய முடிகிற எல்லா நன்மைகளைப் பற்றியும் நீங்கள் உணரவேண்டும் என நான் ஜெபிக்கிறேன். ஒரு நீதியான பெண் செய்வதை யாரும் செய்ய முடியாது. ஒரு தாயின் செல்வாக்கை போல யாரும் செய்யமுடியாது.

பரலோக பிதா மற்றும் இரட்சகரின் அன்பை பிறருக்கு ஆண்கள் அடிக்கடி தெரிவிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு ஒரு விசேஷ வரம் உண்டு, ஒரு தெய்வீக தரிப்பித்தல். ஒருவருக்கு என்ன தேவை, எப்போது தேவை என உணரும் திறமை உங்களுக்கு உண்டு. அவன் அல்லது அவளுக்கு தேவை இருக்கிற நேரத்தில் ஒருவரிடம் சென்று, ஆறுதலளித்து, போதித்து, பெலப்படுத்த உங்களால் முடியும்.

ஆண்களை விட பெண்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள், அத்தகைய பார்வை நமக்கு எவ்வளவு தேவை! முதலில் பிறரைப்பற்றி நினைக்கவும், பிறர் மீது எவ்விதமான செயலும் ஏற்படுத்துகிற தாக்கத்தைக் கருத்தில் கொள்ளவும் உங்கள் குணம் உங்களை வழிநடத்துகிறது.

தலைவர் ஐரிங் சுட்டிக்காட்டியதுபோல நமது மகிமைமிக்க தாய், நமது பரலோக பிதாவின் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையால், நாம் “வீழ்ச்சி” என அழைப்பதை தொடங்கினாள். அவளது ஞானமிக்க, தைரியமிக்க தெரிந்து கொள்ளுதலும், ஆதரிக்கும் ஆதாமின் முடிவும் தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியது. அது நாம் பூமிக்கு வரவும், ஒரு சரீரம் பெறவும், நாம் அநித்தியத்துக்கு முன்னால் செய்ததுபோல, இப்போது இயேசுவுக்காக நிற்க தெரிந்து கொண்டு நிரூபிக்கவும் நம் ஒவ்வொருவருக்கும் அது சாத்தியப்படுத்தியது.

என் அன்பு சகோதரிகளே, உங்களுக்கு விசேஷித்த ஆவிக்குரிய வரங்களும், சாய்வும் உண்டு. என் இருதயத்தின் முழு நம்பிக்கையோடு, உங்கள் ஆவிக்குரிய வரங்களைப் புரிந்துகொள்ள ஜெபிக்கவும், அவற்றை விருத்திசெய்து, நீங்கள் இப்போது பெற்றிருப்பதை விட அதிகமாக விரிவடையச் செய்யவும் இன்றிரவில் நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் செய்துகொண்டிருப்பதைப்போல உலகத்தை மாற்றுவீர்கள்.

பெண்களாக, நீங்கள் பிறருக்கு உணர்த்தி, பின்பற்ற தகுதியான தரத்தை ஏற்படுத்துகிறீர்கள். கடந்த நமது பொது மாநாட்டில் செய்யப்பட்ட இருபெரும் அறிவிப்புகளின் சிறு பின்னணியை கொடுக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் என் அன்பு சகோதரிகளாகிய நீங்கள் முக்கியமானவர்கள்.

முதலில் ஊழியம் செய்தல். ஊழியம் செய்யும் உயர்ந்த தரம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினுடையது. பொதுவாக பெண்கள் எப்போதும்போல, ஆண்களைவிட அத்தரத்துக்கு அருகில் இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே ஊழியம் செய்யும்போது, இரட்சகரின் அன்பை ஒருவர் அதிகமாக அனுபவிக்க உதவ உங்கள் உணர்வுகளைப் பின்பற்றுகிறீர்கள். ஊழியம் செய்யும் அந்த ஈர்ப்பு, நீதியான பெண்களிடம் உள்ளூரவே இருக்கிறது. “இன்று நான் யாருக்கு உதவி செய்ய வைத்திருக்கிறீர்” என தினமும் ஜெபிக்கிற பெண்களை எனக்குத் தெரியும்.

பிறர் மீது உயர்ந்த பரிசுத்த விதமாக அக்கறை செலுத்தும் ஏப்ரல் 2018 அறிவிப்புக்கு முன் சில ஆண்களுக்கு தங்கள் வீட்டுப்போதகத்தை “செய்துவிட்டதாக” குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு போகும் மனப்பாங்கு இருந்தது.

ஆனால் நீங்கள் விசாரிப்பு போதகம் செய்யும் ஒரு சகோதரிக்கு உதவி தேவை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனேயும், அந்த மாதம் முழுவதிலும் பிரதிசெயல் ஆற்றினீர்கள். அவ்வாறு நீங்கள் வீட்டுப்போதகம் செய்தது, ஊழியம் செய்ய எங்களது மேல்நோக்கிய நகர்வை உணர்த்தியது.

இரண்டாவது, கடந்த பொது மாநாட்டில், நாங்கள் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்களில் கூட மாற்றம் செய்தோம். தங்கள் பொறுப்புகளில் அதிக திறனுடனிருக்க ஆண்களுக்கு எப்படி உதவுவதென போராடிக்கொண்டிருந்தபோது, நாங்கள் ஒத்தாசைச் சங்க உதாரணத்தை கவனமாக கருத்தில் கொண்டோம்.

ஒத்தாசைச் சங்கத்தில், பல்வேறு வயதிலும், நிலைகளிலும் உள்ள பெண்கள் ஒன்றாக சந்திக்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பத்தாண்டும் தனித்துவமான சவால்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும் நீங்கள் அங்கிருந்தீர்கள், வாராவாரம், ஒன்று கலந்து, ஒன்றாக சுவிசேஷத்தில் வளர்ந்து, போதித்து, உலகில் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

இப்போது உங்கள் உதாரணத்தைப் பின்பற்றி, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள், மூப்பர்கள் குழும அங்கத்தினர்கள். இந்த மனுஷர்கள் 18 முதல் 98 வயதுவரை (அதிகம் இருக்கலாம்) உடையவர்கள், விரிவான ஆசாரியத்துவம் மற்றும் சபை அனுபவம் உடையவர்கள். இந்த சகோதரர்கள் இப்போது பலமான சகோதரத்துவ தொடர்புகளை ஏற்படுத்தி, ஒன்றாக கற்று, பிறரை அதிக தாக்கத்துடன் ஆசீர்வதிக்க முடியும்.

கடந்த ஜூன்மாதம் சகோதரி நெல்சனும் நானும், சபையின் இளைஞர்களிடம் பேசினோம். திரையின் இருபக்கத்திலும் இஸ்ரவேலைக்கூட்டிச் சேர்க்க உதவ, கர்த்தரின் இளைஞர் பட்டாளத்தில் சேர நாங்கள் அவர்களை அழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். இந்த கூடுகை இன்று பூமியில் மிகப்பெரிய சவால், மிகப்பெரிய நோக்கம், மிகப்பெரிய பணி. 1

பெண்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதால், இந்த நோக்கத்துக்கு கண்டிப்பாக பெண்கள் தேவை. ஆகவே இன்றிரவில் உங்களுக்கு நான் சபையின் பெண்களுக்கு சிதறுண்ட இஸ்ரவேலை கூட்டிச் சேர்க்க உதவி செய்து வருங்காலத்தை வடிவமைக்க ஒரு தீர்க்கதரிசன விண்ணப்பத்தை கொடுக்கிறேன்,

நீங்கள் எங்கு தொடங்க முடியும்?

நான் நான்கு அழைப்புக்களைக் கொடுக்கட்டுமா:

முதலாவது, உங்கள் மனதில் எதிர்மறை, அழுக்கான சிந்தனைகளை கொண்டுவருகிற சமூக ஊடகங்களிலிருந்தும், பிற எந்த ஊடகங்களிலிருந்தும் 10 நாள் விலகியிருப்பதில் பங்கேற்க நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் விலகியிருக்கும்போது, எந்த செல்வாக்குகளை அகற்றுவது என அறிய ஜெபியுங்கள். உங்கள் 10 நாள் விலகியிருத்தலின் தாக்கம் உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் ஆவியைக் காயப்படுத்திய உலகப் பார்வையிலிருந்து இடைவேளை எடுத்த பிறகு என்ன கவனித்தீர்கள்? இப்போது நீங்கள் எங்கு நேரத்தையும் சக்தியையும் செலவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் மாற்றம் இருக்கிறதா? சிறிதாவது உங்கள் முன்னுரிமைகள் இடம் மாறியிருக்கிறதா? ஒவ்வொரு உள்ளுணர்வையும் பதிவு செய்து பின்பற்ற நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது, இப்போதைக்கும் வருட முடிவுக்குமிடையில் மார்மன் புஸ்தகத்தை வாசிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் முடியாததுபோல தோன்றுகிற அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் சமாளிக்க முயலும்போது, முழு இருதய நோக்கத்தோடு நீங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அதை அடைய வழி காண கர்த்தர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் ஜெபத்துடன் படிக்கும்போது, உங்களுக்கு பரலோகம் திறக்கும் என நான் வாக்களிக்கிறேன். அதிக உள்ளுணர்வுடனும் வெளிப்படுத்தலுடனும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

நீங்கள் வாசிக்கும்போது, இரட்சகரைப்பற்றி பேசுகிற அல்லது குறிப்பிடுகிற ஒவ்வொரு வசனத்தையும் அடையாளமிட நான் உங்களை ஊக்குவிக்கிறேன். பின்பு கிறிஸ்துவைப்பற்றி பேசவும், கிறிஸ்துவில் களிகூரவும், உங்கள் குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் கிறிஸ்துவைப்பற்றி பிரசங்கிக்கவும் நோக்கமாயிருங்கள். 2 இந்த முறை மூலமாக நீங்களும் அவர்களும் இரட்சகருக்கு நெருக்கமாக இழுக்கப்படுவீர்கள். மாற்றங்களும் அற்புதங்களும் நடக்கத் தொடங்கும்.

வீட்டை மையமாகக் கொண்டு சபையால் ஆதரிக்கப்படுகிற புதிய ஞாயிறு பள்ளி பாடத்திட்டம்பற்றி இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய, சமநிலைப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட சுவிசேஷ போதனை முயற்சிக்கு, என் அன்பு சகோதரிகளே, நீங்கள்தான் திறவுகோல். தயவுசெய்து வேதங்களிலிருந்து நீங்கள் கற்பனவற்றை நீங்கள் நேசிப்பவர்களுக்கு போதியுங்கள். அவர்கள் பாவம் செய்யும்போது, அவரது குணமாக்குதலுக்காகவும் சுத்திகரிப்புக்காகவும் இரட்சகரிடம் எப்படி திரும்புவது என அவர்களுக்கு போதியுங்கள். அவர்களது வாழ்க்கையில் தினமும் அவரது பலப்படுத்தும் வல்லமையை எப்படி வரவைப்பது என அவர்களுக்கு போதியுங்கள்.

மூன்றாவது, வழக்கமாக ஆலயம் செல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் அதிக தியாகம் செய்ய இது தேவைப்படலாம். வழக்கமாக அதிகமாக ஆலயத்திலிருக்க நேரமிருப்பது, அவரது ஆலயத்தில் நீங்கள் தரிப்பிக்கப்பட்ட அவரது ஆசாரியத்துவ வல்லமையை எப்படி பெறுவது என கர்த்தர் நமக்குப் போதிப்பதை அனுமதிக்கும். ஆலயத்துக்கு அருகில் வசிக்காதவர்களுக்கு, வேதங்களிலும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலும் ஆலயங்களைப்பற்றி ஜெபத்துடன் படிக்க நான் உங்களை அழைக்கிறேன். எப்போதையும்விட ஆலயங்களைப்பற்றி அதிகம் அறிவதையும்,புரிவதையும்,உணர்வதையும் நாடுங்கள்.

கடந்த ஜூன் மாதம் நமது உலகளாவிய இளைஞர் ஆராதனையில், அவனது ஸ்மார்ட் கைபேசிக்கு பதிலாக சாதாரண கைபேசியை அவனது பெற்றோர் மாற்றிக்கொடுத்தபோது அந்த இளைஞனின் வாழ்க்கை மாறிய இளைஞனைப்பற்றி நான் பேசினேன். இந்த இளைஞனின் தாய் ஒரு பயமற்ற விசுவாசமிக்க பெண். அவன் ஊழியம் செய்வதை தடுக்கக்கூடிய தேர்வுகளை நோக்கி அவன் நழுவிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். தனது மகனுக்கு நல்லபடியாக எப்படி உதவுவது என தனது விண்ணப்பங்களை ஆலயத்துக்கு கொண்டு சென்றாள். பின் அவள் ஒவ்வொரு உணர்த்துதலையும் பின்பற்றினாள்.

அவள் சொன்னாள், “குறிப்பிட்ட சமயங்களில் குறிப்பிட்டவற்றை பிடிக்க என் மகனின் கைபேசியை சோதிக்க நான் ஆவி வழிநடத்துவதை உணர்ந்தேன். இந்த ஸ்மார்ட் கைபேசிகளைக் கையாள எனக்குத் தெரியவில்லை, ஆனால், நான் பயன்படுத்தாத சமூக ஊடகங்கள் அனைத்துக்கும் என்னை வழிநடத்தியது. தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வழிநடத்தல் தேடும் பெற்றோருக்கு ஆவி உதவும் என எனக்குத் தெரியும். முதலில் என் மகன் என் மீது கோபமடைந்தான். ... ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் எனக்கு நன்றி சொன்னான். அவனால் வித்தியாசத்தை உணர முடிந்தது.”

அவளது மகனின் நடத்தையும் மனோபாவமும் அதிகமாக மாறின. அவன் வீட்டில் அதிகம் உதவி செய்தான், அதிகம் சிரித்தான், சபையில் நன்கு கவனித்தான். சிறிது காலம் ஆலய ஞானஸ்நான தொட்டியில் சேவை செய்வதை விரும்பினான், தன் ஊழியத்துக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்.

என் நாலாவது அழைப்பு, சரியான வயதுடைய நீங்கள் ஒத்தாசைச் சங்கத்தில் முற்றிலும் பங்கெடுங்கள். தற்போதைய ஒத்தாசைச் சங்க நோக்க வாசகத்தை படிக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அது உணர்த்தக்கூடியது. உங்கள் சொந்த வாழ்க்கையின் நோக்க வாசகத்தை விருத்திசெய்ய அது உங்களை வழிநடத்தக்கூடும். 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒத்தாசைச் சங்க பிரகடனத்தில் உள்ள சத்தியங்களை சுவைக்க நான் உங்களை அழைக்கிறேன். 3 இந்த பிரகடனத்தின் ஒரு சட்டமிடப்பட்ட பிரதி, பிரதான தலைமை அலுவலக சுவற்றில் தொங்குகிறது. அதை வாசிக்கும் போதெல்லாம் நான் உற்சாகமடைகிறேன். அது நீங்கள் யார் எனவும், சிதறுண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவ உங்கள் பங்கை இந்த சரியான நேரத்தில் செய்யும்போது நீங்கள் யாராக இருக்க வேண்டுமென்பதையும் விவரிக்கிறது.

என் அருமை சகோதரிகளே, நீங்கள் எங்களுக்குத் தேவை! “உங்கள் பலம், உங்கள் மனமாற்றம், உங்கள் ஒப்புக்கொடுத்தல், வழிநடத்தும் உங்கள் திறமை, உங்கள் ஞானம், மற்றும் உங்கள் குரல்கள் எங்களுக்குத் தேவை.” 4 நீங்களில்லாமல் நாங்கள் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க முடியாது.

நான் உங்களை நேசிக்கிறேன், உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன், இந்த முக்கிய அவசர பணியில் நீங்கள் உதவி செய்யும்போது, உலகத்தைப் பின்னுக்குத் தள்ளும் திறமையைப்பெற உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். அவரது நேச குமாரனின் இரண்டாம் வருகைக்காக உலகத்தை நாம் ஆயத்தப்படுத்த நமது பரலோக பிதா விரும்புகிற அனைத்தையும் நாம் ஒன்றாக செய்ய முடியும்.

இயேசுவே கிறிஸ்து. இது அவரது சபை. இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), HopeofIsrael.lds.org.

  2. 2 நேபி 25:26 பார்க்கவும்.

  3. இந்த ஆவணங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. ஒத்தாசைச் சங்க நோக்க வாசகத்துக்கு, lds.org/callings/relief-society. For the Relief Society declaration, see Mary Ellen Smoot, “Rejoice, Daughters of Zion,” Liahona, Jan. 2000, 111–14 பார்க்கவும்.

  4. Russell M. Nelson, “A Plea to My Sisters,” Liahona, Nov. 2015, 96; emphasis added.