பெண்களும் வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலும்
வீட்டில் சுவிசேஷம் கற்க அதிக முக்கியத்துவம் கொடுக்க அவரது முயற்சியில் நீங்கள் எப்படி முக்கிய பங்காற்றலாம் என்பதற்கு இரட்சகர் ஒரு பரிபூரண உதாரணம்.
எனக்கன்பான சகோதரிகளே, உங்களை சந்திப்பது அற்புதமானது. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் இது ஒரு அற்புதமான நேரம். அவர் செய்வேன் என அவர் வாக்களித்ததுபோல அவரது சபையின்மேல் கர்த்தர் ஞானத்தைப் பொழிகிறார்.
அவர் சொன்னதை நீங்கள் நினைவு வைத்திருப்பீர்கள். “எம்மட்டும் சுழற் தண்ணீர்கள் அசுத்தமாயிருக்கும்? வானங்களை எந்த சக்தி நிறுத்தும்? அப்படியே அதன் வகுக்கப்பட்ட பாதையிலிருந்து மிசௌரி ஆற்றைத் தடுக்க அல்லது அதன் ஓட்டத்தை மேலே திருப்ப மனுஷன் தன்னுடைய அற்பமான கையை நீட்டுவதைப்போல, பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள்மீது வானத்திலிருந்து சர்வ வல்லவர் ஞானத்தைப் பொழிவதிலிருந்து தடுப்பதைப்போலிருக்கும்.” 1
ஞானத்தை தற்போது பகிர்ந்துகொள்வதில் கர்த்தருடைய பகுதி, அவருடைய மக்களின் தலைகள் மீதும் இருதயங்களிலும் அவர் நித்திய சத்தியத்தை பொழியப்பண்ணுதலை முடிக்கிவிடும் தொடர்புடையது. அந்த அற்புதமான முடுக்கிவிடுதலில் ஒரு முதன்மையான பங்கை பரலோக பிதாவின் குமாரத்திகள் நடத்துவார்களென அவர் தெளிவுபடுத்தினார். வீட்டிலும், குடும்பத்திற்குள்ளும் சுவிசேஷ அறிவுறுத்தலில் மிக முக்கியத்துவம் வைக்க அவருடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசியை அவர் நடத்தியது அற்புதத்தின் ஒரு ஆதாரம்.
“அவருடைய பரிசுத்தவான்கள் மேல் ஞானத்தைப் பொழிய கர்த்தருக்குதவ உண்மையுள்ள சகோதரிகளை ஒரு பிரதான சக்தியாக எப்படி அது செய்கிறதென?” நீங்கள் கேட்கலாம். “குடும்பம்: உலகத்திற்கு ஓர் பிரகடனத்தில்” கர்த்தர் பதில் கொடுக்கிறார். நீங்கள் வார்த்தைகளை நினைவுவைத்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் புதிய அர்த்தத்தைப் பார்த்து, இப்போது நடக்கிற இந்த அற்புதமான மாற்றங்களை கர்த்தர் வருமுன் கண்டார் என்பதை அங்கீகரிப்பீர்கள். “தங்களுடைய பிள்ளைகளைப் போஷிப்பதில் தாய்மார்களுக்கு முதன்மையான பொறுப்பிருக்கிறது” 2 என்ற இந்த வார்த்தைகளில் குடும்பத்தில் பிரதான சுவிசேஷ கல்வியாளர்களாயிருக்க சகோதரிகளுக்கு அவர் பொறுப்பளித்தார். சுவிசேஷ சத்தியத்தையும் ஞானத்தையும் போஷிப்பதும் இதில் அடங்கும்.
பிரகடனம் தொடர்கிறது. “தகப்பன்மார்களும் தாய்மார்களும் சமபங்குதாரர்களாக ஒருவருக்கொருவர் உதவ கடமைப்பட்டிருக்கிறார்கள்.” 3 அவர்கள் சமபங்குதாரர்கள், ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் ஞானத்தைப் பெறுவதற்கும் தங்களுடைய சாத்தியத்தில் சமமானவர்கள், ஆகவே ஒருவருக்கொருவர் உதவுவதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஒன்றாக மேன்மையடைந்திருக்க தங்களுடைய தெய்வீக இலக்கில் அவர்கள் சமமானவர்கள். உண்மையில் ஆண்களும் பெண்களும் தனியாக மேன்மையடைய முடியாது.
ஏன், பின்னர், ஒரு ஐக்கிய மற்றும் சமமான உறவில், வானத்திலிருந்து வருகிற சத்தியத்தின் ஞானத்தை யாவரும் பெறவேண்டிய மிகமுக்கிய போஷிப்புடன் போஷிக்க தேவனின் குமாரத்தி பெறுகிறாரா? நான் பார்க்க முடிந்தவரை, இந்த உலகத்தில் குடும்பங்கள் உருவாக்கப்பட்டதினால் அது கர்த்தரின் வழி.
உதாரணமாக அவர்கள் தேவனின் சகல கற்பனைகளை கைக்கொள்ளவும் ஒரு குடும்பத்தை அமைக்கவும் ஜீவவிருட்சத்தின் கனியை ஆதாம் புசிக்கவேண்டியதிருந்த ஞானத்தைப் பெற்றவள் ஏவாள். அது ஏன் முதலில் ஏவாளுக்கு வந்ததென்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஆதாம் மேல் ஞானம் பொழிந்தபோது ஆதாமும் ஏவாளும் பரிபூரணமாக ஒன்றுபட்டிருந்தார்கள்.
மற்றொரு எடுத்துக்காட்டான பெண்களின் போஷித்தல் வரங்களை கர்த்தர் பயன்படுத்துதல் ஏலமனின் குமாரர்களை அவர் பெலப்படுத்திய வழி. குறிப்பை நான் படித்தபோது ஏதோ எனது தொண்டையை அடைத்து, பின்னர், நான் ராணுவ சேவைக்காக வீட்டைவிட்டுப் போகும்போது, என்னுடைய சொந்த தாயின் அமைதியான உத்தரவாத வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்தேன்.
ஏலமன் பதிவுசெய்தான்:
“தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் தங்களை விடுவிப்பார் என்று அவர்கள் தங்கள் அன்னையரால் போதிக்கப்பட்டிருந்தார்கள்.
“அவர்கள் தங்கள் அன்னைகளின் வார்த்தைகளை என்னிடம் மறுபடியும் சொல்லி, எங்கள் அன்னைகள் அதை அறிந்திருந்தார்களா என்று நாங்கள் சந்தேகிப்பதில்லை என்றார்கள்.” 4
விசுவாசமிக்க சகோதரிகளுக்கு குடும்பத்தில் போஷித்தலின் பிரதான பொறுப்பைக் கொடுத்ததற்கான கர்த்தரின் காரணங்கள் முழுவதும் எனக்குத் தெரியாதபோது, அன்பு செலுத்த உங்கள் திறனில் அது செய்யப்படவேண்டுமென்பதை நான் நம்புகிறேன். உங்கள் சொந்தங்களைவிட யாரோ ஒருவரின் தேவைகளை உணர அதிக அன்பு தேவைப்படுகிறது. அது நீங்கள் போஷிக்கிறவருக்கான கிறிஸ்துவின் தூய அன்பு. போஷிப்பவராக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரிடமிருந்து வருகிற அந்த தயாளத்தின் உணர்வு, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் விளைவுகளுக்கு தகுதியாயிருக்கிறது. என்னுடைய தாயார் எடுத்துக்காட்டாயிருந்த, ஒத்தாசைச் சங்கத்தின் குறிக்கோள் எனக்கு உணர்த்துதலாகத் தோன்றுகிறது. “அன்பு ஒருக்காலும் ஒழியாது.”
தேவனின் குமாரத்திகளாக, மற்றவர்களின் தேவைகளை உணரவும் அன்பு செலுத்தவும் உங்களிடம் ஒரு உள்ளார்ந்த, மகத்தான திறமை இருக்கிறது. இது, பதிலுக்கு, பரிசுத்த ஆவியின் மெல்லிய குரல்களுக்கு அதிக சார்புள்ளவர்களாக்குகிறது. பின்னர், நீங்கள் நினைக்கிறவற்றை, நீங்கள் சொல்லுகிறவற்றை, மக்களை போஷிப்பதற்கு நீங்கள் செய்கிறவற்றை, அவர்கள்மேல் ஞானத்தை, சத்தியத்தை, தைரியத்தை கர்த்தர் பொழியப்பண்ணும்படியாக பரிசுத்த ஆவி வழிநடத்தும்.
என்னுடைய குரலைக் கேட்டுக்கொண்டிருக்கிற சகோதரிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் பயணத்தின் வழியே ஒரு தனித்துவமான இடத்திலிருக்கிறீர்கள். சில இளம் பெண்கள் முதன்முறையாக பெண்கள் பொதுக்கூட்டதிலிருக்கிறீர்கள். சில இளம் பெண்கள் அவர்களிருக்கவேண்டுமென தேவன் விரும்புகிற போஷிப்பவர்களாயிருக்க ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் பிள்ளைகளில்லாத சிலர் புதிதாக திருமணமானவர்கள், மற்றவர்கள் ஒன்று அல்லது அதிகமான பிள்ளைகளுள்ள இளம் பெண்கள். சிலர் குமரப்பருவத்திலுள்ளவர்களின் தாய்மார்கள், மற்றவர்கள் ஊழியக்களத்திலுள்ள பிள்ளைகளுடனிருக்கிறார்கள். சிலருக்கு, விசுவாசத்தில் பலவீனமாகி வீட்டைவிட்டு தூரத்திலிருக்கும் பிள்ளைகளிருக்கிறார்கள். விசுவாசமுள்ள எந்த துணையுமில்லாமல் சிலர் தனிமையில் வாழுகிறார்கள். சிலர் பாட்டிகளாக இருக்கிறார்கள்.
ஆயினும், உங்களுடைய சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும், வருங்காலத்திலோ, இந்த உலகத்திலோ, அல்லது ஆவியின் உலகத்திலோ, நீங்கள் தேவனின் குடும்பத்தில், உங்கள் சொந்த குடும்பத்தில், ஒரு பகுதியாய், முக்கிய பகுதியாயிருக்கிறீர்கள். உங்கள் அன்போடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தோடும் உங்களால் முடிந்தவரையில் அவருடைய மற்றும் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் அநேகருக்கு போஷிக்க வேண்டியது தேவனிடமிருந்து வந்த உங்களுடைய நம்பிக்கை.
யாரைப் போஷிக்கவேண்டும், எவ்வாறு, எப்போதென்பதை அறிவது உங்கள் நடைமுறை சவால். கர்த்தருடைய உதவி உங்களுக்குத் தேவை. மற்றவர்களின் இருதயங்களை அவர் அறிந்திருந்து, உங்களுடைய போஷித்தலை ஏற்றுக்கொள்ள அவர்கள் எப்போது ஆயத்தமாயிருக்கிறார்களென்பதையும் அவர் அறிந்திருக்கிறார். உங்களுடைய விசுவாசத்தின் ஜெபம் வெற்றிக்கு உங்கள் திறவுகோலாயிருக்கும். அவருடைய வழிநடத்துதலைப் பெறுவதை நீங்கள் சார்ந்திருக்கலாம்.
இந்த ஊக்குவித்தலை அவர் கொடுத்தார். “விசுவாசத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களென்று நம்பி, எனது நாமத்தினால் பிதாவினிடத்தில் கேளுங்கள், அவசியமாயிருக்கிற சகல காரியங்களையும் வெளிப்படுத்துகிற பரிசுத்த ஆவியை நீங்கள் பெறுவீர்கள்.” 5
ஜெபத்திற்குக் கூடுதலாக, வேதங்களை தீவிரமாக படிப்பது போஷிப்பதற்கு உங்கள் வளரும் ஆற்றலின் பகுதியாகும். வாக்குத்தத்தம் இங்கிருக்கிறது. “நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாக கவலைப்படாமலுமிருங்கள், ஆனால் ஜீவ வார்த்தைகளை உங்கள் மனங்களில் தொடர்ந்து பொக்கிஷப்படுத்துங்கள், ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற அந்த பங்கு அந்த மணிநேரமே உங்களுக்குக் கொடுக்கப்படும்.” 6
ஆகவே ஆவிக்குரிய காரியங்களில் ஜெபிக்க, சிந்திக்க, தியானிக்க அதிக நேரத்தை நீங்கள் எடுப்பீர்கள். உங்கள்மேல் பொழிகிற சத்தியத்தின் ஞானம் உங்களுக்கிருக்கும், உங்கள் குடும்பத்தில் பிறரை போஷிக்க உங்கள் ஆற்றலில் வளருவீர்கள்.
எவ்வாறு சிறப்பாக போஷிப்பதென்பதைக் கற்றுக்கொள்வதில் உங்கள் முன்னேற்றம் தாமதமாக இருப்பதாக நீங்கள் உணருகிற நேரங்கள் வரும். நிலைநிற்க இது விசுவாசத்தை எடுக்கும். இந்த ஊக்குவித்தலை இரட்சகர் அனுப்பினார்.
“ஆகவே, நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்.
“இதோ, இருதயத்தையும் ஒரு உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார், மனம் பொருந்திச் செவிகொடுப்பவர்கள் இந்த கடைசி நாட்களில் சீயோன் தேசத்தின் நன்மையைப் புசிப்பார்கள்.” 7
பிறரை போஷிப்பதற்கு கர்த்தரின் அழைப்பை ஏற்றுக்கொள்ள நீங்கள் விருப்பமுள்ளவராக இருக்கிறீர்களென்பதற்கு இன்றிரவு நீங்கள் இங்கிருப்பது ஆதாரமாயிருக்கிறது. இன்றிரவில் இங்கிருக்கிற மிக இளமையானவர்களுக்கும் இது உண்மை. உங்கள் குடும்பத்தில் யாரை போஷிக்கவேண்டுமென நீங்கள் அறிவீர்கள். உண்மையான நோக்கத்துடன் நீங்கள் ஜெபித்தால் உங்கள் மனதில் ஒரு பெயர் அல்லது முகம் வரும். என்ன செய்யவேண்டும் அல்லது என்ன சொல்லவேண்டுமென அறிய நீங்கள் ஜெபித்தால் ஒரு பதிலை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் கீழ்ப்படிகிற ஒவ்வொரு நேரமும், போஷிக்க உங்கள் ஆற்றல் வளரும். உங்கள் சொந்த பிள்ளைகளை எப்போது நீங்கள் போஷிப்பீர்களென்ற அந்த நாளுக்காக நீங்கள் ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.
போஷித்தலுக்கு செவிகொடாததாக தோன்றுகிற ஒரு மகன் அல்லது மகளுக்கு எவ்வாறு போஷிப்பதென்று அறிய குமரப்பருவத்தினரின் தாய்மார்கள் ஜெபிக்கலாம். உங்கள் பிள்ளைக்குத் தேவையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய செல்வாக்கு யாரிடமிருக்கிறதென அறிந்துகொள்ள நீங்கள் ஜெபிக்கலாம். கவலைப்படுகிற தாய்மார்களின் இத்தகைய இதயப்பூர்வமான ஜெபங்களை தேவன் கேட்கிறார், பதிலளிக்கிறார், அவர் உதவியை அனுப்புகிறார்.
மேலும், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களால் ஏற்பட்ட மனவேதனையை இன்றிரவு இங்கே ஒரு பாட்டி உணரலாம். வேதங்களிலுள்ள குடும்பங்களின் அனுபவங்களிலிருந்து தைரியத்தையும் வழிகாட்டுதலையும் நீங்கள் எடுக்கலாம்.
ஏவாள் ஆதாம் காலத்திலிருந்து, இஸ்ரவேல் பிதாவின் வழியாக மார்மன் புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயமான செவிகொடுக்காத பிள்ளைகளின் துயரங்களின்போது என்ன செய்வதென்ற பாடமிருக்கிறது. அன்பு செலுத்துவதை ஒருபோதும் நிறுத்தாதீர்.
அவருடைய பரலோக பிதாவின் கலகக்கார ஆவிப் பிள்ளைகளை அவர் நேசித்த்தில் இரட்சகரின் ஊக்குவிக்கும் எடுத்துக்காட்டு நமக்கிருக்கிறது. அவர்களும், நாமும்கூட வேதனையை ஏற்படுத்தினாலும் இரட்சகரின் கை இன்னமும் நீட்டியபடியே இருக்கிறது. 8 போஷிக்க தோல்வியுற்று, அவர் முயற்சித்தபோது 3 நேபியில் அவருடைய ஆவிக்குரிய சகோதரிகளையும் சகோதரர்களையும்பற்றி அவர் பேசினார். “இஸ்ரவேல் வீட்டாரான ஜனமே, கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குள் சேர்த்து வைப்பதைப்போல, நானும் உங்களை எவ்வளவு விசை கூட்டிச்சேர்த்து உங்களைப் போஷித்தேன்.” 9
சகோதரிகளுக்கு, வாழ்கைப் பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு குடும்ப சூழ்நிலையிலும், ஒவ்வொரு கலாச்சாரத்தின் வழியாகவும், வீட்டிலும் குடும்பத்திலும் சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதலில் அதிக முக்கியத்துவம் கொடுக்க அவருடைய நடவடிக்கையில் நீங்கள் எவ்வாறு ஒரு முக்கிய பங்கை வகிப்பீர்களென்பதற்கு இரட்சகரே உங்களின் மிகச்சரியான எடுத்துக்காட்டு.
உங்கள் குடும்பத்திலுள்ள நடவடிக்கைகளிலும், பழக்கங்களிலும் மாற்றங்களாக உங்களுடைய அன்பின் உள்ளார்ந்த உணர்வுகளை நீங்கள் கொண்டுவருவீர்கள். அவைகள் பெரிய ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொண்டுவரும். குடும்ப அங்கத்தினர்களுக்காகவும், அவர்களுடனும் நீங்கள் ஜெபிக்கும்போது, அவர்களுக்காக உங்களுடைய, இரட்சகருடைய அன்பை நீங்கள் உணருவீர்கள். அதை நீங்கள் நாடும்போது, அது மேலும் மேலும் உங்கள் ஆவிக்குரிய வரமாக மாறும். அதிக விசுவாசத்துடன் நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் அதை உணருவார்கள்.
வேதங்களை சத்தமாக படிக்க குடும்பம் ஒன்றுசேரும்போது, உங்களை ஆயத்தப்படுத்த ஏற்கனவே நீங்கள் அவைகளைப் படித்து அவைகளில் ஜெபித்திருப்பீர்கள். உங்கள் மனதை விழிப்பூட்டுவதற்காக ஜெபிக்க தருணங்களை நீங்கள் காண்பீர்கள். பின்னர், படிப்பதற்கான உங்கள் முறை வரும்போது, தேவனிடத்திலும் அவருடைய வார்த்தைகளிலும் உங்களுடைய அன்பை குடும்ப அங்கத்தினர்கள் உணருவார்கள். அவராலும் அவருடைய ஆவியாலும் அவர்கள் போஷிக்கப்படுவார்கள்.
அதற்காக நீங்கள் ஜெபித்து, திட்டமிட்டால், எந்த குடும்ப ஒன்றுகூடுதலிலும் அதே பொழிவு வரும். அது முயற்சியையும் நேரத்தையும் எடுக்கும் ஆனால், அது அற்புதங்களைக் கொண்டுவரும். நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய அம்மா கற்றுக்கொடுத்த ஒரு பாடம் எனக்கு நினைவிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் பயணங்களை அவர் வண்ண வரைபடமாக வரைந்த அது இன்னமும் என் மனதிலிருக்கிறது. அதைச் செய்ய அவர் எவ்வாறு நேரத்தையும் ஆற்றலையும் பெற்றார் என நான் ஆச்சரியப்படுகிறேன். இந்நாள்வரை அந்த உண்மையுள்ள அப்போஸ்தலருக்காக அவருடைய அன்பால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் உங்கள் குடும்பங்களின் மேல் சத்தியத்தின் பொழிவுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் பங்களிக்க வழிகளைக் காண்பீர்கள். உங்களுடைய தனித்துவமான பங்களிப்பு எதுவாயிருக்குமென அறிந்துகொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபித்து, படித்து, தியானிப்பீர்கள். ஆனால் இதை நான் அறிவேன். தேவ குமாரர்களுடன் சமமாக பிணைக்கப்பட்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலிலும், வாழ்வதிலும் ஒரு அற்புதத்தின் பிரதான பகுதியாயிருப்பீர்கள், அது இஸ்ரவேல் கூடிச்சேர்தலை துரிதப்படுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான திரும்புதலுக்காக தேவனின் குடும்பத்தை ஆயத்தப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.