ஆவியால் அறிவைத் தேடுதல்
சத்தியத்தைப் பகுத்தறிய நமது பகுத்தறியும் மனங்கள் மூலமாக மட்டுமல்ல, ஆனால், பரிசுத்த ஆவியின் அமர்ந்த மெல்லிய குரலின் மூலமாகவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
அன்பான சகோதர சகோதரிகளே, “படிப்பு மற்றும் விசுவாசத்தால் கற்றுக்கொள்வதை நாட”1 மீண்டும் மீண்டும் கர்த்தர் நமக்குக் கூறியிருக்கிறார். நமது மனங்களின் தர்க்கரீதியான வாதத்தின் மூலமாக மட்டுமல்ல பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் மற்றும் உணர்த்துதலின் மூலமாகவும் நாம் ஒளியையும் புரிந்துகொள்ளுதலையும் பெறலாம்.
இந்த கூடுதல் அறிவின் ஆதாரம் எப்போதும் என் வாழ்க்கையில் ஒரு பகுதியாயிருந்ததில்லை.
என்னுடைய அன்பு மனைவி ஐரினும் நானும் 31 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு திருமணமான புதிதில் சபையில் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் கொலம்பியாவில் வளர்ந்தோம் ஆனால் எங்களுடைய திருமணத்திற்கு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் என்னுடைய வேலை ஜெர்மனியில் வாழ எங்களை அழைத்துச்சென்றது. நாங்கள் மிக இளமையாயிருந்தோம், அதிக நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் எங்களுக்கிருந்தன, குறிப்பாக அது உற்சாகமாகவும் சந்தோஷமான நேரமுமாக எங்களுக்கிருந்தது.
என்னுடைய வேலையில் நான் கவனம் செலுத்தியபோது, எவ்வாறு எப்போது என்றறியாமல் பரலோகத்திலிருந்து சில வகையான செய்தியை நாங்கள் பெறுவோமென ஐரின் உணர்ந்தாள். ஆகவே, எப்போதும் அந்த தனித்துவமான செய்திக்காக காத்திருந்து, கலைக்களஞ்சிகள், தூசகற்றும் கருவிகள், சமையல் புத்தகங்கள், சமையலறை உபகரணங்கள் முதலியவைகளுடன் வீட்டுக்கு வீடு செல்லும் எல்லா வகையான விற்பனையாளர்களையும் அவள் வீட்டிற்குள் வர அனுமதிக்க ஆரம்பித்தாள்.
சூட்டுகள் அணிந்திருந்த இரண்டு வாலிபர்கள் எங்களுடைய கதவைத் தட்டியதாகவும், அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி மிகத்தெளிவான வேறுபட்ட உணர்வு அவளுக்கிருந்ததாகவும் ஒருநாள் மாலை அவள் என்னிடம் கூறினாள். தேவனைப்பற்றி அவளிடம் பேச அவர்கள் விரும்பியதாகவும், நான் வீட்டிலிருக்கும்போது மீண்டும் அவர்கள் வருவதாகவும அவர்கள் சொன்னார்கள். எதிர்பார்த்த செய்தி இதுவாக இருக்கமுடியுமா?
அவர்கள் எங்களை சந்திக்க ஆரம்பித்தார்கள், அவர்களுடைய வழிநடத்துதலில் நாங்கள் வேதங்களைப் படித்து, இயேசு கிறிஸ்து எங்கள் இரட்சகர், மீட்பர் என்பதன் மிகமுக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவந்தோம். சுய நினைவுள்ள உடன்படிக்கையாயிருக்காத, குழந்தைகளாக இருந்தபோது நாங்கள் ஞானஸ்நானம் பெற்றதற்காக விரைவிலேயே நாங்கள் வருந்தினோம். எப்படியாயினும், மீண்டும் ஞானஸ்நானம் பெற்றவர்களாக, புதிதான சபையில் அங்கத்தினர்களானதிலும், முதலாவதாக, அதைப்பற்றிய எல்லாவற்றையும் புரிந்துகொள்ள உண்மையாக நாங்கள் விரும்பினோம்.
ஆனால், மார்மன் புஸ்தகத்தைப்பற்றியும், ஜோசப் ஸ்மித்தைப்பற்றியும், இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றியும் ஊழியக்காரர்கள் எங்களிடம் கூறிக்கொண்டிருந்ததெல்லாம் முழு உண்மையா என்பதை நாங்கள் எப்படி அறிந்துகொள்ளமுடியும்? “அவர்களுடைய கனிகளாலே நாங்கள் அறிவோம்” 2 என்ற கர்த்தரின் வார்த்தைகளிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டோம். ஆகவே, எங்களின் மிகுந்த பகுத்தறியும் மனங்களின் கண்களுடன் அந்த கனிகளைத் தேடி, மிகவும் திட்டவட்டமான முறையில் சபையை ஆராய்சி செய்ய நாங்கள் ஆரம்பித்தோம். நாங்கள் எதைக் கண்டோம்? நல்லது, நாங்கள் பார்த்தோம்.
-
வேதனையும், துயரமுமில்லாமல், இந்த வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷமாயிருக்கவேண்டுமென புரிந்துகொண்ட நட்புடனும் சந்தோஷத்துடனுமிருந்த மக்களையும் அற்புதமான குடும்பங்களையும் நாங்கள் பார்த்தோம்.
-
ஊதியம் பெறாத ஒரு மதபோதகர் இருந்து, அங்கத்தினர்களே நியமிப்புகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிற ஒரு சபை.
-
இயேசு கிறிஸ்துவும் குடும்பங்களும் எல்லாவற்றிற்கும் மையமாயிருக்கிற ஒரு சபை, அங்கத்தினர்கள் மாதத்திற்கு ஒரு முறை உபவாசமிருந்து, ஏழைகளுக்கும் வறியோருக்கும் உதவ வழங்குகிற ஒரு சபை, ஆரோக்கியமான பழக்கங்கள் ஊக்கமளிக்கப்பட்டு, தீங்குவிளைவிக்கிற பொருட்களைத் தவிர்க்க போதிக்கிற ஒரு சபை,
கூடுதலாக,
-
தனிப்பட்ட வளர்ச்சி, கல்வி, கடினஉழைப்பு, சுயசார்பின்மேல் வலியுறுத்தல் எங்களுக்கு பிடித்தது.
-
குறிப்பிடத்தக்க மனிதாபிமானத் திட்டத்தைப்பற்றி நாங்கள் அறிந்தோம்.
-
அற்புதமான இசையுடனும், அங்கே பகிர்ந்துகொள்ளப்பட்ட மகத்துவமான ஆவிக்குரிய கொள்கைகளுடனுமான பொது மாநாட்டால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்.
இதை எல்லாம் பார்த்த பின்பு சபையில் எந்த தவறையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, நாங்கள் கண்ட எல்லாவற்றையும் நாங்கள் மிகவும் விரும்பினோம். எப்படியாயினும், ஞானஸ்நானம் பெற இன்னமும் நாங்கள் தீர்மானிக்கவில்லை, ஏனெனில் செய்வதற்கு முன் எல்லாவற்றையும்பற்றி அறிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம்.
ஆனால், எங்களுடைய இருமனங்களிலும், கர்த்தர் பொறுமையுடன் எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். எங்களை வார்ப்பித்தார், எங்களுடைய பகுத்தறிவின் மனங்களால் மட்டுமல்ல, விசேஷமாக எங்கள் இருதயங்களில் பேசுகிற பரிசுத்த ஆவியின் மிக சிறிய மென்மையான குரலின்மூலமாகவும் உண்மையை நாங்கள் பகுத்தறிய வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்பதை கண்டுபிடிக்க அவர் எங்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்.
மோசியா 18வது அதிகாரத்தில், “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும் நீங்கள் விருப்பமுள்ளவர்களாய் இருக்கும்போது, இதுவே உங்களுடைய உள்ளங்களின் விருப்பமெனில் கர்த்தருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற ஏன் தயங்குகிறீர்கள்?” 3 என நாங்கள் படித்து, 10 மாதங்களாக சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டிருந்த பின்பு ஒருநாள் மாலை,அந்த குரலும், விளைவான உணர்வும் வந்தது.
மார்மன் புஸ்தகத்திலிருந்து அந்த பத்தி எங்கள் இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும் பிரவேசித்து, ஞானஸ்நானம் பெறாதிருக்க எந்த காரணமுமில்லை என்பதை திடீரென உணர்ந்தோம், அறிந்தோம். இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டிருந்த விருப்பங்கள் ,எங்கள் இருதயங்களின் விருப்பமாகவுமிருந்தது, அந்தக் காரியங்களே உண்மையில் முக்கியமாயிற்று. எல்லாவற்றையும் புரிந்துகொள்வதைவிட அதிக முக்கியமானவைகளிருந்தன ஏனெனில் போதுமாக எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒரு நேசமுள்ள பரலோக பிதாவின் வழிநடத்துதலின் கைகளின்மேல் நாங்கள் எப்போதுமே சார்ந்திருந்தோம், அவர் எங்களைத் தொடர்ந்து வழிநடத்துவாரென நம்பிக்கையாயிருந்தோம்.
ஆகவே, அந்த நாளிலே எங்களுடைய ஞானஸ்நானத்திற்கு ஒரு தேதியை ஒதுக்கி, இறுதியாக விரைவில் நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம்!
அந்த அனுபவத்திலிருந்து நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம்?
முதலாவதாக, எங்களால் மாற முடிகிற நபராக மாறுவதற்கு தொடர்ந்து எங்களுக்கு உதவ முயற்சிக்கிற ஒரு நேசமுள்ள பரலோக பிதாவின்மேல் முழுமையாக நாங்கள் நம்பிக்கை வைக்க முடியுமென நாங்கள் அறிந்துகொண்டோம். “வரி வரியாயும், கற்பனை கற்பனையாயும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக மனுபுத்திரருக்கு நான் கொடுப்பேன். என் கற்பனைக்கு செவிகொடுப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நான் அதிகமாய்க் கொடுப்பேன்” 4 என அவர் சொன்னபோது, அவருடைய வார்த்தைகளின் மகத்துவமான சத்தியத்தை நாங்கள் உறுதிசெய்தோம்.
இரண்டாவதாக, நம்முடைய பகுத்தறிவு மனங்களுக்குக் கூடுதலாக ஞானத்தைப் பெற மற்றொரு பரிமாணம், வழிநடத்துதலையும் புரிந்துகொள்ளுதலையும் நமக்குக் கொடுக்கும். இது நம்முடைய இருதயங்களிலும் நமது மனங்களிலும்கூட பேசிக்கொண்டிருக்கிற அவருடைய. பரிசுத்த ஆவியின் சிறிய, மெல்லிய குரல்
இந்தக் கொள்கையை நம்முடைய காட்சித் திறனோடு ஒப்பிட நான் விரும்புகிறேன். பரலோகத்திலுள்ள நமது பிதா ஒன்றை மட்டும் நமக்குத் தரவில்லை, ஆனால் இரண்டு சரீரக் கண்களைத் தந்திருக்கிறார். ஒரு கண்ணால் மட்டும் நம்மால் போதுமானளவுக்கு பார்க்கமுடியும், ஆனால் மற்றொரு தோற்றத்துடன் இரண்டாவது கண் நமக்கு வழங்குகிறது. நமது மூளைகளில் இரண்டு தோற்றங்களும் ஒன்றாக வைக்கப்படும்போது, நமது சுற்றுப்புறங்களின் ஒரு முப்பரிமாணத்தை அவைகள் விளைவிக்கிறது.
அதைப்போன்று, நமது சரீர மற்றும் ஆவிக்குரிய திறன்களின் மூலமாக, இரண்டு தகவல்களின் ஆதாரங்கள் நமக்குக் கொடுக்கப்படுகிறது. நமது சரீரஉணர்வுகளின் மூலமாக, பகுத்தறிதலின் மூலமாக நமது மனம் ஒரு தோற்றத்தை விளைவிக்கிறது. ஆனால், பரிசுத்த ஆவியின் வரத்தின் மூலமாக, இரண்டாவது தோற்றத்துடனும் பிதா நமக்கு வழங்கியிருக்கிறார். அது மிக முக்கியமானதாகவும் உண்மையானதாகவுமிருக்கிறது ஏனெனில் அது அவரிடத்திலிருந்து நேரடியாக வருகிறது. ஆனால், பரிசுத்த ஆவியின் மெல்லியகுரல் நுட்பமாக இருப்பதால், அந்த கூடுதல் ஆதாரத்தை அநேக மக்கள் உணர்வுபூர்வமாக அறியாதிருக்கிறார்கள்.
நமது ஆத்துமாக்களில் இந்த இரண்டு தோற்றங்களும் இணையும்போது, அவைகள் உண்மையாக இருக்கிறபடியே காரியங்களின் யதார்த்தத்தின் ஒரு முழு படத்தைக் காண்பிக்கிறது. உண்மையில், பரிசுத்த ஆவியின் கூடுலான தோற்றத்தின் மூலமாக, படம்பிடிக்கப்பட்டதைப்போல குறிப்பிட்ட யதார்த்தங்கள் ஏமாற்றுவதைப்போல அல்லது தெளிவான தவறாக வெளிக்காட்டப்படலாம் “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே நீங்கள் சகலவற்றின் சத்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்”5 என்ற மரோனியின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்
நம்முடைய பகுத்தறியும் மனதை மட்டும் சார்ந்திருந்து, பரிசுத்தஆவியின் மெல்லியகுரலின், கருத்துப் பதிவுகளின் மூலமாக நாம் பெறக்கூடிய ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலை மறுத்தாலோ அல்லது புறக்கணித்தாலோ ஒரே ஒரு கண் மூலமாக வாழ்க்கை முழுவதும் போய்க்கொண்டிருப்பதைப் போலிருக்கும் என்பதை என்னுடைய 31 ஆண்டுகளாக சபை அங்கத்தினராக அநேக முறைகள் நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அடையாளப்பூர்வமாக பேசினால், உண்மையில் நமக்கு இரண்டு கண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு காட்சிகளின் இணைதலில் மட்டுமே, நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற எல்லாவற்றின் உண்மையான, சகல சத்தியங்களின் முற்றிலுமான படத்தை நமக்குக் கொடுக்கமுடியும், அப்படியே ஒரு ஜீவிக்கிற பரலோக பிதாவின் பிள்ளைகளாக நமது அடையாளத்தின், நோக்கத்தின் முழுமையான மகத்துவமான புரிந்துகொள்ளுதலைக் கொடுக்க முடியும்.
“வருகிற நாட்களில், வழிகாட்டுதலில்லாமல், வழிநடத்துதலில்லாமல், ஆறுதல்படுத்துதலில்லாமல், பரிசுத்த ஆவியின் நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியதில் பிழைத்திருப்பது சாத்தியமாகாது” 6என ஒரு ஆண்டுக்கு முன்பு தலைவர் நெல்சன் எங்களுக்கு போதித்ததை நினைவுபடுத்துகிறேன்.
பரலோகத்தில் நமக்கு ஒரு அன்பான பிதா இருக்கிறார்,
-
ஒரு தெய்வீகத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பூமிக்கு வர நாம் அனைவரும் சம்மதித்தோம்
-
இயேசுவே கிறிஸ்துவென்றும், அவர் ஜீவிக்கிறார், அவரே என் இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறார்.
-
ஒரு தாழ்மையான விவசாய சிறுவன் அழைக்கப்பட்டு, தேவனுடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தின் அனைத்து திறவுகோல்களுடன், வல்லமையுடன், அதிகாரத்துடன் இந்த நேரங்களின் நிறைவேற்றுதலின் ஊழியக்காலத்தில் இதை துவக்கிவைத்த மகத்தான தீர்க்கதரிசியாக அவர் மாறினார்.
-
மார்மன் புஸ்தகம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது சாட்சி என்றும் குடும்பங்கள் என்றென்றைக்குமாய் ஒன்றுசேர்ந்திருக்கவேண்டும்.
-
இன்று, நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம்.நெல்சன் மூலமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய மறுஸ்தாபிதமான இந்த சபையை நடத்துகிறார்.
நான் ஆகுவதற்கு தேவன் உதவிக்கொண்டிருக்கிற இந்த மற்றும் அநேக பிற விலைமதிப்புள்ள சத்தியங்கள் ஆவிக்குரிய கட்டுமான பாளங்களாக மாறின. இந்த அற்புதமான வாழ்க்கையின் வழியே நாம் போகும்போதும், “படிப்பினாலும், விசுவாசத்தினாலும் கற்றுக்கொள்ளும்போதும்”, நானும் நீங்களும் இன்னமும் தேவையாயிருக்கிறோம் என்பதில் அநேக புதிய போதனைகளை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
இந்தக் காரியங்கள் சத்தியமாயிருக்கின்றன என நான் அறிவேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவைகளை சாட்சியளிக்கிறேன், ஆமென்.