2010–2019
அவர் செய்ததைப்போல
ஏப்ரல் 2019 பொது மாநாடு


அவர் செய்ததைப்போல

அவர் செய்ததைப்போல ஊழியம் செய்ய நாம் நாடும்போது, நம்மை மறக்கவும், மற்றவர்களை தூக்கிவிடவும் நமக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும்.

அவருக்கு கணைய புற்றுநோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, ஏறக்குறைய 18 மாதங்களுக்கு முன்பு, 2017 ஆண்டின் நடுவில், 64 வயதான என்னுடைய சகோதரர் மைக் எனக்கு தகவலளித்தார். அவருடைய வீட்டுப்போதகரிடமிருந்து ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைப் பெற்றதாகவும், அவருடைய ஆயர் அவரை சந்தித்ததாகவும் அவர் எனக்குக் கூறினார். “என்னுடைய மருத்துவமனையிலிருந்து என்னால் எதைப் பார்க்கமுடிகிறது எனப் பார்” என்ற தலைப்புடன், அவர் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட ஓக்லான்ட் கலிபோர்னியா ஆலயத்தின் ஒரு படத்தை பின்னர் எனக்கு அவர் அனுப்பியிருந்தார். 1

புற்றுநோயைப்பற்றி நான் ஆச்சரியப்பட்டதைப்போலவே வீட்டுப்போதகர்கள், ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், ஆயர்கள், ஆலயங்கள்பற்றி அவருடைய கருத்துக்களால் நான் ஆச்சரியப்பட்டேன். ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஒரு ஆசாரியனாக இருந்த மைக், அநேகமாக 50 ஆண்டுகளாக சபைக்கு ஒழுங்காக வராதிருந்தார்.

மார்மன் புஸ்தகத்தை, முத்திரிக்கும் வல்லமையை, மரணத்திற்குப் பின் வாழ்க்கையைப்பற்றி இப்போதைய அவருடைய அடிக்கடி கேள்விகளினிமித்தம், புற்றுநோயில் போராடிக்கொண்டிருந்த அவருடன் நாங்களிருந்தபோது, அநேகமாக அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் ஒரு குடும்பமாக நாங்கள், யோசனையாயிருந்தோம். மாதங்கள் கடந்து, புற்றுநோய் பரவியபோது கூடுதலான, விசேஷித்த சிகிச்சைக்காக யூட்டாவிற்கு, ஹன்ட்ஸ்மேன் புற்றுநோய் மையத்திற்கு இறுதியாக மைக்கைக் கொண்டுவந்தது.

அவர் வந்து சேர்ந்த பின்பு விரைவிலேயே இப்போது அவர் வசித்துக்கொண்டிருந்த பராமரிப்பு வசதியில் சேவை செய்த தொகுதியின் தொகுதித் தலைவரான ஜான் ஹோல்ப்ரூக் மைக்கை சந்தித்தார். மைக் தேவனுடைய குமாரனாயிருந்தார் என்றும், மைக்கின் நடைமுறை ஊழியம் செய்தலின் சகோதரராக ஜான் மாறுவதற்கு நடத்திய, அவர்கள் விரைவிலேயே பந்தத்தையும் நட்பையும் வளர்ப்பார்களென்பதுவும் எனக்குத் தெளிவு என ஜான் கருத்து தெரிவித்தார். ஊழியக்காரர்களின் சந்திப்புக்கு ஒரு உடனடி அழைப்பிருந்தது. என்னுடைய சகோதரர் அதை அமைதியாக நிராகரித்தார், ஆனால் சுவிசேஷ செய்தியைக் கேட்பதில் நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்களென மைக்குக்கு விவரித்து, அவர்களுடைய ஒரு மாத நட்பில் ஜான் மீண்டும் கேட்டார்.2 இம்முறை, அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊழியக்காரர்களுடன், அப்படியே ஆயர் ஜான் ஷார்ப்பின் சந்திப்புகளையும் அடிக்கடி நடத்தி, அவருடைய ஞானஸ்நானத்திற்கு 57 ஆண்டுகளுக்குப் பின்னர், இறுதியாக மைக் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெற நடத்தியது

கடந்த ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில், மாதக்கணக்கின் நடைமுறைகளைத் தொடர்ந்து, மோசமான பக்க விளைவுகளுக்குக் காரணமான புற்றுநோய் சிகிச்சையை நிறுத்தவும், இயற்கையின் போக்கில் நடக்கட்டும் என மைக் தீர்மானித்தார். ஏறக்குறைய மூன்று மாதங்களே மைக் உயிர் வாழ்வாரென அவருடைய மருத்துவரால் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது அதே நேரத்தில் அவருடைய உள்ளூர் ஆசாரியத்துவத் தலைவர்களின் சந்திப்புகளும் ஆதரவும் நடந்தபோது, சுவிசேஷக் கேள்விகள் தொடர்ந்தன. மைக்குடன் எங்கள் சந்திப்பின்போது,சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம், ஆசாரியத்துவத் திறவுகோல்கள், ஆலய நியமங்கள், மனிதனின் நித்திய தன்மையைப்பற்றி நாங்கள் விவாதித்தபோது மார்மன் புஸ்தகத்தின் ஒரு திறந்த பிரதி எப்போதும் அவருடைய படுக்கையருகிலிருந்ததை நாங்கள் கண்டோம்.

டிசம்பர் மாத நடுவில் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் அவரிடமிருக்க, மைக் வலிமைபெறுவதாகத் தோன்றியது, அவரது முன்கணிப்பு குறைந்தது மற்றொரு மூன்று மாதங்களுக்குப் போனதாகத் தோன்றியது. கிறிஸ்துமஸூக்கு, புத்தாண்டுக்கு அதற்கு பின்னரும் அவர் எங்களுடன் சேர்ந்திருக்க நாங்கள் திட்டமிட்டோம் ஆயர் ஷார்ப்பும் பிணையத் தலைவரும் மைக்கை நேர்காணல் செய்து மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப்பெற அவர் தகுதியுள்ளவராகக் கண்டதை நான் தெரிந்துகொள்ளும்படியும், நான் பங்கேற்க எப்போது எனக்கு வசதிப்படுமென கேட்டு டிசம்பர் 16ல் ஆயர் ஷார்ப்பிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது நியமனத்திற்காக டிசம்பர் 21 வெள்ளிக்கிழமை நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

அந்த நாள் வந்தபோது, என்னுடைய மனைவி கரோலும் நானும் பராமரிப்பு வசதிக்கு வந்து சேர்ந்து, அவருடைய அறைக்குப் பக்கத்திலுள்ள கூடத்தில் உடனேயே சந்தித்து மைக்குக்கு நாடி துடிப்பு இல்லையென தெரிவிக்கப்பட்டோம். நாங்கள் அறைக்குள் நுழைந்து, கோத்திரத்தலைவன், அவருடைய ஆயர், அவருடைய பிணையத் தலைவர் ஏற்கனவே காத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம், பின்னர் மைக் அவர் கண்களைத் திறந்தார் என்னை அவர் கண்டுணர்ந்து, நான் பேசுவதை அவர் கேட்க முடிகிறதென்றும், ஆசாரியத்துவத்தைப் பெற அவர் தயாராயிருப்பதாகவும் சொன்னார். ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஒரு ஆசாரியனாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், உள்ளூர் தலைவர்களால் உதவப்பட்டு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளவும் மூப்பர் அலுவலுக்கு என்னுடைய சகோதரனை நியமிக்கப்படவும் எனக்கு சிலாக்கியமிருந்தது. ஐந்து மணிகளுக்குப் பின்னர், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்தவராக, திரையைக் கடந்து, எங்களுடைய பெற்றோரை சந்திக்க, மைக் மரித்தார்

ஒரு ஆண்டுக்கு முன் ஒரு “உயர்ந்த பரிசுத்த வழியில்” நமது சகோதர, சகோதரிகளைக் கவனித்துக்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் தலைவர் ரசல் எம். நெல்சனால் ஒரு அழைப்பு கொடுக்கப்பட்டது.3 இரட்சகரைப்பற்றி பேசியதில், இது அவருடைய சபையாயிருப்பதால், அவருடைய வேலைக்காரர்களாக நாம், அவர் செய்தைப்போல ஒருவருக்கு ஊழியம் செய்வோம் என தலைவர் நெல்சன் போதித்தார்.. அவருடைய நாமத்தில், அவருடைய வல்லமையில், அதிகாரத்தில், அவருடைய இரக்கத்துடன் நாம் ஊழியம் செய்வோம்.4

தேவனுடைய தீர்க்கதரிசியின் அழைப்புக்கு மறுயுத்தரமாக, அங்கத்தினர்கள் உண்மையுள்ளவர்களாக தங்களின் ஊழிய நியமனங்களை நிறைவேற்றும்போது, அப்படியே, “திடீரென செய்யப்பட்ட” என்று நான் அழைக்கிற ஊழியம் செய்தலின், எதிர்பாராத சந்தர்ப்பங்களுக்கு பதிலாக கிறிஸ்துவைப்போன்ற அன்பை அநேகர் காட்டியதிலும் ஒருவருக்கு ஊழியம் செய்ய விசேஷமான முயற்சிகள் உலகமுழுவதிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நமது சொந்த குடும்பத்தில் இம்மாதிரியான ஊழியத்தை மிகஅருகில் நாம் கண்டிருக்கிறோம்.

“ ‘ஆர்வமில்லை’ என்று சொல்கிற பட்டியலில் யாராவது இருந்தால், விட்டு விடாதீர்கள் என மைக்கின் நண்பரும், ஊழிய சகோதரரும், முந்தைய ஊழியத் தலைவருமான ஜான் அவருடைய ஊழியக்காரர்களுக்குக் கூருவார். மக்கள் மாறுவார்கள்”. பின்னர், “மைக் பெலமாக மாறினார்” என அவர் எங்களிடம் கூறினார்.5 இடைவிடாத ஊக்கத்தையும ஆதரவையும் கொடுத்துவந்த ஜான் முதலில் ஒரு நண்பர். . . ஆனால், அவருடைய ஊழியம் செய்தல் நட்பின் சந்திப்புகளை நிறுத்தவில்லை. ஒரு ஊழியக்காரர் ஒரு நண்பரைவிட மேலானவர், அந்த நட்பு நாம் ஊழியம் செய்யும்போது பெரிதாக்கப்படுகிறதென்பதை ஜான் அறிந்திருந்தார்.

என் சகோதரரைப்போல,உயிருக்கு ஆபத்தான நோயில் போராடிக்கொண்டிருக்கும், ஊழிய சேவை தேவையாயிருக்கும் ஒருவருக்கு இது அவசியமில்லையா. அந்த தேவைகள் பலவகையான வடிவங்களில், அளவுகளில், நிபந்தனைகளில் வருகிறது. ஒரு தனிப்பெற்றோர், ஈடுபாடு குறைந்த தம்பதியர், போராடிக்கொண்டிருக்கும் ஒரு குமரப்பருவத்தினர், கவலையான ஒரு தாய், விசுவாசத்தில் ஒரு சோதனை,பணம், ஆரோக்கியம், அல்லது திருமணத்தின் பிரச்சினைகள், பட்டியல் ஏறக்குறைய முடிவில்லாதது. ஆயினும்,மைக்கைப்போல, ஒருவரும் தொலை தூரத்திற்குச் சென்றுவிடவில்லை, இரட்சகரின் அன்பின் அணுகுதலுக்கு ஒருபோதும் மிகத் தாமதமாகவில்லை.

“ஊழியம் செய்தலுக்கு அநேக நோக்கங்கள் இருக்கும்போது, ஒரு ஆழமான தனிப்பட்ட மனமாறுதலை அடையவும், இரட்சகரைப்போலாகவும் மற்றவர்களுக்குதவ விருப்பத்தால் நமது முயற்சிகள் வழிகாட்டப்படவேண்டும் “ என ஊழியம் செய்தலின் சபை வலைத்தளத்தில் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்.6 மூப்பர் நீல் எல். ஆன்டர்சன் இந்த வகையில் சொன்னார்.

நல்ல இருதயமுள்ள ஒருவர் ஒரு டயரை பொருத்த உதவ முடியும், அறை நண்பனை மருத்துவரிடம் கூட்டிச் செல்லலாம், சோகமாக இருக்கும் ஒருவருடன் மதிய உணவு சாப்பிடலாம், அல்லது ஒருநாளை பிரகாசமாக்க புன்னகைக்கலாம், ஹலோ சொல்லலாம்.

“ஆனால் முதலாம் கட்டளையைப் பின்பற்றுபவர், இயற்கையாகவே இந்த முக்கிய சேவைகளின் செயல்களை அதிகம் செய்வார்”.7

இயேசு கிறிஸ்துவைப் போல நமது ஊழியத்தை வடிவமைக்கும்போது, நேசிக்கவும் தூக்கி விடவும், சேவை செய்யவும், ஆசீர்வதிக்கவும் அவரது முயற்சிகள் உடனடித் தேவைகளைச் சந்திப்பதை விட உயர்ந்த இலக்கு கொண்டிருந்தது என நினைவுகொள்வது முக்கியமாகும். அவர்களின் அன்றாடத் தேவைகளை அவர் தெளிவாக அறிந்து, அவர் குணமாக்கி, போஷித்து, மன்னித்து, போதித்தபோது அவர்களின் அப்போதைய போராட்டங்களின்மீது இரக்கமாயிருந்தார். ஆனால், இன்று அவர்களைப் பேணுவதைவிட அதிகமாய்ச் செய்ய அவர் விரும்பினார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவரைப் பின்பற்றவும், அவரை அறிந்துகொள்ளவும், அவர்களுடைய தெய்வீகத் தகுதியை அடையவும் அவர் விரும்பினார். 8

அவர் செய்ததைப்போல ஊழியம் செய்ய நாம் நாடும்போது, நம்மை மறக்கவும், மற்றவர்களை தூக்கிவிடவும் நமக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும்.9 இந்த சந்தர்ப்பங்கள் அடிக்கடி சிரமமாகவும், அவருடைய முடிவில்லா பாவநிவர்த்தி என்ற எல்லோருடைய சேவையைவிட பெரிதாகச் செய்த, எதுவாயிருந்தாலும் வசதியாயிருந்த அந்த போதகரைப்போல மாற நமது உண்மையான விருப்பத்திற்கு சோதனையாகவுமிருக்கும். நம்மைப்பற்றி கர்த்தர் எவ்வாறு உணருகிறார், அவரைப்போன்று அநேக போராட்டங்களை, சோதனைகளை, சவால்களை எதிர்கொள்வதில் நாம் உணர்ச்சியடைந்து ஆனால் எப்போதுமே அவைகள், அலட்சியப்படுத்தப்படுகிறதை, மத்தேயு அதிகாரம் 25ல் நாம் நினைவூட்டப்படுகிறோம்.

“வாருங்கள் என பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். . . .

“அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக, ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனம் கொடுத்தோம்? ,எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

“எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மை சேர்த்துக்கொண்டோம்?. . .

“அதற்கு ராஜா பிரதியுத்தரமாக மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைக் கொடுத்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.” 10

ஊழியம் செய்யும் சகோதரர்களாகவோ, சகோதரிகளாகவோ நாம் சேவைசெய்யும்போது அல்லது தேவையிலுள்ள ஒருவரை நாம் அறியவரும்போது, பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் நாட நாம் ஊக்குவிக்கப்படுகிறோம், பின்னர் செயல். எவ்வளவு சிறப்பாக சேவை செய்யவென நாம் வியப்புறலாம், ஆனால் கர்த்தர் அறிகிறார், அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாக நமது முயற்சிகளில் நாம் வழிகாட்டப்படுவோம். “என்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்பதை முன்னதாக அறியாது ,ஆவியினால் நடத்திச் செல்லப்பட்ட”11 நெப்பியைப்போல, அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க கர்த்தரின் கரங்களில் கருவிகளாக மாற நாம் முயற்சிக்கும்போது ஆவியினால் நாமும் நடத்தபபடுவோம். ஆவியின் நடத்துதலை நாம் நாடி, கர்த்தரை நம்பும்போது, செயல்படவும் ஆசீர்வதிக்கவும் வேறுவார்த்தைகளெனில் ஊழியம் செய்ய நிலையில், சூழ்நிலைகளில் நாம் வைக்கப்படுவோம்.

ஒரு தேவையை கண்டுணரும்போதுள்ள பிறநேரங்களிருக்கலாம், ஆனால் கொடுக்க நம்மிடமிருப்பது போதுமானதாயில்லை என அனுமானித்து, பதிலளிக்க பற்றாக்குறையாக உணரலாம் . அவர் செய்ததைப்போலச் செய்யவென்பது கொடுப்பதற்குள்ள நம்முடைய திறனை கொடுப்பதாலும்,12 “இந்த பூலோக பயணத்தில் நமது சகபிரயாணிகளை” ஆசீர்வதிக்க நமது முயற்சிகளை கர்த்தர் பெரிதாக்குவார் என்று நம்புவதுவுமே.13 சிலருக்கு, நேரத்தின், திறமைகளின் வரத்தைக் கொடுப்பதாயிருக்கலாம், மற்றவர்களுக்கு இது ஒரு அன்பான வார்த்தையாக அல்லது வலுவான ஆதரவாயிருக்கலாம். நமது முயற்சிகள் பற்றாக்குறையாக நாம் உணர்ந்தாலும், “சிறியதும் எளியதையும்பற்றி” ஒரு முக்கியமான கொள்கையை தலைவர் டாலின் ஹெச்.ஓக்ஸ் பகிர்ந்தார். சிறியதும் எளியதுமான செயல்கள் ஆற்றலுள்ளதாக இருக்கும் ஏனெனில் கொடுப்பவரையும் பெறுபவரையும் ஆசீர்வதிக்கிற ஒரு துணயான,14 பரிசுத்த ஆவியின் துணையை அவை அழைக்கும் என அவர் போதித்தார்.

அவர் விரைவிலேயே மரித்துப்போவார் என்று அறிந்திருந்தும் என்னுடைய சகோதரன் மைக் சொன்னார், எவ்வாறு கணைய புற்றுநோய் மிகமுக்கியமானதின்மேல் உங்கள் கவனத்தைச் செலுத்த வைத்ததென்பது ஆச்சரியமானது.15 மைக்குக்கு அதிக தாமதமில்லாமல், ஒரு தேவையைப் பார்த்து, நியாயம் தீர்க்காமல், இரட்சகரைப்போல ஊழியம் செய்த அற்புதமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நன்றி. சிலருக்கு மாற்றம் விரைவில் வரும், மற்றவர்களுக்கு ஒருவேளை திரைக்கு அப்பால் வரும். எப்படியாயினும், இது எப்போதும் தாமதமாக இல்லை, அதன் காலம் மற்றும் நோக்கத்தின் வரம்பற்ற இயேசு கிறிஸ்துவின் முடிவில்லா பாவநிவர்த்தியை அடைவதற்கு அப்பால் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் யாருமே பாதையிலிருந்து அதிக தொலைவில் அலைந்துகொண்டிருக்கவில்லை என்பதையும் நாம் நினைவுகூரவேண்டும்.

எவ்வளவு தூரம் நாம் பாதையிலிருந்து வெளியே இருக்கிறோம் என்பது பொருட்டல்ல. . . மாறுவதற்கு நாம் தீர்மானித்த உடனேயே திரும்புவதற்கு தேவன் நமக்குதவுகிறார் என கடந்த அக்டோபர் பொது மாநாட்டில் மூப்பர் டேல் ஜி.ரெனுலன்ட் போதித்தார்.16 மாறுவதற்கான அந்த தீர்மானம், எப்படியாயினும், சுவிசேஷ செய்தியை நீங்கள் சந்தோஷமாக கேட்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் போன்ற ஒரு அழைப்பின் விளைவாக அடிக்கடி இருக்கிறது. இரட்சகருக்கு இது எப்போதுமே அதிக தாமதமாக இல்லை என்பதைப்போல நாம், அழைப்பதற்கும் இது அதிக விரைவாக இல்லை.

நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பலியைப்பற்றியும், இந்த வேதனை, சகலத்திற்கும் மேலான தேவனாகிய என்னையே வேதனையினிமித்தம் நடுங்க வைத்தது என அவரே அறிவித்த சகலத்திற்கும் மேலான, ஒரு கிரயமான அத்தகைய ஒரு பயங்கரமான கிரயத்தில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் என்ன செய்தார் என நினைக்கவும் இந்த ஈஸ்டர் நேரம் மீண்டும் ஒரு மகிமையான சந்தர்ப்பத்தை நமக்கு வழங்குகிறது. ஆயினும் மனுபுத்திரருக்காக எனது ஆயத்தங்களில் நான் பங்கெடுத்து முடித்தேன் என அவர் உரைத்தார்17

அவர் முடித்ததால் எப்போதுமே அங்கு நம்பிக்கையிருக்கிறதென நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்