நமது ஆவிக்குரிய தசைகளின் உடற்பயிற்சி
தசைகளைப்பற்றி வெறுமனே படித்தலும் கற்றுக்கொள்ளுதலும் தசையை வளர்க்க போதாது, செயலைச் சேர்க்காமல் விசுவாசத்தைப்பற்றி படித்தலும் கற்றுக்கொள்ளுதலும் விசுவாசத்தை வளர்க்க பற்றாக்குறையாக இருக்கிறது.
நமது பரலோக பிதாவிடமிருந்து ஒரு அற்புதமான வரமான ஒரு சரீர உடலிருப்பதின் ஆசீர்வாதத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நமது உடல்களுக்கு 600 க்கும் மேலான தசைகளிருக்கின்றன.1 நமது அன்றாட நடவடிக்கைகளை நடத்த நல்ல நிலையிலிருக்கும்படியாக அநேக தசைகளுக்கு உடற்பயிற்சி தேவையாயிருக்கிறது. நமது தசைகளைப்பற்றி படித்தலிலும் கற்றுக்கொள்வதிலும் அதிக மனநல முயற்சியை நாம் செலவழிக்கமுடியும் ஆனால், இது அவைகளை வலுவாக்குமென நாம் நினைத்தால் நாம் மிகவும் ஏமாற்றமடைவோம். அவைகளைப் பயன்படுத்தும்போது மட்டுமே நமது தசைகள் வளரும்.
ஆவிக்குரிய வரங்களும் இதே வழியில்தான் நடந்துகொள்ளும் என கண்டுணர்ந்தேன். வளருவதற்கு அவைகளுக்கும்கூட உடற்பயிற்சி தேவை. விசுவாசத்தின் ஆவிக்குரிய வரம், உதாரணமாக, அது ஒரு உணர்வோ அல்லது ஒரு மனநிலையோ அல்ல, உடற்பயிற்சி என்ற வினைச்சொல்லுக்கு இணைக்கப்படிருக்கிறதில் அது அடிக்கடி வேதங்களில் காணப்படுகிற அது ஒரு செய்கையின் கொள்கை. தசைகளைப்பற்றி வெறுமனே படித்தலும் கற்றுக்கொள்ளுதலும் தசையை வளர்க்க போதாது, செயலைச் சேர்க்காமல் விசுவாசத்தைப்பற்றி படித்தலும் கற்றுக்கொள்ளுதலும் விசுவாசத்தை வளர்க்க பற்றாக்குறையாக இருக்கிறது.
எனக்கு 16 வயதாயிருந்தபோது, அந்த நேரத்தில் 22 வயதாயிருந்த என்னுடைய மூத்த சகோதரன் இவான் ஒரு நாள் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினருடன் சில செய்திகளை பகிர்ந்துகொண்டான். பிற்காலப் பரிசுத்தவானகளின் இயேசு கிறிஸ்து சபையில் ஞானஸ்நானம் பெற அவன் தீர்மானித்திருந்தான். எங்களுடைய பெற்றோர் அவனை சிறிது சந்தேகத்துடன் பார்த்தனர், என்ன நடந்துகொண்டிருக்கிறதென்பதை நான் முற்றிலுமாக புரிந்துகொள்ளாதிருந்தது எனக்கு நினைவிருக்கிறது ஒரு ஆண்டுக்கு அல்லது அதற்குப் பின்னர் அவன் எங்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சரியத்தைக் கொடுத்தான். சபையின் ஒரு ஊழியக்காரராக சேவை செய்ய அவன் தீர்மானித்திருந்தான். அதாவது, இரண்டு ஆண்டுகள் நாங்கள் அவனைப் பார்க்கமுடியாது. இந்த செய்திகளால் என் பெற்றோர் அதிர்ச்சியடையவில்லை, ஆயினும் அவனில் ஒரு தெளிவான தீர்மானத்தையும் அவன் செய்த தீர்மானத்தையும் நான் கண்டு, அது அவனிடம் எனக்கிருந்த பாராட்டை அதிகரித்தது.
சில மாதங்களுக்குப் பின்னர், இவான் அவனுடைய ஊழியத்தை செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளித் தோழர்களுடன் ஒரு விடுமுறையைத் திட்டமிட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எங்களுடைய உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளின் முடிவில் கடற்கரையில் சிலநாட்களைக் கொண்டாட நாங்கள் விரும்பினோம்.
என்னுடைய கோடை விடுமுறைத் திட்டத்தை என்னுடைய ஊழியக்கார சகோதரனுக்கு குறிப்பிட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் போகிற இடத்திற்கு வழியில்தான் அவன் ஊழியம் செய்துகொண்டிருக்கிற நகரம் இருக்கிறதென அவன் பதிலெழுதினான். அங்கு நிறுத்தி அவனை சந்திக்க இது ஒரு நல்ல யோசனையாயிருக்குமென நான் தீர்மானித்தேன். ஊழியக்காரர்கள் தங்களுடைய குடும்பத்தினரால் சந்திக்கப்படக்கூடாது என்பதை பின்னர்தான் நான் அறியவந்தேன்.
நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். பேரூந்தில் அமர்ந்துகொண்டு, இந்த அழகான கோடையில் இவானும் நானும் ஒன்றாயிருந்து செய்யக்கூடிய எல்லா வேடிக்கைகளையும் சிந்தித்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. காலை உணவை நாங்கள் சாப்பிட்டிருப்போம், அரட்டை அடித்திருப்போம், மணலில் விளையாடியிருப்போம், சூரியகுளியல் செய்திருப்போம், என்ன ஒரு நல்ல் நேரம் எங்களுக்கு இருக்கப்போகிறது.
பேரூந்து முனையத்தில் வந்து சேர்ந்தபோது, வெள்ளை சட்டையும் டையும் அணிந்து மற்றொரு இளம் வாலிபனுக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இவானை நான் பார்த்தேன். நான் பேருந்திலிருந்து இறங்கி, நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவி, அவன் தன் கூட்டாளியை எனக்கு அறிமுகப்படுத்தினான். மறறொரு நிமிடத்தை வீணாக்காமல், அந்த நாளுக்கான திட்டங்களைப்பற்றி நான் என் சகோதரனுக்குச் சொன்னேன், ஆனால், இவானுக்குள்ள கால அட்டவணையைப்பற்றி எனக்கு சிறிதும் தெரியாது. அவன் என்னைப் பார்த்து, புன்னகைத்து, சொன்னான், “நிச்சயமாக! எப்படியாயினும் முதலில் சில தவறுகளைச் செய்யவேண்டியதிருந்தது. நீ எங்களுடன் வருவாயா?” பின்னர் கடற்கரையில் அனுபவிக்க போதுமான நேரம் கிடைக்குமென நினைத்துக்கொண்டு நான் ஒப்புக்கொண்டேன்.
அந்நாளில், என்னுடைய சகோதரனுடனும் அவனுடைய கூட்டாளியுடனும் 10 மணி நேரங்களுக்கு மேல் அந்த நகரததிலுள்ள தெருக்கள் வழியே நான் நடந்தேன். நாள் முழுவதும் ஜனங்களிடத்தில் நான் புன்னகைத்தேன். என் வாழ்நாளில் நான் ஒருபோதும் பார்த்திராத ஜனங்களை நான் வணங்கினேன். நாங்கள் ஒவ்வொருவரிடமும் பேசினோம், அந்நியர்கள் வீட்டுக்கதவுகளைத் தட்டினோம், என்னுடைய சகோதரனும் அவனுடைய கூட்டாளியும் போதித்துக்கொண்டிருந்த ஜனங்களை சந்தித்தோம்.
அத்தகைய சந்திப்பின்போது, என்னுடைய சகோதரனும் அவனுடைய கூட்டாளியும் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர். திடீரென இவான் நிறுத்தி என்னைப் பார்த்தான். போதிக்கப்பட்டதைப்பற்றி என்னுடய கருத்தை பகிர்ந்துகொள்ள அவன் அமைதியாக என்னிடம் கேட்டது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அறை அமைதியாகி எல்லா கண்களும் என்மேல் இருந்தன. சில கடினங்களுடன், இறுதியாக வார்த்தைகளை நான் கண்டுபிடித்து இரட்சகரைப்பற்றிய என்னுடைய உணர்வுகளை பகிர்ந்துகொண்டேன். நான் பகிர்ந்து கொண்டது சரியா தவறாவென எனக்குத் தெரியாது. என்னுடைய சகோதரன் என்னை ஒருபோதும் திருத்தவில்லை, மாறாக, என்னுடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்தான்.
நாங்கள் ஒன்றாயிருந்த அந்த மணிநேரங்களில் என்னுடைய சகோதரனும் அவனுடைய கூட்டாளியும் பிரத்தியேகமாக எனக்கென்று ஒரு பாடத்தைப் போதிக்க ஒரு நிமிடத்தைக்கூட செலவுசெய்யவில்லை, இருந்தும் அவனுடன் என்னுடைய முந்திய உரையாடல்கள் எல்லாவற்றையும்விட நான் அதிக அறிவைப்பெற்றுக்கொண்டேன். தங்களுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியை ஜனங்கள் பெறும்போது முகங்கள் எப்படி மாறின என்பதை நான் கண்டேன். அவர்களில் சிலர்,செய்தியில் எவ்வாறு நம்பிக்கையைக் கண்டார்களென்று நான் பார்த்தேன்,மற்றவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வதென்றும் என்னைப்பற்றியும் என்னுடைய விருப்பங்களையும் எப்படி மறப்பதென்றும் நான் அறிந்துகொண்டேன். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுக்கவேண்டும்”3 என இரட்சகர் போதித்ததை நான் செய்துகொண்டிருந்தேன்.
திரும்பி பார்க்கையில், செயலில் கொண்டுவர என்னுடைய சகோதரன் எனக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததால் அந்நாளில் என் விசுவாசம் அதிகரித்தது என்பதை நான் கண்டறிந்தேன். போதிக்க ஜனங்களைத் தேடி, சாட்சியை பகிர்ந்து, மற்றவர்களுக்கு சேவை செய்தலை வேதங்களிலிருந்து நாம் படிக்கும்போது அதை நான் பயிற்சி செய்தேன். அந்நாளில் சூரியக்குளியலுக்கு நாங்கள் ஒருபோதும் சுற்றிவரவில்லை, ஆனால் என்னுடைய இருதயம் ஒளியில் குளித்தது. கடற்கரையில் ஒரு சிறு மணலைக்கூட நான் பார்க்கவில்லை, ஆனால் என்னுடைய விசுவாசம் ஒரு சிறிய கடுகு விதையைப்போல வளர்ந்தது.4 ஒரு பயணியாக அந்த வெப்ப நாளை நான் கழிக்கவில்லை, ஆனால் அற்புதமான அனுபவங்களை நான் பெற்றேன், சபையின் ஒரு அங்கத்தினராகக்கூட இல்லாமல், அதை உணர்ந்துகொள்ளாமல் நான் ஒரு ஊழியக்காரனாக இருந்தேன்.
ஆவிக்குரிய தசைகளை பெலப்படுத்த சந்தர்ப்பங்கள்
ஆவிக்குரிய வரங்களை எவ்வாறு வளர்ப்பதென்று நமது பரலோக பிதா நமக்குதவுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வருகிற மறுஸ்தாபித சுவிசேஷத்திற்கு நன்றி. அநேகமாக, ஆவிக்குரிய, சரீரத்திற்குரிய முயற்சி இல்லாமல் நமக்கு அவைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக அந்த வரங்களை வளர்க்க அவர் நமக்கு சந்தர்ப்பங்களைக் கொடுப்பார். அவருடைய ஆவியோடு நாம் இசைந்திருந்தால், அந்த சந்தர்ப்பங்களை அடையாளம்காண நாம் கற்றுக்கொள்வோம், பின்னர், அவைகளின்மேல் நாம் செயல்படுவோம்.
அதிக பொறுமையை நாம் நாடினால், ஒரு பதிலுக்கு காத்திருக்கும்போது அதைப் பயிற்சி செய்ய தேவையைப்பற்றி நாமே காணுவோம். நம்முடைய அண்டைவீட்டாரின்மீது அதிக அன்பு நமக்கிருக்க நாம் விரும்பினால், சபையில் ஒரு புதுமுகத்தின் பக்கத்தில் அமருவதால் வளர்க்கலாம். விசுவாசத்துடன் இது ஒத்ததாக இருக்கிறது. நமது மனங்களில் சந்தேகங்கள் வரும்போது முன்னேறிச் செல்வதற்கு கர்த்தருடைய வாக்களிபபுகளில் நம்பிக்கை வைத்தல் தேவையாயிருக்கும். இந்த வழியில் ஆவிக்குரிய தசைகளை நாம் உடற்பயிற்சி செய்கிறோம், நமது வாழ்க்கையில் பெலத்தின் ஆதாரமாக அவைகளை வளர்க்கிறோம்.
ஆரம்பத்தில் இது ஒருவேளை எளிதாயில்லாமல் இருக்கலாம், இது ஒரு பெரிய சவாலாகக்கூட மாறலாம். தீர்க்கதரிசி மரோனியின் மூலமாக கர்த்தருடைய வார்த்தைகள் இன்று நமக்குப் பொருந்துகிறது. “மனுஷர் என்னிடத்தில் வந்தால் நான் அவர்களுக்கு அவர்களுடைய பெலவீனத்தைக் காண்பிப்பேன். மனுஷர் தாழ்மையாய் இருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு பெலவீனத்தைத் தருகிறேன். எனக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கிற அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது, அவர்கள் எனக்கு முன்பாக தாழ்மையாயிருந்து, என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால் நான் அவர்களுக்கு பெலவீனமுள்ளவைகளை பெலமுள்ளவைகளாக்குவேன்”5
சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், அதன்படி வாழவும், என்னுடைய பெலவீனங்களை அடையாளம்காணவும் மறைமுகமாக என்னை அழைத்த என்னுடைய சகோதரன் இவானுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன் “என்னைப் பின்பற்றி வா”6 என்ற போதகரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவும், இரட்சகர் நடந்ததைப்போல நடக்கவும், இரட்சகர் நாடியதைப்போல நாடவும், இரட்சகர் நம்மை நேசிக்கிறதைப்போல நேசிக்கவும் அவன் எனக்குதவினான். சில மாதங்களுக்குப் பின்னர், என்னுடைய ஊழியத்தின் அனுபவத்திற்குப் பின்னர், ஞானஸ்நானம் பெறவும், என்னுடைய ஊழியத்தைச் செய்யவும் நான் தீர்மானித்தேன்.
தலைவர் ரசல் எம்.நெல்சனின் அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டு, அதிக ஆவிக்குரிய நடவடிக்கைகள் தேவையாயிருக்கிற, அவைகளை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கப்படவேண்டிய அந்த தசைகளை அடையாளம் காண்பதால் தீவிரமாய் இரட்சகரண்டை வருவோம்.7 ஒரு ஆவியைவிட இது ஒரு நீண்ட தூர ஓட்டம், ஒரு மாரத்தான், ஆகவே அந்த முக்கியமான ஆவிக்குரிய தசைகளை பெலப்படுத்துகிற நிரந்தர ஆவிக்குரிய நடவடிக்கைகளான அந்த சிறியதை மறந்துவிடவேண்டாம்., நமது விசுவாசத்தை அதிகரிக்க நாம் விரும்பினால், பின்னர், விசுவாசத்திற்குத் தேவையான காரியங்களை நாம் செய்வோமாக.
நாம், ஒரு நேசமுள்ள பரலோக பிதாவின் பிள்ளைகளென்று நான் சாட்சி பகருகிறேன். அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார். நமக்கு வழியைக் காண்பிக்க அவர் இந்த உலகத்திற்கு வந்தார், பின்னர் நமக்கு நம்பிக்கை கொடுக்க தன்னார்வமாக அவருடைய உயிரைக் கொடுத்தார். அவருடைய பரிபூரணமான எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், அவரிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் நம்முடைய விசுவாசத்தை பயிற்சி செய்யவும், நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற ஆவிக்குரிய வரங்கள் அனைத்தையும் விரிவாக்கவும் இரட்சகர் நம்மை அழைக்கிறார். அவரே வழி. இது என்னுடைய சாட்சி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.