இயேசு கிறிஸ்துவின் உண்மையான, பரிசுத்தமான மற்றும் எளிமையான சுவிசேஷம்
தேவனை நேசிப்பதும், அயலாரை நேசிப்பதும் ஊழியம் செய்தல், வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்பட்ட கற்றல், ஓய்வுநாளில் ஆவிக்குரிய ஆராதனை, மற்றும் இரட்சிப்பின் பணி, கோட்பாட்டு அடிப்படையாகும்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, 71 வருடங்களுக்கு முன், 1948ல் இங்கிலாந்தில் ஊழியக்காரனாகவும், 44 வருடங்களுக்கு முன் நான் கனடா டொரன்டோ ஊழியத்தலைவராக இருந்தபோது பார்பராவும் நானும் எங்கள் குடும்பத்தை கனடாவுக்கு, , கூட்டிச் சென்றதையும், நம்புவது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஏப்ரல் 1976ல் அங்கு சேவை செய்துகொண்டிருக்கும்போது, நான் எழுபதின்மரின் முதலாம் குழுமத்துக்கு அழைக்கப்பட்டேன், எதிர்பாராத விதமாக 1985ல் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்துக்கு அழைக்கப்பட்டேன். எதிர்காலத்தில் விடுவிக்கப்படக்கூடிய முந்தய அழைப்புக்களைப் போலல்லாமல், பன்னிருவரில் என் அழைப்பிலிருந்து விடுவிப்பு இப்போது சிறந்த தேர்வு அல்ல. எனினும் நான் செய்ய வேண்டுமென கர்த்தர் அழைத்தவையெல்லாம் நான் முடித்தபிறகே அந்த நாள் வரும்.
பொது அதிகாரியாக என் சேவையின் 43வருடங்களைப்பற்றியும், உலகெங்கிலுமுள்ள பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு ஊழியம் செய்ய நான் பெற்ற குறிப்பிடத்தக்க சிலாக்கியத்தைப்பற்றியும் சிந்திக்கும்போது, அவர் தன் பிள்ளைகள் அனைவரும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் காணவே விரும்புகிறார் என முற்றிலுமாக உணர்கிறேன்.
தீர்க்கதரிசி லேகி போதித்தான், “மனுஷன் பிழைத்திருக்கவே ஆதாம் வீழ்ந்து போனான்.“1 வறுமை, யுத்தம், இயற்கை பேரழிவுகள், வேலையில் எதிர்பாராத பின்னடைவுகள், உடல்நலம், மற்றும் குடும்ப உறவுகள் உள்ளிட்டவற்றால் இந்த வாழ்க்கையில் ஏன் சமாதானமும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் விலகுகின்றன என்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.
இந்த பூமியில் நமது வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துகிற அந்த வெளிப்புற சக்திகளை நாம் கட்டுப்படுத்த முடியாதென்றாலும், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசமிக்க சீஷர்களாக முயற்சிக்கும்போது, நம்மை சுற்றியுள்ள உலகப்பிரகார பிரச்சினைகள் இருப்பினும், நாம் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் காண முடியும்.
என் பிள்ளைகளில் ஒருவன் சொன்னான், “அப்பா நான் கரையேற முடியுமா என ஆச்சரியப்படுகிறேன்.“ நான் பதிலளித்தேன், “பரலோக பிதா நம்மைக் கேட்பதெல்லாம், ஒவ்வொரு நாளும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே.“ சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள், நீங்கள் அறிவதற்கு முன்பே, உங்கள் பரலோக பிதா உங்களை அறிந்திருக்கிறார், அவர் உங்களை நேசிக்கிறார் என உணர்வீர்கள். நீங்கள் அதை அறியும்போது--உண்மையிலேயே அதை அறியும்போது, உங்கள் வாழ்க்கைக்கு உண்மையான நோக்கமும் அர்த்தமும் இருக்கும், நீங்கள் சந்தோஷத்தாலும சமாதானத்தாலும் நிரப்பப்படுவீர்கள்.
உலகத்தின் ஒளியாக இரட்சகர் சொன்னார், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இரான்.“ 2
“இதோ பிதாவால் கொடுக்கப்பட்டிருக்கிற நாமம் இயேசு கிறிஸ்து, [நாம்] இரட்சிக்கப்பட வேறு எந்த நாமமும் கொடுக்கப்படவில்லை:
“ஆகவே எல்லா ஆண்களும் பெண்களும் பிதாவால் கொடுக்கப்பட்ட நாமத்தை தரித்துக் கொள்ள வேண்டும்.“3
சாத்தான் ஜனங்களை இருளில் தள்ள விரும்புகிறான் என வேதங்கள் நமக்கு போதிக்கின்றன. அவனது ஒவ்வொரு முயற்சியும், இயேசு கிறிஸ்துவின் ஒளியையும் சத்தியத்தையும் அவருடைய சுவிசேஷத்தையும் மூடுவதுதான். லேகி தன் பிள்ளைகளுக்கு போதித்தபடி, பிசாசு, “மனுஷர் யாவரும் அவனைப்போலவே துர்பாக்கியவான்களாக இருக்க வகை தேடுகிறான்.“4 பரலோக பிதாவின் “பணியும் மகிமையும்,“ [ஆண்கள் மற்றும் பெண்களின்] அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டு வருவதுதானென்றால், பிசாசின் “பணி“ தேவ பிள்ளைகளுக்கு துர்பாக்கியத்தையும் முடிவற்ற துக்கத்தையும் கொண்டு வருவதே.5 பாவமும் மீறுதலும் நமது வாழ்க்கையில் கிறஸ்துவின் ஒளியை மங்கச் செய்கிறது. அதனால்தான் சமாதானமும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டுவருகிற கிறிஸ்துவின் ஒளியை பெறுவதுதான் நமது தேடுதலாக இருக்கிறது.
கடந்த 18 மாதங்களில், கர்த்தர் தன் தீர்க்கதரிசியையும், அப்போஸ்தலர்களையும், பல அற்புதமான அனுசரிப்புகளை அமுல்படுத்த உணர்த்தியிருக்கிறார். எனினும் இந்த அனுசரிப்புகளின் ஆவிக்குரிய நோக்கங்கள், மாற்றங்களைப்பற்றிய உற்சாகத்திலே இழக்கப்பட்டுவிடுமோ என நான் வருந்துகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் ஜோசப் எப். ஸ்மித் சொன்னார், “இயேசு கிறிஸ்துவின் உண்மையான, பரிசுத்தமான, எளிய சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. இதை பூமியில் பாதுகாப்பது நமது பொறுப்பு.“6 உண்மையான, பரிசுத்தமான, எளிமையான சுவிசேஷம் “கிறிஸ்துவின் இரட்சிக்கும் கோட்பாடுகள்,“ எனவும் சொன்னார்.7
விசுவாசப் பிரமாணங்களில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதால் மனுக்குலம் இரட்சிக்கப்படலாம்.“8
சுவிசேஷத்தின் முதல் கொள்கைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியானவரின் வரம் மற்றும் முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல் ஆகும். அவரது சகோதரர் ஹைரம் போதித்தார், “சுவிசேஷத்தின் முதல் கொள்கைகளை மீண்டும் [மீண்டும்] அவர்களுக்குப் பிரசங்கியுங்கள். நாளுக்கு நாள் அவற்றைக் குறித்த புதிய கருத்துக்களும், கூடுதல் ஒளியும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள். தெளிவாக புரிந்துகொள்ள ... அவற்றை நீங்கள் விரிவாக்கலாம். அப்போது [நீங்கள்] கற்பிப்பவர்களால் அதிக தெளிவாக புரிந்துகொள்ளச்செய்ய முடியும்.“9
சபையின் ஆவிக்குரிய நோக்கங்களை பார்க்க நமக்கு சிறந்த வழி உண்மையான, பரிசுத்தமான, எளிமையான கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, இரட்சகரின் இரண்டு பெரிய கட்டளைகளையும் பிரயோகிப்பதுதான்: “உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் நேசிப்பாயாக. ... உன்னைப்போல பிறனையும் நேசிப்பாயாக.“10
அந்த இரண்டு மாபெரும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிதல், அதிக சமாதானமும் சந்தோஷமும் அனுபவிக்க வழிகாட்டுகிறது. நாம் கர்த்தரை நேசித்து சேவை செய்யும்போது, நமது அயலாருக்கு சேவை செய்யும்போது, அதைவிட எந்த சிறந்த வழியிலும் வராத சந்தோஷத்தை இயற்கையாகவே உணர்வோம்.
ஊழியம் செய்தல்; வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்பட்ட கற்றல்; ஓய்வுநாளில் ஆவிக்குரிய ஆராதனை; ஒத்தாசைச் சங்கங்களிலும் மூப்பர்கள் குழுமங்களிலும் ஆதரிக்கப்பட்டு, திரையின் இருமருங்கிலும் இரட்சிப்பின் பணி ஆகியவற்றின் கோட்பாட்டு அஸ்திவாரம், தேவனை நேசிப்பதும், நமது அயலாரை நேசிப்பதும்தான். தேவனை நேசிக்கவும், நமது அயலாரை நேசிக்கவும், தெய்வீகக் கட்டளைகளின் மேல் அமைந்தவை இந்த காரியங்கள் அனைத்துமே. அதைவிடவும் அதிக அடிப்படையான, அதிக அஸ்திவாரமான, அதிக எளிமையான எதுவும் இருக்க முடியுமா?
உண்மையான, பரிசுத்தமான, எளிமையான சுவிசேஷத் திட்டத்தின்படி வாழ்வது, விதவைகளையும், தாரமிழந்தவர்களையும், அனாதைகளையும், தனிமையிலிருப்பவர்களையும், பிணியாளிகளையும், ஏழைகளையும் சந்திக்க நமக்கு அதிக நேரத்தை அனுமதிக்கிறது. கர்த்தருக்கும் நமது அயலாருக்கும் சேவை செய்யும்போது, வாழ்க்கையில் நாம், சமாதானத்தையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் காண்போம்.
ஓய்வுநாள் அனுசரிப்புகள் வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்பட்ட கற்றலையும் சுவிசேஷத்தை படிப்பதை வலியுறுத்துவதும், நமது வீடுகளின் சுவர்களுக்குள் நமது தேவனுக்கு அர்ப்பணிப்புக்கும், ஆவியை புதுப்பித்தலுக்கும் சந்தர்ப்பங்களாகும். எது மிக எளிமையாகவும், அடிமட்டத்திலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடும் இருக்கலாம்? சகோதர சகோதரிகளே, நமது வாழ்க்கையில், சந்தோஷமும் மகிழ்ச்சியும் காண, நமது குடும்பங்களில் சுவிசேஷத்தை கற்றலும் போதித்தலும் முக்கியமான வழி என உங்களால் பார்க்க முடிகிறதா?
ஓய்வுநாளைப்பற்றி பேசும்போது இரட்சகர் சொன்னார், “உங்கள் பிரயாசங்களிலிருந்து ஓய்ந்திருக்கவும், உன்னதமானவருக்கு உங்கள் துதிகளை செலுத்தவும் உங்களுக்கு இந்த நாள் மெய்யாகவே நியமிக்கப்பட்டிருக்கிறது.“11 அவர் சொன்னார், “உங்களது சந்தோஷம் முழுமையாயிருக்க, ... களிகூர்தலோடும், ஜெபத்தோடும், நன்றி தெரிவித்தும், உற்சாகமுள்ள இருதயங்களோடும், முகரூபங்களோடும் ... மகிழ்ச்சியான இருதயத்தோடும் உற்சாகமான முரூபத்தோடும் நீங்கள் இவற்றைச் செய்யுங்கள்.“12
இந்த வெளிப்படுத்தலிலுள்ள சில முக்கிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: சந்தோஷம், களிகூர்தல், நன்றிகூர்தல், உற்சாகமுள்ள இருதயங்கள், மகிழ்ச்சியான இருதயம், மற்றும் உற்சாகமான முகரூபம். ஓய்வுநாள் ஆசரிப்பு, நமது முகங்களில் சிரிப்பைக் கொண்டுவரவேண்டும் என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
நாம் உயர்வான பரிசுத்தமான விதமாக ஊழியம் செய்யும்போது, நமது சபைக்கு வருவோரை, விசேஷமாக புதிய அங்கத்தினர்களையும் வருகிற ஒவ்வொருவரையும் வாழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பதை தயவுசெய்து கருத்தில் கொள்ளவும். திறந்த இருதயத்தோடும் மனதோடும், பாடல்கள் பாடி, திருவிருந்து ஜெபத்தின் வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, நாம் மகிழ வேண்டும்.
நமது உபவாச மற்றும் சாட்சி கூட்டங்களில் விசுவாச சாட்சிகள், ஆயத்துவத்திலுள்ள ஒரு அங்கத்தினரால் நடத்தப்படுகிறது, அவர் மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றியும், கிறிஸ்துவின் உண்மையான, பரிசுத்தமான, எளிமையான சுவிசேஷத்தை மையமாக வைத்து சுருக்கமான சாட்சி பகர்கிறார். பிற அனைவரும் அந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். கதைகள் சொல்லவும், பயண தீரச்செயல்கள் பற்றி பேசவும் பிற பொருத்தமான இடங்கள் இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நமது சாட்சிகளை எளிமையாகவும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மையமாகவும் வைத்து, நமது சாட்சிகளை ஒருவருக்கொருவர் பகிரும்போது, அவர் நமக்கு ஆவிக்குரிய புதுப்பித்தலை கொடுப்பார்.
தேவனை நேசித்தல் மற்றும் பிறரை நேசித்தல் என்ற உருப்பெருக்கி மூலம் வல்லமையான ஊழியம் நன்கு பார்க்கப்படுகிறது. எளிதாக சொன்னால், நாம் நமது பரலோக பிதாவையும், அவரது பிள்ளைகளையும் நேசிப்பதால் நாம் ஊழியம் செய்கிறோம். நாம் நமது ஊழியம் செய்தலை எளிமையாக்கினால் நமது ஊழிய முயற்சிகள் அதிக வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். அதிக சந்தோஷம் வாழ்க்கையின் எளிய காரியங்கள் மூலம் வருகிறது, ஆகவே தேவ பிள்ளைகளின் இருதயங்களில் விசுவாசத்தையும் பெலமான சாட்சிகளையும் கட்ட, நாம் பெற்றுள்ள எந்த அனுசரிப்பிலும், அதிக தேவைகள் சேர்க்கப்பட வேண்டும் என சிந்திக்காமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கூடுதல் கூட்டங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும், அல்லது தேவைகளுடனும் நாம் சிக்கலாக்காதிருப்போமாக. எளிமையாக்குங்கள் நான் பேசிக்கொண்டிருந்த அந்த எளிமையில்தான் நீங்கள் சமாதானமும், சந்தோஷமும், மகிழ்ச்சியும், காண்பீர்கள்.
பல ஆண்டுகளாக சபையின் தலைமை நோக்கங்கள், கையேட்டில் தெரிவித்துள்ளபடி, தெளிவான, எளிமையான முடிவுகள். அதிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்:
“தேவையான அனைத்து ஆசாரியத்துவ நியமங்களையும் பெறவும், தொடர்புடைய உடன்படிக்கைகளை கைக்கொள்ளவும், மேன்மைப்படுதலுக்கும் நித்திய ஜீவனுக்கும் தகுதி பெறவும் தலைவர்கள் ஒவ்வொரு அங்த்தினரையும் ஊக்குவிக்கின்றனர். ...
“வயது வந்தோரே:, ஆலயத்தின் நியமங்களைப் பெற தகுதியாயிருக்க ஒவ்வொரு வயது வந்தோரையும் ஊக்குவியுங்கள். தங்கள் முன்னோரை கண்டுபிடிக்கவும், அவர்களுக்காக பதிலி ஆலய நியமங்களை நிறைவேற்றவும் எல்லா வயது வந்தோருக்கும் கற்பியுங்கள்.
“இளைஞரே: மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் பெறவும், ஆலய நியமங்களைப் பெறவும், முழு நேர ஊழியம் செய்ய தகுதியாக இருக்கவும் ஒவ்வொரு இளைஞனும் ஆயத்தமாக உதவுங்கள். பரிசுத்த உடன்படிக்கைகள் செய்து, காத்துக் கொள்ள தகுதியாயிருக்கவும், ஆலய நியமங்களைப் பெறவும் ஒவ்வொரு இளம் பெண்ணும் ஆயத்தப்பட உதவுங்கள். அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் இளைஞர்களை பெலப்படுத்துங்கள்.
“அனைத்து அங்கத்தினர்களே, மனந்திரும்புதல், தக்க வைத்தல் மற்றும் ஆர்வமூட்டல் மூலம் தனிநபர்களை மீட்கவும், குடும்பங்களையும் சபை அங்கங்களையும் பெலப்படுத்தவும், ஆசாரியத்துவ நிகழ்ச்சிகளை அதிகரிக்கவும், இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கவும், ஆசாரியத்துவ மற்றும் துணைக்குழு தலைவர்கள், தொகுதி ஆலோசனைக்குழுக்கள், தொகுதி மற்றும் முழுநேர ஊழியக்காரர்கள், அங்கத்தினர்கள் சமன் செய்யப்பட்ட முயற்சியில் ஒன்றாக உழைக்க உதவுங்கள். தங்களுக்கும் குடும்பங்களுக்கும் கொடுக்கவும், கர்த்தரின் வழியில் தரித்திரருக்கும் தேவைப்படுவோருக்கும் உதவ அங்கத்தினர்களுக்கு கற்பியுங்கள்.13
சபையில் என் சேவை அநேக குறிப்பிடத்தக்க விசேஷ ஆவிக்குரிய அனுபவங்களால் ஆசீர்வதித்திருக்கிறது. தன் நோக்கங்களை அடைய கர்த்தர் தன் சபையை வழிநடத்துகிறார் என்பதற்கு நானே சாட்சி. என் தகுதிக்கு மிக அதிகமாக நான் தெய்வீக வழிநடத்துதல் பெற்றிருக்கிறேன். எனக்கு சுவிசேஷ வாழ்க்கையின் சந்தோஷம் உண்மையான, பரிசுத்தமான மற்றும் எளிய கோட்பாடு மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மையமாக கொண்டிருந்திருக்கிறது.
தலைவர்கள் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் முதல் ரசல் எம். நெல்சன் வரை ஆறு தீர்க்கதரிசிகள் மற்றும் சபைத் தலைவர்களின் திறவுகோல்கள் மற்றும் வழிநடத்துதலின் கீழ் நான் சேவை செய்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசி என நான் சாட்சியளிக்கிறேன். சபை, சுவிசேஷம் மற்றும் கிறிஸ்துவின் கொள்கையின் அத்தியாவசியமான கொள்கைகளை அவர்கள் நமக்கு கற்பித்திருக்கின்றனர். தலைவர் நெல்சன் கர்த்தரின் பணியை மூச்சுவாங்கும் வேகத்தில் முன்னோக்கி நகர்த்துகிறார். நான் மூச்சு வாங்குகிற என சொல்வது ஏனென்றால் அவர்தான் சகோதரர்களுக்குள் என்னைவிட வயதானவர், அவரோடு நடக்க எனக்கு கஷ்டமான நேரம் இருந்திருக்கிறது. ஆசாரியத்துவ திறவுகோல்களும், தேவ தீர்க்கதரிசியின் பொறுப்பும் அவர் மீது இருக்கிறது என நான் சாட்சியளிக்கிறேன். தலைவர் நெல்சன், இயேசு கிறிஸ்துவின், உண்மையான, பரிசுத்தமான, எளிய சுவிசேஷத்தை போதிக்கிறார். இயேசுவே கிறிஸ்து, இது அவரது சபை--அதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.