ஆதரிக்கும் விசுவாசத்தின் வல்லமை
ஆதரிக்க உங்கள் கரங்களை உயர்த்தி அவரது ஊழியக்காரர்களாக இருக்கிற இவர்களை ஆதரிப்பதாக நீங்கள் தேவனிடம் வாக்களிக்கிறீர்கள்.
அவர்கள் சேவை செய்கிறவர்களின் ஆதரிக்கும் விசுவாசத்துக்காக ஆசாரியத்துவ தலைவர்கள் நன்றி தெரிவிப்பதை அநேக நேரங்களில் நான் கேட்டிருக்கிறேன். அவர்களது குரலின் உணர்விலிருந்து அவர்களது நன்றியுணர்வு ஆழமானது மற்றும் உண்மையானது என நீங்கள் அறிகிறீர்கள். இன்று என் நோக்கம், அவரது சபையில் அவரது ஊழியக்காரர்களை நீங்கள் ஆதரித்ததற்காக கர்த்தரின் பாராட்டைத் தெரிவிப்பதே ஆகும். மேலும் உங்கள் விசுவாசத்தால் பிறரை ஆதரிக்க அந்த வல்லமைையில் வளரவும் அதைப் பிரயோகிக்கவும் உங்களை ஊக்குவிக்கவுமே.
நீங்கள் பிறக்குமுன்பே, அப்படிப்பட்ட வல்லமையை நீங்கள் காட்டினீர்கள். அநித்தியத்துக்கு முந்தய நாம் அறிந்த ஆவி உலகத்தைப் பற்றி நினையுங்கள். நமது பரலோக பிதா தன் பிள்ளைகளுக்கு ஒரு திட்டத்தை கொடுத்தார். நாம் அங்கிருந்தோம். லூசிபர் நமது ஆவிச் சகோதரன், தேர்வு செய்யும் சுதந்திரத்தை நமக்கு அனுமதிக்கிற திட்டத்தை எதிர்த்தான். யேகோவா, பரலோக பிதாவின் நேச குமாரன் அத்திட்டத்தை ஆதரித்தார். லூசிபர் ஒரு கலகத்தை வழிநடத்தினான். யேகோவாவின் ஆதரிக்கும் குரல் ஜெயித்தது, நமது இரட்சகராயிருக்க அவர் முன்வந்தார்.
அநித்தியத்தில் நீங்கள் இருப்பதன் உண்மை நீங்கள் பிதாவையும் இரட்சகரையும் ஆதரித்தீர்கள் என இப்போது நமக்கு உறுதியளிக்கிறது. அநித்தியத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சிறிதே அறிந்தபோது, மகிழ்ச்சியின் திட்டத்தையும் அதில் இயேசு கிறிஸ்துவின் இடத்தை ஆதரிக்கவும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் தேவைப்பட்டது.
தேவனின் ஊழியக்காரர்களை ஆதரிக்கும் உங்கள் விசுவாசம் இந்த வாழ்க்கையிலும் உங்கள் மகிழ்ச்சியின் மையமாக இருந்தது. மார்மன் புத்தகம் தேவ வார்த்தை என அறிய ஜெபிக்க ஊழியக்காரர்களின் சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டபோது, கர்த்தரின் சேவகரை ஆதரிக்க உங்களுக்கு விசுவாசம் இருந்தது. ஞானஸ்நானம் பெறும் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டபோது, நீங்கள் தேவனின் தாழ்மையான ஒரு ஊழியக்காரனை ஆதரித்தீர்கள்.
உங்கள் தலைமீது கைகளை வைத்து, ஒருவர், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்“ என சொல்ல அனுமதித்தபோது, நீங்கள் அவரை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவராக ஆதரித்தீர்கள்.
அந்த நாளிலிருந்து, விசுவாசத்தோடு சேவைை செய்து, உங்கள் மீது ஆசாரியத்துவத்தை அருளிய, அந்த ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு உங்களை நியமித்த ஒவ்வொருவரையும் ஆதரித்திருக்கிறீர்கள்.
உங்கள் ஆசாரியத்துவ அனுபவத்தின் தொடக்கத்தில், ஒவ்வொரு ஆதரித்தலும் ஒரு தேவ ஊழியரை நம்பும் நிகழ்ச்சியாக இருந்தது. இப்போது, உங்களில் அநேகர், ஆதரித்தல் அதிகம் தேவைப்படுகிற இடத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள்.
கர்த்தர் அவர்களை எதில் அழைத்தாலும், கர்த்தர் அழைக்கும் அனைவரையும் ஆதரிக்க வேண்டுமா என நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். உலகமெங்கிலும் அந்த தேர்வு மாநாட்டின்போது நடக்கிறது. இதிலும் அது நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டங்களில், தேவனின் சேவகர்களாகிய ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, ஆதரிக்க உங்கள் கரங்களை உயர்த்த அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் ஆதரிக்கும் வாக்கை நீங்கள் வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் ஆதரிக்கும் விசுவாசத்தை வழங்கலாம். ஆதரிக்க உங்கள் கரங்களை உயர்த்தி, நீங்கள் வாக்குத்தத்தம் செய்கிறீர்கள். அவரது ஊழிக்காரர்களாக இருக்கிற இவர்களை ஆதரிப்பதாக நீங்கள் தேவனிடம் வாக்களிக்கிறீர்கள்.
உங்களைப் போலவே இவர்களும் பரிபூரணமற்ற மனுஷர்கள். கர்த்தர் அவர்களை அழைத்தார் என்ற அசைக்க முடியாத விசுவாசம் உங்கள் வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ள தேவைப்படும். அந்த வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்வது நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுக்கும். அவற்றைக் காத்துக்கொள்ளாதிருப்பது, உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் துக்கத்தை--உங்கள் கற்பனைத் திறனுக்கும் அப்பால் இழப்பைக் கொடுக்கும்.
நீங்கள் உங்கள் ஆயரை, பிணையத்தலைவரை, பொது அதிகாரிகளை மற்றும் சபையின் பொது அலுவலர்களை ஆதரிக்கிறீர்களா என நீங்கள் கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது கேட்கப்படுவீர்கள். ஒரு மாநாட்டில் அலுவலர்களை அல்லது தலைவர்களை ஆதரிக்க கேட்கப்படும்போது, இது நடக்கலாம். சிலசமயங்களில் ஆயரோடுஅல்லது பிணைய தலைவரோடு நேர்முகத்தில் இது நடக்கும்.
கவனமிக்க ஜெபசிந்தனையோடு முன்கூட்டியே நீங்களே இக்கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்க வேண்டுமென்பது என் ஆலோசனை. நீங்கள் செய்யும்போது, உங்கள் அண்மை சிந்தனைகளையும், வார்த்தைகளையும் செயல்களையும் நினைக்க வேண்டும். கர்த்தர் உங்களை நேர்முகம் காணும்போது, அது ஒருநாள் நடக்கும் என அறிந்து, உங்கள் பதில்களை வடிவமைப்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்வருவன போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு, நீங்கள் ஆயத்தம் செய்யலாம்.
-
நான் ஆதரிக்க உறுதியளித்த ஜனங்களில் மனித பெலவீனம் பற்றி நான் நினைத்திருக்கிறேனா அல்லது பேசியிருக்கிறேனா?
-
அவர்களை கர்த்தர் வழிநடத்துகிறார் என்ற ஆதாரத்தை தேடியிருக்கிறேனா?
-
நான் அவர்களது தலைமையை விழிப்புடனும், நேர்மையாகவும் பின்பற்றியிருக்கிறேனா?
-
அவர்கள் தேவனின் ஊழியக்காரர்கள் என நான் பார்க்க முடிகிற ஆதாரம் பற்றி நான் பேசியிருக்கிறேனா?
-
அவர்களுக்காக பெயர் சொல்லி, அன்பின் உணர்வுடன் ஒழுங்காக ஜெபித்திருக்கிருக்கிறேனா?
நம்மில் அநேகரை அக்கேள்விகள், அசௌகரியமான நிலைக்கும், மனந்திரும்பவும் வழிநடத்தும். அநீதியாக யாரையும் தீர்க்க்காதபடிக்கு தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார், ஆனால் செயலில் நாம் இதைக் கடினமாகக் காண்கிறோம். நாம் ஜனங்களோடு செய்யும் அனைத்தும், அவர்களை மதிப்பிட நம்மை வழிநடத்துகிறது. நமது வாழ்வின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நிலையிலும், நாம் பிறரை நம்முடன் ஒப்பிடுகிறோம். பல காரணங்களுக்காக நாம் அப்படிச் செய்யலாம், அவற்றில் சில காரணமுடையவை, ஆனால் அது நம்மை சிக்கலுக்கு வழிநடத்துகிறது.
தலைவர் ஜார்ஜ் க்யூ. கானன் ஒரு எச்சரிக்கை கொடுத்தார், அதை எனதாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் சத்தியத்தை சொன்னார் என நான் நம்புகிறேன்: “தேவன் தன் ஊழியர்களை தேர்வு செய்திருக்கிறார். அவர்கள் கடிந்துகொள்ளப்படுவது தேவைப்பட்டால், அவர்களைக் கடிந்து கொள்வது அவரது உரிமை என அவர் கோருகிறார். அவர்களை கண்டனம் செய்யவோ கடிந்து கொள்ளவோ தனிநபர்களாக அவர் நமக்கு அனுமதியளிக்கவில்லை. அவன் விசுவாசத்தில் எவ்வளவு பெலசாலியாயிருந்தாலும், ஆசாரியத்துவத்தில் எவ்வளவு உயர்ந்தவராயிருந்தாலும், ஒருவனும் கர்த்தரின் அபிஷேகம் செய்யப்பட்டவரைக் குறித்து தவறாக பேசக்கூடாது, அவரது வருத்தத்தை சம்பாதிக்காமல், பூமியில் தேவனின் அதிகாரத்தில் குற்றம் கண்டு பிடிக்க முடியாது. அப்படிப்பட்டவரிடமிருந்து பரிசுத்த ஆவி விலகும், அவர் இருளில் மூழ்குவார். இப்படியிருக்கையில், நாம் கவனமாயிருக்க வேண்டுமென்பது முக்கியமென நீங்கள் பார்க்கவில்லையா.“1
பொதுவாக உலகமெங்கிலும் உள்ள சபையார், ஒருவருக்கொருவருடனும், அவர்களுக்கு தலைமை தாங்குவோரோடும், நேர்மையாக இருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். எனினும் நாம் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் உண்டு. ஒருவரையொருவர் ஆதரிக்க வல்லமையில் நாம் மேலெழும்ப வேண்டும். இதற்கு விசுவாசமும் முயற்சியும் தேவை. இந்த மாநாட்டில் நாம் செயல்படுத்த நான் கொடுக்கிற நான்கு ஆலோசனைகள் இருக்கின்றன..
-
செய்தியாளர்கள் சிபாரிசு செய்கிற குறிப்பிட்ட செயல்களை நாம் அடையாளம் கண்டு, அவற்றை செயல்படுத்த இன்றே தொடங்க வேண்டும். நாம் செய்யும்போது, அவர்களை ஆதரிக்கும் நமது வல்லமை அதிகரிக்கும்.
-
அவர்கள் பேசும்போது, நாம் நேசிக்கிற குறிப்பிட்டவர்களின் இருதயங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கொண்டு செல்லுமாறு ஜெபிக்கலாம். நமது ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன என பின்னர் நாம் அறியும்போது, அந்த தலைவர்களை நாம் ஆதரிக்கும் வல்லமை அதிகரிக்கும்.
-
அவர்கள் செய்தி கொடுக்கும்போது, குறிப்பிட்ட செய்தியாளர்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், சிறப்பிக்கப்ட வேண்டும் என நாம் ஜெபிக்கலாம். அவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள் என நாம் பார்க்கும்போது, அவர்களை ஆதரிக்க நமது விசுவாசம் அதிகரிக்கும், அது நிலைத்திருக்கும்.
-
உதவிக்காக நமது தனிப்பட்ட ஜெபங்களுக்கு பதிலாக வருகிற செய்தியாளர்களிடமிருந்து செய்திகளை நாம் கேட்கலாம். பதில்கள் வரும், அவை வரும்போது, கர்த்தரின் ஊழியர்களை ஆதரிக்க நமது விசுவாசம் அதிகரிக்கும்.
சபையில் சேவை செய்பவர்களை ஆதரிப்பது அதிகரிப்பதுடன், அப்படிப்பட்ட வல்லமையில் நாம் அதிகரிக்கும்படியாக, மற்றொரு அமைப்பு இருக்கிறது என நாம் கற்கலாம். அது நமக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வர முடியும். அது வீட்டிலும் குடும்பத்திலும் உள்ளது.
தன் தகப்பனுடன் வீட்டில் வசிக்கிற இளம் ஆசாரியத்துவம் தரித்தவருடன் நான் பேசுகிறேன். உங்கள் ஆதரிக்கும் விசுவாசத்தை உணர்வது என்பது என்ன என என் சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்லுகிறேன். அவர் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகுந்தவராக தோன்றலாம். ஆனால் நீங்கள் அறிவதை விட அதிக சவால்களை அவர் எதிர்கொள்கிறார். சில சமயங்களில் அவருக்கு முன்னால் உள்ள பிரச்சினைகளுக்கூடே அவரால் வழியை பார்க்க முடியாது.
அவர் மீது உங்கள் மதிப்பு அவருக்கு கொஞ்சம் உதவும். அவர் மீது உங்கள் அன்பு இன்னும் உதவும்,. ஆனால் மிகவும் உதவக்கூடிய மிக உருக்கமான வார்த்தைகள் இதுபோன்றவை: “அப்பா, உங்களுக்காக நான் ஜெபித்திருக்கிறேன், கர்த்தர் உங்களுக்கு உதவப்போகிறார் என நான் உணர்ந்திருக்கிறேன்.“ எல்லாம் சரியாகும். அது சரியாகும் என எனக்குத் தெரியும்.“
அப்பாவிடமிருந்து மகனுக்கு சொல்லப்படும் அதுபோன்ற வார்த்தைகளும் வேறு திசையில் வல்லமை பெற்றிருக்கும். மகன் கொடிய தவறு செய்யும்போது, ஒருவேளை ஆவிக்குரிய காரியங்களில் கூட, அவர் தோற்றதாக அவர் உணரக் கூடும். அவனது அப்பாவாக அந்த நேரத்தில், என்ன செய்வது என நீங்கள் ஜெபித்த பிறகு, பரிசுத்த ஆவி இந்த வார்த்தைகளை உங்கள் மனதில் போடுவார்: “மகனே வழி நெடுகிலும் நான் உன்னோடிருக்கிறேன். கர்த்தர் உன்னை நேசிக்கிறார். அவரது உதவியுடன் நீங்கள் திரும்பலாம். உங்களால் முடியும், நீங்கள் செய்வீர்கள் என எனக்குத் தெரியும். நான் உன்னை நேசிக்கிறேன்.“
ஆசாரியத்துவ குழுமத்திலும், குடும்பத்திலும், ஒருவரையொருவர் ஆதரிக்க அதிகப்படியான விசுவாசம், நாம் உருவாக்கும்படியாக கர்த்தர் விரும்புகிற சீயோனைக் கட்டுகிற வழியாகும். இந்த உதவியால் நம்மால் முடியும், நாம் செய்வோம். இதற்கு நமது முழு இருதயத்துடனும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும், கர்த்தரை நேசிப்பதையும், நம்மை நேசிப்பது போல ஒருவரையொருவர் நேசிப்பதையும் கற்பது தேவைப்படும்.
கிறிஸ்துவின் அந்த பரிசுத்த அன்பில் நாம் வளரும்போது, நமது இருதயங்கள் மென்மையாகின்றன. அந்த அன்பு நம்மை தாழ்மையாக்கி, மனந்திரும்ப நம்மை வழிநடத்தும். கர்த்தரிலும் ஒருவருக்கொருவரிலும் நமது தன்னம்பிக்கை வளரும். பின்னர் கர்த்தர் நம்மால் முடியும் என வாக்குத்தத்தம் செய்தது போல, நாம் ஒன்றாவதை நோக்கி நகரலாம். 2
பரலோக பிதா உங்களை அறிகிறார், மற்றும் நேசிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசுவே ஜீவிக்கும் கிறிஸ்து. இது அவரது சபை. நாம் அவரது ஆசாரியத்துவம் தரித்திருக்கிறோம். பிரயோகிக்கவும், ஒருவரையொருவர் ஆதரிக்கவும் நமது வல்லமையில் நாம் வளரும் முயற்சிகளில் நம்மை கனம் பண்ணுவார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.