உங்கள் ஆசாரியத்துவ விளையாட்டுப் புத்தகம்
கிறிஸ்துவின் ஒரு சீஷராக உங்களையே நீங்கள் எப்படி நிருபிப்பீர்கள் என்பதின் உங்களுடைய சொந்த விளையாட்டுப் புத்தகத்தை உருவாக்குங்கள்.
அவர்களுக்கு 12 வயதான ஆண்டில் ஜனுவரி மாத ஆரம்பத்தில் 11வயது சிறுவர்கள் ஆரோனிய ஆசாரியத்துவ குழுமத்தில் பங்கேற்பார்கள் என்ற ஒரு அறிக்கையை கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதான தலைமை அறிவித்தார்கள். 1
அதன் விளைவாக, இந்த ஆண்டின் முதல் பகுதியின்போது, தங்களுடைய அடுத்த பிறந்த நாள்வரை அவர்கள் ஆரம்பவகுப்பில் தங்கிவிடலாமென அனுமானித்த 11 வயதான ஒரு சிலர் திடுக்கிட்டார்கள், ஆனால் இப்போது சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட உதவிக்காரர்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிருந்தை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
மாற்றத்தால் யார் அதிக ஆச்சரியமடைந்தார்கள், உதவிக்காரர்களா அல்லது அவர்களுடைய பெற்றோராவென நான் வியப்புறுகிறேன். இவர்களில் அநேகமாக 80,000 புதிய உதவிக்காரர்களில் அநேகர் இன்றிரவு இந்த மகத்தான மாநாட்டு மையத்தில் நம்முடனிருக்கிறார்கள், அல்லது, தொழில்நுட்பம் மூலமாக பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆசாரியத்துவத்தின் மகத்தான சகோதரத்துவத்தை வரவேற்கிறோம்.
இந்த மாற்றம் இந்தக் கூட்டத்தை ஒரு வரலாற்றில் ஒன்றாகச் செய்கிறது. பொதுமாநாட்டின் ஆசாரியத்துவத்தின் பொதுக்கூட்டத்தில் ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் மிக அதிக எண்ணிக்கையில்பங்கேற்பது இதுவாகத்தானிருக்கும். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் வெளிச்சத்தில் குறிப்பாக ஆரோனிய ஆசாரியத்துவத்தின் இளம் வாலிபர்களுக்கு என்னுடைய கருத்துக்களை நான் சொல்லுகிறேன்.
விளையாட்டுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்
மாணவர்களாக இருப்பதற்கும் மேலாக, உங்களில் அநேகர் பள்ளியில், அல்லது தனியார் பாடங்கள், அணிகள், விளையாட்டையும் சேர்த்து பள்ளிக்கு வெளியே குழுக்கள் மூலமாக உங்கள் திறமைகளை, ஆர்வங்களை, பொழுதுபோக்குகளையும் நீங்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்ததில், உயர் மட்டங்களில் அவர்கள் நிகழ்த்திய நிலைக்கு தங்களுடைய விளையாட்டு திறமைகளை வளர்க்கிறவர்களை நான் எப்போதுமே பாராட்டினேன். ஒருவர் ஏதாவதொன்றில் சிறப்பாயிருப்பதற்கு, இயற்கையான திறமை, மிகுந்த ஒழுக்கம், தியாகம் மற்றும் அளவிடமுடியாத மணிநேரங்களின் பயிற்சியும் பழக்கத்திற்கும் கூடுதலாக அது எடுக்கிறது. இத்தகைய விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்களின் சிலநேர கடுமையான விமர்சனங்களை அடிக்கடி கேட்டு, வருங்காலத்தில் ஏதோ பெரியதற்காக இப்போது அவர்களுக்கு வேண்டியதை விருப்பத்தோடு ஒதுக்கி வைப்பார்கள்.
தொழில்முறை விளையாட்டு வீரர்களின் உயர் மட்டங்களில் வெற்றியை அனுபவித்த சபை அங்கத்தினர்களையும் ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவர்களையும் நாம் அறிவோம். அநேக எடுத்துக்காட்டுகளிருக்கின்றன, ஆனால் நேரம் பொருட்டு இங்கே ஒரு சிலவற்றை மட்டுமே என்னால் பட்டியலிடமுடியும். பேஸ் பாலில் ஜெரேமி குத்ரி மற்றும் ஹார்ப்பர், கூடைப் பந்தில் ஜபரி பார்க்கர் மற்றும் ஜிம்மர் பிரடெற்றே, சாக்கரில் ரிகார்டோ ரோஜாஸ், ரக்பி லீக்கில் வில்லியம் ஹோப்பட்டே, கால் பந்தாட்டத்தில் டைசம் ஹில் மற்றும் டானியேல் சோரென்சன் போன்ற விளையாட்டு வீரர்களை நீங்கள் அடையாளம் காணலாம். அவர்களது விளையாட்டுக்கு ஒவ்வொருவரும் விசேஷித்த பங்களிப்புகளைக் கொடுத்தார்கள்.
தங்களுடைய விளையாட்டுகளில் மிகஅதிக வெற்றியாளர்களாக அவர்கள் இருக்கிறபோது அவர்கள் சரியான விளையாட்டு வீரர்களில்லை அல்லது சரியான மனிதர்களில்லை என ஏற்றுக்கொள்வதில் இந்த விளையாட்டு வீரர்கள் முதன்மையாயிருப்பார்கள். தங்களின் விளையாட்டில் சிறப்பானவர்களாயிருக்கவும் சுவிசேஷத்தின்படி வாழவும் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். தடுமாறினால் அவர்கள் எழுகிறார்கள், முடிவுபரியந்தம் நிலைத்திருக்க முயலுகிறார்கள்.
விளையாட்டு புத்தகத்தைப் படிக்கவும்.
அணி விளையாட்டுகளில் சில விளையாட்டு சூழ்நிலைகளுக்காகவும், ஒரு விளையாட்டு புத்தகத்திற்காகவும் விளையாட்டுகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தங்களுடைய குறிப்பிட்ட நியமிப்பை விளையாட்டு வீரர்கள் கற்றுக்கொள்கிறார்கள். விளையாட அழைக்கப்படும்போது, எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டுமென மிகச் சரியாக, ஏறக்குறைய உள்ளுணர்வால் அவர்களுக்குத் தெரியும்படிக்கு வெற்றியாளர்களான விளையாட்டு வீீரர்கள் விளையாட்டுப் புத்தகத்தை மிகமுற்றிலுமாக படிக்கிறார்கள்.
இதைப்போன்ற வழியில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற நமக்கும் ஒரு குழுமம் என்ற ஒரு அணியிருக்கிறது, (ஒரு குழுமம்) (பரிசுத்த வேதங்கள், தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள்) என்ற விளையாட்டுப்புத்தகமுமிருக்கின்றன.
உங்கள் அணியினரை நீங்கள் பெலப்படுத்துகிறீர்களா?
உங்கள் விளையாட்டுப் புத்தகத்தை எவ்வளவு நன்றாக நீங்கள் படித்திருக்கிறீர்கள்?
உங்கள் நியமனத்தை முழுவதுமாக நீங்கள் புரிந்திருக்கிறீர்களா?
எதிர்ப்பை எதிர்கொள்ளுதல்
இன்னும் கூடுதலாக ஒப்புமையை எடுக்க, திறமையான பயிற்சியாளர்களுக்கு தங்களுடைய அணியின் பெலவீனங்களும், அப்படியே எதிர் அணியின் பெலவீனங்களும் தெரியுமென்பதை நாம் பார்க்கிறோம். வெற்றிக்கான சிறந்த சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியான ஒரு விளையாட்டுத் திட்டத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
எந்த சோதனைகளால் நீங்கள் அதிகமாய் பாதிக்கப்படுவீர்களென்று உங்களுக்குத் தெரியும், சத்துரு எவ்வாறு உங்களை தடம் புரட்டவும் மனமுடையச் செய்யவும் முயற்சிப்பானென உங்களால் கணிக்கமுடியும். எதிர்ப்பை நீங்கள் எதிர்கொள்ளும்போது எவ்வாறு பதிலளிப்பதென்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக ஒரு தனிப்பட்ட விளையாட்டுத் திட்டத்தையும் விளையாட்டுப் புத்தகத்தையும் நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா?
வெவ்வேறான ஒழுக்க சோதனைகளை எதிர்கொள்ளும்போது, மற்றவர்களின் துணையோடோ அல்லது நீங்கள் தனியாக ஒரு திரையைப் பார்க்கும்போதோ உங்களின் விளையாட்டுத் திட்டத்தை நீங்கள் அறிவீர்கள். மதுபானம் அருந்த, அல்லது போதைப்பொருளை முயற்சிக்க ஒரு நண்பன் உங்களிடம் சொன்னால் விளையாட்டு உங்களுக்குத் தெரியும். நீங்கள் பழக்கப்பட்டிருக்கிறீர்கள், எப்படி முன்கூட்டியே செயல்படவேண்டுமென அறிவீர்கள்.
உங்கள் பாத்திரத்தை நிர்வகிக்க ஒரு விளையாட்டுத் திட்டம், ஒரு விளையாட்டுப் புத்தகம், ஒரு உறுதியான உறுதிப்பாடுடன் உங்கள்மேல் குறைவான கட்டுப்படுத்தலை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்ன செய்வீர்களென ஏற்கனவே நீங்கள் தீர்மானம் செய்தீர்கள். சோதனையுடன் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தீர்மானிக்க உங்களுக்குத் தேவையிருக்காது.
இந்தக் கொள்கையை சித்தரிக்கிற ஒரு கதையை பன்னிருவரில் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்தார். ஒரு உதவிக்காரனாக பள்ளியில் தன் நண்பர்களுடன் அவன் சுற்றிக்கொண்டிருந்தான். சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்று அவர்களுக்குக் கிடைத்த பின்பு, கார் ஓட்டி சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட திரைப் படத்திற்கு அவர்கள் போக, ஒருவன் ஆலோசனை அளித்தான் இது அவன் பார்க்கக்கூடாத திரைப்படம் என்று அவன் அறிந்திருந்தது பிரச்சினையாயிருந்தது. உடனேயே சூழ்நிலையைப்பற்றி அவன் அழுத்தத்தையும் ஆர்வத்தையும் உணர்ந்தாலும், இதற்காக அவன் திட்டமிட்டிருந்தான். இது, அவனுடைய ஆசாரியத்துவ விளையாட்டுப்புத்தகத்திலிருந்து நேரடியாக வந்த ஒரு பக்கம்.
ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, அவனுடைய தைரியத்தையெல்லாம் கூட்டி, “அந்த திரைப்படத்தைப் பார்க்க எனக்கு ஆர்வமில்லை என அவன் அறிவித்தான். என்னை என் வீட்டில் இறக்கிவிட்டுவிடுங்கள்”, அவர்கள் அதைச் செய்தார்கள். ஒரு எளிய விளையாட்டு ஒரு வெற்றிக்கு நடத்தியது. அவனுடைய சொந்த வாழ்க்கையில் இம்மாதிரியான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொள்ள அவனுக்கு பெரிய பெலமாக இருக்க இந்த எடுத்துக்காட்டு எவ்வாறு நிரூபித்தது என, பலஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இரவில் அவனுடனிருந்த நண்பர்களில் ஒருவன் விவரித்தான்.
விளையாட்டு் புத்தகத்திலிருந்து பக்கங்கள்.
உங்களுடைய விளையாட்டு புத்தகத்தில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய விளையாட்டுகளை சிபாரிசு செய்ய சகோதரர்களில் ஒருசிலரை நான் கேட்டேன் அவர்களுடைய உணர்த்தப்பட்ட ஆலோசனைகளில் சில இங்கே.
-
அதிக ஒளிக்கும் இயேசு கிறிஸ்துவில் ஒரு சாட்சிக்கும் ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள்.
-
உங்கள் பெற்றோரின், ஆயரின், உங்களுடைய இளம் ஆண்கள் மற்றும் குழுமத் தலைவர்களின் போதனைகளுக்கு கவனமாக செவிகொடுங்கள்.
-
ஆபாசபடத்தையும் ஒழுக்கக்கேடான சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தையும் தவிர்த்திடுங்கள்.
-
தேவனோடு நீங்கள் செய்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து அவைகளைக் கைக்கொள்ள செயல்படுங்கள்.
-
பெரிய தீர்க்கதரிசிகளின் வேதக் கதைகளைப் படித்து அவர்களுடைய நல்ல தன்மைகளைப் பின்பற்றுங்கள்.
-
சேவையின் மூலமாக பரலோக பிதாவின் பிள்ளைகளை ஆசீர்வதியுங்கள்.
-
நீங்கள் விரும்புகிற நபராக மாற உங்களுக்குதவ நல்ல நண்பர்களைத் தேடுங்கள்.
-
குடும்ப தேடுதலின் செயலியில் ஒரு நிபுணனாகி நம்முடைய சொந்த குடும்ப வரலாற்றை ஆராய்ச்சி செய்யுங்கள்.
-
தீமையான செல்வாக்கிலிருந்து நீங்கள் தப்பிக்க முடிகிற ஒதுக்குப்புறமான இடங்களைத் திட்டமிடுங்கள்.
-
உங்களுடைய ஆசாரியத்துவ குழுமத்திலுள்ள பிற அங்கத்தினர்களை நேசித்து பெலப்படுத்த உதவுங்கள்.
நாம் ஆரம்பத்தில் பார்த்த படங்களிலுள்ள விளையாட்டு வீரர்களுடன் நான் தொடர்பும் வைத்திருந்தேன். தொழில்முறை விளையாட்டு வீரர்களாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்து அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதில்லை மாறாக ஒரு நேசமுள்ள பரலோக பிதாவின் குமாரர்களாக, தேவனின் ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிறவர்களாக அடையாளப்படுத்துகிறார்கள் என்பதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.
இப்போது, அவர்களுடைய சிந்தனைகளை கேட்போம்.
-
“சுவிசேஷத்தின் சத்தியத்தின்மீதுள்ள என்னுடைய அறிவிலும் விசுவாசத்திலும் நான் பெலமாக சார்ந்திருக்கிறேன். ஆசாரியத்துவத்தை ஒரு தகுதியுள்ளவராக தரித்திருக்கிற, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டாயிருக்க இது எனக்கு வழிகாட்டியது என டை கட்டிக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கும், இங்கே ஒரு உதவிக்காரராக ஜிம்மர் பிரெடெட்டே சொல்கிறார்,
-
ப்ரைஸ் ஹார்ப்பர், இங்கே ஒரு கணவராக எழுதுகிறார். “புகழ், அதிர்ஷ்டம், எம்.வி.பி விருது என்னை சந்தோஷப்படுத்தும் என நான் நினைத்தேன். ஏதோ ஒன்று காணாமல்போகிறது. ஆகவே நான் ஆயத்தமாகி ஆலயத்திற்குள் பிரவேசித்தேன். என்னுடைய பரலோக பிதாவிடம் [திரும்பும்] பாதையில் இப்போது நானிருக்கிறேன், உலகத்தில் மிகப்பெரிய சந்தோஷமான நித்திய குடும்பம் எனக்கிருக்கிறது!”
-
“ஒரு நல்ல விளையாட்டுப் புத்தகமென்றால், ஒவ்வொரு அணி அங்கத்தினர்களின் திறமைகளையும் வலிமைகளையும் பயன்படுத்துகிற ஒரு திட்டமென்பதே என இங்கே ஒரு ஊழியக்காரராக டேனியேல் சோரென்சன் சொல்கிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நான் படித்து, பயிற்சி செய்யும்போது, ஆசாரியத்துவத்தில் நான் எவ்வாறு எனது வலிமைகளைப் பயன்படுத்துவதென என்னால் அறிந்துகொள்ள முடிகிறது”.
-
தற்போது இங்கே ஒரு ஊழியத் தலைவராக சேவை செய்துகொண்டிருக்கிற ஜெரேமி குத்ரி பகிர்ந்துகொண்டார், “ஒரு 12 வயதுள்ள உதவிக்காரனாக ‘தேவனை சந்திக்க ஆயத்தப்பட இந்த வாழ்க்கையே ஒரு நேரம்’ என ஆவி எனக்கு சாட்சியளித்தது [என நான் உணர்ந்தேன்]2 இரட்சகர் மூலமாக தேவனில் விசுவாசத்தை செயல்படுத்துவதும் மனந்திரும்புதலுமே விளையாட்டுத் திட்டம். . . விளையாட்டுப் புத்தகம், பரிசுத்த வேதங்களிலும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மூலமாகவும் காணப்படுகிறது,
-
ஜபரி பார்க்கர், இங்கே, மூப்பர் அலுவலுக்கு் அவருடைய நியமனத்திற்கு இருக்கிறவர் சொல்கிறார். “நான் இளமையாயிருந்தபோது, ஞானஸ்நானம் பெற நான் தீர்மானித்ததைச் செய்யாதிருந்திருந்தால் நான் என்ன மாதிரியான நபராக மாறியிருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. . . . ஒவ்வொரு நாளும் என்னை வழிநடத்த என் வாழ்க்கையில் எனக்கு ஒரு தேவனிருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்”.
-
இங்கே தற்போது கிளைத் தலைவராக சேவைசெய்துகொண்டிருக்கிற ரிக்கார்டோ ரோஜாஸ், சொன்னார், “[தேவனின்] ஆசாரியத்துவத்தின் மூலமாக அவருடைய பணியில் [நாம்] உதவலாம். சத்தியத்தைப் பாதுகாக்க பலங்கொண்டு திடமனதாயிருக்க 3 நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்”. களத்திலும், ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவராகவும் வெற்றியடைய இது அவனுக்கு உதவியது.
-
அவருடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு விளையாட்டுப் புத்தகமாக சேவை செய்ததாக இங்கே ஒரு ஊழியக்காரராக இருக்கிற டைசன் ஹில் உணருகிறார். “தேவனுடைய திட்டத்தில் நம்பிக்கை வைத்து, என்னுடைய முயற்சிகளில் தேவன் சந்தோஷப்படுகிறாரென்பதை அறிந்துகொண்டு அதில் என் பாத்திரத்தை நிறைவேற்ற நான் சிறப்பாக செய்வது என்னுடைய வாழ்க்கையில் சமாதானத்தின் சந்தோஷத்தின் ஒரு மூழ்கடிக்கும் உணர்வை எனக்குக் கொடுத்தது” என அவர் பகிர்ந்துகொள்கிறார்.
-
“எதிர்ப்பின் உத்திகளை அடையாளம் காணவும் எய்யும் அக்கினியாஸ்திரங்களுக்கு தாங்கி நிற்க ஆவிக்குரிய பலாபலன்களை வழங்குகிற, மற்றவர்களுக்கு சிறப்பாக சேவை செய்யவும் அவருக்கு சுவிசேஷம் உதவுகிறதென”, நான்கு தலைமுறைகளின் பகுதியாக வில்லியம் ஹோப்பேட் அவருடைய குழந்தையின் ஆசீர்வாதத்திற்காக இருக்கிறவர் சொல்கிறார்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தேவனுடைய ஒரு குமாரனாகவும் அவருடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற உங்களுடைய உயர்ந்த, பரிசுத்த அடையாளத்தை அடையாளம் கண்டுகொள்கிறீர்களா? மனதில் இந்த நித்திய அடையாளத்துடன், சோதனைகளின், உபத்திரவங்களின் நேரங்களில் உங்களை வழிகாட்டுகிற உங்கள் விளையாட்டுத் திட்டத்தையும், ஆசாரியத்துவ விளையாட்டுப் புத்தகத்தையும் உருவாக்குங்கள். தாக்குதல், பாதுகாத்தல் இரண்டிலும் உத்திகளை கருத்தில் கொள்ளுங்கள்.
சாட்சிகளைப் பெலப்படுத்தவும் நெருக்கமும் இடுக்கமுமான பாதையில் தங்கியிருக்க தாக்குதல் உத்திகள் உதவுகிறது வழக்கமான ஜெபம், வேதப்படிப்பு, சபைக்குப் போகுதல், தசமபாகத்தைச் செலுத்துதல், இளம் வயதினரின் பெலத்திற்காக பிரதியில் காணப்படுகிற ஆலோசனையைப் பின்பற்றுதல் எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.
சோதனைகளை எப்படி நீங்கள் எதிர்கொள்வீர்களென முன்பே திட்டமிடுதல் தாக்குதல் உத்திகளில் அடங்கும். உங்களுடைய தனிப்பட்ட தரங்களை சமரசம் செய்ய நீங்கள் சோதிக்கப்படும்போது, நீங்கள் என்ன செய்வீர்களென்பதை முன்கூட்டியே அறிந்திருப்பீர்கள்.
அதற்கு உங்களிடம் ஒரு விளையாட்டுப்புத்தகம் தேவை.
இன்று ஜெபம் செய்யவேண்டும் போலில்லையா? நீங்கள் ஏற்கனவே விளையாட்டு திட்டமிட்ட விளையாட்டை நடத்த நேரம் இது.
உங்கள் சாட்சி எச்சரிப்பதை நீங்கள் உணருகிறீர்களா? அதற்கு உங்களிடம் ஒரு விளையாட்டு இருக்கிறது. என்ன செய்யவேண்டுமென உங்களுக்குத் தெரியும்.
அனைத்து நட்சத்திரங்களும் தேவனின் கண்களிலிருக்கின்றன.
நீங்கள், தேவனுடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள். இருப்புக்கோலை உறுதியாக பிடித்துக்கொள்ள உங்கள் அர்ப்பணிப்பு, நீங்கள் ஆகவேண்டுமென சிருஷ்டிக்கப்பட்ட நித்திய இருப்புக்கு உங்களை மாற்றும்.
தேவன் அறிகிறார், உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை ஆசீர்வதித்து உங்கள் காலடிகளை வழிநடத்துவார்.
நீங்கள் விசேஷமானவர்களில்லை, நீங்கள் அனைத்து நட்சத்திர பொருட்களில்லை என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. “உலகத்தின் பலவீனமானவைகள், வந்து, திராணியும் பலமும் உடையவற்றைத் தகர்க்கும்” என தேவன் பிரகடனப்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியாதா?4
ஆகவே நீங்கள் பெலவீனமாக உணருகிறீர்களா? பாராட்டுக்கள், நீங்கள் இப்போதுதான் வரிசையில் வருகிறீர்கள்!
முக்கியமில்லாதவராக, தாழ்ந்தவராக நீங்கள் உணருகிறீர்களா? தேவனுக்குத் தேவையானவராக, நீங்களிருக்கலாம்.
பயமுறுத்துகிற எதிரியான கோலியாத்துக்கு எதிராக போர்க்களத்தில் முன்னுக்குச் சென்ற தாவீதைவிட என்ன பெரிய எடுத்துக்காட்டிருக்கிறது? ஒரு விளையாட்டு திட்டத்துடனும், விளையாட்டு புத்தகத்துடனும் கர்த்தரை சார்ந்திருத்தலில், தாவீது தன்னைமட்டும் பாதுகாக்கவில்லை, இஸ்ரவேலின் சேனையையும் பாதுகாத்தான்!5 கர்த்தருடைய பக்கத்திலிருக்க உங்கள் தைரியத்தைக்கூட்டும்போது அவர் உங்களோடிருப்பார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”6
அவரால் கதவுகளைத் திறக்க முடிந்து,, நமக்கிருந்ததென்று நாம் ஒருபோதும் அறிந்திராத பலங்களையும் திறமைகளையும் காண நமக்குதவுவார்.7
உங்கள் பெற்றோர், ஆயர், இளம் ஆண்களின் தலைவர்கள் போன்ற நம்பிக்கையான உங்கள் பயிற்சியாளர்களுக்கு செவிகொடுங்கள். விளையாட்டுப்புத்தகத்தை கற்றுக்கொள்ளுங்கள். வேதங்களைப் படியுங்கள். தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் படியுங்கள். கிறிஸ்துவின் ஒரு சீஷராக உங்களையே நீங்கள் எப்படி நிருபிப்பீர்கள் என்பதின் உங்களுடைய சொந்த விளையாட்டு திட்டத்தை உருவாக்குங்கள்.
உங்களுடைய ஆவியை பெலப்படுத்தவும் சத்துருவின் கண்ணிகளை தவிர்க்கவும் நீங்கள் பயன்படுத்தும் விளையாட்டுகளை முன்னதாக அறிந்துகொள்ளுங்கள்.
இதைச் செய்யுங்கள், தேவன் உங்களை நிச்சயமாகப் பயன்படுத்துவார்.
இப்போது, சுவிசேஷத்திலிருந்து தங்களையே விடுவித்துக்கொண்டு விட்டு அலைபவர்கள் சிலர் இருக்கிறார்கள். சிலர் அரங்கத்தில் அமர்ந்துகொண்டு, தூரத்திலிருந்து விளையாட்டைக் கவனிக்கிறார்கள். அவர்களை களத்திற்குள் அனுப்ப பயிற்சியாளர்கள் முயற்சித்தாலும் பெஞ்சிலேயே அமர்ந்திருக்க சிலர் தேர்ந்தெடுக்கின்றனர்.காப்பாற்றவும், ஆதரிக்கவும், சக அணியின் ஒரு அங்கத்தினராக அவர்களை நேசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன்!
மற்றவர்கள் உள்ளே நுழைய விரும்பி, நுழைவார்கள். அதிகமாய் பொருட்டாகுவது, அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதல்ல, ஆனால், களத்தில் தங்களையே நிறுத்த அவர்களுடைய விருப்பமே பொருட்டாகிறது.. தங்களுடைய எண் அழைக்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கமாட்டார்கள் ஏனெனில் “தேவனுக்கு ஊழியம் செய்ய நீங்கள் வாஞ்சையுள்ளவர்களாயிருந்தால் பணிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்” எனச் சொல்லுகிற வேதத்தை அவர்கள் அறிவார்கள்.8
அந்த அமைப்பில் நீங்கள் உங்களை வைக்கலாம்.
உங்களுடைய ஆசாரியத்துவ விளையாட்டுப் புத்தகத்தை நீங்கள் படித்து செயல்படுத்தும்போது இதை நீங்கள் செய்கிறீர்கள்.
வழியில் அநேகமாக நீங்கள் தடுமாறி விழலாம், ஒருவேளை அநேக அநேக முறைகள் நீங்கள் தடுமாறி விழலாம். நீங்கள் பூரணமானவரல்ல, உங்கள் பாத்திரத்தை புதுப்பிக்கவும், ஒரு சிறந்த, மிகவும் இரக்கத்தின் வழியில் உங்களை அனுமதிக்கிற தகுதி நடைமுறையில் தோற்று்போவது ஒரு பகுதி உண்மையான மனந்திரும்புதல் மூலமாக நமது தவறுகளை மேற்கொள்ள இரட்சகரும் அவருடைய அளவில்லா பாவநிவர்த்தியும் வழியைக் கொடுக்கிறது.
தங்களுடைய விளையாட்டில் ஒரு சிறிய அம்சத்தை கச்சிதமாக்க திறமையான விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கான மணிநேரங்களை செலவு செய்கிறார்கள். ஆசாரியத்துவத்தைத் தரித்தவராக இதைப்போன்ற மனநிலை உங்களுக்கு வேண்டும். நீங்கள் விழுந்தால், மனந்திரும்பி, அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் சிறப்பாய்ச் செய்யும்படியாக பயிற்சி செய்யுங்கள். இறுதியாக அது உங்களைப் பொறுத்தது. விளையாட்டுப் புத்தகத்தை நீங்கள் கற்றுக்கொள்வீர்களா?
நான் உங்களை வலியுறுத்துகிறேன்: கர்த்தரில் நம்பிக்கை வையுங்கள். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு9 விளையாட்டில் நுழையுங்கள்.
உயர்மட்டங்களில் தொழிற்மட்ட விளையாட்டுகளை விளையாடுகிற அநேகர் இருக்கமாட்டார்கள் ஆனால் சீஷத்துவத்திற்கு வரும்போது, கிறிஸ்துவைப் பின்பற்ற தேர்ந்தெடுக்க அநேகர் இருக்கிறார்கள்.
கர்த்தருடைய வழிகளைக் கற்றுக்கொள்ள, சீஷத்துவத்தின் பாதையில் பிரவேசிக்க, தேவனின் திட்டத்தின்படி வாழ முயற்சிக்க, உண்மையில் இந்த வாழ்க்கையில் அது உங்கள் ஊழியம் நீங்கள் அவரிடத்தில் திரும்பும்போது தேவன் உங்களைத் தாங்குவார், உங்களை ஆசீர்வதிப்பார். இதை நீங்கள் செய்யலாம் ஏனெனில் அவருடைய கண்களில் நீங்கள் சகல நட்சத்திரம்.
நீங்கள் தரித்திருந்து, ஒவ்வொரு நாளும் உங்களுடைய பரிசுத்த பாத்திரத்தை செயல்படுத்த முயற்சிக்கும்படியாக பரிசுத்த ஆசாரியத்துவத்திற்கு தகுதியாக வாழ நீங்கள் அர்ப்பணிப்பீர்களென நான் ஜெபிக்கிறேன். அப்படிச்செய்ய திறமையுடனும் விருப்பத்துடனும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் தரித்திருக்கிற ஆசாரியத்துவத்தின் வல்லமையைப்பற்றியும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவைக்குறித்தும் நமது இரட்சகராக, மீட்பராக அவருடைய பாத்திரத்தையும் குறித்து என்னுடைய சாட்சியில் சேர்க்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.