![](https://www.churchofjesuschrist.org/imgs/https%3A%2F%2Fassets.churchofjesuschrist.org%2F48%2F08%2F4808ff48448cd2b3ccc5e5a46b3ed4c75bc3e68c%2F4808ff48448cd2b3ccc5e5a46b3ed4c75bc3e68c.jpeg/full/!250,/0/default)
விசுவாசக் கண்
பிரகடனத்தில் நாம் ஏற்றுக் கொள்பவைகளை மட்டும் தெரிந்தெடுத்தால், இங்கும் இப்போதும் நமது அனுபவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது நித்திய பார்வையை மறைக்கிறோம்.
அவரது சிலுவையிலறைதலுக்கு சற்று முன் இயேசு நீதிமன்றத்தில் பிலாத்துக்கு முன்னால் கொண்டு போகப்பட்டார். ”நீ யூதருடைய இராஜாவா?” பிலாத்து மனமிரங்கி கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக, ”என் இராஜ்யம் இவ்வுலகத்துக்கு உரியதல்ல. … சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க நான் இந்த உலகத்தில் வந்தேன். சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான், என்றார்”
பிலாத்து இழிவாக கேட்டான், ”சத்தியமாவது என்ன?”1
இன்றைய உலகத்தில் சத்தியமாவது எது என்ற கேள்வி மதசார்பற்ற மனது வேதனையடையுமளவுக்கு குழப்பமானதாக இருக்கலாம்.
சத்தியம் என்பது என்ன என்பதற்கு மில்லியனுக்கு அதிகமான பதில்களை கூகுள் தேடல் கொண்டு வருகிறது. செங்கலாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட நூலகத்தைவிட நமது செல்போனில் அதிக தகவல்கள் நாம் பெற முடிகிறது. நாம் அதிகப்படியான தகவல்களோடும் அபிப்பிராயங்களோடும் வாழ்கிறோம். ஒவ்வொரு திருப்பத்திலும் இழுக்கிற, ஆசைகாட்டுகிற குரல்கள் நம்மைத் துரத்துகின்றன.
இன்றைய குழப்பங்களில் மாட்டிக்கொண்டு, இளம் சாக்ரட்டீஸுக்கு, ப்ரோட்டகோரஸ் 2500 ஆண்டுகளுக்கு முன் சொன்ன வார்த்தைகளுக்கு அநேகர் இரையாகின்றனர, ”உனக்கு சத்தியம் எது,” அவன் சொன்னான், ”உனக்கு சத்தியமானதும், எனக்கு சத்தியமானதும், எனக்கு சத்தியமானது.” 2
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் மூலம் சத்தியம்
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு, முற்றிலும் முழுமையாகவும் சத்தியமான காரியங்கள் இருக்கின்றன என நாங்கள் தாழ்மையாக அறிவிக்கிறோம். இந்த நித்திய சத்தியங்கள் தேவனின் ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் ஒன்றேதான்.
வேதங்கள் கற்பிக்கின்றன, சத்தியம் அவைகள் இருக்கிறபடியே, இருந்தபடியே, வரவிருக்கிறபடியான காரியங்களைப்பற்றியதே அறிவு.3 காலக்கோட்டில் நமது சிறு புள்ளியின் பார்வையை விரிவாக்கி, சத்தியம் முன்னும் பின்னும் பார்க்கிறது.
இயேசு சொன்னார், ”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”4 சத்தியம் நித்திய ஜீவனுக்கு நமக்கு வழிகாட்டுகிறது, அது நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் அவர் மூலமுமே வருகிறது. வேறு எந்த வழியுமில்லை.
நாம் எப்படி வாழ வேண்டுமென இயேசு கிறிஸ்து கற்பிக்கிறார், தமது பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலால் நமது பாவங்களிலிருந்து மன்னிப்பும், திரைக்கு அப்பால் அழியாமையும் கொடுக்கிறார். இது முற்றிலும் உண்மை.
நாம் ஐஸ்வரியவானோ, தரித்திரனோ, புகழ் பெற்றவனோ, அறியப்படாதவனோ, ஆடம்பரமானவரோ, எளிமையானவரோ என்பது பொருட்டல்ல என இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். மாறாக, நமது அநித்திய தேடல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை பெலப்படுத்தி, தீமைக்கு மேலாக நன்மையைத் தெரிந்து கொள்வதும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதும் ஆகும். நாம் விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்தின் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடும்போது, தேவனின் சத்தியங்கள் கண்டுபிடிப்புகளைத் தாண்டி செல்கிறது.
நித்திய சத்தியங்களுக்கு எதிரராக, சத்தியத்திலிருந்து தேவனின் பிள்ளைகளின் கவனத்தை மாற்ற எப்போதுமே போலிகள் இருந்திருக்கின்றன. சத்துருவின் வாக்குவாதங்கள் எப்போதும் ஒன்றே. 2000 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டவைகளைக் கேளுங்கள்.
”[நீங்கள்] பார்க்காதவற்ரை [நீங்கள்] அறியமுடியாது. … [ஒருவன் எது செய்தாலும்] குற்றமில்லை.”
“[தேவன் உங்களை ஆசீர்வதிக்கவில்லை,] [ஒவ்வொருவருவனும்] தன் புத்திக்குத் தக்கதாக ஜெயம் கொள்ளுகிறான்.“5
“கிறிஸ்து … என்றொரு ஜீவி தேவ குமாரனாக இருக்க காரணமில்லை.“6
“உங்கள் பிதாக்களுடைய பாரம்பரியத்தினிமித்தமே இத்தகைய மனப்பிரமை உண்டாகிறது“7 இன்றிருப்பதைப் போலவே தோன்றவில்லையா?
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தோடு, கற்கவும் முக்கிய ஆவிக்குரிய சததியங்களை அறியவும் தேவன் நமக்கு வழியைக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த வேதங்கள் மூலமும், நமது தனிப்பட்ட ஜெபம், நமது சொந்த அனுபவங்கள், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் ஆலோசனைகள், மற்றும் “சகலவற்றின் சத்தியத்தையும் அறிய“ உதவக்கூடிய பரிசுத்த ஆவியானவரின் மூலம், நமக்கு தேவன் வழியைக் கொடுத்திருக்கிறார்.8
சத்தியம் ஆவிக்குரிய விதமாக பிரித்தறியப்படுகிறது.
ஆவிக்குரிய விதமாக நாம் தேடுமே்போது, நாம் தேவனின் காரியங்களை அறியலாம். பவுல் சொன்னான், “தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். ... ஏனெனில் அவை ஆவிக்குரிய விதமாக பிரித்தறியப் படுகிறது.“9
மைக்கல் மர்பியின் இந்த ஓவியத்தைப் பாருங்கள். இந்த கோணத்தில் இது மனிதக் கண்ணின் கலை வடிவம் என நீங்கள் நம்ப மாட்டீர்கள். எனினும் வேறு கோணத்திலிருந்து இப்புள்ளிகளை நீங்கள் பார்த்தால், நீங்கள் ஒரு கலை வடிவத்தின் அழகைப் பார்ப்பீர்கள்.
அதுபோல தேவனின் ஆவிக்குரிய சத்தியங்களை விசுவாசக் கண்ணின் பார்வையில் நாம் பார்க்கிறோம். பவுல் சொன்னான், “ஜென்ம சுபாமுடைய மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.“ 10
வேதங்கள் நமது ஜெபங்கள், நமது அனுபவங்கள், தற்காலத் தீர்க்கதரிசிகள், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வரம் நமது உலக பயணத்துக்கு சத்தியத்தைப்பற்றிய தெளிவான ஆவிக்குரிய பார்வையை கொண்டு வருகிறது.
விசுவாசக் கண் மூலம் பிரகடனம்
விசுவாசக் கண் ஊடாக குடும்பத்தைப் பற்றிய பிரகடனத்தைப் பார்ப்போமாக.
தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி “குடும்பம் ஒரு பிரகடனத்தை“ 24 வருடங்களுக்கு முன்னர் இந்த வாசகத்துடன் அறிமுகம் செய்தார்: “உண்மை என அதிகமான ஏமாற்று நடக்கும்போது, தரங்கள் மற்றும் மதிப்புகளைப்பற்றி அதிக ஏமாற்றுதலுடன், உலகத்தின் மெதுவான கறைகளுடன் அதிக வசீகரமும் மயக்குதலும் தாக்கும்போது, நாங்கள் உங்களை எச்சரிக்க வேண்டும் என உணர்ந்தோம்.“ 11
பிரகடனம் தொடங்குகிறது: “எல்லா மனிதர்களும், ஆண்களும் பெண்களும், தேவ சாயலில் படைக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரன் அல்லது குமாரத்தி, அப்படியானால் ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு.“
இவை நித்திய சத்தியங்கள். நீங்களும் நானும் இயற்கையின் விபத்து அல்ல.
இந்த வார்த்தைகளை நான் விரும்புகிறேன். “அநித்தியத்துக்கு முந்தய ஜீவியத்தில் ஆவிக் குமாரர்களும் குமாரத்திகளும் தேவனை தங்கள் நித்திய பிதா என அறிந்து ஆராதித்து அவரது திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.“12
நமது பிறப்புக்கு முன்பே நாம் வாழ்ந்தோம். நமது தனிப்பட்ட அடையாளம் நம்மீது என்றென்றைக்குமாக முத்திரையிடப்பட்டுள்ளது. நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத வழிகளில் அங்கு நமது ஆவிக்குரிய வளர்ச்சி இங்கு நாம் யார் என்பதில் செல்வாக்கு பெறுகிறது.13 நாம் தேவனின் திட்டத்தை ஏற்றுக் கொண்டோம். பூமியில் கஷ்டங்களையும், வலியையும், துக்கத்தையும், நாம் அனுபவிப்போம் என நாம் அறிவோம்.14 இரட்சகர் வருவார் எனவும் நாம் அறிவோம், நாம் தகுதியானவர்கள் என நிரூபித்தால், உயிர்த்தெழுதலில் நாம் எழுந்து, என்றென்றைக்கும் நமது தலை மீது மகிமை வைக்கப்படும் எனவும் அறிவோம்.15
பிரகடனம் நேரடியானது: “அநித்திய வாழ்க்கை தெய்வீகமாய் சிருஷ்டிக்கப்பட வேண்டிய வழியை நாங்கள் பிரகடனம் செய்கிறோம். தேவனின் நித்திய திட்டத்தில் ஜீவனின் தூய்மையையும் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதி செய்கிறோம்.“
நமது பிதாவின் திட்டம் கணவனையும் மனைவியையும் உலகத்தில் பிள்ளைகளைக் கொண்டுவர அனுமதிக்கிறது, பிறக்காதவர்களின் பாதுகாப்புக்காக பேச நம்மைப் பொறுப்பாக்குகிறது.
பிரகடனத்தின் கொள்கைகள் அழகாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
பிரகடனத்தில் நாம் ஏற்றுக் கொள்பவைகளை தெரிந்தெடுத்தால், இங்கும் இப்போதும் நமது அனுபவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது நித்திய பார்வையை மறைக்கிறோம். விசுவாசக் கண் முலமாக பிரகடனத்தை ஜெபத்துடன் சிந்திக்கும்போது, தன் பிள்ளைகளுக்கு பிதாவின் திட்டத்தின் கொள்கைகளை அழகாக பொருத்தி ஒன்றுக்கொன்று ஆதரித்து வெளிப்படுத்தியதை நன்கு புரிந்து கொள்கிறோம்.16
சத்தியத்தின் முக்கிய கொள்கைகள் மீது அவரது சித்தத்தை கர்த்தரின் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் பிரகடனம் செய்யும்போது, சிலருக்கு கேள்விகள் இருக்கும்போது நாம் உண்மையாகவே ஆச்சரியப்படமாட்டோமா? நிச்சயம், சிலர் உடனே தீர்க்கதரிசிகளின் குரல்களை மறுக்கின்றனர்,17 ஆனால் பிறர் தங்கள் பொறுமையுடனும் விசுவாசக் கண்ணோடும் தீர்க்க வேண்டிய கேள்விகளான நேர்மையான கேள்விகளை ஜெபத்துடன் சிந்திக்கிறார்கள்-- பிரகடனம் வேறொரு நூற்றாண்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், இன்னும் கேள்விகள் இருந்திருக்கும், இன்றைய கேள்விகளைவிட வித்தியாசமான கேள்விகள். தீர்க்கதரிசிகளின் ஒரு நோக்கம் நியாயமான கேள்விகளுக்குப் பதிலலிக்க நமக்கு உதவுவதே.18
சபைத் தலைவராகுவதற்கு முன்பே தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “தீர்க்கதரிசிகள் முன்கூட்டியே பார்க்கிறார்கள். நமது பாதையில் சத்துரு வைத்துள்ள அல்லது வைக்கப் போகிற துன்புறுத்தும் ஆபத்துக்களை அவர்கள் பார்க்கிறார்கள். கீழ்ப்படியும் நோக்கத்துடன் காத்திருக்கிறவர்களின் மகத்தான சாத்தியங்களையும் சிலாக்கியங்களையும் அவர்கள் முன்கூட்டியே பார்க்கிறார்கள். 19
பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் குழுமத்தின் ஒருமித்த குரலின் சத்தியம் மற்றும் ஆவிக்குரிய வல்லமையைப்பற்றி நான் சாட்சியளிக்கிறேன்.
உலகம் விலகிச் செல்கிறது.
என் வாழ்நாளில், பிரகடனத்தில் போதிக்கப்பட்டுள்ள அநேக கொள்கைகளைப்பற்றி உலகத்தின் நம்பிக்கைகளில் நாம் அதிகமான மாற்றங்களைப் பார்த்திருக்கிறோம். என் பதின் பருவம் மற்றும் திருமணமான தொடக்க வருடங்களில் கற்புடமை நியாயப்பிரமாணம் என நாம் அழைக்கிற கரத்தரின் தரமாகிய, சட்டபூர்வமாக திருமணம் செய்த ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே பாலின உறவுகள் நடைபெற வேண்டும் என்பதிலிருந்து உலகத்தில் அநேகர் விலகியிருக்கின்றனர். எனது 20, 30 வயதுகளில் அநேகர் கருக்கலைப்பு அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், பிறக்காத பிள்ளைகளின் பரிசுத்த பாதுகாப்பிலிருந்து விலகியிருக்கின்றனர். அண்மை ஆண்டுகளில், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே, திருமணம் ஒரு பரிசுத்த பிணைப்பு என்ற தேவனின் நியாயப்பிரமாணத்திலிருந்து அநேகர் விலகியிருக்கின்றனர்.20
கர்த்தர் அமைத்திருக்கிற எல்லைகளுக்கு வெளியே அநேகர் விலகுவதைக் கவனிப்பது, அன்று கப்பர்நகூமில் இரட்சகர் தன் தெய்வீகத்தை அறிவித்தபோது, சோகமடைந்து “அவரது சீஷர்களில் அநேகர் , அவரோடு அதற்குமேல் விலகிச் சென்றனர்,“ என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
பின்பு, இரட்சகர் பன்னிருவரைக் கேட்டார், “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?“
பேதுரு பதிலளித்தான்:
“ஆண்டவரே யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.“21
பிரகடனத்துக்குள்ளே அனைவரும் பொருந்துவதில்லை.
தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் அநேக இளைஞர்களும் பெரியவர்களும் இருக்கின்றனர். இருப்பினும் அவர்களது தற்போதைய அனுபவம் குடும்ப பிரகடனத்துக்கு உள்ளே சரியாக பொருந்தவில்லை. விவாகரத்தால் நடுங்கிப்போன அவர்களது வாழ்க்கை, கற்புடமை நியாயப்பிரமாணத்தை கேலிக்குள்ளாக்கும் இளைஞர்களின் நண்பர்கள், ஒரு வாழ்க்கைத் துணையின் விசுவாசமின்மையால் ஆழமாகக் காயம்பட்ட ஆண்களும் பெண்களும், பிள்ளை பெற முடியாத கணவர்களும் மனைவிகளும், பல காரணங்களுக்காக திருமணம் செய்ய முடியாத ஆண்களும் பெண்களும், இளைஞரும், வயதானவர்களும் அநேகர் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 20 வயதான ஒரு நண்பர், நான் அவரை மிகவும் மதிக்கிற அவர், ஒரே பாலின கவர்ச்சியால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் ஆலய உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருக்கிற, தன் படைப்பு மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்தி, சபையிலும் சமூகத்திலும் நன்கு சேவை செய்துள்ளார். அவர் அண்மையில் என்னிடம் சொன்னார், “நாம் வாழ்கிற உலகில் கற்புடமை நியாயப்பிரமாணத்தை காத்துக்கொள்ளாத சூழ்நிலையிலுள்ளவர்களைக் குறித்து நான் இரக்கப்படுகிறேன். ‘இந்த உலகத்தாராக இருக்காதீர்கள்‘ என கிறிஸ்து சொல்லவில்லையா? தேவனின் தரங்கள் உலகத்தின் தரங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது என்பது தெளிவு.“
தேவனின் நியாயப்பிரமாணங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லைகளுக்கு வெளியே மனுஷனின் சட்டங்கள் அடிக்கடி நகர்கின்றன. தேவனை மகிழ்விக்க விரும்புபவர்களுக்கு, விசுவாசம், பொறுமை மற்றும் அக்கறை கண்டிப்பாக தேவைப்படுகிறது.22
தன் மத்திய 40 வயதுகளில் இருக்கிற, தன் தொழில் திறமைகளில் தாலந்து பெற்ற, தன் தொகுதியில் துடிப்புடன் சேவை செய்கிற ஒரு தனிமையான சகோதரியைப்பற்றி என் மனைவியும் நானும் அறிவோம். அவளும் தேவனின் நியாயப்பிரமாணங்களைக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எழுதினாள்:
அவர் எழுதினார், “ஒரு கணவரோடும் பிள்ளைகளோடும் நான் ஆசீர்வதிக்கப்படும் நாளைப்பற்றி கனவு கண்டேன். நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், என் சூழ்நிலை மறக்கப்பட்ட தனிமையான உணர்வுகளைக் கொண்டு வருகிறது, ஆனால் என்னிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்தாமல், மாறாக என்னிடம் இருப்பனவற்றிலும், நான் எவ்வாறு பிறருக்கு உதவ முடியும் என்பதிலும் கவனம் செலுத்த முயல்கிறேன்.
என் குடும்பத்திலும், என் தொகுதியிலும், ஆலயத்திலும், சேவை செய்தது எனக்கு உதவியது. ஒரு பெரிய குடும்பத்தில் நானும் நாமெல்லாரும் ஒரு பாகமாக இருப்பதால், நான் மறக்கப்படவில்லை, தனிமையாக இல்லை.
புரிந்து கொள்கிற ஒருவர் இருக்கிறார்
சிலர் சொல்லுவார்கள், “என் சூழ்நிலையை நீங்கள் புரியவில்லை.“ நானில்லை, ஆனால் புரிந்துகொள்கிற ஒருவர் இருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன்.23 தோட்டத்திலும் சிலுவையிலும், செய்யப்பட்ட அவரது தியாகத்தினிமித்தம் உங்கள் பாரங்களை அறிந்த ஒருவர் இருக்கிறார். நாம் அவரைத் தேடி, அவரது கட்டளைகளைக் காத்துக்கொள்ளும்போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, தனியாக தாங்க அதிகமாயிருக்கிற பாரத்தை இறக்குவார். அவர் உங்களுக்கு நித்திய நண்பர்களையும், சேவை செய்யும் சந்தர்ப்பங்களையும், கொடுப்பார். மிக முக்கிமாக அவர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான ஆவியில் உங்களை நிரப்பி, உங்கள் மீது அவரது பரலோக அங்கீகாரத்தை பிரகாசிக்கப்பண்ணுவார். பரிசுத்த ஆவியின் தோழமையை அல்லது நித்திய ஆசீர்வாதங்களை மறுக்கிற எந்த தேர்வும், எந்த இணையானதும், நாம் கருத்தில் கொள்ள தகுதியானதல்ல.
இரட்சகர் ஜீவிக்கிறார் என நான் அறிவேன். முக்கியமான எல்லா சத்தியங்களின் ஆதாரமானவர் அவர், தன் கட்டளைகளைக் காத்துக் கொள்பவர்களுக்கு அவர் வாக்களித்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவார் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.