ஏராளமான ஆசீர்வாதங்கள்
தேவன் நமக்கு கொடுக்க விரும்புகிற ஆசீர்வாதங்களுக்கு, நமது பங்கிலும், இயேசு கிறிஸ்து மீது நமது விசுவாசத்தின் அடிப்படையில் செயல் தேவைப்படுகிறது.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நமது பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார்கள்.1 அந்த ஆசீர்வாதங்களைஎப்படி அடைவது மற்றும் பெறுவது என்ற கேள்வி நூற்றாண்டுகளாக இறையியல் வாக்குவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.2 ஆசீர்வாதங்கள் முற்றிலுமாக சம்பாதிக்கப்படுகின்றன, நமது பிரயாசங்கள் மூலமாக மட்டுமே நாம் அவற்றைப் பெறுகிறோம் என சிலர் தகறாறு செய்கிறார்கள். அவர் யாரை எப்படி ஆசீர்வதிப்பார் என தேவன் ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார் மற்றும் இந்த தீர்மானங்கள் மாற்றக்கூடியதல்ல என பிறர் வாக்குவாதம் செய்கின்றனர். இரண்டு நிலைகளும் அடிப்படையிலேயே தவறானவை. பரலோகத்திலிருந்து ஆசீர்வாதங்கள் தீவிரமாகச் சேர்க்கிற “நற்செயல் டோக்கன்களாலோ” அல்லது உதவியின்றி நாம் ஆசீர்வாத லாட்டரியை ஜெயிப்போமா என காத்திருப்பதாலோ பெறப்படுவதில்லை. இல்லை, சத்தியம் மிகவும் நுணுக்கமானது, ஆனால் அன்பான பரலோக பிதாவுக்கும், அவரது தகுதியுள்ள சந்ததியாகிய நமக்கும் இடையே உள்ள உறவுக்கு அதிகமான பொருத்தமுடையது. ஆசீர்வாதங்கள் ஒருபோதும் சம்பாதிக்கப்படுவதில்லை, ஆனால் தொடக்க மற்றும் தொடர்ந்த விசுவாசத்தால் தூண்டப்பட்ட செயல்கள் தேவையானவை என மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியம் வெளிப்படுத்துகிறது.3
நாம் எப்படி தேவனிடமிருந்து ஆசீர்வாதங்கள் பெறுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, பரலோக ஆசீர்வாதங்களை பெரிய விறகுக் குவியலுக்கு ஒப்பிடுவோம். சிறிது எரிபொருள் மத்தியில் குவிக்கப்பட்டு, மரப்பொடிகள் அதன்மேல் மூடப்பட்டு, இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அடுத்தபடியாக குச்சிகள், பின்பு சிறு தடிகள். இந்த மரக்குவியல் பல நாட்களுக்கு வெளிச்சமும், வெப்பமும் உற்பத்தி செய்யக்கூடிய அதிக அளவு எரிபொருள் கொண்டது. மரக்குவியலுக்கு அருகில் பாஸ்பரஸ் கொண்ட ஒரு தீக்குச்சி இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். 4
மரக்குவியலிலிருந்து சக்தி வெளிப்பட தீக்குச்சி உரசப்பட்டு, தீயைத் தூண்ட வேண்டும். அந்த தூண்டுதல் உடனே தீப்பிடித்து, பெரிய மரத்துண்டுகளை எரியச் செய்கிறது. இந்த அழுத்த செயல் தொடங்கிவிட்டால், விறகு முழுவதும் எரியும்வரை அல்லது நெருப்புக்கு ஆக்ஸிஜன் கிடைக்காதவரைை அது தொடர்ந்து எரிகிறது.
தீக்குச்சியை உரசுவதும், எரிபொருளில் தீ மூட்டுவதும், சிறு செயல்கள் ஆனால், அது விறகின் ஆற்றல் மிக்க சக்தி விடுவிக்கப்பட சாத்தியமாக்குகிறது.5 விறகுக் குவியலின் அளவு பொருட்டின்றி, தீக்குச்சி உரசப்படும்வரை ஒன்றும் நிகழ்வதில்லை. தீக்குச்சி உரசப்பட்டு எரிபொருள் மேல் வைக்கப்படவில்லையானால், தீக்குச்சியிலிருந்து விடுவிக்கப்படும் ஒளியும் வெப்பமும், மிகக் குறைவானது, ஆனால் விறகிலுள்ள அழுத்தப்பட்ட சக்தி விடுவிக்கப்படாமல் இருக்கிறது. எந்த நேரத்திலாவது ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையானால், அழுத்த செயல் நின்று விடுகிறது.
அதே விதத்தில் தேவன் நமக்கு கொடுக்க விரும்புகிற ஆசீர்வாதங்களுக்கு, நமது பங்கிலும் இயேசு கிறிஸ்துமீது நமது விசுவாசத்தின் அடிப்படையில் செயல் தேவைப்படுகிறது. இரட்சகரில் விசுவாசம் செயல் மற்றும் வல்லமையின் கொள்கையாகும்.6 முதலில் நாம் விசுவாசத்தில் செயல்படுகிறோம், பின்பு தேவ சித்தப்படியும் நேரப்படியும் வல்லமை வருகிறது. இந்த வரிசை முக்கியமானது.7 இறுதியாக நாம் பெறும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிடப்பட்டால் தேவைப்படுகிற செயல் மிகச் சிறியதே.8
வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு அவர்கள் சென்ற வழியில் பூர்வகால இஸ்ரவேலர் மத்தியில் கொடிய பறக்கும் சர்ப்பங்கள் வந்தபோது என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். விஷமிக்க சர்ப்பங்களின் கடி உயிருக்காபத்தானது. ஆனால் மோசேயால் செய்யப்பட்டு, கம்பத்தில் வைக்கப்பட்ட வெண்கல சர்ப்பத்தை பார்ப்பதால் கடிக்கப்பட்டவர் குணமாக முடியும்.9 ஒன்றைப் பார்க்க எவ்வளவு சக்தி தேவைப்படும். பார்த்தவர்கள் அனைவரும் பரலோக வல்லமையைப் பெற்று குணமாக்கப்பட்டார்கள். வெண்கல சர்ப்பத்தைப் பார்க்கத் தவறிய பிற கடிபட்ட இஸ்ரவேலர் மரித்தனர். ஒருவேளை பார்ப்பதற்கு அவர்களுக்கு விசுவாசம் இல்லை.10 இப்படிப்பட்ட எளிய செயல் வாக்களிக்கப்பட்ட குணமாகுதலை தூண்டலாம் என்பதை அவர்கள் ஒருவேளை நம்பவில்லை. அல்லது ஒருவேளை அவர்கள் வேண்டுமென்றே, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தேவனின் தீர்க்கதரிசியின் ஆலோசனையை மறுத்தார்கள்.11
தேவனிடமிருந்த ஆசீர்வாதங்களை தூண்டும் கொள்கை, நித்தியமானது. பூர்வகால இஸ்ரவேலர் போல ஆசீர்வதிக்கப்பட இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின்படி செயல்பட வேண்டும். தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார், “இந்த உலகத்தின் அஸ்திபாரத்துக்கு முன்பே, பரலோகத்தில் திரும்ப பெற முடியாத வகையில் ஒரு நியாயப்பிரமாணம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் மீது அனைத்து ஆசீர்வாதங்களும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது, தேவனிடமிருந்து நாம் எந்த ஆசீர்வாத்தையும் பெறும்போது அந்த முன்னறிவிக்கப்பட்ட அந்த நியாயப்பிரமாணத்தின்படிதான் பெறப்படுகிறது.“ 12 அப்படிச் சொன்னதனால், நீங்கள் ஒரு ஆசீர்வாதத்தை சம்பாதிப்பதில்லை, அந்த எண்ணம் தவறு, ஆனால் அதற்கு நீங்கள் தகுதி பெற வேண்டும். நமது இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் சிறப்புக்கள் மற்றும் கிருபையினால் மட்டும் வருகிறது.13 அவரது பாவநிவாரண பலியின் வல்லமையின் அர்த்தமாவது, அந்த விறகுக் குவியல் நித்தியமானது. நமது சிறு செயல்கள் அணுகுமுறை ஒத்த பார்வையில் பூஜ்யம்தான். அவை பூஜ்யமுமல்ல, அவை முக்கியமற்றவையுமல்ல, இருளில் கொளுத்தப்பட்ட தீக்குச்சி, பல மைல்களுக்கு காணப்படுகிறது. உண்மையாகவே தேவனின் வாக்குத்தத்தங்களை பற்றவைக்க விசுவாசத்தின் சிறு செயல்கள் தேவைப்படுவதால், அது பரலோகத்தில் பார்க்கப்பட முடியும்.14
தேவனிடமிருந்து விரும்பிய ஆசீர்வாதத்தைப் பெற உவமானமாக தீக்குச்சியை உரசி, அதன் பகுதியாக இருக்கிற பரலோக ஆற்றலை செயல் படவைத்து, விசுவாசத்தில் செயலாற்ற வேண்டும். உதாரணமாக, ஜெபத்தின் நோக்கங்களில் ஒன்று, தேவன் கொடுக்க சித்தமாயிருக்கிற ஆசீர்வாதங்களைப் பெறுவது, ஆனால், நாம் கேட்பதற்கு அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.15 ஆல்மா உதாரணமாக, இரக்கத்துக்காக கூக்குரலிட்டான், அவனது வேதனைகள் தீர்க்கப்பட்டன. அவன் இதற்கு மேலும் அவனது குமாரர்களின் நினைவால் அலைக்களிக்கப்படவில்லை. அவனது சந்தோஷம் அவனது வேதனையை மேற்கொண்டது, எல்லாமே அவன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் கூக்குரலிட்டதால்தான்.16 நமக்குத் தேவையான செயல்படும் சக்தி, கிறிஸ்துவில் போதுமான விசுவாசம் கொள்வதும், ஜெபத்தில் தேவனிடம் உருக்கமாக கேட்பதும், பதிலுக்காக அவரது சித்தத்தையும் நேரத்தையும் ஏற்றுக்கொள்வதுமே ஆகும்.
அடிக்கடி, ஆசீர்வாதங்களுக்கு தேவையான செயலாற்றும் சக்திக்கு, பார்த்தல் அல்லது கேட்டல் மட்டுமின்றி, தொடர்ந்த, மீண்டும் மீண்டும் விசுவாசம் நிரம்பிய செயல்கள் தேவைப்படுகின்றன. 19ம் நூற்றாண்டுக்கு மத்தியில், வட அமெரிக்காவில் தண்ணீர் வசதி குறைந்த அரிசோனாவைக் கண்டுபிடித்து, அங்கு தங்க ஒரு பிற்காலப் பரிசுத்தவான்கள் குழுவுக்கு பிரிகாம் யங் சொன்னார். அரிசோனாவுக்கு சென்றபிறகு அக்குழுவுக்கு தண்ணீர் கிடைக்க வில்லை, அவர்கள் அழிந்து போவோம் என நினைத்தனர். உதவிக்காக அவர்கள் தேவனிடம் கெஞ்சினர். உடனே, மழையும் பனியும் கொட்டி, அவர்கள் தங்கள் கலன்களை நிரப்ப அனுமதித்து, அவர்களது விலங்குகளுக்கும் கொடுத்தனர். நன்றியுடனும் புத்துணர்வு பெற்றும், தேவனின் நன்மையில் களிகூர்ந்து, சால்ட் லேக் சிட்டிக்குத் திரும்பினர். திரும்பிய பிறகு, தங்கள் பயணத்தைப்பற்றிய விவரத்தை பிரிகாம் யங்குக்கு கொடுத்தனர். அரிசோனா, மனிதர் தங்க முடியாதது என கூறினர்.
அறிக்கையைக் கேட்ட பிறகு, பிரிகாம் யங் அந்த அறையிலிருந்த ஒருவரிடம் பயணத்தைப்பற்றியும் அற்புதத்தைப்பற்றியும் தாம் என்ன நினைப்பதாக கேட்டார். அவர், டேனியல் டபிள்யூ. ஜோன்ஸ் திடமாகப் பதிலளித்தார், “நான் நிரப்பியிருப்பேன், தொடர்ந்திருப்பேன், மீண்டும் ஜெபித்திருப்பேன்”. பிரிகாம் யங் சகோதரர் ஜோன்ஸின் மீது கையை வைத்து, சொன்னார், “அரிசோனாவுக்கு அடுத்த பயணத்துக்கு இந்த மனிதன் தான் பொறுப்பேற்பார்.“17
நாம் நெருக்கப்பட்டு, மீண்டும் ஜெபித்து, ஆசீர்வாதங்கள் வந்த நேரங்களை நாம் நினைத்துப் பார்க்கலாம். மைக்கல் மற்றும் மரியன் ஹோம்ஸின் அனுபவங்கள் இந்த கொள்கைகளை விளக்குகின்றன. மைக்கலும் நானும் பகுதி எழுபதின்மராக ஒன்றாக சேவை செய்தோம். எங்கள் கூட்டத்தில் ஜெபம் செய்ய அவன் அழைக்கப்படும் பொழுதெல்லாம், அவனது ஆழமான ஆவிக்குரிய தன்மை ஏற்கனவே தெரிந்ததால், தேவனிடம் எப்படி பேசவெண்டுமென்று அவன் அறிந்திருந்தான் அவனுடைய ஜெபத்தைக் கேட்க நான் விரும்பினேன். அவர்களது திருமணத்திற்கு பின்பு மைக்கலும் மரியனும் ஜெபம் செய்வதும் அல்லது சபைக்கு வருவதோ இல்லை. மூன்று சிறிய குழந்தைகளுடனும் மற்றும் வெற்றிகரமான கட்டுமான நிறுவனத்துடனும் அவர்கள் சுறுசுறுப்பாயிருந்தார்கள் மைக்கல் அவன் ஓரு சமய ஈடுபாடுள்ள மனுஷனாயிருந்தான் என்பதை உணரவில்லை 1963ல் ஓரு மாலையில், அவர்களது ஆயர் அவர்களது வீட்டிற்கு வந்து ஜெபம் செய்ய ஆரம்பிக்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.
ஆயர் சென்ற பின்னர், மைக்கலும் மரியனும் ஜெபிக்க முயற்சி செய்ய தீர்மானித்தனர். படுக்கைக்கு போகுமுன்பு, அவர்களது படுக்கையருகில் அவர்கள் முழங்கால்படியிட்டனர், அசௌகர்யமான முறையில், மைக்கல் ஆரம்பித்தான். சில மோசமான வார்த்தைகளுடனான ஜெபத்திற்கு பிறகு, மைக்கல் திடீரென்று நிறுத்தி விட்டு சொன்னான், “மரியன், என்னால் இதைச் செய்ய முடியாது.“ அவன் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன், மரியன் அவனது கையைப்பற்றி, திரும்ப முழங்கால்படியிட அவனை இழுத்து, சொன்னான், மைக், இதைச் செய்ய உன்னால் முடியும். திரும்ப முயற்சி செய் இந்த ஊக்குவித்தலினால், மைக்கல் ஒரு சிறிய ஜெபத்தை முடித்தான்.
அந்த வீட்டில் ஒழுங்காக ஜெபம் ஆரம்பிக்கப்பட்டது சபைக்கு வருமாறு அண்டை வீட்டாரின் அழைப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் அவர்கள் சபைக்குள் சென்று ஆரம்ப பாடலைக் கேட்ட பொழுது, இது உண்மை என ஆவி அவர்களுக்கு கிசுகிசுத்தது பின்னர் பார்க்கப்படாமலும் கேட்கப்படாமலும், கூடுமிடத்திலிருந்து குப்பையை அள்ள மைக்கல் உதவினான். அவன் அதைச் செய்தபோது இது என்னுடைய வீடு என்ற ஒரு தெளிவான உணர்வினை அவன் உணர்ந்தான்
மைக்கலும் மரியனும் சபை அழைப்புக்களை ஏற்றுக்கொண்டு தொகுதியலும், பிணையத்திலும் சேவை செய்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவருடனும் மற்றும் அவர்கள் மூன்று குழந்தைகளுடனும் அவர்கள் முத்திரிக்கப்பட்டார்கள். அநேக குழந்தைகள் பின் வந்தனர். மொத்தம் பன்னிரண்டானது. ஹோம்ஸ்கள் ஊழியத் தலைவராகவும், தோழியாகவும் இருமுறை சேவை செய்தனர்.
முதல் ஒழுங்கற்ற ஜெபம், சிறியது, ஆனால் விசுவாசமிக்க செயல் பரலோக ஆசீர்வாதத்தை தூண்டியது. சபைக்கு வந்தும், சேவை செய்தும், ஹோம்ஸ்கள் விசுவாச தீக்கு இரையளித்தனர். பல ஆண்டுகளாக அவர்களது அர்ப்பணிப்புள்ள சீஷத்துவம் இன்றளவும் உணர்த்துதலுள்ள கர்ஜிக்கும் நிகழ்வுக்கு வழிநடத்தியது.
இருப்பினும் தீக்கு, விறகு தன் முழு திறமையை வெளியிட தொடர் ஆக்ஸிஜன் விநியோகம் தேவை. மைக்கல் மற்றும் மரியன் ஹோம்ஸ் செய்து காட்டியபடி, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய கிறிஸ்துவில் விசுவாசத்துக்கு, தொடர் செயல்பாடு தேவை. உடன்படிக்கையின் பாதையில் நடக்கும் திறமைக்கு சிறிய செயல்கள் சக்தியளிக்கின்றன, தேவன் கொடுக்கக்கூடிய பெரிய ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்துகின்றன. ஆனால் நாம் நமது கால்களை நகர்த்திக் கொண்டிருந்தால்தான், ஆக்ஸிஜன் கிடைக்கிறது. சில சமயங்களில் உணவை எங்கு தேடுவது என வெளிப்படுத்தல் வருவதற்கு முன் நமக்கு வில்லும் அம்பும் தேவை. 18 சில சமயங்களில் கப்பல் எப்படி கட்டுவது என வெளிப்படுத்தல் வருமுன் நாம் கருவிகள் செய்ய வேண்டும்.19 சில சமயங்களில் கர்த்தருடைய தீர்க்கரிசியின் வழிநடத்துதலின் கீழ் நாம் குறையாத எண்ணெயும், மாவும் பெற சிறிது எண்ணெயிலிருந்தும் மாவிலிருந்தும் ஒரு சிறு அப்பம் செய்ய வேண்டும்.20 சில சமயங்களில், “நாம் அமைதியாக இருந்து [தேவன் இருக்கிறா]“ என அறிய வேண்டும். அவரது நேரத்தை நம்ப வேண்டும்.21
நீங்கள் தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் பெறும்போது, அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவதை ஆளுமை செய்கிற ஒரு நித்திய நியாயப்பிரமாணத்துக்கு நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்கள். 22 ஆனால் அந்த “திரும்ப பெறமுடியாதபடி விதிக்கப்பட்டுள்ள“ நியாயப் பிரமாணம் நேரத்தை அறியாது, அதாவது ஆசீர்வாதங்கள் தேவனின் கால அட்டவணைப்படி வருகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினான், பூர்வகால தீர்க்கதரிசிகள் கூட தங்கள் பரலோக வீட்டைத் தேடி, 24 “வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல் தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியில் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.“24 விரும்பிய ஆசீர்வாதம் தேவனிடமிருந்து பெறப்படாவிட்டாலும், மேலும் என்ன செய்ய முடியும் என ஆச்சரியப்பட்டு, நீங்கள் பைத்தியமாகத் தேவையில்லை, மாறாக, “[உங்கள்] வல்லமைக்குள் முடிகிற காரியங்களை உற்சாகமாகச் செய்யுங்கள், பின்பு [தேவனின்] வெளிப்படுத்தப்பட்ட கரத்தை பார்க்க மிகுந்த உறுதியுடன் அசையாமல் நில்லுங்கள்.“25 மிகுந்த தைரியமிக்க தேவ பிள்ளைகளுக்குக் கூட சில ஆசீர்வாதங்கள் பிற்காலத்துக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.26
ஆறு மாதங்களுக்கு முன்பு, கோட்பாட்டைக் கற்கவும், விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், தனிநபர்களையும் குடும்பங்களையும் திடப்படுத்தவும், வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தலைவர் ரசல் எம். நெல்சன், இந்த மாற்றங்கள், நாம் ஆவிக்குரிய விதமாக தரித்திருக்கவும், நமது சுவிசேஷ சந்தோஷத்தை அதிகரிக்கவும், பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்தவும் உதவ முடியும் என சொன்னார்.27 ஆனால் இந்த ஆசீர்வாதங்களைக் கேட்க வேண்டியது நம்மைப் பொருத்தது. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமான நம் ஒவ்வொருவருக்கும், என்னைப் பின்பற்றி வாருங்களை, வேதங்கள் மற்றும் பிறவற்றுடன் என்னைப் பின்பற்றி வாருங்கள் திறந்து படிக்க நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.28 அவற்றை நமது குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் கலந்துரையாடி, ஒரு உருவகமான தீயை மூட்ட நமது ஓய்வுநாளை அமைக்க வேண்டும். அல்லது நமது வீடுகளிலுள்ள குவியலில் அவற்றுக்குள் உள்ள சாத்தியமான சக்தி இருக்குமாறு அந்த ஆதாரங்களை விட்டு விடலாம்.
தேவனிடமிருந்து குறிப்பிட்ட ஆசீர்வாதங்களைப் பெற விசுவாசத்தோடு பரலோக வல்லமையை தூண்ட நான் உங்களை அழைக்கிறேன். தீக்குச்சியை உரசவும், தீயை மூட்டவும், விசுவாசத்தைப் பிரயோகியுங்கள். கர்த்தருக்காக நீங்கள் பொறுமையாக காத்திருக்கும்போது, தேவையான ஆக்ஸிஜனை கொடுங்கள். நீதிமொழிகளில் விவரிக்கப்பட்டுள்ள “உண்மையுள்ள மனுஷன்“ போல,“ பரிபூரண ஆசீர்வாதங்களுக்காக“ 29 உங்களையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தி, பாதை காட்ட வேண்டும் என இந்த அழைப்புகளுடன் நான் ஜெபிக்கிறேன். நமது பரலோக பிதாவும் அவரது நேச குமாரனான இயேசு கிறிஸ்துவும், நமது நலம் குறித்து அக்கறை கொண்டுள்ளனர், நம்மை ஆசீர்வதிக்க மகிழ்கின்றனர், என நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.