![](https://www.churchofjesuschrist.org/imgs/https%3A%2F%2Fassets.churchofjesuschrist.org%2Fc8%2F26%2Fc82657e4273189cf49a8fef60f6ae2dac76122b4%2Fc82657e4273189cf49a8fef60f6ae2dac76122b4.jpeg/full/!250,/0/default)
அற்பமும் சொற்பமுமானவைகள்
முழுமையாகவும் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்ளும் பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் காரியங்கள் பெரிய காரியங்களைக் கொண்டு வரும் என நினைவில் கொள்ள வேண்டும்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்களைப் போலவே இப்போது ஒன்றாக செய்திகளாலும், இசையாலும், உணர்ச்சிகளாலும் ஆழமாக தொடப்பட்டும், தெளிவுபெற்றும், உணர்த்தப்பட்டும் இருக்கிறேன். கர்த்தரின் கரங்களில் கருவிகளாகவும் இந்த நேரத்தில் நமக்கு ஒன்றாக பெலப்படுத்தும் தாக்கத்தைக் கொடுத்திருக்கிற நமது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும், நன்றி தெரிவித்து உங்களிடம் நிச்சயமாகப் பேசப்போகிறேன்.
ஈஸ்டர் ஞாயிறில் இந்த பார்வையாளர்கள் மத்தியில் பேச நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாட பிற கிறிஸ்தவர்களுடன் இன்று நாம் சேர்ந்திருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களுக்கு, நமது விசுவாசத்தின் ஒரு தூணாயிருக்கிறது.
ஏனெனில் வேதாகமத்திலும் மார்மன் புஸ்தகத்திலும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய விவரங்களை நாம் நம்புகிறோம், எப்போதுமே இந்த பூமியின்மேல் வாழ்ந்த அனைத்து மனுஷர்களுக்கும் இதைப்போன்ற உயிர்த்தெழுதல் வருமென்றுள்ள எண்ணிலடங்கா வேதப் போதனைகளையும் நாம் நம்புகிறோம். அப்போஸ்தலனாகிய பேதுரு அழைக்கிற “ஜீவ நம்பிக்கையை” (1 பேதுரு 1:3) உயிர்த்தெழுதல் நமக்குக் கொடுக்கிறது. மரணம் நமது அடையாளத்தின் முடிவல்ல, ஆனால் நமது பரலோக பிதாவின் பிள்ளைகளுக்காக அவரது இரக்கமுள்ள திட்டத்தில் ஒரு அவசியமான படி என்ற நமது திடநம்பிக்கையே அந்த ஜீவனுள்ள நம்பிக்கை. இறப்பிலிருந்து சாகாமையின் ஒரு பெயர்ச்சிக்காக அந்த திட்டம் அழைக்கிறது. அந்த பெயர்ச்சியின் மையம் மரணத்தின் சூரிய அஸ்தமனமாகவும், இந்த ஈஸ்டர் ஞாயிறில் நாம் கொண்டாடுகிற நமது கர்த்தரும் இரட்சகருமானவரின் உயிர்த்தெழுதலால் சாத்தியமாக்கின மகிமையான காலையுமாயிருக்கிறது
எலிசா ஆர். ஸ்னோவால் எழுதப்பட்ட ஒரு மகத்தான பாடலில் நாம் பாடுகிறோம்:
எவ்வளவு மகத்தானது, எவ்வளவு மகிமையானது, எவ்வளவு நிறைவானது!
மீட்பின் கம்பீரமான வடிவமைப்பு
நீதியும், அன்பும், இரக்கமும் சந்திக்கிற
தெய்வீக இசைவோடு. 1
அந்த தெய்வீக வடிவமைப்புக்கும் இசைவுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் போதிக்கவும் ஊக்குவிக்கவும் கூட்டங்களில், இந்த மாநாட்டையும் சேர்த்து, நாம் கூடுகிறோம்.
இன்று காலை, “அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன” (ஆல்மா 37:6) என்று மார்மன் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஆல்மாவின் மகனுக்கு அவனது போதனைகளை எனது உரையாக பயன்படுத்த நான் நினைத்தேன்.
இயேசு கிறிஸ்துவின சுவிசேஷத்தில், அநேக அற்பமும் சொற்பமுமானவைகள் நமக்குப் போதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்திலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் சொற்பமாகத் தோன்றுகிற இந்த காரியங்கள் பெரிய காரியங்களைக் கொண்டுவருகின்றன என நாம் நினைவுபடுத்தவேண்டும். இந்தப் பொருளைப்பற்றி பொது அதிகாரிகளாலும் பிற ஆசிரியர்களாலும் அநேக உரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொருள் மிகவும் முக்கியமானதால் மீண்டும் இதைப்பற்றி பேச நான் நினைத்தேன்.
ஒரு காலை நடைப்பயிற்சியில் நான் கண்ட ஒன்றால் அற்பமும் சொற்பமுமானவைகளின் ஆற்றலை நான் நினைவுபடுத்தப்பட்டேன். இதுதான் நான் எடுத்த படம். கெட்டியான பெலமான கான்கிரீட் பக்கநடைபாதையில் கீறல் விழுந்திருக்கிறது. ஒரு பெரிய சக்திவாய்ந்த அழுத்தத்தால் இது நடந்ததா? இல்லை, பக்கத்திலுள்ள மரத்திலிருந்து வளருகிற வேர்களில் ஒன்று மிக நிதானமாக, சிறியதாக வளருவது இந்த கீறலுக்கு காரணமாகிறது. மற்றொரு தெருவில் நான் கண்ட இதைப்போன்ற மற்றொரு மாதிரி இங்கே.
இந்த கடினமான கான்கிரீட் பக்க நடைபாதையை கீறல் விழ வைத்த அழுத்த சக்தியை ஒரு நாள் அல்லது ஒரு மாத அடிப்படையில் அளவெடுப்பது மிகச் சிறியதாயிருக்கலாம் ஆனால் காலப்போக்கில் இதன் பாதிப்பு மிகச் சக்திவாய்ந்ததாயிருக்கும்.
ஆகவே, வேதங்களிலும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளாலும் நமக்குப் போதிக்கப்பட்ட அற்பமும் சொற்பமுமானவைகள் காலப்போக்கில் சக்திவாய்ந்த பாதிப்பாயிருக்கும். நமது அன்றாட வாழ்வில் பிரயோகப்படுத்த நாம் போதிக்கப்பட்ட வேதப் படிப்பை கருத்தில் கொள்ளவும். அல்லது, உண்மையுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு வழக்கமான பயிற்சியாயிருக்கிற தனிப்பட்ட ஜெபங்கள் மற்றும் முழங்கால்படியிடும் குடும்ப ஜெபங்களைக் கருத்தில் கொள்ளவும். வாலிபர்களுக்கான வேதக் கல்வி அல்லது இளம் வயதுவந்தோருக்கான வேதப் பாட வகுப்புகளைக் கருத்தில் கொள்ளவும். இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றும் அற்பமும் சொற்பமுமானவைகளாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அவைகள் சக்திவாய்ந்த ஆவிக்குரிய மேன்மையையும் வளர்ச்சியையும் விளைவிக்கும். தலைவர் ஐரிங் விளக்கியிருக்கிறபடி, இந்த அற்பமும் சொற்பமுமானவைகள் ஒவ்வொன்றும், சத்தியத்திற்கு நம்மை விவரம் புரியவைத்து, வழிநடத்துகிற சாட்சியாளரான பரிசுத்த ஆவியானவரின் தோழமையை அழைக்கிறது.
சிறிய மீறுதல்களாகத் தோன்றுகிறதானாலும் தொடர்ந்து மனந்திரும்புதலின் செயல், ஆவிக்குரிய மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு ஆதாரம். நாம் எவ்வாறு குறைவுள்ளவர்களானோம், எவ்வாறு சிறப்பாய் செய்யமுடியும் என பார்க்க, நம்முடைய சொந்த உணர்த்தப்பட்ட சுய மதிப்பிடுதல் நமக்கு உதவுகிறது. அத்தகைய மனந்திரும்புதல் நமது வாராந்தர திருவிருந்தில் பங்கேற்குதலில் தொடரவேண்டும். இந்த மனந்திரும்புதலின் நடைமுறையில் கருத்தில் கொள்ளவேண்டிய சில காரியங்கள் “நான் ஏதாவது நன்மை செய்திருக்கிறேனா?” (“Have I Done Any Good?”) என்ற பாடலில் விளக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய உலகில் நான் ஏதாவது நன்மை செய்திருக்கிறேனா?
வறியோர் யாருக்காவது நான் உதவியிருக்கிறேனா?
துக்கத்திலிருப்பவரை நான் சந்தோஷப்படுத்தியிருக்கிறேனா, யாரையாவது மகிழ்வித்திருக்கிறேனா?
இல்லையென்றால் உண்மையில் நான் தவறிவிட்டேன்
பகிர்ந்துகொள்ள நான் விரும்புவதால்
இன்று யாராவது ஒருவரின் பாரம் இலகுவாக்கப்பட்டதா?
வியாதியஸ்தரும் தளர்ந்தவரும் அவர்கள் வழியில் உதவப்பட்டார்களா?
என்னுடைய உதவி தேவைப்பட்டபோது நான் அங்கிருந்தேனா? 2
நிச்சயமாக இவைகள் அற்பமான காரியங்கள். ஆனால், “தேவனாகிய கர்த்தர், தம்முடைய பெரிதும், நித்தியமுமான நோக்கங்களை நிறைவேற்ற அநேக வழிகளைக் கையாளுகிறார். . . . அநேக ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிறார்” (ஆல்மா 37:7) என ஆல்மா அவனது மகன் ஏலமனுக்குப் போதித்த அவைகள் நிச்சயமாக நல்ல எடுத்துக்காட்டுகள்.
“அவரில் நாம் விசுவாசம் வைத்து அற்பமும் சொற்பமுமானவைகளில் அவரது ஆலோசனையைப் பின்பற்றும்போது கர்த்தர் பின்பற்றுகிற மாதிரி, அன்றாட சிறிய அற்புதங்களில், காலப்போக்கில் அற்புதமான செயல்களில் நம்மை அவர் ஆசீர்வதிக்கிறார் என ஆல்மா அவனுடைய மகனுக்கு உறுதியளிக்கிறான்” 3 என்ற ஆல்மாவின் போதனைகளின் இந்த உணர்த்துதலான விளக்கத்தை ஹவாய் பிரிங்காம் பல்கழைக்கழகத்தில் பார்வையாளர்களுக்கு தலைவர் ல்டீவென் சி. வீல்ரைட் வழங்கினார்.
“பெருந்தன்மை என எப்போதுமே உலகம் சொல்லுகிற காரியங்களோடு ஒப்பிடும்போது, மற்றவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறையான பாதிப்பை உண்டாக்குகிற இவை எப்போதுமே பொது வேலைகள்” 4 என தலைவர் ஹோவார்ட் டபுள்யு. ஹன்டர் போதித்தார்.
இந்த இதே கொள்கையை மிஞ்சுகிற உலகரீதியில் இன்டியானாவின் முந்திய செனட்டர் டான் கோஸ்டிடமிருந்து ஒரு போதனை வருகிறது. “நூற்றக்கணக்கான, ஆயிரக்கணக்கான அரை மனதுடன், சுயவிளக்கத்தோடு, முக்கியமற்றதாகத் தோன்றுகிற தனியாக எடுக்கப்படும் தீர்மானங்களே ஒருவரின் அல்லது ஒரு தேசத்தின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு தனித்துவமான தீர்மானத்திற்கான ஒரே ஆயத்தம்.” 5
அந்த முக்கியமற்றதாகத் தோன்றுகிற தனிப்பட்ட தீர்மானங்களில், நாம் நம் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம், தொலைக்காட்சியில், இணையதளத்தில் நாம் எதைப் பார்க்கிறோம், நாம் எதைப் படிக்கிறோம், வேலையில் வீட்டில் நம்மை சூழ்ந்திருக்கிற, எந்த கலை, இசை கேளிக்கையை நாம் நாடுகிறோம், நேர்மையாயும் உண்மையாயுமிருக்க நமது பொறுப்புகளை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறோம் என்பவைகளும் சேர்கின்றன. நமது தனிப்பட்ட ஈடுபாடுகளில் பொதுவாகவும் சந்தோஷமாகவுமிருத்தல் மற்றொரு அற்பமாகத் தோன்றுகிற காரியம்.
சீராகவும் தொடர்ந்தும் அவைகள் பழக்கப்படுத்தப்படாதவரை இந்த விரும்பத்தக்க அற்பமும் சொற்பமுமானவைகள் பெரிய காரியங்களுக்கு நம்மை ஒருபோதும் உயர்த்தாது. “அற்பமும் சொற்பமுமான சூழ்நிலைகளில் நமது வாழ்க்கை உருவாக்கப்பட்டு அவை ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு, ஆண் அல்லது பெண்ணின் முழு வாழ்க்கையும் கூட்டப்படும்போது அவை மிகப்பெரிய ஏற்பாடாகும்” 6 என தலைவர் பிரிகாம் யங் சொன்னதாக அறிக்கையளிக்கப்பட்டது.
நாம் தொடர்ந்து தடுக்காவிட்டால், நம்மைக் கீழே கொண்டுபோகிற ஊடக செல்வாக்குகளாலும், கலாச்சார சீரழிவுகளாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம். நமது நித்திய இலக்கை நோக்கி மேலே செல்ல நாம் தொடர்ந்து துடுப்பைப் போடவேண்டும். ஒன்றாகத் துடுப்புப்போடுகிற தண்டுவலிக்கும் குழுவில் அங்கமாருந்தால் இது உதவுகிறது. இந்த மாதிரியை இன்னும் விரிவுபடுத்த, கலாச்சார சுழற்சி அதிகமாயிருந்து, நாம் துடுப்பு போடுவதை நிறுத்தினால், முன்னோக்கிச் செல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்யாவிட்டால் தவிர்க்கமுடியாததாகி, நாம் நினைக்காத ஒரு இடத்தை நோக்கி நாம் கீழே இழுத்துச்செல்லப்படுவோம்.
பெரிய விளைவுகளுள்ள அற்பமாகத் தோன்றுகிறதைப்பற்றி சொல்லிய பின்பு நேபி எழுதினான், இவ்வாறாக சிறிய காரியங்களால் கர்த்தர் பெரிய காரியங்களைக் கொண்டுவருகிறார் (1 நேபி 16:29). இதன் நினைவில் வைக்கக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு பழைய ஏற்பாட்டில் அடங்கியிருக்கிறது. எவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் கொள்ளிவாய் சர்ப்பங்களால் வாதிக்கப்பட்டார்களென நாம் அங்கே படிக்கிறோம். அவைகள் கடித்ததால் அநேக ஜனங்கள் மரித்தார்கள் (எண்ணாகமம் 21:6 பார்க்கவும்). உதவிக்காக மோசே ஜெபித்தபோது, “ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்க” உணர்த்தப்பட்டான். பின்னர் சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான் (வசனம் 9) ஒரு அற்புதமான விளைவுக்கு அத்தகைய ஒரு அற்பமான காரியம்! இருந்தும் நேபி விவரித்ததைப்போல, கர்த்தருக்கு எதிராக கலகம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு இந்த எடுத்துக்காட்டை அவன் போதித்தபோது, அவர்கள் குணமாகும்படியாய் கர்த்தர் ஒரு எளிமையான வழியை ஆயத்தப்படுத்தியிருந்தும், “வழியின் எளிமையினிமித்தமும் அல்லது இலகுவின் நிமித்தமும் அநேகர் அங்கே அழிந்துபோனார்கள்” (1 நேபி 17:41)
வழியின் எளிமை அல்லது கட்டளையிடப்பட்ட பணியின் தாராளம், நமது நீதியான விருப்பத்தை அடைய இது முக்கியமில்லை என்று அர்த்தமாயிருக்கமுடியாது என அந்த எடுத்துக்காட்டும் அந்த போதனையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
அப்படியே, கீழ்ப்படியாமையின் சிறிய செயல்கள் அல்லது நீதியான பழக்கங்களைப் பின்பற்ற சிறிய தவறுதல்கள், தவிர்க்கப்பட நாம் எச்சரிக்கப்பட்ட ஒரு விளைவுக்கு நேராய் நம்மை கீழிழுத்துச் செல்லும். ஞானவார்த்தை இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுக்கிறது. அதைப்போன்று ஒரு சிகரெட்டு, சிறிது மதுபானம் அல்லது மற்றொரு போதைப்பொருளில் சிறிதளவு சரீரத்தில் உண்டாக்கும் பாதிப்பை அளவிடமுடியாது. ஆனால் காலப்போக்கில், பாதிப்பு மோசமாயிருக்கும் அல்லது சரிசெய்யப்படமுடியாமலிருக்கும். மரத்து வேரின் சிறிது சிறிதான வளர்ச்சியால் ஏற்பட்ட பக்கநடைபாதையின் கீறலை நினைவுகூருங்கள். நமது சரீரங்களை பாதிக்கிற போதைப்பொருட்களைப்போன்று, அடிமையாக்கக்கூடிய, அல்லது நமது சிந்தனைகளை மதிப்பிழக்கச்செய்யும் ஆபாச விஷயங்கள் எதிலும் பங்கேற்பதன் பயங்கர விளைவுகள், முதல் முறை அல்லது ஒரே ஒரு முறை நாம் பங்கேற்றல், மொத்தத்தில் தவிர்க்கப்படவேண்டும் என்பது நிச்சயம்.
ஒரு நபரின் இரட்சிப்பிற்கு எவ்வாறு அற்பமும் சொற்பமுமானவைகள் எதிரானதும் அழிவுக்குள்ளதாயுமிருக்குமென்று அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மாநாட்டில் பார்வையாளர்கள் மத்தியில் தலைவர் எம். ரசல் பல்லார்ட் விவரித்தார். “பெலவீனமான நார்கள் ஒரு நூலை உருவாக்கி பின்னர் ஒரு இழையாகி, இறுதியில் ஒரு கயிறாகுவதைப்போன்று அற்பமானவைகள் ஒன்றாகச் சேர்ந்து அறுக்கமுடியாத அளவுக்கு மிகப்பெலமுள்ளதாகிறது. அற்பமும் சொற்பமுமானவைகள் ஆவிக்குரியவைகளைக் கட்டமுடிகிற ஆற்றலை நாம் எப்போதுமே அறிந்திருக்கவேண்டும்” என அவர் சொன்னார். அதே நேரத்தில், மனமுறிவுக்கும் வருத்தத்திற்கும் நம்மை நடத்த, அற்பமும் சொற்புமானவைகளை சாத்தான் பயன்படுத்துவான் என்றும் நாம் அறிந்திருக்கவேண்டும்” 7 என அவர் போதித்தார்.
அவருடைய பி.ஒய்.யு ஹவாய் பார்வையாளர்களுக்கு இதைப்போன்ற ஒரு எச்சரிக்கையை தலைவர் வீல்ரைட் கொடுத்தார். அந்த விசுவாசத்தில் தடுமாடுபவர்கள் அற்பமும் சொற்பமுமானவைகளைச் செய்யத் தவறுதலில் அற்புதங்கள் நிற்கின்றன, கர்த்தரையும் அவரது இராஜ்ஜியத்தையும் நோக்கி முன்னேறுவதை முதலில் கிடப்பில் வைத்து, பின்னர் தேவனின் இராஜ்ஜியத்தைத் தேடுதலை விடுவிக்க ஆரம்பிக்கிறது, உலகப்பிரகாரமான அதிகத் தேடுதலையும் உலக ஆசைகளையும் மாற்றியமைக்கிறது.” 8
நமது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அழிவாயிருக்கிற திரட்டப்பட்ட எதிர்மறை பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்க, அற்பமும் சொற்பமுமானவைகளின் ஆவிக்குரிய மாதிரிகளை நாம் பின்பற்ற வேண்டும். தேவையில்லாத நிலத்தில் அதிக அளவு தண்ணீரை ஊற்றுவது அல்லது தெளிப்பதற்கு மாறாக மிகக்குறைந்த அளவில் மண்ணில் தண்ணீரை சொட்டவிடுதலின் நுட்பத்திலிருந்து இந்த ஆவிக்குரிய மாதிரியின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தைப்பற்றி அதிகமாய் நாம் கற்றுக்கொள்ளலாம் என்ற இக்கொள்கையை பி.ஒய்.யு பெண்கள் மாநாட்டில் மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் விவரித்தார்.
அவர் விளக்கினார், “தண்ணீரின் சீரான சொட்டுகள் மண்ணின் ஆழத்தில் தங்கி, செடிகள் நன்றாக வளர மண்ணில் நல்ல ஈரத்தன்மையை உண்டாக்கும். அந்தமாதிரியே நீங்களும் நானும் கவனம் செலுத்தி, ஆவிக்குரிய போஷிப்பின் சீரான சொட்டுகளை வழக்கமாக பெற்றால், சுவிசேஷ வேர்கள் நமது ஆத்துமாவிற்குள் தங்கி, உறுதியாக நடப்பட்டு, வேர்விட்டு விசேஷமான, சுவையான கனிகளைக் கொடுக்கும்.
தொடர்ந்து அவர் சொன்னார், “அற்பமும் சொற்பமுமானவைகளின் ஆவிக்குரிய மாதிரிகள் பெரிய காரியங்களைக் கொண்டுவந்து, உறுதியையும் திடமனதையும் விளைவித்து, தொழுதலை ஆழப்படுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கும் அவரது சுவிசேஷத்திற்கும் மிக முற்றிலுமான மனமாறுதலைக் கொடுக்கிறது” 9 என அவர் விளக்கினார்.
இப்போது கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் சேர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைகளில் இந்த கொள்கையை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார். “எந்த மனுஷனும் அவற்றை சிறிய காரியங்களாக எண்ணவேண்டாம் ஏனெனில் பரிசுத்தவான்களுக்கு சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை சார்ந்திருக்கிற அதிகமானவை இருக்கிறது” (கோ.உ 123:15)
மிசௌரியில் சபை ஸ்தாபிக்க முந்திய முயற்சிகளுடன் சம்பந்தப்பட்டதில், “அதனதன் காலத்தில் அனைத்தும் சம்பவிக்கவேண்டுமென்பதற்காக” (கோ.உ 64:32) கர்த்தர் பொறுமையை ஆலோசனையளித்தார். பின்னர் அவர் “ஆகவே நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்” (கோ.உ 64:33) என்ற மகத்தான போதனையைக் கொடுத்தார்.
“உடன்படிக்கையின் பாதையில்” 10 முன்னேறிச் செல்ல தலைவர் ரசல் எம். நெல்சனின் சவாலைப் பின்பற்ற நாம் அனைவரும் விரும்புகிறோம் என நான் நம்புகிறேன். அப்படிச் செய்ய நமது பொறுப்பு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தாலும் அவரது சபையின் தலைவர்களாலும் நமக்குப் போதிக்கப்பட்ட “அற்பமான காரியங்களை” சீராகப் பின்பற்றுவதால் பெலப்படுத்தப்படுகிறது. அவரைப்பற்றி நான் சாட்சியளித்து, அவருடைய உடன்படிக்கையின் பாதையைக் கைக்கொள்ள நாடுகிற அனைவர் மீதும் அவருடைய ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.