வீட்டில் கற்றுக்கொடுத்தல் ஒரு ஆனந்தமான பரிசுத்தமான பொறுப்பு
நமது வீடுகளில் கிற்ஸ்துவைப்போன்ற ஆசிரியர்களாக இருக்க நாம் முயற்சிக்கும்போது பரலோக உதவிக்காக நான் வேண்டுகிறேன்.
எனது அன்பு மனைவி ஜூலியும் நானும் ஆறு அருமையான பிள்ளைகளை வளர்த்தோம், இப்போது சமீபத்தில் காலி கூடாரமாகி விட்டது. முழுநேர அடிப்படையில் எங்கள் பிள்ளைகள் எங்கள் வீட்டிலிருப்பதை எவ்வாறு நான் தவறவிட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுவதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதையும் நான் தவறவிட்டிருக்கிறேன்.
பெற்றோர்கள் அனைவருக்கும், பெற்றோராக விரும்புகிற அனைவருக்கும் இன்று நான் என்னுடைய குறிப்புகளைக் கூறுகிறேன். உங்களில் அநேகர் இப்போது பிள்ளைகளை வளர்த்து வருகிறீர்கள். மற்றவர்களுக்கு சீக்கிரமே அந்த நேரம் வரும். இன்னும் மற்றவர்களுக்கு பெற்றோரத்துவம் ஒரு வருங்கால ஆசீர்வாதமாயிருக்கலாம். ஒரு பிள்ளைக்குக் கற்றுக்கொடுப்பதென்பது ஆனந்தமான பரிசுத்தமான பொறுப்பு என்பதை நாம் அனைவரும் கண்டுபிடிக்க நான் ஜெபிக்கிறேன். 1
பரலோக பிதாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நமது பிள்ளைகளுக்கு பெற்றோராக, நாம் அறிமுகம் செய்கிறோம். தங்களுடைய முதல் ஜெபத்தைச் செய்ய நமது பிள்ளைகளுக்கு நாம் உதவுகிறோம். ஞானஸ்நானம் மூலமாக உடன்படிக்கைப் பாதையில்2 அவர்கள் பிரவேசிக்கும்போது வழிகாட்டுதலையும் ஆதரவையும் நாம் கொடுக்கிறோம். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். அவருடைய பிள்ளைகளுக்காக அவருடைய திட்டத்தைப்பற்றி அவர்களுக்கு நாம் அறிவு புகட்டி பரிசுத்த ஆவியின் முணுமுணுப்புகளை அடையாளம்காண அவர்களுக்கு உதவுகிறோம். பூர்வகால தீர்க்கதரிசிகளைப்பற்றிய கதைகளை நாம் அவர்களுக்குக்கூறி, ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்ற அவர்களை ஊக்குவிக்கிறோம். அவர்களுடைய சாதனைகளுக்காகவும் அவர்களுடைய சோதனைகளின் நேரத்தின்போது வேதனையிலும் அவர்களுக்காக நாம் ஜெபிக்கிறோம். ஆலய ஆசீர்வாதங்களை நமது பிள்ளைகளுக்கு நாம் சாட்சியளித்து, முழுநேர ஊழியங்களைச் செய்ய அவர்களை நன்றாக ஆயத்தம் செய்ய நாம் முயற்சிக்கிறோம். அவர்களே பெற்றோராகும்போது நமது பிள்ளைகளுக்கு அன்பான ஆலோசனையை நாம் கொடுக்கிறோம். ஆனால், அப்படியிருந்தும் அவர்களுடைய பெற்றோராக இருக்க நாம் ஒருபோதும் தவறுவதில்லை. அவர்களுடைய ஆசிரியர்களாக இருப்பதை நாம் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இந்த நித்திய அழைப்புகளிலிருந்து நாம் ஒருபோதும் விடுவிக்கப்படுவதில்லை.
நமது வீடுகளில் நமது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கக் கிடைத்த ஒரு சில அற்புதமான சந்தர்ப்பங்களை இன்று நாம் சிந்திப்போமாக.
குடும்ப இல்ல மாலை கற்பித்தல்
நான் வளர்க்கப்பட்ட, விசுவாசம் நிறைந்த வீட்டில் ஒரு உயர்ந்த முன்னுரிமையாயிருக்கிற குடும்ப இல்ல மாலையுடன் நாம் ஆரம்பிப்போம். குடும்ப இல்ல மாலையில் கற்றுக்கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட பாடங்கள் எனக்கு நினைவிலில்லை, ஆனால் ஒரு வாரமும் அதை நாங்கள் தவறவிடமாட்டோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது.3 என்னுடைய பெற்றோருக்கு எது முக்கியமென்பது எனக்குத் தெரிந்திருந்தது.4
எனக்கு மிகவும் பிடித்த குடும்ப இல்ல மாலை நிகழ்சிகளில் ஒன்றை நான் நினைவுகூருகிறேன். என்னுடைய தகப்பன் அவருடைய பிள்ளைகளில் ஒருவரை “பரிட்சைக்கு” உட்பட அழைப்பார். “முதலில் சமையலறைக்குப் போய் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து மூடு. பின்னர் என்னுடைய படுக்கையறைக்கு ஓடிப்போய் என்னுடைய அலமாரியிலிருந்து ஒரு ஜோடி காலுறைகளை எடு. பின்னர் திரும்பவந்து மூன்று முறை மேலும் கீழுமாக குதித்து, ‘அப்பா நான் அதைச் செய்து முடித்துவிட்டேன்!’” என்று சொல், போன்று, அந்த பிள்ளையிடம் அடுக்கடுக்கான அறிவுரைகளைக் கொடுப்பார்.
என்னுடைய முறை வரும்போது அது எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு படியையும் சரியாகச் செய்ய விரும்பி “அப்பா நான் அதை செய்து முடித்துவிட்டேன்!” என்று சொல்லுகிற நேரத்தில் சந்தோஷப்படுவேன். என்னுடைய தன்னம்பிக்கையை வளர்க்க இந்த நிகழ்ச்சி எனக்குதவி அம்மாவோ அப்பாவோ எனக்கு ஒரு சுவிசேஷ கொள்கையை கற்றுக்கொடுக்கும்போது ஒரு அமைதியற்ற பையன் கவனம்செலுத்த எளிதாக்கிற்று.
“குடும்ப இல்ல மாலையின் நல்ல தன்மையைப்பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் அதை முயற்சித்துப் பாருங்கள். உங்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒன்றுகூட்டி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள், அவர்களிடம் சாட்சி பகருங்கள், வேதத்தை ஒன்றுகூடி படித்து ஒன்றாக நல்ல நேரத்தை செலவிடுங்கள்”5 என தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி ஆலோசனையளித்தார்.
குடும்ப இல்ல மாலையை நடத்துவதற்கு எப்போதுமே எதிர்ப்பு வரும்.6 அதைப் பொருட்படுத்தாமல், தடைகளைச் சுற்றி ஒரு வழியைக் கண்டுபிடித்து, குடும்ப இல்ல மாலைக்கு ஒரு முன்னுரிமை கொடுத்து, வேடிக்கையை ஒரு முக்கிய விஷயமாக வைக்க நான் உங்களை அழைக்கிறேன்.
குடும்ப ஜெபம் கற்பித்தல்
கற்றுக்கொடுப்பதற்கு குடும்ப ஜெபம் மற்றொரு முதன்மையான சந்தர்ப்பம்.
தலைவர் என். எல்டன் டானரின் தகப்பன் குடும்ப ஜெபத்தின்போது எவ்வாறு அவருக்குக் கற்றுக்கொடுத்தார் என்பது எனக்குப் பிடிக்கும்.
“ஒரு நாள் மாலை, குடும்ப ஜெபத்தில் நாங்கள் முழங்கால்படியிட்டிருந்தபோது ‘கர்த்தரிடம் என் தகப்பன் சொன்னார், இன்று எல்டன் தான் செய்திருக்கக்கூடாத ஒன்றை செய்தான், அவன் வருந்தினான், நீ அவனை மன்னித்தால் அவன் இனியும் அதைச் செய்யமாட்டான்’ என அவர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
“தண்டனையை விட அதிகமாக செய்திருக்கக் கூடிய அது இனிமேலும் செய்யக்கூடாதென்ற தீர்மானத்தை , என்னை எடுக்க வைத்தது,.”7
ஒரு சிறுவனாக, சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ஜெபித்திருக்கலாமோ?” என எனக்குள்ளாக சிந்தித்துக்கொண்டு அதிகமாகத் தோன்றுகிற எங்கள் குடும்ப ஜெபத்தைப்பற்றி சிலநேரங்களில் நான் எரிச்சலடைவேன். இப்போது ஒரு பெற்றோராக, ஒரு குடும்பமாக எங்களால் எப்போதுமே மிகஅதிகமாக ஜெபிக்க முடியாது என எனக்குத் தெரியும்.8
இயேசு கிறிஸ்துவை பரலோக பிதா எவ்வாறு அவருடைய நேசக்குமாரனாக அறிமுகம் செய்கிறாரென நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன்.9 அவர்கள் எனக்கு எவ்வளவு நேசமுள்ளவர்களென பரலோகப் பிதாவிடம் நான் சொல்வதை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது என்னுடைய பிள்ளைகளுக்காக ஜெபிப்பதில் நான் ஆனந்தமடைகிறேன். நாம் அவர்களோடு ஜெபிக்கும்போது அல்லது அவர்களை ஆசீர்வதிக்கும்போதைவிட நமது பிள்ளைகளிடம் அன்பைச் சொல்ல வேறு சிறந்த நேரமிருக்காது என்று தோன்றுகிறது. தாழ்மையான ஜெபத்தில் குடும்பங்கள் ஒன்றுகூடும்போது ஆற்றலுள்ள, நீடித்திருக்கிற பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
தயார்நிலை போதித்தல்
பெற்றோர் கற்றுக்கொடுத்தல் ஒரு தயார் நிலை மருத்துவராயிருத்தலைப்போன்றது. எப்போது சந்தர்ப்பம் வருமென நமக்கு ஒருபோதும் தெரியாததால் நமது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
ஒரு ஜெபவீட்டில் நடக்கவில்லை, ஆனால் சம்பிராதயப்படி இல்லாமல் அன்றாட அமைப்பில், அவருடைய சீஷர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்தபோது, ஒரு கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும்போது, அல்லது ஒரு அத்தி மரத்தைக் கடந்து நடந்துகொண்டிருந்தபோது வழக்கமாக போதனைசெய்த இரட்சகரைப்போன்றவர்கள் நாம்.10
சலவை செய்த துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு சமயம் பல்மருத்துவரிடம் அவனை அழைத்துச்செல்ல வண்டியோட்டிக்கொண்டிருந்தபோது என்னுடைய மூத்த சகோதரன் மேட்டுடன் உரையாடிய இரண்டு சிறந்த சுவிசேஷ உரையாடல்களைப்பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் என் தாயார் பகிர்ந்துகொண்டார். என் தாயாரைப்பற்றி நான் வியப்படைந்த அநேகக் காரியங்களில் ஒன்று அவருடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க அவருடைய தயார்நிலை.
பெற்றோராக அவருடைய கற்றுக்கொடுத்தல் ஒருபோதும் முடிவடையவில்லை. ஒரு ஆயராக நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, நான் முடிவெட்டிக்கொள்ளவேண்டுமென அப்போது 78 வயதாயிருந்த என் தாயார் என்னிடம் சொன்னார். நான் ஒரு எடுத்துக்காட்டாயிருக்கவேண்டுமென அவருக்குத் தெரியும், அதை எனக்குச் சொல்ல அவர் தயங்கவில்லை. அம்மா உங்களை நான் நேசிக்கிறேன்!
என்னுடைய பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் ஒரு தயார்நிலை கற்றுக்கொள்ளுதலுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறபோது பதிலளிக்க தயாராக இருக்கும்படி, வேதங்களைப் படிக்கவும் தியானிக்கவும் ஒரு தகப்பனாக நான் ஊக்கமளிக்கப்பட்டேன்.11 “ஒரு குடும்ப அங்கத்தினர் இருதயத்திலுள்ள ஒரு கேள்வியாக அல்லது அக்கறையாக சில சிறந்த கற்றுக்கொடுக்கும் நேரங்கள் ஆரம்பமாகின்றன.”12 அந்த நேரங்களின்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோமா?13
அப்போஸ்தலர் பவுலின் அழைப்பை நான் விரும்புகிறேன். “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”14
நான் குமரப்பருவத்திலிருந்தபோது, யாருக்கு அதிக பலமாகப் பிடிக்கும் சக்தியிருக்கிறதென்பதைப் பார்க்க நானும் என் தகப்பனும் ஒருவருக்கொருவர் சவால் விடுவது எனக்குப் பிடிக்கும். மற்றவரை வேதனையில் முகம் சுளிக்க வைக்க முடிந்தவரை மற்றவரின் கையை இறுக்கிப்பிடிக்க நாங்கள் முயற்சிப்போம். இப்போது இதில் அதிக வேடிக்கையிருக்காது, ஆனால் எப்படியோ அந்த நேரத்திலிருந்தது. அத்தகைய ஒரு போட்டிக்குப் பின்னர், “உனக்கு நல்ல பெலமான கைகளிலிருக்கின்றன மகனே. ஒருபோதும் தவறாக ஒரு இளம்பெண்ணைத் தொடாமலிருக்க உன்னுடைய கைகளுக்கு எப்போதும் பெலமிருக்குமென நான் நம்புகிறேன்” என என் தகப்பன் என் கண்களைப் பார்த்து சொன்னார். பின்னர், நடத்தையில் சுத்தமாயிருக்கவும் அதையே செய்ய மற்றவர்களுக்கு உதவவும் என்னை அவர் அழைத்தார்.
மூப்பர் டக்லஸ் எல். காலிஸ்டர் அவருடைய தகப்பனைப்பற்றி இதை பகிர்ந்துகொண்டார். “ஒரு நாள் வேலையிலிருந்து வீட்டிற்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக என் தகப்பன் சொன்னார், ‘இன்று நான் என் தசமபாகத்தைச் செலுத்தினேன். தசமபாக துண்டில் “உமக்கு நன்றி” என நான் எழுதினேன். நமது குடும்பத்தை ஆசீர்வதித்துக்கொண்டிருப்பதற்காக கர்த்தருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.’”
பின்னர் மூப்பர் காலிஸ்டர் அவருடைய தகப்பன் ஆசிரியருக்கு இந்த புகழ்மாலையை சூட்டினார். “கீழ்ப்படிதலின் செயல்கள் மற்றும் எண்ணங்கள் இரண்டையும் அவர் கற்றுக்கொடுத்தார்.”15
“நான் எதைக் கற்றுக்கொடுப்பேன், அல்லது கீழ்ப்படிதலின் என்னுடைய செயல்கள் மற்றும் எண்ணங்களால் என்னுடைய பிள்ளைகளுக்கு நான் என்ன கற்றுக்கொடுக்கப்போகிறேன்?” என எப்போதாவது நம்மையே நாம் கேட்டுக்கொள்வது புத்திசாலித்தனமென நான் நம்புகிறேன்.
குடும்ப வேதப் படிப்பு கற்பித்தல்
வீட்டில் கோட்பாடைக் கற்றுக்கொடுப்பதற்காக குடும்ப வேதப்படிப்பு ஒரு நல்ல சந்தர்ப்பம்.
“கர்த்தருடைய வார்த்தையில் மட்டும் பெற்றோர் சார்ந்திருக்கக்கூடாது, தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு ஒரு தெய்வீக உத்தரவு இருக்கிறது”16 என தலைவர் ரசல்16 எம். நெல்சன் சொன்னார்.
ஜூலியும் நானும் எங்களுடைய பிள்ளைகளை வளர்த்து வந்தபோது, சீராகவும் ஆக்கபூர்வமானவர்களாகவுமிருக்க முயற்சித்தோம். ஒரு வருடம், குடும்பமாக ஸ்பானிஷ் மொழியில் மார்மன் புஸ்தகத்தைப் படிக்க நாங்கள் தீர்மானித்தோம். அதனால்தான் ஸ்பானிஷ் மொழி பேசும் ஊழியத்திற்கு முழுநேர ஊழியத்தில் ஊழியம் செய்ய எங்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் கர்த்தர் அழைத்தாரோ? சாத்தியமே.
அவர் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது மார்மன் புஸ்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அவரும் அவருடைய தகப்பனும் ஒன்றுசேர்ந்து படிப்பார்கள் என்பதை சகோதரர் பிரையன் கே. ஆஷ்டன் என்னுடன் பகிர்ந்துகொண்டபோது நான் ஆழமாக தொடப்பட்டேன். சகோதரர் ஆஷ்டன் வேதங்களை நேசிக்கிறார். அவைகள் அவருடைய மனதிலும் இருதயத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. சகோதரர் ஆஷ்டன் குமரப்பருவத்திலிருந்தபோது அந்த விதையை17 அவருடைய தகப்பன் விதைத்தார், அந்த விதை சத்தியத்தின் ஒரு ஆழமான வேர்விட்டு வளர்ந்தது. சகோதரர் ஆஷ்டன் அதையே தனது மூத்த பிள்ளைகளுக்குச் செய்தார்.18. “அப்பா நான் எப்போது மார்மன் புஸ்தகத்தை உங்களுடன் சேர்ந்து வாசிக்கவேண்டும்?” என சமீபத்தில் அவருடைய எட்டு வயது மகன் அவரைக் கேட்டான்.
எடுத்துக்காட்டான கற்பித்தல்
கடைசியாக, அதிக அழுத்தமான பெற்றோரின் போதித்தல் நமது எடுத்துக்காட்டாகும். “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க” 19 நாம் ஆலோசனையளிக்கப்பட்டிருக்கிறோம்
ஒரு சமீபத்திய பயணத்தில் ஜூலியும் நானும் ஒரு சபைக்குச் சென்று இந்த வார்த்தையை செயலில் பார்த்தோம். அவனுடைய ஊழியத்திற்கு சீக்கிரமே போகக்கூடிய ஒரு வாலிபன் திருவிருந்துக்கூட்டத்தில் பேசினான்.
“சபையில் என்னுடைய தகப்பன் மிக நல்லவர் என நீங்கள் எல்லோரும் நினைக்கலாம், ஆனால் ,. . . ” அவன் சிறிது நிறுத்தினான், அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறானோ என நான் ஆச்சரியத்தில் வியப்புற்றேன். “வீட்டில் அவர் மிகச் சிறந்த மனிதர்” என அவன் சொன்னான்.
அவனுடைய தகப்பனுக்கு அவன் கொடுத்த உணர்த்துதலான மரியாதைக்கு, பின்னர் இந்த வாலிபனுக்கு நான் நன்றி சொன்னேன். அவனுடைய தகப்பன் அந்த தொகுதிக்கு ஆயர் என்பதை பின்னர் நான் கண்டுபிடித்தேன். இந்த ஆயர் அவருடைய தொகுதியில் உண்மையுள்ளவராக பணிபுரிந்துகொண்டிருந்தாலும், அவருடைய சிறப்பான பணி வீட்டிலிருக்கிறதென அவருடைய மகன் உணர்ந்தான்.20
“வளர்ந்து வரும் தலைமுறைக்கு போதிப்பதற்கு நமக்கு அநேக வழிகளிருக்கின்றன, அவர்களிடமிருந்து முழு அனுகூலம் பெறுவதில் நமது சிறந்த சிந்தனையையும் முயற்சியையும் நாம் அர்ப்பணிக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விசேஷமாக எடுத்துக்காட்டின் மூலமாக சிறப்பான, சீரான ஆசிரியர்களாயிருக்க பெற்றோரை நாம் தொடர்ந்து ஊக்குவிக்கவேண்டும், உதவவேண்டும்”21 என மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சென் ஆலோசனையளித்தார்.
இவ்வாறாகத்தான் இரட்சகர் போதிக்கிறார்.22
கடந்த ஆண்டு எங்களுடைய இரண்டு இளைய பிள்ளைகளுடன் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது, செயின்ட ஜார்ஜ் மற்றும் சான் டியாகோ ஆலயங்களில் பதிலி ஞானஸ்நானங்கள் செய்ய ஜூலி ஆலோசனயளித்தாள். “நமது இடத்தில் நாம் ஆலயத்திற்குச் செல்கிறோம், இப்போது நாம் விடுமுறையிலிருக்கிறோம். விடுமுறையை நன்றாக செலவழிக்க வேறு எதையாவது ஏன் செய்யக்கூடாது?” என நினைத்துக்கொண்டு நான் எனக்குள்ளே முறுமுறுத்தேன். ஞானஸ்நானங்களுக்குப் பின்னர், ஆலயத்திற்கு வெளியே ஜூலி புகைப்படங்கள் எடுக்க விரும்பினாள். மீண்டும் நான் அமைதியாக முறுமுறுத்தேன். அடுத்து என்ன நடந்திருக்குமென நீங்கள் கற்பனை செய்யலாம். நாங்கள் புகைப்படங்கள் எடுத்தோம்.
நமது முன்னோர்களுக்கு நாம் எவ்வாறு உதவினோம் என்ற நினைவுகள் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கவேண்டுமென ஜூலி விரும்பினாள், நானும் விரும்பினேன். ஆலயங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி ஒரு சம்பிரதாய பாடம் எங்களுக்குத் தேவைப்படவில்லை. அதில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆலயத்தை நேசித்து, அந்த அன்பை அவருடைய பிள்ளைகள் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஒரு தாய்க்கு நன்றிகள்.
ஒருவருக்கொருவர் பெற்றோர் மகிழ்ந்து நீதியான எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கும்போது, பிள்ளைகள் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
முடிவுரை
உங்கள் வீடுகளில் கற்றுக்கொடுக்க உங்களின் சிறந்ததைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிற அனைவரும், உங்கள் முயற்சிகளில் நீங்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் காண்பீர்களாக. முன்னேற்றத்திற்கு இடமிருப்பதாக அல்லது மிகஅதிகமான ஆயத்தத்திற்கு தேவையிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து பரிசுத்த ஆவி உங்களுக்கு உணர்த்தும்போது அடக்கத்துடன் பதிலளித்து செயல்பட உங்களை பிணையுங்கள்.23
“எந்த சமுதாயத்தின் ஆரோக்கியமும் அதன் ஜனங்களின் சந்தோஷமும், அவர்களுடைய ஆஸ்தியும், அவர்களுடைய சமாதானமும், அனைத்தும், வீட்டில் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதின் ஆரம்பத்திலிருக்கிறது. 24 என மூப்பர் எல். டாம் பெரி சொன்னார்.
ஆம், என்னுடைய வீடு இப்போது வெறுமையாயிருக்கிறது, ஆனால் என்னுடைய வளர்ந்த பிள்ளைகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும், நான் நம்புகிற, ஒருநாள் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க கூடுதலான விலைமதிப்பற்ற சந்தர்ப்பங்களுக்கு ஆயத்தமாகவும் ஆர்வமாகவும் நான் இன்னமும் தயார்நிலையிலிருக்கிறேன்.
நமது வீடுகளில் கிறிஸ்துவைப்போன்ற ஆசிரியர்களாயிருக்க நாம் முயற்சிக்கும்போது பரலோகத்தின் உதவிக்காக நான் வேண்டுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.