ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையை தேவனின் பிள்ளைகள் பெற உதவ உங்கள் ஆரோனிய ஆசாரியத்துவ நியமனம் மையமாகும்.
சகோதரரே, இந்த வரலாற்று சிறப்புடைய மாநாட்டில் உங்களோடிருப்பது ஒரு சிலாக்கியம். நான் புதிய ஊழியத்தலைவராக இருந்தபோது, எங்கள் புதிய ஊழியக்காரர்கள் குழுவை வரவேற்க நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களோடு ஒரு சிறிய கூட்டத்துக்காக அதிக அனுபவமுள்ள சில ஊழியக்காரர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, அவர்கள் குழந்தைகளின் நாற்காலிகளை வட்ட வடிவத்தில் அமைத்திருந்ததை நான் கவனித்தேன்.
“எதற்கு சிறிய நாற்காலிகள்?” நான் கேட்டேன்.
ஊழியக்காரர்கள் சிறிது வெட்கத்துடன் சொன்னார்கள், “புதிய ஊழியக்காரர்களுக்காக.”
நாம் பிறரைப் பார்க்கிற விதம் அவர்கள் யார், அவர்கள் என்னவாக முடியும் என்ற அவர்களது எண்ணத்தில் விசேஷித்த தாக்கம் ஏற்படுத்துகிறது. 1 எங்கள் புதிய ஊழியக்காரர்கள் அன்று பெரியவர்களின் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
சில சமயங்களில் நமது ஆரோனிய ஆசாரியத்துவ வாலிபர்களுக்கு தேவன் பரிசுத்த நம்பிக்கையையும் முக்கிய பணியையும் கொடுத்திருக்கிறார் என அறிய உதவுவதை விட, உருவகமாய் பிள்ளைகளின் நாற்காலிகளைக் கொடுக்கிறோம் என நான் அஞ்சுகிறேன்.
“தேவனின் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களாக இருப்பதன் அர்த்தம் என்ன,” என வாலிபர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தலைவர் தாமஸ் எஸ். மான்சன் நமக்கு அறிவுரை கொடுத்தார். “அவர்களது நியமிக்கப்பட்ட அழைப்பின் பரிசுத்த தன்மையைப்பற்றிய ஆவிக்குரிய தெளிவுக்கு அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.” 2
இன்று நம் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் பரிசுத்த தன்மையைப்பற்றிய அதிக புரிதலுக்கும், நமது ஆசாரியத்துவ கடமைகளில் அதிக கருத்தாக உணர்த்த பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவார் என நான் ஜெபிக்கிறேன். எனது செய்தியானது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தோர் உள்ளிட்ட அனைத்து ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கும் ஆகும்.
ஆசாரியத்துவத்தின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையை தேவனின் பிள்ளைகளுக்கு கொடுக்கவே என மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் போதித்தார். 3 நமது வாழ்க்கையில் கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெற நாம் அவரை நம்ப வேண்டும், நமது பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும், நியமங்கள் மூலம் உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும். 4 இவை நாம் ஒருமுறை மட்டும் பின்பற்றுகிற கொள்கைகள் அல்ல. மாறாக “கிறிஸ்துவண்டை வந்து அவரில் பூரணப்படவும்,” மேல் நோக்கிய தொடர்ந்த முன்னேற்றத்தில் ஒருவருக்கொருவர் பெலப்படுத்தி கட்டவும் அவை ஒருமித்து செயல்படுகின்றன. 5
ஆகவே இதில் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் பங்கு என்ன? அது எப்படி கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெற நமக்கு உதவுகிறது? தூதர்கள் ஊழியம் செய்தல் மற்றும் ஆயத்த சுவிசேஷத்தின் திறவுகோல்களான ஆரோனிய ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களில் பதிலிருக்கிறது என நான் நம்புகிறேன். 6
தூதர்களின் ஊழியம்
தூதர்களின் ஊழியத்தின் ஒரு தன்மையோடு நாம் தொடங்குவோமாக. தேவனின் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் பெறுவதற்கு முன் அவர்கள் அவரைப்பற்றி அறிய வேண்டும், அவரது சுவிசேஷம் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல:
“அவரைக்குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? ...
“ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” 7
காலத்தின் தொடக்கத்திலிருந்தே, “கிறிஸ்துவின் வரவைக்குறித்து வெளிப்படுத்த மனுபுத்திரருக்குள்ளே ஊழியம் பண்ண தூதர்களை அனுப்பினார்.” 8 தூதர்கள் பரலோக செய்தியைக் கொண்டுவருகிற பரலோகவாசிகள். 9 எபிரெயுவிலும் கிரேக்கத்திலும் தூதனின் அடிப்படை வார்த்தை “செய்தி கொண்டுவருபவன்.” 10
அது போன்ற விதமாக அவரது வார்த்தையை அறிவிக்கவும், அவ்வாறே விசுவாசத்தைக் கட்டவும் தூதர்கள் அதிகாரமளிக்கப்பட்டு தேவனால் அனுப்பப்பட்டார்கள், ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்த நாம், “போதிக்கவும், கிறிஸ்துவண்டை வர அனைவரையும் அழைக்கவும்” நியமிக்கப்பட்டிருக்கிறோம். 11 சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது ஒரு ஆசாரியத்துவ கடமை. இக்கடமையோடு தொடர்புடைய வல்லமை தீர்க்கதரிசிகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும் கூட அல்ல. உங்களுக்காக. 12
ஆகவே இந்த வல்லமையை நாம் எப்படி பெறுகிறோம்? 12 வயது உதவிக்காரன், அல்லது நம்மில் யாரும், தேவ பிள்ளைகளின் இருதயங்களில் கிறிஸ்துவில் விசுவாசத்தை எப்படி கொண்டு வருகிறோம்? நாம் அவரது வார்த்தைகளைப் பொக்கிஷப்படுத்தி தொடங்குகிறோம். ஆகவே அதன் வல்லமை நம்முள்ளே இருக்கிறது. 13 நாம் செய்தால் “மனுஷரைத் திருப்தியாக்கும் விதமாக தேவ வல்லமை பெறுவோம்” என அவர் வாக்களித்திருக்கிறார். 14 ஒரு குழும கூட்டத்தில் அல்லது அங்கத்தினர் வீட்டுக்கு வரும்போது போதிப்பது ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம். ஒரு நண்பரோடு அல்லது குடும்ப அங்கத்தினரோடு உரையாடுவது போல அது வழக்கமானதற்கு குறைவானதாக இருக்கலாம். இந்த எந்த அமைப்பிலும் நாம் ஆயத்தப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் தூதர்கள்போல சுவிசேஷம் போதிக்கலாம். 15
நான் அண்மையில் பப்புவா நியூ கினியாவில், ஆசாரியத்துவம் தரித்தவரான ஜேக்கப், மார்மன் புஸ்தக வல்லமையைப்பற்றியும், தீமையை எதிர்க்கவும் ஆவியைப் பின்பற்றவும் அவனுக்கு எப்படி உதவியது என சாட்சி சொல்லக் கேட்டேன். அவனது வார்த்தைகள் என் விசுவாசத்தையும் பிறரது விசுவாசத்தையும் அதிகரித்தது. தங்கள் குழும கூட்டங்களில் ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்கள் போதிப்பதையும் சாட்சி சொல்வதையும் கேட்டபோது எனது விசுவாசம் வளர்ந்தது.
வாலிபர்களே, நீங்கள் அதிகாரமளிக்கப்பட்ட தூதர்கள். உங்களது வார்த்தைகளாலும் செயல்களாலும் நீங்கள் போதிக்கும்போது, கிறிஸ்துவில் விசுவாசம் பெற நீங்கள் தேவனின் பிள்ளைகளின் இருதயங்களுக்கு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுவருகிறீர்கள். 16 தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னதுபோல, “அவர்களுக்கு நீங்கள் ஊழியம் செய்யும் தூதர்களாக இருப்பீர்கள்.” 17
ஆயத்த சுவிசேஷம்
கிறிஸ்துவில் அதிக விசுவாசம் எப்போதுமே மாற்றத்துக்கு அல்லது மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது. 18 ஊழியம் செய்யும் தூதர்களின் திறவுகோல், ஆயத்த சுவிசேஷமான “மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பாவங்களை விட்டுவிடுதலின் சுவிசேஷத்துக்கு திறவுகோலாக தொடர்ந்து செல்லும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.” 19
நீங்கள் உங்கள் ஆரோனிய ஆசாரியத்துவ கடமைகளைப் படிக்கும்போது, பிறரை மனந்திரும்பவும், முன்னேறவும் அழைக்கிற தெளிவான பொறுப்பை பார்ப்பீர்கள். 20 அதற்கு நாம் தெரு முனையில் நின்றுகொண்டு, “மனந்திரும்புங்கள்!” என்று சத்தமிட வேண்டும் என்பது அர்த்தமல்ல. அதன் அர்த்தமாவது, நாம் மனந்திரும்புகிறோம், நாம் மன்னிக்கிறோம், நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம், மனந்திரும்புதல் கொண்டுவருகிற நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொடுக்கிறோம், ஏனெனில் நாமே அதை அனுபவித்திருக்கிறோம்.
சக குழும அங்கத்தினர்களை சந்திக்கும்போது, நான் ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களது கவனிப்பு இருதயங்களை இளக்குகிறது, மற்றும் அவர்களது சகோதரர்கள் தேவ அன்பை உணர உதவுகிறது என நான் பார்த்திருக்கிறேன். மனந்திரும்புதலின் வல்லமையைப்பற்றி ஒரு வாலிபன் தன் நண்பர்களுக்கு சாட்சி கொடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். அவன் அப்படிச் செய்தபோது, இருதயங்கள் மென்மையாக்கப்பட்டன, ஒப்புக்கொடுத்தல்கள் செய்யப்பட்டன, கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமை உணரப்பட்டது.
தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி போதித்தார்: “மனந்திரும்புவது ஒரு விஷயம். நமது பாவங்கள் விட்டுவிடப்பட்டு மன்னிக்கப்படுவது மற்றொன்று. இதைக் கொண்டு வரும் வல்லமை ஆரோனிய ஆசாரியத்துவத்தில் காணப்படுகிறது.” 21 ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆகிய ஆரோனிய ஆசாரியத்துவ நியமங்கள் பாவங்களை விட்டுவிடுவதற்காக நமது மனந்திரும்புதலை நிறைவுசெய்கிறது. 22 தலைவர் டாலின் எச். ஓக்ஸ் இவ்விதமாக விளக்கினார், “நாம் நமது பாவங்களுக்காக மனந்திரும்பி, நொறுங்கிய இருதயத்துடனும் நருங்கிய ஆவியுடனும் கர்த்தரிடம் வந்து, திருவிருந்தில் பங்கேற்க வேண்டும் என நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ... இவ்விதத்தில் நாம் நமது ஞானஸ்நான உடன்படிக்கைகளை புதுப்பிக்கும்போது, கர்த்தர் நமது ஞானஸ்நானத்தின் சுத்தமாக்கும் ஆற்றலை புதுப்பிக்கிறார்.” 23
சகோதரரே, மனந்திரும்பிய இருதயங்களுக்கு இரட்சகரின் பாவநிவர்த்தியின் மூலம் பாவங்களை விட்டுவிடுதல் கொண்டு வரக்கூடிய நியமங்களை நிர்வகிப்பது ஒரு பரிசுத்த சிலாக்கியம். 24
முதல் முறை திருவிருந்தை ஆசீர்வதிக்க வாசிக்கும்போது போராடிய ஒரு ஆசாரியனைப்பற்றி அண்மையில் நான் சொல்லப்பட்டேன். அவன் அப்படிச் செய்தபோது ஒரு வல்லமையான ஆவி அவன் மீதும் கூட்டத்தினர் மீதும் வந்தது. கூட்டத்தில் பின்னர் நியமத்தின்போது, அவன் உணர்ந்த தேவ வல்லமை குறித்து தெளிவான சாட்சி கொடுத்தான்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில், ஒரு ஆசாரிய குழுமத்தின் நால்வர் பூலோங்கோ குடும்பத்தினருக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர். இந்த அனுபவம் தன் மகனுக்கு ஒரு வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என இந்த ஆசாரியர்களில் ஒருவரின் தாய் என்னிடம் கூறினாள்.. “இயேசு கிறிஸ்துவால் அதிகாரமளிக்கப்படுவது,” 25 என்றால் என்ன என புரிந்து கொண்டனர்.
நீங்கள் அறிந்தபடியே, ஆசாரியர்கள் இப்போது ஆலயத்தில் பதிலி ஞானஸ்நானம் நிறைவேற்றும் அலுவல் செய்ய முடியும். எங்கள் சில முன்னோருக்காக என் 17 வயது மகன் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஆரோனிய ஆசாரியத்துவத்துக்கும், தேவ பிள்ளைகளின் இரட்சிப்புக்காக செயலாற்றுவதன் சிலாக்கியத்துக்காகவும் நாங்கள் இருவரும் ஆழ்ந்த நன்றியுணர்வை உணர்ந்தோம்.
வாலிபர்களே, நீங்கள் கருத்தாய் உங்கள் ஆசாரியத்துவ கடமைகளில் ஈடுபடும்போது, மனுஷனுக்கு அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டு வருவதில் தேவனுடன் பங்கு பெறுகிறீர்கள். 26 இதுபோன்ற அனுபவங்கள், உங்கள் வாஞ்சையை அதிகரித்து, மனந்திரும்புதலைப் போதித்து, ஊழியக்காரர்களாக, மனமாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க உங்களை ஆயத்தப்படுத்தும். மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவத்தில் வாழ்நாள் சேவைசெய்ய உங்களை ஆயத்தப்படுத்தும்.
யோவான் ஸ்நானன், நமது உதாரணம்
ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்களே, யோவான் ஸ்நானனோடு சக ஊழியக்காரனாக இருக்க நமக்கு சிலாக்கியமும் கடமையும் உண்டு. கிறிஸ்துவைப்பற்றி சாட்சி சொல்லவும், எல்லோரும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவும் அழைக்கவும் யோவான் அதிகாரமளிக்கப்பட்ட தூதன், அதாவது, நாம் கலந்துரையாடிய ஆரோனிய ஆசாரியத்துவத் திறவுகோல்களை அவன் பயன்படுத்தினான். யோவான் அறிவித்தான், “மனந்திரும்பலுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். … : அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.” 27
அவ்வாறு ஆரோனிய ஆசாரியத்துவம், தூதர்கள் பணிவிடை செய்யும் திறவுகோல்களுடனும் ஆயத்த சுவிசேஷத்துடனும், இந்த வாழ்க்கையில் நாம் பெறக்கூடிய மாபெரும் வரமாகிய பரிசுத்த ஆவியின் வரத்தை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மூலம் தேவனின் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வழியை ஆயத்தம் செய்கிறது. 28
ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கு, தேவன் கொடுத்தது எவ்வளவு முக்கிய பொறுப்பு!
ஒரு அழைப்பும் வாக்குத்தத்தமும்
பெற்றோரே, ஆசாரியத்துவத் தலைவர்களே, “தேவனின் ஆசாரியத்துவத்தைத் தரித்தவர்களாக, இருப்பதன் அர்த்தம் என்ன?” என வாலிபர்கள் புரிந்து கொள்ள உதவ தலைவர் மான்சனின் ஆலோசனையின் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடிகிறதா. 29 ஆரோனிய ஆசாரியத்துவத்தை புரிந்து சிறப்பாக்குதல், அவர்களை விசுவாசமிக்க மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்களாகவும், வல்லமை நிறைந்த ஊழியக்காரர்களாகவும், நீதியான கணவர்களாகவும், தகப்பன்களாகவும் ஆயத்தம் செய்யும். அவர்களது சேவை மூலம், அவர்கள் புரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆசாரியத்துவ வல்லமையின் நிஜத்தை, தேவ பிள்ளைகளின் இரட்சிப்புக்காக கிறிஸ்துவின் நாமத்தில் செயல்படும் வல்லமை என உணர்வார்கள்.
வாலிபரே, நீங்கள் செய்ய வேண்டிய ஒரு பணி தேவனிடம் உண்டு. 30 உங்கள் ஆரோனிய ஆசாரியத்துவ நியமனம், அவரது பிள்ளைகள் கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியின் வல்லமை பெற உதவ மையமாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் மையமாக இந்த பரிசுத்த கடமைகளை நீங்கள் வைக்கும்போது, எப்போதையும் விட தேவ வல்லமையை நீங்கள் உணர்வீர்கள். அவரது பணியை செய்ய ஒரு பரிசுத்த அழைப்புடன் தேவ குமாரனாக உங்கள் அடையாளத்தை புரிந்து கொள்வீர்கள். அவரது குமாரனின் வருகைக்கு வழியை ஆயத்தம்பண்ண நீங்கள் யோவான் ஸ்நானன் போல உதவுவீர்கள். இந்த சத்தியங்கள் பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.