2010–2019
முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் இரட்சிக்கப்படுவான்
ஏப்ரல் 2018


2:3

முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்

நாம் நம்பியவற்றுக்கும் அறிந்தவற்றுக்கும் விசுவாசமாயிருப்போமாக.

அன்பு சகோதர சகோதரிகளே, என் எண்ணங்கள் சிலவற்றை தெரிவிக்க கிடைத்த சந்தர்ப்பத்துக்காக நான் மிகவும் பாராட்டுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன், என் மனைவியும் நானும், சால்ட் லேக் சிட்டியின் சபை வரலாற்று அருங்காட்சியகத்தில் இடைக்கால குழந்தைகள் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்றோம். விழாவின் முடிவில் தலைவர் தாமஸ் எஸ். மான்சன் எங்களிடம் வந்து, எங்கள் கைகளைக் குலுக்கி சொன்னார், “நிலைத்திருங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” நாம் அனைவரும் அதன் சத்தியம் பற்றி உறுதியளிக்கக்கூடிய, உண்மையாகவே ஆழமான போதனை.

“முடிவுபரியந்தம் நிலைக்கிறவன் இரட்சிக்கப்படுவான்,” என இயேசு கிறிஸ்து நமக்கு உறுதியளித்தார். 1

நிலைத்திருத்தல் என்பது “சோதனை, எதிர்ப்பு, அல்லது துன்பம் இருந்தாலும் தேவ கட்டளைகளுக்கு உண்மையான ஒப்புக்கொடுத்தலில் உறுதியாயிருப்பது” 2 ஆகும்.

வல்லமையான ஆவிக்குரிய அனுபவம் உடையவர்களும், விசுவாசமிக்க சேவை செய்தவர்களும், வழிதவறிப்போய் அல்லது அவர்கள் இறுதிபரியந்தம் நிலைத்திராவிட்டால், ஆர்வமின்மையில் விழுவர். நாமனைவரும் எப்போதும் “அது எனக்கு நிகழாது,” என்ற இச்சொற்றொடரை நமது மனத்திலும் இருதயத்திலும் அழுத்தமாய் வைப்போமாக.

இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் போதித்தபோது, “அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப் போனார்கள்.

“அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி, நீங்களும் போக மனதாயிருக்கிறீர்களோ என்றார்.” 3

அவருடன் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்த நம் அனைவரையும் இயேசு கிறிஸ்து, “நீங்களும் போக மனதாயிருக்கிறீர்களோ?” என கேட்பதாக இன்று நம்புகிறேன்.

நித்தியங்கள் நமக்கு என்ன வைத்திருக்கின்றன என்ற ஆழமான சிந்தனையுடன் சீமோன் பேதுரு போல பதிலளிப்போமாக என ஜெபிக்கிறேன்: “ஆண்டவரே யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” 4

நாம் நம்பியவற்றுக்கும் அறிந்தவற்றுக்கும் விசுவாசமாக இருப்போமாக. நாம் நமது அறிவுப்படி இல்லையானால், நாம் மாறுவோமாக. தங்கள் பாவங்களில் தரித்திருக்கும் பாவிகள், சாத்தான் அவர்களை தன்னுடையவர்கள் எனக்கோரும்வரை, மன்னிக்கப்படவும், நித்தியத்தின் எல்லா ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதிக்கப்பட மனந்திரும்ப உள்ள அவர்களது சந்தர்ப்பத்தைக் கெடுத்து, மனந்திரும்பாமல் அசிங்கத்தின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.

சபையில் ஆர்வமாக பங்கேற்பதை நிறுத்தியவர்கள் மற்றும் பூமியில் நமது நித்திய பயணத்தின் நோக்கத்தின் சரியான பார்வையை இழந்தவர்களின் அநேக நியாயப்படுத்தல்களைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் சிந்தித்து, திரும்பவர நான் புத்தி சொல்கிறேன். ஏனெனில், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு, ஒருவரும் சாக்குபோக்குகள் சொல்ல முடியாது.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொண்டு முடிவுபரியந்தம் அவருக்கு சேவை செய்ய ஒரு தீர்மானத்துடன்” சம்மதித்து, எந்த மனுஷனோடும் அல்ல, ஆனால் இரட்சகரோடு உடன்படிக்கைகள் செய்தோம். 5

அவருக்கு சேவை செய்யும் நமது தீர்மானத்தையும், நமது ஆவிக்குரிய பலத்தையும், இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாச வளர்ச்சியையும் மதிப்பிட முக்கியமான வழிகளில் ஒன்று திருவிருந்து கூட்டங்களில் பங்கேற்பது.

ஓய்வு நாளில் நாம் செய்கிற மிக முக்கிய காரியம் திருவிருந்தில் பங்கேற்பதாகும். அவர் மரிப்பதற்கு முன் தன் அப்போஸ்தலர்களுக்கு இந்த நியமத்தை கர்த்தர் விளக்கினார். அமெரிக்க கண்டத்திலும் இதையே செய்தார். இந்த நியமத்தில் நாம் பங்கேற்றால், நாம் அவரை எப்போதும் நினைவு வைத்திருக்கிறோம், என பிதாவுக்கு அது ஒரு சாட்சியாக இருக்கும், அதன்படி அவரது ஆவி எப்போதும் நம்முடனிருக்க அவர் வாக்களித்திருக்கிறார் என அவர் நமக்குச் சொல்கிறார். 6

தன் குமாரன் சிப்லோனுக்கு இளைய ஆல்மாவின் போதனைகளில், நமது உடன்படிக்கைகளுக்கு, விசுவாசமாயிருக்க உதவ, ஞானமிக்க ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் நாம் காண்கிறோம்:

“நீ பெருமையாயிராதபடிக்கு பார்த்துக்கொள், உன்னுடைய ஞானத்திலோ அல்லது உன்னுடைய அதிக பெலத்திலோ மேன்மை பாராட்டாதபடி பார்த்துக்கொள்.

“தைரியத்தைப் பிரயோகி, ஆனால் அதிகப் பிரசங்கியாயிராதே, நீ அன்பால் நிறைக்கப்படும்படிக்கு உன் ஆசாபாசங்களை எல்லாம் கடிவாளமிடப் பார்த்துக்கொள். நீ சோம்பலிலிருந்து விலகப் பார்த்துக் கொள்.” 7

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு விடுமுறையின்போது, முதன்முறையாக கயாக்கிங் போக நான் விரும்பினேன். முழு ஆர்வத்துடன் ஒரு கயாக்கை வாடகைக்கு வாங்கினேன். கடலுக்குள் சென்றேன்.

சில நிமிடங்களில் ஒரு அலை கயாக்கை புரட்டியது. மிகுந்த முயற்சியுடன், துடுப்பை ஒரு கையில் வைத்துக்கொண்டு, கயாக் மற்றொரு கையிலுமாக, நான் காலூன்ற முடிந்தது .

திரும்பவும் கயாக்கை துடுப்புபோட முயன்றேன். ஆனால் சில நிமிடங்களிலேயே கயாக் மீண்டும் புரண்டது. நான் பிடிவாதமாக முயன்றேன். முடியவில்லை. பின் கயாக் பற்றி தெரிந்த ஒருவர் சொன்னார், கயாக்கில் வெடிப்பு இருந்திருக்க வேண்டும், கயாக்கில் நீர் நிரம்பியிருக்க வேண்டும், அதை நிலையில்லாமலாக்கி, கட்டுப்படுத்த முடியாமலாக்குகிறது என சொன்னார். நான் கயாக்கை கரைக்கு கொண்டு வந்தேன், அடைப்பானைத் திறந்தேன், நிச்சயமாக அதிக நீர் வெளியேறியது.

நாம் சில சமயங்களில் வாழ்க்கையில் பாவங்களோடு செல்கிறோம், கயாக்கில் கசிவு இருந்தது போல நமது ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தடுக்கிறது என நான் நினைக்கிறேன்.

நாம் நமது பாவங்களில் நிலைத்திருந்தால், நமது வாழ்க்கையில் அந்தப் பாவங்கள் உருவாக்குகிற சமநிலையின்மையினிமித்தம் நாம் புரண்டாலும் நாம் கர்த்தருடன் செய்த உடன்படிக்கைகளை மறக்கிறோம்.

எனது கயாக்கின் விரிசல் போல நமது வாழ்க்கையின் விரிசல்களைக்கூட சரி செய்ய வேண்டும். சில பாவங்களுக்காக மனந்திரும்ப அதிக முயற்சி தேவைப்படும்.

ஆகவே நாம் நம்மையே கேட்கிறோம், இரட்சகர் மற்றும் அவரது பணியைப்பற்றி நமது மனோபாவத்தைப் பொருத்தவரை நாம் எங்கிருக்கிறோம்? அவன் இயேசு கிறிஸ்துவை மறுதலித்தபோது பேதுருவின் சூழ்நிலையில் இருந்தோமா? அல்லது இரட்சகரிடமிருந்து அவன் பெற்ற “பெரிய பொறுப்புக்குப்” பிறகு அவன் பெற்ற மனோபாவத்தையும் தீர்மானத்தையும் நாம் பெறுகிற இடத்துக்கு நாம் முன்னேறி விட்டோமா? 8

அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய நாம் முயல வேண்டும், நாம் காத்துக்கொள்ள கடினமானவற்றுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். தேவையுள்ள நேரங்களிலும் பெலவீனமான நேரத்திலும், கர்த்தர் நமது பக்கத்திலிருப்பார், மற்றும் நாம் உண்மையான வாஞ்சையை தெரிவித்து அதன்படி செயல்பட்டால், அவர் “பெலவீனமுள்ளவைகளைப் பெலமுள்ளவைகளாக்குவார்.” 9

பாவத்தை மேற்கொள்ள கீழ்ப்படிதல் நமக்கு பெலனைக் கொடுக்கும். நமது விசுவாசத்தின் சோதனை அடிக்கடி விளைவுகளை அறியாமலேயே நாம் கீழ்ப்படிய நம்மை கேட்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவுபரியந்தம் நிலைத்திருக்க நமக்கு உதவ நான் ஒரு சூத்திரம் கொடுக்கிறேன்:

  1. தினமும் ஜெபியுங்கள், வேதம் வாசியுங்கள்.

  2. வாரந்தோறும் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் திருவிருந்தில் பங்கு பெறுங்கள்.

  3. நமது தசம பாகத்தையும் நமது உபவாசக் காணிக்கைகளையும் செலுத்துங்கள்.

  4. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும், வாலிபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நமது ஆலய சிபாரிசுகளை புதுப்பியுங்கள்.

  5. நமது வாழ்நாள் முழுவதும் கர்த்தரின் பணியில் சேவை செய்யுங்கள்.

சுவிசேஷத்தின் மாபெரும் சத்தியங்கள் நமது மனங்களை ஸ்திரப்படுத்துவதாக, வாழ்க்கைக் கடலிலே நமது பயணத்தில் குறுக்கிடக்கூடிய வெடிப்புகள் இல்லாமல் நமது வாழ்க்கையைக் காத்துக்கொள்வோமாக.

கர்த்தரின் வழியில் வெற்றிக்கு ஒரு விலை இருக்கிறது, அதை அடைய ஒரே வழி அந்த விலையைக் கொடுப்பதே.

நமது இரட்சகர் அவரது மாபெரும் பாவ நிவாரண பலியை நிறைவுசெய்து முடிவுபரியந்தம் நிலைத்திருந்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நமது பாவங்களுக்காகவும், வேதனைகளுக்காகவும், மன அழுத்தங்களுக்காகவும், வியாகுலத்துக்காகவும், குறைபாடுகள் மற்றும் பயங்களுக்காகவும் அவர் பாடனுபவித்தார். ஆகவே தோற்கடிக்கப்படாதவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கிரீடத்தைப் பெறவும் நிலைத்திருக்கும்படிக்கும் நமக்கு எப்படி உதவுவது , எப்படி உணர்த்துவது, நம்மை எப்படி தேற்றுவது, நம்மை எப்படி பலப்படுத்துவது என அவர் அறிவார்.

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை வித்தியாசமானது. நம் அனைவருக்கும் பாடுகளுக்கு ஒரு நேரம், மகிழ்ச்சிக்கு ஒரு நேரம், தீர்மானங்கள் செய்ய ஒரு நேரம், தடைகளை மேற்கொள்ள ஒரு நேரம், சந்தர்ப்பங்களை ஆதாயப்படுத்திக்கொள்ள ஒரு நேரம் உண்டு.

நமது சொந்த சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும், “நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை ஆதரிக்கிறேன், நான் உன்னோடு இருக்கிறேன் என தொடர்ந்து நமது பரலோக பிதா சொல்லுகிறார் என நான் சாட்சியளிக்கிறேன். விட்டு விடாதீர்கள். மனந்திரும்பி, நான் உங்களுக்குக் காட்டிய பாதையில் நிலைத்திருங்கள். நமது சிலஸ்டியல் வீட்டில் மீண்டும் நாம் ஒருவரையொருவர் பார்ப்போம் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.