குடும்ப வரலாறு மற்றும் ஆலயப் பணி: முத்திரித்தலும் குணமாக்குதலும்
நாம் குடும்ப வரலாற்றை சேகரித்து, நமது முன்னோர்களுக்காக ஆலயம் செல்லும்போது, ஒரேசமயத்தில் திரையின் இருபக்கங்களிலும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களை தேவன் நிறைவேற்றுகிறார்.
குடும்ப உறவுகள் நாம் எதிர்கொள்ளுகிற மிக பிரதிபலனுடைய ஆனாலும் சவால் நிறைந்த அனுபவங்களில் சிலவாகும். நம்மில் அநேகர் நமது குடும்பங்களுக்குள் ஒரு விதமான விரிசல்களை சந்தித்திருக்கிறோம். அப்படிப்பட்ட விரிசல் இந்த பிற்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் மறுஸ்தாபிதத்தில் இரு கதாநாயகர்களுக்குள் விரிவடைந்தது. பார்லி மற்றும் ஆர்சன் ப்ராட் சகோதரர்கள், முதல் மனம் மாறியவர்கள், நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள். இருவரும் விசுவாச சோதனைகளை எதிர்கொண்டனர், ஆனால் அசைக்க முடியாத சாட்சியுடன் அதைக் கடந்தனர். இருவரும் சத்தியத்துக்காக அதிகமாக தியாகம் செய்தும், கொடுத்தும் இருக்கிறார்கள்.
நாவூ காலத்தில் 1846ல் அவர்களது உறவில் சிக்கல் வந்தது, அது வெளிப்படையான கோபமுடன் சண்டையில் முடிந்தது. ஒரு ஆழமான நீடித்த இடைவெளி உருவானது. முதலில் பார்லி விரிசலை தீர்க்க கடிதம் எழுதினார், ஆனால் ஆர்சன் பதிலளிக்கவில்லை. ஆர்சனால் தொடங்கப்பட்டாலொழிய தொடர்பு என்றென்றைக்குமாக முடிந்துவிட்டது, என உணர்ந்து பார்லி கைவிட்டார்.1
பல வருடங்களுக்குப் பிறகு, மார்ச் 1853ல் அச்சகோதரர்களின் அமெரிக்க முதல் முன்னோரான வில்லியம் ப்ராட்டின் சந்ததிகளைப்பற்றிய ஒரு புஸ்தகம் பிரசுரம் பண்ணும் திட்டத்தைப்பற்றி ஆர்சன் அறிந்தார். குடும்ப வரலாற்றின் இப்பெட்டகத்தை பார்த்து சிறு குழந்தை போல அழத் தொடங்கினார். அவரது இருதயம் இளகியது, தன் சகோதரருடன் விரிசலை சரி செய்ய தீர்மானித்தார்.
ஆர்சன் பார்லிக்கு எழுதினார், “இப்போது என் அன்பு சகோதரனே, நமது முன்னோரான லெப்டினண்ட் வில்லியம் ப்ராட்டின் அனைத்து சந்ததிகளிலும் நம்மைப்போல சந்ததியை தேடுவதில் அதிக ஆர்வமுடையவர்கள் யாருமில்லை.” நாம் நமது முன்னோர்களுக்காக முக்கிய நியமங்களை நிறைவேற்றும்படிக்கு ஆராயவும் குடும்ப வரலாறுகளை தொகுக்கவும் பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு கடமை இருக்கிறது என புரிந்து கொண்டவர்களில், ஆர்சன் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது கடிதம் தொடர்ந்தது: “இவை அனைத்திலும் நமது பிதாக்களின் தேவனின் கரம் இருந்திருக்கிறது என நாம் அறிவோம். ... உனக்கு எழுதுவதில் நான் மிகவும் தாமதித்ததற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்... நீ என்னை மன்னிப்பாய் என நான் நம்புகிறேன்.”2 அவர்களது அசைக்க முடியாத சாட்சியுடன், விரிசலை குணமாக்கவும், காயத்தை தைக்கவும், மன்னிப்பை நாடவும், கொடுக்கவும், தங்கள் முன்னோர் மீதிருந்த அன்பு கிரியாவூக்கியாக இருந்தது. 3
ஒன்றை செய்ய தேவன் வழிநடத்தும்போது, அவருக்கு எப்போதும் மனதில் அநேக நோக்கங்கள் உண்டு. குடும்ப வரலாறும் ஆலயப்பணியும் மரித்தோருக்கு மட்டுமல்ல, ஆனால் உயிருடன் இருப்போரையும் ஆசீர்வதிக்கிறது. ஆர்சனுக்கும் பார்லிக்கும் ஒருவருக்கொருவரிடம் அது அவர்களது இருதயங்களை திருப்பியது. குடும்ப வரலாறு மற்றும் ஆலயப்பணி குணமாக்குதல் தேவைப்பட்டோருக்கு, குணமாக்க வல்லமை கொடுத்தது.
சபையாராக நமது முன்னோர்களைத் தேடி, குடும்ப வரலாற்றைத் தொகுக்க நமக்கு தெயவீகத்தால் கொடுக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது. எல்லா தேவ பிள்ளைகளுக்கும் இரட்சிப்பின் நியமங்கள் தேவை என்பதால், அது ஊக்கமளிக்கப்படுகிற பொழுதுபோக்கு என்பதை விட, உயர்வானது.4 இரட்சிப்பின் நியமங்களைப் பெறாமல் மரித்த நமது சொந்த முன்னோர்களை அடையாளம் காண வேண்டும். நாம் நியமங்களை பதிலிகளாக ஆலயங்களில் நிறைவேற்றலாம், நியமங்களை ஏற்றுக்கொள்ள நமது முன்னோர்கள் தெரிந்து கொள்ளலாம். நமது தொகுதி, பிணைய அங்கத்தினர்களையும் அவர்களது குடும்பப் பெயர்களை கண்டுபிடிக்க ஊக்குவிக்கலாம்.5 குடும்ப வரலாறு மற்றும் ஆலயப்பணி மூலம் மரித்தோரை மீட்க நாம் உதவலாம் என்பது மிகவும் வியப்புக்குரியது.
ஆனால் இன்று நாம் குடும்ப வரலாற்றிலும் ஆலயப்பணியிலும் பங்கேற்கும்போது, தீர்க்கதரிசிகளாலும் அப்போஸ்தலர்களாலும் வாக்களிக்கப்பட்ட “குணமாக்கும்” ஆசீர்வாதங்களை நாம் கோர முடியும்.6 அநித்தியத்தில் அவற்றின் சாத்தியம், குறிப்பான தன்மை, மற்றும் விளைவுகளினிமித்தம் இந்த ஆசீர்வாதங்கள் மிகவும் வியப்புக்குரியவை. இந்த நீண்ட பட்டியல் இந்த ஆசீர்வாதங்களை அடக்கியுள்ளன:
-
இரட்சகர் மற்றும் அவரது பாவநிவாரண பலியைப்பற்றிய அதிக புரிதல்,
-
நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தையும் வழிகாட்டலையும் உணர அதிக செல்வாக்கு,7
-
அதிகரித்த விசுவாசம், அதனால் இரட்சகரிடம் மனமாற்றம் ஆழமாயும் தரித்திருப்பதாயும் ஆகும்படிக்கு,
-
கற்கவும் மனந்திரும்பவும் அதிகரித்த திறமையும் ஊக்கமும்8, ஏனெனில் நாம் யார், எங்கிருந்து வந்தோம், நாம் எங்கு போகிறோம் என்ற தெளிவான பார்வை.
-
நமது இருதயங்களில் அதிகரித்த சுத்திகரித்தலும், பரிசுத்தமாதலும், நடுநிலை வகிக்கும் செல்வாக்கும்,
-
கர்த்தரின் அன்பை உணர அதிகரித்த திறமை மூலம் அதிகரித்த சந்தோஷம்,
-
நமது தற்போதைய, கடந்த கால, அல்லது வருங்கால குடும்ப சூழ்நிலை அல்லது நமது குடும்ப மரம் எவ்வளவு பரிபூரணமற்றதானாலும், அதிகரித்த குடும்ப ஆசீர்வாதங்கள்,
-
முன்னோருக்கும், உயிருடனிருக்கும் உறவினர்கள் மீதும் அதிகரித்த அன்பு, ஏனெனில் நாம் இனிமேலும் தனிமையை உணர்வதில்லை.
-
குணமாக்குதல் தேவைப்படுகிறவர்களை பிரித்தறிய அதிகரித்த வல்லமை, அதனால் கர்த்தரின் உதவியுடன் பிறருக்கு சேவை செய்தல்,
-
சோதனைகளிலிருந்தும் சத்துருவின் அதிகரிக்கும் செல்வாக்கிலிருந்தும் அதிகரித்த பாதுகாப்பு மற்றும்
-
கலங்கிய, உடைந்த அல்லது கவலைப்பட்ட இருதயங்களை சரிப்படுத்தி, காயப்பட்டவர்களை முழுமையாக்கவும் அதிகரித்த உதவி.9
இந்த எந்த ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் ஜெபித்திருந்தால், குடும்ப வரலாற்று மற்றும் ஆலயப்பணியில் பங்குபெறுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது உங்கள் ஜெபங்கள் பதிலளிக்கப்படும். மரித்தோருக்காக நியமங்கள் நிறைவேற்றப்படும்போது, பூமியிலுள்ள தேவ பிள்ளைகள் குணமாக்கப்படுகிறார்கள். சபையின் தலைவராக அவரது முதல் செய்தியில் தலைவர் ரசல் எம். நெல்சன், “உங்கள் ஆலய ஆராதனையும், அங்கு உங்கள் முன்னோருக்காக உங்கள் சேவையும், அதிகரித்த தனிப்பட்ட வெளிப்படுத்தலுடன் உங்களை ஆசீர்வதிக்கும், உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க உங்கள் ஒப்புக்கொடுத்தலை பெலப்படுத்தும் என அறிவித்ததில் வியப்பில்லை.”10
ஒரு முற்கால தீர்க்கதரிசி கூட உயிரோடிருப்போருக்கும் மரித்தோருக்கும் ஆசீர்வாதங்களை பார்த்தான்.11 ஒரு பரலோக தூதன் எசேக்கியேலுக்கு தண்ணீர் பீச்சிக்கொண்டு வருகிற ஆலயத்தைப்பற்றிய ஒரு தரிசனத்தை எசேக்கியேலுக்கு காண்பித்தான். எசேக்கியேல் சொல்லப்பட்டான்:
“இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப் போய் வனாந்தர வழியாய் ஓடி கடலில் விழும், கடலில் பாய்ந்து விழுந்த பின்பு அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
“சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெல்லாம் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும், ... இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் போகும்.”12
தண்ணீரின் இரண்டு குணநலன்கள் கவனிக்கத்தக்கவை. முதலில் அந்த சிற்றோடைக்கு கிளை நதிகள் இல்லை என்றாலும், அது ஓட ஓட, அகலமாகவும் ஆழமாகவும் ஆகி, பலத்த ஆறாகியது. தனிப்பட்டவர்கள் குடும்பங்களாக முத்திரிக்கப்படும்போது ஆலயத்திலிருந்து வரக்கூடிய ஆசீர்வாதங்களுடன் இதுபோன்ற ஒன்று நிகழ்கிறது. முத்திரிக்கும் நியமங்கள் குடும்பங்களை ஒன்றாக ஒட்டவைக்கும்போது, தலைமுறைகள் ஊடாக முன்னும் பின்னும் ஓடி அர்த்தமிக்க வளர்ச்சி ஏற்படுகின்றது.
இரண்டாவதாக அந்த ஆறு, தான் தொட்டதையெல்லாம் புதுப்பித்தது. ஆலய ஆசீர்வாதங்கள் அதுபோல குணமாக்க ஒரு பிரமிக்கவைக்கும் திறமையுடையன. ஆலய ஆசீர்வாதங்கள் இருதயங்களையும் வாழ்க்கையையும் குடும்பங்களையும் குணமாக்க முடியும்.
நான் விளக்குகிறேன். 1999ல் டாட் என்ற பெருடைய வாலிபன் இரத்த நாள சிதைவினால் மயங்கி விழுந்தான். டாடும் அவனது குடும்பத்தினரும் சபையின் அங்கத்தினர்களானாலும், அவ்வப்போது தான் வந்தனர், ஆலய ஆசீர்வாதங்களை ஒருவரும் அனுபவித்திருக்கவில்லை. டாடின் வாழ்க்கையின் கடைசி இரவில் அவனது தாய், பெற்றி அவனது படுக்கையருகில் அமர்ந்து கொண்டு, அவனது கையில் தட்டி, “டாட் நீ உண்மையாகவே மரிக்க வேண்டுமானால், உன் ஆலயப்பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்வேன்.” அடுத்த காலையில் டாட் மூளை செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டான். ராட் என்ற பெயருடைய, எனது நோயாளிக்கு ராடின் இருதயம் மருத்துவர்களால் மாற்றப்பட்டது.
மாற்றுக்குப்பின் சில மாதங்கள் கழித்து, அவனது இருதய நன்கொடையாளர் குடும்பத்தைப்பற்றி ராட் அறிந்து அவர்களோடு தொடர்புகொள்ளத் தொடங்கினான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, டாடின் அம்மா பெற்றி, முதல் முறையாக அவர் முதல்முறை ஆலயம் செல்லும்போது உடனிருக்குமாறு அழைத்தார். ராடும் பெற்றியும் முதல் முறையாக செயின்ட் ஜார்ஜ் யூட்டா ஆலயத்தின் சிலஸ்டியல் அறையில் சந்தித்தனர்.
அதன்பின் ஒருசமயம், டாடின் தகப்பனான, பெற்றியின் கணவனர் மரித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தன் மரித்த மகன் ஆலய நியமங்களைப் பெற பெற்றி, ராடை அழைத்தார். நன்றியுணர்வுடன் ராட் செய்தான், செயின்ட் ஜார்ஜ் யூட்டா ஆலயத்தில் பதிலிப்பணி நிறைவேறியது. பலிபீடத்தில் எதிரெதிரில் முழங்காலிட்டு தன் பேரன் பதிலியாக இருக்க பெற்றி தன் மரித்த கணவருடன் முத்திரிக்கப்பட்டார். பின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவர்களோடு பலிபீடத்தில் ராட் சேர்ந்து கொள்ள அழைத்தார். டாடின் இருதயம் இன்னும் ராடின் நெஞ்சுக்குள் துடித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மகனுக்கு பதிலியாக ராட் அவர்களருகில் முழங்காலிட்டான். ராடின் இருதய நன்கொடையாளர் டாட் நித்தியம் முழுமைக்கும் தன் பெற்றோருடன் முத்திரிக்கப்பட்டான். பல ஆண்டுகளுக்கு முன் தன் மரித்துக் கொண்டிருந்த மகனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை டாடின் அம்மா காத்துக்கொண்டார்.
ஆனால் கதை அங்கு முடியவில்லை. இருதய மாற்றுக்கு பதினைந்து வருடங்கள் கழித்து, ராட் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, ப்ரோவோ யூட்டா ஆலயத்தில் முத்திரிப்பை நிறைவேற்ற என்னை அழைத்தான். திருமண நாளில் நான் ராடையும் அவனது அற்புதமான மணப்பெண் கிம்மையும், முத்திரிக்கும் அறைக்கு பக்கத்து அறையில் சந்தித்தேன். அங்கு அவர்களது குடும்பங்களும் நெருங்கிய நண்பர்களும் காத்திருந்தனர்.
ராட் சொன்னான், “ஆம், என் நன்கொடையாளர் குடும்பம் இங்கிருக்கிறார்கள், நீங்கள் அவர்களை சந்திக்க விரும்புவீர்கள்.”
நான் ஆச்சரியப்பட்டு கேட்டேன், “அவர்கள் இங்கிருக்கிறார்களா? இப்போதா?
ராட் பதிலளித்தான், “ஆம்.”
நான் சுற்றிவந்து குடும்பத்தை முத்திரிக்கும் அறைக்கு வெளியே அழைத்தேன். பெற்றி, அவரது மகள் மற்றும் அவரது மருமகன் எங்களோடு வந்தனர். ராட் பெற்றியை அணைத்து வரவேற்றான், வந்ததற்காக நன்றிசொல்லி, அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். ராட் சொன்னான், “பெற்றி, இது மூப்பர் ரென்லண்ட். அநேக ஆண்டுகளாக உங்கள் மகனது இருதயத்தை கவனித்துக்கொண்ட மருத்துவர்.” அவர் அறையைக் கடந்து வந்து என்னைத் தழுவிக்கொண்டார். அடுத்த பல நிமிடங்களுக்கு அங்கே அணைப்புகளும் ஆனந்தக் கண்ணீரும் இருந்தது.
நாங்கள் அமைதியடைந்த பின், முத்திரிக்கும் அறைக்கு நகர்ந்தோம், அங்கு ராடும் கிம்மும் இச்சமயத்துக்கும் நித்தியத்துக்கும் முத்திரிக்கப்பட்டனர். ராடும், பெற்றியும், கிம்மும், நானும் பரலோகம் மிகவும் அருகிலிருந்தது, அநித்தியத்தின் திரையை முன்பு கடந்து சென்ற பிறர் எங்களுடன் அங்கு இருந்தார்கள் என சாட்சியளிக்க முடியும்.
தேவன் தனது எல்லையில்லா திறமையால், சோகம், இழப்பு, மற்றும் கஷ்டம் இருந்தாலும் தனிநபர்களையும் குடும்பங்களையும் முத்திரித்து குணமாக்குகிறார். நாம் சில சமயங்களில் ஆலயங்களில் அனுபவிக்கிற உணர்வுகளை பரலோகத்தைப் பார்த்ததற்கு ஒப்பிடுகிறோம்.13 ஆனால் அன்று ப்ரோவோ யூட்டா ஆலயத்தில் சி.எஸ். லூயிஸின் வாசகம் என்னுள் எதிரொலித்தது, “[வாழ்பவர்கள்] உலக பாடுகளைப்பற்றி சொல்லுகிறார்கள். ‘எதிர்கால அமைதி அதை சரிப்படுத்த முடியாது,’ ஒருமுறை பெற்ற பரலோகம் திரும்பி வந்து, வியாகுலத்தையும் மகிமையாக்கும் என அறியாமல். ... ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சொல்வார்கள், ‘நாங்கள் பரலோகத்தைத் தவிர வேறெங்கும் வாழ்ந்ததில்லை.’”14
தேவன் நம்மை பெலப்படுத்தி, உதவிசெய்து, நம்மைத் தாங்குவார்.15 நமது ஆழமான துயரங்களின் போது கூட நம்மைபரிசுத்தப்படுத்துவார். 16 நாம் குடும்ப வரலாறுகளை சேகரித்து, நமது முன்னோர்களுக்காக ஆலயம் செல்லும்போது, திரையின் இருபக்கத்திலும் ஒரே சமயத்தில் இந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களை தேவன் நிறைவேற்றுகிறார். அதுபோலவே நமது தொகுதிகளிலும் பிணையங்களிலும் அதைச் செய்ய பிறருக்கு உதவும்போது நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஆலயத்துக்கு அருகில் வசிக்காத அங்கத்தினர்களும் குடும்ப வரலாற்றுப் பணியில் பங்கேற்று, ஆலய நியமங்கள் நிறைவேற்றப்பட தங்கள் முன்னோர் பெயர்களை சேகரித்தால் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
எனினும் தலைவர் ரசல் எம். நெல்சன் எச்சரித்தார்: “பிறர் பெற்ற ஆலய மற்றும் குடும்ப வரலாற்று அனுபவங்கள் குறித்து நாம் நாள் முழுவதும் உணர்த்தப்படலாம். ஆனால் நாமே உண்மையாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமானால், நாம் ஏதாவது செய்ய வேண்டும்.” அவர் தொடர்ந்தார், “அதிக ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பணி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது, முன்னுரிமைப்படி நேரத்தை தியாகம் செய்தல் போன்ற தியாகத்தை செய்ய நான் ஜெபத்தோடு கருத்தில் கொள்ள உங்களை அழைக்கிறேன்.”17 நீங்கள் தலைவர் நெல்சனின் அழைப்பை ஏற்றுக்கொண்டால், நீங்கள் உங்கள் குடும்பத்தை கண்டுபிடித்து, கூட்டிச்சேர்த்து, இணையுங்கள். கூடுதலாக எசேக்கியேலால் பேசப்பட்ட ஆறு போல உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆசீர்வாதங்கள் பெருகும். குணமாக்குதல் தேவைப்படுவனவற்றுக்கு குணமாக்குதலை நீங்கள் காண்பீர்கள்.
இவ்வூழியக் காலத்தின் முதலில் குடும்ப வரலாறு மற்றும் ஆலயப்பணியின் குணமாக்கும் மற்றும் முத்திரிக்கும் விளைவுகளைப்பற்றி அனுபவம் பெற்றவர்களில் ஆர்சனும் ப்ராட்டும் இருந்தனர். பெற்றியும் அவரது குடும்பமும், ராடும் அதை அனுபவித்தார்கள். நீங்களும் அனுபவிக்கலாம். அவரது பாவநிவாரண பலி மூலம், மரித்தோருக்கும் உயிரோடிருப்பவர்களுக்கும் இந்த ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்து வழங்குகிறார். இந்த ஆசீர்வாதங்களினிமித்தம் நாம் உருவகமாக, நாம் “பரலோகம்… தவிர வேறெங்கும் வாழவில்லை” என காண்போம்.18இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் அவ்வாறே சாட்சியளிக்கிறேன், ஆமென்.