2010–2019
உணர்த்துதலான ஊழியம்
ஏப்ரல் 2018


உணர்த்துதலான ஊழியம்

பிறருக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தும்போது, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம். அதனால்தான் இரட்சகருக்காக சேவை செய்ய நாம் ஆசாரியத்துவ பொறுப்பு பெற்றிருக்கிறோம்.

என்னுடைய அன்பான சகோதரரே, இந்த வரலாற்று முக்கியத்துவ பொது மாநாட்டில் உங்களுடன் பேசுவதற்கான தருணத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 17வது தலைவராக தலைவர் ரசல் எம், நெல்சனை நாம் ஆதரித்தோம். ஒவ்வொரு நாளும் அவருடன் பணியாற்றும் ஆசீர்வாதம் எனக்கிருக்கும்போது, கர்த்தருடைய உண்மையான சபையை நடத்த தலைவர் நெல்சன் தேவனால் அழைக்கப்பட்டவர் என்ற பரிசுத்த ஆவியின் உறுதியை நான் உணர்ந்தேன்.

மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் மற்றும் மூப்பர் யூலிசஸ் சோர்ஸும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களாக பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்களென்பதுவும் எனது சாட்சி. நான் அவர்களை நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். அவர்களுடைய ஊழியத்தால் அவர்கள் உலகமுழுவதிலும் ஜீவிக்கிற பல தலைமுறைகளை ஆசீர்வதிப்பார்கள்.

மற்றொரு காரணத்தினாலும் இந்த மாநாடு வரலாற்று முக்கியமானது. அவருடைய சபைக்கு கர்த்தருடைய ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தில் ஒரு உணர்த்துதலான முன்னேற்றப் படியை தலைவர் நெல்சன் அறிவித்தார். நமது ஆசாரியத்துவ பொறுப்புகளை நாம் நன்றாக நிறைவேற்றும்படியாக தொகுதிகளிலும் பிணையங்களிலும் ஆசாரியத்துவ குழுமங்களுக்கு ஒரு புதிய அமைப்பு இந்த திட்டத்தில் அடங்குகிறது. அந்த பொறுப்புகள் அனைத்தும் நமது பிதாவின் பிள்ளைகளைக் கவனிக்கிற நமது பொறுப்புகளைச் சார்ந்தது.

அவருடைய பரிசுத்தவான்களுக்கு அன்பான அக்கறையைக் கொடுக்க கர்த்தருடைய திட்டம் பலஆண்டுகளில் அநேக வடிவங்கள் எடுத்தன. நாவூவின் ஆரம்ப நாட்களில், வறுமையால் உடைந்துபோய் பட்டணத்திற்குள் வெள்ளமென புகுந்தவர்களைக் கவனிக்க ஒரு திட்டமிட்ட வழி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு தேவையாயிருந்தது. ஐரிங்ஸ், பென்னியன்ஸ், ராம்னீஸ் மற்றும் ஸ்மித்ஸ் என்ற எனது நான்கு கொள்ளுத்தாத்தாக்கள் அவர்களுக்கு மத்தியிலிருந்தார்கள். அந்த பரிசுத்தவான்களுக்கு பூகோள ரீதியில் தீர்க்கதரிசி கவனிப்பை அமைத்தார். இல்லினாய், பட்டணத்தின் அந்த பிரிவுகள் “தொகுதிகள்” என அழைக்கப்பட்டன.

பரிசுத்தவான்கள் சமவெளிகளோடே நகர்ந்தபோது ஒருவருக்கொருவரான அவர்களுடைய கவனிப்புக்காக “குழுக்களாக” அமைக்கப்பட்டனர். என்னுடைய தகப்பன் வழி கொள்ளுத்தாத்தாக்களில் ஒருவர், இப்போதுள்ள ஓக்லஹோமாவில் அவருடைய ஊழியத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது பாதையில் ஒரு குழுவை சந்தித்தார். அவர் வியாதியினால் மிகவும் பெலவீனமாக இருந்து அவரும் அவருடைய கூட்டாளியும் ஒரு சிறிய வண்டியில் மல்லாந்து படுத்திருந்தனர்.

அந்த மோசமான வண்டியிலிருந்தவர்களுக்குதவ இரண்டு இளம்பெண்களை குழுவின் தலைவர் அனுப்பினார். அவர்களில் ஒருவரான ஸ்விட்சர்லாந்தில் மனமாறிய ஒரு இளம் சகோதரி ஊழியக்காரர்களில் ஒருவரைப் பார்த்து மனதுருக்கமடைந்தார். பரிசுத்தவான்களின் அந்த குழுவால் அவர் காப்பாற்றப்பட்டார். அவருடைய இளம் பாதுகாவலர் பக்கத்திலிருக்க சால்ட் லேக் சிட்டிக்கு எஞ்சியிருந்த பாதையில் நடக்க போதுமான அளவுக்கு குணமானார். அவர்கள் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர் என்னுடைய கொள்ளுத்தாத்தாவான ஹென்றி பி. ஐரிங்காகி, அவருடைய மனைவி என்னுடைய கொள்ளுப்பாட்டியான மரியா பொம்மெலி ஐரிங்கானார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு கண்டத்திலிருந்து கடந்துவருவது மிகுந்த கடினமானதென ஜனங்கள் குறிப்பிட்டபோது, என் கொள்ளுப்பாட்டி சென்னார், “இல்லை. அது கஷ்டமாக இல்லை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்தை நாங்கள் இருவரும் கண்டுபிடித்தோமென்ற அந்த அற்புதத்தினிமித்தம் நாங்கள் நடந்தோம், நாங்கள் பேசினோம். அது எனக்கு நினைவிலிருக்கிற மிக சந்தோஷமான நேரம்.”

அப்போதிலிருந்து, ஒருவருக்கொருவர் அவருடைய பரிசுத்தவான்களுக்குதவ வெவ்வேறான வழிகளை கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார். இப்போது அனைத்து தொகுதி அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பாக பணிபுரிகிற தொகுதி மற்றும் பிணைய மட்டங்களில் பெலப்படுத்தப்பட்ட இணைக்கப்பட்ட குழுமங்களான, குழுமங்களால் நம்மை இப்போது ஆசீர்வதித்திருக்கிறார்.

அவர்களுக்காக அவர் அக்கறையாயிருந்த விதமாக அவருடைய பரிசுத்தவான்கள் ஒருவருக்கொருவர் அக்கறையாயிருக்க கர்த்தரின் எண்ணத்தில் வெற்றிகரமாக இருக்க, நகராட்சி தொகுதிகள், குழுக்கள் பெலப்படுத்தப்பட்ட குழுமங்கள் அனைத்திற்கும் குறைந்தது இரண்டு காரியங்கள் தேவையாயிருக்கினறன. தங்களுடைய சொந்த நன்மைக்கும் மேலாக ஒருவருக்கொருவருக்காக கிறிஸ்துவின் அன்பை பரிசுத்தவான்கள் உணரும்போது அவர்கள் சாதிக்கிறார்கள். “தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய அன்பு” (மரோனி 7:47) என வேதம் அழைக்கிறது. கவனிப்பவர் உதவ முயற்சிக்கும் நபருக்கு சிறந்ததென கர்த்தர் அறிந்திருக்கிறதை, அவர் அறிய பரிசுத்த ஆவி வழிகாட்டுகிறபோது, அவர்கள் சாதிக்கிறார்.

சமீபத்திய வாரங்களில் அடிக்கடி கர்த்தர் என்ன செய்யப்போகிறாரென எப்படியாவது அவர்கள் எதிர்பார்ப்பதைப்போல, இன்று அறிவிக்கப்பட்டதுபோல என் முன்னாலேயே சபையின் அங்கத்தினர்கள் நடந்திருக்கிறார்கள். இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒன்றாவதாக, கர்த்தருக்காக தங்களுடைய சேவையில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களால் எதை நிறைவேற்றமுடியுமென புரிந்துகொண்டிருக்கிற ஆரோனிய ஆசாரியத்துவத்திலுள்ள ஒரு 14வயது சிறுவனால் ஒரு எளிய திருவிருந்துக்கூட்டத்தில் ஒரு உரை. இரண்டாவதாக, கிறிஸ்துவின் அன்புடன் ஒரு குடும்பத்திற்கு சேவை செய்ய உணர்த்தப்பட்ட ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்.

முதலாவதாக, நான் இருந்த ஒரு தொகுதி திருவிருந்துக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த வாலிபனின் வார்த்தைகளை உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுக்கு 14 வயதாயிருந்தபோது நீங்கள் எப்படியிருந்தீர்களென நினைவுகூர முயற்சித்து, மிக இளமையான ஒரு வாலிபனுக்கு தெரிந்திருப்பதைவிட அதிகமாக அவன் சொல்வதைக் கேளுங்கள்.

கடந்த ஆண்டு எனக்கு 14 வயதானபோது எங்கள் தொகுதியில் ஆசிரியர் குழுமத்தில் ஒரு அங்கத்தினராயிருக்க உண்மையில் நான் விரும்பினேன். ஒரு ஆசிரியருக்கு இன்னமும் ஒரு உதவிக்காரனின் பொறுப்பு மற்றும் சில புதிய பொறுப்புகள் இருக்கின்றன.

நம்மில் சிலர் ஆசிரியர்களாயிருக்கிறோம், ஒருநாள் மற்றவர்களுமிருப்பார்கள், சபையிலுள்ள ஒவ்வொருவரும் ஆசாரியத்துவத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆகவே ஒரு ஆசிரியரின் கடமைகளைப்பற்றி அதிகமாக அறிந்திருப்பது நம் அனைவருக்கும் முக்கியமானது.

“எல்லாவற்றிற்கும் முதலாவதாக, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:53 சொல்கிறது, ‘எப்போதும் சபையைக் கண்காணித்து, அவர்களோடிருந்து அவர்களை பெலப்படுத்துவது ஆசிரியரின் கடமை.’

“அடுத்து, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:54–55 சொல்கிறது

“சபையில் எந்த அக்கிரமுமில்லாமலும், ஒருவருக்கொருவர் மனக்கடினமில்லாதிருக்கவும், பொய் சொல்லாமலும், புறங்கூறாமலிருக்கவும், தூஷணம்பேசாதிருக்கவும் பார்த்துக்கொள்ளவேண்டும்,

“அடிக்கடி சபை ஒன்றுகூடுவதையும், எல்லா அங்கத்தினர்களும் தங்கள் கடமையைச் செய்வதையும் பார்த்துக்கொள்ளவேண்டும்

வாலிபன் தொடர்ந்தான்,

“சபையைக் கவனிப்பது மாத்திரம் நமது பொறுப்பல்ல ஆனால் இது அவருடைய சபையாயிருப்பதால் கிறிஸ்து கவனிப்பதைப்போல சபையிலுள்ள ஜனங்களைக் கவனிப்பதுவும் நமது பொறுப்பாகுமென கர்த்தர் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார். கற்பனைகளைக் கைக்கொள்ள, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க, நேர்மையாயிருக்க, நல்ல நண்பர்களாயிருக்க, ஒன்றுகூடி சந்தோஷமாயிருக்க நாம் முயற்சித்துக்கொண்டிருந்தால், பின்னர், நமக்குள் பரிசுத்த ஆவியிருக்கவும், நாம் என்ன செய்யவேண்டுமென பரலோக பிதா விரும்புகிறாரென அறிந்துகொள்ளவும் நமக்கு சாத்தியமாகும். நாம் செய்யவில்லை என்றால் பின்னர் நமது அழைப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியாது.”

அவன் தொடர்ந்து சொன்னான்.

ஒரு நல்ல வீட்டுப்போதகராயிருப்பதால், சபையில் அங்கத்தினர்களை வாழ்த்துவதால், திருவிருந்தை ஆயத்த்தப்படுத்துவதால், வீட்டில் உதவியாயிருப்பதால், சமாதானம்பண்ணுகிறவராயிருப்பதால் ஒரு ஆசிரியர் நல்ல எடுத்துக்காட்டை உண்டாக்க தேர்ந்தெடுக்கும்போது, அவருடைய ஆசாரியத்துவத்தை கனம்பண்ணவும், அவருடைய அழைப்பை நிறைவேற்றவும் அவர் தேர்ந்தெடுக்கிறார்.

“நல்ல ஆசிரியராயிருப்பதென்றால், நாம் சபையிலிருக்கும்போது அல்லது சபை நிகழ்ச்சிகளில் மட்டும் பொறுப்பாயிருப்பது என்று அர்த்தமல்ல. ‘நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு’ (1 தீமோத்தேயு 4:12).” என அப்போஸ்தலனாகிய பவுல் போதித்தான்.

பின்னர் அந்த வாலிபன் சொன்னான்,

“நாம் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் அது பொருட்டின்றி எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாயிருக்க நம்மால் முடியும்.

“ப்ரவுன் குடும்பத்தினருக்கு என் தகப்பனும் நானும் வீட்டுப்போதகம் செய்தோம். 1 அங்கே நாங்கள் போகிற ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கவும் அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளவும் எனக்கு நல்ல நேரமிருந்தது. நாங்கள் அங்கே போகும்போதெல்லாம், கேட்க அவர்கள் விருப்பமுள்ளவர்களாயிருந்து, எப்போதுமே பகிர்ந்துகொள்ள அவர்களிடம் நல்ல கதைகளிருந்தன என்பது ப்ரவுன் குடும்பத்தினரைப்பற்றி உண்மையில் நான் விரும்புகிற ஒரு காரியம்.

வீட்டுப்போதகத்தினால் தொகுதியிலுள்ள ஜனங்களை நாம் நன்றாகத் தெரிந்திருக்கும்போது ஆசிரியரின் அடுத்த கடமையான அதாவது சபையில் அங்கத்தினர்களுக்கு வாழ்த்துதல் தெரிவிப்பதை இது எளிதாக்குகிறது. ஜனங்களுக்கு உதவி செய்வது வரவேற்பை உணரவைத்து, சபையில் தொகுதியிலுள்ள அனைத்து அங்கத்தினர்களையும் அன்பாக உணரவைத்து, திருவிருந்தில் பங்கேற்க ஆயத்தப்படுத்த உதவுவதும் அடங்குகிறது.

“சபைக்கு வருகிற அங்கத்தினர்களை வாழ்த்திய பின்னர் ஒவ்வொரு வாரமும் திருவிருந்தை ஆயத்தப்படுத்துவதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆசிரியர்கள் உதவுகிறார்கள். ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியாயிருப்பதால் இந்த தொகுதியில் திருவிருந்தை ஆயத்தப்படுத்தலையும் பரிமாறுதலையும் உண்மையில் நான் விரும்புகிறேன். திருவிருந்தை நான் ஆயத்தப்படுத்தி பரிமாறும்போது எப்போதுமே பரிசுத்த ஆவியை நான் உணருகிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதைச் செய்ய என்னால் முடிகிறது எனக்கு ஒரு உண்மையான ஆசீர்வாதம்.

திருவிருந்தைப் பரிமாறுகிறதைப்போன்ற சில சேவைகளை ஜனங்கள் பார்த்து அதைச் செய்வதற்காக எங்களுக்கு நன்றி சொல்கிறார்கள், திருவிருந்தை ஆயத்தப்படுத்துதல் போன்ற பிற சேவை வழக்கமாக யாராலும் கவனிக்கப்படாமல் செய்யப்படுகிறது. நாம் சேவை செய்வதை ஜனங்கள் பார்த்தால் அது முக்கியமில்லையா, நாம் அவருக்கு சேவை செய்கிறோம் என்பதை கர்த்தர் அறிகிறார் என்பதே முக்கியம்.

“ஆசிரியர்களாக, நமது ஆசாரியத்துவ பொறுப்புகளை நிறைவேற்றுவதால், சபையை, நமது நண்பர்களை, நமது குடும்பங்களைப் பெலப்படுத்த நாம் எப்போதுமே முயற்சிக்கவேண்டும். இது எப்போதுமே எளிதாயிருக்காது ஆனால் ‘தாம் கட்டளையிட்ட காரியத்தைச் செய்து முடிக்கக்கூடிய ஒரு வழியை ஆயத்தப்படுத்தினாலொழிய’ (1 நேபி 3:7) கர்த்தர் நமக்கு எந்தக் கட்டளைகளையும் கொடுப்பதில்லை”.

“நாம் [இயேசு கிறிஸ்துவைப்] பின்பற்ற தேர்ந்தெடுத்தால் நாம் சிறப்பாயிருப்போமென நான் அறிவேன்.” என்று சொல்லி அந்த வாலிபன் முடிக்கும்போது, அவனுடைய முதிர்ச்சியிலும் அறிவிலும் நான் தொடர்ந்து ஆச்சரியப்பட்டேன்.

ஒருமாதத்திற்கு முன்பு, ஒரு தொகுதி திருவிருந்துக கூட்டத்தில் ஆசாரியத்துவ சேவையின் மற்றொரு கதை கூறப்பட்டது. மீண்டும் நான் அங்கிருந்தேன். பெலப்படுத்தப்பட்ட ஆசாரியத்துவக் குழுமங்களுடன் துல்லியமாக என்ன நடக்கவேண்டுமென கர்த்தர் விரும்புகிறாரென்பதை இந்த மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற முதிர்ச்சியானவர் விவரித்துக்கொண்டிருக்கிறார் என்பது பேசியபோது அவருக்குத் தெரியாது. அவருடைய விவரத்தின் ஒரு சாராம்சம் இங்கே.

அவரும் அவருடைய வீட்டுப்போதகக் கூட்டாளியும் ஏழு குடும்பங்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். அநேகமாக அவர்கள் அனைவரும் சந்திப்பை விரும்பவில்லை. வீட்டுப்போதகர்கள் அவர்களுடைய அடுக்குமாடி வீட்டிற்குச் சென்றபோது அவர்கள் கதவைத் திறக்க மறுத்தனர். அவர்களைத் தொலைபேசியில் அழைத்தபோது அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது மறுஉத்தரம் வரவில்லை. இறுதியாக, இந்த மூத்த கூட்டாளி ஒரு கடிதம் எழுதுகிற ஊழியத்தை ஆரம்பித்தார். ஒரு பதில் வருமென்ற நம்பிக்கையில் பிரகாசமான மஞ்சள் உறையைப் பயன்படுத்தவும் அவர் ஆரம்பித்தார்.

ஏழு குடும்பங்களில் ஒருவர் ஐரோப்பாவிலிருந்து குடியேறிய தனிமையாயிருந்த உற்சாகமிழந்த சகோதரியாயிருந்தார். அவளுக்கு இரண்டு சிறுபிள்ளைகளிருந்தனர்.

அவளைத் தொடர்புகொள்ள அநேக முயற்சிகளுக்குப் பின்னர் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. வீட்டுப்போதகர்களை சந்திக்கமுடியாத அளவுக்கு அதிக வேலையிலிருந்ததாக மிகஅவசரத்தில் தகவலனுப்பினார். அவளுக்கு இரண்டு வேலைகளிருந்தன, அதில் ஒன்று இராணுவத்திலிருந்தது. அவளுடைய முதன்மையான வேலை ஒரு காவல்அதிகாரி, அவளுடைய தொழில்நோக்கம் துப்பறிவாளராகி பின்னர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கே அவளுடைய வேலையைத் தொடருவதாயிருந்தது.

அவளுடைய வீட்டில் அவளை வீட்டுப்போதகர்கள் ஒருபோதும் சந்திக்கமுடியாதிருந்தது. அவர் அடிக்கடி அவளுக்கு செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பிள்ளைக்கும் விடுமுறை அட்டைகளுடன், கையால் எழுதப்பட்ட கடிதத்தை அனுப்பினார்.

அவருக்கு பதில் வரவில்லை. ஆனால் யார் அவளுடைய வீட்டுப்போதகர்களென்றும், அவர்களது ஆசாரியத்துவ சேவையை அவர்கள் தொடர்ந்து செய்யும்படி அவர்களை எவ்வாறு தொடர்புகொள்வதென்றும் அவளுக்குத் தெரியும்.

பின்னர் ஒரு நாள் அவளிடமிருந்து ஒரு அவசரச் செய்தி அவருக்கு வந்தது. அவளுக்கு உடனடியான உதவி தேவையாயிருந்தது. ஆயர் யாரென்று அவளுக்குத் தெரியாது ஆனால் அவளுடைய வீட்டுப்போதகர்களை அவளுக்குத் தெரியும்.

சில நாட்களில் இராணுவ பயிற்சிக்காக ஒரு மாதத்திற்கு அவள் மாநிலத்தை விட்டுப்போகவேண்டும். அவளுடன் அவளுடைய பிள்ளைகளை அவள் அழைத்துப்போகமுடியாது. ஒரு அவசர மருத்துவ சிகிச்சையிலிருந்த, தன்னுடைய கணவனைக் கவனித்துக்கொள்ள அப்போதுதான் அவளுடைய தாயார் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தார்.

தன்னுடைய இளைய பிள்ளைக்கு ஐரோப்பாவிற்கு பயணச்சீட்டு வாங்க இந்த உற்சாகமிழந்த தனிமையான சகோதரியால் முடியும், ஆனால் அவளுடைய 12 வயது மகன் எரிக்குக்கு வாங்கமுடியவில்லை. 2 அடுத்த 30 நாட்கள் எரிக்கைக் கவனித்துக்கொள்ள ஒரு நல்ல எல்.டி.எஸ் குடும்பத்தை அவரால் கண்டுபிடிக்க முடியுமாவென அவளுடைய வீட்டுப்போதகர்களை அவள் கேட்டாள்.

தன்னால் முடிந்தளவுக்கு இதைச் செய்வதாக வீட்டுப்போதகர் திரும்ப அவளுக்கு பதில் அனுப்பினார். பின்னர் அவர் தனது ஆசாரியத்துவ தலைவர்களை தொடர்புகொண்டார். ஒத்தாசைச் சங்கத் தலைவரையும் சேர்த்து தொகுதி ஆலோசனைக்குழு அங்கத்தினர்களை அணுக தலைமைதாங்கும் பிரதான ஆசாரியன் ஆயர் அவருக்கு அங்கீகாரமளித்தார்.

ஒருவர் ஒரு வாரம் தங்கள் வீட்டில் அவனை வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்ட ஏறக்குறைய எரிக் வயதில் பிள்ளைகளிருந்த நான்கு நல்ல எல்.டி.எஸ் குடும்பங்களை ஒத்தாசைச் சங்கத் தலைவர் வேகமாகக் கண்டுபிடித்தார். அடுத்த ஒரு மாதம் இந்தக் குடும்பங்கள் எரிக்குக்கு உணவளித்து, ஏற்கனவே கூட்டமாயிருந்த அல்லது சிறிய வீடுகளாயிருந்த தங்கள் குடியிருப்பில் அவனுக்கு தனிஅறை கொடுத்து, ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டிருந்த கோடை விடுமுறை நிகழ்ச்சிகளுக்கு அவனை அழைத்துப்போய், சபைக்கு அவனைக் கூட்டிக்கொண்டுபோய், தங்களுடைய குடும்ப இல்ல மாலையில் அவனைச் சேர்த்துக்கொண்டு இப்படியாக அவனைக் கவனித்துக்கொண்டார்கள்.

அந்தக் குடும்பங்களில் எரிக் வயதில் பையன்களிருந்தனர், அவர்கள் தங்களுடைய உதவிக்காரன் குழுமங்களின் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவனைச் சேர்த்துக்கொண்டனர். தன் வாழ்நாளில் இந்த 30 நாட்கள் காலத்தில் முதல்முறையாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் எரிக் சபையிலிருந்தான்.

அவளுடைய பயிற்சியிலிருந்து அவனுடைய தாய் வீட்டிற்கு வந்த பின்னர், வழக்கமாக இந்த தன்னார்வமுள்ள எல்.டி.எஸ் குடும்பங்கள் ஒன்றுடன் அல்லது அவனுடைய தாயாரின் வீட்டுப் போதகர்களையும் சேர்த்து, அவனுக்கு நண்பர்களான மற்றவர்களுடன் எரிக் தொடர்ந்து சபைக்கு வந்தான். சில நாட்களுக்குப் பின்னர் அவன் உதவிக்காரனாக நியமிக்கப்பட்டு வழக்கமாக திருவிருந்து பரிமாற ஆரம்பித்தான்.

இப்போது, எரிக்கின் வருங்காலத்தை நோக்குவோம். அவனுடைய குடும்பம் தன்னுடைய தாயாரின் சொந்த நாட்டிற்குத் திரும்பும்போது அங்கே அவன் சபையின் தலைவரானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவை எல்லாம், ஒரு ஆயரின் வழிநடத்துதலின் கீழும், தங்களுடைய இருதயங்களிலுள்ள தயாளத்தினிமித்தமும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையாலும் சேவை செய்ய ஒற்றுமையில் ஒன்றுகூடி பணிபுரிந்த பரிசுத்தவான்களாலேயே.

தேவனுடைய இராஜ்ஜியத்தில் இரட்சிக்கப்பட தயாளம் அத்தியாவசியமானதென்று நமக்குத் தெரியும். “நீங்கள் தயாளத்துவத்தைப் பெற்றிராவிட்டால், நீங்கள் ஒருக்காலும் தேவ இராஜ்ஜியத்தினுள் இரட்சிக்கப்படமுடியாது” (மரோனி 10:21; ஏத்தேர் 12:34ஐயும் பார்க்கவும்) என மரோனி எழுதினான்.

தயாளமென்பது, நம்மால் செய்ய முடிந்த அனைத்திற்கும் பின் நம்மீது அருளப்பட்ட ஒரு வரமென்றும் நமக்குத் தெரியும். “தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர்மேலும் அவர் அருளின இந்த அன்பினால் நீங்களும் நிரப்பப்பட இருதயத்தின் முழுஊக்கத்தோடும் பிதாவிடம் நாம் ஜெபிக்கவேண்டும்” (மரோனி 7:48)

மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நாம் கவனம் செலுத்தும்போது தேவனுடைய பரிசுத்த ஆவியை நாம் சிறப்பாகப் பெறுகிறோமென எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் இரட்சகருக்கு சேவை செய்ய நமக்கு ஆசாரியத்துவ பொறுப்பிருக்கிறது. மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது நம்மைப்பற்றி நாம் குறைவாகவே சிந்திக்கிறோம், நம்மீது அருளப்படுகிற தயாளத்தின் வரத்தைக்கொண்டிருக்க நமது வாழ்நாள் விருப்பத்தில் பரிசுத்த ஆவி மிகத் தயாராக நம்மிடத்தில் வருகிறது, நமக்குதவுகிறது.

நமது ஆசாரியத்துவ ஊழியம் செய்தலின் சேவையில் இன்னமும் அதிக உணர்த்துதலாகவும் அன்பாகவுமிருக்க நமக்கான அவருடைய திட்டத்தில் முன்னேறிச்செல்ல கர்த்தர் ஏற்கனவே ஒரு பெரிய அடி வைத்து ஆரம்பித்திருக்கிறார் என நான் என்னுடைய சாட்சியைப் பகருகிறேன். நமக்கு மிகத்தாராளமாய் கொடுக்கிற அவருடைய அன்பிற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் அப்படியாக நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. பெயர் மாற்றப்பட்டுள்ளது.

  2. பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அச்சிடவும்