2010–2019
இது எல்லாமுமே ஜனங்களைப்பற்றியது
ஏப்ரல் 2018


இது எல்லாமுமே ஜனங்களைப்பற்றியது

சபை என்பது , கர்த்தருடைய சீஷர்களான-- அவரில் அன்பு வைத்து, அவரைப் பின்பற்றுகிற, அவருடைய நாமத்தை தங்கள்மேல் எடுத்துக்கொண்ட உங்களைப்பற்றியது.

மகத்தான பாரிஸ் பிரான்ஸ் ஆலயத்தின் கட்டுமானத்திற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது, நான் ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு அனுபவம் பெற்றேன். 2010ல் ஆலயத்திற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டபோது, சபையைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள நகர மேயர் எங்களைச் சந்திக்கக் கேட்டுக்கொண்டார். இந்தக்கூட்டம், கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான ஒரு முக்கியமான படி. பிற்காலப் பரிசுத்தவான்களின் ஆலயங்களின் ஏராளமான படங்களையும் சேர்த்து, ஒரு சமர்ப்பித்தலை மிகக்கவனமாக நாங்கள் ஆயத்தப்படுத்தினோம். எங்களுடைய திட்டத்திற்கு ஒத்துழைக்க, அவைகளின் கட்டட கலை அழகு மேயரை நம்பவைக்கும், என்பது என்னுடைய மிக ஆழமான நம்பிக்கையாயிருந்தது.

நான் ஆச்சரியமடையும் வகையில், எங்களுடைய சமர்ப்பிப்பை பரிசீலிப்பதைவிட, நாங்கள் எந்த மாதிரியான சபையிலிருக்கிறோம் என்பதை அவரும் அவருடைய குழுவும் தங்களுடைய சொந்த விசாரிப்பை நடத்த விரும்புவதாக மேயர் குறிப்பிட்டார். பின்வரும் மாதத்தில் நகர ஆலோசகரால் கொடுக்கப்படப் போகிற அறிக்கையை கேட்க நாங்கள் அழைக்கப்பட்டோம். அவரும் மதஆராய்ச்சி பேராசிரியையாக இருந்தார். அவர் சொன்னார், “எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சபையின் அங்கத்தினர்கள் யாரென்று நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். முதலாவதாக உங்கள் திருவிருந்துக்கூட்டங்கள் ஒன்றில் நாங்கள் கலந்துகொண்டோம். ஜெபக்கூடத்தின் கடைசியில் நாங்கள் அமர்ந்து, சபையிலுள்ள ஜனங்களையும் அவர்கள் என்ன செய்கிறார்களென்றும் நாங்கள் கவனமாக பார்த்தோம். பின்னர் உங்கள் பிணைய மையத்தைச் சுற்றி வசித்து வருகிற உங்கள் அண்டைவீட்டாரை சந்தித்து மார்மன்களாகிய நீங்கள் எந்த மாதிரியான ஜனங்கள் என கேட்டோம்.”

சிறிது ஆர்வத்தின் உணர்வுடன் நான் கேட்டேன், “ஆகவே, உங்கள் இறுதி தீர்மானம் என்ன?” அவர் பதிலளித்தார், “எங்களுக்குத் தெரிந்த சபைகளைவிட இயேசு கிறிஸ்துவின் முதல் சபைக்கு நெருக்கமாக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இருக்கிறதென்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.” “அது முற்றிலுமாக துல்லியமில்லை என சொல்லி, ஏறக்குறைய ஆட்சேபிக்க இருந்தேன். இது நெருக்கமான சபை அல்ல, இதுவே இயேசு கிறிஸ்துவின் சபை, இதே சபை, உண்மையான சபை!” ஆனால் நான் என்னையே தடுத்து, பதிலாக, நன்றியின் ஒரு அமைதியான ஜெபத்தை ஏறெடுத்தேன். அவர்களுடைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அவர்களுடைய சமூகத்தில் ஒரு ஆலயம் கட்டுவதற்கு அவருக்கும் அவருடைய குழுவுக்கும் எந்த மறுப்புமில்லை என மேயர் எங்களுக்குச் சொன்னார்.

இன்று, அந்த அற்புதமான அனுபவத்தைப்பற்றி நான் நினைக்கும்போது, மேயரின் ஞானத்திற்காவும் பகுத்தறியும் ஆவிக்கும் நான் நன்றியை உணருகிறேன். சபையைப்பற்றி புரிந்துகொள்ள திறவுகோல், அதை அதன் கட்டடங்களின் வெளித்தோற்றத்தின் மூலமாக அல்லது நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபனமாக பார்ப்பதிலில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிற அதன் கோடிக்கணக்கான விசுவாசமுள்ள அங்கத்தினர்கள் மூலமாக பார்க்கவேண்டுமென அவர் அறிந்தார்.

சபையின் விளக்கம், மார்மன் புஸ்தகத்திலுள்ள ஒரு பகுதியிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். அது உரைக்கிறது. “இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற அவர்கள் [கர்த்தரின் சீஷர்கள் என்று அர்த்தம்] “கிறிஸ்துவின் சபையார் என அழைக்கப்பட்டனர்.” 1

வேறு வார்த்தைகளிலெனில், சபை என்பது அனைத்தும், கர்த்தருடைய சீஷர்களான, அவரில் அன்பு வைத்து, அவரைப் பின்பற்றுகிற, உடன்படிக்கையால் அவருடைய நாமத்தை தங்கள்மேல் எடுத்துக்கொண்ட உங்களைப்பற்றியது.

தலைவர் ரசல் எம். நெல்சன் ஒரு சமயம் ஒரு நல்ல மோட்டார் வாகனத்துடன் சபையை ஒப்பிட்டார். நம்முடைய வாகனம் சுத்தமாகவும் பிரகாசமாகவுமிருக்கும்போது அது நம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், காரின் நோக்கம் ஒரு கவர்ச்சியான இயந்திரமாக வெளியில் நிற்பதல்ல, காரில் மக்களைக் கொண்டுபோவதே அதன் நோக்கம். 2 இந்த மாதிரியே சபை அங்கத்தினர்களாகிய நாம், சுத்தமாகவும் நன்றாகப் பராமரிக்கப்பட்ட தொழுகையின் அழகான இடங்களைக் கொண்டிருப்பதைப் பாராட்டுகிறோம், நன்றாக செயல்படும் நிகழ்ச்சிகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால் இவைகள் வெறும் தாங்கும் அமைப்புகள். தேவனின் ஒவ்வொரு குமாரனையும் குமாரத்தியையும் கிறிஸ்துவண்டை வர அழைப்பதும், உடன்படிக்கையின் பாதையின் வழியே அவன் அல்லது அவளை வழிநடத்துவதுமே நமது ஒரே நோக்கம். எதுவுமே அதிக முக்கியமானதல்ல. நமது பணி அனைத்தும் மக்களையும் உடன்படிக்கைகளையும் பற்றியதே.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு வெளிப்படுத்தலால் கொடுக்கப்பட்ட பெயர், ஒவ்வொரு சுவிசேஷ உடன்படிக்கையிலும் இரண்டு மிகமுக்கியமான காரியங்களை ஒன்றாக கட்டுகிறது அற்புதமாயில்லையா? முதலாவது பெயர், இயேசு கிறிஸ்து. இந்த சபை அவருக்குச் சொந்தமானது, அவரது பரிசுத்தமாக்கும் பாவநிவர்த்தியும் உடன்படிக்கைகளும் இரட்சிப்புக்கும் மேன்மையடைதலுக்கும் ஒரே பாதையாயிருக்கிறது. இரண்டாவது பெயர் நம்மைக் குறிக்கிறது, பரிசுத்தவான்கள், அல்லது வேறு வார்த்தைகளிலெனில் அவருடைய சாட்சிகள், அவருடைய சீஷர்கள்.

பிரான்ஸில் ஒரு பிணையத் தலைவராக நான் ஊழியம் செய்தபோது மக்களை முன்னிலைப்படுத்தும் முக்கியத்துவத்தை நான் அறிந்துகொண்டேன். என்னுடைய சேவையின் ஆரம்பத்தில் பிணையத்திற்கான சில மிக ஆர்வமான இலக்குகள் என் மனதிலிருந்தது. புதிய தொகுதிகளை உருவாக்குவது, புதிய கூடுமிடங்களைக் கட்டுதல், எங்கள் பகுதியில் ஒரு ஆலயத்தைக் கட்டுவதுவும்கூட. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் விடுவிக்கப்பட்டபோது இந்த இலக்குகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. என்னுடைய இலக்குகள் மிக வித்தியாசமாக மாறியதைத் தவிர அந்த ஆறு ஆண்டுகளின்போது இது முற்றிலும் தோல்வியடைந்ததாக உணர்ந்திருக்கப்படவேண்டும்.

நான் விடுவிக்கப்பட்ட நாளில் மேடையில் நான் அமர்ந்தபோது, நன்றியுணர்வு மற்றும் சாதனையின் ஒரு மகத்துமான உணர்வுடன் நான் வெற்றிகொண்டேன். பங்கேற்றிருந்த நூற்றுக்கணக்கான அங்கத்தினர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இணைக்கப்பட்டிருந்த ஆவிக்குரிய அனுபவத்தை என்னால் நினைக்கமுடிந்தது.

ஞானஸ்நானத் தண்ணீருக்குள் பிரவேசித்த சகோதரர்களும் சகோதரிகளும் அங்கிருந்தனர், ஆலயத்தின் பரிசுத்த நியமங்களை அவர்கள் பெறும்படியாக அவர்களின் சிபாரிசுகளில் முதலாவதாக கையெழுத்திட்டவர்கள் அங்கிருந்தனர், நான் தெரிந்தெடுத்த அல்லது முழுநேர ஊழியங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இளம் மக்களும் தம்பதியரும் அங்கிருந்தனர். தங்கள் வாழ்க்கையில் சோதனைகளின் துயரங்களின் வழியே போய்க்கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் ஊழியம் செய்த பிற அநேகர் அங்கிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒரு பெலமான சகோதர அன்பை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு சேவை செய்ததில் ஒரு தூய சந்தோஷத்தை நான் கண்டு, இரட்சகரிடத்தில் அவர்களுடைய அதிகரித்த நேர்மையில் விசுவாசத்தில் நான் ஆனந்தமடைந்தேன்.

“நமது சபைப் பொறுப்புகளில் எது மிக முக்கியமானதென்றால், அறிக்கையளிக்கப்படுகிற புள்ளிவிபரங்களில்லை, அல்லது நடத்தப்படுகிற கூட்டங்களில்லை, ஆனால், உயர்த்தப்பட்டு, ஊக்கமளிக்கப்பட்டு, இறுதியாக மாற்றப்பட்ட, இரட்சகர் செய்ததைப்போல தனிப்பட்ட மக்கள் ஒருவர் ஒருவராக ஊழியம் செய்யப்பட்டார்களா என்பது முக்கியம்” 3 என தலைவர் எம். ரசல் பல்லார்ட் போதித்தார்.

என்னுடைய சகோதர சகோதரிகளே, நாம் சுவிசேஷத்தில் உற்சாகமுள்ளவர்களாயிருக்கிறோமா, அல்லது சபையில் நாம் வெறுமனே சுறுசுறுப்பாயிருக்கிறோமா. சகல காரியங்களிலும் இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதே திறவுகோல். நாம் அதைச் செய்தால், வேலைகளை நடப்பித்தலை, நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதைவிட பதிலாக, தனிப்பட்டவர்களை இரட்சிப்பதில் இயற்கையாக நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்த ஞாயிறு உங்கள் தொகுதி அல்லது கிளையை இரட்சகர் சந்தித்தால் அது எப்படியிருக்குமென நீங்கள் எப்போதாவது உங்களைக் கேட்டிருக்கிறீர்களா? ஒலி ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறதா, அல்லது வகுப்பறைகளில் நாற்காலிகள் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்பதைப்பற்றி அவர் கவலைப்படுவாரா அல்லது அவர் அன்பாயிருக்க, போதிக்க, ஆசீர்வதிக்க யாரோ ஒருவரை அவர் கண்டுபிடிப்பாரா? ஒருவேளை அவர் வரவேற்க ஒரு புதிய அங்கத்தினரை அல்லது ஒரு நண்பரை, ஆறுதல் தேவைப்படுகிற ஒரு உடல்நலமில்லாத சகோதரரை அல்லது சகோதரியை, அல்லது உயர்த்தப்பட, ஊக்குவிக்கப்பட தேவையாயிருக்கிற ஒரு அலைபாய்கிற இளம் நபரை அவர் தேடுவார்.

எந்த வகுப்புகளுக்கு இயேசு வருவார்? முதலில் ஆரம்பவகுப்பு பிள்ளைகளை அவர் சந்தித்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஒருவேளை அவர் முழங்கால்படியிட்டு அவர்களுடைய கண்களுக்கு நேராய் அவர் பேசுவார். அவர்களுக்கு அவருடைய அன்பை அவர் தெரிவிப்பார், அவர்களுக்கு கதைகள் சொல்வார், அவர்களுடைய சித்திரங்களை அவர் பாராட்டுவார், பரலோகத்திலுள்ள அவருடைய பிதாவைக்குறித்து சாட்சி கொடுப்பார். அவருடைய எண்ணங்கள் எளிதாகவும், உண்மையுள்ளதாயும், ஜம்பமில்லாததாகவுமிருக்கும். அதைப்போன்று நாம் செய்யமுடியுமா?

கர்த்தருடைய நிகழ்ச்சி நிரலில் நீங்களிருக்க முயற்சிக்கும்போது, நீங்கள் உதவமுடிகிற ஆசீர்வதிக்க முடிகிற மக்களை கண்டுபிடிப்பதைவிட எதுவும் முக்கியமானதாயிருக்காது என உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன். சபையில் தனிப்பட்டவர்களுக்கு போதிப்பதிலும் அவர்களுடைய இருதயங்களைத் தொடுவதிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். ஒரு மிகச்சரியான நிகழ்ச்சியை நிர்வகிப்பதைவிட ஒரு ஆவிக்குரிய அனுபவத்தை முன்னேற்றுவது, உங்கள் சந்திப்புகளின் எண்ணிக்கையை பெட்டியில் சரிபார்ப்பதைவிட உங்கள் சக அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்வது உங்கள் அக்கறையாயிருக்கும். இது உங்களைப்பற்றியிருக்காது, இது நமது சகோதரர்கள், மற்றும் நமது சகோதரிகள் என நாம் அழைக்கிற அவர்களைப் பற்றியது.

சபைக்குப் போவதைப் பற்றி சிலநேரங்களில் நாம் பேசுகிறோம். ஆனால் சபை என்பது கட்டடத்தை விட, அல்லது குறிப்பிட்ட இடத்தைவிட மேலானது. இங்கு சபை தலைமைச் செயலகங்கள் சால்ட் லேக் சிட்டியில் இருப்பதைப்போன்று உலகத்தின் மிக ஒதுக்குப்புறமான பகுதிகளில் தாழ்மையான இடங்களிலிருப்பது உண்மையாகவும் உயிருள்ளதாகவுமிருக்கிறது. “ஏனெனில், இரண்டுபேராவது, மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கேகூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” 5 என கர்த்தரே சொன்னார்.

நாம் போகுமிடமெல்லாம் சபையை நம்மோடு நாம் எடுத்துச் செல்கிறோம். வேலைக்கு, பள்ளிக்கூடத்திற்கு, விடுமுறையில், குறிப்பாக நமது வீடுகளில். ஒரு பரிசுத்த இடமாக நம்மையே நாம் காண்பதற்கு நமது பிரசன்னமும் செல்வாக்கும் போதுமானதாயிருக்கிறது.

நமது விசுவாசத்தைச் சாராத ஒரு நண்பருடன் என்னுடைய உரையாடலை நான் நினைவுகூருகிறேன். எங்கள் சபையில் தகுதியுள்ள எந்த மனிதனும் ஆசாரியத்துவத்தைப் பெறலாம் என அறிந்து அவர் ஆச்சரியப்பட்டார். அவர் கேட்டார், “ஆனால் உங்கள் தொகுதியில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?”

“30க்கும் 40க்குமிடையில்” என நான் பதிலளித்தேன்

குழப்பமடைந்தவராக அவர் தொடர்ந்தார், “என்னுடைய சபையில் எங்களுக்கு ஒரே ஒரு ஆசாரியர்தான் இருக்கிறார். ஞாயிறு காலையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசாரியர்கள் தேவைப்படுகிறார்கள்?”

அவருடைய கேள்வியின் தந்திரத்தை அறிந்து, “நான் உங்களோடு ஒப்புக்கொள்கிறேன். ஞாயிற்றுக்கிழமையில் சபையில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற இவ்வளவுபேர் தேவை என நான் நினைக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் எங்களுக்குத் தேவை, ஒரு வீட்டில் ஆசாரியத்துவம் தரித்தவர் இல்லாதபோது, ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற பிறர் அந்த குடும்பத்தை கண்காணிக்கவும் ஊழியம் செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்” என பதிலளிக்க நான் உணர்த்தப்பட்டேன்

எங்களுடையது வெறும் ஞாயிற்றுகிழமை சபை அல்ல. வாரத்தின் ஒவ்வொரு நாளும், நாங்கள் எங்கிருந்தாலும் என்ன செய்துகொண்டிருந்தாலும் எங்கள் தொழுகை தொடர்கிறது. குறிப்பாக எங்கள் வீடு “எங்கள் விசுவாசத்தின் அடிப்படை சரணாலயங்கள்.” 5 மிக அடிக்கடி எங்கள் வீடுகளில் நாங்கள் ஜெபிக்கிறோம், நாங்கள் ஆசீர்வதிக்கிறோம், நாங்கள் படிக்கிறோம், தேவனின் வார்த்தையை நாங்கள் போதிக்கிறோம், தூய அன்பில் நாங்கள் சேவை செய்கிறோம். சிலநேரங்களில் எங்கள் தொழுகையின் இடங்களைவிட பரிசுத்த ஆவி அதிக அளவில் நிரம்பியிருக்கிற எங்கள் வீடுகள், பரிசுத்த இடங்கள் என என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் சாட்சியளிக்கிறேன்.

உண்மையான சபையான, இது இயேசு கிறிஸ்துவின் சபை என நான் சாட்சியளிக்கிறேன்! இதன் பெலமும் ஊக்கமும், மற்றவர்களைப் பேணுவதால் இயேசு கிறிஸ்துவின் மேலான எடுத்துக்காட்டைப் பின்பற்ற ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிற அதன் கோடிக்கணக்கான விசுவாசமுள்ள அங்கத்தினர்கள் மூலமாக வருகிறது. கிறிஸ்து ஜீவிக்கிறார், இந்த சபையை அவர் வழிநடத்துகிறார். நமது நாட்களில் நடத்தவும் வழிநடத்தவும் அவர் தேர்ந்தெடுத்த தலைவர் ரசல் எம். நெல்சன் ஒரு தீர்க்கதரிசி. இந்தக் காரியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்