2010–2019
இரட்சகர் செய்கிறதைப்போல ஊழியம் செய்தல்
ஏப்ரல் 2018


இரட்சகர் செய்கிறதைப்போல ஊழியம் செய்தல்

நம்முடைய நித்திய சகோதர, சகோதரிகளுக்கு அன்புடன் ஊழியம் செய்து தேவனிடத்தில் நமது நன்றியையும் அன்பையும் காட்டுவோமாக.

தேவனிடத்திலிருந்து தொடர்ந்து வெளிப்படுத்துதல் வருகிற ஒரு காலத்தில் வாழ்வது என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம்! நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, நமது காலத்தின் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் வந்த, வரப்போகிற “சகல காரியங்களும் நிவர்த்தி செய்தலை” 1 தழுவி, இரட்சகரின் இரண்டாம் வருகைக்காக நாம் ஆயத்தமாயிருக்கிறோம். 2

ஒருவருக்கொருவருக்கு அன்பாக ஊழியம் செய்தலின் மூலமாக அவரைப் போலாக முயற்சிப்பதைவிட அவரை சந்திக்க ஆயத்தப்பட எது சிறந்த வழியாயிருக்கும்! இந்த ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில், “நீங்கள் என்னை நேசிப்பீர்களானால், எனக்கு பணிவிடை செய்யுங்கள்” 3 என அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு இயேசு கிறிஸ்து போதித்தார். மற்றவர்களுக்கான நமது சேவை சீஷத்துவத்தைக் காட்டுவதாகவும், தேவனிடத்திலும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலும் நமது அன்பையும் நன்றியையும் காட்டுவதுமாயிருக்கிறது.

நமது அண்டைவீட்டாருக்கு சேவை செய்வது “எண்ணப்பட”, சில ஆடம்பரமான, வீரமான சிலவற்றைச் செய்ய சிலநேரங்களில் நாம் நினைக்கிறோம். இருந்தும் சேவையின் எளிய செயல்கள், மற்றவர்களிடத்திலும் அப்படியே நம்மிடத்திலும் மகத்துவமான பாதிப்புகளை உண்டாக்கும். இரட்சகர் என்ன செய்தார்? பாவநிவர்த்தி மற்றும் “பூமியின் மேல் வாழ்ந்த, இனி வாழப்போகிற யாருக்குமே இருக்காத ஒரு மகத்துவமான செல்வாக்கை” 4 இந்த அழகான ஈஸ்டர் ஞாயிறில் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற, உயிர்த்தெழுதலின் அவருடைய தெய்வீக வரங்கள் மூலமாகவே. ஆனால் அவர் புன்னகைத்தார், பேசினார், நடந்தார், செவிகொடுத்தார், நேரம் ஒதுக்கினார், ஊக்குவித்தார், போதித்தார், போஷித்தார், மன்னித்தார். குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு, அண்டைவீட்டாருக்கு, அந்நியர்களுக்கு ஒன்றுபோலவே அவர் சேவை செய்தார். அவருடைய வளமான சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க அறிந்தவர்களையும் நேசித்தவர்களையும் அவர் அழைத்தார். சேவையின் அந்த எளிய செயல்களும் அன்பும் இன்று நமது ஊழியத்திற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.

உங்களுடைய ஊழிய முயற்சிகளில் இரட்சகரைப் பிரதிபலிக்க உங்களுக்கு சிலாக்கியமிருப்பதால், “இந்த தனிப்பட்டவருடன் அல்லது குடும்பத்துடன் சுவிசேஷத்தின் ஒளியை நான் எவ்வாறு பகிர்ந்துகொள்வது? நான் செய்யும்படி எதை பரிசுத்த ஆவி எனக்கு உணர்த்துகிறது?” என உங்களையே நீங்கள் கேளுங்கள்.

தனிப்பட்ட வழிகளில் பல வகைகளில் ஊழியம் செய்யப்படலாம். ஆகவே அது எதைப்போலத் தோன்றுகிறது?

மூப்பர்கள் குழுமமும், ஒத்தாசைச் சங்கத் தலைமைகளும் நியமிப்புகளைப்பற்றி ஜெபத்துடன் ஆலோசனை செய்வது ஊழியம் செய்வதைப்போலக் காணப்படுகிறது. மாறாக, தலைவர்கள் துண்டுக் காகிதங்களை கைகளில் கொடுப்பதைவிட, தனியாக தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் பற்றி ஆலோசித்தல், சகோதர சகோதரிகளிடத்தில் ஊழியம் செய்ய நியமிப்புகளாக கொடுக்கப்படுவது போல காணப்படுகிறது. ஒரு நடை நடத்தல், ஒரு கேளிக்கை இரவில் ஒன்றுகூட்டுதல், சேவையை அளித்தல் அல்லது ஒன்றுசேர சேவை செய்தல் போல காணப்படுகிறது. தனியாக சந்தித்தல், தொலைபேசியில் பேசுதல், இணையதளத்தில் தொடர்புகொள்ளுதல் அல்லது செய்தி அனுப்புதலும் போல காணப்படுகிறது. ஒரு பிறந்தநாள் வாழ்த்தட்டையைக் கொடுப்பதுவும், ஒரு கால்பந்தாட்டதில் ஆரவாரிப்பதுவும் போல காணப்படுகிறது. தனிப்பட்டவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடிய மாநாட்டு உரையிலிருந்து ஒரு வசனத்தை அல்லது மேற்கோளை பகிர்ந்துகொள்வது போல காணப்படுகிறது. சுவிசேஷக் கேள்வியை கலந்துரையாடுதல் மற்றும் தெளிவையும் சமாதானத்தையும் கொண்டுவர சாட்சியைப் பகிர்ந்துகொள்ளுதல் போல காணப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் அங்கமாகி, அவன் அல்லது அவளைக் கவனித்துக்கொள்ளுதல் போல காணப்படுகிறது. ஊழிய நேர்காணலில் அவசியமாயிருக்கிற தேவைகளும் பெலன்களும் உணர்வுமிகுந்தும் பொருத்தமாகவும் கலந்துரையாடப்படுகிறதும் போல காணப்படுகிறது. ஒரு மிகப்பெரிய தேவைக்கு பதிலளிக்க தொகுதி ஆலோசனைக்குழு ஏற்பாடுசெய்வது போல காணப்படுகிறது.

அவளுடைய கணவன் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்தபோது, வீட்டிலிருந்து அவர்கள் தொலைதூரம் சென்றபோது, இந்த வகையான ஊழியம் செய்தல் ஒரு சகோதரியைப் பெலப்படுத்தியது. தொலைபேசியில்லாமல், ஒரு சிறு குழந்தையைக் கவனித்துக்கொண்டு புதிய இடத்தில் முழுமையாக தொலைந்துபோனதாகவும் தனியாகவும் குழப்பமடைந்தாள். குழந்தைக்கு இரண்டு ஜோடி காலணிகளை எடுத்துக்கொண்டு ஒரு ஒத்தாசைச் சங்க சகோதரி முன்னறிவிப்பில்லாமல் வீட்டிற்கு வந்தாள். அவர்கள் இரண்டுபேரையும் வீட்டுச் சாமான்கள் வாங்கும் ஒரு கடைக்கு காரில் அழைத்துச் சென்றாள். நன்றியுள்ள சகோதரி சொன்னாள், “அவள் என் வாழ்க்கையாக இருந்தாள்!”

ஆப்ரிக்காவில், நீண்ட காலமாக சபைக்கூட்டங்களுக்கு வராத ஒரு சகோதரியைத் தேடிப்போக நியமிக்கப்பட்ட ஒரு மூத்த சகோதரியால் உண்மையான ஊழியம் செய்தல் விவரிக்கப்படுகிறது. அந்த சகோதரியின் வீட்டிற்குச் சென்றபோது, அந்தப்பெண் அடிக்கப்பட்டு களவாடப்பட்டு, உண்பதற்கு சிறிதே வைத்திருந்து, அவளிடம் ஞாயிறு சபைக்கூட்டங்களுக்கு பொருத்தமான உடைகள் எதுவுமில்லாதிருப்பதை அவள் கண்டாள். அவளுக்கு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்ட பெண், கேட்பதற்கு ஆயத்தமாக வந்து, அவளுடைய தோட்டத்தில் விளைந்தவைகளையும், படிக்க வேதங்களையும், நட்பையும் கொண்டுவந்தாள். காணாமற்போன சகோதரி விரைவிலேயே சபைக்கு திரும்ப வந்து, அவள் நேசிக்கப்படுவதாகவும் மதிக்கப்படுவதாகவும் அவளுக்கு தெரிந்ததால் இப்போது ஒரு அழைப்பை பெற்றிருக்கிறாள்.

இத்தகைய ஒத்தாசைச் சங்க முயற்சிகளுடன் புதிதாக சீரமைக்கப்பட்ட மூப்பர் குழுமங்களும் இணையும்போது, அது ஆச்சரியப்படுகிற விளைவுகளை உண்டாக்குகிற ஒரு ஒற்றுமையைக் கொண்டுவரும். “ஒவ்வொரு அங்கத்தினர் வீட்டையும் சந்திக்கவும், எப்போதும் சபையைக் கண்காணித்து, அவர்களோடிருந்து அவர்களைப் பெலப்படுத்தும்” 5 ஆசாரியத்துவ கடமையை நிறைவேற்றவும், அப்படியே நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களுக்கு ஆயத்தப்பட ஒருவருக்கொருவர் உதவும் ஒத்தாசைச் சங்க நோக்கத்தை அடையவும் ஊழியம் செய்தல் ஒருங்கிணைப்பான முயற்சியாக மாறுகிறது. 6 ஆயர், மூப்பர் குழுமம், ஒத்தாசைச் சங்கத் தலைமைகளின் வழிநடத்துதலின் கீழ் ஒன்றுசேர்ந்து பணியாற்றுதல், ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும், குடும்பத்தையும் கண்காணிக்கவும் ஒருவருக்கொருவரைக் கவனிக்கவும் சிறந்த வழிகளை அவர்கள் தேடும்போது உணர்த்துதலாயிருக்கும்.

நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன். ஒரு தாய்க்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவிலேயே அவளுக்கு சிகிச்சை ஆரம்பமாகி, உணவு, சிகிச்சைக்காக போய்வரும் போக்குவரத்து வசதி, பிற ஆதரவுகளுக்கு எவ்வாறு சிறந்த வழிகளில் உதவலாமென திட்டமிடுவதில் ஒத்தாசைச் சங்க சகோதரிகள் பணியிலிறங்கினர். சந்தோஷமான துணைகளுடன் அவளை அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். அதே நேரத்தில், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவக் குழுமம் செயலில் இறங்கினார்கள். வியாதியாயிருந்த சகோதரியைக் கவனிக்க எளிதாயிருக்கும்படியாக படுக்கை அறையையும், குளியலறையையும் மாற்றியமைப்பதில் தங்கள் உழைப்பை அவர்கள் கொடுத்தனர். அந்த விசேஷித்த முயற்சிகளில் பங்கேற்க இளம் ஆண்கள் தங்கள் கைகளையும் முதுகுகளையும் வருத்தினர். இளம் பெண்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நாயை நடக்கச்செய்ய மகிழ்வுடன் ஏற்பாடு செய்தனர். காலம் கடந்தபோது எங்கே தேவையிருக்கிறதென்பதை கூட்டி, பிரயோகப்படுத்தி தொகுதி தங்களுடைய சேவையைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு அங்கத்தினரும், அவன் அல்லது அவள் தனிப்பட்ட வழிகளில் ஒற்றுமையாக கவனிப்பைக் கொடுத்தது, போராடிக்கொண்டிருந்த சகோதரிக்கு மட்டுமல்ல, அவளுடைய குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாயிருந்த இது தெளிவாக ஒரு அன்பின் உழைப்பு

ஒரு கடினமான முயற்சிக்குப் பின் இறுதியாக புற்றுநோய்க்கு அந்த சகோதரி பலியாகி மரித்தாள். சிறப்பாகச் செய்தோம், சிறப்பாக முடிந்தது என்று தொகுதி அங்கத்தினர்கள் விடுதலையாக மூச்சு விட்டார்களா? இல்லை, இளம் பெண்கள் தொடர்ந்து நாயை நடக்கச்செய்தார்கள், ஆசாரியத்துவக்குழுமம், தகப்பனுக்கும் அவரது மகனுக்கும், அவரது குடும்பத்திற்கும் தொடர்ந்து ஊழியம் செய்தார்கள், பெலங்களையும் தேவைகளையும் உறுதி செய்ய அன்பில் அணுகுவதை ஒத்தாசைச் சங்க சகோதரிகள் தொடர்ந்தார்கள். சகோதர சகோதரிகளே, இது ஊழியம் செய்தல், இரட்சகர் செய்ததைப்போல இது அன்புசெலுத்துதல்!

இளம் ஆண்கள் தங்களுடைய வயதில், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ சகோதரருக்கு கூட்டளிகளாக ஊழியம் செய்வதைப்போல ஒத்தாசைச் சங்க சகோதரிகளுக்கு கூட்டாளிகளாக ஊழியம் செய்வதில் 14 முதல் 18வயதுவரை இளம் பெண்களுக்கு சந்தர்ப்பம், இந்த உணர்த்துதலான அறிவிப்புகளின் மற்றொரு ஆசீர்வாதம். தங்களுடைய தனித்துவமான வரங்களை வாலிபர்கள் பகிர்ந்து, இரட்சிப்பின் பணியில் வயதுவந்தோர்களுடன் அவர்கள் சேவை செய்யும்போது ஆவிக்குரிய விதமாக வளருவார்கள். ஊழியம் செய்யும் நியமிப்புகளில் வாலிபர்களை ஈடுபடச் செய்வது, பங்கேற்கிற அங்கத்தினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மற்றவர்களைக் கவனிக்கும் ஒத்தாசைச் சங்கம் மற்றும் மூப்பர்கள் குழுமங்களின் அணுகுதலையும் அதிகரிக்கும்.

எனக்குத் தெரிந்த அற்புதமான இளம்பெண்களைப்பற்றி நான் நினைக்கும்போது, அவர்கள் அருகருகே சேவை செய்யும்போது அல்லது அவர்களால் ஊழியம் செய்யப்படும்போது ஒரு இளம் பெண்ணின் ஆர்வத்தால், திறமைகளால், ஆவிக்குரிய உணர்வால் ஆசீர்வதிக்கப்பட சிலாக்கியம் பெற்ற அந்த ஒத்தாசைச் சங்க சகோதரிகளுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவர்களுடைய ஒத்தாசைச் சங்க சகோதரிகளால் சரிப்படுத்தப்பட, போதிக்கப்பட, பெலப்படுத்தப்பட இளம் பெண்களுக்கு கிடைக்கிற சந்தர்ப்பத்திற்கும் நான் சமமாக சந்தோஷப்படுகிறேன். தேவனின் இராஜ்ஜியத்தைக் கட்டுவதில் பங்கேற்க இந்த சந்தர்ப்பம், சபையிலும் சமுதாயத்திலும் தலைவர்களாகவும், தங்கள் குடும்பத்தில் பங்குதாரர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, தங்களுடைய பாத்திரங்களை பூர்த்திசெய்ய சிறப்பாக ஆயத்தப்படுவதில் அவர்களுக்கு உதவுவதில், இது இளம் பெண்களுக்கு ஒரு பயங்கரமான பெலனாயிருக்கும். நேற்று சகோதரி போனி எல். ஆஸ்கர்சன் பகிர்ந்துகொண்டதைப்போல “இளம் பெண்கள் சேவையிலிருக்க வேண்டும். அவர்கள் மதிக்கப்படுகிறார்களென்றும், இரட்சிப்பின் பணியில் அவர்கள் அத்தியாவசியமானவர்களென்றும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும்” 7

உண்மையில் பணிக்கப்படாமல் அல்லது விளம்பரமில்லாமல் இளம் பெண்கள் ஏற்கனவே மற்றவர்களுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கே யாரையுமே தெரியாத நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் குடியேறிய ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். முதல் ஒரு வாரத்திற்குள், அந்தப் பகுதிக்கு அவர்களை வரவேற்று, ஒரு தட்டில் பிஸ்கட்டுகளுடன் அவர்களுடைய தொகுயிலிருந்து ஒரு 14 வயது பெண் கதவுக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் ஒரு விருப்பமுள்ள ஓட்டுனரைப்போல, ஊழியம் செய்ய அவளுடைய மகளின் விருப்பத்தை ஆதரித்து, புன்னகையுடன் அவளின் தாயார் நின்றிருந்தாள்.

ஒருநாள், வழக்கமான நேரத்தில் அவளுடைய 16 வயது மகள் வீட்டிற்கு வராததால் மற்றொரு தாய் கவலையிலிருந்தாள். இறுதியில் அந்தப் பெண் வந்துசேர்ந்தபோது, எரிச்சலுடன் அவள் எங்கே போயிருந்தாள் என்று கேள்விகள் கேட்டு அவளை பிழிந்தெடுத்தாள். பக்கத்தில் வசித்துவந்த ஒரு விதவைக்கு ஒரு மலரை அவள் எடுத்துப்போயிருந்ததாக நடுக்கத்துடன் அந்த 16 வயது பெண் பதிலளித்தாள். அந்த மூத்த சகோதரி தனிமையிலிருப்பதை அவள் கவனித்து, அவளை சந்திக்க உணர்த்தப்பட்டாள். தாயின் முற்றிலுமான ஒப்புதலுடன் இந்த இளம் பெண் தொடர்ந்து அந்த வயதுவந்த பெண்ணை சந்தித்து வந்தார். அவர்கள் நல்ல நண்பர்களாகி அவர்களுடைய இனிமையான உறவு பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

இந்த இளம் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப்போன்ற அநேகரும், யாரோ ஒருவரின் தேவையைக் கவனித்து அதை தீர்த்துவைக்க பணியாற்றுகிறார்கள். கவனிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இளம் பெண்களுக்கு ஒரு இயற்கையான விருப்பமிருக்கிறது, ஒரு வயதுவந்த சகோதரியுடன் பங்குதாரராக ஊழியம் செய்வதன் மூலமாக அது நல்வழிகாட்டப்பட முடியும் .

நமது வயது ஒரு பொருட்டல்ல, மிக ஆற்றலுடன் எவ்வாறு ஊழியம் செய்வதென்று நாம் கருதும்போது நாம் கேட்கிறோம், “அவளுக்கு [அல்லது அவனுக்கு] என்ன தேவை?” ஒரு சிரத்தையான விருப்பத்துடன் அந்தக் கேள்வியை இணைக்கும்போது, பின்னர், தனிப்பட்டவர்களை எது உயர்த்தக்கூடும், பெலப்படுத்தக்கூடுமென்பதைச் செய்ய நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவோம். சபையில் சேர்த்துக்கொள்ளப்படுகிற, வரவேற்கப்படுகிற எளிய அடையாளத்தால், சிந்திக்கவைக்கும் ஒருமின்அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக, பிரச்சினையான நேரங்களில் நேரடித்தொடர்பு, ஒரு குழு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு அழைப்பு, ஒரு சவாலான சூழ்நிலையில் உதவ ஒப்புதலால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் எண்ணிலடங்கா கதைகளை நான் கேட்டிருக்கிறேன். தனியான பெற்றோர்கள், புதிதாக மனமாறியவர்கள், உற்சாகம் குறைந்த அங்கத்தினர்கள், விதவைகள், மனைவியை இழந்தவர்கள் அல்லது போராடிக்கொண்டிருக்கும் வாலிபர்களுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கும் சகோதர சகோதரிகளிடமிருந்து அதிகமான கவனிப்பும், முன்னுரிமையான உதவியும் தேவையாயிருக்கலாம். மூப்பர் குழுமங்களுக்கும் ஒத்தாசைச் சங்கத் தலைமைகளுக்குமிடையில் ஒருங்கிணைப்பு, செய்யப்படவேண்டிய சரியான நியமிப்புகளை அனுமதிக்கிறது.

சொல்லப்பட்ட, செய்யப்பட்ட எல்லாவற்றிற்கும் பின், உள்நோக்கமான அன்பினால் ஒன்றொன்றாக உண்மையான ஊழியம் செய்தல் நிறைவேற்றப்படுகிறது. நேர்மையான ஊழியம் செய்தலின் மதிப்பு, தகுதி, அற்புதம் உண்மையில் வாழ்க்கையை மாற்றுகிறது! நமது இருதயங்கள் திறக்கப்பட்டு, அன்பாயிருக்க, ஊக்கத்தையும் ஆறுதலையும் சேர்த்து விரும்பும்போது நமது ஊழியம் செய்தல் தடுக்கமுடியாததாகும். அன்பு உள்நோக்கமாயிருக்கும்போது, அற்புதங்கள் நடக்கும், எல்லாம் அடங்கிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தழுவ நமது “காணாமற்போன” சகோதரர்களையும் சகோதரிகளையும் கொண்டுவர நாம் வழிகளைக் கண்டுபிடிப்போம்.

நாம் என்ன செய்யவேண்டுமென்பதில் மட்டுமல்ல, அதை ஏன் நாம் செய்யவேண்டுமென்பதிலும் எல்லாவற்றிலும் இரட்சகர் நமது எடுத்துக்காட்டு. 8 “நமது பார்வைகளை சிறிது உயரமாக உயர்த்தவும், நமது சொந்தப் பிரச்சினைகளை மறந்து மற்றவர்களை அணுகவும், பூமியில் அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு அழைப்பாயிருந்தது.”9 நமது சகோதரிகளுக்கு, சகோதரர்களுக்கு முழுஇருதயத்தோடும் ஊழியம் செய்ய தருணத்தை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, ஆவிக்குரிய விதத்தில் அதிகமாக புதுப்பிக்கப்பட்டவர்களாக மாற, தேவனுடைய சித்தத்துடன் அதிக இசைவாயிருக்க, ஒவ்வொருவரும் அவரிடத்தில் திரும்பிவர உதவ அவருடைய திட்டத்தை அதிகமாக புரிந்துகொள்ள முடிய நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். அவருடைய ஆசீர்வாதங்களை நாம் மிகத் தயாராக அடையாளம்கண்டு, மற்றவர்களுக்கு அந்த ஆசீர்வாதங்களைக் கொடுக்க ஆர்வமாயிருப்போம். நமது குரல்களின் இணைப்பில், நமது இருதயங்கள் பாடும்.

இரட்சகரே, நான் என் சகோதரனை நேசிக்கலாமா

நீர் என்னை நேசிப்பதை நான் அறிவதால்,

உம்மில் என் பெலத்தைக் காண்கிறேன், என் கலங்கரை விளக்கே,

நான் உமது வேலைக்காரனாயிருக்க வேண்டுவதால்.

இரட்சகரே, நான் என் சகோதரனை நேசிக்கலாமா----

கர்த்தாவே நான் உம்மைப் பின்பற்றுவேன். 10

நம்முடைய நித்திய சகோதர, சகோதரிகளுக்கு அன்புடன் ஊழியம் செய்வதால் தேவனிடத்தில் நமது நன்றியையும் அன்பையும் காட்டுவோமாக. 11 தங்களுடைய தேசத்தில் இரட்சகர் தோற்றமளித்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பூர்வகால அமெரிக்கர்கள் மகிழ்ந்ததைப்போல ஒரு ஒற்றுமையின் உணர்வுமிக்க விளைவாயிருக்கும்.

“அந்தப்படியே, ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம் தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமலிருந்தது.

“ …அங்கு பொறாமைகளோ, பிணக்குகளோ இல்லாமலிருந்தது. . .தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லாருக்குள்ளும், இவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாக இருந்திருக்க முடியாது.” 12

இந்த வெளிப்படுதலின் மாற்றங்கள் தேவனால் உணர்த்தப்பட்டதென்றும், நமது விருப்பமுள்ள இருதயங்களோடு அவற்றை நாம் தழுவும்போது, அவருடைய வருகையில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்க நாம் சிறப்பாக ஆயத்தப்பட்டவர்களாகுவோம். சீயோனின் ஜனங்களாக மாறுவதற்கு நாம் அருகிலிருப்போம், சீஷத்துவத்தின் பாதையில் நாம் உதவி செய்தவர்களோடு அதிக சந்தோஷத்தை உணருவோம். நாம் அப்படிச் செய்ய வேண்டுமென்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என்னுடைய உருக்கமான தாழ்மையான ஜெபம், ஆமென்.

அச்சிடவும்