2010–2019
கர்த்தராகிய கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்
ஏப்ரல் 2018


2:3

கர்த்தராகிய கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்

இது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை. ஜீவிக்கும் கிறிஸ்து பற்றி நான் பயபக்தியுடன் சாட்சி சொல்லி, வணக்கமாய் உறுதியளிக்கிறேன்---“மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”

அன்பான சகோதர சகோதரிகளே, எங்களுடைய மகன்கள் மிக இளமையாயிருந்தபோது, பீகிள் நாய்க்குட்டிகளைப்பற்றிய படுக்கை நேரக் கதைகளைக் கூறி, “கர்த்தராகிய கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்,” 1 ( “Christ the Lord is Risen Today” ) என்ற துதிப்பாடலையும் சேர்த்து பாடுவேன். “இப்போது தூங்குவதற்கான நேரம், அல்லேலுயா” என சிலநேரங்களில் வார்த்தைகளை நான் மாற்றிப்பாடுவேன். அவர்கள் தூங்கிவிட்டால், அல்லது குறைந்தது அவர்கள் தூங்கிவிட்டார்களென்று நான் நினைத்தால் நான் பாடுவதை நிறுத்திவிடுவேன் என அவர்களுக்குத் தெரியுமாதலால் வழக்கமாக எங்கள் மகன்கள் சீக்கிரமே தூங்கிவிடுவர்கள்.

எனக்கன்பான சூசன் என் பக்கத்திலிருக்க, தலைவர் ரசல் எம், நெல்சன் அவருடைய கரங்களால் என் கரங்களைப் பிடித்து, கர்த்தரிடமிருந்து வந்த இந்த பரிசுத்தமான அழைப்பை எனக்குக் கொடுத்ததிலிருந்து அது என் மூச்சை திணறவைத்து, இந்த நாட்களில் அநேக முறைகள் என்னை அழவைத்த அபரிமிதமான உணர்வுகளை வார்த்தைகளால்--குறைந்தபட்சம் என்னுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

இந்த ஈஸ்டர் ஓய்வுநாளில் நான் ஆனந்தமாகப் பாடுகிறேன், “அல்லேலுயா” நமது உயிர்த்தெழுந்த இரட்சகரின் மீட்பின் அன்பைப்பற்றிய2 பாடல், உடன்படிக்கைகளின், (தேவனிடத்திலும் ஒருவருக்கொருவரிடத்திலும் நம்மை இணைக்கிற) இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் (பரிசுத்த ஆவியின் ஏவுதலுக்கு உடன்பட்டு, சுபாவ மனுஷனையும் மனுஷியையும் அகற்ற நமக்குதவுகிற3) இசைவைக் கொண்டாடுகிறது.

நமது உடன்படிக்கைகளும், நமது இரட்சகரின் பாவநிவர்த்தியும் ஒன்றுசேர்ந்து நமக்கு சாத்தியமாக்கி, கண்ணியப்படுத்துகிறது. அவைகள் ஒன்றுசேர்ந்து நம்மை உண்மையுள்ளவர்களாக்கி, பாவங்களை விடச்செய்கிறது. அவைகள் ஒன்றுசேர்ந்து இனிமையாக்கி, பாதுகாத்து, பரிசுத்தப்படுத்தி, மீட்கிறது.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார் “பூலோகத்திலே பதிப்பிக்கப்படுகிற அல்லது கட்டப்படுகிற எதுவும் பரலோகத்திலே கட்டப்படுகிறது—என நாம் பேசுகிற ஒரு வல்லமை ஒரு துணிச்சலான கோட்பாடாயிருக்கிறதென சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் உண்மையான வெளிப்படுத்தலால் எந்த மனுஷனுக்காவது அல்லது எந்த குழு மனுஷர்களுக்காவது உலகத்தின் சகல காரியங்களிலும், ஆசாரியத்துவத்தின் ஒரு ஊழியக்காலத்தை கர்த்தர் கொடுக்கும்போதெல்லாம் எப்போதுமே இந்த வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது.” 4

அது இன்றும் அப்படியே ஆகும். 43 நாடுகளில், 159 கர்த்தரின் பரிசுத்த ஆலயங்களில் பெறக்கூடிய பரிசுத்த உடன்படிக்கைகளும் நியமங்களும் வேறெங்கும் கிடைப்பதில்லை. நமது விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் இக்காலத்துக்கும் நித்தியத்திற்கும் நமது தலைமுறைகளில் பரிசுத்த ஆவியால் வாக்குத்தத்தங்களைப் பிரதிபலித்து, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ திறவுகோல்கள், கோட்பாடு, மற்றும் அதிகாரம் மூலமாக வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் வருகின்றன.

ஒவ்வொரு தேசத்திலும், இனத்திலும், பாஷைக்காரர்களிலுமுள்ள உலகமுழுவதிலுமுள்ள சபையிலுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு காலடியிலும் உங்களுடைய உயிரோட்டமிக்க விசுவாசத்திற்காகவும், நம்பிக்கைக்காகவும், தயாளத்திற்காகவும் உங்களுக்கு நன்றி. முழுமையாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் சாட்சி மற்றும் அனுபவத்தின் கூட்டமாயிருப்பதற்காக உங்களுக்கு நன்றி.

அன்பான சகோதர சகோதரிகளே, நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள். எல்லா காரியங்களிலும், எல்லா இடங்களிலும் “ஒற்றுமையிலும் அன்பிலும்5 நாம் பின்னப்பட்டிருக்கலாம்.” 6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைக்கிறதைப்போல நாம் ஒவ்வொருவும், நாம் எங்கிருந்தாலும், உங்கள் சூழ்நிலைகள் எதுவானாலும், தயவுசெய்து வந்து பாருங்கள். 7

எனது இரட்சகருக்கு, என்னுடைய அன்பான சூசனுக்கு, என்னுடைய குடும்பத்துக்கு, என்னுடைய சகோதரருக்கு, எனக்கன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் ஒவ்வொருவருக்கும், அவைகள் எப்படியிருந்தாலும், எதுவாவதானாலும், இன்று என் ஆத்துமாவின் முழுஊக்கத்தோடும் திறமைகளாலும்8 நான் தாழ்மையாக வாக்களிக்கிறேன்.

தகுதியாயும் நித்தியமுமாயிருக்கிற எல்லாமுமே, நமது அன்பான நித்திய பிதாவாகிய தேவன், அவரது குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியால் சாட்சியளிக்கப்படுகிற அவருடைய பாவநிவர்த்தியின் உயிருள்ள உண்மையில் மையப்பட்டிருக்கிறது. 9 இந்த ஈஸ்டர் ஞாயிறில், மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரலோகத்துக்கு ஏறிப்போன, ஜீவிக்கிற கிறிஸ்துவைக்குறித்து நான் பயபக்தியோடும், வணக்கத்தோடும் சாட்சியளிக்கிறேன். 10 அவர் அல்பாவும் ஓமேகாவுமாயிருந்து, 11 ஆரம்பத்தில் நம்மோடிருந்தார், இறுதிவரை நம்மோடிருக்கிறார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திலிருந்து மிகமகிழ்ச்சியுடன் நாம் ஆதரித்த நமது அன்புக்குரிய தலைவர் ரசல் எம். நெல்சன்வரை, பிற்காலத் தீர்க்கதரிசிகள் பற்றி நான் சாட்சியளிக்கிறேன். நமது ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் பாடுவதைப்போல “தீர்க்கதரிசியைப் பின்பற்று, அவர் வழியை அறிவார்.” 12 மார்மன் புஸ்தகத்தையும் சேர்த்து, பரிசுத்த வேதங்களில் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டதைப்போல, மேசியாவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுதலாக பூமியின்மீது கர்த்தரின் இராஜ்யம் மீண்டும் ஸதாபிக்கப்பட்டதென நான் சாட்சியளிக்கிறேன். 13 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே, ஆமென்.