2010–2019
பரிசுத்த ஆவியை உங்களின் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்
ஏப்ரல் 2018


பரிசுத்த ஆவியை உங்களின் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வைத்திருக்கிறவர்களுக்கு என்ன ஒரு ஒப்பிடமுடியாத வரம் வருகிறது. அந்த வரம் பரிசுத்த ஆவியாகும்.

இந்த ஈஸ்டர் ஞாயிறில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிற, இல்லையென்றால் தோல்வியாயிருந்திருக்கக்கூடிய கிறிஸ்துவின் வெற்றிச் சிறப்பில், வெறுமையாயிருக்கிற கல்லறைக்கும் நமது சிந்தனை திரும்புகிறது. தேவன் “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” 1 என்று அப்போஸ்தலனாகிய பவுலுடன் நானும் நம்புகிறேன்.

உயிர்ப்பிக்க என்றால் உயிரோடிருக்க வைப்பதென்று அர்த்தம். அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலமாக சரீர மரணத்திற்குப் பின்னர் நமது சரீரங்களுக்கு கிறிஸ்து மீண்டும் ஜீவனைக் கொண்டு வருகிறதைப்போல, அப்படியே அவரால் நம்மை உயிர்ப்பிக்கவும் முடியும் அல்லது ஆவிக்குரிய மரணத்திலிருந்து நம்மை உயிரோடிருக்க வைக்கமுடியும். 2 இந்த வகையான உயிர்ப்பித்தலின் கீழ் ஆதாம் சென்றதை மோசேயின் புஸ்தகத்தில் நாம் படிக்கிறோம். “[ஆதாம்] ஞானஸ்நானம் பெற்றான், தேவஆவி அவன்மீது இறங்கியது, அப்படியாக அவன் ஆவியில் பிறந்தான், உள்ளான மனுஷனில் உயிர்ப்பிக்கப்பட்டவனானான்.” 3

இயேசு கிறிஸ்துவில் தங்களுடைய் விசுவாசத்தை வைத்திருப்பவர்களுக்கு என்ன ஒரு ஒப்பிடமுடியாத வரம் வருகிறது. அந்த வரம், “கிறிஸ்துவினால் ஜீவன்”4 என புதிய ஏற்பாடு அழைக்கிற, பரிசுத்த ஆவி நமக்குக் கொடுக்கிற வரம். ஆனால் அத்தகைய வரத்தை நாம் சிலநேரங்களில் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோமா?

சகோதர சகோதரிகளே, பின்வரும் அனுபவத்தால் விளக்கப்பட்டிருக்கிறதைப்போல, “ பரிசுத்த ஆவியை நமது வழிகாட்டியாகக்” 5 கொண்டிருப்பது ஒரு சிறப்பான சிலாக்கியம்.

படம்
என்சைன் ப்ராங்க் ப்ளெய்ர்

கொரியா போரின்போது, ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கப்பல் படையில் என்சைன் பிராங்க் ப்ளெய்ர் பணிபுரிந்து வந்தார். 6 ஒரு சம்பிராதய தலைவனை நியமிக்கும் அளவுக்கு கப்பல் பெரிதாயில்லை, ஆகவே, விசுவாசமும், கொள்கைகளுமுள்ள ஒரு வாலிபனாகவும் முழு பணியாளர்கள் குழுவும் அதிக மதிப்பு வைத்திருந்தவனாகவும் கவனிக்கப்பட்ட சகோதரர் ப்ளெய்ரை தற்காலிக தலைவனாயிருக்கும்படி தலைவன் கேட்டுக்கொண்டார்.

படம்
என்சைன் ப்ளெய்ர்

என்சைன் பிளெய்ர் எழுதினார், “எங்களுடைய கப்பல் ஒரு பெரிய சூறாவளியில் மாட்டிக்கொண்டது. அலைகள் சுமார் 45 அடி [14மீ] உயரத்திற்கு எழுந்தன. நான் காவல் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எங்களுடைய மூன்று இயந்திரங்களில் ஒன்று செயலிழந்துபோய் கப்பலின் நடுவில் ஒரு வெடிப்பு கண்டிபிடிக்கப்பட்டது. எங்களிடம் மீதி இரண்டு இயந்திரங்களிருந்து, அதில் ஒன்றின் சக்தியில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் மிகமோசமான பிரச்சினையிலிருந்தோம்.”

என்சைன் பிளெய்ர் அவரது காவலை முடித்து படுக்கைக்குச் சென்றபோது தலைவன் அவரது கதவைத் தட்டினார். “இந்தக் கப்பலுக்காக நீங்கள் ஜெபிக்கமுடியுமா”? என அவர் கேட்டார். என்சைன் பிளெய்ர் அப்படிச்செய்ய சம்மதித்தார்.

பரலோக பிதாவே, எங்கள் கப்பலை ஆசீர்வதித்து எங்களை பாதுகாப்பாய் வைத்திரும் என அந்த நேரத்தில் என்சைன் பிளெய்ர் ஜெபித்துவிட்டு படுக்கைக்குச் சென்றிருக்கலாம். மாறாக, கப்பலின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் உதவ அந்நேரத்தில் அவரால் ஏதாவது செய்யமுடியுமா என அறிந்துகொள்ள அவர் ஜெபித்தார். சகோதரர் பிளெய்ரின் ஜெபத்துக்குப் பதிலாக, கப்பல்மேடைக்குச் சென்று, தலைவனோடு பேசி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவி அவருக்கு உணர்த்தியது. கப்பலின் மீதியுள்ள இயந்திரங்களை எவ்வளவு வேகமாக ஓடவைக்கத் தீர்மானிக்க தலைவன் முயற்சித்துக்கொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். மீண்டும் ஜெபிக்க அவரது அறைக்கு என்சைன் பிளெய்ர் திரும்பினார்.

“இயந்திரங்களிலுள்ள பிரச்சினைகளை சரிசெய்ய உதவுவதற்கு நான் என்ன செய்யமுடியுமென?” அவர் ஜெபித்தார்.

அதிக தகவலை சேகரிக்க அவர் கப்பலைச் சுற்றி நடந்து கவனிக்கவேண்டும் என பதிலாக பரிசுத்த ஆவி முணுமுணுத்தது. அவர் மீண்டும் தலைவனிடத்திற்கு திரும்பி, தளத்தைச் சுற்றி நடக்க அனுமதி கேட்டார். பின்னர் பாதுகாப்பு முடிச்சு அவரது இடுப்பைச்சுற்றி கட்டப்பட்டு அவர் புயலுக்குள் சென்றார்.

பின்புற நுனியில் நின்றுகொண்டு கப்பலின் முன்தள்ளிகளை அவர் கவனித்தபோது கப்பலில் அடித்த ஒரு அலையால் அவைகள் தண்ணீருக்கு வெளியே வந்திருந்தன. ஒன்று மட்டுமே முழுமையாக செயல்பட்டு இது மிக வேகமாக சுற்றிக்கொண்டிருந்தது. இவைகளைக் கவனித்த பின்பு என்சைன் ப்ளெய்ர் மீண்டும் ஒருமுறை ஜெபித்தார். மீதியிருந்த நல்ல இயந்திரம் அதிக அழுத்தத்தின் கீழ் செயல்பட்டு வேகத்தைக் குறைப்பது அவசியமென்ற தெளிவான பதிலை அவர் பெற்றார். ஆகவே அவர் தலைவனிடத்தில் போய் அந்த சிபாரிசைக் கொடுத்தார். இதற்கு எதிர்மறையாக, புயலை மேற்கொள்ள நல்ல இயந்திரத்தின் வேகத்தை அதிகரிக்கவேண்டுமென அப்போதுதான் கப்பலின் பொறியாளர் ஆலோசனையளித்தார் என்று தலைவன் ஆச்சரியத்துடன் சொன்னார். ஆயினும் என்சைன் பிளெய்ரின் ஆலோசனையைப் பின்பற்ற தலைவன் தீர்மானித்து இயந்திரத்தின் வேகத்தைக் குறைத்தனர். அதிகாலையில் அமைதியான தண்ணீரில் கப்பல் பாதுகாப்பாய் வந்தது.

இரண்டு மணிநேரங்களுக்குப் பின்னரே நல்ல இயந்திரம் முழுமையாக நின்றது. அரை சக்தி கொண்ட மீதி இயந்திரத்துடன் கப்பல் மெதுவாக துறைமுகத்தை சேரமுடிந்தது.

“அந்த இயந்திரத்தின் வேகத்தை நாம் குறைக்காதிருந்தால் புயலுக்கு மத்தியில் நாம் காணாமற்போயிருப்போம்” என தலைவன் என்சைன் பிளெய்ரிடம் சொன்னார்.

அந்த இயந்திரமில்லாமல் பயணிக்க எந்த வழியுமிருந்திருக்காது. கப்பல், கவிழ்ந்து மூழ்கியிருக்கும். தலைவன், இளம் எல்.டி.எஸ் அதிகாரிக்கு நன்றி சொல்லி, என்சைன் பிளெய்ரின் ஆவிக்குரிய உணர்த்துதல்களைப் பின்பற்றியது கப்பலையும் அதன் பணியாளர்களையும் பாதுகாத்ததென்று அவர் நம்பியதாக சொன்னார்.

இப்போது இந்தக் கதை மிகக் குறிப்பிடத்தக்கது. எதிர்பாராதவிதமாக நாம் இத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது மிக அடிக்கடி எவ்வாறு நாம் ஆவியின் வழிகாட்டுதலைப் பெற முடியும் என்பதைப்பற்றி இந்தக் கதையில் முக்கியமான வழிகாட்டுதல்கள் அடங்கியிருக்கின்றன.

முதலாவதாக, இது வெளிப்படுத்தலுக்கு வருகிறபோது, பரலோகத்தின் அலைவரிசையைப் பெற நமது கிரகிப்பை சரியாக இணக்கமாக்கவேண்டும். என்சைன் ப்ளெய்ர் ஒரு தூய்மையான விசுவாசமிக்க வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் கீழ்ப்படியாமலிருந்திருந்தால், அவரது கப்பலின் பாதுகாப்பிற்கும், அத்தகைய குறிப்பிட்ட வழிகாட்டுதலைப் பெறவும் ஜெபிக்கத் தேவையான ஆவிக்குரிய நம்பிக்கை அவருக்கு இருந்திருக்காது. அவரால் வழிகாட்டும்படியாக தேவனுடைய கற்பனைகளுடன் நமது வாழ்க்கையை இணையாக வைக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும்.

நாம் தகுதியில்லாதவர்களாயிருப்பதால் சிலநேரங்களில் பரலோகத்தின் சைகையை நாம் கேட்கமுடியாதிருக்கலாம். மீண்டும் தெளிவான தொடர்பை அடைய, மனந்திரும்புதலும் கீழ்ப்படிதலும் வழியாகும். மனந்திரும்புதலுக்கான பழைய ஏற்பாடு வார்த்தையின் அர்த்தம் திரும்ப அல்லது சுற்றித் திரும்ப என்பதாகும். 7 தேவனிடத்திலிருந்து தூரமாயிருப்பதாய் நீங்கள் உணரும்போது பாவத்திலிருந்து திரும்பவும், அவர் கரங்களை நீட்டியபடி அவர் உங்களுக்காக காத்திருப்பதை நீங்கள் காண்கிற இரட்சகரை எதிர்கொள்ளவும் தீர்மானம் எடுக்க வேண்டியதிருக்கிறது. உங்களை வழிநடத்த அவர் ஆர்வமாயிருக்கிறார், மீண்டும் அந்த வழிகாட்டுதலை அடைவதிலிருந்து நீங்கள் ஒரு ஜெபத்திலிருந்து அப்பாலே இருக்கிறீர்கள். 8

இரண்டாவதாக, அவரது பிரச்சினையைத் தீர்க்க என்சைன் ப்ளெய்ர் கர்த்தரைக் கேட்கவில்லை. தீர்வின் பகுதியாயிருக்க அவர் என்ன செய்யவேண்டுமென கேட்டார். அதைப்போன்றே, “கர்த்தாவே, தீர்வின் பகுதியாயிருக்க நான் என்ன செய்யவேண்டும்?” என நாம் கேட்கலாம். ஜெபத்தில் நமது பிரச்சினைகளை பட்டியலிட்டு, அவைகளைத் தீர்க்க கர்த்தரிடம் நாம் கேட்கிறதற்குப் பதிலாக , கர்த்தரின் மிக நடைமுறை வழிகளை நாம் தேடி , கர்த்தரின் உதவியைப் பெற்று , பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி நடக்க ஒப்புக்கொடுக்கவேண்டும்.

என்சைன் ப்ளெய்ரின் கதையில் ஒரு மூன்றாவது முக்கியமான பாடமிருக்கிறது. முந்திய சந்தர்ப்பங்களில் பரிசுத்த ஆவியிடமிருந்து அவர் வழிநடத்துதலைப் பெறாமலிருந்திருந்தால் இத்தகைய அமைதியான உறுதியில் அவர் ஜெபித்திருக்க முடியுமா? நீண்ட காலமாக நாடாதிருந்த பரிசுத்த ஆவியின் வரத்தை நாடாதிருக்கவும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கண்டுபிடிக்காமலிருக்கவும் சூறாவளியின் வருகை செய்திருக்கலாம். ஒரு முழுநேர ஊழியராவது உள்ளிட்ட இந்த இளைஞன் கற்றுக்கொண்ட, இதற்கு முன்பு அநேக முறைகள் அவர் பயன்படுத்திய ஒரு மாதிரியை அவர் தெளிவாகப் பயன்படுத்தினார். நமது வாழ்க்கையின் மிக பயங்கரமான புயல்களில் அவரது குரல் தெளிவாயிருக்கும்படியாக, நமது வாழ்க்கையின் அமைதியான நேரங்களில் பரிசுத்த ஆவி நமது வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

பரிசுத்த ஆவியிடமிருந்து தினமும் நாம் வழிகாட்டுதலை எதிர்பார்க்கக்கூடாது, ஏனெனில் “சகல காரியங்களிலும் நான் [தேவன்] கட்டளையிடவேண்டுமென்பது நல்லதல்ல” நாம் சோம்பேறி வேலைக்காரர்களாகிவிடுவோம்9 என சிலர் நினைக்கலாம் . ஆயினும், தாங்களே பெற்றிருக்கக்கூடிய ஒரு வெளிப்படுத்தலைப் பெற ஜோசப் ஸ்மித்திடம் கேட்ட சில ஆரம்பகால ஊழியர்களுக்கு இந்த வேதவசனம் கொடுக்கப்பட்டது. அதற்கு முந்திய வசனத்தில் “அவர்களுக்கும் எனக்குமிடையில் அவர்கள் ஆலோசித்ததைப்போல”, ஊழியக்களத்திற்கு அவர்கள் வரட்டும்10 என கர்த்தர் அவர்களுக்குக் கூறினார் .

தங்களுடைய பயணத்திட்டங்களைப்பற்றி ஒரு குறிப்பிட்ட வெளிப்பட்டுத்தல் இந்த ஊழியக்களங்களுக்கு வேண்டியதிருந்தது. தனிப்பட்ட காரியங்களுக்கு தங்களுடைய சொந்த வழிநடத்துதலைத் தேட அவர்கள் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. சோம்பேறித்தனம் என்று இந்த எண்ணத்தை கர்த்தர் அழைத்தார். தாங்களே எவ்வாறு வெளிப்படுத்தலைப் பெறுவதில் தவறுகிற அபாயத்தில் அவர்களிருந்தபடியால் ஆரம்பகால அங்கத்தினர்கள் ஒரு உண்மையான தீர்க்கதரிசியைக் கொண்டிருப்பதில் மிக சந்தோஷமாயிருந்தனர் . ஒருவருடைய சொந்த வாழ்க்கையில் அவருடைய ஆவியின் மூலமாக கர்த்தருடைய குரலைக்கேட்டல், ஆவியில் சுயசார்பாயிருத்தலாகும்.

“உன் எல்லாசெயல்கள்செய்வதிலும் கர்த்தரிடத்தில் ஆலோசி” 12 என ஆல்மா அவனுடைய மகனுக்கு புத்தி சொன்னான். ஆவியில் ஜீவித்தல் என நாம் வழக்கமாக அழைப்பது ஒரு உயர்ந்த சிலாக்கியம். அதனுடன் இது ஒரு அமைதியான நிச்சயத்தின் உணர்வையும் அப்படியே, அன்பு, சந்தோஷம், சமாதானம் என்ற ஆவியின் கனிகளையும் கொண்டுவருகிறது. 12

வெளிப்படுத்தல் பெறும் என்சைன் ப்ளெய்ரின் திறமை ஒரு பயங்கரமான புயலிலிருந்து அவரையும் அவருடைய சக கப்பல் பணியாளர்களையும் காப்பாற்றியது. இன்று பிறவகையான புயல்கள் எழும்புகின்றன. இத்தகைய உலகத்தில் ஆவிக்குரிய பாதுகாப்பை எவ்வாறு அடைவதென்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உருவத்தை மார்மன் புஸ்தகத்தின் ஜீவவிருட்சத்தின் உவமை13 வழங்குகிறது. தேவனிடம் திரும்பும் பாதையில் நடந்துகொண்டிருந்த சபை அங்கத்தினர்களுக்கு ஆவிக்குரிய அழிவைக்கொண்டுவர சடிதியான இருள் மூடுபனி எழுந்ததைப்பற்றி இந்த சொப்பனம் கூருகிறது. 14

படம்
லேகியின் சொப்பனம்

இந்த உருவத்தை ஆராய்ந்ததில் அந்த பாதையில் பயணித்த மனிதக்கூட்டத்தையும், சிலர் தங்கள் கைகளால் இருப்புக்கோலைப்பற்றிப் பிடித்திருந்ததையும், ஆனால் அநேகர் அவர்களுக்கு முன்னாகச் சென்றவர்களின் காலடிகளைப் பின்பற்றிச் சென்றதையும் நான் என் மனக்கண்களால் கண்டேன். இந்தப் பின்னாலுள்ள அணுகுமுறை சிறிய சிந்தனையும் முயற்சியையும் எடுக்கிறது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி நீங்கள் நினைக்கலாம். நல்ல சூரியஒளியில் வேலை செய்ய இது நன்றாக இருக்கும். ஆனால் நேர்மையற்ற புயல்களும் பொய்யின் மூடுபனிகளும் எச்சரிக்கையில்லாமல் எழுகின்றன. இந்த சூழ்நிலைகளில் பரிசுத்த ஆவியின் குரலுடன் பிரசித்தமாயிருத்தல் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் மரணத்தின் காரியமாயிருக்கிறது.

“தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து அதை உறுதியாய் பிடித்துக்கொள்கிறவர்கள்  ஒருக்காலும் அழிவதில்லை என்றும் அவர்களை அழிவுக்கு நடத்திச் சென்று குருடாக்க சோதனைகளாலும், பொல்லாங்கன் எறியும் அக்கினியாஸ்திரங்களினாலும் அவர்களை மேற்கொள்ளமுடியாது” 15 என்பது நேபியின் வல்லமைமிக்க வாக்களிப்பு.

பாதையில் உங்களுக்கு முன்னாலுள்ள மக்களின் காலடிகளைப் பின்பற்றுதல் போதுமானதில்லை. மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களோ அதை நம்மால் செய்யமுடியாது, சிந்திக்கமுடியாது. வழிகாட்டப்பட்டவழியில் நாம் வாழவேண்டும். இருப்புக்கோலில் நமது ஒவ்வொருவரின் கைகளுமிருக்கவேண்டும். பின்னர் அவர் “கரம் பிடித்து [நம்மை] நடத்துவார் [நம்முடைய] ஜெபங்களுக்கு [நமக்கு] பதிலளிப்பார்” 16 என அறிந்துகொண்டு அடக்கமான நம்பிக்கையுடன் நாம் கர்த்தரிடம் போகலாம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.

அச்சிடவும்