2010–2019
சாந்தமும் மனத்தாழ்மையுமாய்
ஏப்ரல் 2018


சாந்தமும் மனத்தாழ்மையுமாய்

சாந்தகுணம், மீட்பரின் ஒரு முக்கியமான தன்மை, அது நீதியால் பிரதிக்கிரியை செய்வதாலும், பணிவுக்கு சித்தமாயிருப்பதாலும், பலமான சுய கட்டுப்பாட்டாலும் தனித்துவம் பெறுகிறது.

சபைத்தலைவர்களை ஆதரிக்கக் கிடைத்த பரிசுத்த தருணத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். மூப்பர்காங் மற்றும் மூப்பர்சோர்ஸை பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்திற்கு என்னுடைய முழு இருதயத்தோடும் வரவேற்கிறேன். இந்த விசுவாசமிக்க மனிதர்களின், ஊழியங்கள் உலகமுழுவதிலுமுள்ள தனிப்பட்டவர்களையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும், அவர்களோடு சேவை செய்யவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நான் ஆர்வமாயிருக்கிறேன்.

பின்பற்ற நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சிக்கவேண்டிய மிகமுக்கிய பகுதியான இரட்சகரின் தெய்வீகத்தன்மையைப்பற்றி1 நாம் ஒன்றாகக் கற்றுக்கொள்ளும்போது பரிசுத்த ஆவி நமக்குப் போதித்து தெளிவுபடுத்த விவரிக்க நான் ஜெபிக்கிறேன்.

என்னுடைய செய்தியில் பின்னால் வருகிற விசேஷித்த எண்ணத்தை அடையாளம்காண்பதற்கு முன் இந்த கிறிஸ்துவைப்போன்ற இயல்பை கோடிட்டுக்காட்டுகிற ஏராளமான எடுத்துக்காட்டுகளை நான் சமர்ப்பிக்கிறேன். ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் தயவுசெய்து கவனமாக கேட்டு நான் கேட்கிற கேள்விகளுக்கு என்னுடன் சாத்தியமான பதில்களைக் கருத்தில்கொள்ளவும்.

எடுத்துக்காட்டு எண் 1. ஆஸ்தியுள்ள வாலிபனும் அமுலேக்கும்

“நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்?”2 என்று கேட்ட ஒரு ஆஸ்தியுள்ள வாலிபனைப்பற்றி புதிய ஏற்பாட்டில் நாம் அறிந்துகொள்கிறோம். கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி முதலில் இரட்சகர் அவனுக்கு அறிவுறுத்தினார். அடுத்து, அவனுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல ஒரு கூடுதலான தேவையை வாலிபனுக்கு போதகர் கொடுத்தார்.

“அதற்கு இயேசு, நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய் உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.

“அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.”3

இந்த ஆஸ்தியுள்ள வாலிபனின் பிரதியுத்தரத்துடன், மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள அமுலேக்கின் அனுபவத்தை ஒப்பிடவும். அமுலேக் ஒரு உழைப்பாளியாகவும் அநேக உறவினர்களோடும் நண்பர்களோடும் ஆஸ்திமானாயிருந்தான்.4 பலமுறை அழைக்கப்பட்டிருப்பினும் கேட்காதவனாயிருந்ததாகவும், தேவனைப்பற்றிய காரியங்களை அறிந்திருந்தாலும் அறியாத ஒரு மனுஷனாக அவன் தன்னைப்பற்றி விவரித்தான்.5 அடிப்படையில் நல்ல மனிதன், புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கிற ஆஸ்தியுள்ள வாலிபனைப்போலவே உலகக்காரியங்களால் அமுலேக் திசைதிருப்பப்பட்டிருந்தான்.

முன்பு அவன் தன் இருதயத்தை கடினப்படுத்தியிருந்தாலும், ஒரு தூதனின் குரலுக்கு அமுலேக் கீழ்ப்படிந்து தீர்க்கதரிசி ஆல்மாவை தனது வீட்டிற்கு அழைத்து, அவனுக்குப் போஜனமளித்தான். ஆல்மாவின் சந்திப்பின்போது அவன் ஆவிக்குரியவிதமாக விழிப்படைந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைக்கப்பட்டான். பின்னர் “தேவ வசனத்தினிமித்தம் தன் சகல பொன்னையும், வெள்ளியையும், விலையுயர்ந்த பொருட்களையும் வெறுத்து ஒதுக்கினான், அவன் தனது முந்தைய நண்பர்களாலும், தன் தந்தையாலும். உறவினராலும் தள்ளப்பட்டான்.”6

ஆஸ்தியுள்ள வாலிபனுக்கும் அமுலேக்குக்குமிடையில் விளக்கப்பட்டுள்ள வேறுபாடுகள் என்ன விளக்குகிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்?

எடுத்துக்காட்டு எண் 2. பகோரன்

மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு போரின் அழிவின் நேரத்தின்போது நெப்பிய இராணுவத்தின் பிரதான சேனாதிபதியான மரோனிக்கும் பிரதான விசாரணைக்காரனும், தேசத்தின் ஆளுனருமான பகோரானுக்குமிடையில் நிருபங்களின் பரிமாற்றம் நடந்தது. அரசாங்கத்திடமிருந்து குறைவான ஆதரவினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த சேனையையுடைய மரோனி, “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிற” 7 வகையில் பகோரனுக்கு எழுதி, அவன் மற்றும் அவனது சக தலைவர்களின் மந்தபுத்தியை, சோம்பேறித்தனத்தை, புறக்கணிப்பை, மற்றும் சதிகாரர்களாயிருந்ததையுப்பற்றியும் குற்றம் சுமத்தினான்.8

மரோனி மீதும் அவனது தவறான குற்றச்சாட்டுகளுக்கும் பகோரன் எளிதாக ஆத்திரமடைந்திருக்கலாம், ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அவன் அக்கறையோடு பதிலளித்து, மரோனி அறிந்திராத அரசாங்கத்திற்கு விரோதமான கலகத்தைப்பற்றி விளக்கினான்.

“இதோ, மரோனியே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உனது மிகுந்த உபத்திரவங்களிலே சந்தோஷப்படுவதில்லை, ஆம் அது என் ஆத்துமாவைச் சஞ்சலப்படுத்துகிறது. …

“உன்னுடைய நிருபத்திலே என்னை நீ கடிந்துகொண்டாய், ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை, நான் கோபப்படாமல், உன் உள்ளத்தின் பெருந்தன்மையில் களிகூருகிறேன்”9 என பகோரன் அறிவித்தான்.

மரோனியின் குற்றச்சாட்டுகளுக்கு விவரிக்கப்பட்டுள்ள பகோரனின் பதில் என்ன விளக்குகிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்?

எடுத்துக்காட்டு எண் 3. தலைவர் ரசல் எம்,நெல்சன் மற்றும் தலைவர் ஹென்றி பி.ஐரிங்

மார்மன் புஸ்தகத்தில் அடங்கியிருக்கிற சத்தியங்களை படிக்கவும், தியானிக்கவும், பிரயோகப்படுத்தவும் தலைவர் தாமஸ் எஸ்.மான்சனின் அழைப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தலைவர் ரசல் எம். நெல்சன், பொது மாநாட்டில் தனது பதிலை விவரித்தார். “அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற நான் முயற்சித்தேன். பிற காரியங்களுக்கு மத்தியில், மார்மன் புஸ்தகம் என்றால் என்ன, அது எதை உறுதியளிக்கிறது, அது எதை மறுதலிக்கிறது, அது எதை நிறைவேற்றுகிறது, இது எதைத் தெளிவுபடுத்துகிறது, இது எதை வெளிப்படுத்துகிறது என்று பட்டியலிட்டேன். இந்த உருப்பெருக்கிகள் மூலமாக மார்மன் புஸ்தகத்தைப் பார்த்தால் அது உள்ளுணர்வும் உணர்த்துதலுமான பயிற்சியாயிருக்கிறது! இதை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் சிபாரிசு செய்கிறேன்”10 என அவர் சொன்னார்.

அப்படியே, தலைவர் மான்சனின் வேண்டுகோள் அவருடைய வாழ்க்கையில் முக்கியத்துவத்தை தலைவர் ஹென்றி பி. ஐரிங் வலியுறுத்தினார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக மார்மன் புஸ்தகத்தை நான் ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். ஆகவே ஒருவேளை தலைவர் மான்சனின் வார்த்தைகள் வேறு யாருக்காகவாவது இருக்கலாம் என நான் காரணத்துடன் நினைத்தேன். இருந்தும் உங்களில் அநேகரைப்போல் தீர்க்கதரிசியின் ஊக்குவித்தலும் அவருடைய வாக்களிப்பும் ஒரு பெரிய முயற்சியை எடுக்க என்னை அழைத்தது. …

“தீர்க்கதரிசி வாக்களித்தது, எனக்கும் உங்களில் அநேகருக்கும் சந்தோஷமான பலனாயிருக்கிறது.”11

தலைவர் மான்சனின் அழைப்புக்கு கர்த்தரின் சபையில் இந்த இரண்டு தலைவர்களால் கொடுக்கப்பட்ட உடனடியான மனப்பூர்வமான பதில்கள் என்ன விளக்குகிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்?

அமுலேக், பகோரன், தலைவர் நெல்சன் மற்றும் தலைவர் ஐரிங்கின் ஆவிக்குரிய பலமான பதில்கள் கிறிஸ்துவைப்போன்ற ஒரே ஒரு தன்மையால் விளக்கப்படுகிறதென நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட அநேக தன்மைகளும், அனுபவங்களும் நிச்சயமாக இந்த நேர்மையான ஊழியர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கிற ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நடத்துகிறது. ஆனால், நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் முழுமையாக புரிந்துகொள்ளவும் சேர்த்துக்கொள்ளவும் வேண்டிய இது ஒரு அத்தியாவசியமான தன்மை என இரட்சகரும் அவரது தீர்க்கதரிசிகளும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

சாந்தகுணம்

பின்வரும் வேதத்தில் அவரைப்பற்றி விளக்க கர்த்தர் பயன்படுத்திய குணாதிசயத்தை தயவுசெய்து கவனிக்கவும். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”12

உள்ளுணர்வில் அவர் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய அனைத்து தன்மைகளுக்கும் நற்குணங்களுக்கும் மத்தியிலிருந்து, தகவலின்படி சாந்தகுணத்தை வலியுறுத்த இரட்சகர் தேர்ந்தெடுத்தார்.

1829ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் பெறப்பட்ட ஒரு வெளிப்படுத்தலில் இதைப்போன்ற ஒரு மாதிரி நிருபணமாகிறது. “என்னிடமிருந்து கற்றுக்கொள், எனது வார்த்தைகளுக்குச் செவிகொடு, எனது ஆவியின் சாந்தத்தில் நட, என்னில் உனக்கு சமாதானம் உண்டாயிருக்கும்”13 என கர்த்தர் அறிவித்தார்.

சாந்தகுணம் மீட்பரின் ஒரு முக்கியமான தன்மை, அது நீதியை ஏற்றுக்கொள்வதால், தாழ்மையாயிருக்க விரும்புவதால், பலமான சுயகட்டுப்பாட்டால் சிறப்படைகிறது. இந்த தன்மை, அமுலேக், பகோரன், தலைவர் நெலசன் மற்றும் தலைவர் ஐரிங்கின் பதில்களை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள நமக்குதவுகிறது.

உதாரணமாக, மார்மன் புஸ்தகத்தைப் படிக்க தலைவர் மான்சனின் ஊக்குவித்தலுக்கு, தலைவர் நெல்சனும், தலைவர் ஐரிங்கும், நீதியாகவும், வேகமாகவும் செயல்பட்டார்கள். இந்த இரண்டு மனிதர்களும் முக்கியமான, காணக்கூடிய சபை ஸ்தானங்களில் ஊழியம் செய்துகொண்டிருந்தாலும், பலஆண்டுகளாக வேதங்களை மிக ஆழமாக படித்துக்கொண்டிருந்தாலும், எந்த தயக்கமில்லாமையையும், சுயகர்வத்தின் உணர்வில்லாமையையும் அவர்களுடைய செயல்பாட்டில் காட்டினார்கள்.

அமுலேக், தேவனின் சித்தத்திற்கு விருப்பப்பட்டு ஒப்படைத்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைப்பை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய வசதியான சூழ்நிலைகளையும், பொதுவான உறவுகளையும் விட்டுவிட்டான். அரசாங்கத்திற்கு விரோதமாக கலகத்திலிருந்து சவால்கள் எழுவதை அவன் மரோனியிடம் விவரித்தபோது மறுயுத்தரமளிப்பதற்குப் பதிலாக புரிந்துகொள்ளுதலுடனும் பலமான சுயகட்டுப்பாடுடனும் செயல்பட பகோரன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்.

நம்முடைய சமகால உலகத்தில் கிறிஸ்துவைப்போன்ற சாந்தகுணத்தின் தன்மை வழக்கமாக தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சாந்தகுணம் பெலன், பெலவீனமல்ல, செயல், செயலற்றதல்ல, துணிவானது, கோழைத்தனமில்லை, கட்டுப்பாடானது, மிதமிஞ்சியதல்ல, அடக்கமானது, சுயகர்வமுடையதல்ல, கிருபையுள்ளது, முரட்டுத்தனமானதல்ல. ஒரு சாந்தகுணமுள்ளவனை எளிதாக எரிச்சலூட்டவோ, பகட்டாயிருக்கவோ, கர்வமுள்ளவராக்கவோ முடியாது, மற்றவர்களின் சாதனைகளை உடனேயே ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படியிருக்க தாழ்மை பொதுவாக தேவனின்மேல் சார்ந்திருப்பதையும், அவருடைய வழிநடத்துதல் மற்றும் ஆதரவுக்கான நிரந்தர தேவையையும் குறிக்கிறது, சாந்தகுணத்தின் தனித்துவமான குணாதிசயம் பரிசுத்த ஆவியிடமிருந்தும், முக்கியமான பதவிகளைத் தரித்திராத, அல்லது வழங்குவதற்கு அதிகமாயில்லாததாகத் தோன்றுகிற குறைந்த தகுதியும், அனுபவமும், அல்லது கல்வியும் இல்லாததாகத் தோன்றுகிற மனிதர்களிடமிருந்தும், கற்றுக்கொள்ள ஒரு ஆவிக்குரிய குறிப்பிட்ட ஆர்வமாயிருக்கிறது. சீரிய படைத்தலைவனாகிய நாகமான், அவனுடைய பெருமையை மேற்கொண்டு தீர்க்கதரிசியான எலிசாவுக்குக் கீழ்ப்படிய அவனுடைய வேலைக்காரனின் புத்திமதியை சாந்தமாக ஏற்றுக்கொண்டு யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணியதை நினைவுகூருங்கள்.14 செல்வாக்கு, பதவி, அதிகாரம், ஆஸ்தி மற்றும் துதியிலிருந்து வழக்கமாக எழுகிற பெருமையின கண்மூடித்தனத்திலிருந்து சாந்தகுணம் முக்கிய பாதுகாப்பு.

சாந்தகுணம் – கிறிஸ்துவைப்போன்ற தன்மையும் ஒரு ஆவிக்குரிய வரமும் ஆகும்.

விருப்பத்தின், ஒழுக்க சுயாதீனத்தின், நீதியான பயிற்சியின், நமது பாவங்களுக்காக மீட்பை எப்போதும் தக்கவைக்கும் முயற்சியின் மூலமாக விருத்திசெய்யப்படுகிற சாந்தகுணம் ஒரு தன்மை.15 நாம் சரியாக நாடக்கூடிய இது ஒரு ஆவிக்குரிய வரமுமாகும்.16 ஆயினும், தேவனுடைய பிள்ளைகள் பலனடையவும், சேவைசெய்யவும் இத்தகைய ஆசீர்வாதம் கொடுக்கப்படுகிறதென்பதை நாம் நினைவுகூரவேண்டும்.17

நாம் இரட்சகரிடத்தில் வந்து அவரைப் பின்பற்றும்போது அதிகமாகவும் சிறிதுசிறிதாகவும் நாம் அவரைப்போலாக நமக்கு சாத்தியமாக்கும். ஆவியால் ஒழுக்கமுள்ள சுயகட்டுப்பாடுடனும் சீரான அமைதியான குணத்துடனும் நாம் பரிசுத்த ஆவியால் அதிகாரமளிக்கப்படுகிறோம். இப்படியாக, எதையோ செய்வதனாலல்ல சாந்தகுணமென்பது போதகரின் சீஷர்களாக நாம் மாறுவதே.

மோசே “எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்”18 இருந்தும், அவன் “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” 19. அவனுடைய அறிவும் தகுதியும் அவனைப் பெருமையுள்ளவனாய் ஆக்கியிருக்கமுடியும். அதற்குப் பதிலாக அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற தன்மையுடனும், சாந்தகுணத்தின் வரத்துடனும் அவனுடைய வாழ்க்கையில் கர்வமில்லாதவனாயிருந்து தேவனின் நோக்கங்களை நிறைவேற்ற ஒரு கருவியாக மோசே உயர்த்தப்பட்டான்.

போதகர் சாந்தகுணத்தின் ஒரு எடுத்துக்காட்டாக

இரட்சகரின் வாழ்க்கையிலேயே மிக மகத்தான அர்த்தமுள்ள சாந்தகுணத்தின் எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன.

“சகலவற்றிற்கும் கீழே இறங்கிய”20 மகத்தான மீட்பர் பாடுபட்டு, இரத்தம் சிந்தி, “எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு21 மரித்து, அவருடைய சீஷர்களின் தூசுபடிந்த கால்களை அன்புடன் கழுவினார்.22 ஒரு ஊழியராகவும் தலைவராகவும் இத்தகைய சாந்தகுணம் ஒரு குணாதிசயத்தின் அசல் அடையாளமாயிருக்கிறது.

கெத்சமனேயில் அதிகமான வியாகுலத்தில் அவர் பாடுபட்டபோது நீதியான பிரதிக்கிரியை மற்றும் ஏற்றுக்கொள்ளுதலில், தாழ்மையின் விருப்பத்தின் இறுதி எடுத்துக்காட்டை இயேசு வழங்குகிறார்.

“அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,

“அவர் முழங்கால்படியிட்டு,

“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.”23

இந்த நித்திய அத்தியாவசியமானதும் பயங்கரமுமான அனுபவத்தில் இரட்சகரின் சாந்தகுணம் நமது சொந்த ஞானத்திற்கு மேலாக தேவனின் ஞானத்தை வைப்பதன் முக்கியத்துவத்தை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகிறது.

கர்த்தருடைய சீரான தாழ்மையின் விருப்பமும் பலமான சுயகட்டுப்பாடும் நம் அனைவருக்கும் மெச்சத்தக்கதாகவும் அறிவூட்டுவதாகவுமிருக்கிறது. இயேசுவைப் பிடிக்கவும் கைது செய்யவும் ஆலய காவற்காரர்களின் ஆயுதந்தரித்த குழுவும் ரோம வீரர்களும் கெத்சமனேக்கு வந்து சேர்ந்தபோது பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினான்.24 அப்பொழுது இயேசு வேலைக்காரனுடைய காதைத்தொட்டு அவனைச் சொஸ்தப்படுத்தினார்.25 அவரைப் பிடிக்கக் கூடியவனை அவர் அணுகி, பிடிக்கப்பட்டு சிலுவையிலறையப்படுதலை தடுத்திருக்கக்கூடிய அதே பரலோக வல்லமையைப் பயன்படுத்தி அவனை ஆசீர்வதித்தார் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

சிலுவையிலறையும்படியாக பிலாத்துக்கு முன்பாக எவ்வாறு போதகர் குற்றம் சாட்டப்பட்டு பழி சுமத்தப்பட்டார் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.26 “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?”27 என அவரைக் காட்டிக்கொடுத்தபோது இயேசு அறிவித்தார். இருந்தும் “ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் நித்திய நியாயாதிபதி”28, எதிர்மறையாக ஒரு தற்காலிக அரசியல் தலைவருக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட்டார். “அவரோ [இயேசு] ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை. அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.”29 அவருடைய ஒழுக்கமான பொறுப்பில், பலமான சுயகட்டுப்பாட்டில், சுயலாபத்திற்காக அவருடைய அளவில்லா வல்லமையை வெளிப்படுத்த விருப்பமின்மையில் இரட்சகரின் சாந்தகுணம் நிருபிக்கப்பட்டது.

வாக்குத்தத்தமும் சாட்சியும்

சாந்தகுணம் அஸ்திபாரமென்றும் அதிலிருந்தே சகல ஆவிக்குரிய திறமைகளும் வரங்களும் எழுகின்றன என்றும் மார்மன் காண்கிறான்.

“ஆதலால் ஒரு மனுஷனுக்கு விசுவாசமிருந்தால் அவன் நம்பிக்கையை உடையவனாக இருக்கவேண்டும், ஏனெனில் விசுவாசமில்லாமல் எந்த நம்பிக்கையும் இருக்கமுடியாது.

“மேலும் மறுபடியும் அவன் சாந்தமாயும், இருதயத்தின் தாழ்மையோடும் இராவிட்டால், அவன் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பெறமுடியாது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

“அப்படியிருந்தால், அவன் விசுவாசமும், நம்பிக்கையும் வீணே. சாந்தமுள்ளவர்களையும் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களையும் தவிர வேறு ஒருவரும் தேவனுக்குமுன் ஏற்கப்படுவதில்லை, சாந்தமாயும் இருதயத்தில் தாழ்மையாயுமிருந்து இயேசுவே கிறிஸ்து என்று பரிசுத்த ஆவியானவராலே அறிக்கைபண்ணுகிறவன் நிச்சயமாய் தயாளத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும், ஏனெனில் அவன் தயாளத்துவத்தைப் பெற்றிருக்காவிட்டால், அவன் ஒன்றுமில்லை, அவன் நிச்சயமாய்த் தயாளத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும்.” 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”31 என இரட்சகர் அறிவித்தார். சாந்தகுணம் தெய்வீகத்தன்மையில் ஒரு அத்தியாவசியமான பகுதி, இரட்சகரின் பாவநிவர்த்தியினாலும் அதன் மூலமாகவும் நமது வாழ்க்கையில் அதைப்பெற்று விருத்திசெய்யமுடியும்.

இயேசு கிறிஸ்து நமது உயிர்த்தெழுந்த ஜீவிக்கிற மீட்பர் என நான் சாட்சியளிக்கிறேன். அவருடைய ஆவியில், சாந்தகுணத்தில் நாம் நடக்கும்போது அவர் நம்மை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்துவார் என நான் வாக்களிக்கிறேன். இந்த சத்தியங்களை என்னுடைய நிச்சயமான சாட்சியால் அறிவித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் வாக்களிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்