2010–2019
சபை அலுவலர்களை ஆதரித்தல்
ஏப்ரல் 2018


சபை அலுவலர்களை ஆதரித்தல்

ஏப்ரல் பொது மாநாட்டின் இக்கூட்டத்தின்போது பாரம்பரியமாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த புள்ளிவிவர அறிக்கை இப்போது LDS.org ல் இக்கூட்டத்தைத் தொடர்ந்து உடனே பிரசுரிக்கப்படும், சபை பத்திரிக்கைகளின் மாநாட்டு பதிப்பில் சேர்க்கப்படும் என அறிவிக்கிறோம்.

நான் இப்போது சபைத் தலைமை, பொது அலுவலர்கள், மற்றும் சபையின் பகுதி எழுபதின்மர்களில் சில மாற்றங்களை உங்களின் ஆதரவுக்காக முன்வைப்பேன். அதன் பின் சகோதரர் கெவின் ஆர். ஜெர்கன்சன், சபைத் தணிக்கைத் துறையின் மேலாண்மை இயக்குநர் தணிக்கை அறிக்கையை வாசிப்பார்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் புதிய அங்கத்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதால், எழுபதின்மர் தலைமை அங்கத்தினர்களாக சேவையாற்றுவதிலிருந்து, மூப்பர் கெரிட் டபிள்யூ. வாங் மற்றும் யூலிஸஸ் சோர்சை விடுவிக்க முன்மொழியப்படுகிறது.

கூடுதலாக எழுபதின்மர் தலைமையில் அங்கத்தினர்களாக அவர்களது சேவையிலிருந்து ஆகஸ்டு 1, 2018லிருந்து மூப்பர்கள் க்ரெய்க் சி. க்றிஸ்டென்சன், லின் ஜி. ராபின்ஸ் மற்றும் ஜுவான் ஏ. உசேடாவுக்கு நாங்கள் விடுவிப்பு கொடுக்கிறோம்.

அவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக இந்த சகோதரர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவோர் அனைவரும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பகுதி எழுபதின்மர்களாக அவர்களது சேவைகளிலிருந்து பின்வருபவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என முன் மொழியப்படுகிறது:ஸ்டீவென் ஆர். பாங்கர்ட்டர், மாத்யூ எல். கார்பென்டர், மத்தியாஸ் ஹெல்ட், டேவிட் பி. ஹோமர், கைல் எஸ். மெக்கே, ஆர். ஸ்காட் ரூனியா மற்றும் ஜுவான் பாப்லோ வில்லர்.

அவர்களது மனமுவந்த சேவைக்காக இச்சகோதரர்களுக்கு பாராட்டு தெரிவிக்க எங்களோடு சேர விரும்புபவர்கள் உயர்த்தப்பட்ட கரங்களால் அப்படிச் செய்யலாம்.

இளம் பெண்கள் பொது தலைமையாக, சகோதரிகள் போ னி எல். ஆஸ்கர்சன், கரோல் எப். மக்கான்கி, மற்றும் நீ ல் எப். மாரியட் ஆகியோரை இதய பூர்வ நன்றியுணர்வுடன் விடுவிக்க முன் மொழியப்படுகிறது. நன்கு பணியாற்றியிருக்கிற இளம் பெண்கள் பொது வாரிய அங்கத்தினர்களையும் அதுபோன்று விடுவிக்கிறோம்.

அவர்களுடைய விசேஷித்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக இச்சகோதரிகளுக்கு பாராட்டு தெரிவிக்க எங்களோடு சேர விரும்பும் அனைவரும் தயவு செய்து தெரிவியுங்கள்.

ஆரம்ப வகுப்பு பொதுத் தலைமையில் முதலாம் ஆலோசகராக சேவையாற்றுவதிலிருந்து நாங்கள் சகோதரி போனி எச். கார்டனை விடுவிக்க முன்மொழியப்படுகிறது.

சகோதரி கார்டனுக்கு பாராட்டைத் தெரிவிக்க விரும்புவோர், உயர்த்திய கரங்களால் அவ்வாறு செய்யலாம்.

உடனடியாக எழுபதின்மர் தலைமை அங்கத்தினர்களாக சேவை செய்ய பின்வருபவர்களை நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது: மூப்பர்கள் கார்ல் பி. குக், மற்றும் ராபர்ட் சி. கே.

ஆகஸ்டு 1, 2018லிலிருந்து எழுபதின்மர் தலைமை அங்கத்தினர்களாக பின்வருவோரும் சேவை செய்வார்கள்: மூப்பர்கள் டெரன்ஸ் எம். வின்சன், ஜோஸ் ஏ. செக்ஸீரியா மற்றும் கார்லோஸ் ஏ. கோடோய்.

ஆதரிப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

பின்வருபவர்களை புதிய பொது அதிகாரி எழுபதின்மர்களாக நாம் ஆதரிக்க முன் மொழியப்படுகிறது: ஸ்டீவென் ஆர். பாங்கர்ட்டர், மாத்யூ எல். கார்ப்பன்டர், ஜாக் என். ஜெரார்ட், மத்தியாஸ் ஹெல்ட், டேவிட் பி. ஹோமர், கைல் எஸ். மெக்கே, ஜுவான் பாப்லோ வில்லர் மற்றும் டகாஷி வாடா.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

மறுப்பவர்கள் அதே சமிக்ஞையில் தெரிவிக்கவும்.

பின்வருபவர்களை புதிய பகுதி எழுபதின்மர்களாக நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது: ரிச்சர்ட் கே. அஹாடிஜே, அல்பர்ட்டோ ஏ. ஆல்வரஸ், டுவான் டி. பெல், க்ளென் பர்ஜஸ், விக்டர்  ஆர். கால்டன், கால்சியன் இ. சாப்பரோ, சானியல் கோர்டோவா, ஜான் என். க்ரெய்க், மைக்கல் சீஸ்லா, வில்லியம் எச். டேவிஸ், ரிச்சர்ட் ஜே. டீவ்ரிஸ், கைலார் ஜி. டோமிங்கஸ், சீன் டக்ளஸ், மைக்கல் ஏ. டன், கென்னத் ஏ. பிர்மேஜ், எட்கர் ப்ளோரஸ், சில்வியோ ப்ளோரஸ், சாலோ ஜி. ப்ரான்கோ, சி.  அல்பர்ட்டோ ஜெனரோ, மார்க் ஏ. கில்மார், செர்ஜியோ ஏ. கோமஸ், ராபர்ட்டோ கோன்சாலஸ், விர்ஜினியோ கோன்சாலஸ், ஸ்பென்சர் ஆர். கிர்பின், மாத்யூ எஸ். கார்டிங், டேவிட் ஜே. ஹாரிஸ், கெவின் ஜே. ஹதவே, ரிச்சர்ட் ஹோல்சபல், யூஸ்டச் லுங்கா, ஒகேச்கூ ஐ. இமோ, பீ எம். ஜான்சன், மைக்கல் டி. ஜோன்ஸ், பங்வே எஸ். கொங்லோ, ஜி. கென்னத் லீ, அர்ட்டெமியோ சி. மலிகோன், எட்கர் ஏ. மன்டிலா, லிங்கன் பி. மாரட்டின்ஸ், க்ளெமெண்ட் எம். மட்ஸ்வகொதட்டா, கார்ல் ஆர். மார், டானியல் எஸ். மெஹ்ர் II, க்ளென் டி. மெல்லா, ஐசக் கே. மோரிசன், யுடாகா நாகடோமா, அலிஸ்டர் பி. ஆக்ஜர்ஸ், ஆர்.  ஜெப்ரி பார்க்கர், விக்டர் பி. பாட்ரிக், டெனிஸ் இ. பினெடா, ஹென்ரிக் எஸ். சிம்ப்ளிசியோ, ஜெப்ரி எச். சிங்கர், மைக்கல் எல். ஸ்டஹேலி, ஜாரட் ஜுபியான்டரோ, ஜெபிரி கே. வெட்சல், மைக்கல் எஸ். வில்ஸ்டட், ஹெல்முட் ஒன்ட்ரா, மற்றும் டேவிட் எல். ரைட்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்பவர்கள், யாராவதிருந்தால் தெரியப்படுத்தவும்.

இளம் பெண்கள் பொதுத் தலைவராக சகோதரி போனி எச். கார்டனுடன், முதலாம் ஆலோசகராக மிச்சல் லின் க்ரெய்க் மற்றும் இரண்டாம் ஆலோசராக ரெபேக்கா லின் க்ரேவென்,சேவை செய்ய நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தெரியப்படுத்தவும்.

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் தெரியப்படுத்தவும்.

ஆரம்ப வகுப்பு பொதுத் தலைமையில் முதலாம் ஆலோசகராக சேவையாற்ற லிசா ரீன் ஹார்க்னஸை நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தெரியப்படுத்தவும்.

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் தெரியப்படுத்தவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளாகவும், பகுதி எழுபதின்மர்களாகவும், பொது துணைக்குழு தலைமைகளாகவும் இருப்பவர்களை நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தெரியப்படுத்தவும்.

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

தலைவர் நெல்சன், வாக்கெடுப்பு கவனத்தில் கொள்ளப்பட்டது. எந்த முன்மொழிதல்களையும் எதிர்த்திருப்போர் தங்கள் பிணைய தலைவர்களை தொடர்புகொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

இப்போது நடைபெற்ற ஆதரித்தலுடன், இப்போது நமக்கு 116 பொது அதிகாரிகள் உள்ளனர். கிட்டத்தட்ட அவர்களில் 40 சதவீதத்தினர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வெளியே, ஜெர்மனி, ப்ரேசில், மெக்சிகோ, நியூஸிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, தென் கொரியா, கௌட்டமேளா, அர்ஜென்டினா, இத்தாலி, ஜிம்பாப்வே, உருகுவே, பெரு, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்க சமோவா, இங்கிலாந்து, போர்ட்டோ ரிக்கோ, ஆஸ்திரேலியா, வெனிசுவேலா, கென்யா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், பிஜி, சீனா, ஜப்பான், சிலி, கொலம்பியா, மற்றும் ப்ரான்ஸ் நாடுகளில் பிறந்திருக்கின்றனர்.

சகோதர சகோதரிகளே, சபையின் தலைவர்கள் சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசத்துக்காகவும், ஜெபங்களுக்காகவும், நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

புதிய பொது அதிகாரி எழுபதின்மர்கள், புதிய இளம் பெண்கள் பொதுத்தலைமை மற்றும் ஆரம்ப வகுப்பு பொதுத் தலைமையின் சகோதரி ஹார்க்னஸ் மேடையில் தங்கள் இருக்கையில் அமருமாறு இப்போது அழைக்கிறோம்.

அச்சிடவும்