2010–2019
இதோ, இந்த மனுஷன்
ஏப்ரல் 2018


இதோ, இந்த மனுஷன்

இந்த மனுஷனை பார்க்க உண்மையாகவே வழிகண்டு பிடிப்பவர்கள், வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷங்களுக்கு வழியும் வாழ்க்கையின் கடினமான விரக்திகளுக்கு தைலமும் கண்டு பிடிக்கின்றனர்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, அன்பு நண்பர்களே, இந்த அற்புதமான வார இறுதி மாநாட்டில் உங்களுடன் இருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மூப்பர்கள் காங் மற்றும் சோர்ஸ் மற்றும் இந்த பொது மாநாட்டின்போது, முக்கிய புதிய அழைப்புகளைப் பெற்றிருக்கிற அநேக சகோதர சகோதரிகளை ஆதரிப்பதில் ஹாரியட்டும் நானும் மகிழ்கிறோம்.

நான் என் அன்பு நண்பர் தலைவர் தாமஸ் எஸ். மான்சனை இழந்திருந்தாலும், நமது தீர்க்கதரிசியும் தலைவருமான ரசல் எம். நெல்சனையும் அவரது மேன்மைமிகு ஆலோசகர்களையும் நேசிக்கிறேன், தாங்குகிறேன், ஆதரிக்கிறேன் .

என் அன்புக்குரிய சக சகோதர பன்னிருவர் குழுமத்துடன் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக பணியாற்றுவதற்காக நான் நன்றியும் கனம்பண்ணப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

அனைத்துக்கும் மேலாக, எந்த தகுதியிலும் அழைப்பிலும், மில்லியன் கணக்கான ஆண்களும் பெண்களும், பிள்ளைகளும் அவர்கள் நிற்கிற இடத்திலிருந்து தங்களை உயர்த்திக்கொள்ளவும், தேவ இராஜ்யத்தைக் கட்டுவதில், தேவனுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சேவை செய்ய தங்கள் முழு இருதயத்துடன் பிரயாசப்பட சித்தமாயிருக்கிற பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அங்கத்தினராக இருப்பதற்காக நான் தாழ்மையுடன் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இன்று ஒரு பரிசுத்த நாள். நமது இரட்சகர் மரணத்தின் கட்டுகளை அறுத்து, 1 கல்லறையிலிருந்து வெற்றி பெற்றவராக வந்த, மகிமையான காலையை நாம் நினைவுகொள்ளுகிற ஈஸ்டர் ஞாயிறு.

வரலாற்றில் மிகப்பெரிய நாள்

அண்மையில் நான் இணைய தளத்தைக் கேட்டேன், “வரலாற்றின் போக்கை எந்த நாள் மாற்றியது?”

 பதில்கள் ஆச்சரியம் மற்றும் வினோதமான உள்ளுணர்வுடைய, சிந்தனையைத் தூண்டக்கூடியனவாய் இருந்தன. அவற்றில் ஒரு யுகாட்டன் தீபகற்பத்தில் வரலாற்றுக்கு முன் விண்கல் விழுந்த நாள், அல்லது 1440ல் ஜோஹன்ஸ் கூட்டன்பர்க் அச்சு எந்திரத்தைக் கண்டுபிடித்து முடித்தது, உண்மையாகவே 1903ல் ரைட் சகோதரர்கள் மனிதன் பறக்க முடியும் என உலகுக்குக் காட்டிய நாள், இருந்தன.

அதே கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

என் மனதில் பதில் தெளிவாக இருக்கிறது.

வரலாற்றின் மிக முக்கிய நாளைக் கண்டு பிடிக்க, கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு, கெத்சமனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்து முழங்காலிட்டு உருக்கமான ஜெபத்தில் நமது பாவங்களுக்காக தன்னையே கொடுத்த அந்த மாலை நேரத்துக்கு நாம் போக வேண்டும். அது சரீரத்திலும் ஆவியிலும், ஒப்பற்ற பாடுகளை தேவனாகிய இயேசு கிறிஸ்து பட்ட மாபெரும் எல்லையில்லா தியாகத்தில் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் சிந்தினார். அவரது பரிபூரண அன்பினிமித்தம், நாம் அனைத்தையும் பெறும்படிக்கு அனைத்தையும் கொடுத்தார். நினைக்க கடினமான, நமது இருதயத்தாலும், மனதாலும் மட்டும் உணரக்கூடிய அவரது உயர்ந்த பலி, அவரது தெய்வீக வரத்துக்காக, கிறிஸ்துவுக்கு நாம் கடன்பட்டிருக்கிற உலக முழுதுக்குமான நன்றிக்கடனை நினைவூட்டுகிறது.

அந்த இரவில் பின்னால், இயேசு மத மற்றும் அரசியல் அதிகாரிகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டார், அவர்கள் அவரை கேலி செய்தனர், அடித்தனர், ஒரு வெட்கப்படுத்தும் மரணத்தை அவருக்கு விதித்தனர். “முடியும்வரை” அவர் சிலுவையில் வேதனையுடன் தொங்கினார். 2 அவரது உயிரற்ற சரீரம் கடன் வாங்கப்பட்ட கல்லறையில் கிடத்தப்பட்டது. பின்பு மூன்றாம் நாளின் காலையில் இயேசு கிறிஸ்து, சர்வ வல்ல தேவனின் குமாரன், மகிமையான, பிரகாசமான, ஒளியுடனும் மகத்துவத்துடனும் உயிர்த்தெழுந்தவராக கல்லறையிலிருந்து வெளியே வந்தார்.

ஆம், தேசங்கள் மற்றும் மக்களின் இலக்கை ஆழமாக பாதித்த அநேக நிகழ்ச்சிகள் வரலாறு முழுவதும் உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் இணைத்தாலும், அந்த முதல் ஈஸ்டர் காலையில், நடந்ததன் முக்கியத்துவத்துக்கு ஒப்பிட அவை தொடங்கக்கூட முடியாது.

உலகப்போர்கள், பிரளயம் போன்ற பேரழிவுகள், வாழ்க்கையை மாற்றக்கூடிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விட, அதிக தாக்கமுடையதாக அந்த எல்லையில்லா பலியையும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக எது ஆக்குகிறது?

இயேசு கிறிஸ்துவினிமித்தம் நாம் மீண்டும் வாழலாம்

நாமனைவரும் எதிர்கொள்கிற இரண்டு பெரும் வெல்லமுடியாத சவால்களில் பதிலிருக்கிறது.

முதலில் நாமனைவரும் மரிக்கிறோம். நீங்கள் எவ்வளவு இளமையாக, அழகாக, ஆரோக்கியமாக, அல்லது கவனமாக இருந்தாலும் ஒருநாள் உங்கள் சரீரம் உயிரற்றதாகும். நண்பர்களும் குடும்பத்தினரும் துக்கிப்பர். ஆனால் அவர்கள் உங்களைத் திரும்ப கொண்டு வர முடியாது.

ஆயினும் இயேசு கிறிஸ்துவினிமித்தம், உங்கள் மரணம் தற்காலிகமானது. ஒருநாள் உங்கள் ஆவி உங்கள் சரீரத்துடன் இணையும். உயிர்த்தெழுந்த சரீரம் மரணத்துக்குள்ளாகாது, 3 வேதனையிலிருந்தும் சரீர பாடுகளிலிருந்தும் விடுபட்டு, நீங்கள் நித்தியத்துக்கும் வாழ்வீர்கள். 4

தன் ஜீவனை விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவினிமித்தம் இது நிகழும்.

அவரை நம்பும் அனைவருக்காகவும் அவர் இதைச் செய்தார்.

அவரை நம்பாதவர்கள் அனைவருக்காகவும் அவர் இதைச் செய்தார்.

அவரைக் கிண்டல் செய்த, திட்டிய, அவரது நாமத்தை சபித்தவர்களுக்காகவும் அவர் இதைச் செய்தார்.5

இயேசு கிறிஸ்துவினிமித்தம், நாம் தேவனுடன் வாழமுடியும்.

இரண்டாவதாக நாமனைவரும் பாவம் செய்திருக்கிறோம். “அசுத்தமான ஒன்றும் அவருடைய இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாததாகையால்,” நமது பாவங்கள் நாம் தேவனுடன் வாழ்வதைத் தடுக்கும் .6

அதனால், ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும், பிள்ளையும் அவரது சமூகத்திலிருந்து தடுக்கப்படும், அதாவது இயேசு கிறிஸ்து, மாசற்ற ஆட்டுக்குட்டி, நமது பாவங்களுக்காக அவரது ஜீவனை பிணையாகக் கொடுத்தவரை. நீதிக்கு இயேசு எந்தக் கடனும் படாததால், அவர் நமது கடனை செலுத்தி, ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் நீதியின் நிபந்தனையை செய்ய முடிந்தது. அதில் நீங்களும் நானும் உண்டு.

இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக விலை கொடுத்தார்.

எல்லாவற்றுக்கும்.

வறலாற்றின் மிக முக்கிய நாளில், இயேசுவாகிய கிறிஸ்து, மரணத்தின் வாசல்களைத் திறந்தது, நித்திய ஜீவனின் பரிசுத்தமான தூய அறைகளில் நாம் நுழைவதை தடுக்கிற தடுப்புக்களை தள்ளி வைக்கிறது. நமது கர்த்தரும் இரட்சகருமானவரினிமித்தம், நீங்களும் நானும் மிக அருமையான விலையில்லா பரிசு கொடுக்கப்பட்டோம், நமது கடந்த காலம் பொருட்டின்றி, நாம் மனந்திரும்பி, பரலோக பிதாவின் விசுவாசமிக்க பிள்ளைகளால் சூழப்பட்டுள்ள, சிலஸ்டியல் ஒளிக்கும் மகிமைக்கும் நடத்துகிற பாதையைப் பின்பற்றுகிறோம்.

நாம் ஏன் களிகூர்கிறோம்

நாம் ஈஸ்டர் ஞாயிறில் இதையே கொண்டாடுகிறோம், நாம் வாழ்க்கையை கொண்டாடுகிறோம்!

இயேசு கிறிஸ்துவினிமித்தம், நாம் நம்பிக்கையற்ற மரணத்திலிருந்து எழுந்து, அதிகமான சந்தோஷத்தாலும், பெருக்கெடுக்கும் நன்றியுணர்வோடும் கண்ணீர் வடித்து, நாம் நேசிப்பவர்களை தழுவிக்கொள்வோம் . இயேசு கிறிஸ்துவினிமித்தம், நாம் நித்தியமானவர்களாக முடிவற்ற உலகில் இருப்போம்.

இயேசுவாகிய கிறிஸ்துவினிமித்தம், நமது பாவங்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, அவை மறக்கப்படலாம்.

நாம் சுத்திகரிக்கப்பட்டு மேன்மையடையலாம்.

பரிசுத்தம்.

நமது அன்பு இரட்சகரினிமித்தம், நித்திய ஜீவனுக்குள் ஊற்றெடுக்கிற நீரூற்றிலிருந்து எப்போதும் குடிக்க முடியும். 7 கற்பனை செய்ய முடியாத மகிமையிலும் பரிபூரண மகிழ்ச்சியிலும், நமது நித்திய இராஜாவின் மாளிகைகளில் என்றென்றும் தரித்திருக்கலாம்.

நாம் “இந்த மனுஷனை பார்க்கிறோமா”?

எல்லாவற்றுக்கும் பிறகும் கூட, அறியாத அல்லது இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்துள்ள அருமையான வரத்தை நம்பாதவர்கள் இன்று இந்த உலகத்தில் அநேகர் உண்டு. அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு வரலாற்று நபராக கேட்டிருக்கலாம், அறிந்திருக்கலாம்.

நான் இதைப்பற்றி நினைக்கும்போது, இரட்சகர் யூதேயாவின் ரோம அதிகாரி, பொந்தியு பிலாத்து முன், இரட்சகரின் மரணத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு நின்றதை நினைவூட்டப்பட்டேன்.

பிலாத்து இயேசுவை கண்டிப்பாக உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தான். பிலாத்துக்கு ஒரு வேலை இருந்தது, அதில் இரு கடமைகள் இருந்தன, ரோமுக்கு வரி வசூல் செய்வது மற்றும் சமாதானத்தைக் காப்பது. இப்போது யூத ஆலோசனைச் சங்கம், அந்த இரண்டுக்கும் தடையாக அவர்கள் கருதுகிற ஒரு மனுஷனை அவன் முன் கொண்டு வந்திருக்கிறது. 8

தன் கைதியை விசாரித்த பிறகு பிலாத்து அறிவித்தான், “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.” 9 ஆனால் அவன் இயேசுவைக் குற்றம் சுமத்தியவர்களை திருப்திப்படுத்த வேண்டுமென உணர்ந்தான், ஆகவே பஸ்கா காலத்தில் ஒரு கைதியை விடுவிக்க அனுமதிக்கும் ஒரு உள்ளூர் வழக்கத்தை பிலாத்து சொன்னான். ஒரு பிரசித்தி பெற்ற திருடனும் கொலைகாரனும் ஆன பரபாஸுக்கு பதிலாக இயேசுவை விடுவிக்க விடுவார்களா? 10

ஆனால் அந்த வெறிபிடித்த கூட்டம், பிலாத்து, பரபாஸை விடுவித்து இயேசுவை சிலுவையிலறைய கூறியது.

பிலாத்து கேட்டான், “ஏன், அவன் என்ன தீங்கு செய்தான்?”

ஆனால் அவர்கள் சத்தமாக கத்தினார்கள். “அவரை சிலுவையிலறையுங்கள்.” 11

கூட்டத்தை திருப்தி படுத்தும் கடைசி முயற்சியாக பிலாத்து தன் ஆட்கள் இயேசுவை அடிக்க உத்தரவிட்டான்.12 அவர்கள் செய்த அது, அவரை இரத்தத்தோடும் காயத்தோடும் விட்டு விட்டது. அவர்கள் அவரை கேலிபண்ணி, அவரது தலைமேல் முள் கிரீடம் சூட்டி, அவருக்கு ஊதா நிற அங்கியை உடுத்தினார்கள். 13

ஒருவேளை பிலாத்து, அக்கூட்டத்தின் இரத்த வேட்கையை அது தீர்க்கும் என நினைத்திருக்கலாம். பிலாத்து கூறினான், “இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இவனை வெளியே கொண்டு வருகிறேன்....இதோ இந்த மனுஷன்!” 14

தேவ குமாரன் மாம்சத்திலே எருசலேமின் ஜனத்தின் முன் நின்றார்.

அவர்கள் இயேசுவைப் பார்க்க முடிந்தது, ஆனால் அவர்கள் உண்மையாகவே அவரைப் பார்க்கவில்லை.

பார்க்க அவர்களுக்கு கண்கள் இல்லை. 15

உருவகமாக, நாமும் “இந்த மனுஷனைப் பார்க்க” அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகில் அவரைப்பற்றிய அபிப்பிராயம் மாறுகிறது. பூர்வ கால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகள் அவரை தேவ குமாரன் என சாட்சியளிக்கிறார்கள். நானும் அதைச் செய்கிறேன். நாம் ஒவ்வொருவரும் அவரைப்பற்றி அறிவது முக்கியமானதும் குறிப்பிடத்தக்கதாயும் இருக்கிறது. ஆகவே, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?

இந்த மனுஷனை உண்மையாகவே பார்க்க வழி கண்டுபிடித்தவர்கள், வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷத்துக்கும் வாழ்க்கையின் மிக கடுமையான ஏமாற்றங்களுக்கும் தைலமாகிய வாசலைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் துயரத்தாலும் சோகத்தாலும் சூழப்படும்போது, இந்த மனுஷனைப் பாருங்கள்.

நீங்கள் காணாமற்போனதாகவோ அல்லது மறக்கப்பட்டோ உணர்ந்தால், இந்த மனுஷனைப் பாருங்கள்.

நீங்கள் ஏமாந்து, கைவிடப்பட்டு, சந்தேகிக்கப்பட்டு, அல்லது தோற்கடிக்கப்படும்போது, இந்த மனுஷனைப் பாருங்கள்.

அவர் உங்களை ஆறுதல்படுத்துவார்.

அவர் உங்களைக் குணமாக்கி, உங்கள் பயணத்துக்கு அர்த்தம் கொடுப்பார். அவர் தன் ஆவியை ஊற்றி, உங்கள் இருதயத்தை மிகுந்த சந்தோஷத்தால் நிரப்புவார். 16

“சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்.” 17

நாம் உண்மையாகவே இந்த மனுஷனைப் பார்க்கும்போது, நாம் அவரைப்பற்றி அறிந்து, நமது வாழ்க்கையை அவரோடு இணங்கப்பண்ண தேடுவோம். நாம் மனந்திரும்பி, நமது தன்மைகளை சுத்திகரித்து, தினமும் அவருக்கு சிறிது நெருக்கமாக வளர்கிறோம். அவரை நம்புகிறோம். அவரது கட்டளைகளைக் கைக்கொண்டும், நமது பரிசுத்த உடன்படிக்கைகள்படி வாழ்ந்தும், நமது அன்பை அவருக்குத் தெரிவிக்கிறோம்.

வேறு வாரத்தைகளிலெனில், நாம் அவரது சீஷர்கள் ஆகிறோம்.

அவரது சுத்திகரிக்கும் ஒளி நமது ஆத்துமாக்களை திடமாக்குகிறது. அவரது கிருபை நம்மை உயர்த்துகிறது. நமது பாரங்கள் லகுவாக்கப்பட்டு, நமது சமாதானம் ஆழப்படுத்தப்படுகிறது. நாம் உண்மையாகவே இந்த மனுஷனைப் பார்க்கும்போது, வாழ்க்கைப் பயணத்தின் வளைவுகளிலும், தடைகளிலும் நம்மைத் தாங்கி, உணர்த்துகிற ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்காலத்தின் வாக்குத்தத்தம் நமக்கு உண்டு. திரும்பிப் பார்த்தால் புள்ளிகள் உண்மையாகவே இணைக்கிற ஒரு தெய்வீக மாதிரி இருக்கிறது என நாம் அடையாளம் காண்கிறோம். 18

அவரது பலியை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவரது சீஷர்களாகி கடைசியாக உங்கள் உலக பயணத்தின் இறுதியை அடைகிறீர்கள், அது நீங்கள் வாழ்க்கையில் தாங்கிய துயரங்கள் ஆகிறது.

அவை போய்விடும்.

நீங்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்கள், காட்டிக்கொடுக்கப்பட்டது, தண்டனைகள்?

போயின.

நீங்கள் கடந்து சென்றிருக்கிற, பாடு, மனவேதனை, குற்ற உணர்வு, அவமானம் மற்றும் வியாகுலம்?

போயின.

மறந்து போயின.

“எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக எதனைக் கண்நோக்க வேண்டும் என்று அறியும் பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றி பேசுகிறோம், கிறிஸ்துவில் களிகூர்கிறோம், கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறோம் என்பதில் எதாவது ஆச்சரியம் இருக்கிறதா?” 19

இந்த மனுஷனை உண்மையாகவே பார்க்க, நமது முழு இருதயத்தோடும் முயல்வதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா?

என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவ பிள்ளைகள் எல்லோருக்காகவும் ஜீவிக்கிற தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரணம் மற்றும் பாவத்தின் மீது வெற்றி பெற்ற நாள் மனுக்குல சரித்திரத்தில் மிக முக்கிய நாள் என நான் சாட்சியளிக்கிறேன். உங்கள் மற்றும் என் வாழ்க்கையில் மிக முக்கிய நாள், நாம் “இந்த மனுஷனை பார்க்க” அறியும் நாளே, உண்மையிலே அவர் யார் என நாம் பார்க்கும்போது, அவரது பாவநிவர்த்தியின் வல்லமையை நமது முழு இருதயத்தோடும் மனதோடும் பங்கேற்கும்போது, புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தோடும் பலத்தோடும், நாம் அவரைப் பின்பற்ற ஒப்புக்கொடுக்கும்போது. நமது வாழ்நாள் முழுவதும் மேலும் மேலும் அது நிகழும் நாளாகுவதாக.

இந்த உலக வாழ்க்கையிலும், வரவிருக்கிற உலகில் நித்திய ஜீவனிலும் நாம் அர்த்தமும், சந்தோஷமும், சமாதானமும், நாம் “இந்த மனுஷனைப் பார்க்கும்போது” காண்போம் என சாட்சியையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. மோசியா 15:23 பார்க்கவும்.

  2. யோவான் 19:30.

  3. ஆல்மா 11:45 பார்க்கவும்.

  4. வெளிப்படுத்தல் 21:4 பார்க்கவும்.

  5. 1 கொரிந்தியர் 15:21–23 பார்க்கவும்.

  6. 3 நெப்பி 27:19.

  7. யோவான் 4:14 பார்க்கவும்.

  8. லூக்கா 23:2 பார்க்கவும்.

  9. யோவான் 18:38. இயேசு நியாயந்தீர்ப்பதைத் தடுக்க, பிலாத்து வழக்கை ஏரோது அந்திப்பாவுக்கு தள்ளிவிட முயன்றான். யோவான் ஸ்நானனின் மரணத்துக்கு கட்டளையிட்ட ஏரோது (மத்தேயு 14:6–11 பார்க்கவும்) இயேசுவை நிந்தித்து இருந்தால், சமாதானத்தைக் காக்க அவன் சம்மதித்த அது ஒரு உள்ளூர் விவகாரம் என பிலாத்து தீர்ப்பில் முத்திரையிட்டிருப்பான். ஆனால் இயேசு ஏரோதிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை (லூக்கா 23:6–12 பார்க்கவும்), ஏரோது அவரை பிலாத்துவிடம் திரும்ப அனுப்பிவிட்டான்.

  10. மாற்கு 15:6–7; யோவான் 18:39–40 பார்க்கவும். ஒரு புதிய ஏற்பாட்டு பண்டிதர் எழுதுகிறார், பஸ்காவின்போது, ரோம அதிபதி, யூத ஜனத்துக்கு, மரணத்துக்கு விதிக்கப்பட்ட ஒரு பிரபல கைதியை விடுவிக்க வேண்டும் என்பது, ஒரு வழக்கமாக இருந்ததுபோல் தெரிகிறது. (Alfred Edersheim, The Life and Times of Jesus the Messiah [1899], 2:576). பரபாஸ் என்ற பெயருக்கு தகப்பனின் மகன் என்று அர்த்தம். எருசலேம் ஜனங்களுக்கு இந்த இரண்டு மனுஷருக்குமிடையே தேர்வு செய்யும் சந்தர்ப்பம் கொடுக்கும் முரண்பாடு ரசிக்கத்தக்கதாகும்.

  11. மாற்கு 15:11–14 பார்க்கவும்.

  12. இடைப்பட்ட மரணம் என அழைக்கப்பட்ட அடித்தல் பயங்கரமானது (Edersheim, Jesus the Messiah, 2:577).

  13. யோவான் 19:1–3 பாரக்கவும்.

  14. யோவான் 19:4—5.

  15. முதலில் இயேசு சொன்னார், இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது. பின்பு மென்மையாக அவர் சீஷர்களிடம் சொன்னார், உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். (மத்தேயு 13:15–16.) நம் இருதயங்கள் கடினப்பட அனுமதிப்போமா, அல்லது நாம் உண்மையாகவே இந்த மனுஷனை பார்க்கும்படியாக நமது கண்களையும் இருதயங்களையும் திறப்போமா?

  16. மோசியா 4:20 பார்க்கவும்.

  17. ஏசாயா 40:29.

  18. See Dieter F. Uchtdorf, “The Adventure of Mortality” (worldwide devotional for young adults, Jan. 14, 2018), broadcasts.lds.org.

  19. 2 நெப்பி 25:26.

அச்சிடவும்