2010–2019
ஒரு தீர்க்கதரிசியின் இருதயம்
ஏப்ரல் 2018


ஒரு தீர்க்கதரிசியின் இருதயம்

கர்த்தரின் தீர்க்கதரிசி தனதிடத்தில் இருக்கிறார், அவர் தெய்வீகமாக வகுத்திருக்கிற வழியில் கர்த்தரின் பணி செய்யப்பட்டிருக்கிறது என்பதில் நாம் களிகூரலாம்.

இந்த பரலோகம் போன்ற தருணத்தில் இன்று நம் ஒவ்வொருவருடனும் பரிசுத்த ஆவியானவர் இருக்கும்படியாக நான் உருக்கமாக ஜெபித்திருக்கிறேன். இவ்வூழிய காலத்தில் 17வது தீர்க்கதரிசி இந்த பயபக்தியான கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டதை நாம் சேர்ந்து பார்த்தது மிகவும் மனதில் நிற்கத்தக்கது.

இன்று நான் பேச வேண்டும் என கர்த்தர் விரும்பும் தலைப்பை அறிய வழிநடத்தல் தேடியபோது, புதிதாக அழைக்கப்பட்ட பிரதான தலைமையுடன் அண்மை உரையாடலுக்கு என் மனம் வழிகாட்டப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் ஆலோசகர்களில் ஒருவர் இவ்விதமாக வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்: “தலைவர் ரசல் எம். நெல்சன் நமது புதிய தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டதோடு நடந்ததின் சிறப்பை சபை அங்கத்தினர்கள் புரிந்து கொள்ள முடியும் என நான் மிகவும் நம்புகிறேன். அந்த பயபக்தியான கூட்டத்தின் முக்கியத்துவமும் பரிசுத்த தன்மையும் பொது மாநாட்டில் நிகழும்.” மேலும் அவர் சொன்னார், “10 வருடங்கள் கடந்து விட்டன, அநேகர், விசேஷமாக சபையின் இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள் அல்லது இதை முன்பு அனுபவித்திருக்க மாட்டார்கள்.”

படம்
தலைவர் டேவிட் ஓ. மெக்கே

இது என்னை, நான் பெற்ற அனுபவங்களை நினைக்கச் செய்தது. முதல் தீர்க்கதரிசி தலைவர் டேவிட் ஓ. மெக்கே என நினைக்கிறேன். அவரது மரணத்தைத் தொடர்ந்த இழப்பின் உணர்வையும் என் அம்மாவின் கண்களின் கண்ணீரையும், என் முழு குடும்பத்திலும் உணரப்பட்ட துக்கத்தை நான் நினைக்கிறேன். நான் அக்கறையுடன் இருப்பதுபோல என் ஜெபத்தில் இயற்கையாகவே “தயவுசெய்து தலைவர் டேவிட் ஓ. மெக்கேவை ஆசீர்வதியும்”, என வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்ததை நினைக்கிறேன். அவர் மறைந்ததைத் தொடர்ந்தும் நான் வார்த்தைகளை பயன்படுத்தியதை காண்கிறேன். அவரைத் தொடர்ந்து வரும் தீர்க்கதரிசிகள் மீதும் அதே உணர்வையும் ஈடுபாட்டையும் என் இருதயமும் மனமும் கொண்டிருக்கும் என நான் உறுதியாக எண்ணவில்லை. ஆனால் கிட்டத்தட்ட தங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் நேசிக்கிற பெற்றோர் போல, தலைவர் மெக்கேயைத் தொடர்ந்த, தலைவர் ஜோசப் பீல்டிங் ஸ்மித்தையும் நேசித்து, தொடர்புபடுத்தி, அதற்குப்பின் வந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் பற்றி சாட்சி சொல்லத் தொடங்கினேன். ஹரோல்ட் பி. லீ, ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல், எஸ்றா டாப்ட் பென்சன், ஹோவார்ட் டபிள்யு. ஹண்டர், கார்டன் பி. ஹிங்க்லி, தாமஸ் எஸ். மான்சன், மற்றும் இன்றைய தலைவர் ரசல் எம். நெல்சன். உயர்த்திய கைகளுடனும், உயர்த்திய இருதயங்களுடனும், ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் முழுமனதோடு நான் ஆதரித்தேன்.

நமது அன்புக்குரிய தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் மரித்த பிறகு, ஒரு துக்க மற்றும் இழப்பின் எண்ணத்தை உணர்வது இயற்கைதான். ஆனால் பூமியின் மீது ஜீவிக்கிற தீர்க்கதரிசியின் அழைப்பு மற்றும் ஆதரிப்பு ஆகிய, மறுஸ்தாபிதத்தின் மாபெரும் ஆசீர்வாதங்களில் ஒன்றை நாம் அனுபவிக்கும்போது வரக்கூடிய சந்தோஷத்தாலும் நம்பிக்கையாலும் நமது துக்கம் பதப்படுத்தப்படுகிறது.

இறுதியாக, அதைப்பற்றி கடந்த 90 நாட்களாக கவனித்தபடி, இந்த தெய்வீக முறைபற்றி நான் பேசுவேன். நான்கு பாகங்களாக இதை நான் விளக்குவேன், முதலாவது, நமது தீர்க்கதரிசியின் மரணம், மற்றும் பிரதான தலைமையின் கலைப்பு. இரண்டாவது, புதிய பிரதான தலைமை மாற்றியமைக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் காலம், மூன்றாவது, புதிய தீர்க்கதரிசி மற்றும் பிரதான தலைமையின் அழைப்பு. நான்காவதாக, பயபக்தியான கூட்டத்தில் புதிய தீர்க்கதரிசி ஆதரிக்கப்படுதல்.

ஒரு தீர்க்கதரிசியின் மரணம்

படம்
தலைவர் தாமஸ் எஸ். மான்சனின் இறுதிச்சடங்கு
படம்
தலைவர் தாமஸ் எஸ் மான்சன்

திரையின் மறுபக்கத்துக்கு நமது அன்பு தீர்க்கதரிசி தாமஸ் எஸ். மான்சன் கடந்து சென்ற ஜனவரி 2, 2018ல் தொடங்குவோம். அவர் என்றென்றும் நமது இருதயத்தில் இடம் பெற்றிருக்கிறார். தலைவர் மான்சனின் மரணத்தின்போது, தலைவர் ஹென்றி பி. ஐரிங் தெரிவித்த உணர்வுகள் சுருக்கமாய் நமது உணர்வுகளை விவரிக்கின்றன. “அவரது வாழ்க்கையின் தனித்துவம், இரட்சகரைப்போல வறியோர், பிணியாளிகள், உலகம் முழுவதிலுமுள்ள அனைவரிடமும் செல்லும், அவரது தனிப்பட்ட அக்கறையாகும்.” 1

தலைவர் ஸ்பென்சர் டபிள்யு. கிம்பல் விளக்கினார்:

“தொடுவானத்துக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் மறையும்போது, மற்றொன்று காட்சியில் வருகிறது, மரணம் உயிரை உருவாக்குகிறது. கர்த்தரின் பணி முடிவற்றது.

“ஒரு வல்லமையான தலைவர் மரிக்கும்போது கூட, ஒரு கணம் கூட சபை தலைவர் இல்லாமல் இருப்பதில்லை, தன் இராஜ்யத்துக்கு தொடர்ச்சியையும், நீட்சியையும் கொடுத்த தயவுள்ள தெய்வச்செயலுக்கு நன்றி. இது ஏற்கனவே நடந்திருக்கிறபடியால், இவ்வூழியக்காலத்துக்கு முன்பு, ஜனங்கள் பயபக்தியோடு கல்லறையை மூடினார்கள், தங்கள் கண்ணீரை துடைத்தார்கள், எதிர்காலத்தை நோக்கி தங்கள் முகத்தை திருப்பினார்கள்.” 2

அப்போஸ்தல இடைவெளி

ஒரு தீர்க்கதரிசியின் மரணத்துக்கும் பிரதான தலைமையின் மறுஅமைப்புக்கும் இடைப்பட்ட காலம், “அப்போஸ்தல இடைவெளி” என குறிப்பிடப்படுகிறது. இக்காலகட்டத்தில் பன்னிரு அப்போஸ்தலர் குழுமம், குழும தலைவர் தலைமையில், சபையின் தலைமைத்துவத்தை நிர்வகிக்கிற திறவுகோல்களை இணைந்து தரித்திருக்கின்றனர். இதுபற்றி பேசும்போது தலைவர் ஜோசப் எப். ஸ்மித் சொன்னார், “சபையில் எப்போதும் ஒரு தலைவர் இருக்கிறார், மரணத்தால் அல்லது பிற காரணங்களுக்காக சபைத்தலைமை நீக்கப்பட்டால், தலைமை மீண்டும் அமைக்கப்படும்வரை சபையின் அடுத்த தலைவர் பன்னிரு அப்போஸ்தலர்களே.” 3

படம்
பன்னிரு அப்போஸ்தலர் குழுமம்

மிக அண்மை இடைவெளி காலம் ஜனவரி 2, 2018ல் தலைவர் மான்சன் இறந்தபோது தொடங்கி, ஜனவரி 14, 2018 ஞாயிற்றுக்கிழமையில் முடிந்தது. அந்த ஓய்வுநாள் காலையில் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூத்த அப்போஸ்தலரும் தலைவருமாகிய தலவர் ரசல் எம். நெல்சன் தலைமை வழிகாட்டலின்கீழ், உபவாச மற்றும் ஜெப ஆவியுடன் சால்ட் லேக் ஆலயத்தின் மேல் அறையில் கூடினர்.

புதிய தீர்க்கதரிசியின் அழைப்பு

இந்த பரிசுத்த நினைவுகூரத்தக்க கூட்டத்தில், அரைவட்ட வடிவில் 13 நாற்காலிகளில் மூப்பின் அடிப்படையில் இருக்க, ஒற்றுமையாகவும் எதிர்ப்பில்லாமலும் நன்கு ஏற்படுத்தப்பட்ட முன்பழக்கத்தின்படி, முதலில் பிரதான தலைமையை அமைக்கவும், பின் தலைவர் ரசல் மரியன் நெல்சனை பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக ஆதரிக்கவும் சகோதரர்கள் கரங்களை உயர்த்தினார்கள். இந்த ஆதரவைத் தொடர்ந்து, பன்னிருவர் குழுமம் ஒரு வட்டத்தில் கூடி, மிக மூத்த அப்போஸ்தலர் குரலாக செயல்பட, அவரை நியமிக்கவும் பணிக்கவும் தலைவர் நெல்சனின் தலையில் கைகளை வைத்தனர்.

பின்பு தலைவர் நெல்சன் தன் ஆலோசகர்களை அழைத்தார், தலைவர் டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், தலைவர் ஹென்றி பென்னியன் ஐரிங், அவர்களுடன் தலைவர் ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர் குழும தலைவராகவும், தலைவர் மெல்வின் ரசல் பல்லார்டை அப்போஸ்தலர் குழுமத்தின் செயல் தலைவரையும் அழைத்தார். அதுபோன்ற ஆதரிப்புக்குப் பின்னர், இந்த ஒவ்வொரு சகோதரரும் தலைவர் நெல்சனால் தன் அலுவலுக்கு நியமிக்கப்பட்டார். இது ஆவி பொழியப்பட்ட ஆழ்ந்த பரிசுத்த அனுபவம். நாங்கள் உருக்கமாக ஜெபித்த, கர்த்தருடைய சித்தம் இந்தக் காரியங்களிலும், அன்றைய நிகழ்ச்சிகளிலும் வல்லமையாக வெளிப்பட்டது என நான் எனது முழு சாட்சியையும் அளிக்கிறேன்.

படம்
பிரதான தலைமை

தலைவர் நெல்சனின் நியமிப்புடனும், பிரதான தலைமை மறுஅமைப்பு செய்யப்பட்டதுடனும், அப்போஸ்தல இடைவெளி முடிந்தது, புதிதாக அமைக்கப்பட்ட பிரதான தலைமை, பூமியில் கர்த்தரின் இராஜ்யத்தை ஆளுகை செய்வதில் விசேஷித்த விதமாக ஒரு விநாடி தடை கூட இல்லாமல் செயல்படத் தொடங்கியது.

பயபக்தியான கூடுகை

இன்று காலை, அத்தெய்வீக முறை வேத விதிப்படி தொடங்கியது, “ஏனெனில் அனைத்து காரியங்களும் ஒழுங்காக செய்யப்பட வேண்டும், சபையின் பொது ஒப்புதலாலும், விசுவாச ஜெபத்தாலும்” 4 “மூன்று தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்களும் ... சபையின் தன்னம்பிக்கை, விசுவாசம், மற்றும் ஜெபத்தால் தாங்கப்பட்டு சபையின் தலைமை குழுமமாகிறார்கள்.” 5

இன்று நாங்கள் பங்கு கொண்டது போன்ற முந்தைய நிகழ்வை மூப்பர் டேவிட் பி. ஹைட் விவரித்தார்:

“பரலோக காரியங்களின்படி செயல்பட்ட ஒரு பயபக்தியான கூட்டமான நாங்கள் மிகப் பரிசுத்த தருணத்துக்கு சாட்சிகளும் பங்காளிகளாகவும் இருக்கிறோம். கடந்த காலங்களைப்போல, கர்த்தரின் ஆவியின் பொழிவை அவர்கள் பெறும்படிக்கு, உலகெங்கிலுமுள்ள பரிசுத்தவான்களால் உபவாசமும் ஜெபமும் ஏறெடுக்கப்பட்டன, இக்காலை வேளையில் ... அது அதிகமாக தெரிந்தது.

“ஒரு பயபக்தியான கூட்டம், அப்பெயர் குறிப்பிடுவதுபோல, பிரதான தலைமையின் வழிகாட்டலின் கீழ், பரிசுத்தவான்கள் கூடுகிற பரிசுத்தமான, தெளிந்த, பயபக்தியான தருணத்தைக் குறிப்பிடுகிறது.” 6

சகோதர சகோதரிகளே, கர்த்தரின் குரல், தேவனின் தீர்க்கதரிசி, இருக்கிறார், அவர் தெய்வீகமாய் கொடுத்த விதமாக அவரது பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனவும், கர்த்தர் மகிழ்கிறார் எனவும் நாம் களிகூரலாம், ஓசன்னா! எனவும் சத்தமிடலாம்.

தலைவர் ரசல் எம். நெல்சன்

இப்போது விவரிக்கப்பட்ட தெய்வீகமாக நியமிக்கப்பட்ட முறை தெய்வீகமாக அழைக்கப்பட்ட தீர்க்கதரிசிக்கு வழிநடத்துகிறது. இந்த பூமியை அழகுறச்செய்த மகத்தான மனிதர்களில் தலைவர் மான்சன் ஒருவராக இருந்ததுபோல, தலைவர் நெல்சன் இருக்கிறார். இந்த முக்கிய நேரத்தில் நம்மை வழிநடத்த அதிகமதிகமாய் கர்த்தரால் ஆயத்தப்படுத்தப்பட்டு விசேஷமாக கற்பிக்கப்பட்டிருக்கிறார். நமது அன்புக்குரிய அர்ப்பணிப்புள்ள தீர்க்கதரிசியாகிய, இந்தக் கடைசி ஊழியக்காலத்தின் சபையின் 17 வது தலைவராக இப்போது அன்புத்தலைவர் ரசல் எம். நெல்சனைப் பெற்றிருப்பது என்ன ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்.

படம்
தலைவர் ரசல் எம். நெல்சன்

தலைவர் நெல்சன் உண்மையாகவே ஒரு விசேஷித்த மனுஷன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் என் குழுமத் தலைவராக, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் அவரோடு சேவை செய்யும் சிலாக்கியம் பெற்றிருந்தேன். அவருடன் பயணித்திருக்கிறேன், அவரது ஆற்றலைக் கண்டு வியக்கிறேன். அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒருவர் வேகமாக நடக்க வேண்டும்—அல்லது அவருடன் பனிச்சறுக்கு செய்ய வேண்டும். அவர் அனைவரையும் அறிகிறார் எனவும், குறிப்பாக பெயர்களை நினைவு வைக்க வரம்பெற்றிருக்கிறார் எனவும் தோன்றுகிறது. அவரது வாழ்நாளில் மொத்தத்தில் 133 நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.

அவர் இளைஞர், முதியவர் அனைவரிடமும் செல்கிறார். அவரை அறிந்தவர்கள் அனைவரும் தாங்களே அவரது அபிமானத்துக்குரியவர்கள் என உணர்கின்றனர். ஒவ்வொருவர் மீதும் அவர் வைத்திருக்கிற உண்மையான அன்பு மற்றும் அக்கரையினிமித்தம், நம் ஒவ்வொருவருக்கும் அப்படியே தோன்றுகிறது.

தலைவர் நெல்சனுடன் என்னுடைய தொடர்பு மதத்தொடர்புடையதாக இருந்தாலும், அவர் பொது அதிகாரியாக அழைக்கப்படுவதற்கு முன்பு, தலைவர் நெல்சன் வாழ்ந்த தொழில் முறை வாழ்க்கையைப்பற்றியும் நான் அறிவேன். உங்களில் அநேகர் அறிந்திருக்கிறபடி, தலைவர் நெல்சன் ஒரு புகழ்பெற்ற இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், அவரது மருத்துவ தொழிலின் தொடக்கத்தில், இருதய—நுரையீரல் கருவியை உருவாக்கிய முன்னோடி கண்டுபிடிப்பாளர். 1951ல் இருதய நுரையீரல் புறவழியைப் பயன்படுத்தி, ஒரு மனுஷர் மீது முதல் திறந்த இருதய அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆராய்ச்சி குழுவில் தலைவர் நெல்சன் இருந்தார். தலைவர் கிம்பல் தீர்க்கதரிசியாக இருந்தபோது, தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பலுக்கு தலைவர் நெல்சன் இருதய அறுவை சிகிச்சை செய்தார்.

படம்
தலைவர் ரசல் எம். நெல்சன் ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணராக

அவ்வாறே, ரசிக்கும்படியாக, 34 வருடங்களுக்கு முன்பு பன்னிருவருக்கு தலைவர் நெல்சனின் அழைப்பு, இருதயங்களைப் பலப்படுத்துகிற, சரிசெய்கிற, மருத்துவத்தொழில் முடிந்தது. அவரது வார்த்தைகளாலும் ஞானமிக்க செயல்களாலும் சேவையாலும் அன்பாலும் உயர்த்தப்பட்டு குணமாக்கப்பட்ட எண்ணற்ற ஆயிரக்கணக்கனோரின் இருதயங்களைப் பலப்படுத்தி, சரிசெய்கிற அர்ப்பணிப்புடைய வாழ்நாள் மத ஊழியப்பணியை அப்போஸ்தலராக அது தொடங்கி வைத்தது.

படம்
தலைவர் நெல்சன் அங்கத்தினர்களை வாழ்த்துதல்
படம்
தலைவர் நெல்சன் பேரனுடன்

கிறிஸ்து போன்ற இருதயம்

அன்றாட செயல்பாடுகளில் கிறிஸ்து போன்ற இருதயத்தை நான் கற்பனை செய்யும்போது, நான் தலைவர் நெல்சனைப் பார்க்கிறேன். அவர் செய்வதை விட அதிகமாக இக்குணத்தை உதாரணம்காட்டிய யாரையும் நான் இன்னும் சந்திக்கவில்லை. தலைவர் நெல்சனின் கிறிஸ்து போன்ற இருதயத்தின் தெரிவிக்கப்பட்டதை நேரடியாக பார்க்க இந்த நிலையில் நான் இருக்க, இது ஒரு விசேஷித்த சந்தர்ப்பமாக இருந்திருக்கிறது.

அக்டோபர் 2015ல் பன்னிருவராக எனது அழைப்புக்குப் பிறகு, அவர் பன்னிருவராக அழைக்கப்படுவதற்கு முன்பு அவரது தொழில்முறை வாழ்க்கையை நெருக்கமாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் வாய்த்தது. தலைவர் நெல்சன் இருதய அறுவைச்சிகிச்சை முன்னோடி விருது பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப்பட்டேன். நான் அரங்கத்தினுள் நுழைந்தபோது, அநேக ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் நெல்சன் செய்துள்ள பணியை கனம்பண்ணவும், அங்கீகரிக்கவும் தொழில் முறை வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததை பார்த்து நான் வியப்புற்றேன்.

அந்த மாலைக் கூட்டத்தின்போது, தன் மருத்துவத் துறையில், தலைவர் நெல்சன் செய்த விசேஷித்த பணிக்காக எண்ணற்ற வல்லுநர்கள் எழுந்து தங்கள் மரியாதையையும் வியப்பையும் தெரிவித்தனர். தலைவர் நெல்சனின் சாதனைகளை ஒவ்வொரு பேச்சாளரும் விவரித்தது கவர்ந்ததுபோல, எனக்கு அருகில் இருந்த மனிதருடன் என் உரையாடலால் நான் மிக அதிகமாக வியப்புற்றேன். நான் யார் என அவருக்குத் தெரியாது, ஆனால் ஒரு மருத்துவ கல்லூரியில் 1955ல் நெஞ்சக அறுவைச் சிகிச்சை மாணவர் திட்ட இயக்குநராக, டாக்டர். நெல்சனாக, தலைவர் நெல்சனை அவர் அறிந்திருந்தார்.

அந்த மனிதர் தலைவர் நெல்சனின் முன்னாள் மாணவர். அநேக நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். தலைவர் நெல்சன் கற்பிக்கும் விதத்தை அவர் விவரித்தது, மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது, அது அவரை அதிகம் புகழ்பெற வைத்ததாக அவர் சொன்னார். இருதய அறுவை சிகிச்சை மாணவர்களுக்கு கற்பித்தல் அறுவைச்சிகிச்சை அறையிலேயே நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார். அங்கு மாணவர்கள் அறுவைச் சிகிச்சையை ஆசிரியர்கள் மேற்பார்வையில் சோதனைக்கூட வகுப்பறையில் பார்த்து, செய்தார்கள். அறுவைச் சிகிச்சை அறை சூழ்நிலை சில அறுவைச்சிகிச்சை ஆசிரியர்கள் மேற்பார்வையில் குழப்பமாகவும், போட்டியாகவும், அழுத்தமும், ஆணவமும் நிறைந்ததாக இருந்ததாக அவர் சொன்னார். அடிக்கடி அறுவைச்சிகிச்சை மாணவர்கள் அவர்களது வேலை இக்கட்டில் இருப்பதாக நினைத்தார்கள். அது ஒரு கஷ்டமான சூழ்நிலை, சில சமயங்களில் அவமானமானதாகவும் அவர் விவரித்தார்.

பின்பு அவர் தலைவர் நெல்சனின் அறுவைச் சிகிச்சை அறையில் காணப்பட்ட சூழ்நிலை தனித்துவமானது என விளக்கினார். அது சமாதானமாயும், அமைதியாயும், மரியாதை நிறைந்தும் இருந்தது. ஆழ்ந்த மரியாதையுடன் மாணவர்கள் நடத்தப்பட்டனர். எனினும் ஒரு அறுவைச் சிகிச்சையின் செயல்விளக்கத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் டாக்டர். நெல்சன் உயர்தர செயல்முறையை எதிர்பார்த்தார். மேலும் இந்த மனிதர் அதிக நோயாளிகள் குணமடைந்ததையும், சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் . நெல்சனின் அறையிலிருந்து வெளிவந்ததையும் விவரித்தார்.

இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கவில்லை. இது நான் அனுபவித்திருக்கிற, நேரடியாக பார்த்திருக்கிற, பன்னிருவர் குழுமத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற கிறிஸ்து போன்ற இருதயம். ஒரு வகையில் நான் அவரது “பயிற்சி மாணவர்களில்” ஒருவராக இருந்தது போல உணர்கிறேன்.

தலைவர் நெல்சன் பிறருக்கு கற்பிப்பதில் வித்தியாசமான வழி வைத்திருந்தார். திருத்தம் நேர்மறையான, மரியாதையுடைய, உயர்த்துகிற விதமாக கொடுத்தார். அவர் கிறிஸ்து போன்ற இருதயத்தின் பிறவி, நம் அனைவருக்கும் உதாரணம். எந்த சூழ்நிலையில் நாம் நம்மை கண்டாலும், நமது நடத்தையும் இருதயங்களும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என நாம் அவரிடம் இருந்து கற்கிறோம்.

மாணவர், தகப்பன், பேராசிரியர், கணவர், மருத்துவர், ஆசாரியத்துவத் தலைவர், தாத்தா, அப்போஸ்தலர் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களில் சிறப்பித்த, நமது தெய்வீகமாக அழைக்கப்பட்ட தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனை இப்போது நாம் ஆதரிப்பது எவ்வளவு மிகப்பெரிய ஆசீர்வாதம். கிறிஸ்து போன்ற விதத்தில், கிறிஸ்து போன்ற இருதயத்துடன் அவர் அப்போதும் அப்படிச் செய்தார், தொடர்ந்து அப்படிச் செய்கிறார்.

சகோதர சகோதரிகளே, இன்று நாம் பார்த்து, பங்கேற்ற பயபக்தியான கூடுகை, மனுக்குலம் முழுமைக்கும் தலைவர் ரசல் எம். நெல்சன் வாழ்ந்து கொண்டிருக்கிற குரல் என்ற சாட்சிக்கு என்னை வழிநடத்துகிறது. பிதாவாகிய தேவன், அவரது குமாரன் மற்றும் நமது இரட்சகரும் மீட்பருமாகிய அவரது பங்கைப்பற்றிய சாட்சியை நான் சேர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்