2010–2019
சபை தணிக்கைத் துறை அறிக்கை, 2017
ஏப்ரல் 2018


சபை தணிக்கைத் துறை அறிக்கை, 2017

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரதான தலைமைக்கு

அன்புச் சகோதர்ரகளே, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 120-ம் பாகத்தில் வெளிப்படுத்தலால் வழிநடத்தப்பட்டபடி, பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் மற்றும் தலைமை தாங்கும் ஆயம் ஆகிய, தசமபாகங்களை தங்கள் வசம் வைத்திருக்கிற குழுமம், சபை நிதி செலவினங்களை அங்கீகரிக்கிறது. சபை நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், கொள்கைகள் மற்றும் முறைகளின்படி நிதியை வழங்குகின்றன.

அனைத்து சபைத்துறைகளிலிருந்தும் சுதந்திரமான, தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்கள் கொண்ட சபைத் தணிக்கைத் துறை, பெறப்பட்ட நன்கொடைகள், செய்யப்பட்ட செலவுகள் மற்றும் சபைச் சொத்துக்களைப் பாதுகாத்தல் குறித்த பொருத்தமான உறுதியை அளிக்கும் நோக்கத்துக்காக தணிக்கை செய்யும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், கொள்கைகள் மற்றும் கணக்கிடும் வழக்கங்களுக்கு ஏற்ப, நடத்தப்பட்ட தணிக்கைகள் அடிப்படையில், சபைத் தணிக்கைத்துறை, 2017-க்கான, எல்லாவிதத்திலும் பெறப்பட்ட நன்கொடைகள், செய்யப்பட்ட செலவுகள் மற்றும் சபைச் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டுள்ளன என சபைத் தணிக்கைத்துறை கருதுகிறது. தங்கள் வருவாய்க்கு ஏற்ப வாழுதல், கடனைத் தவிர்த்தல், மற்றும் தேவைப்படுகிற நேரத்துக்காக சேமித்தல் என தன் அங்கத்தினர்களுக்குப் போதிக்கப்படுகிற பழக்கங்களை சபை பின்பற்றுகிறது.

மரியாதையுடன் சமர்ப்பிக்கப்படுகிறது,

சபை தணிக்கைத் துறை

கெவின் ஆர். ஜெர்கென்சென்

மேலாண்மை இயக்குநர்

அச்சிடவும்