நான் தேவனின் பிள்ளையா?
நமது தெய்வீக அடையாளத்தை புரிந்து கொள்ளும் வல்லமையை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அனுபவிக்க முடியும்? நமது பிதாவாகிய தேவனை அறிய நாடுவதில் இது தொடங்குகிறது.
அண்மையில் நான் ஒரு பழைய கல் கட்டிட கூடுமிட சபைக்கு, என் இனிய அம்மாவுடன் சென்றேன். பதின்ம ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற அதே ஆரம்ப வகுப்பு அறைக்கு சிறு குரல்களால் ஈர்க்கப்பட்டேன். நான் பின்பக்கம் சென்று அக்கறையுடைய தலைவர்கள் இந்த வருட தலைப்பாகிய “நான் தேவனின் பிள்ளை” 1 கற்பிப்பதைப் பார்த்தேன். பொறுமையும் அன்பும் மிக்க ஆசிரியர்களை நான் நினைத்துப் பார்த்தேன், அப்போது அவர்கள் பாடல் நேரத்தின்போது, அடிக்கடி என்னைப் பார்த்தனர். கடைசி வரிசையில் இருக்கிற வெறிபிடித்த சின்ன பையன், “உண்மையிலேயே அவன் தேவனின் பிள்ளையா, யார் அவனை இங்கு அனுப்பியது” என சொல்வது போல் தோன்றியது. 2
“நாம் தேவனின் பிள்ளைகளே என சாட்சி கொடுக்கிற ஆவியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு” நமது இருதயங்களைத் திறக்க உங்களை அழைக்கிறேன்.3
தலைவர் பாய்ட் கே. பாக்கரின் வார்த்தைகள் தெளிவானதும் அருமையானதும் கூட: “நீங்கள் தேவனின் பிள்ளை. அவர் உங்கள் ஆவியின் பிதா. ஆவிக்குரிய விதமாக நீங்கள் ஒரு மேன்மைமிக்க பிறவி, பரலோக இராஜாவின் குழந்தை. அந்த உண்மையை உங்கள் மனதில் நிறுத்தி வைத்திருங்கள். எனினும் உங்கள் பூலோக சந்ததியில் அநேக தலைமுறைகளாக, நீங்கள் எந்த இனத்தின் அல்லது ஜனத்தின் பிரதிநிதியோ என்பது பொருட்டின்றி, ஒரு சிறு வரியில் உங்கள் வம்சாவழி வரைபடத்தை எழுதி விடலாம். நீங்கள் தேவனின் பிள்ளை.”4
ப்ரிகாம் யங் விவரித்தார், “நீங்கள் நமது பிதாவைப் பார்க்கும்போது, நீண்டநாள் உங்களுடன் பழக்கப்பட்ட ஒருவரைப்போல பார்ப்பீர்கள், அவர் உங்களை தன் கரங்களுக்குள் வாங்கிக் கொள்வார், அவரது தழுவுதலுக்குள் விழவும், அவரை முத்தமிடவும் நீங்கள் ஆயத்தமாயிருப்பீர்கள்.5
தெய்வீக அடையாளத்தைப்பற்றிய பெரும் யுத்தம்
கர்த்தருடன் முகமுகமாகப் பேசி, மோசே தன் தெய்வீக பாரம்பரியத்தைப்பற்றி அறிந்தான். அந்த அனுபவத்தைப் பின்பற்றி, தந்திரமான ஆனால் குழப்பும் தீய எண்ணத்துடன், மோசேயின் அடையாளத்தை, சோதித்து சாத்தான் வந்தான், “மனுஷ குமாரனே, மோசேயே, என்னைத் தொழுது கொள். மோசே சாத்தானைப் பார்த்து சொன்னான், நீ யார்? ஏனெனில் இதோ, நான் தேவ குமாரன்.” 6
தேவனுடன் நமது உறவைப்பற்றிய அறிவையும், நமது நம்பிக்கையையும் அழிக்க சாத்தானின் ஏராளமான படைகள் எண்ணங்கொண்டுள்ளதால், தெய்வீக அடையாளத்தைப்பற்றிய இந்த யுத்தம் மூர்க்கமாய் கர்ச்சிக்கிறது. நன்றி தெரிவிக்கும்படியாக, தொடக்கத்திலிருந்தே, நமது உண்மையான அடையாளத்தைப்பற்றிய தெளிவான பார்வையுடனும் புரிதலுடனும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். “தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியும், மனுஷனை உண்டாக்குவோமாக என்றார்.”7 நான் அவர்களை அறிவேன்.” வாழும் தீர்க்கதரிசிகள் அறிவிக்கின்றனர், “[மனுஷர்] ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவி குமாரன் மற்றும் குமாரத்தி, அந்தப்படியே ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு.”8
இந்த சத்தியங்களை “நிச்சயமாக” அறிதல்,9 சோதனைகளையும், பாடுகளையும், எல்லாவித வியாகுலங்களையும், மேற்கொள்ள நமக்கு உதவுகிறது.10 “[தனிப்பட்ட சவால்களுடன்] போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு நாம் எப்படி உதவ முடியும்?” எனக் கேட்டபோது, கர்த்தரின் ஒரு அப்போஸ்தலர் அறிவுறுத்தினார், “அவர்களுடைய அடையாளத்தையும் நோக்கத்தையும் அவர்களுக்கு போதியுங்கள்.”11
“நான் பெற்றிருக்கிற மிக வல்லமையான அறிவு”
சிறுவயதில் கொடிய கார் விபத்தை விளைவித்த என் சிநேகிதி ஜென்னுக்கு 12 இந்த வல்லமையான சத்தியங்கள் வாழ்க்கையை மாற்றுவதாக இருந்தது. அவளது சரீர வேதனை கடுமையாக இருந்தாலும், மற்ற ஓட்டுநர் உயிரிழந்ததால் அவள் அதிக வேதனையை உணர்ந்தாள். யாரோ ஒருவர் தன் தாயை இழந்திருக்கிறார், அது என் தவறு, அவள் சொல்கிறாள். சில நாட்களுக்கு முன் எழுந்து, “நாம் நம்மை நேசிக்கிற பரலோக பிதாவின் குமாரத்திகள், 13 என ஒப்புவித்த ஜென் இப்போது கேட்கிறாள், “அவர் என்னை எப்படி நேசிக்க முடியும்?”
அவள் சொல்கிறாள், “சரீர பாடு முடிந்து விட்டது, ஆனால் உணர்வு பூர்வ மற்றும் ஆவிக்குரிய காயங்களிலிருந்து நான் குணமாவேன் என நினைக்கவில்லை.”
உயிருடனிருக்கும்படியாக, விலகி, உணர்வின்றி இருந்து, ஜென் தன் உணர்வுகளை ஆழமாகப் புதைத்தாள். ஒரு வருடத்துக்குப் பின் கடைசியாக விபத்தைப்பற்றி அவள் கடைசியாக பேசியபோது, ஒரு உணர்த்தப்பட்ட ஆலோசகர் அவளை “நான் தேவனின் பிள்ளை” என்ற சொற்றொடரை எழுதி 10 முறை தினமும் வாசிக்கச் சொன்னார்.
“வார்த்தைகளை எழுதுவது எளிது, ஆனால் என்னால் அவற்றைப் பேச முடியவில்லை. ... அது உண்மையாகி விட்டது, தேவன் உண்மையாகவே என்னை தன்னுடைய பிள்ளையாக விரும்புகிறாரா என நான் நம்பவில்லை. நான் சுருண்டு படுத்து அழுவேன்,” அவள் நினைவு கூர்கிறாள்.
பல மாதங்களுக்குப் பின் கடைசியாக ஜென் தினமும் அந்த வேலையை முடிக்க முடிந்தது. அவள் சொல்கிறாள், “தேவனிடம் கெஞ்சி நான் என் ஆத்துமா முழுவதையும் ஊற்றிவிட்டேன். ... பின்பு நான் இந்த வார்த்தைகளை நம்பத் தொடங்கினேன்.” இந்த நம்பிக்கை அவளது காயம்பட்ட ஆத்துமாவை சரிசெய்ய இரட்சகரை அனுமதித்தது. மார்மன் புஸ்தகம் அவரது பாவ நிவர்த்தியில் ஆறுதலும் தைரியமும் கொண்டு வந்தது. 14
“கிறிஸ்து என் வேதனைகளையும், துக்கங்களையும், குற்றத்தையும் உணர்ந்தார்,” ஜென் முடிக்கிறாள். நான் தேவனின் பரிசுத்த அன்பை உணர்ந்தேன், அவ்வளவு வல்லமையாக எதையும் எப்போதும் அனுபவித்ததில்லை! நான் தேவனின் பிள்ளை என அறிவது நான் பெற்றிருக்கிற மிக வல்லமையான அறிவு!”
நமது பிதாவாகிய தேவனை அறிய நாடுதல்
சகோதர சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் எப்படி நமது தெய்வீக அடையாளத்தைப் புரிந்து கொள்ளும் வல்லமையை அனுபவிக்க முடியும்? அது நமது பிதாவாகிய தேவனை அறிய தேடுவதில் தொடங்குகிறது. 15 தலைவர் ரசல் எம். நெல்சன் சாட்சியளித்தார், “அவரைப்பற்றியும் அவரது நேசக்குமாரனைப்பற்றியும் அதிகமாக அறிய தேவனின் பிள்ளை தேடும்போது, வல்லமை மிக்க ஒன்று நடக்கிறது.” 16
இரட்சகரைப்பற்றி அறிந்து பின்பற்றுதல், பிதாவை அறிய நமக்கு உதவுகிறது. இயேசு போதித்தார், “அவரது தன்மையின் சொரூபமாயிருந்து,”17 “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற அதையேயன்றி வேறொன்றையும் செய்யமாட்டார்.” 18 கிறிஸ்துவின் ஒவ்வொரு சொல்லும் செயலும்—தேவனின் உண்மையான தன்மையையும் அவருடன் நமது உறவையும வெளிப்படுத்துகிறது. 19 மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்தார், ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வெளியேறி, அவரது உதடுகளில் வேதனையின் கதறல் இருந்தபோதும், அவர் எப்போதும் தேடிய தன் பிதாவாகிய தேவனை, கிறிஸ்து தேடினார். “அப்பா,” அவர் கதறினார், “பாப்பா.”20
கெத்சமனேவில் தன் பிதாவை இயேசு ஊக்கமாய் தேடியது போல இளம் ஜோசப் ஸ்மித் பரிசுத்த தோப்பில் ஜெபத்துடன் தேடினார். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் தேவனிடத்தில் கேட்கக்கடவன்.” 21 வாசித்த பின், ஜோசப் ஜெபிக்கச் சென்றார்.
அவர் பின்னர் எழுதினார், “நான் முழங்காலிட்டேன், என்னுடைய இருதயத்தின் வாஞ்சைகளை தேவனிடத்தில் சொல்லத் தொடங்கினேன்.
“... என் தலைக்கு சரியாக மேலே ஒரு ஒளிக்கற்றையைப் பார்த்தேன். ...
“ … நான் இரு நபர்களைப் பார்த்தேன், எனக்கு மேலே காற்றில் நின்ற, அவர்களுடைய பிரகாசமும் மகிமையும் அனைத்து விவரிப்புகளையும் கடந்தது. அவர்களில் ஒருவர் என்னை நோக்கி பெயர் சொல்லி அழைத்து, மற்றவரை காட்டி பேசினார், [ஜோசப்] இவர் என் நேச குமாரன், இவருக்குச் செவி கொடு. ” 20
நாம் இரட்சகரின் உதாரணங்களைப் பின்பற்றி, தீர்க்கதரிசி ஜோசப் தேவனை உருக்கமாக தேடியது போல, உண்மையான விதத்தில் ஜென் போல நமது பிதா நம்மை பேர்பேராக அறிகிறார், நாம் அவரது பிள்ளைகள் என நாம் புரிந்து கொள்வோம்.
ஒரு “பாவத்தை எதிர்க்கும் தலைமுறையை” வளர்க்க முயற்சி செய்யும்போது, அதிக பாரமாயும் மூச்சுத்திணறியும் அடிக்கடி உணர்கிற, தாய்மாருக்கு விசேஷமாக இளம் தாய்களுக்கு, 23 தேவனின் திட்டத்தில் உங்களது பங்கை ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர். அழுத்தமான நேரங்களில்—நீங்கள் சிறு பிள்ளைகளை துரத்திக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் விரும்பி தயாரித்த இரவு உணவு இப்போது ஒரு தகன பலி என சமையலறையிலிருந்து வரும் கருகிய வாசனை தெரிவித்தாலும்—உங்களது மிகக் கடினமான நாட்களை தேவன் பரிசுத்தப்படுத்துகிறார் என அறியுங்கள். 24 “நீ பயப்படாதே, நான் உன்னோடிருக்கிறேன்.” 25 அவர் சமாதானமாக உறுதியளிக்கிறார். “நமது பிள்ளைகள் அவர்களது தெய்வீக அடையாளத்தை புரிந்துகொள்ள தகுதியுள்ளவர்கள்,” என சொன்ன, சகோதரி ஜாய் டி. ஜோன்ஸின் நம்பிக்கையை நீங்கள் நிறைவேற்றும்போது, நீங்கள் உங்களை கனம் பண்ணுகிறீர்கள்.26
தேவனையும் அவரது நேச குமாரனையும் தேட நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். தலைவர் நெல்சன் வழிகாட்டினார், “இந்த சத்தியங்கள் மார்மன் புஸ்தகத்தைப்போல தெளிவாகவும் வல்லமையாகவும் வேறெங்கும் போதிக்கப்படவில்லை.” 27 அதன் பக்கங்களைத் திறந்து தேவன் “எல்லாவற்றையும் [நமது] நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்” செய்கிறார் எனவும். 28 அவர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், நீடிய சாந்தமும் நன்மையும் நிறைந்தவர் 29 எனவும், நாம் “[அவரைப்] போலிருக்கிறோம் எனவும் கற்றுக் கொள்ளுங்கள்.” 30 வாழ்க்கையின் கஷ்டங்களில் நீங்கள் காயப்பட்டதாகவும், தொலைந்து போனதாகவும், பயமாகவும், தளர்ந்தும், சோகமாகவும், பசியுற்றும், நம்பிக்கையற்றும் கைவிடப்பட்டதாகவும் உணரும்போது, 31 மார்மன் புஸ்தகத்தை திறவுங்கள், “தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், அவர் ஒருபோதும் செய்யவில்லை, செய்யமாட்டார் என அறிவீர்கள். அவர் அதைச் செய்ய முடியாது, அது அவரது குணமல்ல.” 32
அவரது மென்மையான ஆவி, நமது உண்மையான அடையாளத்தையும், அவரது பார்வையில் பெரும் தகுதியையும் உறுதி செய்யும்போது, நமது பிதாவை அறிவது எல்லாவற்றையும், விசேஷமாக நமது இருதயத்தை, மாற்றுகிறது. 33 ஜெபத்துடன் வேண்டுதல்கள், வேத ஆராய்ச்சிகள், மற்றும் கீழ்ப்படிதலுள்ள முயற்சிகள் மூலம் நாம் அவரைத் தேடும்போது, உடன்படிக்கையின் பாதையில் நம்மோடு தேவன் நடக்கிறார்.
தேவனின் நடத்தையின் மேன்மை—என் சாட்சி
நான் என் பிதாக்களின் தேவனாகிய34 சர்வ வல்ல தேவனை நேசிக்கிறேன், 35 நமது துயரங்களில் அவர் நம்முடன் அழுகிறார், நமது அநீதிகளுக்காக பொறுமையாக கடிந்து கொள்கிறார்,36 “அவரை அறிய [நமது} பாவங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரைத் தேடும்போது, அவர் களிகூர்கிறார். 37 “திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும்,”32 நண்பர்கள் இல்லாதவர்களுக்கு நண்பராகவும் எப்போதுமிருக்கிற அவரை நான் ஆராதிக்கிறேன். நன்றியுடன் என் பிதாவாகிய தேவனை நான் அறிகிறேன், அவரது பரிபூரணம், தன்மைகள் மற்றும் “அவரது நடத்தையின் மேன்மையைப்பற்றி” சாட்சியளிக்கிறேன். 38
“அவர் ஒருவரே உண்மையான தேவனென்றும், அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவென்றும்” 39 அறிவதில் தேவனின் பிள்ளையாக, நமது “பிரபுத்துவ சேஷ்ட புத்திர பாகத்தை” 4034 நாம் ஒவ்வொருவரும், உண்மையாக புரிந்து, நினைவு கொள்ள வேண்டும் என்பது என் உருக்கமான ஜெபமாகும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினலே, ஆமென்.