2010–2019
கர்த்தரின் ஆவி தங்குகிற வீடு
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

கர்த்தரின் ஆவி தங்குகிற வீடு

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமிக்க இடமாகவும், அன்பு ஊடுருவும் இடமாகவும் உங்கள் வீட்டை மாற்றும் உங்கள் முயற்சியில் உங்கள் மிக அதிக மகிழ்ச்சியை காண்பீர்கள்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 189வது வருடாந்தர பொது மாநாட்டில் உங்களுடன் பேச அழைக்கப்பட்டதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 1830ல் இந்த தேதியில் கர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் ஜோசப் ஸ்மித் சபையை அமைத்தார். அது நியூயார்க்கின் பயாட்டியில், விட்மரின் குடும்ப வீட்டில் செய்யப்பட்டது. அங்கு ஆறு அங்கத்தினர்களும், ஆர்வமுள்ள பிறர் கிட்டத்தட்ட 50 பேரும் இருந்தனர்.

ஜோசப் ஸ்மித் என்ன சொன்னார், அந்த சிறு குழு முன் நின்றபோது எப்படி இருந்தார் என நான் அறியாவிட்டாலும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் அந்த ஜனங்கள் என்ன உணர்ந்தார்கள் என நான் அறிவேன். அவர்கள் பரிசுத்த ஆவியை உணர்ந்தார்கள், அவர்கள் ஒரு பரிசுத்த ஸ்தலத்தில் இருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் ஒன்றாக இணைந்திருந்ததை அவர்கள் கண்டிப்பாக உணர்ந்தனர்.

அந்த அற்புதமான உணர்வுதான் நம் அனைவருக்கும் நமது வீடுகளில் இருக்க நாமனைவரும் விரும்புகிறோம். “ஆவியின் சிந்தை“ என பவுல் விவரித்தபடி, இருப்பதால் அந்த உணர்வு வருகிறது.1

அடிக்கடி அந்த உணர்வுக்கு நாம் எப்படி தகுதி பெறுவோம், நமது குடும்பங்களில் நீடித்திருக்க எப்படி அழைப்போம் என நான் அறிந்ததை போதிப்பதே இன்று என் நோக்கம், என் அனுபவத்திலிருந்து நான் அறிந்தபடி, செய்வதற்கு அது எளிதல்ல. பிணக்கு, பெருமை மற்றும் பாவம் அடக்கி வைக்கப்பட வேண்டும். நமது குடும்பங்களில் உள்ளவர்களின் இருதயங்களுக்குள் கிறிஸ்துவின் பரிபூரண அன்பு வர வேண்டும்.

ஆதாமும் ஏவாளும், லேகியும் சரயாவும், வேதங்களிலிருந்து நாம் அறிந்த பிற பெற்றோரும், அதைக் கடினமான சவாலாகக் கண்டனர். இருப்பினும் அதை நமக்கு உறுதிப்படுத்துவதற்கு, குடும்பங்களிலும் வீடுகளிலும் நீடித்த பாராட்டின் ஊக்குவிக்கும் உதாரணங்கள் உள்ளன. அந்த உதாரணங்கள் நமக்கும் நமது குடும்பங்களுக்கும், அது நடக்க வேண்டிய விதத்தை நமக்குக் காண்பிக்கின்றன. 4 நேபியிலிருந்து விவரத்தை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்:

“மேலும் ஆனபடியால், ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம், தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமல் இருந்தது.

“அங்கு பொறாமைகளோ, பிணக்குகளோ, குழப்பங்களோ, வேசித்தனங்களோ, பொய்யுரைகளோ, கொலைகளோ, எந்தவிதமான காம விகாரமோ இருக்கவில்லை. தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லாருக்குள்ளும் இவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாக இருந்திருக்க முடியாது.

“அங்கே திருடர்களோ, கொலைகாரர்களோ, லாமானியரோ, அல்லது எந்தப் பிரிவும் இல்லை, அவர்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாய் ஒன்றாயிருந்தார்கள். தேவ இராஜ்யத்துக்கு சுதந்தரவாளிகளாக இருந்தார்கள்.

“அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! “ஏனெனில் கர்த்தர் அவர்களை அவர்களுடைய எல்லா நடக்கைகளிலும், ஆசீர்வதித்தார், ஆம், நூற்றிப்பத்து வருடங்கள் கடந்துபோகுமட்டும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு விருத்தியடைந்தார்கள். கிறிஸ்து துவங்கி முதல் தலைமுறை கடந்துபோயிற்று. மேலும் தேசம் முழுவதிலும் எந்தப் பிணக்கும் இல்லை.“2

நீங்கள் அறிந்தபடியே, அந்த மகிழ்ச்சியான நேரம் என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. 4 நேபியிலுள்ள விவரம் நல்ல ஜனக்குழு மத்தியில் ஆவிக்குரிய தற்செயலான கூறுபாடுகளை விவரிக்கிறது. எல்லா ஜனங்களுக்குள்ளும், சபைகளுக்குள்ளும், மிகவும் துக்கமாக குடும்பங்களுக்குள்ளும் ஏற்பட்டுள்ள இது, ஒரு மாதிரி. அந்த மாதிரியை படித்து, நமது குடும்பத்தில் அன்பின் உணர்வுகளை நாம் எப்படி பாதுகாக்கவும், அதிகரிக்கவும் முடியும் என பார்க்க முடிகிறது.

200 வருடங்களாக வாழ்க்கையில் சுவிசேஷம் கொண்டுவருகிற பரிபூரண சமாதானத்துக்குப்பிறகு, தோன்றிய நலிவின் மாதிரி இது.

பெருமை உள்ளே வந்தது.

அவர்களுக்குண்டானவற்றை பிறருடன் பகிர்வதை ஜனங்கள் நிறுத்தினர்.

ஒருவருக்கொருவர் மேலோ கீழோ ஆன பிரிவுகளில் தங்களைப் பார்க்கத் தொடங்கினர்.

இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தில் நலியத் தொடங்கினர்.

அவர்கள் வெறுக்கத் தொடங்கினர்.

அவர்கள் எல்லாவிதமான பாவங்களையும் செய்யத் தொடங்கினர்.

அந்த அறிகுறிகள் தங்கள் குடும்பத்தினரிடையே தோன்றும்போது, ஞானமிக்க பெற்றோர் கவனிக்க விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக அக்கறையோடிருக்கிறார்கள். நல்லவர்களை பாவத்தின் பாதையில் நடத்த சாத்தானின் செல்வாக்குதான் அடிப்படை காரணம், அவ்வாறே பரிசுத்த ஆவியின் செல்வாக்கை இழக்கிறார்கள் என அவர்கள் அறிவார்கள். ஆகவே ஞானமுள்ள பெற்றோர் ஒவ்வொரு பிள்ளையையும் தங்களையும், அவரிடம் வர கர்த்தரின் அழைப்பை முழுமையாக ஏற்று, வழிநடத்துவதில் சந்தர்ப்பம் இருக்கிறது என பார்ப்பார்கள்.

உதாரணமாக பெருமைக்காக, ஒரு பிள்ளையை மனந்திரும்ப அழைப்பதில் குறைந்த வெற்றியே பெற்றிருக்கலாம். அவர்களிடம் உள்ளதை அதிக பெருந்தன்மையுடன் பகிர பிள்ளைகளை வற்புறுத்தி நீங்கள் முயற்சிக்கலாம். குடும்பத்திலுள்ள ஒருவரை விட அவர்கள் உயர்வானவர்கள் என உணர்வதை அவர்கள் நிறுத்துமாறு நீங்கள் சொல்லலாம். இயேசு கிறிஸ்துவில் தங்களது விசுவாசத்தில் அவர்கள் குறையத் தொடங்கினர் என விவரிக்கப்பட்டுள்ள அறிகுறிக்கு, அப்போது நீங்கள் வருகிறீர்கள்.

நீங்கள் அவர்களுக்காக விரும்புகிற அந்த ஆவிக்குரிய இடத்துக்கு உங்கள் குடும்பத்தை வழிநடத்தவும், அங்கு நீங்கள் அவர்களோடு இருக்கவும் ஒரு திறவுகோல் உள்ளது. இயேசு கிறிஸ்து அவர்களது நேச மீட்பர் என்ற விசுவாசத்தில் அவர்கள் வளர நீங்கள் உதவும்போது, அவர்கள் மனந்திரும்ப ஒரு விருப்பத்தை உணர்வார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போது தாழ்மை பெருமையை மாற்றும். கர்த்தர் அவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார் என அவர்கள் உணரத்தொடங்கும்போது, மிக பெருந்தன்மையாக பகிர விரும்புவார்கள். பிரபலத்துக்கு அல்லது அங்கீகாரத்துக்கான பகை குறையும். வெறுப்பு அன்பால் விரட்டப்படும். கடைசியாக பென்யமின் இராஜாவால் மனமாற்றப்பட்ட ஜனங்களுக்கு அது செய்தது போல, நன்மை செய்யும் வாஞ்சை பாவம் செய்யும் சோதனைக்கு விரோதமாக அவர்களைப் பெலப்படுத்தும். அவர்கள் தீமை செய்ய இனிமேலும் விரும்பவில்லை என பென்யமின் இராஜாவின் ஜனங்கள் சாட்சியளித்தனர்.3

ஆகவே இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கட்டுதல் உங்கள் குடும்பத்திலும், வீட்டிலும் ஆவிக்குரிய வீழ்ச்சியை மாற்றுவதன் தொடக்கம். ஆவிக்குரிய வீழ்ச்சியின் ஒவ்வொரு அறிகுறிக்கும் எதிராக பிரசங்கிப்பதை விட, அந்த விசுவாசம் மனந்திரும்புதலைக் கொண்டுவரலாம்.

நீங்கள் சிறப்பாக, உதாரணத்தால் வழிநடத்துவீர்கள். குடும்பத்தினரும் பிறரும் நீங்கள் இயேசு கிறிஸ்துவிலும் அவரது சுவிசேஷத்திலும் உங்கள் விசுவாசத்தில் வளருவதை பார்க்க வேண்டும். நீங்கள் அண்மையில் அதிக உதவி கொடுக்கப்பட்டீர்கள். குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும், ஒரு உணர்த்தப்பட்ட பாடத்திட்டத்தால் சபையின் பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அதைப் பயன்படுத்தும்போது, நீங்கள் உங்கள் விசுவாசத்தையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உங்கள் பிள்ளைகளின் விசுவாசத்தையும் கட்டுவீர்கள்.

விசுவாசத்தில் வளருதல்

மார்மன் புஸ்தகத்தை மீண்டும் வாசிக்க தலைவர் நெல்சனின் ஆலோசனையை நீங்கள் பின்பற்றும்போது இரட்சகரில் உங்கள் விசுவாசம் வளர்ந்திருக்கிறது. இரட்சகரைக் குறிப்பிடும் பாகங்களையும் வார்த்தைகளையும் நீங்கள் குறித்துள்ளீர்கள். இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசம் வளர்ந்தது. ஆனால் ஒரு புதிய செடியைப் போல, இயேசு கிறிஸ்துவில் இப்படிப்பட்ட விசுவாசம், அதை அதிகரிக்க தியானிக்கவும் ஜெபிக்கவும் தொடர் வைராக்கியம் இல்லாவிட்டால் உதிர்ந்து விடும்.

விசுவாசத்தை வளர்க்கும் உங்கள் உதாரணம் இப்போது உங்கள் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களாலும் பின்படுத்தப்படாமலிருக்கலாம். ஆனால் இளைய ஆல்மாவின் அனுபவத்தை மனதில் கொள்ளுங்கள். மனந்திரும்பவும் மன்னிக்கப்படவும் அவனது வேதனைமிக்க தேவையில், அவன் இயேசு கிறிஸ்துவில் தன் தகப்பனின் விசுவாசத்தை நினைத்தான். அவர்கள் மனந்திரும்புதல் கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில், இரட்சகரில் உங்கள் விசுவாசத்தை உங்கள் பிள்ளைகள் நினைவுகொள்ளலாம். அப்படிப்பட்ட தருணத்தைப்பற்றி ஆல்மா சொன்னான்.

“மேலும் ஆனபடியால், நான் வேதனையில் துவண்டு, என் அநேக பாவங்களால் அலைக்களிக்கப்பட்டபோது, இதோ உலகத்தில் பாவங்களை நிவர்த்தியாக்க, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்பவருடைய வரவைக் குறித்து, ஜனங்களுக்கு என் தந்தை தீர்க்கதரிசனம் சொல்லுவதைக் கேட்டதாகவும் நினைவுகூர்ந்தேன்.

“இப்பொழுது என் மனம் இந்த நினைவைப் பற்றிக்கொண்டபோது, நான் உள்ளத்தினுள்ளே அழுது, தேவ குமாரனாகிய இயேசுவே, கசப்பான பிச்சிலும், மரணத்தின் நித்திய சங்கிலிகளாலும், சூழப்பட்டிருக்கிற என் மேல் இரக்கமாயிரும் என்றேன்.

“இதோ நான் எண்ணினபோதோ, என் கஷ்டங்களை நினைவுகூரவே இல்லை. ஆம், அதற்குப் பின்னால் என் பாவங்களின் நினைவால் அலைக்கழிக்கப்படவே இல்லை.“4

அன்புடன் ஜெபித்தல்

விசுவாசத்தில் வளரும் உங்கள் உதாரணத்தோடு கூட, வீட்டை ஒரு பரிசுத்த ஸ்தலமாக மாற்றுவதில் நீங்கள் குடும்பமாக ஜெபித்தல் முக்கிய பங்காற்றும். குடும்பத்துக்காக ஜெபிக்க குரலாக வழக்கமாக ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். முழங்கால் படியிட்டு கேட்டுக்கொண்டிருக்கிற ஜனங்களுக்காகவே, தேவனுனை நோக்கி தெளிவாக அந்த ஜெபம் இருக்கும்போது, அவர்கள் அனைவரின் விசுவாசமும் வளர்கிறது. பரலோக பிதாவுக்கும், இரட்சகருக்கும் அன்பு தெரிவிக்கப்படுதலை அவரகள் உணர முடியும். தேவையிலிருக்கிற குடும்ப வட்டத்தில் முழங்கால் படியிட்டிருக்கிறவர்களை ஜெபிக்கிறவர் குறிப்பிடும்போது, குடும்பத்தின் ஒவ்வொருவர் மீதும், அவர்களிடமிருந்தும் அனைவரும் அன்பை உணர முடியும்.

குடும்ப அங்கத்தினர்கள் வீட்டில் வசிக்காதபோதும், ஜெபம் அன்பின் உறவுகளைக் கட்ட முடியும். குடும்பத்தில் ஜெபம் உலகத்தைக் கடந்து செல்ல முடியும். தூரத்திலிருக்கிற குடும்ப அங்கத்தினர், என்னைப்போலவே அதே நேரத்தில் அதே காரியத்துக்காக ஜெபிப்பததைப்பற்றி ஒரு முறைக்கு மேல் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். “ஒன்றாக ஜெபிக்கிற குடும்பம் ஒன்றாக இருக்கிறது“ என்ற பழைய சொல், “ஒன்றாக ஜெபிக்கிற குடும்பம், அவர்கள் விலகியிருக்கும்போதும், ஒன்றாக இருக்கிறார்கள்“ என விரிவுபடுத்தப்படலாம்.

முன்கூட்டிய மனந்திரும்புதலை கற்பித்தல்

நாம் யாரும் பரிபூரணமானவர்கள் இல்லை என்பதாலும், உணர்ச்சிகள் எளிதில் காயப்படலாம் என்பதாலும், நாம் சீக்கிரத்திலே உருக்கமாக மனந்திரும்பும்போதுதான், குடும்பங்கள் பரிசுத்த ஸ்தலங்களாகலாம். பெற்றோர் ஒரு உதாரணமாக இருக்கலாம் கடினமான வார்த்தைகள் மற்றும் அன்பற்ற சிந்தனைகளுக்காக உடனேயும் உருக்கமாகவும் மனந்திரும்பலாம். ஒரு எளிய“ நான் வருந்துகிறேன்” எனச் சொல்வது, காயங்களைக் குணமாக்கி, மன்னிப்பையும் அன்பையும் அழைக்கலாம்.

அவர் பல தாக்குதல்களையும் துரோகிகளையும் சமாளித்தபோது, நமக்கு தீீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒரு மாதிரியாக இருந்தார். தாக்கியவர் மீண்டும் தாக்கலாம் என அவர் அறிந்தபோதும், அவர் சீக்கிரத்தில் மன்னித்தார். அவர் மன்னிப்பு கேட்டார், அவர் இலவசமாகக் கொடுத்தார்.5

ஊழிய ஆவியை விருத்தி செய்தல்

மோசியாவின் குமாரர்கள் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷத்தைக் கொடுக்க தீர்மானித்தனர். இந்த வாஞ்சை அவர்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் மனந்திரும்புதலிலிருந்தும் வந்தது. அவர்களைப்போல பாவத்தின் விளைவுகளை எவரும் அனுபவிப்பதை அவர்களால் தாங்க முடியவில்லை. ஆகவே தங்கள் எதிரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொடுக்க அவர்கள் மறுதலிப்பையும், துன்பங்களையும், ஆபத்தையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டனர். அந்த முறையில் மனந்திரும்பிய அநேகரில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் மன்னிப்பின் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.

அவர்களும் மன்னிப்பின் மகிழ்ச்சியை உணரும்போது, நமது குடும்பத்தினரும் சுவிசேஷத்தைப் பகிரும் அவர்களின் வாஞ்சையில் வளர்வார்கள். அவர்கள் திருவிருந்தில் பங்கேற்கும்போது, உடன்படிக்கைகளைப் புதுப்பிக்கும்போது, அது வரும். திருவிருந்து கூட்டத்தில் மன்னிப்பின் மகிழ்ச்சியை பிள்ளைகளும் பெற்றோரும் உணரும்போது, நமது வீடுகளில் ஊழிய ஆவி வளரும். அவர்களது பயபக்தியின் உதாரணத்தால், பெற்றோரும் பிள்ளைகளும், மகிழ்ச்சியை உணர ஒருவருக்கொருவர் உதவலாம். அந்த சந்தோஷம் நமது வீடுகளை ஊழிய பயிற்சி மையங்களாக ஆக்க உதவும். எல்லாரும் ஊழியம் செய்யாமலிருக்கலாம், ஆனால் சுவிசேஷத்தைப் பகிரும் வாஞ்சையை அனைவரும் உணரலாம், அது அவர்களை மன்னிப்புக்கும் சமாதானத்துக்கும் கொண்டு வரக்கூடும். தற்போது முழுநேர ஊழியம் செய்தாலும் இல்லாவிட்டாலும், பிறருக்கு சுவிசேஷத்தைக் கொடுக்கும் மகிழ்ச்சியை அனைவரும் பெற முடியும்.

ஆலயம் செல்லுதல்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், தெய்வீக ஸ்தலங்கள் மீது உணர்வையும் அன்பையும் பெறும் சிறந்த சந்தர்ப்பம் ஆலயம்தான். பிள்ளைகள் இளமையாயிருக்கும்போது அது விசேஷமாக உண்மையாகிறது. பிள்ளைகள் கிறிஸ்துவின் ஒளியோடு பிறந்தவர்கள். ஆலயம் பரிசுத்தமானது என குழந்தை கூட உணரலாம். பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை நேசிப்பதால், என்றென்றைக்கும் தங்கள் பிள்ளைகள் நித்திய குடும்பத்தில் அன்பை உணரச்செய்ய ஆலயம் நம்பிக்கையின் பிரதிநிதியாக இருக்கிறது.

உங்களில் சிலர் உங்கள் வீடுகளில் ஆலயத்தின் புகைப்படங்களை வைத்திருக்கிறீர்கள். ஆலயங்கள் உலக முழுவதிலும் கட்டப்படும் வேளையில், தங்கள் குடும்பத்துடன் ஆலய மைதானத்துக்கு செல்வது அநேக பெற்றோருக்கு சாத்தியமாகிறது. ஆலயங்கள் கட்டப்படும்போது, சிலர் திறந்த வீட்டுக்கு செல்ல இயலலாம். ஆலயத்துக்கு அருகில் அல்லது ஆலயத்தில் இருப்பதை அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கலாம்.

அவருக்கு ஒரு ஆலயம் எப்படியானது என ஒவ்வொரு பெற்றோரும் சாட்சி சொல்லலாம். ஆலயத்தை நேசித்த தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் தன் ஆலய வஸ்திரத்தை அவரது அம்மா கவனமாக தேய்த்ததை பற்றி அடிக்கடி பேசினார்.6 ஆலயம் செல்ல தன் குடும்பம் வீட்டிலிருந்து புறப்பட்டதை சிறுவனாக கவனித்த நினைவைப் பற்றி அவர் பேசினார்.

அவர் சபையின் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் அதே நாளில் அவர் ஆலயம் சென்றார். அவர் எப்போதும் ஒரு முன்னோருக்காக ஆலயப்பணி செய்தார். அவரது பெற்றோரின் உதாரணத்திலிருந்துதான் இது வந்தது.

என் சாட்சி

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமிக்க இடமாகவும், அன்பு ஊடுருவும் இடமாகவும் உங்கள் வீட்டை மாற்றும் உங்கள் முயற்சியில் உங்கள் மிக அதிக மகிழ்ச்சியை காண்பீர்கள். சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் ஒரு தாழ்மையான வீட்டில், தாழ்மையான கேள்வி பற்றி சிந்தித்ததால் தொடங்கியது, சுவிசேஷ கொள்கைகளை அங்கு நிலைப்படுத்தி, பயன்படுத்தும்போது, நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் அது தொடர முடியும். நான் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே, இதுவே எனது ஆழ்ந்த ஆசையும் நம்பிக்கையுமாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட வீடுகளை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள். உங்களில் அநேகர் கர்த்தரின் உதவியுடன் அவற்றை உருவாக்கியிருக்கிறீர்கள்.

அந்த ஆசீர்வாதத்துக்காக சிலர் முழு இருதயத்தோடு முயற்சி செய்திருக்கிறீர்கள், எனினும் அது கொடுக்கப்படவில்லை. பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர் ஒருவர் எனக்கு ஒருமுறை கொடுத்தது உங்களுக்கு எனது வாக்குத்தத்தம். எங்கள் விரிவான குடும்பத்தினர் செய்த தேர்வுகளினிமித்தம், வரவிருக்கிற உலகில் நாங்கள் சேரந்திருப்போம் என நான் சந்தேகப்படுவதாக நான் அவரிடம் சொன்னேன். நான் நினைவுகூர்வது போல அவர் சொன்னார், “நீ தவறான பிரச்சினைக்காக கவலைப்படுகிறாய். நீ சிலஸ்டியல் இராஜ்யத்துக்கு தகுதியாக வாழ். குடும்ப ஏற்பாடுகள் நீ கற்பனை செய்வதைவிட மிக அற்புதமாக இருக்கும்.“

நித்திய ஜீவனுக்கு நாமனைவரும் மற்றும் நம் குடும்பத்தினரும் தகுதி பெறும்படிக்கு அனைத்தையும் செய்த அநித்தியத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் அந்த மகிழ்ச்சியான நம்பிக்கையை அவர் கொடுப்பார் என நான் நம்புகிறேன். பரலோக பிதாவின் திட்டம் மகிழ்ச்சியின் திட்டம் என நான் அறிவேன். என்றென்றைக்கும் குடும்பமாக முத்திரிக்கப்பட நம்மால் இயன்ற சிறந்ததை செய்த நம் ஒவ்வொருவருக்கும் அவரது திட்டம் சாத்தியப்படுத்துகிறது என நான் சாட்சியளிக்கிறேன்.

ஜோசப் ஸ்மித்துக்கு மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்து திறவுகோல்கல் அறுபடாத தொடராக தலைவர் ரசல் எம். நெல்சனுக்கு கடத்தப்பட்டது என நான் அறிவேன். அந்த திறவுகோல்கள் இன்று குடும்பங்கள் முத்திரிக்கப்பட சாத்தியமாக்குகின்றன. அவரது ஆவிக்குழந்தைகளாக பரிபூரண அன்புடன் நம்மை பரலோக பிதா நேசிக்கிறார் என நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின்மித்தம் நாம் மனந்திரும்பலாம், சுத்திகரிக்கப்படலாம், நமது பரலோக பிதாவுடனும், அவரது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் என்றென்றைக்கும் அன்பு மிக்க குடும்பத்தில் வாழ தகுதி பெறுகிறோம் என நான் அறிவேன் அப்படியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.