2010–2019
தேவனுடைய நேரான நற்குணம்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

தேவனுடைய நேரான நற்குணம்

ஆனால், கர்த்தரின் மேல் நாம் பொறுமையாக காத்திருத்துக்கொண்டிருந்தபோதும் சில குறிப்பிட்ட ஆசீர்வாதங்கள் உடனடியாக நமக்கு வருகிறது.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுடைய ஐந்து வயது மகன் என்னிடத்தில் வந்து, அப்பா நான் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என அறிவித்தான். உங்களுக்கு விரைவிலென்பது எனக்கு நீண்ட நேரம் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

“அநேக நாட்கள் அல்ல” அல்லது “காலம் இன்னும் அதிக தூரத்திலில்லை” என கர்த்தரோ அல்லது அவரது ஊழியக்காரர்களோ சொல்லும்போது அது ஒரு வாழ்நாள் காலம் அல்லது நீண்ட நேரமென அர்த்தமாகலாம்.1 அவருடைய நேரமும், அடிக்கடி அவருடைய நேரக்கணிப்பும் நம்மிலிருந்து வித்தியாசமானது பொறுமை முக்கியம். அது இல்லாமல் வாழ்க்கைக்கும் இரட்சிப்புக்கும் தேவனிடத்தில் விசுவாசத்தை நம்மால் விருத்தி செய்யமுடியாது, காட்டமுடியாது. ஆனால், கர்த்தரின் மேல் நாம் பொறுமையாக காத்திருத்துக்கொண்டிருந்தபோதும் சில குறிப்பிட்ட ஆசீர்வாதங்கள் உடனடியாக நமக்கு வருமென்பது இன்று என்னுடைய செய்தி.

ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் லாமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டபோது விடுதலைக்காக அவர்கள் ஜெபித்தார்கள். அவர்கள் உடனடியாக விடுதலை பெறவில்லை, ஆனால் விடுதலைக்காக அவர்கள் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட உடனடி ஆசீர்வாதங்களுடன் கர்த்தர் அவருடைய நற்குணத்தைக் காட்டினார். அவர்களை அவர்கள் கொன்றுபோடாதிருக்க அவர் உடனடியாக லாமானியர்களின் இருதயங்களை மிருதுவாக்கினார். அவர் ஆல்மாவின் ஜனங்களையும் பெலப்படுத்தி அவர்களுடைய பாரங்களை இவகுவாக்கினார்.2 இறுதியாக அவர்கள் விடுதலையானபோது அவர்கள் சாரகெம்லாவிற்கு பயணம் செய்து, அங்கே ஒரு ஆச்சரியமடைந்த பார்வையாளர்களுக்கு அவர்கள் தங்களின் அனுபவங்களை நினைவுகூர்ந்தார்கள். சாரகெம்லாவின் ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, “தேவனுடைய நேரான நற்குணத்தையும், அடிமைத்தனத்திலிருந்தும் ஆல்மாவையும் அவனுடைய சகோதரரையும் விடுவித்ததினாலான அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்த்தபோது, அவர்கள் தங்கள் சத்தங்களை உயர்த்தி, தேவனுக்கு நன்றிசெலுத்தினார்கள்”.3

உண்மையான எண்ணத்துடனும் இருதயத்தின் முழு நோக்கத்துடனும் அவரை அழைக்கிற அனைவருக்கும் தேவனுடைய நேரான நற்குணம் வருகிறது. விடுவிப்பு தூரத்திலிருப்பதாகவும் வேதனை நீண்டுகொண்டிருப்பதாக, அதிகமாகிக்கொண்டிருப்பதாகத் தோன்றும்போது ஆழ்ந்த விரக்தியில் கூக்குரலிடுகிறவர்களும் இதில் அடங்குவர்.

ஒரு நிலவறைக் குழியின் விளிம்பில் வேதனைப் பட்டுக்கொண்டிருந்த ஒரு இளம் தீர்க்கதரிசி இறுதியாக கூக்குரலிட்டார், “தேவனே நீர் எங்கே இருக்கிறீர்? … எம்மட்டும் உமது கரம் தடுக்கப்படும். . .? ஆம், கர்த்தாவே, எம்மட்டும். . . ? 4 பதிலாக, ஜோசப்பை கர்த்தர் உடனடியாக விடுவிக்கவில்லை, ஆனால் உடனடியாக அவர் சமாதானத்தை உச்சரித்தார்.5

இறுதியான விடுதலைக்காக உடனடி நம்பிக்கையையும் தேவன் கொடுக்கிறார்.6 எதுவாயிருந்தாலும், எங்கேயிருந்தாலும் கிறிஸ்துவில் கிறிஸ்துவின் மூலமாக எப்போதுமே நமக்கு முன்பாக நம்பிக்கையின் புன்னகை இருக்கும்.7 உடனேயே நமக்கு முன்பாக இருக்கும்.

மேலும், “என் கிருபை உன்னைவிட்டு விலகாமலிருக்கும்”8 என அவர் வாக்குத்தத்தம் செய்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய அன்பு உடனேயே இருக்கிறது. “கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்கமாட்டாதென்று”9 பவுலுடன் நான் சாட்சியளிக்கிறேன் சிறிது காலம் நமது பாவங்கள் அவருடைய பரிசுத்த ஆவியிடமிருந்து நம்மை பிரித்தாலும்கூட அவருடைய அன்பின் நிலையானதையும் அடுத்துள்ள நிலையையும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது.

இவைகள் சில வழிகளும் வழிமுறைகளுமாயிருந்து அதனால் “உடனுக்குடன் அவர் [நம்மை] ஆசீர்வதிக்கிறார்”10. இப்போது இந்தக் கொள்கைகளை தற்போதாகவும் நெருக்கமாகவும் கொண்டுவர, தேவனுடைய நேரான நற்குணத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை சாட்சிகளாக நின்ற இரண்டு பேரின் அனுபவங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனுடைய குமரப்பருவத்தின் காலத்திலிருந்து எமிலி சில பொருட்களின் துஷ்பிரயோகத்தோடு போராடிக்கொண்டிருந்தாள். பரிசோதனை முயற்சி பழக்கத்திற்கு நடத்தி, இறுதியில் அடிமைத்தனத்திற்கு கடினமாக்கப்பட்டு, எப்போதாவது ஆரோக்கியமாயிருந்தாலும் பலஆண்டுகளாக அவள் சிறைபிடிக்கப்பட்டிருப்பாள். எமிலி அவளுடைய பிரச்சினையை, குறிப்பாக ஒரு மனைவியாகவும் தாயாகவுமான பிறகு கவனமாக, மூடிமறைத்தாள்.

அவளுடைய விடுதலையின் ஆரம்பத்தில் அவள் விடுதலையானதாகவே உணரவில்லை. ஒரு நிமிடம் எமிலி வழக்கமான மருத்துவ சோதனையின் கீழிருந்தாள், அடுத்து ஒரு உள் நோயாளி சிகிச்சை வசதிக்கு ஆம்புலன்ஸில் கொண்டுபோகப்பட்டாள். அவளுடைய பிள்ளைகளிடமிருந்து, கணவனிடமிருந்து, வீட்டிலிருந்து பிரிக்கப்படுவதை நினைத்து அவள் பதற்றமடைந்தாள்.

அந்த இரவில், குளிரான இருட்டு அறையில் தனிமையில் எமிலி படுக்கையில் சுருண்டு படுத்து விம்மி அழுதாள். அறையிலும் அவளுடைய ஆத்துமாவிலுமுள்ள கவலையும், அச்சமும், கொடுமையான இருளினால் மேற்கொள்ளப்பட்டு, உண்மையில், அந்த இரவில் அவள் மரித்துப்போவாள் என எமிலி நினைத்தாள். தனிமையில்

அந்த ஆற்றொண்ணா நிலைமையில், எமிலி படுக்கையிலிருந்து புரண்டு அவளுடைய முழங்காலில் நிற்க எப்படியோ அவளுடைய பெலத்தை எல்லாம் கூட்டினாள். சிலநேரங்களில் முந்தைய ஜெபங்களின் பகுதியாயிருந்த எந்த தோரணையுமில்லாமல், “அன்பான தேவனே நீர் எனக்குத் தேவை என, அவள் தீவிரமாக கெஞ்சியபோது, கர்த்தரிடம் அவள் தன்னையே முற்றிலுமாக சரணடையச் செய்தாள். தயவுசெய்து எனக்குதவும். நான் தனியாக இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து இந்த இரவிலிருந்து என்னை வெளியே கொண்டுவாரும்.”

அவர் பழைய பேதுருவுக்குச் செய்ததைப்போல இயேசு உடனடியாக தனது கரங்களை நீட்டி அவளுடைய மூழ்கிக்கொண்டிருந்த ஆத்துமாவை பிடித்தார்11. ஒரு அற்புதமான அமைதியும், தைரியமும், உறுதியும், அன்பும் எமிலி மேல் வந்தது. இனியும் அந்த அறை குளிராயிருக்கவில்லை, அவள் தனிமையிலில்லை என அறிந்தாள், எல்லாம் சரியாகிவிடுமென, அவளுடைய 14 வயதிலிருந்து இதுவரை, முதன் முறையாக எமிலி அறிந்தாள். “அவள் தேவனுக்கென்று விழித்தெழுந்தபோது,”12, எமிலி சமாதானத்தில் உறங்கினாள். அப்படியாக,“ நீங்கள் மனந்திரும்பி, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருந்தால், உடனே அந்த பெரிய மீட்பின் திட்டம் உங்களில் நிலைகொள்ளும்”13 என நாம் பார்க்கிறோம்.

ஆலயத்தில் குடும்பம்

மாதக்கணக்கில் சிகிச்சை, பயிற்சி, அந்த நேரத்தின்போது ஆதரிக்கப்பட்டு அவள் சிலநேரங்களில் அவருடைய நேரான நற்குணத்தால் எடுத்துச்செல்லப்பட்ட ஆலோசனை போன்று எமிலியின் குணப்படுத்தலுக்கும், முற்றிலுமான விடுதலைக்கும் நேரம் எடுத்தது. நித்தியத்திற்கும் ஒன்றுசேர முத்திரிக்கப்பட அவளுடைய கணவரோடும் இரண்டு பிள்ளைகளோடும் அவள் ஆலயத்திற்குள் பிரவேசித்தபோது அவருடைய நற்குணம் அவளுடன் தொடர்ந்தது. தேவனுடைய நேரான நற்குணத்தையும், அடிமைத்தனத்திலிருந்து அவளை விடுவித்த அவருடைய வல்லமையையும்பற்றி எமிலி நினைவுகூரும்போது சாரகெம்லாவின் ஜணங்களைப்போல இப்போது எமிலி நன்றிசெலுத்துகிறாள்.

இப்பொழுது, மற்றொரு தைரியமான விசுவாசியின் வாழ்க்கையிலிருந்து. 2013வது ஆண்டு டிசம்பர் 27ல் அலிசியா ஸ்ரோடர் அவளுடைய அன்பான தோழிகளை மகிழ்ச்சியோடு வரவேற்றாள். சீன் மற்றும் சில் கோட்டே எதிர்பாராமல் அவளுடைய வீட்டு வாசலில் நின்றார்கள். அலிசியாவின் ஆயராகவுமிருந்த சீன் அவருடைய கைப்பேசியை அவளிடம் கொடுத்து மனமார்ந்து சொன்னார், “அலிசா நாங்கள் உன்னை நேசிக்கிறோம். இந்த அழைப்பை நீ எடு்க்க வேண்டும்”.

அலிசாவின் கணவர் மரியோ தொலைபேசி அழைப்பிலிருந்தார். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ல்நோமொபைல் பயணத்தில் அவர்களுடைய சில பிள்ளைகளுடன் அவர் தொலைதூரத்திலிருந்தார். அங்கு ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டிருந்தது. மரியோ மோசமாக காயமடைந்து, அவர்களுடைய 10வயது மகன் காலேப் மரித்தான். காலேப் மரித்துப்போனதை மரியோ கண்ணீருடன் அலிசாவிடம் சொன்னபோது, நம்மில் சிலர் எப்போதுமே அறிந்திராத வகையில் அவள் அதிர்ச்சியையும் திகிலையும் கடந்தாள். அது அவளை கீழே தள்ளியது. சொல்லமுடியாத துயரத்துடன் செயலிழந்து அலிசாவால் நகரவோ பேசவோ முடியவில்லை.

ஆயரும் சகோதரி சில்கோட்டேயும் விரைவாக அவளை மேலே தூக்கி அவளைப் பிடித்துக்கொண்டனர். கொஞ்ச நேரம் அவர்கள் ஒன்றுசேர்ந்து அழுது ஆழ்ந்த வருத்தமடைந்தனர். பின்னர் அலிசாவுக்கு ஒரு ஆசீர்வாதத்தைக் கொடுக்க ஆயர் சில்கோட்டே முன்வந்தார்.

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப்பற்றியும் தேவனுடைய நேரான நற்குணத்தைப்பற்றியும் சிறிது புரிந்துகொள்ளுதலில்லாமல் அடுத்து நடந்ததை புரிந்துகொள்ள முடியாது. அலிசாவின் தலைமேல் ஆயர் சில்கோட்டே தனது கரங்களை மென்மையாக வைத்து நடுங்கும் குரலில் பேச ஆரம்பித்தார். தேவனே பேசியதைப்போல அலிசா இரண்டு காரியங்களைக் கேட்டாள். முதலாவதாக, அவளுடைய பெயர் அலிசியா சூசன் ஸ்ரோடர் என்று சொல்லக் கேட்டாள். பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனின் அதிகாரத்தை ஆயர் கெஞ்சிக் கேட்டதை அவள் கேட்டாள். அவளுடைய பெயரையும் தேவனுடைய வல்லமையையும் சொல்லிய அந்த சமயத்தில், ஒரு விளக்கமுடியாத சமாதானத்துடனும், அன்புடனும், ஆறுதலுடனும் எப்படியோ சந்தோஷத்துடனும் அலிசா நிரப்பப்பட்டாள். அது அவளுடன் தொடர்ந்தது.

இப்பொழுது, அலிசாவும் மரியோவும் அவர்களுடைய குடும்பமும் காலேப்புக்காக இன்னமும் துக்கப்பட்டு அவனை தவறவிடுகிறார்கள். இது கடினமானது! அவளுடன் நான் பேசும்போதெல்லாம், அவளுடைய சிறுபையனை அவள் எவ்வளவு நேசிக்கிறாளென்றும், தவறவிடுகிறாளென்றும் அவள் கூரும்போது அலிசாவின் கண்கள் கண்ணீரால் குளமாகிறது. அவளுடைய ஆழமான விரக்தியின்போது அவருடைய நேரான நற்குணத்துடன் ஆரம்பித்து அவளுடைய துன்பத்தின் ஒவ்வொரு துண்டின் வழியாக மகா விடுதலையளிப்பவர் எவ்வாறு அவளைத் தாங்கினாரென அவள் கூரும்போது அவளுடைய கண்கள் நனைந்தே இருந்தன, ஒரு இனிய மறுஇணைப்புக்கு இன்னும் “பல நாட்கள் இல்லை” என்ற பிரகாசமான நம்பிக்கையுடன் இப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது

வாழ்க்கையின் அனுபவங்கள் சிலநேரங்களில் குழப்பத்தையும், கொந்தளிப்பையும், எமிலிக்கும், அலிசாவுக்கும் வந்த நிவாரணத்தை அடையவும் அடையாளம் காணவும் கடினமாக்கும் குழப்பத்தை உருவாக்கும் என்பதை நான் உணர்ந்தேன். இத்தகைய நேரங்கள் வழியே நான் இருந்திருக்கிறேன். இம்மாதிரியான நேரங்களில் நமது பாதுகாப்பு, தேவனுடைய நேரான நற்குணத்தின் ஒரு மென்மையான ஆற்றல்மிக்க வெளிப்பாடாயிருக்கும். நாளுக்கு நாள் “அவர்களைப் பாதுகாத்த அதே தேவனால் பூர்வகால இஸ்ரவேலர் இறுதியாக விடுவிக்கப்பட்டனர்”14 என்பதை நினைவுகூருங்கள்.

இயேசு கிறிஸ்து மகத்தான விடுவிப்பவர் என நான் சாட்சி பகர்ந்து, உண்மையான எண்ணத்துடனும் இருதயத்தின் முழு நோக்கத்துடனும் நீங்கள் அவரிடத்தில் திரும்பும்போது, உங்களுடைய வாழ்க்கை அல்லது சந்தோஷத்தை மங்க அல்லது அழிக்க பயமுறுத்துகிற எல்லாவற்றிலுமிருந்து உங்களை அவர் விடுவிப்பார் என அவருடைய நாமத்தில் நான் வாக்களிக்கிறேன் அந்த விடுவிப்பு நீங்கள் விரும்புகிறதைவிட, ஒருவேளை ஒரு வாழ்நாள் அல்லது இன்னும் நீண்ட காலத்தை எடுக்கலாம். ஆகவே, உங்களுக்கு ஆறுதலையும்,தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க, இறுதியான விடுவிப்பின் அந்த நாளுக்கு உங்களை ஆதரிக்கவும் பெலப்படுத்தவும் நான் உங்களை பாராட்டி, தேவனுடைய நேரான நற்குணத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாட்சியளிக்கிறேன், ஆமென்.